9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/11/2019
HIS - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
எத்தியோப்பியா இத்தாலியை ____________ தோற்கடித்தது.
அடோவா
டஹோமி
டோங்கிங்
டிரான்ஸ்வால்
2.
______ பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கபட்டதானது பெருமளவிலான ஆங்கிலேய சுரங்கத் தொழில் செய்வோர் ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேற வழி வகுத்தது.
டிரான்ஸ்வால்
ஆரஞ்சு சுதந்திர நாடு
கேப் காலனி
ரொடீஷியா
3.
இந்தோ-சீனாவில் _____ மட்டுமே பிரான்சின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்.
ஆனம்
டோங்கிங்
கம்போடியா
கொச்சின் - சீனா
4.
1896 இல் _______ நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மலாய் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்டது.
நான்கு
ஐந்து
மூன்று
ஆறு
5.
பிரான்ஸிஸ் லைட் ______ பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
நறுமணத் தீவுகள்
ஜாவா தீவு
பினாங்குத் தீவு
மலாக்கா
6.
தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளில் _______ வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலில் இருந்தனர்.
7.
ஆங்கிலேயரின் முக்கிய வருவாயாக திகழ்ந்தது __________ ஆகும்.
8.
வங்காளம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகளின் ஜமீன்தார்களோடு மேற்கொள்ளப்பட்ட தீர்வு______ என்றழைக்கப்படுகிறது.
9.
_____ மாநாடு ஆப்பிரிக்காவை ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்வது எனத் தீர்மானித்தது.
10.
போ தெய்
11.
வங்காளப் பஞ்சம்
12.
சிசல் ரோடெஸ்
13.
மெனிலிக்
14.
லியோபோல்டு
15.
i) 1640இல் பிரெஞ்சுக்காரர்கள் ஜாவாவையும் சுமத்ராவையும் கைபப்பற்றினர்.
ii) மலாக்காவைக் கைபற்றியதின் மூலம் ஆங்கிலக் குடியேற்றங்களைக் கைபப்பற்றும் பணியை டச்சுக்காரர் தொடங்கினர்.
iii) காங்கோ ஆற்றின் வடிநிலத் தீரத்தோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளையும் பேசித் தீர்ப்பதற்காகவே பெர்லின் மாநாடு கூடியது.
iv) சுல்தான் ஜான்ஜிபாரின் பகுதிகள் பிரான்சு மற்றும் ஜெர்மனியின் செல்வாக்கு மண்டலங்கங்களாகப் பிரிக்கப்பட்டன.
அ) i ) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) iii) சரி
ஈ) iv) சரி
16.
i) 19ஆம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டுப் பகுதிவரை சகாராவுக்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கா வெளியுலகுக்கு தெரியாமல் இருந்தது.
ii) 1864ஆம் ஆண்டில் கோல்டு கோஸ்டில் அமைந்துள்ள கடற்கரைப் பகுதி நாடுகள் இங்கிலாந்தின் காலனிகளாயின.
iii) 500 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஸ்பெயின் பிலிப்பைன்ஸை ஆட்சி செய்தது.
iv) ஒடிசா பஞ்சம் 78 - 1876 இல் நடைபெற்றது.
அ) i) சரி
ஆ) ii) சரி
இ) ii) மற்றும் iii) சரி
ஈ) iv) சரி
17.
கூற்று: பெர்லின் மாநாடு இராண்டாம் லியோபோல்டை சுதந்திர காங்கோ நாட்டில் ஆட்சி செய்ய அனுமதி வழங்கியது.
காரணம்: பெல்ஜியம் அரசர் இரண்டாம் லியோபோல்டு காங்கோவின் மீது அக்கறை கொண்டிருந்தார்.
அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
18.
கூற்று: சென்னை மகாணத்தில் 1876-1878 ஆண்டுகளில் நிலவிய பஞ்சத்திற்கு முன்னர் பெரும் வறட்சி நிலவியது.
காரணம்: காலனியரசு உணவுதானிய வணிகத்தில் தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
19.
தாயகக் கட்டணங்கங்கள் (Home Charges) பற்றி விளக்கவும்.
20.
கர்னல் பென்னிகுயிக்.
21.
இந்தியப் பொருளாதாரம் காலனிமயமாக்கப்பட்டதின் மூன்று கட்டங்களைக் கூறுக.
22.
காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம் - இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவும்.
23.
ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் ஏற்ப்பட்டதை விவரி.
24.
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கத்தை விவாதிக்கவும்.
1.
(a)
அடோவா
2.
(a)
டிரான்ஸ்வால்
3.
(d)
கொச்சின் - சீனா
4.
(a)
நான்கு
5.
(c)
பினாங்குத் தீவு
6.
( )
நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்
7.
( )
நிலவரி
8.
( )
நிரந்தர நிலவரித்திட்டம்
9.
( )
பெர்லின் குடியேற்ற நாட்டு
10.
வியட்நாம்
11.
1770
12.
கேப் காலணி
13.
எத்தியோப்பியா
14.
பெல்ஜியம்
15.
இ) iii) சரி
16.
அ) i) சரி
17.
அ) கூற்றும் காரணமும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
18.
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
19.
தாயகக் கட்டணம் (Home Charges) என்ற பெயரில் கிழக்கிந்தியக் கம்பெனியின் பங்குதாரர்களுக்குச் சேர வேண்டிய லாபத்தில் பங்கு, வாங்கிய கடனின் மீதான வட்டி, ஊதியத்திலிருந்து பெறப்பட்ட சேமிப்பு, அதிகாரிகளுக்கான ஓய்வூதியம், லண்டனில் உள்ள இந்திய அலுவலகத்திற்கான செலவுகள் இந்தியாவிற்கு வரும் அல்லது இந்தியாவிலிருந்து செல்லும் ஆங்கிலப் படைகளுக்கான போக்குவரத்துச் செலவு எனும் பெயரில் கம்பெனி பெருமளவுப் பணத்தை ஆண்டுதோறும் இங்கிலாந்திற்கு அனுப்பிவைத்தது. இதற்கு தாயகக் கட்டணங்கள் என்று பெயர்.
20.
கர்னல் பென்னி குயிக்:
(i) பென்னிகுயிக் ஓர் இராணுவப் பொறியாளரும், குடிமைப் பணியாளரும், சென்னை மாகாணச சட்டமன்ற மேலவை உறுப்பினரும் ஆவார்.
(ii) மேற்கு நோக்கி ஓடும் பெரியார் ஆற்றின் நீரை ஓர் அணையைக் கட்டி கிழக்கு நோக்கித் திருப்பினால் வைகை ஆற்றைச் சார்ந்திருக்கும் இலட்சக்கணக்கான புன்செய் நிலங்களைப் பாசன வசதி கொண்டவையாக மாற்ற முடியும் என அவர் முடிவு செய்தார்.
(iii) ஆங்கிலேய அரசிடமிருந்து போதுமான அளவுக்கு நிதியைப் பெற முடியாத நிலையில் பென்னிகுயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று, அப்பணத்தைக் கொண்டு அணையைக் கட்டி முடித்தார்.
(iv) அணை கட்டும் பணிகள் 1895-ல் முடிவுற்றன. பெரியார் அணையிலிருந்து கிடைக்கும் நீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது.
21.
இந்தியாவைக் காலனி நாடாக்கிய செயல்பாட்டை மூன்று கட்டங்களாகப் பிரித்துப் பார்க்கலாம்.
(i)முதற்கட்டம் : வாணிக முதலாளித்துவம்.
(ii) இரண்டாம் கட்டம் : தொழில்துறை முதலாளித்துவம்.
(iii) மூன்றாம் கட்டம் : நிதி மூலதன முதலாளித்துவம்.
22.
| S.No | காலனியாதிக்கம் | ஏகாதிபத்தியம் |
| 1. | காலனி என்னும் சொல் 'கலோனஸ்’ என்னும் லத்தீன் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் 'விவசாயி' என்பதாகும். |
இம்பீரியம் என்னும் லத்தீன் சொல்லிலிருந்து பிறந்தது. ஆதிக்கம் செய்தல் என்று பொருள். |
| 2. | காலனியாதிக்கம் என்பது மக்களை ஒரு புதிய இடத்தில் குடியேற்றுவது. குடியேறியவர்கள் நிரந்தரமாக தங்கி வாழ்வர். அங்கேயே |
ஒரு நாடு குடியேறுதல் மூலமாகவோ, இறையாண்மை செலுத்துதல் மூலமாகவோ, மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் வழிகளிலோ வேறொரு நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவதைக் குறிக்கும். |
23.
ஆப்பிரிக்கா காலனியாதல் :
(i) பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிக் கால் பகுதிவரை சகாராவிற்குத் தெற்கேயிருந்த ஆப்பிரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் வெளியுலகத்தினரால் அறியப்படாமலே இருந்தன.
(ii) ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளும் ஆய்ந்தறியப்படாமலே இருந்தன.
(iii) 1875க்குப் பின்னர், ஐரோப்பியரின் ஊடுருவலும் குடியேற்றங்களை நிறுவுதலும் பெருமளவில் நடைபெறத் தொடங்கியது.
(iv) 1884-85இல் நடைபெற்ற பெர்லின் குடியேற்ற நாட்டு மாநாட்டில் ஆப்பிரிக்காவைப் பல ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிப்பதென முடிவு மேற்கொள்ளப்பட்டது.
(v) இவ்வாறு முக்கியமான ஐரோப்பிய நாடுகளிடையே போர் ஏற்படாமல் ஆப்பிரிக்காவில் ஐரோப்பிய காலனிகளை ஏற்படுத்துவது சுமுகமாக நடைபெற்றது.
(vi) 1881க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய சக்திகள் ஆப்பிரிக்காவின் மீது படையெடுத்து, கைப்பற்றிக் காலனிகளை ஏற்படுத்திய ஏகாதிபத்திய சகாப்தமானது ஆப்பிரிக்காவைப் பங்கிடுதல் அல்லது ஆப்பிரிக்கப் போட்டி என அழைக்கப்படுகிறது.
(vii) 1884-85இல் நடைபெற்ற பெர்லின் மாநாடு, காங்கோ மாநாடு அல்லது மேற்கு ஆப்பிரிக்க மாநாடு எனவும் அறியப்படுகிறது.
(viii) மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நதி வடிநிலத்துடன் தொடாபுடைய பிரச்சனைகளையும் தீர்ப்பதற்காகவே இம்மாநாடு கூடியது.
கனத்து
(ix) காங்கோ நதியின் வடிநிலத்தைக் கட்டுப்படுத்த தனக்குள்ள உரிமை குறித்து விவாதிப்பதற்காகப் போர்த்துகல் கூட்டிய இம்மாநாட்டில் போர்த்துகலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
(x) பெர்லின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பொதுச் சட்டம் காங்கோ நதியின் வடிநிலம் பொதுவானதெனவும் அங்கு வணிக கப்பல்களைச் செலுத்துவதற்கான உரிமை அனைத்து நாடுகளுக்கு உண்டு எனவும் பிரகடனப்படுத்தியது.
24.
ஆங்கிலேய ஆட்சியின் பொருளாதாரத் தாக்கம் :
(i) கவர்னர் ஜெனரல் காரன்வாலிஸ் இங்கிலாந்தில் ஒரு பெரிய நிலப்பிரபு ஆவார்.
(ii) இந்தியாவிலும் நிலப்பிரபுக்களை உருவாக்க அவர் திட்டமிட்டார்.
(iii) இடைத்தரகர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வந்த காரன்வாலிஸ் அவர்களை நிலப்பிரபுக்களைப்போல் நடத்தினார்.
(iv) ஜமீன்தார்கள் என்ற பெயரில் நிலப்பிரபுக்கள் உருவாக்கப்பட்டனர்.
(v) நிலங்களுக்கு உரிமையாளர்களாக மாறிய இவர்கள் தங்கள் சொத்துக்களை மற்றவர்களுக்கு விற்கவும், வாரிசாக நிலங்களைப் பெறவும் உரிமை பெற்றனர்.
(vi) விவசாயிகள் வெறும் குத்தகைதாரர்களாக மாற்றப்பட்டனர்.
(vii) கம்பெனி அரசு ஜமீன்தார்களுடன் நேரடித்தொடர்பு வைத்துக்கொண்டு குத்தகைதாரர்களுடன் தங்கள் விருப்பம் போல் நடந்துகொள்ள ஜமீன்தார்களுக்கு முழு சுதந்திரம் அளித்தது.
(viii) வங்காளம், பீகார், ஒடிசா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜமீன்தார்களுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தீர்வு நிரந்தர நிலவரித்திட்டம் என அழைக்கப்பட்டது.
(ix) ரயத்துவாரி முறை என்பது தென்னிந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வித்தியாசமான நிலவருவாய் வரி முறையாகும்.
(x) இம்முறையின்படி விவசாயி நிலத்தின் உரிமையாளர் ஆவார், அவரே வரி செலுத்துவார்.
(xi) நிலவரியை ஒரு விவசாயி முறையாகச் செலுத்தும்வரை நிலம் அவருக்குச் சொந்தமானதாக இருக்கும். நிலவரி செலுத்தத் தவறினால் அவர் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவார். மேலும் அவருக்குச் சொந்தமான கால்நடைகளையும் ஏனைய உடைமைகளையும் அரசு பறிமுதல் செய்து கொள்ளலாம்.
xii) நிலத்தில் தனிச்சொத்துரிமை எனும் கோட்பாட்டை ரயத்துவாரிமுறை அறிமுகம் செய்தது, தனிநபருக்குச் சொந்தமான நிலங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டன. தனது நிலங்களை விற்கவும், அடகு வைக்கவும், குத்தகைக்கு விடவும், நிலத்தின் மீதான தனது உரிமையை வேறொருவருக்கு வழங்கவும் விவசாயி உரிமை பெற்றிருந்தார்.
xiii) ஆங்கில அரசு வேளாண்மையை வணிகமயமாக்கும் கொள்கையைப் பின்பற்றியது.
xiv) விவசாயி தன்னுடைய வேளாண் விளைபொருள்களை விற்பனை செய்ய பன்னாட்டுச் சந்தையின் விலை நிலவரங்களைச் சார்ந்திருக்க வேண்டி இருந்தது. வேளாண் பொருள்களுக்கான தேவை வீழ்ச்சியுற்றபோது விவசாயிகள் துயரங்களுக்கு உள்ளாயினர்.
ஆப்பிரிக்காவில் காலனி அசிங்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards