9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
ECO - இடப்பெயர்தல்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ஏழைமக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது
வாழ்வாதாரத்திற்காக
வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள
சேவைக்காக
அனுபவத்தைப் பெறுவதற்காக
2.
2015 ஆம் ஆண்டுல் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்
7%
75%
23%
9%
3.
வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்
இராமநாதபுரம்
கோயம்புத்தூர்
சென்னை
வேலூர்
4.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை
121 கோடி
221 கோடி
102 கோடி
100 கோடி
5.
இடம்பெயர்வு நகர்வு என்பது ________________ உள்நகர்வுகளைக் கொண்டதாகும்.
6.
பெண்கள் அதிக அளவில் இடம் பெயர்வதற்கான காரணம் ______________
7.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமப்புற இந்தியாவில் ___________ சதவீத மக்கள் இடம் பெயர்ந்தவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
8.
மக்களின் நகர்வு, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் ____________ காணப்படுகின்றன.
9.
____________ மற்றும் _____________ அடிப்படையில் இடப்பெயர்வு கணக்கிடப்படுகிறது.
10.
ஆண் இடம்பெயர்வாளர்
11.
சேலம்
12.
வசதி, வாய்ப்புடைய இடம்பெயர்வாளர்
13.
சென்னை
14.
பெண் இடம்பெயர்வாளர்
15.
இடம்பெயர்வு கொள்கை
16.
இடப்பெயர்ந்தோர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழில்களைப் பற்றி ஆய்வுகள் வெளிப்படுத்துவது யாது?
17.
தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் செல்லும் நான்கு நாடுகள் மற்றும் சதவீதத்தினைப் பட்டியலிடுக.
18.
ஏழை மக்கள் மற்றும் வசதி வாய்ப்புடைய மக்கள் இடப்பெயர்வதற்கான காரணங்கள் யாவை?
19.
மிகச் குறைவான எண்ணிக்கையில் வெளி இடப்பெயர்வைக் கொண்ட தமிழ்நாட்டிலிலுள்ள நான்கு மாவட்டங்களின் பெயர்களைக் கூறுக.
20.
இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கியக் காரணங்கள் யாவை?
21.
இடப்பெயர்தலுக்கான காரணங்களைப் பட்டியலிடுக
22.
தமிழ்நாட்டின் இடப்பெயர்வில் காணப்படும் ஆர்வமுள்ள தகவல்கள் சிலவற்றைத் தெளிவுபடுத்துக்க.
23.
இடப்பெயர்வு கொள்கையின் நோக்கங்கள் யாவை?
1.
(a)
வாழ்வாதாரத்திற்காக
2.
(a)
7%
3.
(c)
சென்னை
4.
(a)
121 கோடி
5.
( )
பல்வேறு வகைப்பட்ட
6.
( )
திருமணம்
7.
( )
37%
8.
( )
அதிகம்
9.
( )
பிறப்பிடம், வாழிடம்
10.
வேலை
11.
வெளி குடியேற்றம் குறைவு
12.
வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள
13.
வெளி குடியேற்றம் அதிகம்
14.
திருமணம்
15.
இடம் பெயர்தலின் அளவைக் குறைப்பது
16.
1. 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் இடம் பெயர்தலின் அளவு. தன்மை மற்றும் தொழில்முறைகள் பற்றி தன்னார்வலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
2. இவ்வாய்வு இடம் பெயர்ந்தவர்கள் மேற்கொள்ளும் வேலையின் தன்மை குறித்து வெளிப்படுத்துகிறது.
3. இடம் பெயர்ந்தவர்கள் மிகவும் திறமை வாய்ந்த வேலைகளிலும், சாதாரணமாகச் செய்யக்கூடிய வேலைகளிலும் நடுத்தரமான வேலைகளிலும் ஈடுபடுகின்றனர் என்று வெளிப்படுத்துகிறது.
17.
1. சிங்கப்பூர் - 20%
2. சவுதி அரேபியா - 16%
3. ஐக்கிய அரபு எமிரேட் - 18%
4. ஐக்கிய அமெரிக்க நாடுகள் - 13%
18.
1. ஏழை மக்கள் கிராமப்புறங்களில் நிலவி வரும் தங்களது துயர நிலையிலிருந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொள்ளும் உத்தியாக இடப் பெயர்வை மேற்கொள்கின்றனர்.
2. சற்று வசதி வாயப்பு உடைய மக்கள் தங்களது வாழ்நிலையை மேம்படுத்துவதற்காக இடம் பெயர்தலை மேற்கொள்கின்றனர்.
19.
1. கடலூர்
2. வேலூர்
3. திண்டுக்கல்
4. திருவண்ணாமலை
5. கரூர்
6. நீலகிரி
7. தருமபுரி
8. சேலம்
9. நாமக்கல்
10. கிருஷ்ணகிரி
20.
1. இந்தியாவிலும் தமிழகத்திலும் திருமணமும் திருமணம் சார்ந்த இடப்பெயர்வும் பெண்களின் அதிக அளவிலான இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
2. இந்தியாவில் 70% பெண்கள். தமிழ்நாட்டில் 51% பெண்கள் திருமணத்திற்காகவே இடம் பெயர்ந்துள்ளனர்.
21.
1. வேலை
2. கல்வி
3. தொழில்
4. திருமணம்
5. வணிகம்
22.
1. பிறப்பு இறப்பு மற்றும் இடம் பெயர்தலின் காரணமாக மக்கள் தொகையில் மாற்றம் ஏற்படுகிறது.
2. பெரும்பாலும் அனைவரும் அதிகமான நேரங்களில் ஓர் இடம் விட்டு இன்னொரு இடம் நகர்ந்து கொண்டே இருப்பதால் இடம் பெயர்தலைக் கணக்கிடுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
3. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 7.2 கோடியாகும்.
4. அவர்களில் 3.13 கோடி மக்கள் இடம் பெயர்ந்தவர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
5. பொதுவாக இடப்பெயர்வு நகரப் பகுதிகளோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது.
6. ஆனால் தமிழ்நாட்டில் மக்களின் நகர்வு நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
7. மேலும் தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண்களில் மட்டுமே இடப்பெயர்வு மிக அதிக அளவு காணப்படுகிறது.
8. திருமணமும் திருமணம் சார்ந்த இடப்பெயர்வுகளுமே பெண்களின் அதிக அளவிலான இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
9. வியாபாரம், வணிகம், வேலை. கல்வி போன்ற காரணங்களுக்காகத் தமிழர்கள் பல நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
10. ஏழைகள் வாழ்வாதாரத்திற்காகவும். வசதி வாய்ப்பு உடைய மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் இடம் பெயர்கின்றனர்.
11. அண்மைக் காலங்களில் தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மிக அதிக அளவில் இடம் பெயர்ந்துள்ளனர்.
12. தமிழ்நாட்டின் மொத்த இடப் பெயர்வாளர்களில் 65% பேர் வெளிநாடுகளுக்கும் 35% பேர் நம் நாட்டிற்குள்ளும் இடம் பெயர்ந்துள்ளனர்.
13. அதிக அளவிலான இடம்பெயர்தல் கிராமப்புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினை பிரதிபலிக்கிறது.
14. எனவே ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையை குறைக்கும் விதமான கிராம வளர்ச்சித் திட்டங்கள் அதிக அளவிலான இடம் பெயர்தலை குறைப்பதற்கு உதவியாக அமையும்.
23.
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இடம் பெயர்தல் சார்ந்து பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இடம் பெயர்தலின் அளவை குறைத்தல்:
1. அதிக அளவிலான இடம் பெயர்தல் கிராமப்புறத்தில் காணப்படும் வறுமை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையினைப் பிரதிபலிக்கிறது.
2. எனவே கிராமப்புறங்களின் மீது அரசின் கவனம் இருத்தல் வேண்டும்.
3. ஏழ்மை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையைக் குறைக்கும் விதமான கிராம வளர்ச்சித் திட்டங்கள் அதிக அளவிலான இடம் பெயர்தலைக் குறைப்பதற்கு உதவியாக அமையும்.
இடம் பெயர்ந்து நகர்தலைத் திசை திருப்புதல்:
1. பெரு நகரங்கள் நோக்கி குவியும் இடம் பெயர்தலைத் திசைமாற்றி அமைத்திடும் கொள்கைகள் நல்ல முடிவுகளாகும்.
2. நிலப்பரப்பு சார்ந்த குடிபெயர்தலால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதற்கு நகர்ப்புறங்களை பரவலாக்கும் வடிவமைப்புகள் பொருத்தமான உத்திகளாக அமைகின்றன.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards