9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 03/09/2019
தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?
புகளூர்
கிர்நார்
புலிமான்கோம்பை
மதுரை
2.
சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட எழுத்துமுறை யாது?
ஆங்கிலம்
தேவநாகரி
தமிழ்-பிராமி
கிரந்தம்
3.
கிரேக்கர்கள், ரோமானியர்கள், மேற்கு ஆசியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய மேற்கத்தியர்களை ____________ என்னும் சொல் குறிக்கிறது.
4.
மௌரியர் காலத்தில் ஆட்சிக்கலை மற்றும் பொருளாதாரம் குறித்து கௌடில்யர் எழுதிய நூல் ____________ ஆகும்.
5.
கற்கள், செப்பேடுகள், நாணயங்கள், மோதிரங்கள் ஆகியவற்றின் மீது பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் ___________ ஆகும்.
6.
அ) சேரர்கள் காவிரிப்பகுதியை ஆட்சிசெய்தனர். அவர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.
ஆ) மாங்குளம் தமிழ்-பிராமி கல்வெட்டுக் குறிப்புகள் அரசன் கரிகாலனைக் குறிப்பிடுகின்றன.
இ) தமிழ் பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.
ஈ) உப்பு விற்றவர்கள் வணிகர்கள் என்று அழைக்கப்பட்டனர்; அவர்கள் வணிகத்துக்காக மாட்டு வண்டியில் தங்கள் குடும்பத்தினருடன் பயணம் செய்தார்கள்.
7.
அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
ஆ) எரித்ரியன் கடலின் பெரிப்ளூஸ் இந்தியா உடனான மிளகு வணிகம் குறித்துக் கூறுகிறது.
இ) இந்தியாவில் தொடக்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களில் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன; நாணயங்கள் பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.
ஈ) சங்க காலம் வெண்கலக் காலத்தில் வேரூன்றத் தொடங்கியது.
8.
அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
9.
தமிழ் அரசர்கள் மௌரிய அரசின் அதிகாரத்துக்கு உட்படாமல் இருந்தார்கள் – இந்தக் கூற்றுக்கு உன் விளக்கம் என்ன?
10.
தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.
11.
தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?
12.
தமிழ் அல்லாத சான்றுகள் (வெளிநாட்டவர் குறிப்புகள் )
அ) தமிழ் அல்லாத சான்றுகள் மூலம் நாம் அறிந்துக கொள்வது என்ன?
ஆ) பாண்டிய நாட் டிலிருந்து முத்தும் சங்கும் வந்ததைக் கூறும் மௌரியர் காலச் செவ்வியல் நூல் யாது?
இ) காலவரிசையான வரலாற்றுக் குறிப்பு என்றால் என்ன?
ஈ) இந்தியாவுக்கும்ரோமானியப் பேரரசுக்கும் இடையே நடந்த மிளகு வணிகம் குறித்துக் கூறியவர் யார் ?
13.
நடு கற்கள்
அ) மேய்ச்சல் சமூகங்களுக்கிடையே காணப்பட்ட பொதுவான நடை முறை என்ன?
ஆ) பகைவர்களின் கால்நடைச் செல்வத்தைக் கவர்ந்தவர்கள் யாவர்?
இ) இறந்த வீரர்களை மக்கள் எவ்வாறு நினைவு கூர்ந்தனர்?
ஈ) நடுகற்களை நிறுவுவதற்கான வழி முறைகளை விளக்கும் தமிழ் நூல் எது?
1.
(a)
புகளூர்
2.
(c)
தமிழ்-பிராமி
3.
( )
யவனர்
4.
( )
அர்த்த சாஸ்திரம்
5.
( )
கல்வெட்டியல்
6.
இ) தமிழ் பிராமி கல்வெட்டுக் குறிப்புகளில் காணப்படும் வணிகன், நிகமா ஆகிய சொற்கள் வணிகர்களில் வெவ்வேறு வகையினரைக் குறிப்பிடுவதாகும்.
7.
அ) இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கொடுமணல், குட்டூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
8.
(i) கிழக்கிலும் மேற்கிலும் பல வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர்.
ii) ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று வீசும் சமயத்தில் மேலைக்கடலான அரபிக்கடலை கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன.
(iii) மிளகு போன்ற நறுமணப் பொருட்களும், யானைத் தந்தம், நவமணிகள் உள்ளிட்ட அரிய பொருட்களும் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆயின.
(iv) தங்கம், வெள்ளி, செம்பு,உள்ளிட்ட உலோகங்கள் இறக்குமதி ஆயின.
9.
தற்காலத்திய ஒடியா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் காணப்படும் அசோகரது கல்வெட்டுகள் தமிழகத்திலும் கேரளத்திலும் காணப்படவில்லை. எனவே மௌரியர்களின் மேலாட்சிக்கு உட்படாத சுதந்திரமான ஆட்சியாளர்களாகத் தமிழக வேந்தர்கள் விளங்கினார்கள். இதை அசோகரின் கல்வெட்டுச் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.
10.
(i) தொல்லியல் அகழாய்வுப் பணி என்பது பண்டைக்கால சமூகத்தின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ளும் நோக்கில் முறைப்படி ஓர் இடத்தை அகழ்ந்து, சான்றுகளாகக் கிடைத்த பொருள்களை முறையாக திரட்டி ஆராய்வதாகும்.
(ii) வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வழியாகச் சங்க கால மக்களின் வாழ்க்கை முறை குறித்து சான்றுகள் கிடைத்துள்ளன.(எ.கா.) தமிழ்நாட்டின் அரிக்கமேடு, அழகன்குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிப்பூம்பட்டினம் முதலியன.
11.
(i) சங்க காலத்திற்கான அடித்தளம் இரும்புக் காலத்தில் வேர் கொண்டது,
(ii) இரும்புக் காலத்தில் மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். தலைவர்கள் அந்நிலப்பகுதிகளைத் தமது ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தனர்.
(iii) இவ்வாறு உருவான தலைவர்களில் இருந்தே வரலாற்றின் தொடக்கக் காலத்தில் வேந்தர்கள் தோன்றினார்கள்,
(iv) வேளிர்கள் என்போர் சங்க காலத்தின் குறுநில மன்னர்கள் ஆவர்.
மூவேந்தர்:
(i) சங்க கால ஆட்சியாளர்களில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களே முன்னிலையில் இருந்தனர்.
(ii) அக்காலத்தில் பெரு நகரங்களும் துறைமுகப்பட்டினங்களும் மூவேந்தரின் ஆளுகைக்கு கீழேயே இருந்தன.
சேரர்:
(i) அசோகரின் கல்வெட்டுகளில் கேரளபுத்திரர்கள் என்று குறிக்கப்பட்டுள்ள சேரர் தற்காலத்துக் கேரளத்தையும், தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியையும் ஆட்சி புரிந்தனர்.
(ii) தலைநகராக வஞ்சியும், துறைமுகப்பட்டினங்களாக முசிறியும் தொண்டியும் இருந்தன. (iii) சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்தும் அவர்களுடைய நாட்டின் எல்லைகளைக் குறித்தும் பேசுகிறது.
(iv) வில்லும் அம்பும் சேரர்களின் இலச்சினையாகும்.
சோழர்:
(i) காவிரி வடிநிலப்பகுதியையும் தமிழ்நாட்டின் வடபகுதிகளையும் ஆண்ட சோழர்களுக்கு உறையூர் தலைநகராக இருந்தது.
(ii) காவிரி ஆறு வங்கக் கடலில் கலக்கும் பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டினம் அவர்களுடைய துறைமுகம் ஆகும்.
(iii) சோழ மன்னர்களின் தலைச்சிறந்தவர் கரிகால் சோழன், காவிரி ஆற்றின் நீர்பெருக்கைப் பயன்படுத்தி பாசன வசதிகள் செய்து விவசாயம் தழைக்கச் செய்த பெருமைக்குரியவர்.
(iv) சோழர்களின் இலச்சினை புலி, அவர்கள் சதுரவடிவிலான செப்பு நாணயங்களை வெளியிட்டனர். அவற்றின் முகப்பில் புலியின் உருவமும் மறுபுறத்தில் யானை மற்றும் புனிதச் சின்னங்களும் காணப்படுகின்றன.
பாண்டியர்:
(i) பாண்டியர்கள் குறித்தும் அசோகரது கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன. மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென்தமிழகத்தை அவர்கள் ஆண்டனர்.
(ii) தமிழ்ச் சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தவர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் பாண்டிய அரசர்களைப் போற்றுகின்றன.
(iii) பாண்டியர்களின் இலச்சினை மீன் ஆகும்.
வேளிர் / குடித்தலைமை:
(i) தமிழகத்தை ஆட்சிபுரிந்த மூவேந்தர்களைத் தவிர பல குறுநில மன்னர்களும் சிறிய பகுதிகளில் குடித்தலைமை ஏற்றிருந்தனர்.
(ii) குறுநில மன்னர்கள் வேளிர் என்றும் அழைக்கப்பட்டனர்
(iii) வேளிரில் கடையேழு வள்ளல்களான பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன், ஆய், அதியமான் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
12.
அ) பண்டையத் தமிழ்ச் சமூகம் உலகெங்கிலும் விரிந்த தொடர்புகள் கொண்டிருந்ததை வெளிப்படுத்துகிறது.
ஆ) பாண்டிய காவாடகா.
இ) முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை காலவரிசையில் விவரிக்கும் குறிப்பு.
ஈ) பிளினி.
13.
அ) அருகருகே வாழ்ந்த இனக்குழுவினர் மற்ற குழுவினரின் கால்நடைகளைக் கவர்ந்த தமதாக்கிக் கொள்வதற்காக சண்டையிட்டுள்ளனர்.
ஆ) முல்லை நில மக்களின் தலைவன்.
இ) நடுகற்கள் நிறுவி இறந்த வீரர்களை மக்கள் நினைவு கூர்ந்தனர்.
ஈ) தொல்காப்பியம்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards