9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/11/2019
தொழிற்புரட்சி
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தபட்டது?
கற்கரி
கரி
விறகு
காகிதம்
2.
எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கொட்டைகளைப் பிரித்தது
உருட்டாலைகள்
பஞ்சுக் கடைசல் இயந்திரம்
ஸ்பின்னிங் மியூல்
இயந்திர நூற்புக் கருவி
3.
பிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் யார்?
லூயி ரெனால்ட்
அர்மான் பியூ காட்
தாமஸ் ஆல்வா எடிசன்
மெக் ஆடம்
4.
எங்கு ஜோஸ் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?
இங்கிலாந்து
ஜெர்மனி
பிரான்ஸ்
அமெரிக்கா
5.
கீழ்க் காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது?
சுதந்திர தினம்
உழவர் தினம்
உழைப்பாளர் தினம்
தியாகிகள் தினம்
6.
சிலேட்டரை அமெரிக்க தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?
எப்.டி. ரூஸ்வெல்ட்
ஆண்ட்ரூ ஜேக்சன்
வின்ஸ்டன் சர்ச்சில்
உட்ரோ வில்சன்
7.
நீராவி இயந்திரத்தை பிரான்சில் அறிமுகம் செய்த குடும்பம் எது?
டி வெண்டெல்
டி ஹிண்டல்
டி ஆர்மன்
டி ரினால்ட்
8.
தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
எலியாஸ் ஹோவே
எலி- விட்னி
சாமுவேல் கிராம்டன்
ஹம்ப்ரி டேவி
9.
மான்செஸ்டர் நகரம் ஏன் ஜவுளி உற்பத்திக்கு உகந்த இடமாகப் கருதப்பட்டது?
நிலம் கிடைக்கப் பெற்றமை
மிகுந்த மனித வளம்
நல்ல வாழ்க்கைச் சூழல்
குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை
10.
நீராவி படகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்?
ஆர்க்ரைட்
சாமுவேல் கிராம்ப்டன்
ராபர்ட் ஃபுல்டன்
ஜேம்ஸ் வாட்
11.
ஜெர்மனியில் முதல் இருப்புப்பாதை ______ ஆண்டில் இயக்கபட்டது.
12.
விஞ்ஞான சோசலிஸத்தை முன்வைத்தவர் ______ ஆவார்.
13.
விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை ________ கண்டுபிடித்தார்.
14.
________ உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கபடும் முறையை மாற்றியமைத்தது.
15.
_______ இங்கிலாந்தில் ஆடவர்க்கு வாக்குரிமை கோரியது.
16.
கூற்று: சிலேட்டர் அமெரிக்கத்தொழிற்புரட்சியின் தந்தை என அழைக்கபடுகிறார்
காரணம்: அவருடைய நூற்பாலையின் நகலாகப் பல நூற்பாலைகள் உருவாயின. அவருடைடைய தொழில்நுட்பம் பிரபலமானது.
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று தவறு, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
17.
தொழிற்புரட்சியின் இரு முக்கிய விளைவுகளைக் கோடிட்டுக் காட்டுக.
18.
ஹே மார்க்கெட் படுகொலை பற்றிக் குறிப்பு வரைக.
19.
தொழிற்புரட்சியின் போது இங்கிலாந்தில் தொழிலார்களின் வாழ்விடங்களில் நிலை எவ்வாறு இருந்தன?
20.
இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் யாவை?
21.
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.
22.
நிலக்கரி வயல்
23.
மாபெரும் ரயில்வே ஊழியர் போராட்டம்
24.
நான்கு சக்கர வாகனம்
25.
பாதுகாப்பு விளக்கு
26.
பென்ஸ்
1.
(b)
கரி
2.
(b)
பஞ்சுக் கடைசல் இயந்திரம்
3.
(b)
அர்மான் பியூ காட்
4.
(b)
ஜெர்மனி
5.
(c)
உழைப்பாளர் தினம்
6.
(b)
ஆண்ட்ரூ ஜேக்சன்
7.
(a)
டி வெண்டெல்
8.
(a)
எலியாஸ் ஹோவே
9.
(d)
குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை
10.
(c)
ராபர்ட் ஃபுல்டன்
11.
( )
1835 ஆம்
12.
( )
கார்ல் மார்க்ஸ்
13.
( )
ஹென்றி பெஸ்ஸிமர்
14.
( )
ஜான் லவுடன் மெக்ஆடாமல் வடிவமைக்கப்பட்ட சாலை அமைக்கும் முறை
15.
( )
சாசன இயக்கம்
16.
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
17.
தொழிற்புரட்சியினால் மனிதன் இயந்திரங்களுக்கு அடிமையானான்.
(ii) ஆலைத் தொழிலாளிகள் இரக்கமின்றி முதலாளிகளால் சுரண்டப்பட்டனர்.
(iii) பெண்களும், சிறுவர்களும் குறைவான ஊதியத்தில் மற்றும் பாதுகாப்பில்லாத, அபாயகரமான இயந்திரங்களுக்கு அருகேயும் பணிபுரிய வேண்டியிருந்தது.
(iv) வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு தீவிர பிரச்சனையாய் இருந்தது.
18.
சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் 1886 மே மாதம் 4 ஆம் தேதி ஒரு தொழிலாளர் ஆர்ப்பாட்டம் நடந்தது.நாளொன்றுக்கு எட்டு மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து அமைதியாகத் தொடங்கிய இக்கூட்டத்தில் காவல்துறை பல சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரைக் கொன்றது.ஹேமார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மே 1ஆம் நாள் இன்றளவும் சர்வதேச தொழிலாளர் நாளாகக் (மே தினம்) கடைபிடிக்கப்படுகிறது.
19.
தொழிலாளர்கள் மிகவும் சிறிய, அழுக்கடைந்த, சுகாதாரமற்ற வீடுகளில் வாழ்ந்தனர். தொழிலாளர்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்தவோ மாற்றவோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை. இதனால் டைஃபாயிடு, காலரா, பெரியம்மை போன்ற நோய்கள் பரவின.
20.
இங்கிலாந்து தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்ட விளைவுகள் :
(i)18ம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியில் இங்கிலாந்தில் குவிக்கப்பட்ட இந்தியப் பருத்தி இழைத் துணிகளுக்கும் பட்டு ஆடைகளுக்கும் தடைவிதித்தும் இங்கிலாந்தில் சட்டம் இயற்றப்பட்டது.
(ii) நூற்பு நெசவுத் தொழில் ஆகியன இங்கிலாந்தில் பெரும் வளர்ச்சியடைந்தன.
(iii) வங்கத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் மற்றும் அவர்களின் ஏஜெண்டு கரங்களில் சிக்கிப் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர்.
(iv) உற்பத்திப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு போக்குவரத்து தீர்வை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்.
(v) இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் வணிகப் பயிர்களை மட்டும் சாகுபடி செய்ய வற்புறுத்தினர். மேலும் இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி ஆடைகளை இந்தியச் சந்தைகளில் குவித்தனர்.
(vi) கைத்தறியில் நெய்யப்பட்ட பருத்தி ஆடைகளுக்கான சந்தை இழப்பால் இந்தியா பண்டைய உற்பத்தித் துறையில் வகித்து வந்திருந்த இடத்தை இழந்துவிட்டது.
(vii) இந்திய நாடு மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியது.
(viii) 19ம் நூற்றாண்டில் முதல் கால் பகுதியில் டாக்கா மஸ்லின் துணி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வது நிறுத்தப்பட்டது.
(ix) பிரிட்டன் துணி ஆலைகளில் உற்பத்தியான துணிகள் இந்தியச் சந்தைகளில் குறைவான விலைக்கு விற்கப்பட்டது.
(x) எனவே இந்திய நெசவாளர்கள் வேலையற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியற்றவர்கள் ஆயினர்.
21.
அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சிக்கான காரணங்கள் :
i) இங்கிலாந்தைச் சேர்ந்த சாமுவேல் சிலேட்டர் 10வயதில் இருந்து ஜவுளி ஆலைகளில் பணியாற்றி ஒரு ஆலையை நிர்வகிக்கும் அளவுக்கு அனுபவம் பெற்றிருந்தார்.
(ii) அமெரிக்கர்கள் புதிய தொழில்நுட்பங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றவுடன் இவர் 1789-ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டவிரோதமாக குடியேறினார்.
(iii) ரோட்ஸ் தீவின் புகழ்பெற்ற தொழிலதிபர் மோசஸ் பிரௌனிடம் வேலைக்கு சேர்ந்து கொண்டதும் அவரது ஆலை 1793இல் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
(iv) இது அமெரிக்க நாடுகளில் நீராற்றலின் மூலம் இயங்கிய முதல் ஜவுளி ஆலை ஆகும்.
(v) 1800 வாக்கில், சிலேட்டரின் துணி ஆலையினைக் கண்டு மேலும் பலர் துணி ஆலைகள் தொடங்கி வளமடைந்தனர்.
(vi) அமெரிக்க அதிபர் ஆண்ட்ரு ஜாக்சன், சிலேட்டரை “அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை’ என்று புகழ்ந்தார்.
(vii) ராபர்ட் ஃபுல்டன் என்பவர் ஹட்சன் நதியில் நீராவிப் படகு போக்குவரத்தை தொடங்கினார்.
(viii) சாமுவேல் மோர்ஸ் தந்தியைக் கண்டுபிடித்ததும், எலியாஸ் ஹோவே தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
(ix) 1869-ல் கண்டங்களை இணைக்கும் முதல் ரயில்பாதை அமைக்கப்பட்டது.
(x) இரயில் போக்குவரத்து மக்கள், சரக்கு மற்றும் மூலப்பொருட்களை எடுத்து செல்வதற்கு பயன்பட்டது.
(xi) தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்விளக்கு (1879) அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் தொலைபேசி கண்டுபிடித்தார் (1888). இப்புதிய கண்டுபிடிப்புகள், போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் அமைத்தல் போன்றவை அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சிக்கு அடிகோலியது.
22.
லங்காஷையர்
23.
அமெரிக்கா
24.
லூயி ரெனால்ட்
25.
ஹம்பரி டேவி
26.
ஜெர்மனி
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards