9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 15/11/2019
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்றும் காரணமும் தவறானவை.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை
கூற்று சரி; காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறானவை
2.
சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?
எப்.டி. ரூஸ்வெல்ட்
ஆண்ட்ரூ ஜேக்சன்
வின்ஸ்டன் சர்ச்சில்
உட்ரோ வில்சன்
3.
________ ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கை்கையின்படி அமெரிக்க சுதந்திர அமைதி போர் முடிவுக்கு வந்தது.
1776
1779
1781
1783
4.
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?
வளைகுடா நீரோட்டம் - பசிபிக் பெருங்கடல்
லாப்ரடார் கடல் நீரோட்டம் - வட அட்லாண்டிக் பெருங்கடல்
கேனரி கடல் நீரோட்டம் - மத்திய தரைக்கடல்
மொசாம்பிக் கடல்நீரோட்டம் - இந்தியப் பெருங்கடல்
5.
ஐநூற்றுவர் என்றறியப்பட்ட வணிகக் குழு தனது தலைமையிடம் ____ல் கொண்டிருந்தது.
நாகப்பட்டினம்
அஜந்தா
கோழிக்கோடு
ஜஹோல்
6.
_____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.
டய்ம்யாஸ்
சோகன்
பியுஜிவாரா
தொகுகவா
7.
பின்வரும் துறைகளில் இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத் துறை எது?
முதன்மைத் துறை
இரண்டாம் துறை
சார்புத் துறை
பொதுத் துறை
8.
அனல் மின் நிலையம் அதிக அளவிளான________ வெளியிடுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது
ஆக்சிஜன்
நைட்ரஜன்
கார்பன்
கார்பன் டை ஆக்சைடு
9.
அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது
சமூகச் சமத்துவம்
பொருளாதார சமத்துவம்
அரசியல் சமத்துவம்
சட்ட சமத்துவம்
10.
காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?
கரிகாலன்
முதலாம் இராஜராஜன்
குலோத்துங்கன்
முதலாம் இராஜேந்திரன்
11.
கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறானவை
12.
புவித்தட்டுகளின் நகர்வு _____________ ஆற்றலை வெளிப்படுத்துகிறது
நீர் ஆற்றல்
வெப்ப ஆற்றல்
அலையாற்றல்
ஓத ஆற்றல்
13.
விபத்தைத் தடுக்கும் வழிகள் யாவை?
14.
குடியேற்றம் மற்றும் குடியிறக்கம்
15.
தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் செல்லும் நான்கு நாடுகள் மற்றும் சதவீதத்தினைப் பட்டியலிடுக.
16.
வான்வழி புகைப்படங்கள் மற்றும் செயற்கைக்கோள் பதிமங்கள்
17.
சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?
18.
சுண்ணாம்பு பாறைப் பகுதிகளில் மேற்பரப்பில் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம். ஏன்?
19.
பணம் ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?
20.
உயிர்கோளம் என்றால் என்ன?
21.
ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?
22.
வெப்பத்தை அளக்கும் அளவைகள் யாவை?
23.
சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?
24.
எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக
25.
சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?
26.
சாலை விபத்துக்கான பல்வேறு காரணிகள் யாவை?
27.
ஆழிப் பேரலையைப் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
28.
ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்ப்பட்டதை விவரி.
29.
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.
30.
‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.
31.
சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலைகளும் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்தின?
32.
அடிப்படை உரிமைகளை எவ்வாறெல்லாம் உன்வாழ்க்கையில் அனுபவிக்கின்றாய்?
33.
மறுமலர்ச்சி, மதசீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின் வருகையைப் பறை சாற்றின - விவாதி.
34.
கி.பி.(பொ.ஆ.) 1526 முதல் 1707 வரையிலான அரசியல் மாற்றங்களை விவாதி.
35.
நிலையான மேம்பாட்டிற்கான கொள்கைகளைப் பற்றி விவரி.
36.
இந்தியாவில் அழுத்தக் குழுக்களின் செயல்பாடுகள் யாவை?
37.
சூறாவளிகள் எவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி
38.
தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு
39.
உங்களை நிலவரைபடவியலாளராக (cartographer) நினைத்துக் கொண்டு உங்கள் பகுதியின் வரைபடத்தை வரைக.
40.
கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?
41.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். ஆனால் பெண்களுக்கான தனிச்சட்டம் நடைமுறைப் படுத்துகிறது. நியாயப்படுத்துக.
42.
பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?
43.
மேம்பாடு என்பதற்கு நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்?
1.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
2.
(b)
ஆண்ட்ரூ ஜேக்சன்
3.
(d)
1783
4.
(a)
வளைகுடா நீரோட்டம் - பசிபிக் பெருங்கடல்
5.
(d)
ஜஹோல்
6.
(a)
டய்ம்யாஸ்
7.
(a)
முதன்மைத் துறை
8.
(d)
கார்பன் டை ஆக்சைடு
9.
(a)
சமூகச் சமத்துவம்
10.
(a)
கரிகாலன்
11.
(d)
கூற்றும் காரணமும் தவறானவை
12.
(b)
வெப்ப ஆற்றல்
13.
1. சாலை விபத்தைப் பற்றிய கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு.
2. சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துதல்.
3. தொழில் நுட்பம், வாகன வடிவமைப்பு மற்றும் சாலை கட்டமைப்பு.
4. இருக்கைப் பட்டை பயன்படுத்துதல்.
14.
குடியேற்றம்: ஓர் இடத்தில் குடியிருக்கும் மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குடியேற்றம் ஆகும். இறப்பு மற்றும் குடியேற்றம் காரணமாக குடியேற்றங்களில் மக்கள் தொகை குறையும்.
குடியிறக்கம்: குடியிறக்கம் என்பது ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பிடத்தை அமைத்துக் கொள்வது குடி இறக்கம் ஆகும். பிறப்பு மற்றும் குடி இறக்கம் காரணமாக மக்கள் தொகை அதிகரிக்கிறது.
15.
1. சிங்கப்பூர் - 20%
2. சவுதி அரேபியா - 16%
3. ஐக்கிய அரபு எமிரேட் - 18%
4. ஐக்கிய அமெரிக்க நாடுகள் - 13%
16.
வான்வழி புகைப்படம்: வான்வழி புகைப்படம் எடுத்தல் என்பது குறைந்த உயரத்தில் பறக்கும் பறவைகள், பலூன்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும் ட்ரோன்களில் படக் கருவிகள் பொருத்தப்பட்டு எடுக்கப்பட்ட புகைப் படங்களின் மூலம் இடங்கள் அல்லது பொருள்கள் அல்லது நிகழ்வுகள் பற்றிய தகவலை அறியும் முறையைக் குறிக்கிறது. வான்வழி புகைப்படங்கள் ஒரு நிலையான உயரத்திலிருந்து 10 - 30 வினாடிகள் கால இடைவெளியில் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு படத்திற்கும் முந்தைய படத்துடன் சிறிது மேற் பொருத்திய பகுதி இருக்கும். இணைந்த பகுதிகளை நீக்கி அனைத்து புகைப்படங்களின் இணை தோற்றம் செய்வதன் மூலம் ஆய்வு பகுதியக முப்பரிமாண படத்தைத் தயாரிக்க முடியும்.
17.
1. சர்வாதிகரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை நமக்கு இருக்காது. ஏனென்றால் சர்வாதிகாரி என்பவர் சகல அதிகாரங்கள் கொண்டுள்ளவராக இருப்பார்.
2. அத்தகைய நாட்டில் பொதுமக்களின் கருத்துக்கு எந்தவித முக்கியத்துவம் இருக்காது. அவர்களின் கருத்து மதிக்கப்படாது.
18.
சுண்ணாம்பு பாறையில் கால்சியம் கார்பனேட் அதிக அளவில் உள்ளது. அது நீரில் கரையக்கூடியது. ஆகவே கால்சியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து விடுகிறது.
19.
1. நாகரிகங்கள் உருவான அனைத்துப் பகுதிகளிலும் பண்டமாற்று முறை செல்வாக்குப் பெற்றிருந்தது.
2. ஒரே நாகரிகத்திற்குள் மட்டுமல்லாமல் வேறு நாகரிகங்களுக்கிடையிலும் பண்டமாற்று முறையில் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.
3. இவ்வாறு பொருள்களைப் பண்டமாற்றம் செய்வதில், பண்டமாற்றுப் பொருள்களின் அளவு மற்றும் மதிப்பைக் கணக்கிடுவதில் பிரச்சனைகள் உருவாகின.
4. இப்பிரச்சனைகளுக்கு விடை காண பண்டங்களை மாற்றிக் கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது.
5. இந்த உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம் எனலாம்.
20.
உயிர்க்கோளம் (Biosphere) புவியின் நான்காவது கோளமாகும். புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள இக்கோளம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும். இக்கோளம் பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிக்கோளத்தை உள்ளடக்கியதாகும். இது தாவர இனங்கள், விலங்கினங்கள் போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.
21.
(i) ஹன் பேரரசு மீண்டும் ஒருமுறை பட்டு வணிக வழித்தடத்தை வணிகத்திற்காக திறந்துவிட்டது. பெருமளவிலான ஏற்றுமதிப் பண்டங்கள், முக்கியமாகப் பட்டு, ரோமப் பேரரசை சென்றடைந்தன.
(ii) வடபகுதியில் பண்பாட்டில் பின் தங்கிய ஆட்சியாளர்களின் கைவினைஞர்களும், கால்நடை மேய்ப்பர்களும் குதிரைகளுக்கான காப்புக்கவசம், சேணம், குதிரையில் பயணிப்போர் பாதங்களை வைத்துக் கொள்வதற்கான அங்கவடி, போன்ற புதிய நுட்பங்களையும், பாலங்கள் கட்டுதல். மலைப்பகுதிகளில் சாலைகள் அமைத்தல், கடற்பயணம் செய்தல் ஆகியவற்றிற்கான தொழில் நுட்பங்களால் ஹன் பேரரசு பரப்பளவிலும் செல்வச் செழிப்பிலும் ரோமுக்கு நிகராக நின்றது.
22.
வெப்பநிலை என்பது ஒரு பொருளின் வெப்பத்தின் அளவு ஆகும். இது ஃபாரன்ஹீட் மற்றும் செல்சியஸ் போன்ற அலகினால் அளக்கப்படுகிறது.
23.
(i) முதன் முதலாக, சங்க காலத்தில் தான் செலாவணிக்குரிய பொருளாக நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன.
(ii) சேர, சோழ, பாண்டிய அரசர்களின் நாணயங்கள், முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள், ரோமானிய நாணயங்கள் ஆகியவை சங்க காலம் குறித்து அறிந்து கொள்ள உதவும் மற்றொரு வகையான சான்று ஆகும்.
(iii) சில சமயம் மதிப்புயர் செல்வமாகவும் நாணயங்கள் பாதுகாக்கப்பட்டன.
(iv) மேலும் பலவற்றை உருக்கி அவர்கள் அணிகலன்களும் செய்திருக்கலாம்.
24.
i.எகிப்தியர், கட்டடக் கலையிலும் பல்வேறு கலை வண்ணங்களிலும் சிறப்பு உடையவர்கள்.
ii. எகிப்தில் காணப்படும் எண்ணற்ற சிற்பங்கள், ஓவியங்கள், படைப்புகள், எகிப்தியர்களின் கலை ஆற்றலுக்கு சான்றாகும்.
பிரமிடு:
i.பாரோக்களின் சமாதிகளாகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னங்கள் பிரமிடுகள் ஆகும்.
ii.கெய்ரோவிற்கு அருகில் உள்ள பிரமிடுகள், கிஸா பிரமிடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
ஸ்பிங்க்ஸ்:
i.உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்று ஸ்பிங்க்ஸ்
ii.இவற்றின் பிரம்மாண்டமான சிலை சிங்க உடலும் மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக்கல் படிமம்.
25.
இன்றைய நவீன வாழ்விற்கான அடித்தளம் தொல்பழங்காலத்தில் இடப்பட்டு,நமது முன்னோர்களின் அறிவாற்றலால் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டதாகும். தொல்பழங்கால மக்கள் உருவாக்கிய செய்பொருட்கள், மொழிகள் ஆகியவற்றின் வழியாக அவர்கள் மிகவும் அறிவார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது .
எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் புலனாற்றல்களால் அறிவையும்,புரிதலையும் பெறும் மனதின் செயல்பாடு அறிவாற்றல் என்று சொல்லப்படுகிறது. இது மனிதர்களின் சிந்தனை வளர்ச்சியுடன் தொடர்புடையது.
26.
ஓட்டுனர்:
அதிவேகம், கண்மூடித்தனமாக வாகனத்தை இயக்குதல். சாலை விதிகளை மீறல், போக்குவரத்துக் குறியீடுகளைப் புரிந்து கொள்ளத் தவறுதல், களைப்பு மற்றும் மது அருந்துவது.
பாதசாரிகள்:
கவனக் குறைவு. கல்வியறிவின்மை, தவறான இடங்களில் சாலையைக் கடப்பது.
பயணிகள்:
கரம், சிரம், புறம் நீட்டுவது, ஓட்டுநரிடம் பேசுவது, தவறான வழியில் வாகனத்தில் ஏறுவது, இறங்குவது. படியில் பயணம் செய்வது. ஓடுகிற வண்டியில் ஏறுவது.
வாகனங்கள்:
வாகனம் கட்டுப்பாட்டை இழப்பது, டயர் வெடிப்பது, குறைவான வெளிச்சம், அதிக சுமை ஏற்றுவது.
சாலையின் நிலை:
குழிகள். சேதமடைந்த சாலை, ஊரக சாலையும் நெடுஞ்சாலையும் இணையும் இடத்தில் உள்ள அரிக்கப்பட்ட சாலை, சட்டத்துக்குப் புறம்பான வேகத் தடைகள்.
வானிலை:
மூடுபனி,பனி,கனமழை, புயல், ஆலங்கட்டி மழை போன்றவை சாலை விபத்துக்கான முக்கியமான காரணிகள் ஆகும்.
27.
1. நில நடுக்கம், கடலுக்கடியில் ஏற்படும் நிலச்சரிவு. எரிமலை வெடிப்பு மற்றும் குறுங்கோள்கள் போன்றவற்றால் ஏற்படும் தொடர் பெருங்கடல்களின் அலைகளே ஆழிப்பேரலையாகும்.
2. ஆழிப்பேரலையானது 10 - 30 மீட்டர் உயரத்தில் மணிக்கு சுமார் 700 800 கி.மீ.வேகத்தில் செல்லக்கூடியது.
3. இது வெள்ளப் பெருக்கை உண்டாக்கி உயிர்ச்சேதத்தையம் பொருட்சேதத்தையும் ஏற்படுத்துகிறது.
28.
ஆப்பிரிக்கா காலனியாதல் :
(i) பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் பகுதிவரை சகாராவிற்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் வெளியுலகத்தினரால் அறியப்படாமலே இருந்தன.
(ii) ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளும் ஆய்ந்தறியப்படாமலே இருந்தன.
(iii) 1875க்குப் பின்னர், ஐரோப்பியரின் ஊடுருவலும் குடியேற்றங்களை நிறுவுதலும் பெருமளவில் நடைபெறத் தொடங்கியது.
(iv) 1884-85இல் நடைபெற்ற பெர்லின் குடியேற்ற நாட்டு மாநாட்டில் ஆப்பிரிக்காவைப் பல ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிப்பதென முடிவு மேற்கொள்ளப்பட்டது.
(v) இவ்வாறு முக்கியமான ஐரோப்பிய நாடுகளிடையே போர் ஏற்படாமல் ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனிகளை ஏற்படுத்துவது சுமுகமாக நடைபெற்றது.
(vi) 1881க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்து, கைப்பற்றிக் காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமானது ஆப்பிரிக்காவைப் பங்கிடுதல் அல்லது ஆப்பிரிக்கப் போட்டி என அழைக்கப்படுகிறது.
(vii) 1884-85இல் நடைபெற்ற பெர்லின் மாநாடு, காங்கோ மாநாடு அல்லது மேற்கு ஆப்பிரிக்க மாநாடு எனவும் அறியப்படுகிறது.
(viii) மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நதி வடிநிலத்துடன் தொடாபுடைய பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காகவே இம்மாநாடு கூடியது.
கனத்து
(ix) காங்கோ நதியின் வடிநிலத்தைக் கட்டுப்படுத்த தனக்குள்ள உரிமை குறித்து விவாதிப்பதற்காகப் போர்த்துகல் கூட்டிய இம்மாநாட்டில் போர்த்துகலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
(x) பெர்லின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பொதுச் சட்டம் காங்கோ நதியின் வடிநிலம் பொதுவானதெனவும் அங்கு வணிக கப்பல்களைச் செலுத்துவதற்கான உரிமை அனைத்து நாடுகளுக்கு உண்டு எனவும் பிரகடனப்படுத்தியது.
29.
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சிக்கான காரணங்கள் :
i) இங்கிலாந்தைச் சேர்ந்த சாமுவேல் சிலேட்டர் 10வயதில் இருந்து ஜவுளி ஆலைகளில் பணியாற்றி ஒரு ஆலையை நிர்வகிக்கும் அளவுக்கு அனுபவம் பெற்றிருந்தார்.
(ii) அமெரிக்கர்கள் புதிய தொழில்நுட்பங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றவுடன் இவர் 1789-ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டவிரோதமாக குடியேறினார்.
(iii) ரோட்ஸ் தீவின் புகழ்பெற்ற தொழிலதிபர் மோசஸ் பிரௌனிடம் வேலைக்கு சேர்ந்து கொண்டதும் அவரது ஆலை 1793இல் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
(iv) இது அமெரிக்க நாடுகளில் நீராற்றலின் மூலம் இயங்கிய முதல் ஜவுளி ஆலை ஆகும்.
(v) 1800 வாக்கில், சிலேட்டரின் துணி ஆலையினைக் கண்டு மேலும் பலர் துணி ஆலைகள் தொடங்கி வளமடைந்தனர்.
(vi) அமெரிக்க அதிபர் ஆண்ட்ரு ஜாக்சன், சிலேட்டரை “அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை’ என்று புகழ்ந்தார்.
(vii) ராபர்ட் ஃபுல்டன் என்பவர் ஹட்சன் நதியில் நீராவிப் படகு போக்குவரத்தை தொடங்கினார்.
(viii) சாமுவேல் மோர்ஸ் தந்தியைக் கண்டுபிடித்ததும், எலியாஸ் ஹோவே தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
(ix) 1869-ல் கண்டங்களை இணைக்கும் முதல் ரயில்பாதை அமைக்கப்பட்டது.
(x) இரயில் போக்குவரத்து மக்கள், சரக்கு மற்றும் மூலப்பொருட்களை எடுத்து செல்வதற்கு பயன்பட்டது.
(xi) தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்விளக்கு (1879) அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் தொலைபேசி கண்டுபிடித்தார் (1888). இப்புதிய கண்டுபிடிப்புகள், போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் அமைத்தல் போன்றவை அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சிக்கு அடிகோலியது.
30.
(i) 1774இல் குடியேற்ற நாடுகளின் படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையேற்றார்.
(ii) குடியேற்றவாதிகள் விடுதலைப் பெறுவதற்காகப் போரை தொடங்கவில்லை. வரிவிதிப்பும், வணிகத்தின் மீதான கட்டுப்பாடுகளும் ஆங்கிலேயரின் உரிமைக்கு எதிராக அவர்கள் செயல்பட்டனர்.
(iii) "பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை” என்பதே அவர்களின் புகழ்பெற்ற போர் முழக்கமாக இருந்தது.
(iv) பாஸ்டைன் துறைமுக நிகழ்வுகளால் கலக்கமடைந்த இங்கிலாந்து அரசு 'சகிக்க முடியாத சட்டங்கள்' எனும் சட்டத்தை இயற்றியது.
(v) அதில் இச்சட்டத்தை மீறும் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு இங்கிலாந்து கொண்டு செல்லப்படுவர் என கூறப்பட்டிருந்தது.
(vi) 1774ஆம் ஆண்டு மே மாதம் வெர்ஜீனியா சட்டமன்றத்தில் தாமஸ் ஜெபர்சன் 1774ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் உண்ணாவிரதம் மற்றும் வழிபாட்டுத் தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தார்.
(vii) இதற்கு எதிர்வினையாக ஆளுநர் சட்டமன்றத்தை கலைத்தார்.
(viii) அதன் பின்பு உறுப்பினர்கள் கண்டங்களின் மாநாடு நடத்துவதற்கு தீர்மானம் போடப்பட்டது. - மற்ற குடியேற்ற உறுப்பினர்களும் இவர்களுடன் இணைந்தனர்.
(ix) 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் முதல் கண்டங்களின் மாநாடு பிலடெல்பியாவில் கூடியது.
(x) குடியேற்றங்களின் பிரதிநிதிகள் தீர்மானங்களின் மீது வாக்களிக்க மாநாடு ஒப்புக்கொண்டது. அதன் சகிக்க முடியாத சட்டம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(xi) கண்டங்களின் மாநாடு அமெரிக்க மக்களின் உரிமை பிரகடனத்தை ஏற்றது.
31.
சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலை
கைவினைக் கலைகள்:
(i) கைவினைத் தயாரிப்புகளும், மிக நுண்ணிய வேலைப்பாடுடைய தொல்பொருள்களும் நகர வாழ்வின் முக்கியமான அடையாளங்களாகும்.
(ii) சங்க காலத்தில் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் இருந்தனர்.
(iii) பொருள் உற்பத்தி செய்யும் அமைப்புகள் தொழிற் கூடங்கள் ஆகும்.
மட்கலங்கள் செய்தல்:
(i) மட்கலங்கள் செய்வது பரவலாக எல்லா இடங்களிலும் காணப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வுக்குப் பலவிதமான மட்கலங்கள் தேவையாக இருந்தன.
(ii) கரியநிறத்தவை, செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டவை, கருப்பு சிவப்பு நிறத்தவை என்று பலவிதமான மட்கலங்கள் தயாரிக்கப்பட்டன.
இரும்பு உருக்குத் தொழில்:
(i) இரும்பைக் கொண்டு கருவிகள் செய்வதும் முக்கியமான தொழிலாக இருந்திருக்கிறது.
(ii) இரும்பை உருக்கும் உலைகளும் இருந்தன. அகழாய்வு மேற்கொண்ட பல இடங்களில் கொல்லுலைகள், உருக்கு உலைகள் ஆகியன இருந்த தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
(iii) இரும்பில் கருவிகள் செய்தோர் குறித்து சங்க இலக்கியத்திற்கும் குறிப்புகள் உள்ளன.
iv) உழுகருவிகளும், வாள், ஈட்டி கத்தி போன்ற படைக்கருவிகளும் தயாரிக்கப்பட்டன.
கல்லில் செய்த அணிகலன்கள்:
(i) சங்க காலத்து மக்கள் பலவிதமான அணிகலன்களை அணிந்து தங்களை அழகுபடுத்திக் கொண்டனர்.
(ii) எளிய மக்கள் பூக்களையும் இலை தழைகளையும் சூடிக் கொண்டதுடன், சுட்ட களிமண், உலோகம் ஆகியவற்றிலும் அணிகலன்கள் செய்து அணிந்தனர்.
(iii) செல்வர்கள் செம்பு, தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்த நகைகளில் நவமணிகளையும் பதித்து அழகுபடுத்தி அணிந்தனர்.
தங்க ஆபரணங்கள்:
(i) ரோமானியர்களின் நாணயங்களைக் கொண்டும் நகைகள் செய்யப்பட்டன.
(ii) கேரளத்தின் பட்டணத்தில் பொன்னை உருக்கும் உலை இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
கண்ணாடி மணிகள்:
(i) கண்ணாடி மணிகள் செய்யும் முறையை அக்கால மக்கள் அறிந்திருந்தனர்.
(ii) சிலிக்கா மற்றும் பிற பொருள்களை உலையிலிட்டு உருக்கி நீண்ட சிறிய குழல்களாக்கிப் பின்னர் அவற்றைச் சிறுசிறு மணிகளாக நறுக்கினர்.
(iii) கண்ணாடி மணிகள் பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டன.
முத்துக்குளித்தலும் சங்க வளையல்களும்:
(i) கீழடி அகழாய்வின் போது ஒரு முத்து கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ii) சங்குகளை அரிந்து வளையல் செய்யும் தொழிலும் சங்க காலத்தில் சிறப்புற்றிருந்தது.
(iii) பாம்பன் கடல் பகுதிகளில் சங்குகளைச் சேகரித்தனர். கைவினைக் கலைஞர்கள் அவற்றை அழகுற அறுத்து எழிலான வளையல்களைச் செய்தனர்.
(iv) பெண்கள் சங்கு வளையல்கள் அணிந்திருந்தது குறித்துச் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.
துணி நெசவு:
(i) துணி நெசவு இன்னொரு முக்கியத் தொழிலாகும். நூல் நூற்கும் கதிர்களும் துண்டுத் துணிகளும் கொடுமணலில் கிடைத்திருக்கின்றன.
(ii) கலிங்கம் மற்றும் பிற வகைத் துணிவகைகள் குறித்து இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.
(iii) பருத்தியிலிருந்து நூலை எடுப்பதற்கு நூல் நூற்கும் கதிர் பயன்படுகிறது.
32.
| S.No | அடிப்படை உரிமைகள் | வாழ்க்கை அனுபவம் (சொந்த அனுபவத்தை எழுதவும்) |
| 1. | சமத்துவ உரிமை | நான் வாழும் இடத்தில் முழு பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறேன். |
| 2. | சுதந்திர உரிமை | நான் மதுரையில் பிறந்தேன். இப்பொழுது சேலத்தில் வசிக்கிறேன். |
| 3. | சுரண்டனுக்கு எதிரான உரிமை | சிற்றுண்டி சாலை நடத்தும் ஒருவர் எங்கள் குடும்ப நண்பர். அவர் 14 வயது உடைய பையனுக்கோ பெண்ணுக்கோ வேலை கொடுத்தால் நான் சண்டையிடுவேன். |
| 4. | சமயம் மற்றும் மதத்ச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை |
நாங்கள் எல்லோரும் இந்து மதத்தை சார்ந்தவர்கள். ஆனாலும் நாங்கள் புனித ஆலயம், குருத்துவார் ஆகிய இடங்களுக்குச் செல்கிறோம். |
| 5. | சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமை | நான் இப்பொழுது ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறேன். வெளிநாட்டிற்கு சென்று பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று கனவோடும் இலட்சியத்தோடும் உள்ளேன். |
| 6. | அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை | எதிர்காலத்தில் நான் எனது தங்கை யாழினிக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன். |
33.
மறுமலர்ச்சி:
(i) மறுமலர்ச்சி என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Renaissance என்பது மறுபிறப்பு எனப்பொருள்படும். இத்தாலியச் சொல்லான Renascita என்பதிலிருந்து தோன்றியது.
(ii) மறுமலர்ச்சி என்று இது அழைக்கப்படுவதற்குக் காரணம், கிரேக்க, இலத்தீன் செவ்வியல் இலக்கியத்தில் ஒரு மறுபிறப்பு அல்லது புத்தாக்கம் நிலவியதாகும்.
மதச் சீர்த்திருத்தம் :
(i) இடைக் காலங்களில் ரோமன் கத்தோலிக்க திருச்சபை ஒரு வலிமை நிறைந்த நிறுவனமாயிருந்தது.
ஆன்மிக ரீதியாகவும், உலகியல் ரீதியாகவும் திருச்சபை அதிகாரங்களை அனுபவித்துக்
கொண்டிருந்தது.
(ii) திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர். அவருடைய அப்பதவி பபாசி (Papacy) என்று அறியப்பட்டிருந்தது. அவர் ஓர் இளவரசரைப் போன்ற ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.
(iii) அவருடைய அதிகாரிகளுள் பலர் ஊழல் நிறைந்தவர்களாக இருந்தனர்; திருச்சபையின் பதவிகள் ஒவ்வொன்றும் விலைகூறி விற்கப்பட்டன.
(iv) அதோடு மட்டுமின்றி மக்கள் தங்களின் பாவங்களுக்காக மனம் வருந்தி, பாவமன்னிப்புக் கோருவார்களெனில் அவர்கள் பாவச்சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டு சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் என்றும் மக்களை நம்பச் செய்திருந்தது.
(v) மதச்சீர்திருத்தக்காரர்கள், திருச்சபையின் ஊழல் மிக்க நடைமுறைகளைக் கடுமையாகக் கண்டித்து பிரசுரங்களை விநியோகித்தனர்; புத்தகங்களையும் பதிப்பித்தனர்.
புவியியல் சார் கண்டுபிடிப்புகள்:
(i) புதிய நிலப்பரப்புகள், புதிய கடல்வழிப் பாதைகளின் கண்டுபிடிப்புகளின் விளைவாக ஐரோப்பாவின் பொருளாதார மையம் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய இரு அரசுகளுக்கு இடம் பெயர்ந்தது.
(ii) பதினான்காம் நூற்றாண்டில், தாலமியின் 'ஜியாகரபி' (புவியியல்) என்ற நூலின் ஒரு பிரதி, பைஸாண்டியன் பேரரசிலிருந்து மேற்குலகுக்குக் கொண்டுவரப்பட்ட போது ஓர் புத்தார்வம் ஏற்பட்டது.
34.
(i) கி.பி. (பொ.ஆ.பி) 1526 ஆம் ஆண்டு பானிபட் போரில் இப்ராஹிம் லோடியை வெற்றி கொண்டு பாபர் மொகலாயப் பேரரசை நிறுவினார்.
(ii) முதல் ஆறு மொகலாயப் பேரரசர்கள் "மாபெரும் மொகலாயர்கள்" எனக் குறிப்பிடப்படுகின்றனர்.
(iii) அவர்களில் கடைசி மாபெரும் மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப் ஆவார்.
(iv) அக்பர் நாடுகளைக் கைப்பற்றியதன் மூலம், ராஜஸ்தானத்து சமயம் சார்ந்த அரசுகளோடு நல்லுறவைப் பேணியதின் மூலமும் தனது பேரரசை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தினார்.
(v) ஔரங்கசீப்பிற்குப் பின் மொகலாயப் பேரரசு பலவாறாகப் பிரிந்திருந்தாலும், அதனை கி.பி (பொ.ஆ) 1857 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
(vi) மகாராஷ்டிராவில் 17 ஆம் நூற்றாண்டில் ஒரு அதிகாரமையம் எழுச்சி பெற்றது. சிவாஜியின் தலைமையில் மாரத்தியர்கள் மேற்கு இந்தியப் பகுதிகளில் மொகலாயரின் அதிகாரத்தைப் பெருமளவில் மதிப்பிழக்கச் செய்தனர்.
(vii) மொகலாயப் பேரரசு அதன் உச்சியில் இருந்த போது இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது.
(viii) கேரளத்தின் தென் மேற்குப் பகுதி, தென் தமிழகப் பகுதிகள் மட்டுமே மொகலாயரின் நேரடி ஆட்சிக்கு உட்படாத பகுதிகளாக இருந்தன.
35.
மரபு சாரா வளங்களைப் பயன்படுத்துதல்:
1. இந்தியா மின்சார தேவைகளைப் பூர்த்தி செய்ய அனல் மின்சாரம் மற்றும் புனல் மின்சார நிலையங்களைச் சார்ந்திருக்கிறது.
2. இந்த இரண்டு உற்பத்தி நிலையங்களும் பாதகமான சுற்றுச்சூழல் தாக்கத்தைக் கொண்டுள்ளன.
3. அனல் மின் நிலையங்கள் கார்பன் - டை ஆக்சைடை அதிக அளவு வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.
சூரிய சக்தி:
1. சூரிய சக்தி என்பது சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதாகும்.
2. சூரிய ஒளி தகடுகள் சூரிய ஒளியினை மின் சக்தியாக மாற்ற சூரிய ஒளியை வேதி வினைக்கு உட்படுத்தி ஆற்றலாக மாற்றுகிறது.
3. சூரிய மின்தகடு அமைப்பின் மூலம், வீடு மற்றும் அலுவலகத்திற்கு தேவையான மின்சாரம் தயாரிக்க முடியும்.
4. இவை மின் செலவைக் குறைப்பதற்காக நிறுவப்படுகின்றன.
5. தமிழ்நாடு அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலமாக உள்ளது.
6. இந்தியாவின் சூரிய சக்தி மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
36.
1. அரசின்கொள்கையில் செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் குறிப்பிட்ட நலன்களைப் பெற செயல்படும் நலக்குழுக்கள் அழுத்தக் குழுக்கள் எனப்படும்.
2. இவை எந்த அரசியல் கட்சியுடனும் அணி சேருவதில்லை.
3. மறைமுக முடிவுகள் எடுப்பதில் அதிக செல்வாக்குச் செலுத்தும் அளவுக்கு ஆற்றல் மிக்கவை.
4. மனுக்கள். பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயல்பாடுகள் மூலம் மக்களின் ஆதரவைத் திரட்டி தங்கள் செல்வாக்கினை விரிவுபடுத்துகின்றன.
5. அரசு கொள்கைகள் மீது கருத்துகள் வெளியிடுவது மற்றும் உயர்நிலைக் கல்வியாளர்கள்.
6. அறிவியலாளர்களிடமிருந்து கருத்துக்களைத் திரட்டி வல்லுநர்களின் ஆதரவைப் பெறுகின்றன.
7. அரசுக்குத் தகவல் அளிப்பதிலும் ஆலோசனைகளை வழங்குவதிலும் இந்த அழுத்தக் குழுவினர் வலுவான பங்களிப்புச் செய்து வருகின்றனர்.
8. கொள்கை உருவாக்கச் செயல் முறைகளிலும் அவர்கள் தொடர்ந்து ஆலோசனை தருகின்றனர்.
37.
(அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து காற்று குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்குழல் வடிவத்தில் குவியும் காற்று ஆறாவளி (Cyclone) என்று அழைக்கப்படுகிறது.
(1) புவியின் கழற்சியினால் சூராவாணி வட அரைகோளத்தில் கடிகாரச்சுற்றுக்கு எதிர்த்திசையிலும், தென் அரைகோளத்தில் கடிகாரத்திசையிலும் வீசுகிறது. குறாவளிகள் மூன்று வகைப்படும். அவைகள். வெப்பச்சூறாவளிகள் மிதவெப்பச்சூறாவர்கள் கூடுதல்வெப்பர்சூறாவளிகள்
அ) வெப்பச்சூறாவளிகள்!
(1) வெப்பச் சூறாவளிகள் வெப்ப மண்டலங்களுக்கு இடையேயான காற்றை ஒருமுகப்படுத்தும்
Laari (Inter Tropical Cimvangenee Zones(ITCZ) Rzadkien.
(I) இவை நிலமும் நீரும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால் உருவாகின்றன.
(1) இலை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ராவளிகள் (Cyclone) என்றும், மேற்கு பரிபிர்பெருங்கடலில் ஸ்டபூன்கள் |Typom) என்றும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லெண்டிக் பெருங்கடல் பகுதிகளில் ஹரிக்கேன்கள் Hurricaner) என்றும், பிலிப்பைன்ஸ் பகுதிகளில் பேசியுஸ் (Ragnion) என்றும், ஆஸ்திரேலியாவில் வில்லிவில்லி (Wity Wily) என்றும் அழைக்கப்படுகிறது.
(v) வெப்ப ாவளிகள் கடலோரப் பகுதிகளில் அதிகமான உயிர்ச்சேதங்களையும். பொருளாதாரச் சேதங்களையும் ஏற்படுத்திய பின்னர் நிலப்பகுதியைச் சென்றடையும்
ஆ) மிதவெப்பக்சூராவளிகள்
(1) 35 முதல் 65" வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிகொற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உருவாகின்றன.
மித வெப்பச் சூறாவளிகள் வெப்பச் சூறாவளிகள் போல நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காது
(iii) இச்ாவளிகள் பொதுவாக வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் இச்சூறாவளிகள் ரஷ்யா மற்றும் இந்தியப் பகுதி வரை புரவி வீசுகின்றன. இந்தியாவை அடையும் இக்காற்று மேற்கத்திய இடையூறு காற்று (Wism Disturbance என்று அழைக்கப்படுகிறது.
இ) கூடுதல்வெப்பக்சூராவளிகள்:
அடுநல் வெப்பர் சூறாவளிகள் என்பது 30 முதல் 60 வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப் பகுதிகளில் வீசுகின்றன. இது 'மைய அட்ச சூறாவளிகr (Late Cyc என்றும் அழைக்கப்படுகின்றன
(II) இச்சூறாவளிகள் தன் ஆற்றலை உயர் அட்சங்களின் வெப்ப மாற்றங்களிலிருந்து பெறுகின்றன. இது லேசான சாரல்மழை (Mil முதல் பெருங்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழைப்பொழிலையும் (Harry hall) இடியுடன் கூடிய மழைப்பொழிலையும் பனிப்பொழிலையும் ) மற்றும் சுழல் காற்றுகளையும்(Tomatoes) அளிக்கின்றன
38.
தத்துவமும், இலக்கியமும்:
(i) லாவோ ட் சு கன்பூசியஸ், மென்சியஸ், மோ டி தாவோ சின் போன்ற தத்துவ ஞானிகளும்,சீனக் கவிஞர்களும் நாகரிகத்திற்கு ஏராளமாகப் பங்களித்துள்ளார்கள்.
(ii) இராணுவ உத்தியாளரான சன் ட்டி 'போர்க் கலை' என்ற நூலை எழுதினார்.
(iii) 'தி ஸ்பிரிங் அண்ட் ஆட்டோம் அனல்ஸ்' (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்) நூல் அதிகாரபூர்வ சீன அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
(iv) மஞ்சள் பேரரசரின் 'கேன்ன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்) எ நூல் சீனாவின் பழமையான மருத்துவ நூலாகக் கருதப்படுகிறது. அது ஹான் வம்ச காலத் முறைப்படுத்தப்பட்டது.
(v) லாவோட்சு கி.மு.(பொ.ஆ.மு. 604 -52) சௌ அரசின் தலைமை ஆவணக் காப்பாள இருந்தார். இவர்தான் தாவோயிசத்தைத் தோற்றுவித்தார். 'ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கு மூலகாரணம்' என்று இவர் வாதிட்டார்.
(vi) கன்பூசியஸ் கி.மு. பொ.ஆ.மு 551 -497) ஒரு புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி, அவர் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. அவர் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை சீர்திருத்துவதை வலியுறுத்தினார்.
(vii) மென்சியஸ் மு. முபா. ஆமு - 372 -289) மற்றொரு புகழ்பெற்ற சீன தத்துவஞானியாவார். அவர் சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்.
39.
40.
1. சொத்து வரி
2. தொழில் வரி
3. வீட்டு வரி
4. குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
5. நில வரி
6. கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்
41.
1. சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தின் மூலம் அனைவருக்கும் சமபாதுகாப்பு என்பதே சமத்துவ உரிமையாகும்.
2. ஆனால் நடைமுறை சமுதாயத்தில் பெண்களுக்கு பாலின அடிப்படையில் வேறுபடுத்தலும், ஒதுக்குதலும், பாலியல் வன்கொடுமைகளும் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படுகின்றன.
3. எனவே பெண்கள் உரிமைகளில் சமத்துவம். கண்ணியம் மற்றும் பாகுபாடுகளில் இருந்து சுதந்திரம் பெற்றிடவும். உரிமைகளை உறுதிப்படுத்திடவும் பல்வேறு தனிச்சட்டங்கள் பெண்களுக்கென நடைமுறைப்படுத்தப்படுவது நியாயமே ஆகும்.
42.
பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள்:
1. முதன்மைத் துறை,
2. இரண்டாம் துறை,
3. சார்புத்துறை ஆகியன.
43.
1. மேம்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட துறையின் அல்லது ஒரு குறிப்பிட்ட நபரின் வளர்ச்சியைக் குறிக்கிறது.
2. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பதே அதன் பொருளாதார மேம்பாடு என்று அறியப்படுகிறது.
3. உயர்ந்த வருவாய், தரமான கல்வி, நல்ல உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை,நிலைத்த சமவாய்ப்பு போன்றவை வாழ்க்கைத் தரத்தில் மேம்பாட்டைக் குறிக்கின்றன.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards