9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 16/10/2019
Term 2 திசுக்களின் அமைப்பு
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
மைட்டாஸிஸ் செல்பகுப்பில் புரோப்போஸ் நடைபெறும் பொழுது காணப்படும் நிகழ்வுகளின் வரிசையை எழுதுக.
2.
ஏன் இரத்தம் ஒரு இணைப்பு திசுவாகக் கருதப்படுகிறது
3.
பாலினப் பெருக்கத்தின்போது ஏன் கேமிட்டுகள் மியாஸிஸ் மூலம் உருவாக வேண்டும்?
4.
திசு செல்களுக்கு மற்றும் இரத்ததிற்கு இடையேயுள்ள இடைத்தரவுகள் என்று அழைக்கப்படும் திசு எது?என்?
5.
தளர்ந்த இணைப்பு திசுவின் மேட்ரிக்ஸ்ஸில் உள்ள நார்கள் எவை?
6.
படம் A மற்றும் B ஐக் கண்டறியவும்

a. ________________ எபிதீலியம் வாய்க்குழியின் வெளி அடுக்கை உருவாக்கிறது
b. ________________ எபிதீலியம் உயரமான மற்றும் தூண் போன்ற செல்களைப் பெற்றுள்ளது
c.எது ஒன்று பொருள்களில் பரவலை அனுமதிக்கிறது?
d.எது நடைபாதை எபித்திலியம் என்று அழைக்கப்படுகிறது ?
e.எந்த எபித்திலியம் இரைப்பை சிறுகுடல் பாதை மற்றும் குரல்வளை மூடியைச் சூழ்ந்துள்ளது.
7.
சைலக்கூறுகளைப் பற்றி எழுதுக.
8.
ஆக்குத்திசுக்கள் யாவை? பல்வேறு வகையான ஆக்குத்திசுகள் பரவியுள்ளதையும் மற்றும் அவற்றின் செயல்பாடுகளையும் விவரிக்க.
9.
இரத்தத்தில் எவை உண்மையான செல்கள் இல்லை?ஏன் ?
10.
இரத்ததிலிருந்து அனைத்து இரத்தத் தட்டுகளையும் நீக்கும்போது என்ன வினைவு ஏற்படும்?
1.
புரோநிலையில் உள்ள உட்கருவின் உள்ள குரோமோசோம்கள் சிறியதாகவும், தடித்தும் புலனாகும் அல்லது தெரியும் வகையில் அமைந்திருக்கும். சென்ட்ரோசோம் பிளவுற்று இருசெய் சென்ட்ரியோல்களாகின்றது. அவை அங்கிருந்து நகர்ந்து செல்லின் துருவப் பகுதிகளை சென்றடைகின்றன. ஒவ்வொரு சென்ட்ரியோலும் ஒளிவீசும் கதிர்களால் சூழப்பட்டுள்ளது. இவை ஆஸ்டர் கதிர்கள் என்று அழைக்கப்படுகின்றன. கதிர்கோல் (ஸ்பிண்டில்) இழைகள் இரு சென்ட்ரியோல்களுக்கு இடையில் அமைந்திருக்கும். உட்கரு சவ்வு மற்றும் உட்கருமணி (நியூக்ளியோலஸ்) மெல்ல மறைய ஆரம்பிக்கின்றது.
2.
இரத்தம் உடலில் உள்ள எல்லா பகுதிகளுக்கும் செல்லக் கூடியது. இது செல்களுக்கு ஆக்சிஜனையும் உணவுப் பொருள்களையும் கடத்துகிறது. செல்களில் உண்டாகும் கழிவுகளை கழிவு மண்டலத்திற்குக் கொண்டு செல்கிறது. இவ்வாறு இரத்தம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வதால் இது ஓர் இணைப்புத் திசுவாகக் கருதப்படுகிறது.
3.
நியூக்ளியார் பகுப்பிற்குப் பிறகு ஒவ்வொரு ஒருமய / ஹேப்லாய்டு செய் செல்லிலிருந்து இரண்டு செல்கள் தோன்றுகின்றன. இதனால் ஒற்றைமய குரோமோசோம்களைக் கொண்ட 4 செல்கள் தோன்றுகின்றன.
மியாசிஸ்ஸின் முக்கியத்துவம்:
மியாசிஸ் பகுப்பின் மூலம் நிலைத்த குரோமோசோம்கள் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. மைட்டாசிஸ் மூலம் கேமிட்டுகள் உருவானால் குரோமோசோம்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். இதனால் அந்த உயிரினத்தின் அமைப்பு மாறுபட்டு விடும்.
4.
நிணநீர் என்பது இரத்த தந்துகிகளிலிருந்து வடிகட்டப்பட்ட ஓர் நிறமற்ற திரவமாகும். இது பிளாஸ்மா மற்றும் இரத்த வெள்ளை அணுக்களைக் கொண்டிருக்கிறது. இது இரத்தத்திற்கும் திசுத் திரவங்களுக்கும் இடையே பொருட்களைப் பபரிமாற்றிக் கொள்ள உதவி புரிகிறது. எனவே நிணநீர் திசு செல்களுக்கும் மற்றும் இராத்தத்திற்கும் இடையேயுள்ள இடைத்தரவுகள் என அழைக்கப்படுகிறது.
5.
1) கொலாஜன் நார்கள்
2) மீள் நார்கள்
3) ஃபைப்ரோபிளாஸ்ட் செல்கள்
6.
(a) தட்டை
(b) சுரக்கும்
(c) தூண் எப்பிதீலியம்
(d) தட்டை எப்பிதீலியம்
(e) தூண் எப்பிதீலியம்
7.
சைலம் பல்வேறு வகையான உறுப்புகளால் ஆனது. அவை: 1) சைலம் டிராக்கீடுகள் 2) சைலம் நார்கள் 3) சைலக் குழாய்கள் 4) சைலம் பாரன்கைமா ஆகும்.
i) சைலம் டிரக்கீடுகள்: டிரக்கீடுகள் நீண்ட குழாய் போன்றவை. இவை தடித்த மற்றும் லிக்னின் சுவரைக் கொண்ட இறந்த செல்களாகும். செல்களின் முனைப்பகுதி மழுங்கிய, சிறுத்த, அல்லது உளி போன்ற அமைப்புடையது. செல்கள் புரோட்டபிளாசம் அற்றது. எந்தப் பொருளும் இல்லாத பெரிய உட்குழல் பகுதியை டிரக்கீடுகள் கொண்டுள்ளன. இவற்றின் பணி நீரைக் கடத்துதல் மற்றும் தாவரங்களுக்கு வலிமையை அளிப்பதாகும்.
ii) சைலம் நார்கள்: இந்த செல்கள் நீண்டவை; லிக்னின் பெற்றவை; மற்றும் செல்களின் இருமுனைகளும் கூரானவை. நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை வேரிலிருந்து இலைகளுக்கு கடத்துவது மற்றும் தாவரங்களுக்கு வலிமையை அளிப்பது இதன் பணியாகும்.
iii) சைலக்குழாய்கள்: சைலக்குழாய்கள் நீண்ட உருளை மற்றும் குழாய் வடிவமுடையவை. செல்சுவர் லிக்னின் பெற்ற அகன்ற மையக் குழிகளைக் கொண்டுள்ளது. புரோட்டாபிளாசம் இல்லாததால் இவைகள் இறந்த செல்கள் ஆகும். செல்கள் நீள் அச்சுக்கு இணையாக அமைந்துள்ளன. துளைகளுடைய குறுக்குச் சுவரினால் இவை பிரிக்கப்பட்டுள்ளன. இதன் முழு அமைப்பும் பார்ப்பதற்கு நீர்க் குழாய் போன்று தோன்றும். இவைகளின் முக்கியப் பணி நீர், கனிமங்களைக் கடத்துதல் மற்றும் தாவரங்களுக்கு வலிமையை அளித்தல் ஆகும்.
iv) சைலம் பாரன்கைமா: செல்கள் மெல்லிய சுவரை உடையவை; மற்றும் உயிருள்ளவை. இதன் முக்கிய பணி ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளைச் சேமித்தல் ஆகும்.
8.

தொடர்ந்து பகுப்படையும் தன்மை கொண்ட ஒத்த அளவுடைய முதிர்ச்சி அடையாத செல்களின் தொகுப்பு அக்குத்திசு ஆகும்.
I. தோன்றிய விதம் மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட வகைபாடு:
இந்த வகைபாட்டின் மூலம் ஆக்குத்திசுக்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை, i) புரோமெரிஸ்டம் ii) முதல் நிலை ஆகுத்திசு மற்றும் iii) இரண்டாம் நிலை ஆககுத்திசு.
i) புரோமெரிஸ்டம்: இது வளரும் உறுப்பிலுள்ள இளம் ஆக்குத்திசு செல்களின் தொகுப்பாகும். தாவரங்களின் தண்டு மற்றும் வேரின் நுனிப் பகுதியில் சிறிதளவு இடத்தை இவை கொண்டுள்ளன. இவை மேலும் பகுப்படைந்து முதல்நிலை ஆக்கத்திசுவை உருவாக்குகின்றன.
ii) முதல் நிலை ஆக்குத்திசு: இந்த ஆக்குத்திசு தண்டு மற்றும் வேர்களின் நுனியில் உள்ள புரோமெரிஸ்டேம்களுக்கு கீழே உள்ளது. இவை பகுப்படைந்து நிலைத்த திசுக்களை உருவாக்குகின்றன.
iii) இரண்டாம் நிலை ஆக்குத்திசு: இவை முதல் நிலை நிலைத்த திசுக்களில் இருந்து உருவாகின்றன. மேலும் இவை பகுப்படையும் திறனைப் பெற்றுள்ளன. உதாரணம்: கார்க் கேம்பியம், வேரில் உள்ள கேம்பியம் மற்றும் தண்டின் குறுக்கீடு (இடைபேஸிசூலார்) கேம்பியம்.
II. அமைவிடத்தை அடிப்படையாக கொண்ட வகைப்பாடு:
அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு ஆக்குத் திசுக்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை, i) நுனி ஆக்குத் திசு ii) இடையாக்குத் திசு iii) பக்க ஆக்குத் திசு
i) நுனி ஆக்குத் திசு: வளரும் வேர் மற்றும் தண்டின் நுனிகளில் நுனி ஆக்குத்திசுக்கள் காணப்படுகின்றன. இவை தாவரத்தில் நீள்போக்கு வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இவை புரோமெரிஸ்டம் மற்றும் முதல்நிலை ஆக்குத்திசுவை உள்ளடக்கியவை.
ii) இடையாக்குத் திசு: இடைப்பட்ட நிலையான திசுக்கள் முதல்நிலை ஆக்குத்திசுவிலிருந்து உருவாகுதல், முதல்நிலை ஆக்குத்திசுவின் ஒரு பகுதி பிரிந்து நிலையான திசுப்பகுதிகளுக்கு இடையே இவை காணப்படுகின்றன. இடை ஆக்குத்திசு இலையின் அடிப்படையிலோ (எ.கா: பைனஸ் தாவரம்), கணுவிடைப் பகுதியின் அடியிலோ, (எ.கா: புற்கள்) காணப்படுகின்றன.
iii) பக்க ஆக்குத் திசு: இவை தண்டு மற்றும் வேரின் பக்கவாட்டில் அதன் நீள அச்சுக்கு இணையாகக் காணப்படுகின்றன. இவை பொதுவாக ஆரப்போக்கில் பகுப்படைந்து இரண்டாம் நிலை நிலைத்த திசுக்களைக் கொடுக்கின்றன. இதன் மூலம் தாவரப் பகுதியின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன.
III. பணியை அடிப்படையாகக் கொண்டு ஆக்குத்திசுக்கள் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை, i) புரோட்டோடெர்ம் ஆக்குத்திசு ii) புரோகேம்பிய ஆக்குத்திசு iii) தள ஆக்குத்திசு
i) புரோட்டோடெர்ம் ஆக்குத்திசு: இவை புறத்தோல் திசுக்களாக மாற்றமடையக்கூடிய இளம் வளரும் பகுதியின் வெளிப்புற ஆடுக்காகும்.
ii) புரோகேம்பிய ஆக்குத்திசு: இவை வாஸ்குலார் திசுக்களாக மாற்றமடையக்கூடிய குறுகிய நீண்ட ஆக்கு செல்களால் ஆனவை.
iii) தள ஆக்குத் திசு: தாவர உடலத்தின் தளத்திசுவாகிய புறணி, பித் மற்றும் ஹைப்பாடெமிஸ் பகுதியை உருவாக்கக்கூடிய பெரிய தடித்த செல்களை கொண்டது.
IV. செல் பிரிதலின் முறையை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு:
ஆக்குத் திசுக்களின் வளர்ச்சி முறை மற்றும் செல்பிரிதல் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆக்குத் திசுக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை i) திரள் ஆக்குத் திசு ii) வரி ஆக்குத் திசு iii) தட்டு ஆக்குத் திசு.
i) திரள் ஆக்குத் திசு: இவ்வகை ஆக்குத்திசுவில் செல்பகுப்பு அனைத்துக் கோணங்களிலும் நடைபெற்று முடிவில் அளவை அதிகரிக்கிறது. இவற்றை தாவரத் தண்டின் புறணி மற்றும் பித் பகுதியில் காணலாம்.
ii) வரி ஆக்குத்தித்திசு: செல்பகுப்பு ஏதேனும் ஒரே ஒரு தளத்தில் மட்டுமே நடைபெறும். உதாரணம்: பாசிகளின் இழை அமைப்பு உருவாக்கம்.
iii) தட்டு ஆக்குத்திசு: இவ்வகை ஆக்குத்திசுவில் இரண்டு தளங்களில் செல் பகுப்படைந்து தாவர உறுப்பின் பரப்பளவை அதிகரிக்கிறது. உதாரணம்: இலை உருவாக்கம்.
9.
எரித்ரோசைட் எனப்படும் இரத்தச் சிவப்பணுக்கள் உண்மையான செல்கள் இல்லை. எரித்ரோசைட்டுகள் உருவாகும் ஆரம்ப நிலையில் மட்டும் அவற்றிற்கு உட்கரு உண்டு. இவை முதிர்ச்சி அடையும்போது உட்கரு மறைந்து விடுகிறது. எனவே எரித்ரோசைட்டுகள் இரத்தத்தில் உண்மையான செல்கள் இல்லை.
10.
இரத்தத் தட்டுகள் இரத்தம் உறைதலுக்கு அவசியமாகும். இவற்றை இரத்தத்திலிருந்து நீக்கி விட்டால் இரத்தம் உறைவதில்லை.எனவே காயங்களின் வழியே வெளியேறும் இரத்தம் உறையாமல் கசிந்து கொண்டேயிருக்கும். இதனால் மரணம் ஏற்படும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards