9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
மனிதனும் சுற்றுச் சூழலும்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
வளிமண்டலத்திலுள்ள பசுமைக் குடில் வாயுக்களால் படிப்படியாக அதிகரிக்கும் புவி வெப்பத்தை ____________ என்கிறறோம்.
அமிலமழை
வெப்ப மாசுறுதல்
புவி வெப்பமாதல்
காடுகளை அழித்தல்
2.
பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன ____________.
பாதி முடிக்கப்பட்ட பொருள்கள்
முடிக்கப்பட்ட பொருள்கள்
பொருளாதார பொருள்கள்
மூலப்பொருள்கள்
3.
விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்களிலிருந்து வெட்டி எடுப்பது ____________ஆகும்
மீன்பிடித்தல்
மரம் வெட்டுதல்
சுரங்கவியல்
விவசாயம்
4.
வாழும் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பாதிக்கக்கூடிய காரணிகள் மற்றும் அனைத்து வெளிப்புறச் செல்வாக்குகளை ________ என்கிறோம்.
சுற்றுச்சூழல்
சூழலமைப்பு
உயிர்க் காரணிகள்
உயிரற்றக் காரணிகள்
5.
பாக் வளைகுடாவை உள்ளூர் மக்களும், அரசாங்கமும் மீட்டெடுத்த வழிமுறைகளில் இரண்டை எழுதுக
6.
எப்பொழுதெல்லாம் மக்கள் தொகை வளர்ச்சி குறையும்?
7.
தள்ளு காரணிகள் மற்றும் ஈர்ப்புக் காரணிகள்.
8.
கிராமக் குடியிருப்பு வகைகளைப் படத்துடன் விளக்குக.
9.
மக்கள்தொகை பரவலைப் பாதிக்கும் காரணிகள் யாவை?
10.
கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் குறிக்கவும்.
1. ஐரோப்பாவின் அதிக மக்களடர்த்திப் பகுதி.
2. ஆஸ்திரேலியாவின் குறைந்த மக்களடர்த்தி கொண்ட பகுதிகள்.
3. பாக் வளைகுடா.
4. நீரியக்க விசை தொழில் நுட்பத்தைத் தடை செய்த நாடு.
5. இங்கிலாந்து – கொள்ளை நோயால் பாதிக்கப்பட்ட நாடு.
6. டென்மார் டென்மார்க் – மக்கள் தொகை கணக்கெடுப்பை முதன் முதலில் நடத்திய நாடு.
7. ஹாவாங்கோ ஆறு.
1.
(c)
புவி வெப்பமாதல்
2.
(b)
முடிக்கப்பட்ட பொருள்கள்
3.
(c)
சுரங்கவியல்
4.
(a)
சுற்றுச்சூழல்
5.
1. பாக் வளைகுடா பகுதியில் வளரும் தாவர இனங்களின் நாற்றுகள் நடப்பட்டு கவனமாக வளர்க்கப்படுகின்றன.
2. மன்னார் வளைகுடா பல்லுயிர்த் தொகுதியிலிருந்து முருகைப் பாறைகளைக் கொண்டுவந்து பாக் வளைகுடாவில் வளர்த்து இங்கு எஞ்சியிருக்கும் மாங்குரோவ் காடுகளையும் அதைச் சுற்றிய நிலப்பகுதிகளையும் பாதுகாத்து பயன்படுத்துகின்றனர்.
3. இங்கு வாழும் உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு வாழ்வாதாரத்திற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதால் அவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டும் சார்ந்திருக்காமல் பிற தொழில்கள் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தைப் பெறுகின்றனர்.
6.
பஞ்சம், நிலச்சரிவு. புவி அதிர்ச்சி. ஆழிப்பேரலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் மற்றும் மனிதனால் ஏற்படும் அழிவுகளான போர் போன்ற காரணங்களால் மக்கள் தொகை வளர்ச்சி குறைகின்றது.
7.
மக்களைப் புதிய வாழ்விடத்தை நோக்கி வலிந்து இடம் பெயரச் செய்யும் காரணிகள் தள்ளுக்காரணிகள் எனப்படும். ஈர்ப்பின் காரணமாக புதிய வாழ்விடத்தை நோக்கி மக்கள் இடம் பெயரச் செய்வன ஈர்க்கும் காரணிகள் ஆகும்.
8.
கிராமக் குடியிருப்புகள்:
முதன்மைத் தொழில்களான வேளாண்மை, வனத்தொழில், கனிமத் தொழில் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றை மேற்கொண்டிருக்கும் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகள் எனப்படுகிறது.
இவை நிலைத்த நிரந்தரக் குடியிருப்புகளாகும்.
இவைகளின் தனித்தன்மை அதைச் சுற்றியிருக்கும் பரந்த பசுமையும் மாசற்ற சுற்றுச் சூழலும் ஆகும்.
கிராமக் குடியிருப்பு வகைகள்:
1. செவ்வகவடிவக் குடியிருப்புகள்
2. நேர்கோட்டுக் குடியிருப்புகள்
3. வட்டவடிவ அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள்
4. நட்சத்திர வடிவக் குடியிருப்புகள்
5. முக்கோண வடிவக் குடியிருப்புகள்
6. T வடிவ. Y வடிவ, சிலுவை வடிவ (அ) குறுக்கு வடிவ குடியிருப்புகள்
7. மூலக்கரு வடிவக் குடியிருப்புகள்
1. செவ்வக வடிவக் குடியிருப்புகள்:
சம வெளிப் பகுதிகளிலும் , பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் காணப்படும் குடியிருப்புகள் செவ்வக வடிவக் குடியிருப்புகளாகும்.
இங்குச் சாலைகள் செவ்வக வடிவில் காணப்படுவதோடு ஒன்றையொன்று செங்கோணங்களில் வெட்டிச் வெல்லும்.
2. நேர்க்கோட்டு குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் சாலை, தொடர்வண்டிப்பாதை ,ஆற்றங்கரை மற்றும் அணைக்கட்டு ஓரங்களில் காணப்படுகின்றன.
3. வட்ட வடிவ குடியிருப்பு அல்லது அரைவட்ட வடிவ குடியிருப்புகள் :
இவ்வகையான குடியிருப்புகள் ஏரிகள் குளங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளைச் சுற்றி வட்டமாகவோ அல்லது அரைவட்டமாகவோ காணப்படுகின்றன .
4. நட்சத்திர வகை குடியிருப்புகள்:
நட்சத்திர வடிவ குடியிருப்புகள் கப்பியிடப்பட்ட அல்லது கப்பியிடப்படாத சாலை அமைப்புகளின் ஓரங்களில் காணப்படுகின்றன,
இவை நட்சத்திர வடிவத்தில் எல்லா திசைகளிலும் பரவிக் காணப்படும்.
5. முக்கோண வடிவக் குடியிருப்புகள் :
ஆறுகள் ஒன்றாக சேரும் இடங்களில் காணப்படும் குடியிருப்புகள் முக்கோண வடிவக் குடியிருப்புகளாகும்.
6. T வடிவ Y வடிவ சிலுவை வடிவ குறுக்கு வடிவக் குடியிருப்புகள் :
T வடிவ குடியிருப்புகள் மூன்று சாலைகள் சந்திக்கும் இடங்களில் வளர்ச்சியடையும்.
Y வடிவக் குடியிருப்புகள் இரண்டு சாலைகள் காணப்படுகிறது.
குறுக்கு வடிவக் குடியிருப்புகள் நான்கு சாலைகள் சந்திக்கும் இடங்களில் காணப்படுகின்றன.
7. முலக்கரு வடிவக் குடியிருப்புகள் :
இங்குச் சாலைகள் வட்ட வடிவமாகவும் ஒரு மையத்தில் முடிய கூடியதாகவும் இருக்கும்.
கிராமத்தின் குடியிருப்புகள் செல்வந்தரின் குடியிருப்பைச் சுற்றியோ ஆழ்ந்து மசூதி , கோவில் தேவாலயங்களைச் சுற்றியுள்ள அமைந்திருக்கும்.
9.
மக்கள் தொகைப் பரவல்:
புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்வாறு பரவிக் காணப்படுகிறார்கள் என்பதைப் பற்றி குறிப்பிடுவதே மக்கள் தொகைப் பரவலாகும்.
உலகின் எல்லா இடங்களிலும் மக்கள் தொகை சீராகப் பரவிக் காணப்படுவதில்லை.
காரணிகள்:
1. இயற்கை காரணிகள்
2. வரலாற்றுக் காரணிகள்'
3. பொருளாதாரக் காரணிகள்
இயற்கைக் காரணிகள்:
மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள். கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு ஆகியன மக்கள் தொகைப் பரவலுக்கான இயற்கைக் காரணிகளாகும்.
வரலாற்றுக் காரணிகள்:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள். போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியன மக்கள் தொகைப் பரவலுக்கான முக்கியமான வரலாற்றுக் காரணிகளாகும்.
பொருளாதாரக் காரணிகள்:
கல்விக் கூடங்கள். வேலை வாய்ப்புகள், உற்பத்தித் தொழிற்சாலைகள், ஆடம்பர வசதிகள். வியாபாரம், வணிகம் மற்றும் பிற வசதிகளும் ஓரிடத்தின் மக்கள் தொகைப் பரவலுக்கான பொருளாதாரக் காரணிகளாகும்.
10.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards