9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
9 ஆம் வகுப்பு கணிதம் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 9th Standard Mathematics Tamil Medium Mathematics Book Back and Creative Important Question 2020 )
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
3m+2n-4l பக்க அளவு கொண்ட சதுரத்தின் பரப்பளவு காண்க.
2.
p(x)=2x3 −9x2 +x+12 என்ற பல்லுறுப்புக் கோவைக்கு (2x-3)என்பது ஒரு காரணியா?
3.
\(\sqrt{2}=1.414,\sqrt{3}=1.732,\sqrt{5}=2.236,\sqrt{10}=3.162\) எனில், கீழ்க்காண்பவற்றின் மதிப்புகளை மூன்று தசம இடத்திருத்தமாகக் காண்க.
(i) \(\sqrt{40}-\sqrt{20}\)
(ii) \(\sqrt{300}+\sqrt{90}-\sqrt{8}\)
4.
வென்படங்களைப் பயன்படுத்தி \(A\cup (B\cap C)=\left( A\cup B \right) \cap (A\cup C)\) என்பதைச் சரிபாக்க.
5.
500 மகிழுந்து உரிமையாளர்களைப் பற்றிய ஆய்வில், 400 பேர் மகிழுந்து A ஐயும் 200 பேர் மகிழுந்து B ஐயும், 50 பேர் இரு வகையான மகிழுந்துகளையும் வைத்துள்ளனர் எனில் இது சரியான தகவலா?
6.
புள்ளி A இன் x அச்சுத் தொலைவு அதன் y அச்சுத் தொலைவிற்குச் சமம். மேலும், B(1, 3) என்ற புள்ளியிலிருந்து அப்புள்ளி A ஆனது 10 அலகு தொலைவில் இருக்கிறது. எனில் A இன் அச்சுத் தொலைவுகளைக் காண்க.
7.
படத்தில் m || n மேலும் l ஆனது குறுக்கு வெட்டி எனில் ∠1 : ∠2 = 11 : 7 எனில், எட்டுக் கோணங்களையும் காண்க.

8.
(–4, 3), (2,–3) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவினைக் காண்க.
9.
பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 1184 மாணவர்களில், 233 பேர் கணிதத்திலும், 125 பேர் சமூக அறிவியலிலும், 106 பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சம வாய்ப்பு முறையில் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த மாணவர்
(i) கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்க,
(ii) அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு காண்க
10.
பின்வருவனவற்றிற்கு வரைபடம் வரைக.
(i) y = 3x −1
(ii) \(y=\left( \frac { 2 }{ 3 } \right) x+3\)
11.
\(A=\{ y:y=\frac { a+1 }{ 2 } ,a\epsilon W\) மற்றும் \(a\le 5\} \) \(B=\{ y:y=\frac { 2n-1 }{ 2 } ,n\epsilon W\)மற்றும் n<5} மற்றும் \(C=\left\{ -1-\frac { 1 }{ 2 } ,1,\frac { 3 }{ 2 } ,2 \right\} \)எனில் \(A-(B\cup C)=(A-B)\cap (A-C)\)எனக்காட்டுக.
12.
\(\frac { 1 }{ 13 } \) ஐத் தசம வடிவில் எழுதுக. அதன் தசம எண்ணின் காலமுறைமையைக் காண்க?
13.
இணைகரம் ABCD இல் ∠BAD = 120o மற்றும் AC ஆனது ∠BAD இன் கோண இருசமவெட்டி எனில், ABCD ஒரு சாய் சதுரம் என நிறுவுக.

14.
(2, 0), (–5, 0), (3, 0) மற்றும் (–1, 0) என்ற புள்ளிகளை க் கார்ட்டீசியன் தளத்தில் குறிக்கவும். மேலும் அவை எங்கே அமைந்துள்ளன ?
15.
ஒரு வரிப்பந்து (tennis) விளையாட்டு வீரர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 0.72 எனில் அவர் அந்த விளையாட்டில் தோல்வியடைவதற்கான நிகழ்தகவு என்ன?
16.
16-20 வயதுக்குட்பட்ட 400 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 191 பேர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டது. சமவாய்ப்பு முறையில் அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் நபராக இல்லாமல் இருக்க நிகழ்தகவு என்ன?
17.
42 நபர்கள் பணி செய்யும் ஓர் அலுவலகத்தில் 7 பணியாளர்கள் மகிழுந்து பயன்படுத்துகிறார்கள், 20 பணியாளர்கள் இரு சக்கர வண்டி பயன்படுத்துகிறார்கள். மீதி 15 பணியாளர்கள் மிதிவண்டி பயன்படுத்துகிறார்கள். ஒப்பீட்டு நிகழ்வெண் நிகழ்தகவைக் கண்டறிக.
18.
A(−3,5) மற்றும் B(4,−9) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டைப் புள்ளி P(2, -5) என்ன விகிதத்தில் பிரிக்கும்?
19.
புள்ளிகள் A(−5,4) , B(−1,−2) மற்றும் C(5,2) என்பன இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் உச்சிகள், இதில் B இல் செங்கோணம் அமைந்துள்ளது. மேலும் ABCD ஒரு சதுரம் எனில் D இன் ஆயத்தொலைவுகளைக் காண்க.
20.
\(\frac { 1 }{ 4 } \)என்பது 3(x + 1) = 3( 5–x) – 2( 5 + x) என்ற சமன்பாட்டின் தீர்வாகுமா என்பதைச் சோதித்துப் பார்.
21.
வகுத்தல் முறையைப் பயன்படுத்தாமல், பின்வருவனவற்றுள் எவை முடிவுறு தசம விரிவைப் பெற்றிருக்கும் எனக் கண்டுபிடிக்க
(i) \(\frac { 7 }{ 128 } \)
(ii) \(\frac { 21 }{ 15 } \)
(iii) \(4\frac { 9 }{ 35 } \)
(iv) \(\frac { 219 }{ 2200 } \)
22.
U = {a, b, c, d, e, f, g, h}, A = {b, d, f, h} மற்றும் B = {a, d, e, h} எனில் பின்வரும் கணங்களைக் காண்க.
B'
23.
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
I3-8m3-27n3-18lmn
24.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் xo ன் மதிப்பை காண்க.

25.
காரணிப்படுத்துக. x2+4y2+9z2-4xy+12yz-6xz
26.
\(\sqrt[9]{8}\) என்ற முறுடை \(6\sqrt{6}\)ஆல் வகுக்க.
27.
\(A=\left\{ -11,\sqrt { 2 } ,\sqrt { 5 } ,7 \right\} \), \(B=\left\{ \sqrt { 3 } ,\sqrt { 5 } ,6,13 \right\} \) மற்றும் \(C=\left\{ \sqrt { 2 } ,\sqrt { 3 } ,\sqrt { 5 } ,9 \right\} \) ஆகியவற்றிற்குக் கணங்களின் வெட்டுக்கான சேர்ப்புப் பண்பினைச் சரிபார்க்க. \(A\cap (B\cap C)=\left( A\cap B \right) \cap C\)
28.
பின்வரும் கணங்களைக் கணக் கட்டமைப்பு முறையில் எழுதுக.
E = 9 இக்கும் குறைவான ஒற்றை முழு எண்களின் கணம்.
29.
எவை நாற்கரம் அல்ல.
(i)

(ii)

(iii)

(iv)

(v)

(vi)

(vii)

(viii)

30.
பின்வரும் புள்ளிகளை வரை படத்தாளில் குறித்து அவற்றை இணைக்கவும். கிடைக்கும் வடிவத்தைப் பற்றி தங்களின் கருத்தைக் கூறுக (0,–4) (0,–2) (0,4) (0,5)
31.
ஒரு பகடையானது ______ இருக்கும்போது, அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை என அழைக்கப்படுகிறது.
சிறியதாக
சீரானதாக
ஆறு முகம் கொண்டதாக
வட்டமாக
32.
ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு _____ என அழைக்கப்படுகிறது.
நிகழ்ச்சி
விளைவு
கூறுபுள்ளி
மேற்கண்ட எதுவுமில்லை
33.
பின்வருவனவற்றுள் எது நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியாது?
0
0.5
1
-1
34.
A என்பது S-ன் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி மற்றும் A' என்பது A-ன் நிரப்பு நிகழ்ச்சி எனில் P (A)′ இன் மதிப்பு ____.
1
0
1 - A
1 - P(A)
35.
நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி_______.
-1 மற்றும் +1
0 மற்றும் 1
0 மற்றும் n
0 மற்றும் \(\infty \)
36.
கீழ்க்காண்பனவற்றில் எது நேரிய சமன்பாடு அல்ல
ax + by + c = 0
0x + 0y + c = 0
0x + by + c = 0
ax + 0y + c = 0
37.
ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் AB, BC மற்றும் CA ஆகியவற்றின் நடுப் புள்ளிகளின் ஆயத் தொலைவுகள் முறையே (3,4), (1,1) மற்றும் (2,−3) எனில் A மற்றும் B இன் அசுயத்தொலைவுகள் யாவை?
(3,2), (2,4)
(4,0), (2,8)
(3,4), (2,0)
(4,3), (2,4)
38.
(−3,2), என்ற புள்ளியை மையமாகக் கொண்ட வட்டத்தில் (3, 4) ஐ ஒரு முனையாகக் கொண்ட விட்டத்தை மற்றொரு முனையைக் காண்க.
(0,−3)
(0,9)
(3,0)
(−9,0)
39.
ax2+ bx+c என்ற ஈருறுப்புக் கோவையின் காரணிகள் (x + 5) மற்றும் (x - 3) எனில், a, b மற்றும் c இன் மதிப்புகள் ______.
1,2,3
1,2,15
1,2,-15
1,-2,15
40.
(a+b−c)2 = _______.
(a-b+c)2
(-a-b+c)2
(a+b+c)2
(a-b−c)2
41.
x - 8 மற்றும் x2-6x -16 இன் ஒரு காரணி எனில் மற்றொரு காரணி _____.
(x + 6)
(x - 2)
(x + 2)
(x -16)
42.
வட்ட நாற்கரத்தின் ஒரு கோண அளவு 750 எனில், எதிர் கோணத்தின் அளவு ______.
1000
1050
850
900
43.
படத்தில் PQRS மற்றும் PTVS என்ற இரண்டு வட்ட நாற்கரங்களில் ㄥQRS = 800 எனில், ㄥTVS = ______.
800
1000
700
900
44.
ஆரம் 25 செமீ உள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 15 செமீ தூரத்தில் உள்ள நாணின் நீளம் _______.
25செமீ
20செமீ
40செமீ
18செமீ
45.
\(n(A\cup B\cup C)\)= 40, n(A)= 30, n(B)= 25, n(C)= 20, n(A⋂B)=12, n(B⋂C)=18 மற்றும் n(A⋂C)=15 எனில் n(A⋂B⋂C) =_______
5
10
15
20
46.
கீழ்காண்பவற்றில் எது சரி?
A − B = A ⋂ B
A − B = B − A
(A U B)' =A' U B'
(A ⋂ B)' =A' U B'
47.
5.92 x 10-3 இன் தசம வடிவம் எது?
0.000592
0.00592
0.0592
0.592
48.
அறிவியல் குறியீட்டு வடிவ எண்ணிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு எது?
0.5 x105
0.1254
5.367 x 10–3
12.5 x 102
49.
\({2\sqrt{3}\over 3\sqrt{2}}\) இன் பகுதியை விகிதமுறு எண்ணாக மாற்றிய பின் சுருங்கிய வடிவம் ______.
\({\sqrt{2}\over 3}\)
\({\sqrt{3}\over 2}\)
\(\sqrt{6}\over 3\)
\(2\over3\)
50.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறு?
25 இன் வர்க்கமூலம் 5 அல்லது -5
\(-\sqrt{25}=-5\)
\(\sqrt{25}=5\)
\(\sqrt{25}=\pm5\)
51.
பின்வருவனவற்றுள் பொருந்தாததைக் காண்க.
\(\sqrt { 32 } \times \sqrt { 2 } \)
\(\frac { \sqrt { 27 } }{ \sqrt { 3 } } \)
\(\sqrt { 72 } \times \sqrt { 8 } \)
\(\frac { \sqrt { 54 } }{ \sqrt { 18 } } \)
52.
( 5, –1 ) என்ற புள்ளிக்கும் ஆதிப்புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு______.
\(\sqrt { 24 } \)
\(\sqrt { 37 } \)
\(\sqrt { 26 } \)
\(\sqrt { 17 } \)
53.
Q1,Q2, Q3, Q4 என்பன கார்ட்டீசியன் தளத்தின் நான்கு காற்பகுதிகள் எனில்,\({ Q }_{ 2 }\cap { Q }_{ 3 }\) என்பது ______.
\({ Q }_{ 1 }\cup { Q }_{ 2 }\)
\({ Q }_{ 2 }\cup { Q }_{ 3 }\)
வெற்றுக் கணம்
x-அச்சின் குறைப் பகுதி.
54.
p(x) = x3 – ax2 + 6x – a என்ற பல்லுறுப்புக் கோவையை (x – a) என்ற கோவையால் வகுக்கக் கிடைக்கும் மீதி______.
–5a
\(\frac {1}{5}\)
5
5a
55.
புள்ளிகள் O(0,0), A(3, -4), B(3, 4) மற்றும் C(0, 4) ஐக் குறித்து அவற்றை OA, AB, BC மற்றும் CO என இணைத்தால் கிடைக்கும் உருவம் _______.
சதுரம்
செவ்வகம்
சரிவகம்
சாய்சதுரம்
56.
கணம் A = {x, y, z} எனில், A இன் வெற்றுக் கணமில்லாத உட்கணங்களின் எண்ணிக்கை _____.
8
5
6
7
57.
கணம் P = {x | x ∈ Z , –1 < x < 1} என்பது ______.
ஓருறுப்புக் கணம்
அடுக்குக் கணம்
வெற்றுக் கணம்
உடகணம்
58.
கீழ்க்கண்டவற்றில் சரியானது எது?
{7} ∈ {1,2,3,4,5,6,7,8,9,10}
7 ∈ {1,2,3,4,5,6,7,8,9,10}
7 ∉ {1,2,3,4,5,6,7,8,9,10}
{7} \(\nsubseteq \) {1,2,3,4,5,6,7,8,9,10}
59.
முக்கோணத்தின் கோணங்கள் (3x-40)0, (x +20)0+மற்றும் (2x-10)0 எனில் x இன் மதிப்பு ______.
40°
35°
50°
45°
60.
நாற்கரம் ABCD இல் AB = BC மற்றும் AD = DC எனில், கோணம் ∠BCD இன் அளவு

150°
30°
105°
72°
1.
சதுரத்தின் பரப்பளவு = பக்கம் x பக்கம்
=(3m+2n-4l) x (3m+2n-4l)
=(3m+2n-4l)2

(a+b+c)2=a2+b2+c2+2ab+2bc+2ca என்பது நாம் அறிந்ததே.
[3m+2n+(-4l)]2=(3m)2+(2n)2+(-4l)2+2(3m)(2n)+2(2n)(-4l)+2(-4l)(3m)
=9m2+4n2+16l2+12mn-16ln-24lm
எனவே சதுரத்தின் பரப்பளவு
=[9m2+4n2+16l2+12mn-16ln-24lm] சதுர அலகுகள்.
2.
(2x-3) ஆனது p(x) ன் காரணி எனில், \(p\left( \cfrac { 3 }{ 2 } \right) =0\)
\(p\left( \cfrac { 3 }{ 2 } \right) =2\left( \cfrac { 3 }{ 2 } \right) ^{ 3 }-9\left( \cfrac { 3 }{ 2 } \right) ^{ 2 }+\left( \cfrac { 3 }{ 2 } \right) +12\)
= \(2\left( \cfrac { 27 }{ 8 } \right) -9\left( \cfrac { 9 }{ 4 } \right) +\left( \cfrac { 3 }{ 2 } \right) +12\)
= \(\cfrac { 27 }{ 4 } -\cfrac { 81 }{ 4 } +\cfrac { 3 }{ 2 } +12\)
= \(\cfrac { 27-81+6+48 }{ 4 } \)
= \(\cfrac { 81-81 }{ 4 } \)
= \(\cfrac { 0 }{ 4 } \)=0
\(p\left( \cfrac { 3 }{ 2 } \right) \) = 0\(\therefore\)(2x-3) ஆனது p(x) ன் காரணி ஆகும்.
3.
(i) \(\begin{aligned}
\sqrt{40}-\sqrt{20} & =\sqrt{2^2 \times 10}-\sqrt{2^2 \times 5}
\end{aligned}\)
\(\begin{aligned}
=(2 \times \sqrt{10})-(2 \times \sqrt{5})
\end{aligned}\)
\(\begin{aligned}
=(2 \times 3.162)-(2 \times 2.236)
\end{aligned}\)
= 6.324 - 4.472
= 1.852
(ii) \(\begin{aligned}
\sqrt{300}+\sqrt{90}-\sqrt{8} & =\sqrt{3 \times 100}+\sqrt{9 \times 10}+\sqrt{4 \times 2}=10 \sqrt{3}+3 \sqrt{10}-2 \sqrt{2} \\
\end{aligned}\)
\(
\begin{aligned}
=10 \times 1.732+3 \times 3.162-2 \times 1.414
\end{aligned}\)
= 17.32 + 9.486 - 2.828 = 23.978
4.
L.H.S \(A\cup (B\cap C)\)

(2) மற்றும் (5) லிருந்து,
\(A\cup (B\cap C)=\left( A\cup B \right) \cap (A\cup C)\) என நிரூபிக்கப்பட்டது.
5.
n(AUB) = n(A) + n(B) - n(A\(\cap \)B) கொடுக்கப்பட்டுள்ளது
\(\Rightarrow\) n(AUB) = 500 ....(1)
n(A) = 400
n(B) = 200
n(A\(\cap \)B) = 50
\(\therefore\) n(A) + n(B) - n(A\(\cap \)B) = 400 + 200 - 50 = 550 ....(2)
(1) \(\neq\) (2)
கொடுக்கப்பட்டுள்ள தகவல் தவறானது.
6.
A (x, x) மற்றும் B(1, 3) என்பன கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள்
தொலைவு d = \(\sqrt {(x_2-x_1)^2+(y_2-y_1)^2}\)
AB = \(\sqrt {(1-x)^2+(3-x)^2}=\sqrt {(1-2x +x^2+9 - 6x+ x ^2}\)
\(= \sqrt {2x ^2 - 8x + 10}\)
\(= \sqrt {2x ^2 - 8x + 10}\) = 10 (கொடுக்கப்பட்டுள்ளது)
இருபுறமும் வர்க்கப் படுத்த,
2x2 - 8x + 1 + 9 = 100
x2 - 4x - 45 = 0
(x - 9)(x + 5) = 0
x - 9 = 0 அல்லது x + 5 = 0
x = 9 அல்லது x = -5
\(\therefore \) A இன் அச்சு தொலைவு (9, 9) அல்லது (-5, -5) ஆகும்.
7.
<1 : <2 = 11 : 7
<1 = 11 x மற்றும் <2 = 7x என்க.
<1 + <2 = 1800
11x +7x = 1800
18x = 1800
x = \(\frac { { 180 }^{ 0 } }{ 18 } ={ 10 }^{ 0 }\)
∴ <1 = 11x = 11(10) = 1100
<2 = 7x = 7(10) = 700
<4 = <2 = 700 ( குத்தெதிர் கோணங்கள் சமம்)
<3 = <1 = 1100 ( குத்தெதிர் கோணங்கள் சமம்)
<5 = <1 = 1100 (ஒத்த கோணங்கள் சமம்)
<6 = <2 = 700 (ஒத்த கோணங்கள் சமம்)
<7 = <5 = 1100 (குத்தெதிர் கோணங்கள் சமம்)
<8 = <6 = 700 (குத்தெதிர் கோணங்கள் சமம்)
8.
(-4, 3), (2,-3) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு
\(d=\sqrt { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) ^{ 2 }+\left( y_{ 2 }-y_{ 1 } \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 2+4 \right) ^{ 2 }+\left( -3-3 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( { 6 }^{ 2 }+\left( -6 \right) ^{ 2 } \right) } =\sqrt { \left( 36+36 \right) } \)
\(=\sqrt { 36\times 2 } \)
\(=6\sqrt { 2 } \)

9.
நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் = 1184 ஆகவே n = 1184
(i) E1 என்பது கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E1) = 233, அதாவது r1 = 233
P(E1) = \(\frac { { r }_{ 1 } }{ n } =\frac { 233 }{ 1184 } \)
(ii) E2 என்பது அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E2 ) = 1069 , அதாவது , r2 = 106
P(E2) = \(\frac { { r }_{ 2 } }{ n } =\frac { 106 }{ 1184 } \)
ஆகவே அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு
P(E'2) = 1 - P(E2)
= 1 - \(\frac { 106 }{ 1184 } \) = \(\frac { 1078 }{ 1184 } \)
10.
(i) y = 3x −1 என்ற கோட்டிற்கான புள்ளிகளின் வரிசைக்கு சோடிகளைக் காண்பதற்கு அட்டவணையைத் தயாரிக்கலாம்.
x - இன் மதிப்பாக எந்த மதிப்பை வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம், இங்கு -1, 0 மற்றும் 1 ஐ மட்டுமே எடுத்துக்கொள்வோம்.
x = −1 எனில், y = 3(–1)–1 = –4
x = 0 எனில், y = 3(0)–1 = –1
x = 1 எனில், y = 3(1)–1 = 2
| x | -1 | 0 | 1 |
| y | -4 | -1 | 2 |
குறிக்க வேண்டிய புள்ளிகள் (x,y):
(−1, −4), (0, −1), (1, 2).

(ii) \(y=\left( \frac { 2 }{ 3 } \right) x+3\) என்ற கோட்டின் புள்ளிகளின் வரிசைச் சோடிகளைக் காண்பதற்கான அட்டவணைத் தயாரிக்கலாம்.
x இன் மதிப்புகளை -3, 0, 3 என எடுத்துக்கொள்கிறோம் (ஏன்?)
x = -3 எனில், \(y=\frac { 2 }{ 3 } (-3)+3=1\)
x = 0 எனில், \(y=\frac { 2 }{ 3 } (0)+3=3\)
x = 3 எனில், \(y=\frac { 2 }{ 3 } (3)+3=5\)
| x | -3 | 0 | 3 |
| y | 1 | 3 | 5 |
குறிக்க வேண்டிய புள்ளிகள் (x,y) :(−3,1), (0,3), (3,5).
11.

a = {0, 1, 2, 3, 4, 5}
\(\Rightarrow \quad y=\frac{a+1}{2}=\frac{0+1}{2}=\frac{1}{2}\)
\(\begin{aligned}
y & =\frac{1+1}{2}=\frac{2}{2}=1 \\
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2+1}{2}=\frac{3}{2} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{3+1}{2}=\frac{4}{2}=2
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{4+1}{2}=\frac{5}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{5+1}{2}=\frac{6}{2}=3
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore \mathrm{A} & =\left\{\frac{1}{2}, 1, \frac{3}{2}, 2, \frac{5}{2}, 3\right\} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{B} & =\left\{y: y=\frac{2 n-1}{2}, n \in \mathbb{W}, n<5\right\} \\
\end{aligned}\)
n = {0, 1, 2, 3, 4}
\(\Rightarrow\) \(\begin{aligned}
y & =\frac{2 \times 0-1}{2}=\frac{-1}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2 \times 1-1}{2}=\frac{1}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2 \times 2-1}{2}=\frac{3}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2 \times 3-1}{2}=\frac{5}{2} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
y & =\frac{2 \times 4-1}{2}=\frac{7}{2}
\end{aligned}\)
\(\begin{aligned}
\therefore \mathrm{B} & =\left\{-\frac{1}{2}, \frac{1}{2}, \frac{3}{2}, \frac{5}{2}, \frac{7}{2}\right\} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{C} & =\left\{-1,-\frac{1}{2}, 1, \frac{3}{2}, 2\right\} \\
\end{aligned}\)
\(\begin{aligned}
\mathrm{B} \cup \mathrm{C} & =\left\{-1,-\frac{1}{2}, \frac{1}{2}, 1, \frac{3}{2}, 2, \frac{5}{2}, \frac{7}{2}\right\} \\
\end{aligned}\)
A - (BUC) = {3} .............(1)
A - B = {1, 2, 3}
\(\begin{aligned}
\mathrm{A}-\mathrm{C} & =\left\{\frac{1}{2}, \frac{5}{2}, 3\right\}
\end{aligned}\)
(A - B) \(\cap\) (A - C) = {3} ...........(2)
(1) மற்றும் (2) லிருந்து
\(A-(B\cup C)=(A-B)\cap (A-C)\) என நிரூபிக்கபட்டது.
12.

\(\frac { 1 }{ 13 } =0.\overline { 076923 } \)
\(\therefore\) தசம எண்ணின் கால முறைமை = 6
13.
கொடுக்கப்பட்டவை ∠BAD = 120° மற்றும் AC ஆனது ∠BAD இன் இரு சம வெட்டி
\(\angle{BAC}=\frac{1}{2}\times 120^{0}=60^{0}\)
∠1 = ∠2 = 60°
இங்கு AD || BC மற்றும் AC ஆனது குறுக்கு வெட்டி
∠2 = ∠4 = 60°
Δ ABC ஆனது இரு சமபக்க முக்கோணம் [∵ ∠1 = ∠4 = 60 °]
AB = BC
இணைகரம் ABCD ஒரு சாய் சதுரமாகும்.
14.

அனைத்துப் புள்ளிகளும் x-அச்சின் மேல் அமைந்துள்ளன .
15.
விளையாட்டு வீரர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு=p(A)=0.72
அந்த விளையாட்டில் தோல்வியடைவதற்கான நிகழ்தகவு p(A')=1-p(A)
= 1 - 0.72 = 0.28
p(A')=0.28
16.
மொத்த இளைஞர்களின் எண்ணிக்கை n(S)=400
வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர் எண்ணிக்கை n(A) = 191
வாக்காளர் அடையாள அட்டை இல்லாத இளைஞர்கள் n(B) = 400 - 191 = 209
\(n(B)=\frac { n(B) }{ n(S) } =\frac { 209 }{ 400 } \)
17.
மொத்த வேலையாட்கள் = 42
ஒப்பீட்டு நிகழ்வெண்:
மகிழுந்து பயன்படுத்துவோருக்கான நிகழ்தகவு = \(\frac { 7 }{ 42 } =\frac { 1 }{ 6 } \)
இரு சக்கர வண்டி பயன்படுத்துவோருக்கான நிகழ்தகவு = \(\frac { 20 }{ 42 } =\frac { 10 }{ 21 } \)
மிதிவண்டி பயன்படுத்துவோருக்கான நிகழ்தகவு = \(\frac { 15 }{ 42 } =\frac { 5 }{ 14 } \)
இந்த எடுத்துக்காட்டில் நிகழ்தகவுகளின் மொத்தக் கூடுதல் 1ஐ விட அதிகமாகவில்லை என்பதைக் கவனிக்கவும்.\(\frac {1}{6}+\frac {10}{21}+ \frac {5}{14} = \frac {7}{42}+\frac {20}{42}+\frac {15}{42}= 1\)
18.
A(-3, 5) மற்றும் B(4, -9) என்பன கொடுக்கப்பட்ட புள்ளிகள். P(2, -5) ஆனது AB யை உட்புறமாக m : n என்ற விகிதத்தில் பிரிக்கிறது.
பிரிவுச் சூத்திரத்தின்படி,
P(x,y)=P\(\left( \frac { { mx }_{ 2 }+{ nx }_{ 1 } }{ m+n } ,\frac { { my }_{ 2 }+{ ny }_{ 1 } }{ m+n } \right) \)=P(2,-5)
இங்கு x1=-3, y1=5 , x2=4, y2=-9
m=7, n=2
= \(\left( \frac { m(4)+n(-3) }{ m+n } ,\frac { m(-9)+n(5) }{ m+n } \right) \)=P(2,-5)
y -அச்சுத் தொலையை சமப்படுத்த.
\(\frac { 4m-3n }{ m+n } \) = 2/1
4m-3n=2(m+n)
4m-2m=2n+3n
2m=5n
\(\frac { m }{ n } =\frac { 5 }{ 2 } \)
m : n = 5 : 2
எனவே P ஆனது AB யை 5 : 2 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கிறது.
19.
ABC என்பது இருசமபக்க செங்கோண முக்கோணம்
D(x, y) என்பது ஒரு புள்ளி மேலும் ABCD ஒரு சதுரம் மூலைவிட்டங்கள் AC மற்றும் BD ம் M ல் இருசமக் கூறிடும்.
AC நடுப்புள்ளி \(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
\(\left( \frac { -5+5 }{ 2 } ,\frac { 4+2 }{ 2 } \right) \)
\(\left( \frac { 0 }{ 2 } ,\frac { 6 }{ 2 } \right) = (0,3)\)
M என்பது BD ன் நடுப்புள்ளி ஆகும்
\([\frac { -1+x }{ 2 } , \frac { -2+y }{ 2 } ] = (0,3)\)
\(\frac { -1+x }{ 2 }= 0 ⇒ x = 1\)
\( \frac { -2+y }{ 2 } = 0 ⇒ y = 8\)
D யின் ஆயத்தொலைவுகள் (1,8)

20.
கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடு 3(x+1)=3(5-x)-2(5+x)
x=1/4 என பிரதியிட,
3(x+1)=3(5-x)-2(5+x)
3(1/4+1)=3(5-1/4)-2(5+1/4)
\(3\left( \frac { 1+4 }{ 4 } \right) =3\left( \frac { 20-1 }{ 4 } \right) -2\left( \frac { 20+1 }{ 4 } \right) \)
\(3\times \frac { 5 }{ 4 } =3\times \frac { 19 }{ 4 } -2\times \frac { 21 }{ 2 } \)
\(\frac { 15 }{ 4 } =\frac { 57 }{ 4 } -\frac { 42 }{ 4 } =\frac { 15 }{ 4 } \)
=\(\frac { 15 }{ 4 } =\frac { 15 }{ 4 } \) சமம்
எனவே 1/4 என்பது 3(x + 1) = 3( 5–x) – 2( 5 + x) என்ற சமன்பாட்டின் தீர்வாகும்.
21.
(i) \(\frac{7}{128}\)
\(\frac{7}{128}=\frac{7}{2^7 5^0}\)

இது \(\frac{p}{2^m \times 5^n}\) என்ற வடிவில் உள்ளது. இங்கு p \(\in\) Z மற்றும் m, n \(\in\) W
எனவே, \(\frac{7}{128}\) என்பது முடிவுறு தசம விரிவைப் பெற்றிருக்கும்.
(ii) \(\frac{21}{15}\)

இது \(\frac{p}{2^m \times 5^n}\) என்ற வடிவில் உள்ளது.
இங்கு p \(\in \) Z மற்றும் m, n \(\in \) W
எனவே, \(\frac{21}{15}\) என்பது முடிவுறு தசம விரிவைப் பெற்றிருக்கும்.

(iii) \(\begin{aligned}
&4 \frac{9}{35}=\frac{149}{35}
\end{aligned}\)
\(\begin{aligned}
&\frac{149}{35}=\frac{149}{5^1 7^1}
\end{aligned}\)

இது \(\frac{P}{2^m 5^n}\) என்ற வடிவில் இல்லை எனவே, 4\(\frac{9}{35}\)என்பது முடிவுறா சுழல் தசம விரிவைப் பெற்றிருக்கும்.
(iv) \(\frac{219}{2200}\)

\(\frac{219}{2200}=\frac{219}{2^3 5^2 11^1}\)
இது \(\frac{P}{2^{m}5^{n}}\) என்ற வடிவில் இல்லை
எனவே, \(\frac{219}{2200}\) என்பது முடிவுறாச் சுழல் சுழல் தசம விரிவைப் பெற்றிருக்கும்.
22.
{ b, c, f, g}
23.
l3 - 8m3 - 27n3 - 18lmn = l3 + (-2m)3 + (-3n)3 - 3(l)(-2m)(-3n)
=(l - 2m - 3n) (l2 + (-2m)2 + (-3n)2 - l \(\times\) -2m - (-2m \(\times\) -3n) - (-3n\(\times\) l))
= (l - 2m - 3n) (l2 + 4m2 + 9n2 + 2lm - 6mn + 3nl)
24.
வட்ட நாற்கரம் ABCD - ல்
\(\angle\)ABC = 180° - 120° = 60°
\(\angle\)BCA = 90°
\(\therefore\) \(\angle\)BAC = 180° - (90° + 60°) = 30°
25.
x2+4y2+9z2-4xy+12yz-6xz
=(-x)2+(2y)2+(3z)2+2(-x)(2y)+2(2y)(3z)+2(3z)(-x)
=(-x+2y+3z)2 (அல்லது)(x-2y-3z)2
26.
\({\sqrt[9]{8}\over \sqrt[6]{6}}={8^{1\over9}\over 6^{1\over6}}\) (6,9 இன் மீ.பொ.ம18என்பதைக் குறித்துக் கொள்க.)
\(= {8^{2\over 18}\over 6^{3\over18}}\)(எப்படி ?) \(=({8^2\over 6^3})^{1\over18}=({8\times8\over 6\times6\times6})^{1\over18}\)
\(=({8\over27})^{1\over18}=[({2\over3})^3]^{1\over18}=({2\over3})^{1\over6}=\sqrt[6]{2\over3}\)
27.
\(B\cap C=\left\{ \sqrt { 3 } ,\sqrt { 5 } ,6,13 \right\} \cap \left\{ \sqrt { 2 } ,\sqrt { 3 } ,\sqrt { 5 } ,9 \right\} = \{ \sqrt { 3 } ,\sqrt { 5 } \} \)
\(A\cap (B\cap C)= \left\{ -11,\sqrt { 2 } ,\sqrt { 5 } ,7 \right\} \cap \{ \sqrt { 3 } ,\sqrt { 5 } \} = \{ \sqrt { 5 } \} \) .......(1)
\(A\cap B= \left\{ -11,\sqrt { 2 } ,\sqrt { 5 } ,7 \right\} \cap \left\{ \sqrt { 3 } ,\sqrt { 5 } ,6,13 \right\} = \{ \sqrt { 5 } \} \)
\(\left( A\cap B \right) \cap C=\{ \sqrt { 5 } \} \cap \left\{ \sqrt { 2 } ,\sqrt { 3 } ,\sqrt { 5 } ,9 \right\} = \{ \sqrt { 5 } \} \) ......(2)
(1) மற்றும் (2) லிருந்து
\(A\cap (B\cap C)=\left( A\cap B \right) \cap C\) என நிரூபிக்கப்பட்டது.
28.
E = {x : x என்பது 9 ஐ விடக் குறைவான ஒற்றை முழு எண்}
29.
(i) நாற்கரம்
(ii) நாற்கரம்
(iii) நாற்கரம் அல்ல
(iv) நாற்கரம்
(v) நாற்கரம்
(vi) நாற்கரம் அல்ல
(vii) நாற்கரம்
(viii) நாற்கரம் அல்ல
30.

கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகளை இணைத்தால், y அச்சின் மீது அமைந்துள்ள நேர்கோடு கிடைக்கிறது.
31.
பகடை சீரானதாக இருக்கும் பொழுது விளைவுகள் சமவாய்ப்பு உடையனவாக இருக்கின்றன.
32.
ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு நிகழ்ச்சி ஆகும்.(வரையறை)
33.
நிகழ்தகவின் மதிப்பு இடைவெளி 0 மற்றும் 1
34.
P (A) + P (A)′ = 1
35.
(b)
0 மற்றும் 1
36.
a மற்றும் b இரண்டும் பூஜ்ஜியமாக இருக்கக்கூடாது.
37.
38.
\(\left(\frac{x_1+x_2}{2}, \frac{y_1+y_1}{2}\right)\) நடுப்புள்ளி
\(\Rightarrow \left(\frac{x_1+3}{2}, \frac{y_1+4}{2}\right) =(-3,2) \)
\(\frac{x_1+3}{2} = -3\)
x + 3 = -6
x = 9
\(\frac{y_1+4}{2} = 2\)
y + 4 = 4
y = 0
\(\Rightarrow x_1 =-9 ; y_1=0 \)
39.
p(-5) = a(-52) + b(-5) + c = 25a - 5b + c = 0 ....(1)
p(+3) = a(+32) + b(3) + c = 9a + 3b + c = 0 ....(2)
25a - 5b = 9a + 3b
25a - 9a = 3b + 5b
16a = 8b
a/b = 8/16 = 1/2
a = 1 b = 2 என (1) ல் பிரதியிட
25(1) - 5(2) = -c
25 - 10 = 15 = -c
c = -15
40.
(a+b−c)2 = [- (-a-b+c)]2 = (-1)2 (-a-b+c)2 = (-a-b+c)2
41.
(c)
(x + 2)
42.
180o - 75o = 105o
43.
படத்தில் ∠QRS = 100o
∠TPS = 180o - 100o = 80o
(∵ PQRS ஓர் வட்ட நாற்கரம்)
∠TVS = 180o - 80o = 100o
44.
45.
(b)
10
46.
(d)
(A ⋂ B)' =A' U B'
47.
(b)
0.00592
48.
(c)
5.367 x 10–3
49.
\(\left(\because \frac{2 \sqrt{3}}{3 \sqrt{2}} \times \frac{\sqrt{2}}{\sqrt{2}}=\frac{2 \sqrt{6}}{6}=\frac{\sqrt{6}}{3}\right)\)
50.
\(\sqrt{25}=\pm5\) என எழுதுவது தவறு.
51.
(i) \(\sqrt { 32 } \times \sqrt { 2 } = \sqrt {64} = 8\)
(ii) \(\frac { \sqrt { 27 } }{ \sqrt { 3 } } = \sqrt {\frac {27}{3}} = \sqrt {9}= 3\)
(iii) \(\sqrt { 72 } \times \sqrt { 8 } = \sqrt {9 \times 8 \times 8} = \sqrt {3^ 2 \times 8^ 2} = 3 \times 8= 24\)
(iv) \(\frac { \sqrt { 54 } }{ \sqrt { 18 } } = \frac {\sqrt {2 \times 3 \times 3\times 3}}{\sqrt {3 \times 3\times 2}}= \frac {\sqrt {6 \times 3^ 2}}{\sqrt 3^ 2 \times 2} = \frac {\sqrt {6} \times 3}{3 \times \sqrt {2}}\) \(= \sqrt {6/2} = \sqrt {3}\)
52.
புள்ளிகள் ( 5, –1 )(0,0)
\(d=\sqrt{(5-0)^2+(-1-0)^2}=\sqrt{25+1}=\sqrt{26}\)
53.
(c)
வெற்றுக் கணம்
54.
(d)
5a
55.
56.
A = {x, y, z}
A ன் உட்கணங்கள் = {x},{y},{z}, {x, y}, {y, z}, {x, z}, {x, y, z}, { }
57.
(a)
ஓருறுப்புக் கணம்
58.
(b)
7 ∈ {1,2,3,4,5,6,7,8,9,10}
59.
Δன் கோணங்களின் கூடுதல் = 180°
3x - 40 + x + 20+ 2x - 10 = 180°
6x - 30 = 180°
6x = 210°
x = 210/3
x = 35°
60.
AC இணைக்கவும்
\(\triangle \mathrm{ACD},\) ல் \(\angle \mathrm{D}=42^{\circ}\)
\(\therefore \angle \mathrm{DAC}+\angle \mathrm{ACD}=138^{\circ}(180-42) \)
\(\therefore \angle \mathrm{DAC}=\angle \mathrm{ACD}=69^{\circ} \)
(எதிர்பக்கம் சமம் கோணங்கள் சமம்)
\(\triangle \mathrm{ABC} \) ல் \( \angle \mathrm{B}=108^{\circ} \)
\(\therefore \angle \mathrm{BAC}+\angle \mathrm{BCA}=72^{\circ}(180-108) \)
\(\therefore \angle \mathrm{BAC}=\angle \mathrm{BCA}=36^{\circ}\)
(எதிர்பக்கம் சமம் கோணங்கள் சமம்)
\(\angle \mathrm{BCD}=\angle \mathrm{BCA}+\angle \mathrm{ACD} \)
\(=36^{\circ}+69^{\circ}=105^{\circ}\)
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards