9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 06/02/2020
9ஆம் வகுப்பு அறிவியல் 4 மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 9th Standard Science 4 Mark Important Questions )
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு மின்மாற்றியின் முதன்மை சுருளில் 800 சுற்றுகள் உள்ளன, துனைச் சுருள் 8 சுருள்களை கொண்டுள்ளது. இது ஒரு 220V AC மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளியீடு மின்னழுத்தம் என்னவாக இருக்கும்?
2.
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை 1.5V. 0.5 C மின்னூட்டத்தை அந்த மின்சுற்றை சுற்றி அனுப்பத் தேவைப்படும் ஆற்றல் எவ்வளவு?
3.
சூர்யா 90 மீட்டர் நீளமுடைய குளத்தில் நீச்சல் அடிக்கிறார். அவர் ஒரு நேர் கோட்டில் குளத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் நீந்திச் சென்று மீண்டும் அதே பக்கம் வர எடுத்துக்கொண்ட காலம் 60 விநாடி, கடந்த தொலைவு 180 மீட்டர். சூர்யாவின் சராசரி வேகம் மற்றும் சராசரி திசை வேகத்தைக் கண்டுபிடிக்க.
4.
காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?
5.
AYUSH பற்றி நீ அறிவது என்ன?
6.
ககன்யான்-குறிப்பு வரைக.
7.
‘உட்புறக் கோள்கள்’ - குறிப்பு வரைக.
8.
மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் யாவை?
9.
கீழ்க்கண்ட தாவரத்தினைக் கண்ட றி தங்கள் வாழிடங்களில் எவ்வா று அவை தாமாகவே தகவமை த்துக் கொள்கின்றன?

10.
மூவகை ஆண்டிஜென் என்றால் என்ன? இந்தவகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்களைக் குறிப்பிடுக.
11.
ஒரு பகுதியிலிலுள்ள குழந்தைகளுள் ஒரு குழந்தை மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற குழந்தைகள் பாதிக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணங்களெல்லாம் இருக்கும் என்று நீ நினைக்கிறாய்?
12.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக
13.
வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.
14.
கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் என்ன?
15.
தெவிட்டிய மற்றும் தெவிட்டாத சேர்மங்கள் என்றால் என்ன?
16.
உள்ளீ ட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.
17.
கணினியின் கூறுகள் யாவை?
18.
பெண் இனப்பொருக்க மண்டலத்திலுள்ள அண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றின் பணிகள் யாவை?
19.
முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.
20.
ஏன் மியாசிஸ் குன்றல் பகுப்பு என்றும் மற்றும் மைட்டாஸிஸ் சமபிளத்தல் என்றும் அழைக்கப்படுகின்றன?
21.
பாலினப் பெருக்கத்தின்போது ஏன் கேமிட்டுகள் மியாஸிஸ் மூலம் உருவாக வேண்டும்?
22.
பொருந்தாததை கண்டுபிடி
எலுமிச்சை சாறு,தக்காளிச் சாறு,வீட்டு உபயோக அம்மோனியா,காபி
23.
விவசாயத்தில் மண்ணின் pH மிக முக்கியமானது. சிட்ரஸ் பழங்கள், அரிசி மற்றும் கரும்பு விளைய தேவைப்படும் மண்ணின் தன்மையை எழுதவும்.
24.
கொடுக்கப்பட்ட பண்புகளின் அடிப்படையில் சேர்மங்களின் வகையைக் கண்டறிக (அயனி /சக / ஈதல் சகப்பிணைப்பு)
அ. முனைவற்ற கரைப்பான்களில் கரையும்
ஆ. வினையின் வேகம் மிக அதிகம்
இ. மின்சாரத்தைக் கடத்துவதில்லை
ஈ. அறை வெப்பநிலையில் திண்மங்கள்
25.
CCl4 நீரில் கரைவதில்லை. ஆனால் NaCl நீரில் கரைகிறது. காரணம் கூறு.
26.
மென்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?
27.
நவீன தனிம அட்டவணையில் தொகுதிகள் மற்றும் வரிசைகள் என்பவை யாவை?
28.
ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
29.
பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளன?
30.
தொகுதி முதுகு நாணிகளின் (கார்டேட்டா) வழிமுறைப்படத்தினை தருக.
31.
உருப்பெருக்கம் என்றால் என்ன? அதன் சமன்பாட்டை எழுதுக. மெய் பிம்பம் மற்றும் மாய பிம்பம் ஆகியவற்றிற்கு அதன் குறியீடு என்ன?
32.
அ) படத்தில் கொடுக்கப்பட்டுள்ள குழியாடியின் பொருளின் பிம்பம் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என வரைந்து காட்டுக.
ஆ) பிம்பத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்
33.
தரவு செயலாக்கம் என்றால் என்ன?
34.
தரவு-தகவல் வேறுபடுத்துக
35.
ஆக்சிஜன் மற்றும் சல்ஃபர் அணுக்களின் அணு அமைப்பை வரைக.
36.
பெருக்கல் விகித விதியினை வரையறு
37.
சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக இருப்பது எது ? மற்றும் எது தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும்?
38.
மரத்தூள். இரும்புத் துகள் மற்றும் நாப்தலீன் கலந்த கலவையை எவ்வாறு பிரிக்கலாம்?
39.
நெகிழிப்பையின் தடிமனைக் கணக்கிடுவதற்குத் தேவையான அலகு என்ன ?
40.
நிலையான அலகு முறையின் தேவை என்ன?
41.
சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?
42.
எந்த இயற்பியல் பண்பு ஹெர்ட்ஸ் (Hz) என்ற அலகினைக் கொண்டுள்ளது? அதனை வரையறு.
43.
பாஸ்கல் விதியைக் கூறு.
44.
கடல் நீரில் நீந்துவது ஆற்று நீரில் நீந்துவதைவிட எளிதாக இருப்பது ஏன்?
45.
ஃபாரடேயின் மின்காந்தத்தூண்டல் விதிகளைத் தருக.
46.
உருகுதலின் உள்ளுறை வெப்பம் - வரையறு.
47.
தன் வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.
48.
ஏதேனும் இரண்டு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி
49.
பரப்புக் கவரப்படும் பொருள் மற்றும் பரப்புக் கவரும் பொருள் என்றால் என்ன ?
50.
சஞ்சனா ஒரு மளிகை கடையில் ஜாம் பாட்டில் வாங்க விரும்புகிறாள். அதை வாங்குவதற்கு முன் அந்தப் பாட்டிலில் உள்ள அட்டை குறிப்பானில் (label) எதைக் குறிப்பாகப் பார்த்து வாங்க வேணடும்
1.
ஒரு மின்மாற்றியில்
Es / Ep = Ns/Np
Es = Ns/Np \(\times\) Ep
= 8/800 \(\times\) 220
= 220/100
Es = 2.2 வோல்ட்
2.
∈ = 1.5 V; q = 0.5 C
∈ = W/q; W = ∈ \(\times\) q = 1.5 \(\times\) 0.5 = 0.75 J
3.
சராசரி வேகம் = (கடந்த தொலைவு)/(எடுத்துக்கொண்ட நேரம் ) = 180மீ/60வி
= 3 மீ/வி
சராசரித் திசைவேகம் = இடப்பெயர்ச்சி/(எடுத்துக்கொண்ட நேரம்) = 0மீ/60வி = 0
சூர்யாவின் சராசரி வேகம் 3மீ / விநாடி மற்றும் சராசரித் திசைவேகம் 0.
4.
1) சமையலறை அல்லது உணவுத் தோட்டங்கள்
2) வணிகத் தோட்டங்கள்
3) செயற்கைக் காய்கறித் தோட்டங்கள்
5.
அநேக மருத்துவ முறைகளான ஆயுர்வேத, யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி (AYUSH) போன்ற மருத்தவ முறைகள் தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் மருந்துகளைப் பய்னபடுத்தப்படுகின்றன. இவ்வகை மருந்துகள் தாவரங்களின் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருள்கள் என அழைக்கப்படுகின்றன.
6.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர், கே.சிவனின் கூற்றுப்படி,2021 / 2022 -ம் ஆண்டில் இந்திய மனித விண்வெளிப் பயணத்திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும். இதன் முதல் பணிக்குழுவில் மூன்று விண்வெளி வீரர்கள் இருப்பர். ஜி.எஸ்.எல்.வி - III ராக்கெட் மூலம் விண்வெளிக்கு இவர்களை எடுத்துச் செல்லும் திட்டம் ககன்யான் என்றழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஏவுதல் தொழிநுட்பத்தில் வல்லுநரான வீ.ஆர்.லலிதாம்பிகா என்பவர் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
7.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் யாவும் வெவ்வேறு இடைவெளிகளில் காணப்படுகின்றன. முதல் நான்கு கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் போன்றவை ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், சூரியனுக்கு அருகாமையிலும் உள்ளன. எனவே அவை உட்புற சூரிய மண்டத்தை அமைக்கின்றன. மேலும் அவற்றின் புறப்பரப்பு திண்மப்பாறை மேலோட்டினால் அமைந்து உள்ளதால் அவை நிலம் சார் கோள்கள் என அழைக்கப்படுகின்றன. அவற்றின் உட்பகுதி புறப்பரப்பு மற்றும் வளிமண்டலம் ஆகியவை ஒரே முறையில் ஒரே வடிவில் உருவானவை. மேலும் அவை எந்த அமைப்பில் உள்ளவை. இவற்றிற்கு வளையங்கள் இல்லை.
8.
மறுசுழற்சி நீரானது கீழ்க்கண்டவற்றில் பயன்படுகிறது.
i) விவசாயம்
ii) இயற்கை அழகுமிக்க நிலங்களை உருவாக்குதல்.
iii) பொதுப்பூங்காக்கள்
iv) குளிப்பந்தாட்ட விளையாட்டுத்திடல்
v) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஆற்றல் நிலையங்களில் உள்ள குளிர்விப்பான்கள்.
vi) கழிவறைகளைச் சுத்தம் செய்தல்
vii) தூசிகளைக் கட்டுப்படுத்தல்.
viii) கட்டுமானச் செயல்கள்.
9.
இத்தாவரத்தின் பெயர் ஹைட்ரில்லா எனப்படும் வேலம்பாசி ஆகும். இதன் வேர்கள் சரியான வளர்ச்சி அடையவில்லை. நீரில் அமிழ்ந்திருக்கும் இச்செடியின் இலைகள் குறுகலாகவும் பல பிரிவுகளைக் கிளைத்தும் காணப்படுகின்றன.

10.
மூவகை ஆண்டிஜென் என்பது மூன்று விதமான நோய்களை தடுக்க பயன்படும் தடுப்பு மருந்து ஆகும். இது ஒரு கூட்டுத் தடுப்பு மருந்தாகும். டிப்தீரியா (தொண்டையடைப்பான்) பெர்டூதிஸ் (கக்குவான் இருமல்) மற்றும் டெட்டனஸ் போன்ற மூன்று நோய்களை தடுக்க மூவகை ஆண்டிஜென் பயன்படுகிறது.
11.
i. அக்குழந்தை கெட்டுப்போன உணவை சாப்பிட்டிருக்கலாம். மாசு கலந்த நீரை குடித்திருக்கலாம்.
ii. மேலும் அக்குழந்தைக்கு நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக காணப்படலாம்.
iii. மற்ற குழந்தைகள் சுத்தம், சுகாதாரத்தோடு இருந்திருக்கலாம்.
12.
கட்டற்ற மென்பொருள்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம். திறந்த மூல மென்பொருள்களில் அவற்றின் நிரல்களைத் (Codings) திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது.
சில கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
1. லினக்ஸ் (LINUX)
2. ஓபன் ஆபிஸ் (Open Office)
3. ஜியோஜீப்ரா (Geogebra), etc
4. இயக்க மென்பொருள் (Operating System)
13.
கணினியின் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும் வன்பொருள்களே, உள்ளீட்டு (INPUT), வெளியீட்டு (OUTPUT) கருவிகள் மற்றும் கணினியின் மையச்செயலாகப் பெட்டியினுள் (CPU Cabinet) அமைந்திருக்கும் நினைவகம் (Hard disk), தாய்ப்பலகை (MOTHER BOARD), SMPS, CPU, RAM, CD DRIVE, GRAPHICS CARD ஆகியவை இதில் அடங்கும்.
மென்பொருள் இல்லா வன்பொருள் மட்டும் ஒரு முழுக்கணினியாக முடியாது. மென்பொருள்கள் என்பது வன்பொருள் இயங்குவதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய, கணினியால் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட அமைப்பு ஆகும். வன்பொருளைப் போல் நம்மால் இதைத் தொட்டு உணர இயலாது. ஆனால் கணினித்திரை மூலம் கண்டு கட்டளைகளைக் கொடுத்துப் பயன்படுத்த முடியும்.
14.
கார்பன் மோனோக்ஸைடில் கார்பனின் இணைதிறன் இரண்டு.
15.
தெவிட்டிய சேர்மங்கள் என்பன கார்பன் - கார்பன் அல்லது கார்பன், ஹைட்ரஜன் ஒற்றைப் பிணைப்பு கொண்ட சேர்மங்கள் ஆகும்.
தெவிட்டாத சேர்மங்கள் என்பன கார்பன் - கார்பன் இரட்டைப் பிணைப்பு அல்லது முப்பிணைப்பு கொண்ட சேர்மங்கள் ஆகும்.
16.
| உள்ளீடகம் | வெளியீடகம் |
| இது தரவுகளை கட்டளைகளையும் உள்ளீடு செய்கிறது. |
இது மையச் செயலகத்திலிருந்து ஈரடிமானக் குறிப்புகளை (Binary signals) பெறுகிறது. இக்குறிகளை பயனருக்குக் கொண்டு செல்ல உதவுகிறது. |
| விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse), வருடி (Scanner), பட்டைக் குறியீடு படிப்பான் (Barcode reader), ஒலிவாங்கி (Microphone - Mic.,), இணையப் படைக்கருவி (Web Camera), ஒளி பேனா (Light pen) போன்றவைதான் உள்ளீட்டுக்கருவிகள். |
கணினித்திரை (Monitor), அச்சுப்பொறி (Printer), ஒலிபெருக்கி (Speaker), வரைவி (Plotter) போன்றவை வெளியீட்டகத்தின் கருவிகளாகச் செயல்படுகின்றன. |
17.
கணினியின் மூன்று பாகங்களாவன:
1. உள்ளீடகம் (Input Unit)
2. மையச்செயலகம் (CPU)
3. வெளியீட்டகம் (Output Unit)
18.

அண்டகங்கள்: பெண்களின் ஓரினை பாதாம் -வடிவ அண்டகங்கள். கீழ் வயிற்றறையில் சிறுநீரகங்களுக்கு அருகில் அமைத்துள்ளன. அண்டகங்கள் பெண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும். இதிலிருந்து பெண் பாலின உயிரணு (கரு முட்டை அல்லது அண்டம்) மற்றும் பெண் பாலின ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான்) உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு முதிர்ந்த அண்டகத்தில் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்துள்ள அதிகப்படியான அண்டங்கள் / கருமுட்டைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையானது முதிர்ச்சியடைகிறது. ஒரு முதிர்ந்த கருமுட்டை ஏதாவது ஒரு அண்டகத்திலிருந்து ஒவ்வொரு 28 நாட்கள் இடைவெளியில் (மாதவிடாய் சுழற்சி) வெளியிடப்படுகிறது. இவ்வாறு கருமுட்டையானது அண்டகத்திலிருந்து வெளியேறும் செயல் கருமுட்டை வெளிப்படுதல் (Ovulation) என்று அழைக்கப்படுகிறது.
கர்ப்பப்பை: கர்ப்பப்பையானது ஒரு பேரிக்காய் போன்ற தசையாலான வெற்றிடமுள்ள அமைப்பையுடையது. இது இடுப்புக்குழிக்குள் அமைந்து காணப்படுகின்றன. இந்த கர்ப்பப்பையானது, சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலுக்கு இடையே உள்ளது. கருவின் வளர்ச்சியானது கர்ப்பப்பையின் உள்ளே நடைபெறுகிறது. கர்ப்பப்பையின் குறுகலான அடிப்பகுதியானது கருப்பைவாய் (செர்விக்ஸ்) என அழைக்கப்படுகிறது. இது யோனி என்ற பகுதிக்குள் செல்கிறது.
19.
| பற்களின் வகைகள் | பணிகள் |
| வெட்டுப் பற்கள் | வெட்டவும் கடிக்கவும் |
| கோரைப் பற்கள் | கிழிக்கவும் துளையிடவும் |
| முன் கடைவாய்ப் பற்கள் | நசுக்கவும் அரைக்கவும் |
| பின் கடைவாய்ப் பற்கள் | நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும். |
20.
மியாசிஸ் குன்றல் பகுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதில் குரோமோசோம் எண்ணிக்கை இருமைய (2n) நிலையில் இருந்து ஒருமைய (n) நிலையாக குறைக்கப்படுகிறது. மியாசிஸ் பகுப்பில் ஒரு தாய் செல்லில் இருந்து நான்கு சேய் செல்கள் உருவாக்கப்படுகின்றன.
21.
நியூக்ளியார் பகுப்பிற்குப் பிறகு ஒவ்வொரு ஒருமய / ஹேப்லாய்டு செய் செல்லிலிருந்து இரண்டு செல்கள் தோன்றுகின்றன. இதனால் ஒற்றைமய குரோமோசோம்களைக் கொண்ட 4 செல்கள் தோன்றுகின்றன.
மியாசிஸ்ஸின் முக்கியத்துவம்:
மியாசிஸ் பகுப்பின் மூலம் நிலைத்த குரோமோசோம்கள் எண்ணிக்கை பராமரிக்கப்படுகிறது. மைட்டாசிஸ் மூலம் கேமிட்டுகள் உருவானால் குரோமோசோம்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும். இதனால் அந்த உயிரினத்தின் அமைப்பு மாறுபட்டு விடும்.
22.
பொருந்தாதது : வீட்டு உபயோக அம்மோனியா. இது காரத்தன்மை வாய்ந்தது. மற்றவை அமிலத்தன்மை வாய்ந்தவை.
23.
விவசாயத்தில் மண்ணின் pH மிக முக்கியமானதாகும். சிட்ரஸ் பழங்களுக்கு காரத்தன்மையுடைய மண்ணும், அரிசிக்கு அமிலத் தன்மையுடைய மண்ணும் மற்றும் கரும்பிற்கு நடுநிலைத் தன்மை கொண்ட மண்ணும் தேவைப்படுகிறது.
24.
அ) சகப் பிணைப்பு சேர்மங்கள்
ஆ) அயனிச் சேர்மங்கள்
இ) சகப் பிணைப்பு சேர்மங்கள்
ஈ) அயனிச் சேர்மங்கள்
25.
NaCl அயனிச் சேர்மம். இந்த அயனிச் சேர்மங்கள் நீர் போன்ற முனைவுள்ள கரைப்பான்களில் கரையக்கூடியவை. CCI4 ஒரு முனைவற்ற கரைப்பான். இது நீரில் கரைவதில்லை.
26.
1) பண்புகளில் அதிக வேறுபாடுள்ள தனிமங்களும் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன. எ.கா.கடின உலோகங்களாகிய செம்பு, மற்றும் வெள்ளி மென் உலோகங்களாகிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.
2) ஹைட்ரஜனுக்கு என்று ஒரு தனி இடம் கொடுக்க முடிய வில்லை. அலோகமாகிய ஹைட்ரஜன், லித்தியம்,சோடியம் பொட்டாசியம் போன்ற மென் உலோகங்களோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது .
3) கூடிக்கொண்டே செல்லும் அணு நிறை எனும் விதியை சில வேளைகளில் கடைபிடிக்க முடிவதில்லை.
எ. கா : Co & Ni, Te & I
4) ஐசோடோப்புகளுக்கு தனிப்பட்ட இடம் ஒதுக்கப்படவில்லை.
27.
தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு 'தொடர்கள்' என அழைக்கப்படுகிறது. மொத்தம் 7 தொடர்கள் உள்ளன. தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து கீழாக செங்குத்தாக உள்ள பத்தி 'தொகுதிகள்'. தனிம வரிசை அட்டவணையில் 18 தொகுதிகள் உள்ளன.
28.
ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் மின் சலவைப் பெட்டி, நீர் சூடேற்றி, மற்றும் ரொட்டி வறுதட்டு.
29.
பறவையின் முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறுப்பட்டு காணப்படுகிறது. இந்த இறக்கையை பறக்கிறது.
30.
தொகுதி முதுகுநாணுள்ளவையின் வகைப்பாடு
31.
பிம்பத்தின் அளவிற்கும் (h1), பொருளின் அளவிற்கும் (h0) இடையேயான தகவு உருப்பெருக்கம் என வரையறுக்கப்படுகிறது.
அதாவது, \(m = \frac{h_1}{h_0}\) (அல்லது) m = \(\frac { -v }{ u } \)
மெய் பிம்பம் : எதிர்க்குறி - (-ve)
மாய பிம்பம் : நேர்க்குறி - (+ve)
32.
ஆ) பிம்பத்தின் தன்மை: பொருளை விட பெரியது. தலைகீழான, மெய் பிம்பம் கிடைக்கும்.
33.
கணினியில் தரவு செயலாக்கம் என்பது தரவுகளைச் சேகரித்துத் தேவைக்கேற்ப தகவல்களாக மாற்றும் நிகழ்வைக் குறிப்பிடுவதாகும்.
34.
| தரவு | தகவல் |
| கணினியின் உட்புகுத்தப்படும் தரவு எனப்படுவது எழுத்து, எண். |
சமகால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளை கடக்கும். |
| அளவிடப்படக்கூடியது. | செய்திகளையும், கருத்துக்களையும், கொண்டிருக்கும். |
| நேரடியாக உபயோகப்படுத்த முடியாது. |
நேரடியாக உபயோகப்படுத்த முடியும். |
35.

16O8 - 1s2 2s2 2p4 32S16 - 1s2 2s2 2p6 3s2 3p4
36.
A மற்றும் B என்ற இரு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும்போது A ன் நிறையானது B ன் நிறையோடு எளிய விகிதத்தில் சேர்ந்திருக்கும்.
37.
சீரான வட்ட இயக்கத்தில் வேகம் மாறாததாக இருக்கும். திசைவேகம் திசையை பொறுத்து மாறுபடும்.
38.
முதலில் இரும்புத்துகள்களை காந்தமுறையில் பிரித்தெடுக்கலாம். மேலும் மரத்தூள் மிதக்கும். நாப்தலீனை பதங்கமாக்கல் முறையில் தனித்தனியே பிரித்தெடுக்கலாம்.
39.
திருகு அளவியினை கொண்டு மிக சிறிய அளவு கொண்ட நெகிழிப்பையின் தடிமனை கணக்கிடலாம். திருகு அளவியின் மூலம் ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவை கூட துல்லியமாக அளவிடலாம். நெகிழிப்பையின் தடிமனானது மைக்ரோ மீட்டரில் (10-3 m) இருந்து ஒரு சில நானோ மீட்டர்கள் (10-9 m) வரை அமையும்.
40.
i) சரியான மற்றும் துல்லியமான அளவுகளான நீளம், நிறை, காலம் போன்றவற்றை அளவிடலாம்.
ii) சிறு இடம் விட்டு இடமோ, நபர்களுக்கிடையிலோ, மாறாத அளவினைப் பெறலாம்.
எ. கா: நீளத்தின் அலகு மீட்டர்
41.
ஒரு பொருளானது காற்றில் ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் செல்லும்போது அலை அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இவ்வதிர்வலைகள் அதிக ஆற்றலைப் பெற்றிருக்கும். இவ்வதிர்வலைகளால் காற்றில் ஏற்படும் இதர மாறுபாட்டின் காரணமாக கூர்மையான மற்றும் உரத்த ஒலியை உண்டாக்குகிறது. இதனை சூப்பர் சோனிக் வேகம் என அழைக்கின்றோம்.
42.
(i) அதிர்வெண்ணின் SI அலகு ஹெர்ட்ஸ் (Hz):
(ii) அதிர்வடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கையானது அதன் அதிர்வெண் எனப்படும்.
43.
அழுத்தமுறா திரவங்களில் செயல்படும் புறவிசையானது, திரவங்களின் அனைத்துத் திசைகளிலும் சீராகக் கடத்தப்படும் என்று பாஸ்கல் விதி கூறுகிறது.
44.
கடல் நீரில் நீந்துவது ஆற்று நீரில் நீந்துவதைவிட எளிது. காரணம் : கடல்நீரில் உப்புக்கள் கரைந்திருப்பதால் அதன் அடர்த்தி ஆற்று நீரின் அடர்த்தியைவிட அதிகமாக உள்ளது.இதனால் ஆற்று நீரின் மிதப்பு விசையைவிட, கடல்நீரின் மிதப்பு விசை அதிகம். எனவே கடல் நீரில் நீந்துவது ஆற்று நீரில் நீந்துவதை விட எளிதாக இருக்கிறது.
45.
1) தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசை லென்ஸின் விதியால் விளக்கப்படுகிறது. கம்பிச்சுருளில் தூண்டப்பட்ட மின்னோட்டமானது அது உருவாகக் காரணமாயிருந்த காந்தப்பாய மாற்றத்தை எதிர்க்கும் என்பதே லென்ஸ் விதியாகும்.
2) வலது கையின் பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் ஆகியவற்றை நீளவாக்கில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக நீட்டும்போது சுட்டுவிரல் காந்தப்புலத்தின் திசையையும் பெருவிரல் கடத்தி இயங்கும் திசையையும் குறித்தால் நடுவிரல் மின்னோட்டத்தின் திசையைக் குறிக்கும். இது மின்னியற்றி விதி என்றும் ஃபிளெமிங்கின் வலது கை விதி எனவும் அழைக்கப்படுகிறது.
46.
உருக்குதல் நிகழ்வின் போது வெப்பமானது உட்கவரப்பட்டு அதே வெப்பமானது உறைத்தல் நிகழ்வின் போது (வெப்பநிலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல்) வெளிவிடப்படும். இந்த வெப்பத்தை உருக்குதலின் உள்ளுறை வெப்பம் என்கிறோம்.
47.
ஓரலகு நிறையுள்ள (1 kg) பொருளின் வெப்பநிலையை ஒரு அலகு (10C or 1 K) உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவு அதன் தன்வெப்ப ஏற்புத்திறன் எனப்படும்.
48.
(i) உலாத்துதல் : சூரிய ஒளி அல்லது வெற்றிடத்தைப் பயன்படுத்தி உணவிலிருந்து ஈரப்பதத்தை அகற்றலாம். இதனால் பாக்டீரியா, ஈஸ்டுகள், புஞ்சசைகள் உணவில் வளர்வது தவிர்க்கப்படுகிறது.
(ii) கதிரியக்கம் : ஒரு குறிப்பிட்ட அளவிலான X - கதிர்கள், காமாக் கதிர்கள் அல்லது புற ஊதாக் கதிர்களைப் பயன்படுத்தி, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், பூச்சிகளை அழித்து விடலாம்.
49.
ஒரு பொருளின் மேற்பரப்பில் வேறொரு பொருளின் துகள்கள் ஒட்டிக் கொள்வது பரப்புக்கவர்தல் எனப்படும். எடுத்துக்காட்டாக சுண்ணக்கட்டியின் துண்டுகளை நீலநிற மையினுள் ஊற வைக்கும் போது சுண்ணக்கட்டியின் மேற்பரப்பு நீலநிறமாக மாற்றமடைகிறது. இதில் சுண்ணக்கட்டி பரப்பு கவரும் பொருள். நீல நிற மை பரப்பு கவரப்படும் பொருள் ஆகும்.
50.
உணவின் பெயர், தயாரிப்பாளருடைய விபரங்கள், அதில் அடங்கியுள்ள பொருள்கள், மொத்த எடை, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை, தயாரிக்கப்பட்ட உணவின் காலாவதியான நாள் ஆகியவற்றைப் பார்த்து வாங்க வேண்டும். மேலும் அதில் உள்ள அச்சிடப்பட்ட தர நிர்ணயக் குறியீடுகளைப் பார்த்து வாங்க வேண்டும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards