9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
_______________ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.
வெளியடுக்கு
அயன அடுக்கு
இடையடுக்கு
மீள் அடுக்கு
2.
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?
ஆங்கிலம்
தேவநாகரி
தமிழ்-பிராமி
கிரந்தம்
3.
சுமேரியரின் எழுத்துமுறை ______ ஆகும்
பிக்டோகிராபி
ஹைரோகிளிபிக்
சோனோகிராம்
க்யூனிபார்ம்
4.
எரிமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்
எரிமலை வாய்
துவாரம்
பாறைக்குழம்புத் தேக்கம்
எரிமலைக் கூம்பு
5.
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
கொரில்லா
சிம்பன்ஸி
உராங் உட்டான்
பெருங்குரங்கு
6.
________ துறையில் வேலைவாய்ப்புகள் நிலையான மற்றும் முறையானவை அல்ல
7.
இந்தியா ________ மக்களாட்சி முறையினைக் கொண்டுள்ள நாடாகும்.
8.
ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள ___________ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
9.
கோடரிகளும் பிளக்கும் கருவிகளும் ______________ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவி வகைகளாகும்
10.
சூறாவளிகளை வகைப்படுத்து.
11.
மழைப்பொழிவின் வகைகள் யாவை?
12.
வளிமண்டல அடுக்குகள் யாவை?
13.
மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக்கூறு.
14.
உயிரினச்சிதைவு என்றால் என்ன?
15.
சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.
16.
வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழக மக்களின் வாழ்வில் கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பு தருக.
17.
சரியான கூற்றைத் தேர்வு செய்க.
(அ) மகதத்தின் முதல் முக்கியமான அரசன் அஜாதசத்ரு
(ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.
(இ) வட இந்தியாவில் ஆட்சி செய்த சத்ரியர் அல்லாத அரச வம்சங்களில் முதலாமவர்கள் மெளரியர்களாகும்.
(ஈ) ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை உருவாக்க நந்தர் மேற்கொண்ட முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினர்.
18.
அ) சேரர்கள் காவிரிப்பகுதியை ஆட்சிசெய்தனர். அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.
ஆ) மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் அரசன் கரிகாலனைக் குறிப்பிடுகின்றன.
இ) தமிழ் பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.
ஈ) உப்பு விற்றவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர்; அவர்கள் வணிகத்துக்காக மாட்டு வண்டியில் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்தார்கள்.
19.
அ) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.
ஆ) க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் காவியத்துடன் தொடர்புடையவை.
இ) சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவங்களும், செம்பில் செய்யப்பட்ட நடனமாடும் பெண் உருவமும் எகிப்தியர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
ஈ) மெசபடோமியர்கள் சூரிய நாள்காட்டி முறையை வகுத்தார்கள்.
20.
அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள ’தகுதியுள்ளது தப்பிப் பிழைக் கும்’ என்ற கருத்து உதவுகிறது.
ஆ) 'உயிர்களின் தோற்றம் குறித்து' என்ற நூலை ஹெர்பர்ட் ஸ்பென்சர் பதிப்பித்தார்.
இ) உயிரியல் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வின் கோட்பாடு இயற்கைத்தேர்வு என்ற வழிமுறையுடன் தொடர்பு உடையது.
ஈ) கல் தொழில்நுட்பம் குறித்து ஆராய்வது நிலவியல் ஆகும்.
21.
வெப்பச்சூறாவளி மற்றும் மித வெப்பச் சூறாவளி
22.
கல்விழுது மற்றும் கல்முளை
23.
முதன்மை அலைகள் மற்றும் இரண்டாம் நிலை அலைகள்
24.
கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றைக் குறிக்கவும் (நில வரைபடப் புத்தக உதவியுடன்)
1. ஏதேனும் இரண்டு டெல்டாக்கள்.
2. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுண்ணாம்புப் பிரதேச பகுதி.
3. உலகில் காணப்படும் ஏதேனும் இரண்டு வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்களைக் குறிக்கவும்.
4. கண்டப்ப்டப்பனியாறு காணப்பப்படும் ஏதேனும் ஒரு பகுதி.
25.
சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலைகளும் எவ்வாறு பொருளாதாரத்தை மேம்படுத்தின?
26.
அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் யாவை?
27.
பொதுத் துறை
28.
பாகுபலி
29.
அரிக்கமேடு
30.
பாப்பிரஸ்
31.
செம்மணல் மேடுகள்
1.
(c)
இடையடுக்கு
2.
(c)
தமிழ்-பிராமி
3.
(d)
க்யூனிபார்ம்
4.
(a)
எரிமலை வாய்
5.
(b)
சிம்பன்ஸி
6.
( )
ஒழுங்கமைக்கப்படாத
7.
( )
மறைமுக
8.
( )
சுடுமண்ணாலான
9.
( )
கீழ் பழங்கற்கால
10.
1. சைக்ளோன் எனும் சொல் ஒரு கிரேக்க சொல்லாகும். இதற்கு சுருண்ட பாம்பு என்று பொருளாகும்.
2. அதிக அழுத்தமுள்ள பகுதியிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள பகுதிகளுக்கு சுழல் வடிவத்தில் குவியும் காற்று சூறாவளி என்று அழைக்கப்படுகிறது.
வகைகள்:
i) வெப்பச் சுறாவளிகள்
ii) மிதவெப்பச் சூறாவளிகள்
ili) கூடுதல் வெப்பச் சூறாவளிகள்
11.
(i) வெப்பச் சலன மழைப்பொழிவு (Conventional Rainfall)
(ii) சூறாவளி மழைப் பொழிவு(Cyclonic Rainfall (or) Front and Rain fall)
(iii) மலைத் தடுப்பு மழைப் பொழிவு Orographic Rainfall)
ஆகியன மழைபொழிவின் பல்வேறு வகைகள் ஆகும் .
12.
i) கீழடுக்கு
ii) மீள் அடுக்கு
iii) இடையடுக்கு
iv) வெப்ப அடுக்கு
v) வெளியடுக்கு
13.
மும்மணிகள் (திரி - ரத்னார் என்று அழைக்கப்படும். சமண மதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகள்
1.நன்னம்பிக்கை
2. நல்லறிவு
3. நன்னடத்தை
நன்னம்பிக்கை : மகாவீரரின் போதனைகளில், ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்
நல்லறிவு : கடவுள் இல்லை, உலகம் படைத்தவன் இன்றியே இயங்கி வருகிறது. அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்பது.
நன்னடத்தை : இது மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பதைக் குறிப்பது.
அவையாவன.
1. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தலாகாது.
2. நேர்மையுடன் இருப்பது
3.கருணை
4. உண்மையுடன் இருப்பது
5. பிறருடைய உடைமைகளுக்கு ஆசைப்படாமல் வாழ்வது.
14.
1. தாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்களின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது.மண்புழுக்களாலும், விலங்கினங்களாலும் (எலி மற்றும் முயல்) மற்றும் மனிதச் செயல்பாடுகளினாலும் பாறைகள் சிதைவுறுத்லை உயிரினச் சிதைவு எனப்படும்.
15.
உலக அதிசயங்களில் ஒன்றான சீனபெருஞ்சுவர் வடக்கிலிருந்து ( மங்கோலியர்களிடமிருந்து ) வரும் ஊடுருவல்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட மிகப்பெரும் முயற்சியாகும்.குவின் ஷி ஹீவாங் படையெடுப்புகளைத் தடுப்பதற்காக அதற்கு முன்னர் கட்டப்பட்டிருந்த ஏராளமான பழைய கோட்டைச் சுவர்களை இணைத்தார்.
16.
1.மக்கள் வேளாண்மையும் மேற்கொண்டார்கள், ஆடு, மாடுகளையும் வளர்த்தார்கள்.
2. அவர்கள் விலங்குகளைப் பழக்கி, அவற்றுக்கு உணவு கொடுத்து வளர்த்து, அவற்றையும்
விவசாயத்தில் ஈடுபடுத்தினார்கள்.
3. விலங்குகளை வளர்ப்பது மனிதர்களின் வாழ்வில் முக்கியமான பகுதி ஆனது. எருதுகள் உழுவதற்குப் பயன்படுத்தப்பட்டன.
4. எருதுகள் விவசாய வேலைகளை எளிதாக்கின. வேட்டையாடி வாழ்க்கையை நடத்தியதை விட, இந்த வாழ்க்கை எளிதாக இருந்தது.
5. விவசாயம் அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடியேறும்படி செய்தது.
17.
(ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.
18.
இ) தமிழ் பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.
19.
ஆ) க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் கவியத்துடன் தொடர்புடையவை.
20.
அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள ’தகுதியுள்ளது தப்பிப் பிழைக் கும்’ என்ற கருத்து உதவுகிறது.
21.
| வ.எண் | வெப்பச்சூறாவளி | மித வெப்பச் சூறாவளி |
|---|---|---|
| 1 | வெப்பச் சூறாவளிகள் வெப்ப மண்டலங்களுக்கு இடையேயான காற்றை / ஒருமுகப்படுத்தும் பகுதிகளில் (Inter Tropical | Convergence Zones(ITCZ) உருவாகின்றன. | 35° முதல் 65° வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிர்காற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உருவாகின்றன. |
| 2 | இவை நிலமும் நீரும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால் உருவாகின்றன | மித வெப்பச் சூறாவளிகள் வெப்பச் சூறாவளிகள் போல நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காது. |
| 3 | இவை இந்தியப் பெருங்கடல் பகுதியில் | சூறாவளிகள் (Cyclone) என்றும், மேற்கு பசிபிக்பெருங்கடலில் டைபூன்கள் (Typhoons) என்றும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் / ஹரிக்கேன்கள் (Hurricanes) என்றும் | பிலிப்பைன்ஸ் பகுதிகளில் பேக்யுஸ் (Baguios) என்றும், ஆஸ்திரேலியாவில் வில்லிவில்லி | (Wily Wily) என்றும் அழைக்கப்படுகிறது | இச்சூறாவளிகள் பொதுவாக வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி, வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் இச்சூறாவளிகள் ரஷ்யா மற்றும் இந்தியப்பகுதி வரை பரவி வீசுகின்றன. இந்தியாவை அடையும் இக்காற்று 'மேற்கத்திய இடையூறு காற்று (Western Disturbance) என்று அழைக்கப்படுகிறது. |
22.
| கல்விழுது | கல்முளை |
| இது நிலத்தடி நீர் படிவுகள் நிலத் தோற்றமாகும். | இது நிலத்தடி நீர் படிவ நிலத் தோற்றமாகும். |
| குகைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் நீராவியாகும் போது கால்சைட் விழுதுகள் போன்று காட்சியளிக்கும். இது கல்விழுது என்று அழைக்கப்படுகிறது . | கால்சியம் கார்பனேட் கலந்து நீர் தரையில் படிந்து மேல் நோக்கி வளர்வது கல்முளை எனப்படுகிறது. |
23.
| முதன்மை அலைகள் | இரண்டாம் அலைகள் |
| முதன்மை அலைகள் திட, திரவ, வாயுப் பொருட்கள் வழியாக பயணிக்கும். | இரண்டாம் நிலை அலைகள் திடப்பொருள்கள் வழியாக மட்டுமே பயணிக்கும். |
| இதன் சராசரி வேகம் வினாடிக்கு 5.3 கிலோ மீட்டர் முதல் 10.6 கிலோ மீட்டர் வரை வேறுபடும் | இதன் சராசரி வேகம் வினாடிக்கு 1 கிலோ மீட்டர் முதல் 8 கிலோ மீட்டர் வரை இருக்கும். |
| முதன்மை அலைகள் மற்ற அலைகளை விட வேகமாக பயணித்து புவி ஓட்டினை முதலில் அடைகின்றன. | இரண்டாம் நிலை அலைகள் பயணிக்கும் திசைக்குச் செங்குத்தாகப் புவியில் அசைவினை ஏற்படுத்தும். |
24.
25.
சங்க காலத்தில் தொழில்களும் கைவினைக் கலை
கைவினைக் கலைகள்:
(i) கைவினைத் தயாரிப்புகளும், மிக நுண்ணிய வேலைப்பாடுடைய தொல்பொருள்களும் நகர வாழ்வின் முக்கியமான அடையாளங்களாகும்.
(ii) சங்க காலத்தில் பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் இருந்தனர்.
(iii) பொருள் உற்பத்தி செய்யும் அமைப்புகள் தொழிற் கூடங்கள் ஆகும்.
மட்கலங்கள் செய்தல்:
(i) மட்கலங்கள் செய்வது பரவலாக எல்லா இடங்களிலும் காணப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வுக்குப் பலவிதமான மட்கலங்கள் தேவையாக இருந்தன.
(ii) கரியநிறத்தவை, செந்நிற வண்ணம் பூசிய வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டவை, கருப்பு சிவப்பு நிறத்தவை என்று பலவிதமான மட்கலங்கள் தயாரிக்கப்பட்டன.
இரும்பு உருக்குத் தொழில்:
(i) இரும்பைக் கொண்டு கருவிகள் செய்வதும் முக்கியமான தொழிலாக இருந்திருக்கிறது.
(ii) இரும்பை உருக்கும் உலைகளும் இருந்தன. அகழாய்வு மேற்கொண்ட பல இடங்களில் கொல்லுலைகள், உருக்கு உலைகள் ஆகியன இருந்த தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
(iii) இரும்பில் கருவிகள் செய்தோர் குறித்து சங்க இலக்கியத்திற்கும் குறிப்புகள் உள்ளன.
iv) உழுகருவிகளும், வாள், ஈட்டி கத்தி போன்ற படைக்கருவிகளும் தயாரிக்கப்பட்டன.
கல்லில் செய்த அணிகலன்கள்:
(i) சங்க காலத்து மக்கள் பலவிதமான அணிகலன்களை அணிந்து தங்களை அழகுபடுத்திக் கொண்டனர்.
(ii) எளிய மக்கள் பூக்களையும் இலை தழைகளையும் சூடிக் கொண்டதுடன், சுட்ட களிமண், உலோகம் ஆகியவற்றிலும் அணிகலன்கள் செய்து அணிந்தனர்.
(iii) செல்வர்கள் செம்பு, தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் செய்த நகைகளில் நவமணிகளையும் பதித்து அழகுபடுத்தி அணிந்தனர்.
தங்க ஆபரணங்கள்:
(i) ரோமானியர்களின் நாணயங்களைக் கொண்டும் நகைகள் செய்யப்பட்டன.
(ii) கேரளத்தின் பட்டணத்தில் பொன்னை உருக்கும் உலை இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
கண்ணாடி மணிகள்:
(i) கண்ணாடி மணிகள் செய்யும் முறையை அக்கால மக்கள் அறிந்திருந்தனர்.
(ii) சிலிக்கா மற்றும் பிற பொருள்களை உலையிலிட்டு உருக்கி நீண்ட சிறிய குழல்களாக்கிப் பின்னர் அவற்றைச் சிறுசிறு மணிகளாக நறுக்கினர்.
(iii) கண்ணாடி மணிகள் பல்வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்பட்டன.
முத்துக்குளித்தலும் சங்க வளையல்களும்:
(i) கீழடி அகழாய்வின் போது ஒரு முத்து கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ii) சங்குகளை அரிந்து வளையல் செய்யும் தொழிலும் சங்க காலத்தில் சிறப்புற்றிருந்தது.
(iii) பாம்பன் கடல் பகுதிகளில் சங்குகளைச் சேகரித்தனர். கைவினைக் கலைஞர்கள் அவற்றை அழகுற அறுத்து எழிலான வளையல்களைச் செய்தனர்.
(iv) பெண்கள் சங்கு வளையல்கள் அணிந்திருந்தது குறித்துச் சங்க இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன.
துணி நெசவு:
(i) துணி நெசவு இன்னொரு முக்கியத் தொழிலாகும். நூல் நூற்கும் கதிர்களும் துண்டுத் துணிகளும் கொடுமணலில் கிடைத்திருக்கின்றன.
(ii) கலிங்கம் மற்றும் பிற வகைத் துணிவகைகள் குறித்து இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.
(iii) பருத்தியிலிருந்து நூலை எடுப்பதற்கு நூல் நூற்கும் கதிர் பயன்படுகிறது.
26.
1. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் அரசியல் கட்சிகள் ஒரு பாலமாகச் செயல்படுகின்றன.
2. கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. பெரும்பாலான மக்களாட்சி நாடுகளில் நிறுத்தப்படும் வேட்பாளர்களிடையே தான் கடும் போட்டிகள் நிலவுகின்றன.
3. கட்சிகள் தங்களைத் தேர்ந்தெடுக்க அவர்களது கொள்கைகளையும். திட்டங்களையும் தேர்தல் தொகுதிகளில் முன்னிறுத்துகின்றன.
4. நாட்டில் சட்டங்கள் இயற்றுவதில் அரசியல் கட்சிகள் முக்கிய பங்களிப்பு செய்கின்றன.
5. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில சட்டமன்றங்களிலும் முறையாக விவாதிக்கப்பட்டு சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
6. அரசியல் கட்சிகள் அரசாங்கத்தினை அமைத்து, அவற்றை வழிநடத்துகின்றன.
7. தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் எதிர்க்கட்சியாக பங்களிப்பு செய்கின்றன.
8. எதிர்க்கட்சிகள் அரசின் குறைகள் மற்றும் தவறான கொள்கைகளை எதிர்த்து பல்வேறுபட்ட பார்வைகளை முன்வைத்து விமர்சனம் செய்கின்றன.
9. மக்கள் கருத்திற்கு அரசியல் கட்சிகள் வடிவம் கொடுக்கின்றன. மேலும் அவை முக்கிய நிகழ்வுகளை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றன.
27.
சேவை நோக்கம்
28.
மிக உயரமான சமணச் சிலை
29.
சங்க காலத் துறைமுகம்
30.
ஒரு வகைப் புல்
31.
தேரி
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards