9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
உயிர்க்கோளம்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளைக் குறிப்பிடுக.
2.
"உயிரினப் பன்மை இழப்பு" என்பதன் பொருள் கூறுக.
3.
உயிரினப் பன்மை என்றால் என்ன?
4.
சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகளை எழுதுக.
5.
சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி.
6.
மழைக்காடுகள் பல்லுயிர்க் தொகுதி அதிகளவு விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்குக் காரணம்
மிக அதிகப்படியான ஈரப்பதம்
மிக அதிகமான வெப்பநிலை
மிக மெல்லிய மண்ணடுக்கு
வளமற்ற மண்
7.
பாலைவனத்தாவரங்கள் வளரும் சூழல்
உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
குறைந்த அளவு ஈரப்பசை
குளிர் வெப்பநிலை
ஈரப்பதம்
8.
வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்
உற்பத்தியாளர்கள்
சிதைப்போர்கள்
நுகர்வோர்கள்
இவர்கள் யாரும் இல்லை
9.
புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி
தூந்திரா
டைகா
பாலைவனம்
பெருங்கடல்கள்
1.
(i) வெப்ப மண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி.
(ii)வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி.
(iii)பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி.
(iv)மிதவெப்பமண்டல புல்வெளி பல்லுயிர்த் தொகுதி.
(v) தூந்திரப் பல்லுயிர்த்தொகுதி.
2.
மனித மற்றும் இயற்கைக் காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்பு உயிரினப்பன்மையின் இழப்பு என்கிறோம்.
3.
உயிரினப்பன்மை என்பது ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பதாகும். இது காலநிலை. நிலத்தோற்றம் மற்றும் மனிதச் செயல்பாடுகளின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன.
4.
1. அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு ஆற்றல் மட்டம். உணவுச் சங்கிலி மற்றும் உணவு வலையினை உருவாக்குகின்றன.
2. சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகள் ஆற்றல் ஓட்டத்தின் அமைப்பைச் சார்ந்துள்ளன.
3. இந்த ஆற்றல் ஓட்டம் சூழ்நிலை மண்டலத்திலுள்ள கரிமமற்ற மற்றும் கரிமப் பொருட்களின் பரவலுக்கும். சுழற்சிக்கும் உதவி செய்கிறது.
4. ஆற்றல் ஓட்டம் பெரும்பாலும் சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு நிலைகளில் படிநிலை ஒழுங்குமுறையில் நடைபெறுகிறது. இந்நிலைகள் ஆற்றல் மட்டம் எனப்படுகிறது.
5. உயிரினங்களில் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு ஆற்றல் மாற்றம் பல்வேறு ஆற்றல் மட்டத்தின் வழியாகத் தொடர்ச்சியாக நடைபெறுவதை உணவுச் சங்கிலி என்று அழைக்கிறோம்..
6. உணவுச் சங்கிலிகள் ஒன்றினையொன்று சார்ந்து பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை எனப்படுகிறது.
5.
சூழ்நிலை மண்டலத்தின் மூன்று கூறுகள்:
1. உயிரற்ற கூறுகள்
2. உயிருள்ள கூறுகள்
3. ஆற்றல் கூறுகள்
உயிரற்ற கூறுகள்:
1. உயிரற்ற கூறுகள் சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற கரிம, இயற்பியல், இரசாயனக் காரணிகளை உள்ளடக்கியதாகும்.
2. உதாரணமாக நிலம், காற்று. நீர். சுண்ணாம்பு. இரும்பு போன்றவை.
உயிருள்ள கூறுகள்:
1. உயிருள்ள கூறுகள் என்பது தாவரங்கள், விலங்கினாங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியதாகும்.
2. இவை உற்பத்தியாளர். நுகர்வோர் மற்றும் சிதைப்போர் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
3. மேலும் நுகர்வோர். தாவர உண்ணிகள், ஊன் உண்ணிகள் மற்றும் தாவர உண்ணியையும். ஊன் உண்ணியையும் உணவாகக் கொள்ளக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆற்றல் கூறுகள்:
1. உயிர்க்கோளத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும், ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.
2. உயிர்க்கோளம் முழுமைக்கும் சூரியனே ஆற்றலை வழங்கக் கூடியதாக உள்ளது.
3. சூழ்நிலை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூறுகளின் வழியாக, சூரிய ஆற்றல் பிற ஆற்றல் வடிவங்களாக மாற்றப்படுகிறது.
6.
(d)
வளமற்ற மண்
7.
(a)
உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
8.
(b)
சிதைப்போர்கள்
9.
(a)
தூந்திரா
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards