9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 31/07/2019
தாவர உலகம் - தாவர செயலியல்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
நீராவிப்போக்கு ______ ல் நடைபெறும்
பழம்
விதை
மலர்
இலைத்துளை
2.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் வெளியிடுவது ____________
கார்பன் – டை ஆக்ஸைடு
ஆக்ஸிஜன்
ஹைட்ரஜன்
ஹீலியம்
3.
____________ தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.
வேர்
தண்டு
கிளைகள்
இலைகள்
4.
நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ____________ எனப்படும்
நடுக்கமுறு வளைதல்
ஒளிச்சார்பசைவு
நீர்சார்பசைவு
ஒளியுறு வளைதல்
5.
ஒளிச்சேர்கையின் போது நடைபெறுவது
CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.
நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2 ஆக்ஸிகரணம் அடைதல்
நீர் மற்றும் CO2 இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்
CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
6.
காட்டில் ஒரு பெரிய மரம் விழுகிறது. ஆனால் மரத்தின் வேர்கள் நிலத்தில் தொடர்பு கொண்டுள்ளன. விழுந்த மரத்தின் கிளைகள் நேராக வளர்கின்றது. இந்த நிகழ்வு எதன் தூண்டுதலால் நடைபெறுகின்றது.
ஒளி மற்றும் நீர்
நீர் மற்றும் ஊட்டப்பொருள்
நீர் மற்றும் ஈர்ப்பு விசை
ஒளி மற்றும் ஈர்ப்பு விசை
7.
வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
8.
நிலவு மலர்களில் (Moon Flower) இதழ்கள் காலையில் திறப்பதும் மாலையில் மூடிக்கொள்வதும், இந்த வகை ஒளியுறு வளைதல் எனப்படும்.
9.
தாவரத்தின் எடை அதிகரிப்பதற்கு நீர் மட்டுமே காரணம் என்பதை ஜோசப் பிரிஸ்ட்லி என்பவர் தனது சோதனை மூலம் விளக்கினார்.
10.
வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றார்போல் தாவர உறுப்பு வளைதல் ஒளிச்சார்பசைவு எனப்படும்.
11.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 வை உள்ளிழுத்துக் கொள்கின்றன. ஆனால் அவற்றின் உயிர் வாழ்தலுக்கு __________ தேவைப்படும்.
12.
சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ________ எனப்படும்
13.
தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி ____________ எனப்படும்
14.
___________ இன் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.
15.
தூண்டலை நோக்கி: ____
தூண்டலுக்கு அப்போல்: எதிர் சார்பகைவு
16.
தாவரத்தின் இலைகளின் அடிப்புறத்தோலின் காணப்படும் சிறிய துளைகளின் பெயர் என்ன?
17.
ஒளிச்சேர்க்கையின் இறுதி தயாரிப்புப் பொருள் என்ன?
18.
இலைகளில் உடல் அசைவுகளை உருவாக்கும் தாவரங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
19.
இலைத்துளையை சூழ்ந்துள்ள செல் எது?
20.
தாவரத்தில் அதிவேகமாக நிகழும் அசைவு என்ன?
21.
ஒரு தொட்டித் தாவரத்தை, ஒரு குறிப்பிட்ட கால அளவில் கிடைமட்டமாக வைக்கப்படுகிறது.கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல், மூன்று நிலைகளின் A மற்றும் B பாகங்கள் உள்ளன.
I. தொட்டுத்தாவரத்தின் தண்டு மற்றும் வேர் கீழ்நோக்கி வளர்கிறது([படம் வரையவும்)
ii.

iii. தொட்டித் தாவரத்தின் தண்டு மற்றும் வேர் மேல் நோக்கி வளர்கிறது ([படம் வரையவும்).
a.எந்த படத்தில் A மற்றும் B பாகங்கள் சரியான நிலையில் உள்ளன?
b. இரண்டாவது படத்தில் உள்ள A பாகத்தின் செயலியல் நிகழ்வு எதை குறிக்கிறது?
22.
ஒளிச்சேர்க்கை என்பதனை வரையறு.
23.
தொட்டால் சிணுங்கி (Mimosa pudica) தாவரத்தின் இலைகளை தொடும்போது என்ன விளைவை ஏற்படுத்தும்? இது என்ன நிகழ்வு என அறியப்படுகிறது?
24.
நீராவிப் போக்கு - வரையறை.
25.
ஒளிசார்பசைவு (phototropism) ஒளியுறு வளைதல் (Photonasty) வேறுபடுத்துக.
26.
திசைச் சாரா தூண்டல் அசைவு என்றால் என்ன?
27.
பச்சையம் என்றால் என்ன?
28.
கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
6CO2 +______
__________ + 6O2 \(\uparrow\)
29.
பின்வரும் படங்களைப் பார்த்து அட்டவணையை நிரப்பவும் தூண்டல் ஏற்படும் பகுதியை நோக்கி வளைந்தால் (+) என்ற குறியீடும், தூண்டல் ஏற்படும் பகுதியை விட்டு விலகினால் (-) என்ற குறியீடும் கொடுக்கவும்.
| தூண்டல் | ஒளி | புவிஈர்ப்பு |
|---|---|---|
| தண்டு | + | - |
| வேர் | ? | + |

30.
கற்பனை செய்து பாருங்கள். மாணவன் A ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான சில முக்கிய காரணிகளைப் படித்தார். இவர் ஒரு தொட்டித் தாவரத்தினை இருட்டறையில் 24 மணிநேரம் வைத்தார். அடுத்த நாள் அதிகாலையில் அத்தாவரத்தின் ஒரு இலையின் நடுப்பகுதியை கருப்புக் காகிதம் கொண்டு மறைத்தார். பிறகு சில மணி நேரம் அத்தொட்டித் தாவரத்தினை சூரிய ஒளியில் வைத்தார். மற்றும் கருப்புக் காகிதம் கொண்டு மறைக்கப்பட்ட இலையை ஸ்டார்ச் சோதனைக்கு உட்படுத்தினார்.
அ) இதனால் ஒளிச்சேர்க்கையில் என்ன அம்சம் நிரூபிக்கப்பட்டது?
ஆ) சோதனைக்கு முன் ஏன் தாவரம் இருட்டறையில் வைக்கப்பட்டது?
இ) இலைகளில் ஸ்டார்ச் உள்ளது என நீ எவ்வாறு நிரூபிப்பாய்?
ஈ) ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள் என்ன?
1.
(d)
இலைத்துளை
2.
(b)
ஆக்ஸிஜன்
3.
(b)
தண்டு
4.
(c)
நீர்சார்பசைவு
5.
(a)
CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.
6.
(d)
ஒளி மற்றும் ஈர்ப்பு விசை
7.
(a)
8.
(b)
9.
(b)
10.
(b)
11.
( )
ஆக்ஸிஜன்
12.
( )
ஒளிச்சார்பசைவு
13.
( )
பச்சையம்
14.
( )
ஒளி
15.
( )
எதிர் சார்பசைவு
16.
இலைத்துளை
17.
குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன்
18.
டெஸ்மோடியம் கைரன்ஸ்
19.
காப்பு செல்
20.
தாவரத்தில் அதிவேகமாக நிகழும் அசைவு தொடுவுறு வளைதல்.
தொட்டால் சிணுங்கியின் இலைகளைத் தொட்டவுடன் அவை அதிகவேகமாகச் சுருங்கி விடுகின்றன.
21.
I. தொட்டுத்தாவரத்தின் தண்டு மற்றும் வேர் கீழ்நோக்கி வளர்கிறது([படம் வரையவும்)

ii. 
iii. தொட்டித் தாவரத்தின் தண்டு மற்றும் வேர் மேல் நோக்கி வளர்கிறது ([படம் வரையவும்).

a.எந்த படத்தில் A மற்றும் B பாகங்கள் சரியான நிலையில் உள்ளன?
ii -ல் சரியான நிலையில் உள்ளன.
b. இரண்டாவது படத்தில் உள்ள A பாகத்தின் செயலியல் நிகழ்வு எதை குறிக்கிறது?
A பாகத்தின் செயல் நேர் ஒளிச்சார்பசைவை குறிக்கிறது.
22.
ஒளிச்சேர்க்கை: ஒளிச்சேர்க்கை - Photosynthesis, Photo -ஒளி, Synthesis -உருவாக்குதல் என்ற சொற்களுக்கு 'ஒளியின் உதவியால் உருவாக்கப்படுதல்' என்பது நேரிடையான பொருளாகும். இந்நிகழ்ச்சியின் போது ஒளி ஆற்றல் வேதி ஆற்றலாக மாற்றப்படுகின்றது. பசுந்தாவரங்கள் அனைத்தும் தற்சார்பு ஊட்டம் உடையவை. இவை தங்களுக்கு வேண்டிய உணவை ஒளிச்சேர்க்கை மூலம் தாங்களே தயாரித்துக் கொள்கின்றன.
ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாடு:

23.
தொட்டால் சிணுங்கி தாவரத்தின் இலைகளைத் தொடும் போது இலைகள் சுருங்க ஆரம்பிக்கிறது. இந்த நிகழ்விற்கு நடுக்கமுறு வளைதல் (அல்லது) தொடுவுறு வளைதல் அசைவு எனப்படும்.
24.
தாவரப்பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையானத் தண்டுகளின் மூலமாக நீரானது ஆவியாக வெளியேற்றப்படுவது நீராவிப்போக்கு என்று அழைக்கப்படுகிறது.
25.
| ஒளிச்சார்பசைவு | ஒலியுறு வளைதல் |
|---|---|
| ஒளியின் தூண்டுதலுக்கு ஏற்றவாறு தாவரப் பாகத்தில் ஏற்படும் ஒரே திசையுள்ள அசைவு ஒளிச்சார்பசைவு எனப்படும். | டராக்சம் அஃபிசினேல் என்ற தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்த நிலையிலும் மாலையில் மூடிய நிலையிலும் காணப்படும். இதற்கு ஒளியுறு வளைதல் எனப்படும். |
26.
தாவரத்தின் வேர் மற்றும் தண்டு தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நகர்கின்றன. ஆனால் மலர்கள் திறப்பதும் மற்றும் மூடுவதும் தூண்டல் ஏற்படும் திசையை நோக்கி நடைபெறாது. இத்தகைய அசைவுகளுக்குத் திசை சாராத் தூண்டல் அசைவுகள் என்று பெயர்.
27.
இலைகளில் காணப்படும் பச்சை நிறமி.
28.
6CO2 + 6H2O
C6H12O6 + 6O2 \(\uparrow\)
29.
| தூண்டல் | ஒளி | புவிஈர்ப்பு |
|---|---|---|
| தண்டு | + | - |
| வேர் | - | + |
30.
அ) ஒளிச்சேர்க்கை நடைபெற ஒளி மிக அவசியம் என நிரூபிக்கப்பட்டது.
ஆ) தாவரத்தின் இலைகளில் இருக்கும் ஸ்டார்ச்சினை நீக்க தாவரத்தினை இரண்டு நாட்கள் இருட்டறையில் வைக்கப்பட்டது.
இ) i) ஸ்டார்ச் நீக்கப்பட்ட தாவரத்திலிருந்து ஓர் இலையைத் தேர்ந்தெடுத்து நீண்ட மெல்லிய கருப்பு காகிதம் கொண்டு இரண்டு பக்கமும் மறைக்க வேண்டும்.
ii) இந்த அமைப்பினை சூரிய ஒளியில் 4 முதல் 6 மணி நேரம் வைக்க வேண்டும்.
iii) பின் தொட்டித் தாவரத்தில் கருப்பு காகிதம் கொண்டு மறைக்கப்பட்ட குறிப்பிட்ட இலையைப் பறித்து கருப்பு காகிதத்தை நீக்க வேண்டும்.
iv) பிறகு இலையினை சில விநாடிகள் கொதிநீரில் மூழ்கச் செய்ய வேண்டும்.
v) பிறகு பச்சையத்தை நீக்க ஆல்கஹாலினுள் வைக்க வேண்டும்.
vi) குறிப்பிட்ட இலையினை அயோடின் கரைசல் கொண்டு ஸ்டார்ச் சோதனை
vii) இலையின் கருப்பு காகிதம் மறைக்கப்பட்ட பகுதி கருநீல நிறமாக மாற்றம் அடையவில்லை.
viii) மறைக்கப்பட்ட பகுதியில் கருநீல நிறமாக மாறியுள்ளது.
ix) மறைக்கப்பட பகுதினால் சூரிய ஒளியை பெற முடியாத காரணத்தினால் ஸ்டார்ச் உற்பத்தி நடைபெறவில்லை. எனவே இப்பகுதி கருநீல நிறமாக மாறவில்லை.
x) மறைக்கப்படாத பகுதி சூரிய ஒளியினைப் பெற்று ஸ்டார்ச்சினை உற்பத்தி செய்வதால் அப்பகுதி கருநீல நிறமாக மாறுகிறது.
xi) இதன் மூலம் இலைகளில் ஸ்டார்ச் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஈ) நீர், சூரிய ஒளி, கார்பன்டை ஆக்சைடு, பச்சையம் போன்றவை ஒளிச்சேர்க்கைக்கு தேவைப்படும் மூலப் பொருட்கள் ஆகும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards