9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
Term 1 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
மரத்தூள். இரும்புத் துகள் மற்றும் நாப்தலீன் கலந்த கலவையை எவ்வாறு பிரிக்கலாம்?
2.
Rf காரணி என்றால் என்ன?
3.
ஒரு படித்தானக் கரைசல் பலப்படித்தானக் கரைசலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
4.
நாம் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கிமானது. அது காற்றில் 21% கனஅளவில் உள்ளது. அது ஒரு தனிமமா அல்லது சேர்மமா?
5.
‘ஸ்மைலி பந்து’ எடுத்து அதனை அழுத்து. உன்னால் அழுத்தமுடிகிறதா? உன் விடையை நியாயப்படுத்து
6.
ஏன் வாயுக்களை எளிதாக அழுத்தமுடிகிறது ஆனால் திண்மங்களை அழுத்தமுடியவில்லை
7.
எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது? (பல்வேறு முறைகளை ஒன்று சேர்த்து நீ பயன்படுத்தலாம்).
8.
டிண்டால் விளைவு மற்றும் பிரௌனியன் இயக்கம் ஆகியவற்றை தகுந்த வரைபடத்துடன் விளக்குக.
9.
தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.
10.
கீழ்க்கண்ட கலவைகளின் கூறுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப் பெயரிடு.
i) ஒன்றாக கலக்கும் திரவங்கள்
ii) ஒன்றாக கலவாதத் திரவங்கள்
11.
பரப்புக் கவரப்படும் பொருள் மற்றும் பரப்புக் கவரும் பொருள் என்றால் என்ன ?
1.
முதலில் இரும்புத்துகள்களை காந்தமுறையில் பிரித்தெடுக்கலாம். மேலும் மரத்தூள் மிதக்கும். நாப்தலீனை பதங்கமாக்கல் முறையில் தனித்தனியே பிரித்தெடுக்கலாம்.
2.
Rf காரணி (பிடிமானக் காரணி) என்பது கரைபொருள் நகரும் தொலைவிற்கு, கரைப்பான் நகரும் தொலைவிற்கும் இடையேயான விகிதம் என வரையறுக்கப்படுகிறது.

3.
| வ.எண் | ஒருபடித்தான கலவைகள் | பலபடித்தான கலவைகள் |
|---|---|---|
| 1. | பகுதிப் பொருட்கள் சீராக கலந்து ஒரே நிலையில் உள்ளது | பகுதிப் பொருட்கள் சீராக கலந்திருப்பதில்லை. |
| 2. | பகுதி பொருட்களுக்கு எல்லைப் பிரிப்பு இல்லை. | பகுதிப் பொருட்களுக்குள் எல்லைகளை பார்க்க முடியும். |
| 3. | ஒரே நிலையில் உள்ளது | ஒன்றுக்கும் மேற்பட்ட நிலைகளைக் கொண்டுள்ளது |
| 4. | பகுதிப் பொருட்கள் கண்களுக்கு புலப்படுவதில்லை | பகுதிப் பொருட்கள் கண்களுக்கு புலப்படும். |
| 5. | எ.கா: உப்புக்கரைசல், உலோகக்கலவை, பெட்ரோல். | எ.கா: நீரில் சுண்ணாம்பு, நீரில் மணல். |
(i) ஒருபடித்தான கலவை விளக்கம்:
சிறிதளவு உப்பை எடுத்து நீரில் கரைத்துவிட வேண்டும். நன்றாக உப்பு கரைந்து விடும். நம்மால் உப்பின் துகள்களை பார்க்க முடிவதில்லை. மேலும் சுத்தமான கரைசல் கிடைக்கிறது. எந்தந் துகள்களும் கரைசலின் அடியில் தங்குவதில்லை.
(ii) பலபடித்தான கலவை விளக்கம்:
சிறிதளவு சுண்ணாம்புத் துகளை நீரில் கரைக்கவும். கரைந்த பின் 10 நிமிடங்களுக்கு தனியாக வைத்துவிடவும். சுண்ணாம்புத் துகள்கள் கரைசலின் அடியில் தங்கியிருப்பதைக்காணலாம். மேலும் சுண்ணாம்பிற்கும் நீருக்கும் இடையே எல்லையைப் பார்க்க முடியும்.
4.
ஆக்ஸிஜன் ஒரு தனிமம்.
5.
ஸ்மைலி பந்தின் உட்புறம் நுண்துளைகள் கொண்ட பஞ்சு போன்ற பொருள் (foam) உள்ளது. பந்தை அழுத்தும்போது உள்ளே உள்ள காற்று வெளியேறுவதால் நம்மால் பந்தை அழுத்த முடிகிறது. அழுத்துவதை விட்டு விட்டால், வெளிக்காற்று வேகமாகப் பந்தின் துளைகளுக்குள் சென்று விடுகிறது. இதனால் பந்து தனது பழைய உருண்டை நிலையை மீண்டும் அடைகிறது.
6.
வாயுக்களில் உள்ள துகள்கள் நெருக்கமின்றிக் காணப்படுகின்றன. இந்தத் துகள்களுக்கிடையே அதிக இடைவெளி காணப்படுகிறது. எனவே அழுத்தத்தை செலுத்தி வாயுத் துகள்களை நெருக்கமாக கொண்டுவர இயலும். வாயுக்களை எளிதில் அழுத்த முடியும். ஆனால் திண்மத்துகள்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக உள்ளதால் இவற்றை அழுத்தமுடிவதில்லை.
7.
(i) பிரிபுனல் முறை:
ஒன்றாக கலவாத இரண்டு திரவங்களின் கலவை பிரிபுனல் மூலம் பிரிக்கப்படுகிறது. முதலில் உப்புக்கரைசலும் எண்ணெயும் சேர்ந்த கலவை பிரிபுனலில் ஊற்றப்படுகிறது. பின் நன்றாக கலக்கப்படுகிறது. பின்னர் 5 நிமிடங்களுக்கு இந்தக் கலவை தனியே வைக்கப்படுகிறது. பிரிபுனலில் எண்ணெய் மேலடுக்காகவும் உப்பு நீர் கீழ் அடுக்காகவும் தங்கி விடுகிறது. பிரிபுனலில் உள்ள உப்புநீரை பிரிதலின் நிறுத்துக் குழாயின் மூலம் வெளியேற்றி முகவையில் சேமிக்கப்படுகிறது.உப்புநீர் சேர்த்த பின் மற்றொரு முகவையில் எண்ணெய் சேமிக்கப்படுகிறது.
(ii) ஆவியாக்கல் மற்றும் படிகமாக்கல்:
இம்முறையானது கரைபொருளை கரைசலிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படுகிறது. உப்புக் கரைசலை வெப்பப்படுத்தும் போது நீரானது ஆவியாகி உப்பு (திடப்பொருள்) கீழே படிகமாக தங்கி விடுகிறது. இவ்வாறு எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை பிரிபுனல் முறை, ஆவியாக்கல் மற்றும் படிகமாக்கல் முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது.
8.
(1). டிண்டால் விளைவு:
(i) டிண்டால் என்பவர் ஒரு வலுவான ஒளிக்கற்றைகளை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும் போது ஒளிக்கற்றையின் பாதையை பார்க்க முடியும் என்று கண்டறிந்தார். மேலும் கூழ்மத்துகள்களால் ஒளி சிதறடிக்கப்படுகிறது. இதுவே டிண்டால் விளைவு ஆகும்.
(ii) எ.கா: ஒளிக்கற்றையானது தூய நீர் வழியாக செல்லும்போது கண்களுக்கு புலப்படுவதில்லை. ஆனால் கூழ்மக் கரைசலின் வழியே செல்லும்போது ஒளிக்கற்றை கண்களுக்குபுலப்படுகிறது
.
(2). பிரௌனியன் நகர்வு:
(i) கூழ்மக் கரைசல்களை செறிவு மிக்க நுண்ணோக்கியில் பார்க்கும் போது கூழ்மத்துக்கள்கள் இங்கும் அங்குமாக ஒழுங்கற்ற நிலையில் சீராகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். இந்த நகர்வு பிரௌனியன் நகர்வு எனப்படும்.
(ii) எ.கா: பிரௌனியன் இயக்கத்திற்கு காரணம் பரவல் ஊடகத்திலுள்ள மூலக்கூறுகளுடன், பரவிய நிலைமை மூலக்கூறுகள் சமமற்ற முறையில் தாக்குவதே ஆகும்.

9.
| வ.எண் | தனிமம் | சேர்மம் |
|---|---|---|
| 1. | ஒரே வகையான அணுக்களைக் கொண்டது | ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களால் ஆனது. |
| 2. | இது ஒரு தூய்மையான பொருள் | இது ஒரு தூய்மையான பொருள் அல்ல. |
| 3. | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியாது | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியும் |
| 4. | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை பெற்றுள்ளது | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைப் பெற்றுள்ளது |
| 5. | உதாரணம்: ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் | உதாரணம்: நீர், கரும்புச் சர்க்கரை. |
10.
| வ.எண் | கலவை | பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனம் |
| 1. | ஒன்றாகக் கலக்கும் திரவங்கள் | பின்னக் காய்ச்சி வடிக்கும் சாதனம் |
| 2. | ஒன்றாக கலவாதத் திரவங்கள் | பிரிபுனல் |
11.
ஒரு பொருளின் மேற்பரப்பில் வேறொரு பொருளின் துகள்கள் ஒட்டிக் கொள்வது பரப்புக்கவர்தல் எனப்படும். எடுத்துக்காட்டாக சுண்ணக்கட்டியின் துண்டுகளை நீலநிற மையினுள் ஊற வைக்கும் போது சுண்ணக்கட்டியின் மேற்பரப்பு நீலநிறமாக மாற்றமடைகிறது. இதில் சுண்ணக்கட்டி பரப்பு கவரும் பொருள். நீல நிற மை பரப்பு கவரப்படும் பொருள் ஆகும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards