9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 13/09/2019
பேரிடர் மேலாண்மை - பேரிடரை எதிர்கொள்ளுதல்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது நிலநடுக்கத்தை எதிர்கொள்வதோடு தொடர்புடையது?
காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்.
கடல் மட்டத்திலிருந்து உங்கள் தெரு எவ்வளவு உயரத்தில் உள்ளது மற்றும் கடலோரத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது எனத் தெரிந்துகொள்ளவும்.
கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமன்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
கதவைத் திறப்பதற்கு முன்பு புறங்கையால் கதவைத் தொட்டு வெப்பமாக உணர்ந்தால் கதவைத் திறக்கவேணாடம்.
2.
கீழ்க்காணும் சொற்றொடர்களில் எது தவறு?
தீ விபத்திலிருந்து தப்பிக்க "நில்! விழு! உருள்!
"விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்" என்பதுநிலநடுக்க தயார் நிலை.
"கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்" என்பது வெள்ளப்பெருக்குக்கான தயார்நிலை.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டால் தரையில் கிடைமட்டமாகப் படுத்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் மூடிக்கொள்ளவும்.
3.
தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண்.
114
112
115
118
4.
'விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்!' என்பது எதற்கான ஒத்திகை?
தீ
நிலநடுக்கம்
சுனாமி
கலவரம்
5.
கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு இல்லை.
காவலர்கள்
தீயணைப்புப் படையினர்
காப்பீட்டு முகவர்கள்
அவசர மருத்துவக் குழு
6.
நிலநடுக்கத்தின்போது வாகனத்தில் சிக்கிக் கொண்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?
7.
சுனாமிக்குப் பிறகு என்ன செய்யவேண்டும்?
8.
தீவிபத்தின்போது என்ன செய்யவேண்டும் என மூன்று வாக்கியங்களில் எழுது .
9.
ஆழிப் பேரலையை எவ்வாறு எதிர்கொள்வாய்?
10.
ஆழிப் பேரலையைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
11.
நிலநடுக்கம் ஏற்படும் போது நீங்கள் ஒருவேளை எந்த மரசாமான்களும் இல்லாத அறையில் இருந்தால் எவ்வாறு உங்களைத் தற்காத்துக் கொள்வீர்கள்?
12.
நிலநடுக்கத்தின்போது படிக்கட்டைப் பயன்படுத்தி வெளியேறவேண்டும் மின்தூகிக்களைப் பயன்படுத்தக் கூடாது. ஏன்?
13.
நிலநடுக்கத்தின்போது மேசைக்கு அடியில் அமர்ந்து ஒரு கையால் தலையை மூடிக்கொண்டு மற்றோரு கையால் மேசையின் காலைப்பிடித்துக்கொள்ள வேண்டும் என்பது என்ன?
1.
(c)
கண்ணாடிச் சன்னல், வெளிக்கதவுகள், சுவர் மற்றும் எளிதில் விழக்கூடிய தொங்கும் மின்விளக்குகள் மற்றும் மரச்சாமன்கள் போன்றவற்றிலிருந்து விலகியிருக்கவும்.
2.
(c)
"கடல் நீர் பின்வாங்கிச் சென்றால் நீங்கள் உயரமான பகுதிகளை நோக்கி ஓடுங்கள்" என்பது வெள்ளப்பெருக்குக்கான தயார்நிலை.
3.
(b)
112
4.
(b)
நிலநடுக்கம்
5.
(c)
காப்பீட்டு முகவர்கள்
6.
1. உடனடியாக வாகனத்தை நிறுத்த வேண்டும். வாகனத்தை கட்டிடத்திற்கு அருகிலோ, மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் மேம்பாலங்களுக்கு அடியிலோ நிறுத்தக் கூடாது.
2. நிலநடுக்கம் நின்றவுடன் கவனமாகப் பாதைகளைக் கடந்து செல்ல வேண்டும். நிலநடுக்கத்தால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள், சரிவுப் பாதைகள் போன்றவற்றைத் தவரிக்க வேண்டும்.
7.
1. ஆழிப் பேரலை தொடர்பான அண்மைச் செய்திகளை வானொலி அல்லது தொலைக்காட்சியின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.
2. நமக்கு காயம் ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து முதலுதவி பெறவேண்டும்.
3. காயமடைந்த அல்லது சிக்கிக்கொண்ட பிற நபர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
4. ஆழிப்பேரலையிலிருந்து யாரையாவது மீட்கவேண்டுமென்றால் சரியான உபகரணங்களுடன் கூடிய வல்லுநர்களை உதவிக்கு அழைக்க வேண்டும்
5. சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகள், முதியோர். ஊனமுற்றோர். போக்குவரத்து வசதியில்லாதவர்களுக்கு உதவி செய்திட வேண்டும்.
6. எரிவாயு கசிவை உணர்ந்தால் உடனடியாக சன்னல்களைத் திறந்துவிட்டு விட்டு அனைவரையும் வெளியேறச் செய்ய வேண்டும்.
8.
1. கட்டடத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.
2. மற்றவர்களையும் உடனடியாக வெளியேறச் செய்யவேண்டும்.
3. தீ விபத்தின்போது ஓடாமல் நடந்து வெளியேறும் பகுதிக்குச் செல்ல வேண்டும்.
4. மின்தூக்கிகள் பழுதடைந்திருக்கலாம். எனவே அதைப் பயன்படுத்தக் கூடாது.
5. வீடு, பள்ளி, அடிக்கடி சென்று வருமிடம் போன்றவற்றிலிருந்து வெளியேறும் வழியைத் திட்டமிடுவேன்.
6. ஆழிப்பேரலை தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களை அறிந்துகொள்ள வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காண்பேன்.
7. ஆழிப்பேரலையைப் பற்றி குடும்பத்துடன் கலந்துரையாடுவேன்.
8. கலந்துரையாடலின் மூலம் ஆழிப்பேரலையின் போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வேன்.
9.
1. முதலில் நீங்கள் இருக்கும் வீடு, பள்ளி,பணிபுரியுமிடம் அடிக்கடி சென்று வருமிடம் போன்றவை கடலோர ஆழிப் பேரலை பாதிப்பிற்குட்பட்ட இடங்களா எனக் கண்டறியவும்.
2. ஆழிப் பேரலை பாதிப்புள்ளாகும் உங்கள் வீடு, பள்ளி. பணிபுரியுமிடம், அடிக்கடி சென்று வருமிடம் போன்றவற்றிலிருந்து வெளியேறும் வழியைத் திட்டமிடவும்.
3. ஆழிப் பேரலை தொடர்பான எச்சரிக்கைத் தகவல்களை அறிந்து கொள்ள உள்ளூர் வானொலி அல்லது தொலைக்காட்சியைக் காணவும்.
4. ஆழிப் பேரலையைப் பற்றி குடும்பத்துடன் கலந்துரையாடவும். ஆழிப் பேரலையின் போது என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
5. ஆழிப் பேரலையைப் பற்றி முன்கூட்டியே கலந்துரையாடுவது அவசர நிலையில் ஆழிப் பேரலைப் பற்றிய பயத்தைக் குறைக்கவும் மதிப்புமிக்க நேரத்தைச் சேமிக்கவும் உதவும்.
10.
1. நில நடுக்கம், கடலுக்கடியில் ஏற்படும் நிலச்சரிவு. எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளே ஆழிப்பேரலையாகும்.
2. ஆழிப்பேரலையானது 10 - 30 மீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் 700 800 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடியது.
3. இது வெள்ளப் பெருக்கை உண்டாக்கி உயிர்ச்சேதத்தையம் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது.
11.
அறையில் மூலையில் குத்துகாலிட்டு அமர்ந்து இரு கைகளாலும் தலையை மூடிக் கொள்ள வேண்டும்.
12.
நிலநடுக்கத்கதால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். அதனால் மின்தூக்கி செயல் இழந்துவிடும். மின்தூக்கி நகரும் பாதை அடைக்கப்பட்டு கதவுகள் இறுக்கமாக மூடிக்கொள்வதால் நம்மால் அங்கிருந்து வெளியேற முடியாது. அதனால் நாம் படிக்கட்டை உபயோகப்படுத்த வேண்டும்.
13.
1. நிலநடுக்கத்தின்போது பொருள்கள் கீழே விழும் வாய்ப்பு உள்ளது. கண்ணடி ஜன்னல், கதவுகள், மதில், மின்விளக்குகள் நம் மேலே விழ வாய்ப்புள்ளது. அதற்காகத்தான் நாம் மேஜைக்கு அடியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
2. நிலநடுக்கத்தின் போது ஏற்படும் அதிர்ச்சியால் நாம் உருண்டோடிய இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக மேஜையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
3. பொருட்கள் தலையில் விழுந்து தலைக்காயம் ஏற்படாமல் இருக்க தலையைக் கையால் பிடித்துக் கொள்ள வேண்டும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards