9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
இடைக்காலம்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை?
2.
இடைக்காலத்தில் நிலப்பிரபுத்துவம் எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தது?
3.
சிலுவைப் போர்களின் தாக்கம்.
4.
மங்கோலியர்கள் என்பவர் யார்? அவர்கள் சீனாவை எவ்வாறு ஆட்சி செய்தனர்?
5.
அப்பாசித்துகளின் ஆட்சி
அ) அப்பாசித்துகள் என்போர் யார்?
ஆ) அப்பாசித்து காலிஃபா சூட்டிக்கொண்ட பட்டம் என்ன?
இ) அவர்களின் புதிய தலைநகரம் எங்குள்ளது?
ஈ) யாருடைய ஆட்சியில், அப்பாசித்து பேரரசு புகழின் உச்சத்தை எட்டியது?
6.
ஜப்பானின் சோகுனேட்கள்.
அ) ஜப்பானில் பதவிக்காக சண்டையிட்டுக் கொண்ட ட்ய்ம்யாஸ் குடும்பங்கள் இரண்டைக் குறிப்பிடுக.
ஆ) இப்போரில் வெற்றி பெற்றவர் யார்?
இ) பேரரசர் வெற்றி பெற்றவருக்கு கொடுத்த பட்டம் என்ன?
ஈ) முதல் சோகுனேட்டின் தலைநகர் எங்கே நிறுவப்பட்டது?
7.
நிலப்பிரபுத்துவம் ________மையமாகக் கொண்டது.
அண்டியிருத்தலை
அடிமைத்தனத்தை
வேளாண் கொத்தடிமையை
நிலத்தை
8.
ஹருன்-அல் ரஷித் என்பவர் ______ன் திறமையான அரசர்.
அப்பாசித்து வம்சம்
உமையது வம்சம்
சசானிய வம்சம்
மங்கோலியா வம்சம்
9.
ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி_______
தாரிக்
அலாரிக்
சலாடின்
முகமது என்னும் வெற்றியாளர்
10.
_____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.
டய்ம்யாஸ்
சோகன்
பியுஜிவாரா
தொகுகவா
11.
________ஜப்பானின் பூர்வீக மதம் ஆகும்.
ஷின்டோ
கன்பியூசியானிசம்
தாவோயிசம்
அனிமிசம்
12.
(i) போயங் மற்றும் சங்-ஆன் ஆகியவை சுங் வம்சத்தால் கட்டப்பட்டது.
(ii) விவசாயிகளின் ஏழுச்சி, சாங் வம்சம் அழிய வழிகோலியது.
(iii) செல்ஜுக் துருக்கியர் என்பவர் தார்த்தாரியர் என்னும் பழங்குடியினர் ஆவர்.
(iv) மங்கோலியர்கள், ஜப்பானில் தங்களது ஆட்சியை யுவான் வம்சம் என்ற பெயரில் நிறுவினர்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (iii) சரி
ஈ) (iv) சரி
13.
(i) செங்கிஸ்கான் ஒரு மத சகிப்புத்தன்மை இல்லாதவர்.
(ii) மங்கோலியர் ஜெருசலேமை அழித்தனர்.
(iii) உதுமானியப் பேரரசை, சிலுவைப் போர்கள் வலுவிழக்கச் செய்தன.
(iv) போப்பாண்டவர் கிரிகோரி, நான்காம் ஹென்றியை, மதவிலக்கம் என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்தி, பதவி விலகச் செய்தார்.
அ) (i) சரி
ஆ) (ii) சரி
இ) (ii) மற்றும் (iii) சரியானவை
ஈ) (iv) சரி
14.
கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்படல்
15.
பாக்தாத்
16.
முதல் சோகுனேட்
17.
செல்ஜுக் துருக்கியர்கள்
18.
சிகப்பு தலைப்பாகைகள்
1.
திருச்சபையானது படிப்பறிவில்லா தனது உறுப்பினர்கள் மீது தனது அதிகாரத்தை விரிவுபடுத்தியது.
திருச்சபையிலிருந்து விலக்கிவைப்பது, மதவிலக்கு செய்வது எனும் இரண்டு கருவிகளைத் திருச்சபை தன்னை எதிர்ப்பவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது.
2.
(i)அரசர் நிலப்பிரபுத்துவத்தின் தலைவராகக் கருதப்பட்டார். அவர்களுக்கு அடுத்த நிலையில் கோமகன்களாகக் கருதப்பட்ட டீயூக்குகள் 'கவுண்ட்'டுகள் 'யேல்'கள் போன்றோர் இருந்தனர்.
(II) இந்த நிலப்பிரபுக்கள், நிலப்பிரபுத்துவ அடிப்படையில் அரசரிடம் இருந்து நிலம் பெற்றுக் கொண்டு. அவருக்காக போரிட சம்மதித்த வகுப்பினர் ஆவர்.
(iii) அரசர் நிலங்களைப் பிரித்து இவர்களுக்குக் கொடுத்தார். இவர்கள் தாங்கள் பெற்ற நிலங்களை பிப் (Fiel) துண்டுகளாகப் பிரித்தனர். தங்களுக்குக் கீழிருந்த வைஸ் கவுண்ட் என்பவர்களுக்கு விநியோகம் செய்தனர்.
(iv) இவ்வரிசையில் இறுதி இடம் பெற்றவர்கள் நைட் (knight) எனப்படும் சிறப்புப்பணி வீரரர்கள்.இவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை வேறு எவருக்கும் பிரித்துத்தர முடியாது. இவர்கள் அனைவருக்கும் கீழ் அடிமட்டத்தில் இருந்தவர்கள் வில்லொயன் அல்லது செர்ப் என்றறியப்பட்ட பண்ணை அடிமைகள் ஆவர்.
3.
(i)சிலுவைப் போர்கள் நிலப்பிரபுத்துவம் சார்ந்த உறவுகளுக்கு முடிவு கட்டியது.
(ii) மத்திய தரைக்கடல் பகுதியில் வெனிஸ், ஜெனோவா, பைசா ஆகிய நகரங்கள் முக்கிய வணிக மையங்களாகத் தோன்றின.
(iii)வலிமைவாய்ந்த நிலப்பிரபுக்கள் அழிந்து போனது ஒருவகையில் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முடியாட்சி வலுப்பெறுவதற்கு காரணமாயிற்று.
(iv) போப்பாண்டவரும் அவருடைய ஆட்சிமுறையும் தங்கள் செல்வாக்கையும் மரியாதையும் இழக்க நேர்ந்ததாகும்.
4.
மங்கோலியர்கள்:
(i)மங்கோலியர்கள் ஆசிய ரஷ்யாவின் ஸ்டெப்பிஸ் மேய்ச்சல் நிலப்பகுதியிலிருந்து ஐரோப்பாவிற்குள் நாடோடிகளாக வந்தவர்கள்.
(ii)அவர்கள் கால்நடை மேய்ப்பவர்கள் ஆவர்.
(iii)போர்த்திறன் கொண்ட அவர்கள் செங்கிஸ்கான் எனும் மகத்தான தலைவனை உருவாக்கினார்கள்.
சீனாவில் மங்கோலிய ஆட்சி :
(i)சுங் வம்சத்தவர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, யுவான் வம்சத்தினர் என்ற பெயரில் மங்கோலியர்கள் சீனாவில் தங்கள் ஆட்சியை நிறுவினர்.
(ii)பாரசீகத்தையும் ஒட்டுமொத்த மத்திய ஆசியாவையும் கைப்பற்றிய மங்கோலியர்கள் சீனாவையும் விட்டுவைக்கவில்லை. கி.பி. (பொ.ஆ). 1252 - இல் மாபெரும் 'கான்' ஆக மங்குகான் குப்ளேகானை சீனாவின் ஆளுநராகப் பணியமர்த்தினார்.
(iii)யுரேசியாவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை பரவியிருந்த மங்கோலியரின் ஆதிக்கம், சீனாவின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை இதர வளர்ச்சி குன்றிய மேற்கு சமூகங்களிடையே பரப்புவதற்கு உதவியது.
(iv)பெய்ஜிங்கிலிருந்த மங்கோலியரின் அரச சபை மார்க்கோபோலோ போன்ற வெளிநாட்டவரிடம் நன்மதிப்பை ஏற்படுத்தி இருந்த போதிலும் விவசாயிகள் தொடர்ந்து வறுமையில் வாடினர்.
(v)சில மதம் சார்ந்த அமைப்புகளும் ரகசிய அமைப்புகளும் புரட்சியில் இறங்கின. முடிவில் 'சிகப்பு தலைப்பாகைகள்' என்ற அமைப்பின் தலைவரான சூ யுவான் சங், தலைநகர் பெய்ஜிங்கைக் கைப்பற்றி கி.பி. (பொ .ஆ) 1369 இல் தன்னை பேரரசராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
5.
அ) நபிகள் நாயகத்தின் மாமன் அப்பாஸ் என்பவரின் வழிவந்தோர் ஆகையால் அப்பாசித்துகள் என்றழைக்கப்பட்டனர்.
ஆ) நம்பிக்கையாளர்களின் தளபதி
இ) பாக்தாத் என்ற புதிய தலைநகரத்தில் அமைந்துள்ளது.
ஈ) ஹரூன்-அல்-ரசீத் என்பவருடைய ஆட்சியில் அப்பாசித்து பேரரசு புகழின் உச்சத்தை எட்டியது.
6.
அ) 1. தாரா 2. மினமோட்டா
ஆ) யோரிடோமோ
இ) செ-ய்-தாய்-சோகன்
ஈ) காமகுராவில் முதல் சோகுனேட்டின் தலைநகர் நிறுவப்பட்டது.
7.
(a)
அண்டியிருத்தலை
8.
(a)
அப்பாசித்து வம்சம்
9.
(a)
தாரிக்
10.
(a)
டய்ம்யாஸ்
11.
(a)
ஷின்டோ
12.
இ) (iii) சரி
13.
ஈ) (iv) சரி
14.
இரண்டாம் முகமது
15.
அரேபிய இரவுகளின் நகரம்
16.
காமகுரா
17.
மத்திய ஆசியா
18.
சூ யுவான் சங்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards