9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 13/09/2019
நுண்ணுயிரிகளின் உலகம்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
காலரா _____________ ஆல் ஏற்படுகிறது; மற்றும் மலேரியா _____________ ஆல் ஏற்படுகிறது.
2.
எச் 1 என் 1 (H1 N1 ) வைரஸ் ____________ ஐ உருவாக்குகிறது.
3.
பேக்கர்ஸ் ஈஸ்ட் என்பது __________ ஆகும்
4.
DPT
5.
WHO
6.
காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு
எலும்பு மஜ்ஜை
குடல்
மண்ணீரல்
நுரையீரல்
7.
சிபிலிஸ் நோயை ஏற்படுத்துவது
டிரெப்போனியா பல்லிடம்
லெப்டோஸ்மிரா
பாஸ்டியுரெல்லா
விப்ரியோ காலரே
8.
தயிர் உருவாதலில் ஈடுபட்டுள்ள பாக்டீரியா
லாக்டோ ஃபேசில்லஸ் அசிடோஃபிலஸ்
நைட்டோசோமோனாஸ்
ஃபேசில்லஸ் ராமொஸ்
மேற்கூறியவை எதுவுமில்லை
9.
மைக்காலஜி என்பது உயிரியலின் ஒரு பிரிவு. இது ________________ பற்றிய படிப்பாகும்.
பாசிகள்
வைரஸ்
பாக்டீரியா
பூஞ்சை
10.
ஹெப்பாடிடிஸ் பி, ஏவைக்காட்டிலும் அபாயகரமானது.
11.
தொற்றாத வகை நோய்கள் ஒரு மனிதனிடமிருந்து வளர்ந்து பிறருக்கு
பரவுவதாகும்.
12.
ரைசோபியமானது பருப்பு வகைத்தாரவங்களில் காணப்படும் வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துபவையோடு தொடர்புடையது.
13.
கிளைகோஜன் மற்றும் எண்ணெய் திவளை கள் ஆகியவை சேமிக்கப்பட்ட பூஞ்சையில் உள்ள உணவாகும்
14.
கீழ்காண்பவனவற்றை வரையறு
பிரியான்கள்
15.
கீழ்காண்பவனவற்றை வரையறு
பாக்டீரியோ ஃபேஜ்கள்
16.
மூவகை ஆண்டிஜென் என்றால் என்ன? இந்தவகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்களைக் குறிப்பிடுக.
17.
மனிதனுக்கு டைபாய்டு ஏற்படுத்தும் நோய்க்கிருமியின் பெயரென்ன ? இக்கிருமி எவ்வாறு உடலினுள் செல்லும் பண்பைப் பெற்றுள்ள து? இதனைக்கண்டறியும் அறிகுறிகளையும், கடுமையான நோய்த்தாக்கத்தால் பாதிக்கப்படும் உறுப்புகளையும் குறிப்பிடுக.
18.
விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகளின் பங்கினை விவரி.
1.
( )
விப்ரியே காலரே, பிளாஸ்மோடியம் என்ற புரோட்டோசோவா
2.
( )
பன்றிக்காய்ச்சல்
3.
( )
ரொட்டிக்கலாளன் (Saccharomyces cerevisiae)
4.
Diphtheria Pertussis Tetanus
டிப்தீரியா; பெர்டுசிஸ், டெட்டானஸ் (மூன்று நோய் தடுப்பு)
5.
World Health Organization
உலக சுகாதார நிறுவனம்
6.
(d)
நுரையீரல்
7.
(a)
டிரெப்போனியா பல்லிடம்
8.
(a)
லாக்டோ ஃபேசில்லஸ் அசிடோஃபிலஸ்
9.
(d)
பூஞ்சை
10.
(a)
11.
(b)
12.
(a)
13.
(a)
14.
பிரியான்கள் என்பவை நோயை உண்டாக்கவல்ல தீமையாக மாறிப்போன புரதத்துகள்கள் ஆகும். மேலும் இவை புரதங்களை மட்டுமே கொண்டுள்ள வைரஸ் துகள்களாகும், நியூக்ளிக் அமிலங்கள் காணப்படவில்லை.
15.
பாக்டீயாவினைத் தாக்கி பாதிப்பை உண்டாகும் வைரஸ்கள் பாக்டீரியாஃபேஜ்கள் எனப்படும். எ.கா: பாக்டீரியா அழிப்பு வைரஸ் (T4)
16.
மூவகை ஆண்டிஜென் என்பது மூன்று விதமான நோய்களை தடுக்க பயன்படும் தடுப்பு மருந்து ஆகும். இது ஒரு கூட்டுத் தடுப்பு மருந்தாகும். டிப்தீரியா (தொண்டையடைப்பான்) பெர்டூதிஸ் (கக்குவான் இருமல்) மற்றும் டெட்டனஸ் போன்ற மூன்று நோய்களை தடுக்க மூவகை ஆண்டிஜென் பயன்படுகிறது.
17.
i . மனிதனுக்கு டைபாய்டு நோயினை உண்டாக்கும் நோய்க்கிருமியின் பெயர் சால்மோனெல்லா டைப்ஃபி என்ற பாக்டீரியா ஆகும்.
ii. இந்நோயினால் பாதிக்கப்பட்டவரின் கழிவுகள் கலக்கப்பட்ட நீர் மற்றும் உணவினால் நோயானது பரப்பப்படுகிறது.
நோய் அறிகுறிகள்: அதிக காய்ச்சல், பலவீனம், அடிவயிற்றில் வலி, தலைவலி, பசியின்மை, நெஞ்சுப்பகுதி மற்றும் மேல்வயிற்றுப் பகுதியில் அரிப்பு போன்றவை.
பாதிக்கப்படும் உறுப்புகள் : பாதிக்கப்படும் உறுப்பு சிறுகுடல் ஆகும்.
18.
நுண்ணுயிரிகள் உயிரியக் கட்டுப்பாட்டுக் காரணிகளாகவும், உயிரின உரங்களாகவும் விவசாயத்துறையில் முக்கிய பங்களிக்கின்றன. இவை கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் கந்தகம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தனிமங்களின் சுழற்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை உயிரியல் துப்புரவாளர்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
(i) உயரியக் கட்டுப்பாட்டுக் காரணிகளாக நுண்ணுயிர்கள்:
தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது நோயினை உருவாக்கம் உயிரிகள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் நுண்ணுயிர்கள் பயனுள்ளதாக இருக்கின்றன. எனவே, இவைகள் உயரியக்கட்டுப்பாட்டுக் காரணிகள் உயிரி பூச்சிக்கொல்லி) என அழைக்கப்படுகின்றன. பேசிலஸ் துரின்சியென்சிஸ் (Bt) என்ற பாக்டீரியத்தின் சிற்றினத்திலிருந்து 'படிம' புரதம் என்ற அழைக்கப்படும் புரதமானது உற்பத்தியாகிறது. இந்தப் புரதமானது பூச்சிகள் இளம் உயிரிகளுக்கு நச்சுத்தன்மையுடையதாக இருந்து அவற்றைக் கொல்கிறது.
பேசில்லஸ் துரின்சியென்சிஸ் கருவணுக்கள் (ஸ்போர்கள்) பைகளில் அடைக்கப்பட்டு விற்பனையாகின்றன. அவற்றை நீரோடு சேர்த்து கரைத்து பாதிக்கப்பட்ட தாவரங்களின் மீது தெளிக்கப்படுகிறது. இதன்மூலம் பூச்சிகளின் இளம் உயிரியானது கொல்லப்படுகின்றது.
(ii) உயிரி உரங்களாக நுண்ணுயிரிகள்:
நிலத்திலுள்ள மண்ணினை சத்துமிக்கதாய் வளப்படுத்தும் நுண்ணுயிரிகள் உயிரி உரங்கள் என அழைக்கப்படுகின்றது. பாக்டீரியா, சயனோபாக்டீரியா மற்றும் பூஞ்சை ஆகியவைகள் உயிரி உரங்களின் முக்கிய ஆதாரங்கள் ஆகும். தாவர ஊட்டச்சத்துக்களில் நைட்ரஜனும் மிக முக்கியமான ஒரு ஆதாரம் ஆகும். வளிமண்டலத்தில் வாயுவாகக் காணப்படும் நைட்ரஜனானது பயன்படுத்தப்படக்கூடிய விதத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இந்த மாற்றத்தினை நிகழ்த்துவதில் தனித்த நிலையில் வாழும் நுண்ணுயிரிகளோ அல்லது தாவரத்தோடு கூட்டுயிர் தொடர்பினைக் கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளோ பெரும் பங்காற்றுகின்றன. எ.கா. நைட்ரோசோமோனாஸ் மற்றும் நாஸ்டாக் என்ற தனித்து வாழ்பவைகள், கூட்டுயிர் வாழ்க்கைமுறையுடைய ரைசோபியம், ஃப்ரோன்கியா, மைகோரைசா போன்றவைகள்.
தொழிற்சாலைகளில் நுண்ணுயிரிகள்
மனிதனின் நலத்திளற்காக பல்வேறு மதிப்புமிக்க பொருள்களை அதிகமாக உற்பத்தி செய்வதில் நுண்ணுயிரிகள் முக்கிய பங்காற்றுகின்றன.
அ. நொதிக்கவைக்கப்பட்ட பானங்கள் தயாரித்தல்
நொதிக்க வைக்கப்பட்ட திராட்சை ரசங்கள் (வைன்) சாக்கரோமைசிஸ் செரிவியே (ஈஸ்ட்) என்ற உயிரியில் நொதியால் தானியங்கள் மற்றும் பழங்களிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
ஆ. காஃபி விதைகள், தேயிலை மற்றும் புகையிலையை பதப்படுத்துதல்
காஃபி மற்றும் கோக்கோ தாவரத்தின் விதைகள், தேயிலைச்செடி மற்றும் புகையிலைச் செடியின் இலைகளை நொதிக்க வைத்து குடிநீர் சாறு தயாரிப்பதற்கு ஃபேசில்லஸ் மெகாடெரியம் என்ற பாக்டீரியா பயன்படுத்தப்படுகிறது. இது சிறப்பான நறுமணத்தைத் தருகிறது.
இ. தயிர் தயாரித்தல்
லாக்டோபேசில்லஸ் சிற்றினங்கள் பாலினை தயிராக மாற்றுகின்றன.
ஈ. கரிக அமிலங்கள், நொதிகள் மற்றும் வைட்டமின்கள் தயாரித்தல்
ஆக்ஸாலிக் அமிலம், அசிடிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் போன்றவைகள் ஆஸ்பர்ஜிலஸ் நைகர் என்ற பூஞ்சை மூலம் தயாரிக்கப்படுகின்றன. லிப்பேஸ், இன வெர்டேஸ், புரோட்டியேஸ் மற்றும் குளுக்கோஸ் ஆக்ஸிடேஸ் போன்ற நொதிகள் நுண்ணுயிரிகளிலிருந்து பெறப்படுகின்றன. ஈஸ்ட்கள் வைட்டமின் B கூட்டுப்பொருள்களை (காம்ப்ளக்ஸ்) அதிகம் உற்பத்தி செய்யும் ஆதாரங்களாக உள்ளன.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards