9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
CIV - மனித உரிமைகள்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
வேறுபடுத்துக- மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள்.
2.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தொழிலாளர் நலனுக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி ஏதேனும் இரண்டு கூறு.
3.
குழந்தைகளுக்குச் சிறப்பு கவனம் தேவைப்படுவது ஏன்?
4.
போக்சோ (POCSO) -வரையறு.
5.
குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா.சபை அறிவித்துள்ளவை யாவை?
6.
அடிப்படை உரிமைகள் யாவை?
7.
மனித உரிமை என்றால் என்ன?
8.
தொழிலாளர் சட்டத்தின் மூலம் தொழிலாளர் பெறும் நன்மைகள் யாவை?
9.
அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு உன் பள்ளி வளாகத்தில் செயல்படுத்துவாய்?
10.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் குடியுரிமை இயக்கத்தினைத் தொடங்கியவர் ______ ஆவார்.
11.
பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989 இல் நடைமுறைபடுத்திய இந்திய மாநிலம் ________
12.
தேசிய மனித உரிமை ஆணையம் ______ ஆண்டு அமைக்கப்பட்டது.
13.
அடிப்படைக் கடமைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ________ சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது
14.
உலகளாவிய மனித உரிமை பேரறிக்கைப் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு ________
15.
ஐ.நா. சபையின்படி _________ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.
12
14
16
18
16.
அரசமைப்புச் சட்ட திருத்தம் 44ன் படி நீக்கப்பட்ட அடிப்படை உரிமை _________
சொத்துரிமை
மதச் சுதந்திரத்துக்கான உரிமை
சுரண்டலுக்கெதிரான உரிமை
மேற்கண்ட எதுவுமில்லை
17.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு _________
20 நாட்கள்
25 நாட்கள்
30 நாட்கள்
35 நாட்கள்
18.
கீழ்க்கண்டவற்றுள் எந்த உரிமை அதிகாரத்துவத்தின் மீது மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்கிறது?
சமத்துவ உரிமை
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
கல்வியின் மீதான உரிமை
சுதந்திர உரிமை
19.
ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்குபெறுவது _________
சமூக
பொருளாதார
அரசியல்
பண்பாடு
20.
இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின் பற்றிய நாடு _________
தென் சூடான்
தென் ஆப்பிரிக்கா
நைஜீரியா
எகிப்த்
21.
குழந்தை தொழிலாளர்
22.
இந்து வாரிசுரிமை சட்டம்
23.
பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமை
24.
சங்கம் அமைக்கும் உரிமை
25.
வாக்களிக்கும் உரிமை
1.
| மனித உரிமைகள் | அடிப்படை உரிமைகள் |
| 1. மனிதன் தன் மனதோடும், சுதந்திரத்தோடும் வாழுகின்ற உரிமைகள் இவை. | அரசமைப்பில் காணப்படும் குடிமக்களின் ஆதார உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படும். இவை சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படலாம். |
| 2. மனிதனின் வாழ்வில் அடிப்படைத் தேவைகளுக்கான உரிமைகள் இதில் அடங்கி உள்ளன. இவற்றைப் பறிக்க இயலாது. | மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள உரிமைகளும் அடிப்படை உரிமைகளில் அடங்கும். |
| 3. மனித உரிமைகள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்டவை. | அடிப்படை உரிமைகள் நமது நாட்டில் அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன. |
2.
1. தொழிற்சாலையில் வேலைநேரம் குறைப்பு.
2. இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்.
3.
1. குழந்தைகள் அனைவரும் அடிப்படை மனித உரிமைகள் கொண்ட தனிநபர்கள் என்று கருதுதல் வேண்டும். ஏனெனில் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்கள்.
2. குழந்தைகள் கடத்தப்படுதல், விற்பனை செய்தல் நடைபெற ஏழ்மை, பாலினப்பாகுபாடு மற்றும் சிதறிய குடும்பங்கள் ஆகியன முக்கியக் காரணங்களாகும்.
3. மேலும் குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல். பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக கடத்தல் அல்லது விற்பனை செய்யப்படுகின்றனர்.
4. எனவே இதுபோன்ற தொல்லைகளிலிருந்து பாதுகாக்க குழந்தைகள் மீது சிறப்புக் கவனம் தேவைப்படுகிறது.
4.
1. போக்சோ சட்டம் என்பது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமாகும்.
2. இது ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படுகின்றது
3. இது குழந்தைகளின் உடல், மன, அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது.
4. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வழிவகை செய்கிறது.
5. மேலும் பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் செலவினை ஈடுகட்டும் வகையில் அபராதமும் இச்சட்டத்தின்படி விதிக்கப்படுகிறது.
5.
ஐ.நா. சபை 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது
1. வாழ்வதற்கான உரிமை
2. குடும்பச் சூழலுக்கான உரிமை
3. கல்விக்கான உரிமை
4. சமூகப் பாதுகாப்பு உரிமை
5. பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
6. விற்பது அல்லது கடத்தலுக்கெதிரான உரிமை
7. குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டலுக்கெதிரான உரிமை
6.
1. சமத்துவ உரிமை
2. சுதந்திர உரிமை
3. சுரண்டலுக்கு எதிரான உரிமை
4. சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
5. சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்
6. அரசமைப்புச் சட்ட வழித் தீர்வுகளுக்கான உரிமை
7.
1. ஐ.நா.சபை மனித உரிமைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது.
2. இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும்.
3. எவர் ஒருவருக்கும் இந்த உரிமையை வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.
8.
1. சமத்துவத்திற்கான உரிமை
2. பொது வேலைவாய்ப்பில் சமத்துவம்
3. அமைப்புகள் மற்றும் சங்கம் தொடங்குவதற்கான உரிமை
4. வாழ்வாதார உரிமை
5. கடத்தலைத் தடுத்தல் மற்றும் கட்டாயத் தொழிலாளர் மற்றும் குழந்தைகள் உரிமைகளை இந்திய அரசியலமைப்பு உறுதி செய்கிறது.
6. பிரிவு 39(ஆ) இருபாலாருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்கிறது.
7. தொழிற்சாலையில் வேலைநேரம் குறைப்பு
8. தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்
9. இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்
10. தொழிலாளர் காப்பீட்டுக் கழகம்.
11. நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி.
9.
அடிப்படைக் கடமைகள்:
1. அடிப்படைக் கடமைகள் என்பவை குடிமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ற விகிதத்தில் அமைந்துள்ளன.
2. 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பகுதி இடம் பெற்றிருக்கவில்லை.
3. 1976 ஆம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின் மூலம் அவை இணைக்கப்பட்டன. அவை 11 அடிப்படைக் கடமைகளைக் குறிக்கின்றன.
பள்ளி வளாகத்தில் அடிப்படைக் கடமைகள்:
1. பள்ளியின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பேன்.
2. தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றிற்கு உரிய மதிப்பளிப்பேன்.
3. சமய, மொழி, மண்டல அல்லது மாணவர்களிடமும் சகோதர மனப்பான்மையுடன் பழகுவேன்.
4. பிரிவு-வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மாணவ மாணவிகளை இழிவு செய்யும் செயல்களில் ஈடுபட மாட்டேன்.
5. அறிவியல் உணர்வு, மனிதநேயம் பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்க்க பிற மாணவர்களுடன் இணைந்து செயல்படுவேன்.
6. பொதுச் சொத்தான பள்ளியின் சொத்துகளைப் பாதுகாக்கும் பொருட்டு வன்முறையில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன்.
7. நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட -தேசிய மாணவர் படையில் சேர்ந்து பயிற்சி பெறுவேன்.
8. பள்ளியின் புறச்சூழலைப் பாதுகாக்க "நாட்டுநலப் பணித்திட்டத்தில்' சேர்ந்து பணியாற்றுவேன்.
9. அனைத்து மாணவர்களின் ஒற்றுமைக்காகப் பாடுபடுவேன்.
10.
( )
ரோசா பார்க்
11.
( )
தமிழ்நாடு
12.
( )
1993 ஆம்
13.
( )
42 - வது
14.
( )
1948 டிசம்பர் - 10
15.
(d)
18
16.
(a)
சொத்துரிமை
17.
(c)
30 நாட்கள்
18.
(b)
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
19.
(c)
அரசியல்
20.
(b)
தென் ஆப்பிரிக்கா
21.
சுரண்டலுக்கெதிரான உரிமை
22.
2005
23.
பண்பாட்டு உரிமை
24.
சுதந்திர உரிமை
25.
அரசியல் உரிமை
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards