9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/08/2019
மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்றும் காரணமும் தவறானவை.
2.
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.
கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
பிறைநிலப் பகுதி
ஸோலோ ஆறு
நியாண்டர் பள்ளத்தாக்கு
3.
தமிழகத்துக்கு அப்பால் சேர, சோழ, பாண்டியர்கள் குறித்து அறிந்துகொள்ள பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த ________________ கல்வெட்டுக் குறிப்புகள் உதவுகின்றன
புலிகேசி
அசோகர்
சந்திரகுப்தர்
தனநந்தர்
4.
பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ________ ஆவர்.
ஹோமோ ஹேபிலிஸ்
ஹோமோ எரக்டஸ்
ஹோமோ சேபியன்ஸ்
நியாண்டர்தால் மனிதன்
5.
கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்றும் காரணமும் தவறானவை.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
கூற்று சரி; காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறானவை
6.
கற்கருவிகளை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகளும் நுட்பமும்_______ தொழில்நுட்பம் என அழைக்கப்படுகின்றன.
7.
கோடரிகளும் பிளக்கும் கருவிகளும் ______________ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவி வகைகளாகும்
8.
தொடக்க நிலை பல செல் உயிரினம் முதன் முதலில்______________காலத்தில் தோன்றியது.
9.
மனிதர்கள் உருவாக்கிய அல்லது மாற்றியமைத்த ஒரு பொருள் அல்லது கருவி ___________ எனப்படுகிறது.
10.
கருவி செய்வதில் கீழ்ப் பழைய கற்கால மக்களிடமிருந்த தொழில்நுட்பத்தைத் திறனாய்வு செய்க.
11.
விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும் – விளக்கு
12.
பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.
13.
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.
14.
விவசாயம், பானை செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.
15.
கல்லிலும் எலும்பிலும் காணப்பட்ட உருவங்கள்
16.
சிறு அளவிலான கல்லால் ஆன செய்பொருள்கள்
17.
செம்மணல் மேடுகள்
18.
கோடரிக்கருவிகள்
19.
பழங்கால மானுடவியல்
1.
(d)
கூற்றும் காரணமும் தவறானவை.
2.
(b)
பிறைநிலப் பகுதி
3.
(b)
அசோகர்
4.
(c)
ஹோமோ சேபியன்ஸ்
5.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
6.
( )
கற்கருவி
7.
( )
கீழ் பழங்கற்கால
8.
( )
தொல்லுயிரூழி
9.
( )
செய்பொருள்
10.
1. பழைய கற்கால மக்கள் பெரிய கற்களைச் செதில்களாகச் சீவி கைக்கோடாரி உள்ளிட்ட பல வகைக் கருவிகளை வடிவமைத்தார்கள்.
2. இவர்கள் தங்கள் தேவைகளுக்காக கைக்கோடாரி, வெட்டுக் கத்தி உள்ளிட்ட பல்வேறு கருவிகளை செய்தார்கள்.
3. இந்தக் கருவிகள் (biface) இருமுகக் கருவிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை சமபக்க உருவ அமைப்பைப் (Symmetry) பெற்றுள்ளன.
4. கைக்கோடாரிகள் அச்சூலியன் கருவிகள் என்றும் அழைக்கப்படுகின்றன
11.
விலங்குகளைப் பழக்குதல் இணங்கி வாழும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உருவாகி இருக்கலாம். நாய்கள் தான் முதலில் பழக்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் பொ.ஆ.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்மேற்கு ஆசியாவில் பழக்கப்படுத்தப்பட்டன. சுமேரிய நாகரிகத்தில் நிலத்தை உழுவதற்கு காளைகள் பயன்படுத்தப்பட்டன. புதிய கற்கால மெஹர்கரில் ஆடுகள், மாடுகள் பழக்கப்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
12.
பெருங்கற்கால ஈமச் சின்னங்கள்:
1.டோல்மென் எனப்படும் கற்திட்டை,
2. சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்.
3. மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல்,
4. தாழி.
5. பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள்,
6. சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
13.
1. மனிதர்களின் வரலாற்றைப் புவியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது.
2. புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் காலக்கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் பொதிந்து கிடக்கின்றன.
3. புவி மற்றும் பல்வேறு உயிரினங்களின் வரலாற்றை அறிவதற்கு இச்சான்றுகள் மிக முக்கியமானவையாகும்.
4. இவ்வடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளின் புதைபடிவங்கள் புதைந்துள்ளன.
5. தொல்மானுடவியல் அறிஞர்களும், தொல்லியல் அறிஞர்களும் புவியின் மண் மற்றும் பாறை அடுக்குகளை அகழ்ந்து மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளைச் சேகரிக்கின்றார்கள்.
6. மனிதர்களின் பரிணாமம். தொல்பழங்காலம் ஆகியவற்றின் பல்வேறு கால கட்டங்களை அறிய இந்தப் புதைபடிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் அறிவியல் பூர்வமாக கணிக்கப்படுகிறது.
7. இச்சான்றுகள் வழியாக மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சி நிலைகள் மற்றும் அவற்றின் காலகட்டம் ஆகியவற்றை புரிந்து கொள்ள முயல்கின்றனர்.
8.தொல்லியல் (Archaeology): தொல்பொருள்களை ஆராய்ந்து விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் ஆகும்.
9.தொல்மானுடவியல் (Palaeoanthropology): மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளும் இயல் ஆகும்.
14.
அ) விவசாயம் (அல்லது) வேளாண்மை:
1. இரும்புக் கால மக்கள் வேளாண்மையும் மேற்கொண்டார்கள்.
2.ஆடு மாடுகளையும் வளர்த்தார்கள்.
3.தினையும் நெல்லும் பயிரிடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் தான் பாசன நிர்வாகம் மேம்பட்டது.
4.ஏனெனில் பல பெருங்கற்கால இடங்கள், நதிகள், குளங்களுக்கு அருகே இருந்தன ஆற்றுப்படுகைகளில் பாசன தொழில்நுட்பம் வளர்ந்தது.
ஆ) மட்பாண்டங்கள்:
1.தொல்லியல் ஆய்வு நடந்த இடங்களில் கிடைக்கும் முக்கியமான சான்று மட்பாண்டங்களாகும்.
2.இரும்புக்கால, சங்ககால மக்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களை மட்பாண்டங்களுக்குப்
பயன்படுத்தினார்கள்.
3.மட்பாண்டங்கள் சமையல், பொருள்களைச் சேமிப்பதற்கு, சாப்பிடுவதற்கு எனப் பயன்படுத்தப்பட்டன.
4.கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் உள்ளே கறுப்பாகவும் வெளியே சிவப்பாகவும் காணப்படும். வெளிப்புறம் பளபளப்பாக இருக்கும்.
இ) உலோகக் கருவிகள்:
1.பெருங்கற்காலக் கல்லறைகளில் ஈமப் பொருட்களாக ஏராளமான இரும்புப் பொருட்கள்
வைக்கப்பட்டுள்ளன.
2.வாள், குறுவாள் போன்ற கருவிகள், கோடரிகள், உளிகள், விளக்குகள், முக்காலிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
3.இப்பொருட்களில் சிலவற்றிற்கு எலும்பு அல்லது மரம் அல்லது கொம்பாலான கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கிறது.
4.இரும்புக் கருவிகள் வேளாண்மைக்கும், வேட்டையாடுதலுக்கும், உணவு சேகரிப்பதற்கும், போர்களுக்கும் பயன்படுத்தப்பட்டன.
5. வெண்கலக் கிண்ணங்கள், விலங்கு, பறவை உருவங்களால் அணிவேலைப்பாடு செய்யப்பட்ட கலங்கள், வெண்கலத்திலான முகம் பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
15.
வீனஸ்
16.
நுண்கற்காலம்
17.
தேரி
18.
அச்சூலியன்
19.
மனித இன முன்னோர்கள் குறித்த ஆய்வு
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards