9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
Term 1 அளவீடுகளும், அளவிடும் கருவிகளும்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை எவ்வாறு கணக்கிடுவாய்?
2.
நெகிழிப்பையின் தடிமனைக் கணக்கிடுவதற்குத் தேவையான அலகு என்ன ?
3.
நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.
4.
நிலையான அலகு முறையின் தேவை என்ன?
5.
SI அலகுகளை எழுதும்போது கவனிக்க வேண்டிய விதி முறைகள் யாவை ?
6.
ஒரு இரப்பர் பந்தின் விட்டத்தை அளவிடும்போ து முதன்மை அளவுகோலின் அளவு 7 செ.மீ, வெர்னியர் ஒன்றிப்பு 6 எனில் அதன் ஆரத்தினைக் கணக்கிடுக
7.
இனியன் ஒரு ஒளி ஆண்டு என்பதனை 9.46 \(\times\) 1015 மீ எனவும் எழிலன் 9.46 \(\times\) 1012 கி.மீ எனவும் வாதிடுகின்றனர். யார் கூற்று சரி ? உன் விடையை நியாயப்படுத்து.
8.
கீழ்க்காணும் படத்திலிருந்து நேர் சுழிப்பிழை மற்றும் எதிர்சுழிப்பிழையை க் கணக்கிடுக
9.
ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை எவ்வாறு கணக்கிடுவாய்?
10.
ஒரு உள்ளீடற்ற தேநீர் குவளையின் தடிமனை எவ்வாறு கண்டறிவாய் ?
1.
(i) வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு

(ii) வெர்னியர் அளவியில் முதன்மைக் கோல் சென்டிமீட்டரிலும், அதன் பிரிவுகள் மில்லி மீட்டரிலும் குறிக்கப்பட்டிருக்கும். அதனால் முதன்மைக் கோலின் மிகச்சிறிய அளவு ஒரு மில்லி மீட்டர் ஆகும். வெர்னியர் அளவு கோலில் உள்ள மொத்தப் பிரிவுகள் 10 ஆகும்.
(iii) எனவே மீச்சிற்றளவு
= 0.1 மி.மீ. அல்லது .0.01 செ.மீ
2.
திருகு அளவியினை கொண்டு மிக சிறிய அளவு கொண்ட நெகிழிப்பையின் தடிமனை கணக்கிடலாம். திருகு அளவியின் மூலம் ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவை கூட துல்லியமாக அளவிடலாம். நெகிழிப்பையின் தடிமனானது மைக்ரோ மீட்டரில் (10-3 m) இருந்து ஒரு சில நானோ மீட்டர்கள் (10-9 m) வரை அமையும்.
3.
| வ.எண் | நிறை | எடை |
| 1. | இது அடிப்படை அளவு. | இது வழி அளவு. |
| 2. | இது ஸ்கேலார் அளவாகும். | இது வெக்டர் அளவாகும். |
| 3. | பொருளில் உள்ள பருப் பொருட்களின் அளவாகும். | பருப்பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையின் அளவாகும். |
| 4. | இடத்திற்கு இடம் மாறாது. | இடத்திற்கு இடம் மாறும். |
| 5. | இதன் அலகு கிலோகிராம் | இதன் அலகு நியூட்டன். |
4.
i) சரியான மற்றும் துல்லியமான அளவுகளான நீளம், நிறை, காலம் போன்றவற்றை அளவிடலாம்.
ii) சிறு இடம் விட்டு இடமோ, நபர்களுக்கிடையிலோ, மாறாத அளவினைப் பெறலாம்.
எ. கா: நீளத்தின் அலகு மீட்டர்
5.
i) அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் அலகுகளை எழுதும் போது முதல் எழுத்து பெரிய எழுத்தாக (capital letter) இருக்கக்கூடாது.
எ. கா: newton, henry, ampere and watt
ii) அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் அலகுகளின் குறியீடுகளை எழுதும்போது பெரிய எழுத்தால் எழுத வேண்டும்.
எ.கா: newton என்பது N, henry என்பது H
iii) குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை சிறிய எழுத்தால் எழுத வேண்டும்.
எ.கா: Metre என்பது m, kilogram என்பது kg.
iv) அலகுகுளின் குறியீடுகளுக்கு இறுதியிலோ அல்லது இடையிலே நிறுத்தல் குறிகள் போன்ற எந்த குறிகளும் இடக்கூடாது.
எ.கா: 50 m என்பதை 50 m. என்றோ 50 Nm என்பதை 50 N.m என்றோ குறிப்பிடக்கூடாது.
v) அலகுகளின் குறியீடுகளை பன்மையில் எழுதக் கூடாது.
எ.கா: 10 Kg என்பதை 10 Kgs என எழுதக்கூடாது.
6.
முதன்மைக் கோலின் அளவு = 7 செ.மீ (7 \(\times\) 10 மி.மீ)
= 7 மி.மீ (1 செ.மீ - 10 மி.மீ)
வெர்னியர் ஒன்றிப்பு = 6
மீச்சிற்றளவு = 0.1 மி.மீ.
கழிப்பிழை = இல்லை
இரப்பர் பந்தின் விட்டம் = MSR + (V.C\(\times\) L.C) 土ZE
=7 மி.மீ + (6 \(\times\) 0.1)
= 7 + 0.6
= 7.6 மி.மீ
பந்தின் ஆரம் = 7.6 மி.மீ/2
= 3.53 மி.மீ
7.
(i) இனியனின் கூற்று சரியானது.
(ii) ஏனெனில் ஒளியானது ஒரு வினாடிக்கு 3 \(\times\) 108 மீ அல்லது 3,00,000 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. ஒரு ஆண்டில் 365 நாட்கள் உள்ளன. அதாவது ஒரு ஆண்டில் 365 \(\times\) 24 \(\times\) 60 \(\times\) 60 = 3.153 \(\times\) 107 வினாடிகள்.
(iii) எனவே ஒரு ஒளி ஆண்டு = 3.153 x 107 \(\times\) 3 \(\times\) 108 = 9.46 \(\times\)1015 மீ
8.
நேர்வு (a): வெர்னியர் மற்றும் முதன்மைக் கோலின் சுழிப்பிரிவுகள் ஒன்றியிருக்கின்றன. எனவே சுழிப்பிழை இல்லை
நேர்வு (b):வெர்னியர் கோலின் சுழிப்பிரிவு முதன்மை க் கோலின் சுழிப்பிரிவிற்கு வலது புறமாக நகர்ந்துள்ள து. இது நேர் சுழிப்பிழை ஆகும். மேலும் வெர்னியர் கோலின் எட்டாவது பிரிவு, முதன்மைக் கோலின் ஒரு பிரிவுடன் ஒன்றியிருக்கிறது. எனவே, நேர் சுழிப்பிழை = 8 \(\times\) 0.01செ.மீ = 0.8 செ.மீ = 0.08 செ.மீ (அல்ல து) 0.8 மி.மீ
நேர்வு (c) : வெர்னியர் கோலின் சுழிப்பிரிவானது முதன்மைக் கோலின் சுழிப்பிரிவிற்கு இடதுபுறமாக நகர்ந்துள்ளது. இது எதிர்சுழிப்பிழை ஆகும். இங்கு வெர்னியர் கோலின் நான்காவது பிரிவு (பின்புறமிருந்து 6 வது பிரிவு) முதன்மைக் கோலின் ஒரு பிரிவுடன் ஒன்றியிருக்கிறது. எனவே எதிர்சுழிப்பிழை = - 6 \(\times\) 0.01 செ.மீ = - 0.06 செ.மீ (அல்ல து)
- 0.6 மி.மீ
9.
(i) முதலில் திருகு அளவியின் புவியிடைத் தூரம், மீச்சிற்றளவு மற்றும் சுழிப்பிழை ஆகியவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.
(ii) திருகு அளவியின் இரு சமதள பரப்புகளுக்கு இடையே மெல்லிய நாணயத்தை வைக்க வேண்டும்
(iii) பற்சட்ட அமைப்பின் உதவியால் திருகினைத் திருகி நாணயத்தினை நன்றாக பற்றிக்கொள்ளுமாறு செய்ய வேண்டும்.
(iv) புரிக்கோல் காட்டும் அளவினையும் (PSR) தலைக்கோல் ஒன்றிப்பின் அளவினையும்(HSC) குறித்துக் கொள்ள வேண்டும். நாணயத்தின் தடிமன் = PSR + (HSC 土 ZC) \(\times\) LC
(v) நாணயத்தின் வெவ்வேறு பகுதியினைத் திருகு அளவியின் சமதள பரப்புகளுக்கு இடையே வைத்து சோதனையைத் திரும்பப் செய்யவும்.
(vi) அளவீடுகளை அட்டவணைப்படுத்தவும்.
(vii) கடைசி கட்டத்தில் உள்ள பல்வேறு அளவுகளின் சராசரி நாணயத்தின் தடிமனைக் கொடுக்கும்.
| வ.எண். | புரிகோல் அளவு (PSR) | தலைகோல் ஒன்றிப்பு (HSC) | (HSC \(\times\) LC) | (HSC \(\times\) LC) 土 ZC | PSR + (HSC \(\times\) LC)土 ZC |
| 1. | 1 | 33 | 0.33 | 0.33 | 1.33 |
| 2. | 1 | 32 | 0.32 | 0.32 | 1.32 |
| 3. | 1 | 34 | 0.34 | 0.34 | 1.34 |
| சராசரி | 1.33 |
நாணயத்தின் தடிமன் = 1.33 மி.மீ.
10.
தேநீர் குவளையின் வெளிவிட்டம் காணல்:
(i) தேநீர் குவளையினை கீழ் நோக்கிய தாடையில் பொருத்தவும்.
(ii) முதன்மை அளவுகோலின் அளவினையும் வெர்னியர் அளவுகோலின் ஒன்றிப்பினையும் கண்டறிந்து அளவீடுகளை அட்டவணைப்படுத்தவும்.
(iii) குவளையின் வெளிவிட்டத்தினை MSR + (VC \(\times\) L.C) என்ற சமன்பாட்டின் மூலம் கணக்கிடவும்.
(iv) இரண்டு அல்லது மூன்று முறை அளவீடு எடுத்துக் கொள்ளவும். கணக்கீடு செய்யப்பட்டபின் மூன்று அளவீடுகளுக்கும் உள்ள சராசரியை கணக்கிடவும்.
தேநீர் குவளையின் உள்விட்டம் காணல்:
(i) தேநீர் குவளையினை மேல் நோக்கிய தாடையில் பொருத்தவும்.
(ii) முதன்மை அளவுகோலின் அளவையும் வெர்னியர் அளவுகோலின் ஒன்றிப்பினையும் கண்டறிந்து மதிப்பீட்டினை அட்டவணைப்படுத்தவும்.
(iii) மதிப்பீட்டினைக் கொண்டு MSR + (VC \(\times\) L.C) என்ற சமன்பாட்டின் மூலம் உள்விட்டம் கணக்கிடவும்,
(iv) சோதனை செய்து அட்டவணைப்படுத்தவும்.
(v) சராசரி அளவீடு கண்டறியவும்.
| வ.எண். | MSR |
VSC |
MSR + (VC x LC)土ZC | |
| 1. 2. 3. |
வெளிவிட்டம் | |||
| 1. 2. 3. |
உள்விட்டம் |
தேநீர் குவளையின் தடிமன் = வெளிவிட்டம் - உள்விட்டம் =_________ மி.மீ.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards