9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/02/2020
9ஆம் வகுப்பு அறிவியல் 2 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Science 2 Mark Important Questions )
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன ?
2.
கீழ்காண்பவனவற்றை வரையறு
நோய் எதிர்ப்பு தடுப்பூசி
3.
கீழ்காண்பவனவற்றை வரையறு
பாக்டீரியோ ஃபேஜ்கள்
4.
நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
5.
கார்பன் எத்தனை இணைதிறன் எலக்ட்ரான்களை கொண்டுள்ளது?
6.
கொதிக்கும் நீர் அல்லது நீராவி ஆகியவற்றில் எது அதிகமான காயத்தை உருவாக்குகிறது? ஏன்?
7.
குளச் சூழ்நிலையை மண்டலத்தை பார்வையிட்டு நீ ஊற்றுநோக்கிய விலங்குகளின் பெயர்களை சேகரிக்கவும்.வரும் கேள்விகளுக்கு விடையளி
அ) நீ குளத்தில் கண்டவற்றில் நீர்வாழ் மற்றும் நிலவாழ் விலங்குகளின் பெயர்களை பட்டியலிடுக.
ஆ) அவற்றின் அதற்குரிய வகைப்பாட்டு குழுக்களில் ஒழுங்குபடுத்தி உன் பதிலை சமர்ப்பிக்கவும்
8.
தடையின்றி தானே கீழே விழும் பொருளுக்கான இயக்கச் சமன்பாடுகள் யாவை?
9.
கொதிநிலை என்றால் என்ன?
10.
விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன?
11.
ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
12.
இரைப்பையானது ஹைட்ரோகுளோரிக் அமிலம் அடங்கிய இரைப்பைநீரைச் சுரக்கிறது.இதனுடைய பணி என்ன?
13.
மூலையில் உள்ள திசுவின் பெயர் எழுது.
14.
சைலம் மற்றும் ஃபுளோயமின் கூறுகளின் பெயரை எழுதுக.
15.
AC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்
16.
மின் மோட்டாரின் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.
17.
12\(\Omega\),6\(\Omega\) மின்தடை மதிப்புள்ள இரு மின் தடையங்கள் முதலில் தொடரிணைப்பிலும் பின்னர் பக்க இணைப்பிலும் இணைக்கப்படுகின்றன. அவற்றின் மின்னோட்ட - மின்னழுத்த வேறுபாடு வரைபடம் எக்கோட்டினால் குறிக்கப்படும்?

18.
குழல் கால்கள் மற்றும் பொய்க் கால்களுக்கு இடையேயான வேறுபாடு யாது?
19.
குழியாடி ஒன்றின் குவியத்தில் பொருள் வைக்கப்படும்போது பிம்பம் எங்கே உருவாகும்?
20.
i. மாய முக்கியக் குவியம்
ii. மெய் முக்கியக் குவியம்
இவற்றை தரக்கூடிய ஆடி(கள்) எது /எவை?
21.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

22.
K மற்றும் Cl ஆகியவற்றின் எலக்ட்ரான் பகிர்வை எழுதுக.
23.
கணக்கிடுக: 300 கெல்வின் வெப்பநிலையை செல்சியஸ் அலகிற்கு மாற்றுக
24.
டெட்டாலின் சிறு துளிகள் நீரில் கலக்கும்போது கலங்கலாக மாறுகிறது. ஏன்?
25.
SI அலகு-வரையறு.
26.
சுழற்சித் திசைவேகம் வரையறு.
27.
பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?
28.
வேதிச்சிகிச்சை என்றால் என்ன?
29.
வானியல் அலகு என்றால் என்ன?
30.
நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?
31.
கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
6CO2 +______
__________ + 6O2 \(\uparrow\)
32.
பின்வரும் படங்களைப் பார்த்து அட்டவணையை நிரப்பவும் தூண்டல் ஏற்படும் பகுதியை நோக்கி வளைந்தால் (+) என்ற குறியீடும், தூண்டல் ஏற்படும் பகுதியை விட்டு விலகினால் (-) என்ற குறியீடும் கொடுக்கவும்.
| தூண்டல் | ஒளி | புவிஈர்ப்பு |
|---|---|---|
| தண்டு | + | - |
| வேர் | ? | + |

33.
வேறுபடுத்துக : மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்
34.
வேறுபடுத்துக : குவாசியயோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
35.
நெகிழிச்சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது -0.4C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,(அ)எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது? எது எலக்ட்ரானைப் பெற்றது?(ஆ)இந்நிகழ்வில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
36.
25 கிராம் நீரை 0oC இருந்து 100oC க்கு வெப்பப்படுத்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலை ஜூல் கணக்கிடுக.அதனை கலோரியாக மாற்றுக.(நீரின் தன்வெப்ப ஏற்புத் திறன் = 4.18 j/goC)
37.
0oC ல் இருக்கும் 2கிகி பனிக்கட்டியை 20oC நீராக மாற்ற தேவைப்படும் வெப்ப ஆற்றலைக் கணக்கிடு.(நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் = 334000 J/Kg,நீரின் தன் வெப்ப ஏற்பத் திறன் = 4200J/Kg/K).
1.
ஒரு நொடிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் சூரியன் (9 lakh கிமீ/ம) பால்வெளியை ஒரு முறை சுற்றிவர 225 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இந்தக் காலம்தான் காஸ்மிக் ஆண்டு எனப்படுகிறது.
2.
நோய் எதிர்ப்பு தடுப்பூசி என்பவை உயிருள்ள அல்லது கொல்லப்பட்ட நுண்ணுயிரிகளிடமிருந்தோ அல்லது அவற்றின் விளை பொருள்களின் உதவியுடனோ நோயினைத் தடுக்கவும் அல்லது சிகிச்சை அளிக்கவும் உருவாக்கப்படும் ஊசியாகும்.
3.
பாக்டீயாவினைத் தாக்கி பாதிப்பை உண்டாகும் வைரஸ்கள் பாக்டீரியாஃபேஜ்கள் எனப்படும். எ.கா: பாக்டீரியா அழிப்பு வைரஸ் (T4)
4.
ஃபிரடெரிக் ஹோலர் நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
5.
கார்பன் நான்கு இணைத்திறன் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது.
6.
கொதிக்கும் நீரைக் காட்டிலும் நீராவி அதிகக் காயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் நீராவியில் நீரின் கொதிநிலை வெப்பத்துடன், அது ஆவியாகும் போது உருவாகும் உள்ளுறை வெப்பமும் (latent heat) கூடுதலாகச் சேர்ந்து உள்ளது. எனவே நீராவியால் உண்டாகும் காயம் கொதிநீரின் காயத்தை விட அதிகத் தீங்கு விளைவிக்கும்.
7.
8.
V = gt
S = 1/2 gt2
V2 = 2gh
9.
ஒரு திரவத்தை சூடுபடுத்தும் போது அத்திரவத்தின் ஆவி அழுத்தம் உயருகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அத்திரவத்தினூடே குமிழிகள் உருவாகத் துவங்குகிறது. இவ்வெப்பநிலையே அத்திரவத்தின் கொதிநிலை எனப்படுகிறது.
10.
விண்மீன்களில் இருந்து வரும் ஒளி வளிமண்டலத்தின் மாறிக்கொண்டேயுள்ள அடர்த்தினாலும், வெப்பநிலையினாலும் ஒளி விலகளுக்கு உட்படுகிறது.வளி மண்டலம் நிலையாக இல்லாது சுழற்சி தன்மை கொண்டதாக உள்ளது. எனவே வரும் ஒளி ஒரு புள்ளியிலிருந்து வருவதுபோல் தெரியாமல் வெவ்வேறு புள்ளிகளில் இருந்து வருவது போல் தெரிகிறது.எனவே விண்மீன்கள் மின்னுவதுபோல் தோன்றுகின்றன.
11.
ஆண் ஹார்மோன்: டெஸ்டோஸ் டீரான்
பெண் ஹார்மோன்: ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான்
12.
இரைப்பையிலுள்ள ஹைட்ரோகுளோரி அமிலம் உணவிலுள்ள நுண்கிருமிகளைக் கொல்கிறது. அத்துடன் உணவு அமிலத்தன்மை உள்ளதாக மாற்றுகிறது.
13.
நரம்புச் செல்கள், நியூரான்கள்
14.
i) சைலம் டிராக்கீடுகள்
ii) சைலம் நார்கள்
iii) சைலக்குழாய்கள்
iv) சைலம் பாரன் கைமா
ஃபுளோயத்தின் கூறுகள்:
1) சல்லடை குழாய் கூறுகள்
2) துணை செல்கள்
3) ஃபுளோயம் பாரன்கைமா
4) ஃபுளோயம் நார்கள்
15.

16.
(i) NS - நிலைக்காந்தம்
(ii) ABCD - கம்பிச்சுருள்
(iii) B1, B2 - கார்பன் தூரிகைகள்
(iv) S1, S2 - பிளவு வளையம்
(v) திசைமாற்றி
17.
தொடர் இணைப்பு R3 = 12 + 6 = 18 ᘯ
பக்க இணைப்பு \(\frac {1}{{R}_{P}}\) = \(\frac {1}{12} + \frac {1}{6} = \frac {1 + 2}{12} = \frac {3}{12}\)
\(\frac {1}{{R}_{P}}\) = \(\frac {3}{12}\)
ஃ RP = \(\frac {12}{3}\) = 4
எனவே வரைப்படம் A என்பது தொடர் இணைப்பையும், B என்பது பக்க இணைப்பையும் குறிக்கும்.
18.
| குழாய் கால்கள் | பொய்க் கால்கள் |
| குழாய் கால்கள் இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன. எ.கா. முட்தோலிகள் |
பொய்க்கால்கள் ஒரு தற்காலிகமாக சைட்டோபிளாசத்தால் நிகரப்பபட்ட ஒரு சவ்வு போன்ற அமைப்பு ஆகும்.இவை இடம்விட்டு இடம் நகர்வதற்கும், பயன்படுகிறது. எ.கா.அமீபா |
19.
கருத்தியல் படி பிம்பம் ஈரிலாத் தொலைவில் உருவாகும்.
20.
குவி ஆடி, குழி ஆடி
21.

22.
(i) எலக்ட்ரான் அமைப்பு K+ - 2, 8, 8.
(ii) எலக்ட்ரான் அமைப்பு Cl- - 2, 8, 8.
23.
செல்சியசில் வெப்பநிலை = K-273 = 300 - 273 = 270C
24.
டெட்டாலின் சிறுதுளிகள் நீரில் விரவுதல் முறையில் கலக்கிறது. எனவே கலவை கலங்கலாக இருக்கிறது.
25.
SI அலகு முறை என்பது பண்டைய அலகு முறையை விட நவீனமயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறை. ஏறக்குறைய உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட முறை.
26.
கோளிலிருந்து ஒரு நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில், செயற்கைக் கோள் ஒன்று வட்டப்பாதையில் சுற்றி வருவதற்கு அதற்கு அளிக்கப்படும் கிடைமட்டத் திசைவேகம் சுழற்றித் திசைவேகம் எனப்படும்.
27.
தாவரங்கள் வளர்வதற்கு தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக இந்த இரசாயன வேதியியல் உரங்கள்
பயன்படுகின்றன. இவை தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பெரும ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன.
28.
மனித உடலின் செல்களைப் பாதிக்காமல் வியாதிகளை உண்டாக்கும் கிருமிகளை மட்டும் அழித்து ஒரு சில நோய்களைக் குணப்படுத்துவதற்காக சில கரிமச்சேர்மங்களைப் பயன்படுத்துவதையே வேதிச்சிகிச்சை என்கிறோம்.
29.
(i) வானியல் அலகு என்பது புவி மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரி தொலைவு ஆகும்.
(ii) ஒரு வானியல் அலகு 1AU = 1.496 \(\times\)1011 மீ.
30.
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் தனிம வரிசை செயல்பாடுகளாகும். இது நவீன ஆவர்த்தன விதி ஆகும்.
31.
6CO2 + 6H2O
C6H12O6 + 6O2 \(\uparrow\)
32.
| தூண்டல் | ஒளி | புவிஈர்ப்பு |
|---|---|---|
| தண்டு | + | - |
| வேர் | - | + |
33.
| மேக்ரோ தனிமங்கள் | மைக்ரோ தனிமங்கள் |
| உணவின் அதிக அளவில் தேவைப்படுவன. எ.கா.கால்சியம்,சோடியம், பொட்டாசியம் |
உணவின் குறைந்த அளவில் தேவைப்படுவன. எ.கா இரும்பு, அயோடின் |
34.
| குவாசியயோர்க்கர் | மராஸ்மஸ் |
| புரதக் குறைபாட்டு நோய் | உணவின் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவை குறைவாக இருப்பது |
| 1-5 வயது குழந்தைகளைத் தாக்குகிறது. | பச்சிளங் குழந்தைகளைத் தாக்குகிறது. |
35.
(அ) தலைமுடி எலக்ட்ரான்களை இழக்கிறது.
நெகிழிச்சீப்பு எலக்ட்ரான்களை பெற்றது.
(ஆ) 1 C யில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 6.25 \(\times\) 1018 எலக்ட்ரான்கள்
0.4 C யில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 6.25 \(\times\) 1018 \(\times\) 0.4 எலக்ட்ரான்கள்
= 2.5 \(\times\) 1018 எலக்ட்ரான்கள்
இடம்பெயர்ந்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 2.5 \(\times\) 1018
36.
நீரின் நிறை (m) = 25 கிராம்
வெப்பநிலை உயர்வு (AT) = (100°C− 0°) = 100°C
நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் (C) = 4.18 J/g°C.
தேவைப்படும் வெப்ப ஆற்றல் (Q) = ?
\(
(Q) =m \times C \times \Delta T \\
=25 \times 4.18 \times 100 \\
=10450 \mathrm{~J}
\)
37.
பனிக்கட்டியின் நிறை (m) = 2 கிராம்
நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் (C) = 4200 Jkg-¹ K-¹
வெப்ப நிலை மாற்றம் (\(\Delta\)t) = (20°C − 0°C) = 20°C
நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் (L) = 3,34,000 J/ kg
தேவைப்படும் வெப்ப ஆற்றல் =m C \(\Delta\)t + mL
\(=(2 \times 4200 \times 20)+(2 \times 3,34,000) \\
=168000+66800 \\
=836000 \mathrm{~J}\)
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards