9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/01/2020
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?
2.
உன்னைப் பொறுத்த வரையில் எச்செயல் நீர்ச் சுழற்சியில் மனிதச் செயல்பாடுகளால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றது?
3.
மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
4.
கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?
5.
பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி,எவையேனும் மூன்றனை விளக்குக.
6.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எவ்வாறு நடைபெறுகிறது?
7.
மென்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?
8.
நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?
9.
குழியுடலிகளின் உடற் சுவர் எவ்வாறு அமைந்துள்ளது?
10.
ஐசோடோன் என்றால் என்ன? உதாரணம் கொடு.
11.
நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.
12.
சில வறண்ட நிலத் தாவரங்களில் இலைகளானவை முட்களாக மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம் ________
நீராவிப் போக்கின் வீதத்தினைக் குறைப்பதற்கு
நீரைச் சேமிப்பதற்கு
நீரைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு
இவையனைத்தும்
13.
மலேரியாவின் மிகவும் அபாயகரமான தன்மையுடைய வகை
பிளாஸ்மோடியம் ஓவேல்
பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம்
பிளாஸ்மோடியம் மலேரியா
பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
14.
நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும்பபோது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது. இதனை கீழுள்ள வரைபடம் விளக்குகிறது. இதற்கான காரணம் என்ன?
அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது
அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது
ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது
மேலே கூறிய யாவும்.
15.
சகப்பிணைப்பு ____________ மூலம் உருவாகிறது
எலக்ட்ரான் பரிமாற்றத்தின்
எலக்ட்ரான் பங்கீடு
ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு
16.
மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் _____________
எலக்ட்ரான்கள்
நேர் அயனிகள்
அ மற்றும் ஆ
இரண்டும் அல்ல
17.
வெப்பக் கடத்தல், வெப்பக் சலனம், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்பஇழப்பைக் குறைக்கும் கருவி.
சூரிய மின்கலம்
சூரிய அழுத்த சமையற்கலன்
வெப்பநிலைமானி
வெற்றிடக் குடுவை
18.
ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.
ஐசோடோன்
ஐசோடோப்பு
ஐசோபார்
19.
வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு ________.
0.01 செ.மீ.
0.01 செ. மீ.
0.1 செ.மீ.
20.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை
அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்
கதிர் வீச்சுமுறை
உப்பினைச் சேர்த்தல்
கலன்களில் அடைத்தல்
21.
நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ____________ எனப்படும்
நடுக்கமுறு வளைதல்
ஒளிச்சார்பசைவு
நீர்சார்பசைவு
ஒளியுறு வளைதல்
22.
மீசோகிளியா காணப்படுவது
துளையுடலிகள்
குழியுடலிகள்
வளைதசையுடலிகள்
கணுக்காலிகள்
23.
பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது _______
குவியாடி
சமதளஆடி
குழியாடி
24.
காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன ?
25.
கீழ்காண்பவனவற்றை வரையறு
நோய் எதிர்ப்பு தடுப்பூசி
26.
வட்ட இயக்கம் என்றால் என்ன?
27.
உருகுநிலை என்றால் என்ன?
28.
விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன?
29.
வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.
30.
உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின்-D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை?
31.
மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?
32.
பல்வேறு வகையான வைரஸ்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
33.
மிதத்தல் விதிகளைக் கூறு.
34.
நீங்கள் இப்பொழுது தாவர மற்றும் விளங்கு செல்கள் பற்றி அறிந்திருப்பீர்கள்.அவற்றிற்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக
35.
2\(\Omega \) மற்றும் 5\(\Omega \) மின் தடைகள் கொண்ட இரு மின் தடையங்கள் தொடரிணைப்பில் உள்ளவாறு மின்சுற்று ஒன்றை வரைக. அதனுடன் பக்க இணைப்பில் உள்ளவாறு ஒரு 3\(\Omega \) மின்தடை கொண்ட மின்தடையத்தை இணைக்கவும்.
36.
ஒலியின் அதிர்வெண் 600 Hz எனில், அதனை உண்டாக்கும் பொருள், ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வுரும்?
37.
நெகிழிச்சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது -0.4C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,(அ)எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது? எது எலக்ட்ரானைப் பெற்றது?(ஆ)இந்நிகழ்வில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
38.
கைபேசியில் பயன்படுத்தும் மின்கலங்களை மறு ஊட்ட ம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.
1.
இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருட்கள் தாவரங்களின் பாதுகாப்பு போட்டி மற்றும் சிற்றினங்களின் உடதொடர்பு ஆகியவற்றிற்குப் பயன்படுகின்றன. எ.கா. அல்கலாய்டுகள் , பிளவோனய்டுகள் மற்றும் பல.
2.
நீர் ஊடுருவல், உள்வழிந்தோடல்
3.
(i) மயக்கமூட்டிகள் என்பவை உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள் ஆகும். இவற்றை உணர்வை இழக்கச் செய்யும் பகுதிகளைப் பொறுத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
(ii) அவை 1. பொது மயக்கமூட்டிகள்
2. குறிப்பிட்ட மயக்கமூட்டிகள்
4.
கார்பன் அலோகத் தன்மை வாய்ந்தது. எனவே இவை நீரில் கரைந்து அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை.
5.
i) வி.ஜி.ஏ (VGA - Video Graphics Array)
ii) எச்டிஎம்ஐ (HDMI - High Definition Multimedia Interface)
iii) யுஎஸ்பி (USB - Universal Serial Bus)
iv) தரவுக்கம்பி (Data cable)
v) ஒலி வடம் (Audio cable)
vi) மின் இணைப்புக் கம்பி (Power cord)
vii) ஒலி வாங்கி இணைப்புக்கம்பி (Mic cable)
viii) ஈதர் நெட் இணைப்புக்கம்பி (Ethernet cable)
1. வி.ஜி.ஏ (VGA) இணைப்புக்கம்பி:
கணினியின் மையச் செயலகத்தைத் திரையுடன் இணைக்க வி.ஜி.ஏ பயன்படுகிறது
2. யுஎஸ்பி (USB) இணைப்புவடம்:
அச்சுப்பொறி (Printer), வருடி (scanner), விரலி (pen drive), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard), இணையப்படக்கருவி (web camera), திறன்பேசி (smart phone), போன்றவற்றைக் கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது.
3. எச்டிஎம்ஐ (HDMI) இணைப்புவடம்:
உயர் வரையறை வீடியோ, டிஜிட்டல் ஆடியோ ஆகியவற்றை ஒரே ஒரு கேபிள் வழியாக எல்.இ.டி. கடத்துகிறது. தொலைக்காட்சிகள், ஒளிவீழ்த்தி (projector), கணினித் திரை ஆகியவற்றைக் கணினியுடன் இணைக்க HDMI பயன்படுகிறது.
4. தரவுக்கம்பி (Data cable)
கணினியின் மையச் செயலகத்துடன் கைபேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க, தரவுக் கம்பி பயன்படுகிறது.
5. ஒலி வடம் (Audio Jack):
ஒலி வடம் கணினியை ஒலிபெருக்கியுடன் இணைக்கப் பயன்படுகிறது.
6. மின் இணைப்புவடம் (Power Cord)
மையச்செயலகம், கணினித்திரை, ஒலிபெருக்கி, வருடி ஆகியவற்றுக்கு மின் இணைப்பை வழங்குகிறது.
7. ஒலி வாங்கி (Mic) இணைப்புவடம்:
ஒலிவாங்கியை மையச்செயலகத்துடன் இணைப்பதற்கு ஒலிவாங்கி இணைப்புவடம் உதவுகிறது.
8. ஈதர்நெட் (Ethernet) இணைப்புவடம்:
கணினியுடன் இணையவழித் தொடர்பை ஏற்படுத்த ஈதர்நெட் இணைப்புவடம் பயன்படுகிறது.
6.
மனிதனின் உயர் உப்படர்வுத் தன்மையுடைய திரவமாக சிறுநீர் இருக்கிறது. இந்த சிறுநீர் இறுதியாக சேகரிப்பு நாளத்தில் சேர்ந்து பெல்விஸ் பகுதிக்கு சென்று சிறுநீர்க் குழாய்கள் வழியாக சிறுநீர்ப்பையை அடைகிறது. சிறுநீர்ப்பையில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சிறுநீர் சேர்ந்தவுடன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்படுகிறது. பின்னர் 'பெரிஸ்டால்ஸிஸ் இயக்கத்தின் மூலம் சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.
7.
1) பண்புகளில் அதிக வேறுபாடுள்ள தனிமங்களும் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன. எ.கா.கடின உலோகங்களாகிய செம்பு, மற்றும் வெள்ளி மென் உலோகங்களாகிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.
2) ஹைட்ரஜனுக்கு என்று ஒரு தனி இடம் கொடுக்க முடிய வில்லை. அலோகமாகிய ஹைட்ரஜன், லித்தியம்,சோடியம் பொட்டாசியம் போன்ற மென் உலோகங்களோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது .
3) கூடிக்கொண்டே செல்லும் அணு நிறை எனும் விதியை சில வேளைகளில் கடைபிடிக்க முடிவதில்லை.
எ. கா : Co & Ni, Te & I
4) ஐசோடோப்புகளுக்கு தனிப்பட்ட இடம் ஒதுக்கப்படவில்லை.
8.
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் தனிம வரிசை செயல்பாடுகளாகும். இது நவீன ஆவர்த்தன விதி ஆகும்.
9.
குழியுடலிகள் உடல் சுவர் இரண்டு அடுக்குகளைப் பெற்றுள்ளது. இது அக அடுக்கு, புற அடுக்கு என இரு வகைப்படும்.இவ்வாறு இரண்டு அடுக்குகளைப் பெற்றிருப்பதால் இவை ஈரடுக்கு உயிரிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
10.
ஐசோடோன் ஒரே எண்ணிக்கையிலான நியூட்ரான்களையும் மாறுபட்ட அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
எ.கா. போரான் மற்றும் கார்பன் ஒத்த எண்ணிக்கையில் நியூட்ரான்களைப் பெற்றுள்ளன. புரோட்டான்களின் எண்ணிக்கை வேறுபடுவதால் அவற்றின் அணு எண்களும் வேறுபடுகின்றன.
எ.கா: போரான் & கார்பன்
11.
| வ.எண் | நிறை | எடை |
| 1. | இது அடிப்படை அளவு. | இது வழி அளவு. |
| 2. | இது ஸ்கேலார் அளவாகும். | இது வெக்டர் அளவாகும். |
| 3. | பொருளில் உள்ள பருப் பொருட்களின் அளவாகும். | பருப்பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையின் அளவாகும். |
| 4. | இடத்திற்கு இடம் மாறாது. | இடத்திற்கு இடம் மாறும். |
| 5. | இதன் அலகு கிலோகிராம் | இதன் அலகு நியூட்டன். |
12.
(d)
இவையனைத்தும்
13.
(b)
பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம்
14.
(c)
ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது
15.
(b)
எலக்ட்ரான் பங்கீடு
16.
(c)
அ மற்றும் ஆ
17.
(d)
வெற்றிடக் குடுவை
18.
(b)
ஐசோடோப்பு
19.
(a)
0.01 செ.மீ.
20.
(b)
கதிர் வீச்சுமுறை
21.
(c)
நீர்சார்பசைவு
22.
(b)
குழியுடலிகள்
23.
(c)
குழியாடி
24.
ஒரு நொடிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் சூரியன் (9 lakh கிமீ/ம) பால்வெளியை ஒரு முறை சுற்றிவர 225 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இந்தக் காலம்தான் காஸ்மிக் ஆண்டு எனப்படுகிறது.
25.
நோய் எதிர்ப்பு தடுப்பூசி என்பவை உயிருள்ள அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளிடமிருந்தோ அல்லது அவற்றின் விளை பொருள்களின் உதவியுடனோ நோயினைத் தடுக்கவும் அல்லது சிகிச்சை அளிக்கவும் உருவாக்கப்படும் ஊசியாகும்.
26.
ஒரு வட்டத்தின் சுற்றளவின் மீது நடைபெறும் இயக்கம் அல்லது வட்டப்பாதையில் நடைபெறும் இயக்கம்
27.
ஒரு பொருள் வெப்ப ஆற்றலை உறிஞ்சி உருக ஆரம்பிக்கிறது. ஒரு பொருள் குறிப்பிட்ட வெப்பநிலையில் உருகுவது உருகுநிலை எனப்படும்.
28.
விண்மீன்களில் இருந்து வரும் ஒளி வளிமண்டலத்தின் மாறிக்கொண்டேயுள்ள அடர்த்தினாலும், வெப்பநிலையினாலும் ஒளி விலகளுக்கு உட்படுகிறது.வளி மண்டலம் நிலையாக இல்லாது சுழற்சி தன்மை கொண்டதாக உள்ளது. எனவே வரும் ஒளி ஒரு புள்ளியிலிருந்து வருவதுபோல் தெரியாமல் வெவ்வேறு புள்ளிகளில் இருந்து வருவது போல் தெரிகிறது.எனவே விண்மீன்கள் மின்னுவதுபோல் தோன்றுகின்றன.
29.
ஒரு பொருளின் வெப்பநிலையை (10C) உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப ஏற்புத் திறன் ஆகும்.
30.
வைட்டமின் D மனிதனின் தோலால் உருவாக்கப்படுகிறது. அதிகாலையில் சூரியக் கதிர்கள் தோலில் விழும்போது வைட்டமின் D உருவாக்கப்படுகிறது.
31.
அ) இனப் பெருக்க குளம் :ஆரோக்கியமான , இனப்பெருக்கத்திற்கேற்ற , முதிர்ச்சியுற்ற ஆண் மற்றும் பெண் மீன்களானவை சேகரிக்கப்பட்டு இனப்பெருக்கத்திற்காக இக்குளத்தினுள் அனுப்பப்படுகின்றன. பெண் மீன்களால் வெளியிடப்பட்ட முட்டைகளானவை விந்துகள் மூலம் கருவுறுதல் அடைகின்றன.இந்த கருவுற்ற முட்டைகள் நீரின் மேற்பகுதியில் நுரைபோன்று கூட்டமாக மிதந்து காணப்படுகின்றன.
ஆ)குஞ்சு பொரிக்கும் குழிகள் : இனப் பெருக்கக் குளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கருவுற்ற முட்டைகள் பொரிக்கும் குழிகளுக்கு மாற்றப்படுகின்றன. பொரிப்பங்கள் மற்றும் பொறுப்பு வலைத் தொட்டிகள் ஆகியவை இரண்டு வகையான மீன் பொரிக்கும் குழிகளாகும்.
இ) நாற்றங்கால் குளங்கள் : குஞ்சு பொரிக்கும் குழிகளில் பொரிக்கப்பட்ட இளம் மீன் குஞ்சுகளானவை 2முதல் 7 நாட்களுக்கு பிறகு , வளர்க்கும் குளங்களுக்கு மாற்றப்படுகின்றன. இந்த மீன் குஞ்சுகளானவை 60நாட்கள் வரை நாற்றங்கால் குளத்தில் சரியான அளவு உணவு கொடுக்கப்பட்டு 2 - 25 செ,மீ அளவு வளரும் வரை பாதுகாக்கப்படுகின்றன.
ஈ) வளர்க்கும் குளங்கள் : இளம் மீன்களை வளர்ப்பதற்கும் , வளர்க்கும் குளத்திற்கு மாற்றப்பட்டு மூன்று மாதம் வரை அதாவது 10 முதல் 15 செ.மீ நீளமுடைய மீனாக வளரும் வரை வளர்க்கப்படுகின்றன.இங்கு குளம் மீன்களானவை இளரிகளாக மாற்றமடைகின்றன.
இருப்புக் குளங்கள் : இவை வளர்ப்புகளம் அல்லது உற்பத்திக்குளம் எனவும் அழைக்கப்படுகின்றன. விற்பனைக்கு ஏற்ற அளவினை அடையும் வரை மீன்குஞ்சுகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மீன் குஞ்சுகளை விடுவதற்கு முன் இக்குளமானது கரிம மற்றும் கனிம உரங்கள் இடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
32.
வைரஸ்கள் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
(i) தாவர வைரஸ்கள்:
இவை தாவரங்களைத் தாக்கி நோயினை உருவாக்குகின்றன. எ.கா: புகையிலை மொசைக் (பல வண்ண) வைரஸ், காலிபிளவர் மொசைக் வைரஸ், உருளைக்கிழங்கு வைரஸ்.

(ii) விலங்கு வைரஸ்கள்:
இவ்வகை வைரஸ்கள் விலங்குகளைத் தாக்கி நோயுண்டாக்குகின்றன. எ.கா: அடினோ வைரஸ், ரெட்ரோவைரஸ் (எச்.ஐ.வி) இன்புளுயன்சா வைரஸ்.

(iii) பாக்டீரியா வைரஸ் (பாக்டீரியோஃபேஜ்கள்): இவைகள் பாக்டீரியாவினைத் தாக்கி பாதிப்பை உண்டாக்கும் வைரஸ்கள் ஆகும்.
எ.கா: பாக்டீரிய அழிப்பு வைரஸ்.(T4)

33.
1. பாய்மம் ஒன்றின் மீது மிதக்கும் பொருளொன்றின் எடையானது, அப்பொருளினால் வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமமாகும்.
2. (i) மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையமும் மிதப்புவிசையின் மையமும் ஒரே நேர்கோட்டில் அமையும்.
(ii) மிதப்புவிசை செயல்படும் புள்ளியே மிதப்பு விசை மையம் எனப்படுகிறது.

34.
| தாவர செல்கள் | விலங்கு செல்கள் |
| 1. தாவர செல்கள் தற்சார்பு கொண்டவை. தங்களுக்குத் தேவையான உணவை தாங்களே தயாரிக்கக் கூடியவை |
விலங்கு செல்களால் உணவை தயாரிக்க முடியாது. இவை பிற உயிரினங்களை சார்ந்துள்ளன. |
| 2) தாவர திசுக்களில் ஆக்குத் திசுக்களும் நிலைத்த திசுக்களும் உண்டு. |
விலங்குத் திசுக்கள் எப்பிதீலியத் திசு, இணைப்புத் திசு, தசைத்திசு, நரம்பு திசு என நான்கு வகைப்படும். |
| 3) தாவர செல்களில் இறந்த செல்கள் அதிகம் உண்டு. |
விலங்கு செல்களில் உயிருள்ள செல்கள் அதிகம் உண்டு |
| 4) தாவரத் திசுக்கள் எளியவை | விலங்குத் திசுக்கள் சிக்கலான அமைப்பு கொண்டவை. |
| 5) தாவர செல்களின் வளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். |
விலங்கு செல்கள் முதிர்ச்சி அடைந்தாலும் வளர்ச்சி நின்றுவிடும். |
35.
36.
ஒலியின் அதிர்வெண் = 600 Hz
600 Hz = 600 அதிர்வுகள் / வினாடி
ஒரு நிமிடம் = 60 வினாடி
ஒரு நிமிடத்திற்கு உண்டாகும் அதிர்வுகள் = 60 \(\times\) 600 = 3,600 அதிர்வுகள்
ஒரு நிமிடத்திற்கு 3600 முறை அதிர்வுரும்.
37.
(அ) தலைமுடி எலக்ட்ரான்களை இழக்கிறது.
நெகிழிச்சீப்பு எலக்ட்ரான்களை பெற்றது.
(ஆ) 1 C யில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 6.25 \(\times\) 1018 எலக்ட்ரான்கள்
0.4 C யில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 6.25 \(\times\) 1018 \(\times\) 0.4 எலக்ட்ரான்கள்
= 2.5 \(\times\) 1018 எலக்ட்ரான்கள்
இடம்பெயர்ந்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 2.5 \(\times\) 1018
38.
கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்களை மறுஊட்டம் செய்ய இயலாது. ஏனெனில் அவை முதன்மை மின்கலன்கள் ஆகும். இந்த முதன்மை மின்கலன்களை மறுஊட்டம் செய்ய இயலாது. இவை மீளாக்கலம் ஆகும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards