9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 16/10/2019
Term 2 வெப்பம்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.
2.
தன் வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.
3.
கோடைகாலங்களில் மக்கள் ஏன் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்?
4.
வெப்பச்சலனம்-வெப்பக்கதிர்வீச்சு இரண்டையும் வேறுபடுத்துக.
5.
நீரானது வெப்பத்தை அரிதாகக் கடத்தக் கூடியது என்பதை எவ்வாறு சோதனை மூலம் நிரூபிக்கலாம்? சமைக்கும் போது நீரை எவ்வாறு எளிதாகச் சூடுபடுத்தலாம்?
6.
நீரின் நிலை மாற்றங்கள் யாவை? விளக்குக.
7.
அன்றாட வாழ்வில் வெப்பச்சலனம் பற்றி விளக்குக.
8.
100°C வெப்பநிலையில் இருக்கும் நீரைப் பயன்படுததி 2 கிகி நிறையுள்ள பனிக்கட்டியுடன் சேர்த்த கலவையை 0°C வரை குளிர்விக்க எவ்வளவு வெந்நீர் தேவைப்படும்?
நீரின் தன் வெப்ப ஏற்புத் தி்றன் = 4.2 JKg-1 K-1 மற்றும் பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பம் = 336 Jg-1.
9.
5 கிகி பனிக்கட்டி உருகுவதற்கு எவ்ளவு வெப்ப ஆற்றல் தேவை? ( பனிககட்டியின் தன் உள்ளுறை வெப்பம் = 336 Jg-1)
10.
120 கிராம் நீரின் வெப்பநிளலளய 10 கெல்வின் உயர்த்துவதற்கு சிறிது வெப்ப ஆற்றல் கொடுக்கப்படுகி்றது. 60 கிராம் எண்ணெய்யின் வெப்பநிளலளய 40 கெல்வின் உயர்த்துவதற்கு அதே அளவு வெப்ப ஆற்றல் கொடுக்கப்படுகி்றது. நீரின் தன் வெப்ப ஏற்புத் தி்றனின் மதிபபு 4200JKg-1 K-1 என்றால்
i) நீரின் வெப்பநிலையை உயரத்த கொடுககப்பட்ட வெப்ப ஆற்றல் எவ்வ்ளவு?
ii) எண்ணெய்யின் தன் வெப்ப ஏற்புத் தி்றனைக் கணககிடுக?
11.
2கிகி நீரின் வெப்பநிலையை 10°C லிருந்து 50°C க்கு அதிகரிக்கத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் எவ்வளவு? (நீரின் தன் வெப்ப ஏற்புத்தி்றன் 4200 JKg-1 K-1)
1.
ஒரு பொருளின் வெப்பநிலையை (10C) உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப ஏற்புத் திறன் ஆகும்.
2.
ஓரலகு நிறையுள்ள (1 kg) பொருளின் வெப்பநிலையை ஒரு அலகு (10C or 1 K) உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவு அதன் தன்வெப்ப ஏற்புத்திறன் எனப்படும்.
3.
வெள்ளை நிறம் சார்ந்த ஆடைகள் சிறந்த வெப்ப பிரதிபலிப்பான்கள். எனவே கோடை காலங்களில் அவை நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கப் பயன்படும். எனவே கோடை காலங்களில் மக்கள் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்.
4.
| வ.எண் | வெப்பச்சலனம் | வெப்பக்கதிர்வீச்சு |
| 1. | மூலக்கூறுகள் தேவைப்படுகிறது | மூலக்கூறுகள் தேவைப்படுவதில்லை |
| 2. | மின்காந்த அலைகளால் வெப்பம் பரவுவதில்லை. | மின்காந்த அலைகளாக வெப்பம் பரவுகிறது. |
| 3. | அதிக வெப்பமுள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தில் கூட வெப்பம் பரவுகிறது. | வெற்றிடத்தில் கூட வெப்பம் பரவும். |
5.
நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் மிக அதிகம். எனவே நீரானது அதிகப்படியான வெப்பத்தினை தன்னகத்தே சேமித்துக் கொள்கிறது. எனவே தன்னுடைய வெப்பநிலையை உயர்த்துவதற்கு நீர் அதிக வெப்பத்தை எடுத்துக் கொள்ளும். அதனால் தான் வாகனங்களில் இருக்கும் வெப்பம் தணிக்கும் அமைவுகளில் நீர் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் தொழிற்சாலைகளிலும், இயந்திரங்களிலும் ஏற்படும் வெப்பத்தைத் தணிப்பதற்கு நீர் பயன்படுகிறது. நீரின் வெப்ப ஏற்புத்திறன் 4200Jkg 'K'. எனவே எளிதாக நீரின் வெப்பநிலையை அதிகப்படுத்தலாம்.
6.
(i) நிலை மாற்றம்
பொருளானது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வையே நாம் நிலை மாற்றம் என்கிறோம்.
எடுத்துக்காட்டாக சாதாரண வெப்பநிலையில் நீர் மூலக்கூறுகள் திரவ நிலையில் இருக்கும். 1000C வெப்பநிலைக்கு நீரை வெப்பப்படுத்தும் போது அது நீராவியாக மாறுகிறது. நீராவி வாயு நிலையில் இருக்கிறது. வெப்பநிலையைக் குறைக்கும் போது மீண்டும் நீராக மாறுகிறது. வெப்பநிலையை 00C க்கு குறைக்கும் போது பனிக்கட்டியாக மாறுகிறது. பனிக்கட்டி திட நிலையில் இருக்கிறது. பனிக்கட்டியை வெப்பப்படுத்தும்போது மீண்டும் நீராக மாறுகிறது. இவ்வாறு வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் போது நீர் தனது நிலையை மாற்றிக்கொள்ளுகிறது.
(ii) உருகுதல் உறைதல்
ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு உருகுதல் ஆகும்.
(iii) ஆவியாதல் குளிர்தல்
ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு ஆவியாதல் ஆகும்.

7.
(1) சூடான காற்று பலூன்கள்
இத்தகைய பலூன்களின் அடிப்பகுதியில் இருக்கும் காற்று மூலக்கூறுகள் வெப்பமடைந்து மேல் நோக்கி நகரத் தொடங்கும். இதனால் சூடான காற்று பலூனின் உள்ளே நிரம்புகிறது. அடர்த்தி குறைந்த சூடான காற்றினால் பலூன் மேல்நோக்கிச் செல்கிறது. சூடான காற்று மேல்நோக்கிச் செல்வதால் பலூனின் மேற்பகுதியில் இருக்கும் குளிர் காற்று கீழ்நோக்கி நகர்கிறது. இந்தச் செயல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.
(2) நிலக்காற்றும் கடல்காற்றும்
(i) பகல் நேரங்களில் நிலப்பரப்பு, கடல் நீரைவிட அதிகமாகச் சூடாகிறது. இதனால் நிலப்பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்புகிறது. கடல் பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று நிலத்தை நோக்கி வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் காற்று கடல் பகுதியிலிருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது. இதனை கடல் காற்று என்கிறோம்.
(ii) இரவு நேரங்களில் நிலப்பரப்பு கடல் நீரைவிட விரைவில் குளிர்வடைகிறது. கடல் பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்ப, நிலப்பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று கடல் பகுதி நோக்கி வீசுகிறது. இதனால் இரவு நேரங்களில் காற்று நிலத்திலிருந்து கடல் நோக்கி வீசுகிறது. இதனை நிலக்காற்று என்கிறோம்.
(3) காற்றோட்டம்
காற்றானது, அழுத்தம் அதிகமான பகுதியிலிருந்து அழுத்தம் குறைவான பகுதிக்குச் செல்லும். சூடான காற்று மேலெழும்பிச் செல்வதால் அங்கு குறைந்த அழுத்தம் உருவாகிறது. ஆகவே குளிர்ந்த காற்று அதிக அழுத்தப்பகுதியில் இருந்து குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி நகர்கிறது. இதுவே காற்றோட்டத்தை உருவாக்குகிறது.
(4) புகைபோக்கிகள்
சமையல் அறைகளிலும் தொழிற்சாலைகளிலும் உயரமான புகைபோக்கிகளை வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சூடான காற்று அடர்த்தி குறைவாக இருப்பதால் எளிதாக வளிமண்டலத்திற்குச் சென்று விடுகிறது.
8.
கொடுக்கப்பட்டுள்ள தரவுகள்:
பனிக்கட்டியின் நிறை = 2Kg = 2000 g.
m என்பது வெந்நீரின் நிறை என்க.
இழப்பு வெப்பம் = பெற்றுக்கொண்ட வெப்பம்
m \(\times\) C \(\times\) Δt = m \(\times\) L
m \(\times\) 4.2 \(\times\) (100 - 0) = 2000 \(\times\) 336
m = \(\frac {2000\ \times\ 336}{4.2\ \times\ 100}\)
= 1600 கி அல்லது 1.6 கிகி.
9.
கொடுக்கப்பட்டுள்ள தரவுகள்:
m = 5 கிகி = 5000 கி, L = 336 Jg-1
தேவைப்படும் வெப்ப ஆற்றல் = m \(\times\) L
= 5000 \(\times\) 336
= 1680000J அல்லது 1.68 \(\times\) 106 J
10.
(i) நீருக்குக் கொடுக்கப்பட்ட வெப்ப ஆற்றல் = நீரின் நிறை x நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் x வெப்பநிலை மாற்றம்
= \(\frac {120 kg}{1000}\) \(\times\) 4200 JKg-1K-1 \(\times\) 10K
= 5040 J.
ii) இதே அளவு வெப்ப ஆற்றல் எண்ணெய்க்குக் கொடுக்கப்படுகிறது. எனவே எண்ணெய்க்குக் கொடுக்கப்பட்ட வெப்ப ஆற்றல் = 5040 J
C என்பது தன வெப்ப ஏற்புத்திறன் என்றால்

= \(\frac {5040J}{60/1000 kg\ \times\ 40 k}\)
= 2100 JKg-1K-1.
11.
கொடுக்கப்பட்டுள்ள தரவுகள்
m = 2 Kg, ΔT = (50 - 10) = 400C
கெல்வினில் மாற்றும் பொழுது
(323.15 - 283.15) = 40K
C = 4200 JKg-1 K-1
\(\therefore\) தேவையான வெப்பம், Q = m \(\times\) C \(\times\) ΔT
= 2 \(\times\) 4200 \(\times\) 40 = 3,36,000 J
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards