9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
GEO - நிலவரைபடத் திறன்கள்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில் (GPS ) பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் _____.
7
24
32
64
2.
மிகபரந்த நிலப்பரப்பில் குறைந்த விவரத்தை தரக்கூடிய நிலவரைபடம்
பெரிய அளவை நிலவரைபடம்
கருத்துசார் வரைபடம்
இயற்கை வரைபடம்
சிறிய அளவை நிலவரைபடம்
3.
நிலவரைபடத்தில் உறுதியான கருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தர குறியீடுகள்
முறைக்குறியீடுகள்
இணைப்பாய புள்ளிகள்
வலைப்பின்னல் அமைப்பு
திசைகள்
4.
ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது
தலைப்பு
அளவை
திசைகள்
நிலவரைபடக் குறிப்பு
5.
20 ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை
தலப்படங்கள்
வானவியல் புகைப்படங்கள்
நில வரைபடங்கள்
செயற்கைக்கோள் பதிமங்கள்
6.
நவ்ஸ்டார்
7.
செயற்கைக்கோள்
8.
புவியின் வடிவம்
9.
கருத்துசார் வரைபடம்
10.
நிலவரைபடங்களை உருவாக்கும் அறிவியல் கலை
11.
வான்வழி புகைப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் பதிமங்கள்
12.
புவிமாதிரி மற்றும் நிலவரைபடம்
13.
தொலை நுண்ணுர்வின் கூறுகள் யாவை?
14.
தொலை நுண்ணுர்வு-வரையறு.
15.
நிலஅளவை செய்யப் பயன்படும் கருவிகளைக் கூறுக.
16.
நிலவரைபடத்தின் கூறுகள் யாவை?
17.
நிலைவரைபடம் என்றால் என்ன?
18.
புவியை குறித்துக்காட்டுவதற்கான முறைகள் யாவை?
19.
நவீன வரைபட தொழில் நுட்பத்தில் வலை நிலவரைபடவியல் முக்கிய அங்கமாகும்.
20.
நிலவரைபடத்தில் ஒரு குறிப்பிட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட புவி வலைப்பின்னல் அமைப்புப் பயன்படுகிறது.
21.
புவியியல் வல்லுநர்களின் அடிப்படைக் கருவி நிலைவரைபடம்.
22.
நிலவரைபடம் வரைதலில் செயற்கைக்கோள்கள் பதிமங்கள் துணைபுரிகின்றன.
23.
உலக அமைவிடத் தொகுதியின்(GPS) பயங்களை விவரி?
24.
நிலவரைபடங்களில் அளவை என்பதன் பொருள் என்ன? அதன் வகைகளை விளக்குக.
25.
நிலவரைபடப் புத்தகத்தைக் (Atlas) கொண்டு தமிழ்நாடு புறவரி நிலவரைபடத்தில் கீழ்க்காண்பவைகளைக் குறிக்கவும்.
அ) சென்னை நகரின் அட்ச, தீர்க்க பரவல்.
ஆ)10°வ, மற்றும் 78°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
இ)11°வ, மற்றும் 76°கி அட்சதீர்க்க பரவலில் அமைந்துள்ள நகரம்.
ஈ) கன்னியாகுமரியின் அட்சதீர்க்க பரவல்.
1.
(b)
24
2.
(d)
சிறிய அளவை நிலவரைபடம்
3.
(a)
முறைக்குறியீடுகள்
4.
(a)
தலைப்பு
5.
(d)
செயற்கைக்கோள் பதிமங்கள்
6.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
7.
இன்மார்சாட்
8.
ஜியாய்டு
9.
அரசியல் வரைபடம்
10.
நிலவரைபடக் கலையியல்
11.
வான்வழி புகைப்படம்: வான்வழி புகைப்படம் எடுத்தல் என்பது குறைந்த உயரத்தில் பறக்கும் பறவைகள், பலூன்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும் ட்ரோன்களில் படக் கருவிகள் பொருத்தப்பட்டு எடுக்கப்பட்ட புகைப் படங்களின் மூலம் இடங்கள் அல்லது பொருள்கள் அல்லது நிகழ்வுகள் பற்றிய தகவலை அறியும் முறையைக் குறிக்கிறது. வான்வழி புகைப்படங்கள் ஒரு நிலையான உயரத்திலிருந்து 10 - 30 வினாடிகள் கால இடைவெளியில் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு படத்திற்கும் முந்தைய படத்துடன் சிறிது மேற் பொருத்திய பகுதி இருக்கும். இணைந்த பகுதிகளை நீக்கி அனைத்து புகைப்படங்களின் இணை தோற்றம் செய்வதன் மூலம் ஆய்வு பகுதியக முப்பரிமாண படத்தைத் தயாரிக்க முடியும்.
12.
1. புவிமாதிரி என்பது ஒரு முப்பரிமாண உருண்டை ஆகும். ஆனால் நிலவரைப்படம் என்பது இரு பரிமாண வடிவம் கொண்டது.
2. புவிமாதிரி பூமி முழுவதையும் காட்டுகிறது. ஆனால் நிலவரைபடம் பூமி முழுவதையும், அல்லது ஒரு பகுதியை மட்டும் காட்டக் கூடியது.
3. புவிமாதிரியானது விரிவான பட அமைப்புக் காட்டக் கூடியது. நிலவரைபடம் இடங்களைப் பற்றிய குறிப்பான தகவல்களைத் தரக்கூடியது.
13.
தொலை நுண்ணுர்வின் கூறுகள் :
(i) ஆற்றல் மூலம் (Energy Source)
(ii) அனுப்பும் வழி (Transmission Path)
(iii) இலக்கு (Target)
(iv) உணர்விகள் (Sensor)
14.
தொலை நுண்ணுணர்வு என்பது புவியில் உள்ள பொருட்களை நேரிடையாகத் தொடர்பு கொள்ளாமல் தொலைவிலிருந்து உற்று நோக்கி அவற்றின் தகவல்களைச் சேகரிப்பது ஆகும். 'தொலை' என்பது தூரத்தையும் 'நுண்ணுணர்தல்' என்பது தகவல்களைச் சேகரிப்பதையும் குறிக்கும்.
15.
(i) சங்கிலி (Chain)
(ii) பட்டகக் காந்தவட்டை (Prismatic compass)
(iii) சமதள மேசை (Plane Table)
(iv) LDLLLDI60fl (Dumpy level)
(v) HL860 LDLLID (Abney level)
(vi) சாய்வுமானி (Clinometer)
(vii) தியோடலைட் (Theodalite)
(viii) மொத்த ஆய்வு நிலையம் (Total station)
(ix) உலகளாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்குமுறை (GNSS) ஆகியவை ஆகும்.
16.
ஒரு நிலவரைபடத்தில் தலைப்பு, அளவை, திசை, வலைப்பின்னல் அமைப்பு, கோட்டுச்சட்டம்,
நிலவரைபடக் குறிப்பு மற்றும் முறைக்குறியீடுகள் ஆகிய கூறுகளைக் கொண்டிருக்கும்.
17.
ஒரு நிலவரைபடம் என்பது காகிதம் / துணி அல்லது ஏதேனும் தட்டையான பரப்பில் புவியின் மேற்பரப்பின் முப்பரிமாண வடிவத்தைச் சிறிய வடிவில் காட்டுவதாகும். நிலவரைபடம் ஒரு புவியியலாளரின் அடிப்படைக் கருவியாகும்.
18.
1. நில வரைபடங்கள்
2. தொலை நுண்ணுணர்வு
3. உலக அமைவிடத்தைக் கண்டறியும் கருவி (GPS)
4. புவியியல் தகவலமைப்பு (GIS)
5. உலகளாவிய பயணச் செயற்கைக்கோள் ஒழுங்குமுறை (GNSS)
6. வலை நிலவரைபடங்கள் (Weh Maps)
19.
வலைப் பின்னல் என்பது தலப்படத்தில் பல கோடுகள் இணைந்து ஒரு இடத்தின் அமைவிடத்தைத் துல்லியமாகக் காட்டும் நுட்பம் ஆகும். ஒரு நில வரைபடம் என்பது தன்னுள் அதன் தலைப்பு, அளவை, திசைகள், வலைப்பின்னல், கோட்டுச் சட்டங்கள், நிலவரைப் படக் குறிப்பு மற்றும் முறைக் குறியீடுகள் போன்றவற்றைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். நிலவரைப் படம் என்னும் பதம் இன்றைய வலை மற்றும் மெய்நிகர் நிலவரைப் படங்கள் ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் விளக்குவது ஆகும்.
20.
ஒரு தலப்படத்தில் ஒரு கட்டம் என்பது ஓரிடத்தின் அமைவிடத்தைக் காட்ட உதவும் எண்ணெழுத்துக் குறியீடுகள் கொண்ட வரிசைகளின் தொகுப்பாகும். தலப்படத்தின் இடமிருந்து வலமாகக் கிடைமட்டமாகக் காணப்படும் கொடுக்கள் வடக்கைக் கோடுகள் என்றும், மேலிருந்து கீழ் நோக்கிச் செங்குத்தாகக் காணப்படும் கோடுகள் கிழக்குக் கோடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. கட்டடங்களின் செங்குத்து மற்றும் கிடைமட்டக் கோடுகள் வெட்டும் புள்ளிகள் எண்ணெழுத்துக் குறியீடுகளால் அடையாளம் குறிக்கப்படும் இணைப்பாயப் புள்ளிகள் ஆகும்.
21.
ஒரு நிலவரை படத்தில் தலைப்பு, அளவை, திசை, வலைப்பின்னல் அமைப்பு, கோட்டுச் சட்டம் நிலவரைப் படக் குறிப்பு மற்றும் முறைக் குறியீடுகள் ஆகிய கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும். இது நிலவரை படத்தின் நோக்கம் அல்லது கருத்தைக் குறிக்கிறது. (எ.கா: இந்தியா - இயற்கை அமைப்பு, உலகம் - அரசியல், தமிழ்நாடு-போக்குவரத்து)
22.
ஆயிரக்கணக்கான செயற்கைகோள் பதிமங்களை நம்மால் குறைந்த செலவில் பெறமுடியும். Google Earth, Google map ஆகிய சாதனங்கள் இதற்கு உதவுகின்றன. இந்த பதிமங்களால் வரையப்பட்ட நிலவரைப் படங்கள் தெளிவானவை, துல்லியமானவை.
23.
1. கைப்பேசிகள், கைக்கடிகாரங்கள். புல்டோசர்கள். கப்பல் கொள்கலன்கள் மற்றும் தானியியங்கி பணபரிமாற்றக் கருவிகள் (ATM) என அனைத்திலும் உலக அமைவிட கண்டறியும் தொகுதி தொழில் நுட்பம் பெரிதும் பயன்படுகிறது.
2. உலக அமைவிட கண்டறியும் தொகுதியின் முக்கிய நோக்கம் பயண தகவல்களை (தூரம். வழி மற்றும் திசை) மிகத் துல்லியமாகத் தருவதாகும்.
3. இராணுவ போர்த்தேடல்கள் மற்றும் போர்க்கால மீட்பு நடவடிக்கைகளிலும் உறுதுணையாகத் திகழ்கின்றது.
4. நம்பிக்கையான சுற்றுலா வழிகாட்டியாகவும் உள்ளது.
5. விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நெருக்கடிகால தேவைகளைத் துரிதமாக வழங்குதல் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஜி.பி.எஸ் பெரிதும் உதவுகிறது.
6. வானிலை முன்னறிவிப்பு. நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியன உலக அமைவிட கண்டறியும் தொகுதிகள் உதவியுடன் சிறப்பாக நடைபெறுகின்றன.
24.
அளவை:
1. அளவை என்பது நிலவரைபடத்தில் இரு புள்ளிகளுக்கும். புவிப்பரப்பில் அதே இரு புள்ளிகளுக்கும் இடையிலுள்ள தூர விகிதம் ஆகும்.
2. அளவையைக் கொண்டு வரைவதன் மூலம் முழுப்புவியையும் ஒரு காகிதத்தில் காட்ட முடியும்
3. அளவைகள் மூன்று முறைகளில் நிலவரைபடத்தில் காட்டப்படுகின்றன.
வகைகள்:
1. சொல்லளவை முறை
2. பிரதிபின்ன முறை
3. கோட்டளவை முறை
சொல்லளவை முறை:
1. நில வரைபடத்திலுள்ள தூரம் மற்றும் புவியின் உண்மையான தூரத்தை ஒப்பீடு செய்து சொற்களில் குறிப்பிடுவது சொல்லளவை முறையாகும்.
2. அதாவது ஒரு சென்டிமீட்டர் பத்து கிலோமீட்டருக்கு சமம்.
3. இது 1 செ.மீ = 10 கி.மீ என்று குறிக்கப்படுகிறது.
பிரதி பின்ன முறை:
1. இம்முறையில் நிலவரைபட மற்றும் உண்யைான தூரங்களின் ஒப்பீடு விகிதமாகவோ, பின்னமாகவோ வெளிப்படுத்தப்படும்.
2. இது வழக்கமாக R.F என சுருக்கமாகக் கூறப்படுகிறது.
3. இது 1/100000 அல்லது 1:100000 என்று குறிப்பிடப்படுகிறது.
4. இதன் பொருள். நில வரைபடத்தில் ஓர் அலகு புவியில் 1,00,000 அலகுகளைக் குறிக்கிறது.
5. இந்த அலகு ஓர் அங்குலம் அல்லது ஒரு சென்டிமீட்டர் அல்லது வேறு எந்த கோட்டளவை அலகாகவும் இருக்கலாம்.
6. எனவே, விகிதம் அல்லது பின்னமுறையில் அளவை என்பது.
கோட்டளவை முறை:
1. நில வரைபடங்களில் ஒரு நீண்ட கோடு பல சமப்பிரிவுகளாக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் நிலப்பரப்பில் எவ்வளவு தூரத்தைக் காட்டுகிறது என்பதைக் கணக்கிடுவது நேர்கோட்டு அல்லது கோட்டளவை முறையாகும்.
2. இந்த அளவை முறையின் மூலம் நில வரைபடத்திலுள்ள தூரத்தை நேரடியாக அளக்க உதவுகிறது.
25.
அ) 13.067o வடக்கு , 80.238o கிழக்கு
ஆ) மதுரை
இ) கோயமுத்தூர்
ஈ) 8.08o வடக்கு மற்றும் 77.54o கிழக்கு.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards