9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
9 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 9th Standard Mathematics Tamil Medium Model Questions Full Chapter 2020 )
Download Tamil Nadu 9th Standard Maths question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 1184 மாணவர்களில், 233 பேர் கணிதத்திலும், 125 பேர் சமூக அறிவியலிலும், 106 பேர் அறிவியலிலும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். சம வாய்ப்பு முறையில் ஒரு மாணவரைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த மாணவர்
(i) கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவராக இருக்க,
(ii) அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு காண்க
2.
ஒரு குடியிருப்பில், 275 குடும்பங்கள் தமிழ் செய்தித்தாளும், 150 குடும்பங்கள் ஆங்கிலச் செய்தித்தாளும், 45 குடும்பங்கள் இந்தி செய்தித்தாளும் வாங்குகின்றனர். 125 குடும்பங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்தித்தாள்களையும், 17 குடும்பங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி செய்தித்தாள்களையும், 5 குடும்பங்கள் தமிழ் மற்றும் இந்தி செய்தித்தாள்களையும், 3 குடும்பங்கள் மூன்று செய்தித்தாள்களையும் வாங்குகிறார்கள். குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒரு செய்தித்தாளையாவது வாங்குகிறார்கள் எனில்,
(i) ஒரு செய்தித்தாளை மட்டும் வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை,
(ii) குறைந்தது இரண்டு செய்தித்தாள்களை வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை,
(iii) குடியிருப்பில் உள்ள மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் காண்க.
3.
\(3.4\bar { 5 } \) ஐ 4 தசம இடத் திருத்தமாக எண் கோட்டில் குறிக்கவும்.
4.
படம் - இல் ABCD கொடுக்கப்பட்டுள்ள இணைகரம், ABCD இன் பக்கங்கள் AB மற்றும் DC இன் நடுப்புள்ளிகள் முறையே P மற்றும் Q எனில் APCQ ஓர் இணைகரம் என நிறுவுக.

5.
A(7, 10), B(–2, 5), C(3, –4) என்ற புள்ளிகள் ஒரு செங்கோண முக்கோணத்தின் உச்சிகள் என நிறுவுக.
6.
பெருக்குக: (4x – 5), (2x2 + 3x – 6).
7.
''STATISTICS'' என்ற சொல்லிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்படும்போது, அது ஆங்கில உயிரெழுத் தாக இருக்க நிகழ்தகவு.
\(\frac { 1 }{ 10 } \)
\(\frac { 2 }{ 10 } \)
\(\frac { 3 }{ 10 } \)
\(\frac { 4 }{ 10 } \)
8.
A என்பது S-ன் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி மற்றும் A' என்பது A-ன் நிரப்பு நிகழ்ச்சி எனில் P (A)′ இன் மதிப்பு ____.
1
0
1 - A
1 - P(A)
9.
ஒரு சமவாய்ப்புச் சோதனையில் வாய்ப்புள்ள அனைத்து விளைவுகளின் நிகழ்தகவு எப்பொழுதும் ______ இக்குச் சமம்.
ஒன்று
பூச்சியம்
முடிவிலி
மேற்கண்ட அனைத்தும்.
10.
ஒரு சமவாய்ப்புச் சோதனை _____ ஐக் கொண்டுள்ளது
குறைந்தபட்சம் ஒரு விளைவு
குறைந்தபட்சம் இரண்டு விளைவுகள்
அதிகபட்சம் ஒரு விளைவு
அதிகபட்சம் இரண்டு விளைவுகள்
11.
ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு எவ்வாறு இருக்க முடியாது?
பூச்சியத்திற்குச் சமம்
பூச்சியத்தை விடப் பெரியது
1 இக்குச் சமம்
பூச்சியத்தை விடப் சிறியது
12.
\(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } ↑ \frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \) எனில், இங்கு a1x + b1y + c1 = 0 மற்றும் a2x + b2 y + c2 = 0 ஆகிய நேரிய சமன்பாடுகளுக்கு _______.
தீர்வு இல்லை
இரண்டு தீர்வுகள்
ஒரு தீர்வு
எண்ணற்ற தீர்வுகள்
13.
ஒரு மாறியில் அமைந்த நேரிய சமன்பாடு என்பது ______.
2x + 2 = y
5x − 7 = 6 − 2x
2t(5 − t) = 0
7p − q = 0
14.
கீழ்க்கண்டவற்றில் 2x − y = 6 இன் தீர்வு எது?
(2,4)
(4,2)
(3, −1)
(0,6)
15.
(−1,−6), (−2,12) மற்றும் (9,3) ஆகியவற்றை முனைப் புள்ளிகளாகக் கொண்டுள்ள ஒரு முக்கோணத்தின் நடுக்கோட்டு மையம் ____.
(3,2)
(2,3)
(4,3)
(3,4)
16.
(−5,1) மற்றும் (2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டை Y-அச்சு உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்?
1:3
2:5
3:1
5:2
17.
(a+b−c)2 = _______.
(a-b+c)2
(-a-b+c)2
(a+b+c)2
(a-b−c)2
18.
(x+y)(x2−xy+y2)=_______
(x+y)3
(x-y)3
x3+y3
x3-y3
19.
வட்ட நாற்கரம் ABCD யில் ㄥA = 4x, ㄥC = 2x எனில், x இன் மதிப்பு______.
300
200
150
250
20.
கொடுக்கப்பட்ட வெண்படத்தில் நிழலிடப்பட்ட பகுதியானது
Z−(XUY)
(XUY)⋂Z
Z−(X⋂Y)
ZU(X⋂Y)
21.
\(n(A\cup B\cup C)\)= 40, n(A)= 30, n(B)= 25, n(C)= 20, n(A⋂B)=12, n(B⋂C)=18 மற்றும் n(A⋂C)=15 எனில் n(A⋂B⋂C) =_______
5
10
15
20
22.
கீழ்காண்பவற்றில் எது சரி?
A − B = A ⋂ B
A − B = B − A
(A U B)' =A' U B'
(A ⋂ B)' =A' U B'
23.
அறிவியல் குறியீட்டு வடிவ எண்ணிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு எது?
0.5 x105
0.1254
5.367 x 10–3
12.5 x 102
24.
\(\sqrt{27}+\sqrt{12}=\) _____.
\(\sqrt{39}\)
\(5\sqrt{6}\)
\(5\sqrt{3}\)
\(3\sqrt{5}\)
25.
பின்வருவனவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல?
\(\sqrt{8\over 18}\)
\({7\over 3}\)
\(\sqrt{0.01}\)
\(\sqrt{13}\)
26.
\(0.\bar { 23 } +0.\bar { 22 } \) இன் மதிப்பு என்ன?
\(0.\bar { 43 } \)
0.45
\(0.4\bar { 5 } \)
\(0.\bar { 45 } \)
27.
2 மற்றும் 2.5 என்ற எண்களுக்கிடையே உள்ள ஒரு விகிதமுறா எண்________.
\(\sqrt { 11 } \)
\(\sqrt { 5 } \)
\(\sqrt { 2.5 } \)
\(\sqrt { 8 } \)
28.
(–5, 2) மற்றும் (2, –5) என்ற புள்ளிகள் ________ அமையும்
ஒரே காற்பகுதியில்
முறையே II, III காற்பகுதியில்
முறையே II, IV காற்பகுதியில்
முறையே IV, II காற்பகுதியில்
29.
புள்ளி (0, –7) ________ இல் அமையும்.
x-அச்சின் மீது
இரண்டாம் காற்பகுதியில்
y-அச்சின் மீது
நான்காம் காற்பகுதியில்
30.
புள்ளி (–3,5) ________ ஆவது காற்பகுதியில் அமையும்.
I
II
III
IV
31.
B – A என்பது B, எனில் A∩B என்பது ______.
A
B
U
∅
32.
பின்வருவனவற்றுள் சரியானது எது?
∅ ⊆ {a, b}
∅ ∈ {a, b}
{a} ∈ {a, b}
a ⊆ {a, b}
33.
முக்கோணத்தின் கோணங்கள் (3x-40)0, (x +20)0+மற்றும் (2x-10)0 எனில் x இன் மதிப்பு ______.
40°
35°
50°
45°
34.
நாற்கரம் ABCD இல் ∠A மற்றும் ∠B இன் இரு சம வெட்டிகள் O இல் சந்திக்கின்றன, எனில் ∠AOB இன் மதிப்பு ____.
∠C + ∠D
\(\frac { 1 }{ 2 } (\angle C+\angle D)\).
\(\frac { 1 }{ 2 } \angle C+\frac { 1 }{ 3 } \angle D\)
\(\frac { 1 }{ 3 } \angle C+\frac { 1 }{ 2 } \angle D\).
35.
நாற்கரம் ABCD இல் AB = BC மற்றும் AD = DC எனில், கோணம் ∠BCD இன் அளவு

150°
30°
105°
72°
36.
முக்கோணத்தின் வெளிக்கொணம் எந்த இரு கோணங்களின் கூடுதலுக்குச் சமம்?
வெளிக்கோணஙகள்
உள்ளெதிர்க்கோணங்கள்
ஒன்றுவிட்ட கோணங்கள்
உள் கோணங்கள்
37.
கொடுக்கப்பட்ட சுழலட்டையின் (spinner) முள் 3இன் மடங்குகளில் நிலை கொள்ளாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
38.
ஓர் உற்பத்தியாளர் 7000 ஒளி உமிழ் இருமுனைய விளக்குகளை (LED lights) சோதனை செய்ததில் அவற்றில் 25 விளக்குகள் குறைபாடுடையதாகக் கண்டறியப்பட்டன. சம வாய்ப்பு முறையில் ஒரு விளக்கைத் தேர்ந்தெடுக்கும்போது அது குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு என்ன?
39.
இரு பகடைகள் உருட்டப்படும்போது கிடைக்கும் எண்களின் கூடுதல்
(i) 1-க்குச் சமமாக (ii) 4-க்குச் சமமாக (iii) 13-ஐ விடச் சிறியதாக
40.
பிரிவுச் சூத்திரத்தைப் பயன்படுத்திப் புள்ளிகள் A(7, −5), B(9, −3) மற்றும் C(13,1) ஆகியன ஒரே கோட்டில் அமையும் என நிரூபிக்க.
41.
புள்ளிகள் A(−5,4) , B(−1,−2) மற்றும் C(5,2) என்பன இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் உச்சிகள், இதில் B இல் செங்கோணம் அமைந்துள்ளது. மேலும் ABCD ஒரு சதுரம் எனில் D இன் ஆயத்தொலைவுகளைக் காண்க.
42.
\(\frac { 1 }{ 4 } \)என்பது 3(x + 1) = 3( 5–x) – 2( 5 + x) என்ற சமன்பாட்டின் தீர்வாகுமா என்பதைச் சோதித்துப் பார்.
43.
பின்வருவனவற்றை தசமவடிவில் எழுதுக.
(i) \(\frac { -4 }{ 11 } \)
(ii) \(\frac { 11 }{ 75 } \)
44.
பின்வரும் விகிதமுறு எண்களை தசம வடிவில் எழுதுக
(i) \(2\over 3\)
(ii) \(47\over 99\)
(iii) \(-{16\over 45}\)
45.
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
a3+b3-3ab+1
46.
பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
25x2+4y2+9z2-20xy+12yz-30xz
47.
ஆரம் \(4\sqrt { 2 } \) செ.மீ. உள்ள வட்டத்தில் AB மற்றும் CD என்ற ஒன்றுக்கு ஒன்று செங்குத்தான விட்டங்கள் வரையப்பட்டுள்ளன எனில், நாண் AC இன் நீளம் காண்க, மேலும் \(\angle OAC\) மற்றும் \(\angle OCA \) காண்க.
48.
A = {a, {a, b}} எனில், A இன் எல்லா உட்கணங்களையும் எழுதுக.
49.
பின்வரும் கணங்களைக் கணக் கட்டமைப்பு முறையில் எழுதுக.
D = ஓர் ஆண்டில் உள்ள தமிழ் மாதங்களின் தொகுப்பு
50.
பின்வருவனவற்றில் எவை கணங்களாகும்?
வளைகோற் பந்தாட்டம் விளையாட்டை நன்றாக விளையாடும் வீரர்களின் தொகுப்பு.
51.
கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை சரிவகம் அல்லது சரிவகம் அல்ல எனக் காண்க.

52.
நடுப்புள்ளியின சூத்திரத்தைப் பயன்படுத்தி ஒரு செங்கோண முக்கோணத்தின் காரணத்தின் நடுப்புள்ளியானது முக்கோணத்தின் முனைகளில் இருந்து சம தொலைவில் அமையும் என நிறுவுக. (உகந்த புள்ளிகளை எடுக்க).
53.
x3 + 13x2 +32x +20 ஐ நேரிய காரணிகளாகக் காரணிப்படுத்துக.
54.
600 குடும்பங்கள் உள்ள ஒரு குடியிருப்பில் \(\frac { 3 }{ 5 } \) பங்கு துள்ளுந்து(Scooter), \(\frac { 1 }{ 3 } \) பங்கு மகிழுந்து(car), \(\frac { 1 }{ 4 } \) பங்கு மிதிவண்டி(bicycle) வைத்துள்ளனர். 120 குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மகிழுந்தும், 86 குடும்பங்கள் மகிழுந்து மற்றும் மிதிவண்டியும், 90 குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மிதிவண்டியும் \(\frac { 2 }{ 15 } \) பங்கு குடும்பங்கள் மூன்று வகை வாகனங்களையும் வைத்திருக்கிறார்கள் எனில்,
(i) குறைந்தது இரண்டு வகை வாகனங்களை வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை,
(ii) எந்த ஒரு வாகனமும் வைத்திருக்காத குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை காண்க.
55.
வென்படங்களைப் பயன்படுத்தி \(\left( A\cap B \right) '\)=\(A'\cup B'\) என்பதைச் சரிபார்க்க.
56.
PQ= 5 செ.மீ, PR = 6 செ.மீ மற்றும் \(\angle QPR=60°\) அளவுகளுள்ள \(\triangle PQR\) வரைக. மேலும் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்கவும்.
57.
2x - 3y - 4z = 0 எனில், 8x3 - 27y3 - 64z3 ஐக் காண்க.
58.
கீழ்க்காணும் தசம விரிவுகளை விகிதமுறு எண்ணாக எழுதுக?\(0.\overline { 0001 } \)
59.
புள்ளி (x, y) ஆனது புள்ளிகள் (3, 4) மற்றும் (–5, 6) என்ற புள்ளிகளிலிருந்து சம தொலைவில் இருக்கிறது. x மற்றும் y இக்கு இடையே உள்ள உறவைக் காண்க.
1.
நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் = 1184 ஆகவே n = 1184
(i) E1 என்பது கணிதத்தில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E1) = 233, அதாவது r1 = 233
P(E1) = \(\frac { { r }_{ 1 } }{ n } =\frac { 233 }{ 1184 } \)
(ii) E2 என்பது அறிவியலில் நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள் உள்ள நிகழ்ச்சி என்க.
ஆகையால் n(E2 ) = 1069 , அதாவது , r2 = 106
P(E2) = \(\frac { { r }_{ 2 } }{ n } =\frac { 106 }{ 1184 } \)
ஆகவே அறிவியலில் நூற்றுக்கு நூறு பெறாதவராக இருக்க நிகழ்தகவு
P(E'2) = 1 - P(E2)
= 1 - \(\frac { 106 }{ 1184 } \) = \(\frac { 1078 }{ 1184 } \)
2.

(i) தமிழ் செய்தித்தாள் வாங்குபவர்கள் n(A) = 275
ஆங்கில செய்தித்தாள் வாங்குபவர்கள் n(B) = 150
ஹிந்தி செய்தித்தாள் வாங்குபவர்கள் n(C) = 45
தமிழ் மற்றும் ஆங்கிலம் செய்தித்தாள் வாங்குபவர்கள் n(A\(\cap\)B) = 125
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி செய்தித்தாள் வாங்குபவர்கள் n(B \(\cap\) C) = 17
தமிழ் மற்றும் ஹிந்தி செய்தித்தாள் வாங்குபவர்கள் n(C \(\cap\)A) = 5
மூன்று செய்தித்தாள் வாங்குபவர்கள் n(A\(\cap\)B\(\cap\)C) = 3
(i) ஒரு செய்தித்தாளை மட்டும் வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை
= 148+11+ 26 = 185
(ii) குறைந்தது இரண்டு செய்தித் தாள்களை வாங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை
= 122 + 14 + 2 + 3 + 141
(iii) குடியிருப்பில் உள்ள மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கை
= 148 + 11 + 26 + 122 + 14 + 2 + 3 = 326
3.
\(3.4\bar { 5 } \) = 3.45454545...
= 3.4545 ((4 தசம இடத் திருத்தமாக)
இது 3 மற்றும் 4 என்ற எண்களுக்கு இடையில் அமையும்

4.
AB மற்றும் DC இன் நடுப்புள்ளிகள் முறையே P மற்றும் Q என்க.
ஆகவே \(AP=\frac{1}{2}AB\) மற்றும்
\(QC=\frac{1}{2}DC\) ...(1)
ஆனால், AB = DC (இணைகரத்தின் எதிர்ப் பக்கங்கள் சமம்)
\(\frac{1}{2}AB=\frac{1}{2}DC\)
AP = QC ....(2)
மேலும், AB || DC
AP || QC .....(3) [∵ ABCD ஓர் இணைகரமாகும்]
எனவே, நாற்கரம் APCQ இல் AP || QC மற்றும் AP = QC [ (2) மற்றும் (3) இல் இருந்து]
ஃ நாற்கரம் APCQ ஓர் இணைகரமாகும்.
5.
A = (7, 10), B = (–2, 5), C = (3,–4)
\(AB=\sqrt { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) ^{ 2 }+\left( y_{ 2 }-y_{ 1 } \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( -2-7 \right) ^{ 2 }+\left( 5-10 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( -9 \right) ^{ 2 }+\left( -5 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 81+25 \right) } \)
\(=\sqrt { 106 } \)
\(A{ B }^{ 2 }=106\)......1
\(BC=\sqrt { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) ^{ 2 }+\left( y_{ 2 }-y_{ 1 } \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 3-\left( -2 \right) \right) ^{ 2 }+\left( -4-5 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 5 \right) ^{ 2 }+\left( -9 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 81+25 \right) } \)
\(=\sqrt { 106 } \)
\({ BC }^{ 2 }=106\) ......(2)
\(BC=\sqrt { \left( { x }_{ 2 }-{ x }_{ 1 } \right) ^{ 2 }+\left( y_{ 2 }-y_{ 1 } \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 3-7 \right) ^{ 2 }+\left( -4-10 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( -4 \right) ^{ 2 }+\left( -14 \right) ^{ 2 } } \)
\(=\sqrt { \left( 16+196 \right) } \)
\(=\sqrt { 212 } \)
\({ AC }^{ 2 }=212\).....(3)
(1),(2) மற்றும் (3) இல் இருந்து
AB2 + BC2 = 106 + 106 = 212 = AC2
அதாவது AB2 + BC2 = AC2
ஆகவே தரப்பட்டுள்ள புள்ளிகள் உச்சி B இல் செங்கோணத்தைக் கொண்ட செங்கோண ΔABC ஐ அமைக்கும்.
6.
(4x – 5), மற்றும் (2x2 + 3x – 6) ஐப் பெருக்குவதற்கு, முதல் பல்லுறுப்புக்கோவையின் ஒவ்வோர் உறுப்பையும் இரண்டாவது பல்லுறுப்புக் கோவையின் ஒவ்வோர் உறுப்புடன் பகிர்ந்து பெருக்குதல் வேண்டும். இந்த எடுத்துக்காட்டில் நாம் 4x மற்றும் –5 ஐப் பகிர வேண்டியது தேவையாகிறது. பிறகு ஒத்த உறுப்புகளை இணைக்க வேண்டும்.

=8x3+12x2-24x+10x2-15x+30
= 8x3 +2x2–39x +30
மாற்றுமுறையாக கெழுக்களைப் பிரித்துப் பெருக்கும் முறையைப் பயன்படுத்தலாம்
2 +3 -6
+4 -5
-----------------------
–10 –15 +30
8 +12 –24
-------------------------
8 +2 –39 +30
-------------------------
∴ (4x –5) (2x2+3x–6) = 8x3 + 2x2 – 39x + 30
7.
(c)
\(\frac { 3 }{ 10 } \)
8.
P (A) + P (A)′ = 1
9.
(a)
ஒன்று
10.
(b)
குறைந்தபட்சம் இரண்டு விளைவுகள்
11.
நிகழ்தகவின் மதிப்பு இடைவெளி 0 மற்றும் 1
12.
\(\frac { { a }_{ 1 } }{ { a }_{ 2 } } \neq \frac { { b }_{ 1 } }{ { b }_{ 2 } } \) ; ஒரே தீர்வு
13.
(b)
5x − 7 = 6 − 2x
14.
2x − y = 6
2(4) - 2 = 8 - 2 = 6 = RHS
15.
(b)
(2,3)
16.
\(\left(\frac{m x_2+n x_1}{m+n}, \frac{m y_2+n y_1}{m+n}\right)\) பிரிவுச் சூத்திரப்படி
x அச்சுத் தொலைவு = 0
\(\frac{\mathrm{m}(2)+(-5) \mathrm{n}}{\mathrm{m}+\mathrm{n}} =0 \)
\(\frac{\mathrm{m}}{\mathrm{n}} =\frac{5}{2} \)
\(\mathrm{~m}: \mathrm{n} =5: 2 \)
BD ன் நடுப்புள்ளி (3, 4)
17.
(a+b−c)2 = [- (-a-b+c)]2 = (-1)2 (-a-b+c)2 = (-a-b+c)2
18.
x3+y3 ≡ (x+y)(x2−xy+y2)
19.
4x + 2x = 180o
6x = 180o
x = 30o
20.
(c)
Z−(X⋂Y)
21.
(b)
10
22.
(d)
(A ⋂ B)' =A' U B'
23.
(c)
5.367 x 10–3
24.
\((\because \sqrt{27}+\sqrt{12}=\sqrt{3 \times 9}+\sqrt{3 \times 4} \)
\(=\sqrt{3 \times 3^2}+\sqrt{3 \times 2^2} \)
\(=3 \sqrt{3}+2 \sqrt{3}=5 \sqrt{3}) \)
25.
(i) \(\sqrt{8\over 18} =\sqrt{4\over 9} = 2/3\) ஒரு விகிதமுறு எண்
(2) 7/3 ஒரு விகிதமுறு எண்
(3) \( \sqrt{0.01} = \sqrt{1\over 100} = 1/10\) ஒரு விகிதமுறு எண்
(4) \( \sqrt{13}\) ஒரு விகிதமுறா எண்
(∵ முடியுறா சூழல் தன்மைக்கொண்டது)
26.
(d)
\(0.\bar { 45 } \)
27.
(2)2 = 4 மற்றும் (2.5)2 = 6.25 = 4 மற்றும் 6.25 - க்கு இடையே 5 சாய்கிறது. 2 மற்றும் 2.5 - க்கு \(\sqrt { 5 } \) இடையே சாய்கிறது
28.
(c)
முறையே II, IV காற்பகுதியில்
29.
(c)
y-அச்சின் மீது
30.
(b)
II
31.
(d)
∅
32.
(a)
∅ ⊆ {a, b}
33.
Δன் கோணங்களின் கூடுதல் = 180°
3x - 40 + x + 20+ 2x - 10 = 180°
6x - 30 = 180°
6x = 210°
x = 210/3
x = 35°
34.
நாற்கரத்தில்
\(\angle \mathrm{A}+\angle \mathrm{B}+\angle \mathrm{C}+\angle \mathrm{D}=360\)
இருபக்கமும் 2-ஆல் வகுக்க.
\(\frac{\angle \mathrm{A}}{2}+\frac{\angle \mathrm{B}}{2}+\frac{\angle \mathrm{C}}{2}+\frac{\angle \mathrm{D}}{2}=180 \)
\(\frac{\angle \mathrm{A}}{2}+\frac{\angle \mathrm{B}}{2} \rightarrow 180-\frac{\angle \mathrm{C}}{2}-\frac{\angle \mathrm{D}}{2} \ldots \text { (1) } \)
\(\triangle \mathrm{AOB}-\) ல்
\(\angle \mathrm{AOB}+\frac{\angle \mathrm{A}}{2}+\frac{\angle \mathrm{B}}{2}=180 \text { ( } \triangle\) ன் மூன்று கோணங்களில் கூடுதல் = 180o )
\(\angle \mathrm{AOB} =180-\left(\frac{\angle \mathrm{A}}{2}+\frac{\angle \mathrm{B}}{2}\right) \)
\(=180-\left(180^{\circ}-\frac{\angle \mathrm{C}}{2}-\frac{\angle \mathrm{D}}{2}\right) \) (1) லிருந்து
\(=\not {180^{\circ}}-\not {180^{\circ}}+\frac{\angle \mathrm{C}}{2}+\frac{\angle \mathrm{D}}{2}\)
நிறுவப்பட்டது
\(=\frac{1}{2}(\angle \mathrm{C}+\angle \mathrm{D})\)
35.
AC இணைக்கவும்
\(\triangle \mathrm{ACD},\) ல் \(\angle \mathrm{D}=42^{\circ}\)
\(\therefore \angle \mathrm{DAC}+\angle \mathrm{ACD}=138^{\circ}(180-42) \)
\(\therefore \angle \mathrm{DAC}=\angle \mathrm{ACD}=69^{\circ} \)
(எதிர்பக்கம் சமம் கோணங்கள் சமம்)
\(\triangle \mathrm{ABC} \) ல் \( \angle \mathrm{B}=108^{\circ} \)
\(\therefore \angle \mathrm{BAC}+\angle \mathrm{BCA}=72^{\circ}(180-108) \)
\(\therefore \angle \mathrm{BAC}=\angle \mathrm{BCA}=36^{\circ}\)
(எதிர்பக்கம் சமம் கோணங்கள் சமம்)
\(\angle \mathrm{BCD}=\angle \mathrm{BCA}+\angle \mathrm{ACD} \)
\(=36^{\circ}+69^{\circ}=105^{\circ}\)
36.
(b)
உள்ளெதிர்க்கோணங்கள்
37.
சுழலட்டை முள்ளின் மொத்த நிலைகள் n(S) = 8
சுழலட்டை முள் 3ன் மடங்குகளில் நிற்பது (A) = {3, 6}
சுழலட்டை முள் 3ன் மடங்கு அல்லாத 3 இடங்களில் நிலை கொள்வது B = {1, 2, 3,4,5,6, 7, 8}
n(B) = 6
\(P(B )=\frac { n(B) }{ n(S) } =\frac { 6 }{ 8 } =\frac { 3 }{ 4 } \)
38.
LED விளக்குகளின் மொத்த எண்ணிக்கை n(S) =7000
குறைபாடுடைய விலங்குகளின் எண்ணிக்கை n(A) = 25
S = மொத்த விளக்குகளின் எண்ணிக்கை
A = பழுதமுடைய விளக்குகள்
ஒரு விளக்கைத் தேர்ந்தெடுக்கும் போது அது குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு \(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 25 }{ 7000 } =\frac { 1 }{ 280 } \\ \)
39.
இரு பகடைகள் உருட்டப்படும் பொழுது கிடைக்கும் கூறுவெளி
S ={(1,1), (1, 2), (1,3), (1, 4), (1, 5), (1,6)
(2, 1), (2, 2), (2, 3), (2, 4), (2, 5), (2, 6)
(3, 1), (3, 2), (3, 3), (3, 4), (3,5), (3, 6)
(4, 1), (4, 2), (4, 3), (4, 4), (4, 5), (4, 6)
(5, 1), (5, 2), (5, 3), (5, 4), (5, 5), (5, 6)
(6, 1), (6, 2), (6, 3),(6, 4), (6, 5), (6, 6)}
n(S)=36
i) முக எண்களின் கூடுதல் 1க்கு சமமாக இருக்கும் நிகழ்ச்சி A என்க.
A ={ }
n(A) = 0
\(P(A)=\frac { n(A) }{ n(S) } =\frac { 0 }{ 36 } =0\)
ii) முக எண்களின் கூடுதல் 4க்கு சமமாக இருக்கும் நிகழ்ச்சி B என்க.
B = {(1, 3), (2, 2), (3, 1)}
n(B) = 3
\(P(B)=\frac { n(B) }{ n(S) } =\frac { 3 }{ 36 } =\frac { 1 }{ 12 } \\ \)
iii) முகஎண்களின் கூடுதல் 13ஐ விடச் சிறிதாக இருக்கும் நிகழ்ச்சி C என்க.
C = {(1,1), (1, 2), (1,3), (1, 4), (1, 5), (1,6)
(2, 1), (2, 2), (2, 3), (2, 4), (2, 5), (2, 6)
(3, 1), (3, 2), (3, 3), (3, 4), (3,5), (3, 6)
(4, 1), (4, 2), (4, 3), (4, 4), (4, 5), (4, 6)
(5, 1), (5, 2), (5, 3), (5, 4), (5, 5), (5, 6)
(6, 1), (6, 2), (6, 3),(6, 4), (6, 5), (6, 6)}
n(C) = 36
\(P(C)=\frac { n(C) }{ n(S) } =\frac { 36 }{ 36 } =1\)
40.
\(\overline {AB} = \sqrt {(x_2 - x_1)^2 + (y_2 - y_1)^2}\)
= \( \sqrt{(9-7)^2+(-3-(-5))^2}\)
\(=\sqrt {2^2 + (-3 + 5)^2} = \sqrt{4+4}\)
\(=\sqrt{8} = \sqrt{4 \times 2} = 2\sqrt{2}\)
\(\overline{BC}\)= \( \sqrt{(13-7)^2+(1-(-5))^2}\)
\(=\sqrt {4^2 +4^2} = \sqrt{16+16}\)
\(=\sqrt{32} = \sqrt{2 \times 16} = 4\sqrt{2}\)
\(\overline{BC}\)= \( \sqrt{(13-7)^2+(1-(-5))^2}\)
\(=\sqrt {6^2 +6^2} = \sqrt{36+36}\)
\(=\sqrt{72} = \sqrt{2 \times 36} = 6\sqrt{2}\)
\(2 \sqrt{2}, 4\sqrt{2}, 6\sqrt{2}\)
AB + BC = AC இங்கு B ஆனது பொதுப்புள்ளி
A, B, C ஒரே கோட்டில் அமையும்

எனவே மூன்று புள்ளிகளும் ஒரே நேர்க்கோட்டில் அமையும்
41.
ABC என்பது இருசமபக்க செங்கோண முக்கோணம்
D(x, y) என்பது ஒரு புள்ளி மேலும் ABCD ஒரு சதுரம் மூலைவிட்டங்கள் AC மற்றும் BD ம் M ல் இருசமக் கூறிடும்.
AC நடுப்புள்ளி \(\left( \frac { { x }_{ 1 }+{ x }_{ 2 } }{ 2 } ,\frac { { y }_{ 1 }+{ y }_{ 2 } }{ 2 } \right) \)
\(\left( \frac { -5+5 }{ 2 } ,\frac { 4+2 }{ 2 } \right) \)
\(\left( \frac { 0 }{ 2 } ,\frac { 6 }{ 2 } \right) = (0,3)\)
M என்பது BD ன் நடுப்புள்ளி ஆகும்
\([\frac { -1+x }{ 2 } , \frac { -2+y }{ 2 } ] = (0,3)\)
\(\frac { -1+x }{ 2 }= 0 ⇒ x = 1\)
\( \frac { -2+y }{ 2 } = 0 ⇒ y = 8\)
D யின் ஆயத்தொலைவுகள் (1,8)

42.
கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடு 3(x+1)=3(5-x)-2(5+x)
x=1/4 என பிரதியிட,
3(x+1)=3(5-x)-2(5+x)
3(1/4+1)=3(5-1/4)-2(5+1/4)
\(3\left( \frac { 1+4 }{ 4 } \right) =3\left( \frac { 20-1 }{ 4 } \right) -2\left( \frac { 20+1 }{ 4 } \right) \)
\(3\times \frac { 5 }{ 4 } =3\times \frac { 19 }{ 4 } -2\times \frac { 21 }{ 2 } \)
\(\frac { 15 }{ 4 } =\frac { 57 }{ 4 } -\frac { 42 }{ 4 } =\frac { 15 }{ 4 } \)
=\(\frac { 15 }{ 4 } =\frac { 15 }{ 4 } \) சமம்
எனவே 1/4 என்பது 3(x + 1) = 3( 5–x) – 2( 5 + x) என்ற சமன்பாட்டின் தீர்வாகும்.
43.
(i) (ii)
எனவே, \(\frac { -4 }{ 11 } =-0.\overline { 36 } \)
\(\frac { 11 }{ 75 } =0.14\overline { 6 } \)
எனவே , ஒரு விகிதமுறு எண்ணானது,
(i) முடிவுறும் தசம விரிவாகவோ அல்லது
(ii) முடிவுறாச் சுழல் தசம விரிவாகவோ இருக்கும். இதன் மறுதலையும் உண்மையே. அதாவது, ஓர் எண்ணின் தசம விரிவானது முடிவுற்றோ அல்லது முடிவுறாச் சுழல் தன்மையுடையதாகவோ இருந்தால் அவ்வெண் ஒரு விகிதமுறு எண் ஆகும்.
44.
45.
(a +b +1)(a2 +b2 +1−ab −b −a)
46.
(-5x+2y+3z)2 அல்லது (5x-2y-3z)2
47.
\(\Delta\)OAC ஓர் இருசமபக்க முக்கோணம்
\(\angle\)AOC = 90°
\(\therefore\) \(\angle\)OAC + \(\angle\)OCA = 180° - 90°
2\(\angle\)OAC = 90° (\(\therefore\) \(\angle\)OAC = \(\angle\)OCA)
\(\angle\)OAC = 45°
\(\therefore\)\(\angle\)OCA = 45°
நாணின் நீளம் (AC) = \(\sqrt{(4 \sqrt{2})^2+(4 \sqrt{2})^2}=\sqrt{16 \times 2+16 \times 2}=\sqrt{64}=8\) செ.மீ

48.
A = {a, {a, b}}
A இன் உட்கணங்கள் = { }, {a}, {a, b} {a, {a, b}}
49.
D = {x : x என்பது ஓர் ஆண்டிலுள்ள தமிழ் மாதம்}
50.
கணமல்ல
51.
சரிவகம் அல்ல
52.
POQ ஒரு செங்கோண முக்கோணம், அதன் செங்கோணம் ஆதிப்புள்ளி O இல் அமைந்துள்ளது. இங்கு OQ=a அலகுகள் மற்றும் OP ஆனது b அலகுகள் என்க. P, Q இன் ஆயத்தொலைவுகள் முறையே (0, b) மற்றும் (a, 0) இன் எனப் பெயரிடுக.
நடுபப்புள்ளி சூத்திரத்தின்படி, கர்ணம் PQ இன் நடுப்புள்ளி M எனில [PM=MQ] , M ஆனது
\(\left( \frac { a+0 }{ 2 } ,\frac { b+0 }{ 2 } \right) =\left( \frac { a }{ 2 } ,\frac { b }{ 2 } \right) \)
தொலைவு சூத்திரத்தை பயன்படுத்த நாம் காண்பது
OM =\(\sqrt { { \left( \frac { a }{ 2 } -0 \right) }^{ 2 }+{ \left( \frac { b }{ 2 } -0 \right) }^{ 2 } } =\sqrt { \frac { { a }^{ 2 } }{ 4 } +\frac { { b }^{ 2 } }{ 4 } } \) இந்த மதிப்பானது
QM = \(\sqrt { { \left( a-\frac { a }{ 2 } \right) }^{ 2 }+{ \left( 0-\frac { b }{ 2 } \right) }^{ 2 } } =\sqrt { \frac { { a }^{ 2 } }{ 4 } +\frac { { b }^{ 2 } }{ 4 } } \)என்பதற்குச் சமமாகிறது. மேலும் இதேபோல்,
PM=\(\sqrt { \frac { { a }^{ 2 } }{ 4 } +\frac { { b }^{ 2 } }{ 4 } } \)
இதிலிருந்து OM=QM =PM, எனக் காண்கிறோம். இதுவே நாம் நிறுவ வேண்டியதாகும்.
53.
p(x) = x3 + 13x2 +32x + 20 என்க.
அனைத்து உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல் = 1+ 13 + 32 +20 =66 ≠ 0
எனவே, (x - 1) என்பது ஒரு காரணியல்ல.
இரட்டைப்படை அடுக்குகள் கொண்ட உறுப்பின் கெழு மற்றும் மாறிலியின் கூடுதல் =13+20=33
ஒற்றைப்படை அடுக்குகள் கொண்ட உறுப்புகளின் கெழுக்களின் கூடுதல் = 1+ 32 = 33
ஆகவே, (x + 1) என்பது p(x) இன் ஒரு காரணி.
மற்ற நேரிய காரணிகளைக் காணத் தொகுமுறை வகுத்தல் முறையைப் பயன்படுத்துவோம்.

54.
S என்பது துள்ளுந்து, C என்பது மகிழுந்து மற்றும் B என்பது மிதிவண்டி வைத்திருக்கும் குடும்பங்களின் கணங்கள் என்க.
கொடுக்கப்பட்டது, n(U) =600; n(S) =\(\frac { 3 }{ 5 } \)x600 =360
n(C) = \(\frac { 1 }{ 3 } \) x 600 = 200, n(B) = \(\frac { 1 }{ 4 } \) x 600 = 150
n(S⋂C∩B) =\(\frac { 2 }{ 15 } \) x 600 = 80
வென்படத்திலிருந்து,
(i) குறைந்தது இரண்டு வகை வாகனங்களை வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை.
=40+6+10+80=136
(ii) எந்த ஒரு வாகனமும் வைத்திருக்காத குடும்பங்களின் எண்ணிக்கை
=600 - (குறைந்தது ஒரு வாகனத்தை வைத்திருக்கும் குடும்பங்கள்)
=600 - (230 +40+74+6+54+10+80)
=600-494=106

55.

(2) = (5)
\(\therefore\) (A \(\cap\) B)' = A' U B'
56.
\(\Delta\)PQR - யில்
PQ = 5 செ.மீ
PR = 6 செ.மீ
\(\angle\)QPR = 60°
வரைமுறை:
படி 1: \(\Delta\)PQR - ஐ வரை
படி 2: ஏதேனும் இருபக்ககங்களுக்கு (PR, QR) மையக் குத்துக் கோடுகள் வரை.
படி 3: பக்கங்களின் மையப் புள்ளியையும் எதிர் முனையையும் இணைத்து நடுக்கோடுகள் (PD, QE) வரை.
படி 4: நடுக்கோடுகள் சந்திக்கும் புள்ளி G.
படி 5: நடுக்கோடுகள் சந்திக்கும் G, \(\Delta\)PQR -ன் நடுக்கோட்டு மையம் ஆகும்.

57.
x + y + z = 0 எனில் x3 + y3 + z3 = 3xyz
8x3 - 27y3 - 64z3 = (2x)3 + (-3y)3 + (-4z)3 = 3 \(\times\) 2x \(\times\) -3y \(\times\) -4z = 72 xyz
58.
x =\(0.\overline { 0001 } \)=0.00010001..... என்க
10000x = 1.00010001 ......
(-) x = 0.00010001 ........
\(\overline { \underline { 9999x\quad =\quad 1.0000...... } } \)
9999x =1
x = \(\frac { 1 }{ 9999 } \)
\(0.\overline { 0001 } \)=\(\frac { 1 }{ 9999 } \)
59.
P(x, y) A(3, 4) மற்றும் B(-5, 6) என்பன கொடுக்கப்பட்டுள்ள புள்ளிகள்
தொலைவு d = \(\sqrt {(x_2-x_1)^2+(y_2-y_1)^2}\)
தொலைவு \(P A =\sqrt{(3-x)^2+(4-y)^2}=\sqrt{9}+x^2-6 x+16+y^2-8 y \)
\(=\sqrt{x^2+y^2-6 x-8 y+25} \)
தொலைவு \(P B =\sqrt{(-5-x)^2+(6-y)^2}=\sqrt{25+x^2+10 x+36+y^2-12 y} \)
\(=\sqrt{x^2+y^2-10 x-12 y+61}\)
இருபுறமும் வர்க்கப்படுத்த.
\(x^2+y^2-6 x-8 y+25 =x^2+y^2+10 x-12 y+61 \)
\(-8 y+12 y =10 x+6 x+6 1-25 \)
\(4 y =16 x+36 \)
\(y =4 x+9\)
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards