9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 13/09/2019
புரட்சிகளின் காலம்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
தாமஸ் பெயின் எழுதிய புகழ்வாய்ந்த நூல் _______ ஆகும்
இயல்பறிவு
மனித உரிமைமைகள்
உரிமைமைகள் மசோதா
அடிமைத்தனத்தை ஒழித்தல்
2.
________ ஆம் ஆண்டில் பாரிஸ் உடன்படிக்கை்கையின்படி அமெரிக்க சுதந்திர அமைதி போர் முடிவுக்கு வந்தது.
1776
1779
1781
1783
3.
பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________
ஜெரோண்டியர்
ஜேக்கோபியர்
குடியேறிகள்
அரச விசுவாசிகள்
4.
ஆஸ்திரியா மற்றும் பிரஷ்யாவின் படைகள், பிரெஞ்சுப் புரட்சியாளர் படைகளால் ________போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டன.
வெர்ணா
வெர்செயில்ஸ்
பில்னிட்ஸ்
வால்மி
5.
அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி _______ ஆகும்.
நியூயார்க்
பிலடெல்பியா
ஜேம்ஸ்டவுன்
ஆம்ஸ்டெர்டாம்
6.
அமெரிக்கச் சுதந்திர தினம்
7.
ஏழாண்டுப் போர்
8.
மேரி அண்டாய்னெட்
9.
சட்டத்தின் சாரம்
10.
டர்கார்ட்
11.
ஜான் வின்திராப்
12.
1789 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிரெஞ்சுத் தத்துவஞானிகளின் பங்களிப்பின் விளக்கவும்.
13.
‘பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை.’ இக்கூற்று அமெரிக்க சுதந்திரப்போருக்கு எவ்வாறு வழிவகுத்தது என்பதை விளக்குக.
14.
பாஸ்டைல் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?
15.
பிரெஞ்சு புரட்சியின்போது விவசாயிகள் செலுத்த வேண்டிய வரிகள் யாவை?
16.
பியூரிட்டானியர் என்போர் யார்? அவர்கள் இங்கிலாந்தை விட்டு ஏன் வெளியேறினர்?
1.
(a)
இயல்பறிவு
2.
(d)
1783
3.
(a)
ஜெரோண்டியர்
4.
(d)
வால்மி
5.
(c)
ஜேம்ஸ்டவுன்
6.
ஜூலை 4
7.
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ்
8.
பதினாறாம் லூயி
9.
மான்டெஸ்கியூ
10.
பிரான்சின் நிதி அமைச்சர்
11.
மாசாசூசட்ஸ் குடியேற்றம்
12.
பிரெஞ்சு தத்துவஞானிகளின் பங்களிப்பு :
(i) பிரெஞ்சு தத்துவஞானிகளான வால்டேர், மாண்டெஸ்கியூ, ரூசோ ஆகியோர் பிரான்ஸின் நிலைமைகளை விமர்சித்தனர்.
(ii) வால்டேர் தனது எழுத்துக்களில் திருச்சபையை கடுமையாக விமர்சித்தார்.
(iii) கான்டீட் (Candide) வால்டேரின் புகழ்பெற்ற நூலாகும்.
(iv) அவருடைய புகழ்பெற்ற மேற்கோள்கள் "முட்டாள்தனமானவற்றை உன்னை நம்பச் செய்ய முடிந்தவர்களால் உன்னை அக்கிரமங்களைச் செய்ய வைக்க முடியும்
(v) வால்டேரின் சமகாலத்தவரும் மகத்தான எழுத்தாளருமான ஜூன் ஜேக்ஸ் ரூசோ ஆவார்.
(vi) அவருடைய அரசியல் கருத்துக்கள் மக்கள் புதிய முடிவுகள் எடுப்பதில் பெரும்பங்கு வகித்தது.
(vii) பிரெஞ்சுப் புரட்சிக்கு மக்களை தயார் செய்ததில் இவரின் முக்கிய பங்கு வகித்தது.
(viii) இவர் எழுதிய நூல் "சமூக ஒப்பந்தம்” (Social Contract) அதில் அவரின் புகழ்பெற்ற கூற்று "மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். ஆனால் எங்கும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுள்ளான்' என்பதாகும்.
(ix) மாண்டெஸ்கியூவில் 'பாரசீக மடல்கள்', 'சட்டத்தின் சாரம்' என்னும் நூல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
(x) இவர் 'அதிகாரப் பிரிவினை' எனும் கோட்பாட்டை முன்வைத்தார்.
(xi) எந்த ஒரு அரசின் அதனுடைய மூன்று உறுப்புகளான சட்டம் இயற்றுதல், சட்டத்தைச் செயல்படுத்துதல், நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் சரியாகக் பிரிக்கப்பட்டுள்ளதோ அவ்வரசில் தனிமனிதச் சுதந்திரம் சிறப்பாக பாதுகாக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
13.
(i) 1774இல் குடியேற்ற நாடுகளின் படைகளுக்கு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையேற்றார்.
(ii) குடியேற்றவாதிகள் விடுதலைப் பெறுவதற்காகப் போரை தொடங்கவில்லை. வரிவிதிப்பும், வணிகத்தின் மீதான கட்டுப்பாடுகளும் ஆங்கிலேயரின் உரிமைக்கு எதிராக அவர்கள் செயல்பட்டனர்.
(iii) "பிரதிநிதித்துவம் இல்லாமல் வரி விதிப்பு இல்லை” என்பதே அவர்களின் புகழ்பெற்ற போர் முழக்கமாக இருந்தது.
(iv) பாஸ்டைன் துறைமுக நிகழ்வுகளால் கலக்கமடைந்த இங்கிலாந்து அரசு 'சகிக்க முடியாத சட்டங்கள்' எனும் சட்டத்தை இயற்றியது.
(v) அதில் இச்சட்டத்தை மீறும் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு இங்கிலாந்து கொண்டு செல்லப்படுவர் என கூறப்பட்டிருந்தது.
(vi) 1774ஆம் ஆண்டு மே மாதம் வெர்ஜீனியா சட்டமன்றத்தில் தாமஸ் ஜெபர்சன் 1774ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் உண்ணாவிரதம் மற்றும் வழிபாட்டுத் தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தார்.
(vii) இதற்கு எதிர்வினையாக ஆளுநர் சட்டமன்றத்தை கலைத்தார்.
(viii) அதன் பின்பு உறுப்பினர்கள் கண்டங்களின் மாநாடு நடத்துவதற்கு தீர்மானம் போடப்பட்டது. - மற்ற குடியேற்ற உறுப்பினர்களும் இவர்களுடன் இணைந்தனர்.
(ix) 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் முதல் கண்டங்களின் மாநாடு பிலடெல்பியாவில் கூடியது.
(x) குடியேற்றங்களின் பிரதிநிதிகள் தீர்மானங்களின் மீது வாக்களிக்க மாநாடு ஒப்புக்கொண்டது. அதன் சகிக்க முடியாத சட்டம் செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(xi) கண்டங்களின் மாநாடு அமெரிக்க மக்களின் உரிமை பிரகடனத்தை ஏற்றது.
14.
(i) அரசால் வெளியேற்றப்பட்ட சாமானியர்களின் பிரதிநிதிகள் டென்னிஸ் மைதானத்தில் ஒன்று கூடி தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும்வரை கலைந்து செல்வதில்லை என உறுதியேற்றதைத் தொடர்ந்து நெருக்கடி முற்றியது.
(ii) அரசர் இவர்களைக் கலைக்கப் படைகளைப் பயன்படுத்த முயன்றார். அவருடைய வீரர்களே அவரது ஆணைகளுக்குப் பணிய மறுத்தனர்.
(iii) இதனைத் தொடர்ந்து தனது நாட்டு மக்களைச் சுட்டுத்தள்ளுவதற்காக அரசர் லூயி அயல்நாட்டுப் படைகளைத் தருவிப்பதற்கான சதி ஆலோசனைகளில் ஈடுபட்டார்.
(iv) இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 1789 ஜூலை 14இல் பாரிஸ் நகரில் கிளர்ச்சியில் இறங்கினர்.
(v) அவர்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து அங்கே சிறைவைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்தனர். இது பாஸ்டில் சிறையின் வீழ்ச்சி புரட்சியில் முக்கியத் திருப்பு முனையாகும்.
15.
(i)விவசாயிகள் அரசுக்கு டெய்லே (நிலவரி), காபெல்லே (உப்பு வரி) போன்ற வரிகளைச் செலுத்தினர்.
(ii) மேலும் சாலைகள் அமைத்தல் போன்ற பொதுப் பணிகளுக்கு ‘கார்வி' எனப்படும் இலவச உழைப்பையும் வழங்கினர்.
16.
(i) இங்கிலாந்து திருச்சபையைச் சீர்திருத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் செயல்பட்ட மதச் சீர்திருத்த இயக்கத்திற்குத் தலைமையேற்ற சீர்திருத்தவாதிகள், ரோமானியக் கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகளையும் நடைமுறைகளையும் ஏற்க மறுத்தனர்.
(ii) இவர்களே பியூரிட்டானியர் தூய நெறியாளர் எனப் பொருள்) என அறியப்பட்டனர்.
(iii) இங்கிலாந்து திருச்சபையைச் சீர்திருத்த இவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை முதலாம் ஜேம்ஸ், முதலாம் சார்லஸ் ஆகிய ஸ்டூவர்ட் வம்ச அரசர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
(iv) இவ்வரசர்கள் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகளால் பெருவாரியான பியூரிட்டானியர் இங்கிலாந்திலிருந்து புலம் பெயர்ந்து வேறு பகுதிகளில் குடியேறினர்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards