9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/09/2019
பாறைக்கோளம் – I புவி அகச்செயல்முறைகள்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
எரிமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்
எரிமலை வாய்
துவாரம்
பாறைக்குழம்புத் தேக்கம்
எரிமலைக் கூம்பு
2.
புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _____________ எனப்படும்
மடிப்பு
பிளவு
மலை
புவி அதிர்வு
3.
ஆழிப்பேரலைகள் என்றால் என்ன?
4.
மண்கோளம் என்றால் என்ன?
5.
தீப்பாறைகளை முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
6.
புவி மேலோடு, கவசத்தின் மீது மிதக்கின்றது.
7.
கவச எரிமலை மற்றும் கும்மட்ட எரிமலை
8.
விலகும் எல்லை மற்றும் இணையும் எல்லை
9.
எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தைப் பொறுத்து அதன் வகைகளை விவரி
10.
உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
அ). பசிபிக் நெருப்பு வளையம்
ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேனும் இரண்டு)
இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு
1.
(a)
எரிமலை வாய்
2.
(b)
பிளவு
3.
ஆழிப்பேரலைகள் : சுனாமி என்பது துறைமுக அலைகளைக் குறிக்கும் ஜப்பானியச் சொல்லாகும். கடலடியில் தோன்றும் புவிஅதிர்ச்சி, எரிமலைச் செயல்பாடு மற்றும் கடலோரப் பகுதிகளில் நடைபெறும் மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஆகியவற்றால் கடலில் பெரிய அலைகள் உருவாகின்றன. இவ்வலைகள் சராசரியாக மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இவ்வலைகளின் நீளம் 600 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். இந்த அலைகள் கடற்கரையை அடையும்போது 15 மீ உயரம் வரை உயர்ந்து காணப்படும். இவை கடற்கரையோரப் பகுதியில் அதிகமான சேதத்தை ஏற்படுத்தும்.
4.
பாறைக்கோளத்தின் ஒரு பகுதி மண்கோளம் ஆகும். இது மண் மற்றும் தூசுகளால் ஆனது. பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வாயுக் கோளம் மற்றும் உயிர்க்கோளம் சந்திக்குமிடத்தில் மண்கோளம் காணப்படுகிறது.
5.
தீப்பாறைகளை முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் மற்ற பாறைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இப்பாறைகளில் இருந்தே உருவாகின்றன.
6.
நாம் வாழும் புவியின் மேலடுக்கு புவிமேலோடு ஆகும். புவிமேலோடு திடமாகவும், இறுக்கமாகவும் உள்ளது. புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம். கவசத்தின் மேற்பகுதியில் திடமாகவும், கீழ்ப்பகுதியில் உருகிய நிலையிலும் காணப்படுகின்றன. எனவே புவிமேலோடு கவசத்தின் மீது மிதக்கின்றது.
7.
| கவச எரிமலை | கும்மட்ட எரிமலை |
| அதிக பிசுபிசுப்புடன் கூடிய பாறைக்குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தோடி கேடயம் போன்ற வடிவத்தில் மென் சரிவுடன் காணப்படும். | சிலிகா அதிகமுள்ள எரிமலை குழம்பு அதிகப் பிசுபிசுப்புடன் வெளியேறும். நீண்ட தூரத்திற்கு பரவ முடியாமல் எரிமலை வாய்க்கு அருகிலேயே வட்ட வடிவத்தில் படிந்து சிறு குன்று போலக் காணப்படும். |
| எ.கா. - மௌனலோவா எரிமலை - ஹவாய்த் தீவு | எ.கா. - பாரிக் கியூட்டன் எரிமலை - மெக்சிகோ |
8.
| விலகும் எல்லை | இணையும் எல்லை |
| புவித்தட்டுகள் ஒன்றை விட்டு ஒன்று விலகும் போது மேக்மா எனப்படும் பாறைக்குழம்பு புவிக் கவசத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. | புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது சில நேரங்களில் கீழ்நோக்கு சொருகுதல் நிகழ்வு நடைபெறும். இப்பகுதியை புவித்தட்டுகள் அமிழ்தல் மண்டலம் என்கிறோம். |
9.
எரிமலை செயல்படும் / வெடிக்கும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை,
அ) செயல்படும் எரிமலை (Active Volcano )
ஆ உறங்கும் எரிமலை ( Dormant Volcano )
இ தணிந்த / செயலிழந்த எரிமலை ( Extinct Volcano )
அ) செயல்படும் எரிமலை:
நிரந்தரமாக தொடர்ந்து எரிமலைக் குழம்புகளையும், துகள்களையும், வாயுக்களையும் வெளியேற்றிக் கொண்டே இருக்கும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் எனப்படுகின்றன (எ.கா) செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை - அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
ஆ) உறங்கும் எரிமலை:
(i) நீண்ட காலமாக எரிமலைச் செய்கைகள் ஏதும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் உறங்கும் எரிமலைகள் எனப்படும்.
(ii) இவை திடீரென்று வெடிக்கும் தன்மையுடையது.
(iii) இவ்வாறான எரிமலைகள் வெடிக்கும் பொழுது அதிகமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. (எ.கா.) ஃபியூஜி எரிமலை - ஜப்பான்.
இ) தணிந்த / செயலிழந்த எரிமலை:
எந்தவித எரிமலைச் செயல்பாடுகளுமின்றி காணப்படும் எரிமலைகள் தணிந்த / செயலிழந்த எரிமலைகள் ஆகும். (எ.கா.) கிளிமஞ்சாரோ எரிமலை - தான்சானியா.
10.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards