9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
GEO - நீர்க்கோளம்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கடல் அலைகளைப் பற்றிச் சுருக்கமாக விடையளி
2.
கடலடி நிலத்தோற்றங்கள் யாவை?
3.
'நீர்கோளம்' பொருள் கூறுக.
4.
'கடல் உவர்ப்பியம்' என்றால் என்ன?
5.
ஓத மின்சக்தி மற்றும் நீர் மின்சக்தி
6.
உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்.
7.
அரபிக் கடலைக்காட்டிலும் வங்காள விரிகுடாவில் உவர்ப்பியம் அதிகமாக உள்ளது.
8.
இயற்கையாகவே கடல்நீர் உவர்நீராக உள்ளது.
9.
வடஅரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
10.
கடல் நீரோட்டங்கள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
11.
பெருங்கடலின் தோற்றம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக.
12.
கூற்று(A):- வரைபடங்களில் கடல்கள் எப்பொழுதும் நீல நிறத்தில் கொடுக்கப்படும்.
காரணம்(R):- இது கடல்களின் இயற்கையான நிறத்தைக்காட்டுகிறது.
அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
ஆ) A மற்றும் R சரி ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
இ) A சரி ஆனால் R தவ று
ஈ) A தவ று ஆனால் R சரி
13.
கூற்று(A) : நிலத்தால் சூழப்பட்டப் பகுதிகளில் உவர்ப்பியம் அதிகமாக உள்ளது.
காரணம்(R): நிலத்தால் சூழப்பட்ட கடலில் விரிந்த கடற்பரப்பைவிட(open ocean) நன்னீர் சிறிதளவே கலக்கின்றது.
அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
ஆ) A மற்றும் R சரி ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவ று ஆனால் R சரி
14.
கூற்று(A): ஆழ்கடல் மட்டக்குன்றுகள், கயாட் என்று அழைக்கப்படுகிறது.
காரணம்(R): அனைத்து கயாட்டுகளும் எரிமலை செயல்பாடுகளால் உருவானவை.
அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
ஆ) A மற்றும் R சரி ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
இ) A சரி ஆனால் R தவறு
ஈ) A தவ று ஆனால் R சரி
15.
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?
வளைகுடா நீரோட்டம் - பசிபிக் பெருங்கடல்
லாப்ரடார் கடல் நீரோட்டம் - வட அட்லாண்டிக் பெருங்கடல்
கேனரி கடல் நீரோட்டம் - மத்திய தரைக்கடல்
மொசாம்பிக் கடல்நீரோட்டம் - இந்தியப் பெருங்கடல்
16.
கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கரமாக உள்ளவை எவை?
கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கடல் அகழி
கண்டச்சரிவு,கண்டத்திட்டு, கடலடிச்சமவெளி, கடல் அகழி
கடலடிச்சமவெளி,கண்டச்சரிவு,கண்டத்திட்டு,கடல் அகழி
கண்டச்சரிவு,கடலடிச்சமவெளி,கண்டத்திட்டு,கடல் அகழி
17.
கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.
புவித்தட்டுகள் இணைதல்
புவித்தட்டுகள் விலகுதல்
புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்
மேற்கண்ட எதுவுமில்லை
18.
பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல _______
அதிகரிக்கும்
குறையும்
ஒரே அளவாக இருக்கும்
மேற்கண்ட எதுவுமில்லை
19.
'சுந்தா அகழி' காணப்படும் பெருங்கடல்________
அட்லாண்டிக் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
இந்திய பெருங்கடல்
அண்டார்டிக் பெருங்கடல்
20.
கண்டச்சரிவு
21.
அதிக மழை
22.
உயர் ஓதம்
23.
கிரேட் பேரியர் ரீப்
24.
மரியானா அகழி
1.
கடல் நீர் இயக்கங்களில் அலைகளே மிகவும் வலிமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காற்று கடலின் மேற்பரப்பில் வீசும்போது சிற்றலைகளை உருவாக்கின்றன. காற்றின் வேகம், அது நீடிக்கும் காலம் மற்றும் அதன் திசையைப் பொறுத்து அலைகளின் உயரம் அமைகின்றது. சில நேரங்களில் ஆழ்கடலில் ஏற்படும் நில அதிர்வுகளினாலும் அலைகள் உருவாகின்றன. இவ்வகை அலைகள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் ஆழிப்பேரலைகள் ஆகும்.
2.
(i)கண்டத்திட்டு (Continetal shelf)
(ii) கண்டச்சரிவு (Continental slope)
(iii) கண்ட உயர்ச்சி
(iv) கடலடி சமவெளிகள் அல்லது அபிசல் சமவெளி (Deep sea flair / Abyssal Flair)
(v) கடல் பள்ளம் அல்லது அகழிகள் (Oceanic deep)
(vi) கடலடி மலைத்தொடர்கள் (Oceanic ridge)
3.
நீர்க்கோளம் புவியில் காணப்படும் நீரின் பல்வேறு நிலைகளை உள்ளடக்கியது. புவியின் அனைத்து
நீர் நிலைகளையும் தன்னுள் கொண்டது நீர்க்கோளம் ஆகும்.
4.
கடல் நீரில் கரைந்துள்ள உப்பின் விகித அளவு உவபர்ப்பியம் எனப்படும். இது ஆயிரத்தின் பகுதியாக அளவிடப்படுகிறது.
5.
| ஓத மின்சக்தி | நீர் மின்சக்தி |
| 1. கடல் ஓதங்களினால் நீர் விழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறி உருளை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு ஓத மின்சக்தி என்று பெயர். |
1. ஆறுகளில் வரும் நீரை அணைக்கட்டுகளில் தேக்கி வைத்து நீர் விழும் போது ஏற்படும் ஆற்றலை விசைப்பொறி உருளை கொண்டு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது நீர் மின்சக்தி எனப்படுகிறது. |
| 2. இந்தியாவில் காம்பே வளைகுடா கட்ச் வளைகுடா மற்றும் சுந்தரவன சதுப்புநிலப்பகுதிகள் ஓத சக்தி உற்பத்தி செய்ய சாத்தியக் கூறுகள் நிறைந்த மண்டலங்களாக அறியப்பட்டுள்ளன. |
2.தமிழ்நாட்டில் அமராவதி, பவனிசாகர். குந்தா,மேட்டூர், பாபநாசம் போன்றவை முக்கிய நீர்மின் உற்பத்தி நிலையங்களாகும், |
6.
| உயர் ஓதம் | தாழ் ஓதம் |
| புவி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்பொழுது, சூரியன் மற்றும் சந்திரனின் கூட்டு ஈர்ப்பு விசையானது கடலின் மேற்பரப்பு அலைகளை வலுவடையச் செய்து உயர் அலைகளை உருவாக்குகின்றன. இவ்வுயரமான அலைகள் உயர் ஓதங்கள் எனப்படுகின்றன. | புவி, சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்துக் கோணத்தில் வரும்போது இவற்றின் ஈர்ப்பு விசையானது ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுவதினால் உயரம் குறைவான அலைகள் உருவாகின்றன. இவ்வுயரம் குறைவான அலைகள், தாழ் ஓதங்கள் எனப்படுகின்றன. |
7.
வங்காள விரிகுடாவில் அரபிக்கடலைக் காட்டிலும் நதிகள் அதிகளவில் கலக்கின்றன. அக்கடலில் கலக்கும் ஆறுகள் மூலம் அதிகளவு உவர்ப்பியம் அதிகமாக உள்ளது.
8.
வெப்பமடைதலும், குளிர்தலும் நிலத்தைவிட கடலில் மெதுவாக நடைபெறும். வெப்பமண்டலப் பகுதிகளில் ஆவியாதல் அதிகமாக நடைபெறுவதினால் உவர்ப்பியம் அதிகமாக நடைபெறுவதினால் உவர்ப்பியம் அதிகமாகக் காணப்படுகிறது. உவர்ப்பியத்தின் அளவு வெப்ப மண்டலப் பகுதியில் அதிகமாகவும், நிலக்கோடு மற்றும் துருவப் பகுதிகளில் குறைவாகவும் உள்ளன.
9.
வட அரைக்கோளத்தில் நில பகுதிகள் அதிகம் காணப்படுகிறது. எனவே அப்பகுதி நில அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகிறது.
தென் அரைக்கோளப் பகுதிகளில் நீரின் அளவு அதிகம் காணப்படுகிறது. அப்பகுதியில் அண்டார்டிகா கண்டம் பணியாலானது. அதனால் அப்பகுதி நீர் அரைக்கோளம் என்று அழைக்கப்படுகிறது.
10.
கடல் நீரோட்டங்கள்:
(i) பெருங்கடல்களின் மேற்பரப்பிலும் அதன் அடி ஆழத்திலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும் நீரினை நீரோட்டம் என்று அழைக்கின்றோம்.
(ii) பெருங்கடல் நீரோட்டங்கள் வட அரைக்கோளத்தில் கடிகார திசையிலும் தென் அரைக்கோளத்தில் எதிர்க் கடிகார திசையிலும் நகருகின்றன.
வகைகள்:
கடல் நீரோட்டங்கள் வெப்பத்தின் அடிப்படையில் வெப்ப நீரோட்டம் மற்றும் குளிர் நீரோட்டம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வெப்ப நீரோட்டங்கள்:
தாழ் அட்சக்கோட்டுப் பகுதிகளிலிருந்து (வெப்ப மண்டலம்) உயர் அட்சக் கோட்டுப் பகுதிகளை (மித வெப்பமண்டலம், துருவமண்டலம்) நோக்கி நகரும் நீரோட்டங்கள் வெப்ப நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு அட்லாண்டிக் பெருங்கடலின் வளைகுடா நீரோட்டம் மற்றும் பசிபிக் பெருங்கடலின் வட புவியிடைக் கோட்டு நீரோட்டம்.
குளிர் நீரோட்டங்கள்:
உயர் அட்சப் பகுதிகளிலிருந்து (மிதவெப்ப மண்டலம் மற்றும் துருவ மண்டலம்) தாழ் அட்சப்பகுதிகளை (வெப்ப மண்டலம்) நோக்கி நகரும் நீரோட்டங்கள் குளிர் நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. எ.கா. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள லாப்ரடார் நீரோட்டம் மற்றும் பசிபிக் பெருங்கடலின் பெருவியன் நீரோட்டம்.
11.
1. மிகப்பரந்த உவர் நீரைக் கொண்ட பெருங்கடல்கள். நீர்க்கோளத்தில் பெரும்பங்கை தன்னுள் கொண்டுள்ளது.
2. சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக புவியின் மீது பெருங்கடல்கள் உருவாகி இருக்கலாம் எனப் புவி அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
3. தொடக்க காலத்தில் புவி, நீர் இல்லாத கோளாக இருந்தது என்பதை நம்பமுடியாமல் இருந்தது.
4. காலப்போக்கில் புவி குளிரத் தொடங்கிய போது புவியின் உட்பகுதியில் இருந்த நீராவி வெளியேறி வளிமண்டலத்தை அடைந்து மேகங்களாக உருவாகி இடைவிடாத மழையைப் பொழிந்தன.
5. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெய்த இந்த மழை பள்ளங்களை நிரப்பி நாளடைவில் பெருங்கடல்களை உருவாக்கின.
6. அதிக அளவிலான உணவு மற்றும் கனிம வளங்களைக் கொண்டிருப்பதால் கடல்களும், பெருங்கடல்களும் புவிக்கோளத்தின் வளகிண்ணமாக கருதப்படுகின்றன.
12.
அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
13.
அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
14.
அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
15.
(a)
வளைகுடா நீரோட்டம் - பசிபிக் பெருங்கடல்
16.
(a)
கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கடல் அகழி
17.
(b)
புவித்தட்டுகள் விலகுதல்
18.
(b)
குறையும்
19.
(c)
இந்திய பெருங்கடல்
20.
இரண்டாம் நிலை நிலத்தோற்றம்
21.
கடலில் உவர்ப்பியம் குறைவு
22.
அமாவாசை மற்றும் முழு நிலவு நாள்
23.
ஆஸ்திரேலியா
24.
பசிபிக் பெருங்கடலின் ஆழமானப் பகுதி
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards