9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கிராமக் குடியிருப்பு மற்றும் நகரக் குடியிருப்பு.
2.
பசுமை குடில் விளைவு என்றால் என்ன?
3.
அதிக மக்களடர்த்தி மற்றும் குறைந்த மக்களடர்த்தி உள்ள பகுதிகளை எழுதுக.
4.
ஏழை மக்கள் மற்றும் வசதி வாய்ப்புடைய மக்கள் இடப்பெயர்வதற்கான காரணங்கள் யாவை?
5.
இந்தியாவில் பெண்கள் இடப்பெயர்தலுக்கான முக்கியக் காரணங்கள் யாவை?
6.
பெரிய அளவை நிலவரைபடம் மற்றும் சிறிய அளவை நிலவரைபடம்
7.
சிறு மற்றும் குறு விவசாயிகளை வேறுபடுத்துக்க.
8.
நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் யாரால் கண்காணிக்கப்படுகிறது?
9.
ஒற்றையாட்சி முறை
10.
குடிமக்களின் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மக்களாட்சி எவ்வாறு வழிவகுக்கிறது? விளக்குக.
11.
மண் உருவாக வானிலைச் சிதைவு ஒரு முக்கியத் தேவையா?
12.
மூப்பு நிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.
13.
குறைந்த மதிப்பிலான நாணயங்கள் ஏன் அதிகளவு அச்சடிக்கப்பட்டன?
14.
பண்டைய காலப் பணம் என்பது யாது?
15.
உயிரினப் பன்மை என்றால் என்ன?
16.
மழைப்பொழிவின் வகைகள் யாவை?
17.
வெயிற்காய்வு என்றால் என்ன?
18.
வளிமண்டல அடுக்குகள் யாவை?
19.
விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும் – விளக்கு
20.
நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.
21.
வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழக மக்களின் வாழ்வில் கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பு தருக.
22.
சுனாமிக்குப் பிறகு என்ன செய்யவேண்டும்?
23.
மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் யார்?
24.
குழந்தைகளுக்கான உரிமைகளாக ஐ.நா.சபை அறிவித்துள்ளவை யாவை?
25.
மனித உரிமை என்றால் என்ன?
1.
கிராமக் குடியிருப்பு: கிராமத்தின் குடியிருப்புகள் செல்வந்தரின் குடியிருப்பைச் சுற்றியோ அல்லது மசூதி, கோவில், தேவாலயங்களைச் சுற்றியோ அமைந்திருக்கும். இங்குச் சாலைகள் வட்ட வடிவமாகவும் ஒரு மையத்தில் முடிவடையக் கூடியதாகவும் இருக்கும்.
நகரக் குடியிருப்பு: நகரம் பொதுவாகக் கிராமத்தை விட பெரியதாகவும், பெருநகரத்தை விடச் சிறியதாகவும் இருக்கும்.
2.
1. பசுமைக்குடில் வாயுக்களான கார்பன் - டை - ஆக்ஸைடு, மீத்தேன். நீர்மூகை கூறுகள், குளோரோ ஃபுளோரோ கார்பன், கார்பன் மோனாக்சைடு. ஒளிப்பட வேதியல் தனிமங்கள் மற்றும் ஹைட்ரோ கார்பன் போன்றவை வளிமண்டலத்திலிருந்து வெப்பத்தை வெளியேற்றாமல் தக்க வைக்கிறது.
2. இவை மேலும் வளி மண்டலத்தின் வெப்ப ஏற்புத்திறன் அதிகரிக்கவும் காரணமாகின்றன.
3. உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், ஓசோன் படலம் பாதிக்கப்படுதல், கடல் மட்டம் உயருதல். கடலோர நிலப்பகுதிகளைக் கடல் ஆட்கொள்ளுதல், பனிக்கட்டி உருகுதல் போன்றவை ஏற்படுகின்றன.
4. உலக வெப்பமயமாதல் மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
3.
அதிக மக்களடர்த்தியுள்ள பகுதிகள்:
1. கிழக்கு ஆசியா
2. தெற்கு ஆசியா
3. வடமேற்கு ஐரோப்பா
4. வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி
குறைந்த மக்களடர்த்தியுள்ள பகுதிகள்:
1. மத்திய ஆப்பிரிக்கா
2. வடக்கு ரஷ்யா
3. மேற்கு ஆஸ்திரேலியா
4. கனடா
4.
1. ஏழை மக்கள் கிராமப்புறங்களில் நிலவி வரும் தங்களது துயர நிலையிலிருந்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக்கொள்ளும் உத்தியாக இடப் பெயர்வை மேற்கொள்கின்றனர்.
2. சற்று வசதி வாயப்பு உடைய மக்கள் தங்களது வாழ்நிலையை மேம்படுத்துவதற்காக இடம் பெயர்தலை மேற்கொள்கின்றனர்.
5.
1. இந்தியாவிலும் தமிழகத்திலும் திருமணமும் திருமணம் சார்ந்த இடப்பெயர்வும் பெண்களின் அதிக அளவிலான இடப்பெயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
2. இந்தியாவில் 70% பெண்கள். தமிழ்நாட்டில் 51% பெண்கள் திருமணத்திற்காகவே இடம் பெயர்ந்துள்ளனர்.
6.
பெரிய அளவை நிலவரைப் படம்: சிறிய பகுதியை அதிக விவரங்களுடன் காட்ட முடியும்.
சிறிய அளவை நிலவரைப் படம்: ஒரு பெரிய பகுதியைக் குறைவான விவரங்களுடன் காட்ட முடியும்.
7.
| சிறு விவசாயிகள் | குறு விவசாயிகள் |
| ஒன்று முதல் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்வோர் சிறு விவசாயிகளாவர். |
ஒரு ஹெக்டேருக்கும் குறைவான பரப்பளவில் சாகுபடி செய்வோர் குறு விவசாயிகளாவர். |
| இவர்கள் சாகுபடி செய்யும் நிலத்தின் பரப்பளவு 26 விழுக்காடு ஆகும். |
இவர்கள் சாகுபடி செய்யும் நிலத்தின் பரப்பளவு 36 விழுக்காடு ஆகும். |
| சிறு விவசாயிகளின் எண்ணிக்கை குறு விவசாயிகளின் எண்ணிக்கையை விட குறை வாகும். |
தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள் குறு விவசாயிகளாவர். |
| தமிழகத்தில் சிறு விவசாயிகள் 14 விழுக்காடு உள்ளனர். | குறு விவசாயிகளின் எண்ணிக்கை 78 விழுக்காடு ஆகும். |
8.
1. நிலத்தடி நீரின் அளவையும் தன்மையையும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தொடர்ந்து கண்காணிக்கிறது.
2. இத்தொடர் கண்காணிப்பின் அடிப்படையில் நீர் பயன்பாடு அளவைக் கொண்டு ஊராட்சி ஒன்றியங்களை இவ்வாரியம் வகைப்படுத்தியுள்ளது.
9.
1. ஒற்றையாட்சி முறை என்பது இறையாண்மை மிக்க ஓர் அரசு ஒரே நிறுவனமாக இருந்து ஆட்சி செய்வதாகும்.
2. ஒற்றையாட்சி முறையில் அனைத்து அதிகாரங்களும் ஒரே இடத்தில் மையப் படுத்தப்படுகின்றன.
3. இது சிறு நாடுகளுக்குப் பொருத்தமானது.
4. ஒற்றையாட்சி முறை குறைந்த செலவுடையது.
5. ஒற்றையாட்சி முறை உடனடியாக முடிவெடுத்துத் துரிதமாகச் செயல்படுகிறது.
6. அரசியலமைப்பு திருத்தங்களை எளிதில் மேற்கொள்ள இயலும்.
10.
1. மக்களாட்சி முறையில் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுகிறது.
2. குடிமக்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுகின்றனர்.
3. குடிமக்கள் தனது கருத்துகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
4. மக்கள் தமக்குரிய தலைமையை தாமே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.
11.
உடைந்த பாறைகள் வானிலைச் சிதைவுக்கு உட்பட்டு மண்ணாக மாறுகிறது. சிதைவடைந்த நுண்ணிய பாறைத் துகள்கள் மற்றும் சிதைந்த உயிரினங்களின் (Humans) கலவையே மண்ணாகும்.
12.
காரணம்: இளநிலை மற்றும் முதிர் நிலையில் அரித்து கடத்தி வரப்பட்ட பொருட்கள் தாழ்நில சமவெளிகளில் படிய வைக்கப்படுகின்றன. இவ்வாறு படிவுகள் நிரப்பப்படுவதால் முதன்மை ஆறு மூப்பு நிலையில் அகன்று காணப்படுகிறது.
13.
1. வணிகத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி இருப்பு இல்லை.
2. சுரங்கங்களிலும் தங்கம், வெள்ளி குறைவாகத்தான் இருந்தன.
3. இதனால் குறைந்த மதிப்புக் கொண்ட உலோகங்களைக் கொண்டு நாணயங்கள் அதிகமாகத் தயாரிக்கப்பட்டன.
4. இவை சிறிய மதிப்பிலான பொருள்கள் வாங்கவும் விற்கவும் பயன்படுத்தப்பட்டன.
14.
1. தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் பண்டமாற்று முறைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டன.
2. இவை பண்டைய காலப் பணம் அல்லது புராதன பணம் என்று அழைக்கப்படுகின்றன.
15.
உயிரினப்பன்மை என்பது ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பதாகும். இது காலநிலை. நிலத்தோற்றம் மற்றும் மனிதச் செயல்பாடுகளின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன.
16.
(i) வெப்பச் சலன மழைப்பொழிவு (Conventional Rainfall)
(ii) சூறாவளி மழைப் பொழிவு(Cyclonic Rainfall (or) Front and Rain fall)
(iii) மலைத் தடுப்பு மழைப் பொழிவு Orographic Rainfall)
ஆகியன மழைபொழிவின் பல்வேறு வகைகள் ஆகும் .
17.
சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்பம் குறுகிய அலைகளாக புவியை வந்தடைகிறது. இதனை வெயிற்காய்வு அல்லது கதிர்வீச்சு என்கிறோம்.
18.
i) கீழடுக்கு
ii) மீள் அடுக்கு
iii) இடையடுக்கு
iv) வெப்ப அடுக்கு
v) வெளியடுக்கு
19.
விலங்குகளைப் பழக்குதல் இணங்கிவாழும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உருவாகி இருக்கலாம்.நாய்கள் தான் முதலில் பழக்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் பொ.ஆ .மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்மேற்கு ஆசியாவில் பழக்கப்படுத்தப்பட்டன. சுமேரிய நாகரிகத்தில் நிலத்தை உழுவதற்கு காளைகள் பயன்படுத்தப்படன. புதிய கற்கால மெஹர்கரில் ஆடுகள், மாடுகள் பழக்கப்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
20.
நீயாண்டர்தால் மனிதர்கள் இறந்தவர்களைப் புதைத்தார்கள். அப்போது சில சடங்குகளை மேற்கொண்டார்கள். குளிர்காலத்தைத் தாக்குப் பிடிக்க அவசியமான கதகதப்பான வீடுகள், தைக்கப்பட்ட ஆடைகள், தையலுக்குத் தேவைப்படும் ஊசிகள் ஆகியவற்றை நியாண்டர்தால் மனிதர்கள் பெற்றிருக்கவில்லை.
21.
1.மக்கள் வேளாண்மையும் மேற்கொண்டார்கள், ஆடு, மாடுகளையும் வளர்த்தார்கள்.
2. அவர்கள் விலங்குகளைப் பழக்கி, அவற்றுக்கு உணவு கொடுத்து வளர்த்து, அவற்றையும்
விவசாயத்தில் ஈடுபடுத்தினார்கள்.
3. விலங்குகளை வளர்ப்பது மனிதர்களின் வாழ்வில் முக்கியமான பகுதி ஆனது. எருதுகள் உழுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.
4. எருதுகள் விவசாய வேலைகளை எளிதாக்கின. வேட்டையாடி வாழ்க்கையை நடத்தியதை விட, இந்த வாழ்க்கை எளிதாக இருந்தது.
5. விவசாயம் அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடியேறும்படி செய்தது.
22.
1. ஆழிப் பேரலை தொடர்பான அண்மைச் செய்திகளை வானொலி அல்லது தொலைக்காட்சியின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.
2. நமக்கு காயம் ஏற்பட்டுள்ளதா எனக் கண்டறிந்து முதலுதவி பெறவேண்டும்.
3. காயமடைந்த அல்லது சிக்கிக்கொண்ட பிற நபர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
4. ஆழிப்பேரலையிலிருந்து யாரையாவது மீட்கவேண்டுமென்றால் சரியான உபகரணங்களுடன் கூடிய வல்லுநர்களை உதவிக்கு அழைக்க வேண்டும்
5. சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகள், முதியோர். ஊனமுற்றோர். போக்குவரத்து வசதியில்லாதவர்களுக்கு உதவி செய்திட வேண்டும்.
6. எரிவாயு கசிவை உணர்ந்தால் உடனடியாக சன்னல்களைத் திறந்துவிட்டு விட்டு அனைவரையும் வெளியேறச் செய்ய வேண்டும்.
23.
1. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைக்கப்படுகிறது.
2. மக்கள் தொகை என்ற அடிப்படையில் மாவட்டம் பல பகுதிகளால்ப் பிரிக்கப்படுகிறது.
3. பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
4. இவ்வுறுப்பினர்கள் தங்களில் ஒருவரை தலைவராகத் தேர்ந்தெடுக்கின்றனர்.
24.
ஐ.நா. சபை 1989 ஆம் ஆண்டு நவம்பர் 20 அன்று குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை ஏற்று கொண்டது.
1. வாழ்வதற்கான உரிமை
2. குடும்பச் சுழலுக்கான உரிமை
3. கல்விக்கான உரிமை
4. சமூகப் பாதுகாப்பு உரிமை
5. பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
6. விற்பது அல்லது கடத்தலுக்கெதிரான உரிமை
7. குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டளுக்கெதிரான உரிமை
25.
1. ஐ.நா.சபை மனித உரிமைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது.
2. இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே மனித உரிமை ஆகும்.
3. எவர் ஒருவருக்கும் இந்த உரிமையை வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards