9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 12/09/2019
செவ்வியல் உலகம்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கார்த்தேஜ் ஹன்னிபால் குறித்து நீ அறிவது என்ன?
2.
ரோமானிய அடிமை முறையை பற்றி எழுதுக.
3.
உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை சுட்டிக் காட்டு.
4.
ஏதென்ஸின் எழுச்சி, வளர்ச்சி ஆகியவற்றையும் அதன் சிறப்புமிக்க கொடைகளையும் சுட்டிக் காட்டுக.
5.
______ மற்றும் _________ ரோம நீதிபதிகள் ஆவார்கள்.
6.
______ ஐரோப்பியாவின் மிக நேர்த்தியான கட்டடம்
7.
______ வம்சத்தினரின் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவிற்கு வருகை தந்தது.
8.
ரோமானியக் குடியரசில் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்தவர்_____
9.
கிரேக்கர்கள் _______ என்ற இடத்தில் பாரசீகர்களைத் தோற்கடித்தனர்.
10.
பெலப்பொனேஷியப் போர் ________மற்றும் ________ ஆகியோர்களுக்கிடையே நடைபெற்றுள்ளது.
கிரேக்கர்கள் மற்றும் பாரசீகர்கள்
பிளேபியன்கள் மற்றும் பெட்ரீசியன்கள்
ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்
கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள்
11.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர் _______ஆவார்.
முதலாம் இன்னசென்ட்
ஹில்ட்பிராண்டு
முதலாம் லியோ
போன்டியஸ் பிலாத்து
12.
ஹன் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் ________ஆவார்.
வு-தை
ஹங் சோவ்
லீயு-பங்
மங்கு கான்
13.
கிரேக்கர்களின் மற்றோரு பெயர் _____ஆகும்.
ஹெலனிஸ்டுகள்
ஹெலனியர்கள்
பீனிசியர்கள்
ஸ்பார்ட்டன்கள்
14.
எபிகியுரஸ்
15.
ஜீயஸ்
16.
மாரியஸ்
17.
பிளாட்டோ
18.
அக்ரோபொலிஸ்
1.
(i) ரோம் மற்றும் கார்த்தேஜ் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற மூன்று போர்கள் பியூனிக் போர்கள் என அழைக்கப்படுகின்றன.
(ii) ஹன்னிபால் என்ற தளபதியை கார்த்தேஜ் பியூனிக் போருக்கு அனுப்பிவைத்தது. ரோமின் படையைத் தோற்கடித்த அவர் இத்தாலியின் பெரும்பகுதியை பாலைவனமாக்கினார்.
(iii) ரோம் படைக்கு தலைமையேற்றிருந்த பாபியஸ், மனம் தளரவில்லை. இரண்டாம் பியூனிக் போரில் ஹன்னிபாலை எதிர்கொண்ட பாபியஸ், ஜாமா போர்க்களத்தில் அவரைத் தோற்கடித்தார்.
(iv) ரோமானியப் படைகளால் பின் தொடரப்பட்ட ஹன்னிபால் விஷமருந்தி மாண்டார்.
2.
(i) ரோமில் போர்க் கைதிகள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். இதன்மூலம் பணம்படைத்தோர் சுரண்டுவதற்கு ஏதுவாகப் பெரும் உழைப்பாளர் கூட்டத்தை ரோம் உருவாக்கியது.
(ii) மிகப்பெரும் நிலப்பிரபுக்கள் இவ்வடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் நிலங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினார்.
(iii) அடிமைகளின் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. கி.மு.(பொ.ஆ.மு) முதலாம் நூற்றாண்டில் ரோமில் சுதந்திர மக்களின் எண்ணிக்கை 3.25 மில்லியன்களாக இருந்தபோது 2 மில்லியன் அடிமைகள் இருந்தனர்.
3.
ரோமானிய மரபின்படி கி.மு. 509ல் எட்ரஸ்கன்கள் அகற்றப்பட்ட பின்னர் ரோமக் குடியரசை நிர்வகித்தவர்கள் பாட்ரீசியன் என்றழைக்கப்பட்ட செல்வந்த நிலப் பிரபுக்களாவர். செனட்டர்களும், கான்சல்களும் நிலப்பிரபுக்களின் நலன்களைப் பாதுகாதாரர். ரோமில் போர்க் கைதிகள் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். பணம் படைத்தவர்கள் இவ்வடிமைகளைக் குறைந்த விலைக்கு வாங்கி தங்கள் நிலங்களில் வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினர். கிரேக்கத்தைக் காட்டிலும் ரோமில் தான் அடிமைகளின் கிளர்ச்சி அதிகம் நடந்தன. ரோமானியர் ஆட்சி காலத்தில் அதிக அளவில் ஆடம்பர பொருட்களான பட்டு, வாசனைத் திரவியங்கள், மிளகு, விலையுயர்ந்த ஆபரணக் கற்கள் போன்றவை கீழ்த்திசை நாடுகளிலுருந்து வந்து குவிந்தன. கோவில்கள், கலையரங்குகள், திறந்த வெளி விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கால்வாய்கள், குளியலிடங்கள், வட்டரங்குகள், சந்தைகள், பெரிய நகரங்கள் ஆகியன இக்காலத்தில் எழுதப்பட்டன. அகஸ்டஸ்கி.மு 27ல் அரசரானார். அவர் தன்னைப் பேராசன் என அழைத்துக் கொண்டார். பணம் படைத்தோர் ஏழைகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக விளையாட்டுகளை ஏற்பாடு செய்தனர். சண்டைக்காட்சி வீரர்களை மோதவிட்டு யாரேனும் ஒருவர் கொல்லப்படுகின்ற வரையிலான கட்டாயச் சண்டைகளை மக்கள் கூடுகின்ற அரங்குகளில் நடத்தினர்.
அகஸ்டஸில் காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மூலம் நாட்டிற்குப் பெருமை சேர்த்தனர். பிளினி என்பவர் அறிவியல் கலைச் கலைஞ்சயத்தை எழுதினார். அதனை அவர் "இயற்கை வரலாறு" என அழைத்தார். செனிக்கா என்பவர் அறிவியல் தொடர்பான களைக் களஞ்சியத்தை உருவாக்கினார். அவர் தன்னுடைய "ஓட்ஸ்" என்னும் நூலில் ஹேரெஸ், எப்பியூக்கியசின் தத்துவங்களை நியாயப்படுத்துவதையும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது இருக்க வேண்டிய மனோதைரியம் பற்றி ஸ்டாய்க் தத்துவம் முன் வாய்த்த கருத்துகளையும் இணைத்து புதிய தத்துவத்தை உருவாக்கினார். லிவி ஒரு சிறந்த உரைநடையாளர் ஆவர். மிகச் சிறந்த வரலாற்று அறிஞர் டேசிடஸ் ஆவர். வெர்ஜில் எழுதிய ஏனெயிட் ரோமானிய ஏகாதிபதியத்தைப் புகழ்வதாய் அமைந்தது. இக்காலத்தில் ரோமானியச் சட்டம் மேலங்கியை வளர்ச்சி அடைந்தது. மார்க்ஸ் அரிலியஸ் ஒரு தத்துவ அறிஞர் ஆவர். சீனாவிற்கு ஒரு தூதுக் குழுவை அமைத்து ஒரு ஆசிய நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திய முதல் ரோமானியப் பேராசர் இவரே ஆவர்.
4.
ஏதென்ஸின் எழுச்சி:
(i) ஏதென்சில் அடித்தள மக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக குழு ஆட்சியும். கொடுங்கோலாட்சியும் அகற்றப்பட்டு மக்களாட்சி முறை நிறுவப்பட்டது.
(II) ஏதென்சில் சட்டம் இயற்றும் அதிகாரம் அனைத்தும், சுதந்திர மக்கள் (Freemm) பங்கேற்கும் மக்கள் மன்றத்தின் வசம் வழங்கப்பட்டிருந்தது.
(iii) நீதிபதிகளும் கீழ்நிலை அதிகாரிகளும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
(iv) இம்முறை சமூகத்தின் மேல்தட்டு மக்களால் வெறுக்கப்பட்டது. அவர்கள் மக்களாட்சியைக் கும்பலின் ஆட்சி எனக் கருதினர்.
(v) பல கிரேக்க நகர அரசுகளின் வரலாறு பணம்படைத்த நிலப்பிரபுக்கள் மக்களாட்சியை எதிர்த்து நடத்திய தொடர் போராட்டங்களாகவே அமைந்தது.
(vi) இவற்றில் விதிவிலக்காக இருந்தது ஏதென்ஸ் மட்டுமே. அங்கு மக்களாட்சிமுறை 200 ஆண்டுகள் நீடித்தது.
வளர்ச்சி:
(i) ஏதென்ஸ் நகர் பெரிகிளிஸ் என்னும் மாபெரும் தலைவரைப் பெற்றிருந்தது. அவர் முப்பதாண்டு காலம் அதிகாரத்தில் இருந்தார்.
(ii) இவருடைய ஆட்சியின் போது ஏதென்சும் ஸ்பார்ட்டாவும் ஒன்றுக்கெதிராக மற்றொன்று தொடர்ந்து போர் செய்தன. இப்போர்கள் பெலப்போனேசியப் போர்கள் என அறியப்பப்பட்டன.
(iii) ஸ்பார்டாவோடு பகைமை, அந்நகர அரசு செய்த இடையூறுகள் ஆகியவை இருந்தபோதிலும் அவற்றையும் மீறி ஏதென்ஸ் பிரமிக்கச் செய்யும் கட்டடங்களைக் கொண்ட உன்னதமான நகரமாக மாறியது.
(iv) மாபெரும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் அந்நகரத்தில் இருந்தனர். ஆகவே வரலாற்று அறிஞர்கள் இக்குறிப்பிட்ட காலத்தைப் 'பெரிகிஸிசின் காலம்' என அழைக்கின்றனர்.
கொடைகள்:
(i) புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று அறிஞர்களான ஹெரோடோட்டசும், அவர் பின்வந்த தூசிடைடிசும் இக்காலத்தில் வாழ்ந்தவர்களாவர்.
(ii) பெரிகிளிசின் சகாப்தத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்களுள் மகத்தானவர் சாக்ரடீஸ் ஆவார்.
(iii) பிளாட்டோ, அரிஸ்டாட்டில், டெமோகிரைட்ஸ். எபிகியூரஸ் இக்காலத்தில் வாழ்ந்தவர்களாவர்.
(iv) பிளாட்டோவின் சீடரான அரிஸ்டாட்டில், இயற்பியல் உலகம், சமூக உலகம் பற்றிய கண்டுணர்ந்த அனுபவ அறிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
5.
( )
மாரியஸ், சுல்லா
6.
( )
புனித சோபியா ஆலயம்
7.
( )
ஹன்
8.
( )
டைபிரியர்ஸ் கிராக்கஸ், காரியஸ் டோ கிராக்கஸ்
9.
( )
மாரத்தான்
10.
(c)
ஸ்பார்ட்டா மற்றும் ஏதென்ஸ் நகர வாசிகள்
11.
(d)
போன்டியஸ் பிலாத்து
12.
(c)
லீயு-பங்
13.
(b)
ஹெலனியர்கள்
14.
பொருள் முதல் வாதி
15.
ஏதென்ஸ்
16.
கான்சல்
17.
தத்துவ ஞானி
18.
பாதுகாக்கப்பட்ட நகரம்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards