9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/08/2019
விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
சரியான வரிசையைக் கண்டறி.
தவளை \(\longrightarrow\) மீன்கள் \(\longrightarrow\) பாம்பு \(\longrightarrow\) வாத்து \(\longrightarrow\) சிங்கம்
மீன் \(\longrightarrow\) பாம்பு \(\longrightarrow\) சிங்கம் \(\longrightarrow\) வாத்து
மீன் \(\longrightarrow\) பாம்பு \(\longrightarrow\) தவளை \(\longrightarrow\) சிங்கம் \(\longrightarrow\) காகம்
மீன் \(\longrightarrow\) தவளை \(\longrightarrow\) பாம்பு \(\longrightarrow\) வாத்து \(\longrightarrow\) சிங்கம்
2.
குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது எது ?
ஹைடிரா
மண்புழு
நட்சத்திர மீன்
அஸ்காரிஸ் (உருளைப்புழு)
3.
மண்டையோடற்ற உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன ?
ஏக்ரேனியா
ஏசெபாலியா
ஏப்டீரியா
ஏசீலோமேட்டா
4.
நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினைக் கண்டறிக.
பல்லி
பாம்பு
முதலை
ஓணான்
5.
பின்வருவனவற்றில் பூச்சி அல்லாதது எது?
வீட்டு ஈ
மூட்டைப் பூச்சி
கொசு
சிலந்தி
6.
பாலூட்டிகளில் விந்தகத்தைச் சுற்றி ---------------------- வரை உள்ளது
7.
நமது தேசியப் பறவையின் இரு சொற் பெயர் ----------------------
8.
பறவைகளில் காற்றுப் பைகள் ----------------------- உடன் தொடர்பு கொண்டுள்ளன
9.
மையோடோம்கள் ----------------------- இல் காணப்படுகிறது
10.
விலங்குலகின் மிகப் பெரிய இரண்டாவது தொகுதி -----------------------
11.
கழிவுநீக்கமண்டலம் அனைத்து முதுகெலும்பிகளிலும் காணப்படுகிறது
12.
மென்மையன மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன கொண்டுள்ளது
13.
பலனோகிளாசஸ் குறுயிழை இயக்கத்தால் உணவூட்ட முறை பெற்றுள்ளன
14.
வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு நெஃரீடியா ஆகும்
15.
கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படுகிறது.
16.
வெள்ளிப் புரட்சி என்றால் என்ன?
17.
மண்டையோடற்றவை (ஏகிரேனியா) என்றால் என்ன?
18.
ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீன்களை ஒத்துள்ளனவா? இல்லையெனில், விடைக்கான காரணங்களை குறிப்பிடுக.
19.
இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்) சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.
20.
குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவது ஏன்?
21.
வகைப்பாட்டியல் வரையறு
22.
பாலூட்டிகளின் தோல் சுரப்பிகளைப் பட்டியலிடுக.
23.
குழியுடலிகளின் உடற் சுவர் எவ்வாறு அமைந்துள்ளது?
24.
தொகுதி அன்னலிடா பற்றி குறிப்பு வரைக
25.
தொகுதி கணுக்காலிகள் பற்றி எழுதுக.
26.
முன்முதுகு நாணிகளின் பண்புகளை விவரிக்க.
27.
கூற்று: முன் முதுகு நாணிகள் எகிரேனியாவில் தொகுக்கப்பட்டுள்ளது.
கரணம்: அவற்றில் தெளிவான மண்டையோடு (கிரரேனியம்) உள்ளது.
(அ) கூற்று சரி, கரணம் தவறு.
(ஆ) கரணம் சரி, கூற்று தவறு.
(இ) கூற்றும் காரணமும் சரியானது.
(ஈ) கூற்றும் காரணமும் தவறானது.
28.
கூற்று: ஹைட்ரா ஈறடுக்கு உயிரி
கரணம்: இது உடலில் இரண்டு அடுக்குகளைக் கொண்டது
( அ) கூற்று சரி, கரணம் தவறு.
( ஆ) கரணம் சரி கூற்று தவறு.
( இ) கூற்றும் காரணமும் சரியானது.
( ஈ) கூற்றும் காரணமும் தவறானது.
1.
(d)
மீன் \(\longrightarrow\) தவளை \(\longrightarrow\) பாம்பு \(\longrightarrow\) வாத்து \(\longrightarrow\) சிங்கம்
2.
(d)
அஸ்காரிஸ் (உருளைப்புழு)
3.
(a)
ஏக்ரேனியா
4.
(c)
முதலை
5.
(d)
சிலந்தி
6.
( )
ஸ்குரோட்டல்
7.
( )
பாவோ கிரிஸ்டேடஸ்
8.
( )
காற்றெலும்புகள்
9.
( )
மீன்கள்
10.
( )
மெல்லுடலிகள்
11.
(b)
12.
(b)
13.
(a)
14.
(b)
15.
(a)
16.
கோழி, வாத்து போன்ற பறவைகளை வளர்த்து முட்டை, இறைச்சி ஆகியவற்றைப் பெறுவதற்கு வெள்ளிப் புரட்சி என்று பெயர்.
17.
இவை முதுகெலும்பிகளின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் ஏகிரேனிய ( மண்டையோடற்றவை) என அழைக்கப்படுகின்றன.
18.
(i) ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன் இரண்டும் மீன்களை ஒத்திருக்கவில்லை.
(ii) ஏனெனில் ஜெல்லி மீன், நட்சத்திர மீன் இரண்டும் முதுகெலும்பு இல்லாதவை.
(iii) மீன்கள் முதுகெலும்புடைய இனத்தைச் சார்ந்தது.
19.
இரு வாழ்விகளின் சுவாச உறுப்புகள் செவுள்கள், நுரையீரல்கள், தோல் மற்றும் தொண்டை வழி.
20.
குழியுடலிகள் உடற் சுவற்றில் இரண்டு அடுக்குகளைக் கொண்டிருக்கின்றன. அவை புற அடுக்கு மற்றும் அக அடுக்கு, எனவே குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
21.
அடிப்படைக் கொள்கைகள், முறைகள் மற்றும் விதிகளை உள்ளடக்கிய கருத்தியல் பிரிவே வகைபாட்டியல் ஆகும். அதாவது உயிரினங்களை வகைப்படுத்தும் அறிவியலாகும்.
22.
1. வியர்வைச் சுரப்பிகள்
2. எண்ணெய்ச் சுரப்பிகள்
3. வாசனைச் சுரப்பிகள்
4. பாலூட்டும் சுரப்பிகள்
5. தோல் சுரப்பிகள்.
23.
குழியுடலிகள் உடல் சுவர் இரண்டு அடுக்குகளைப் பெற்றுள்ளது. இது அக அடுக்கு, புற அடுக்கு என இரு வகைப்படும்.இவ்வாறு இரண்டு அடுக்குகளைப் பெற்றிருப்பதால் இவை ஈரடுக்கு உயிரிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
24.
இவை இருபக்கச் சமச்சீர், மூவடுக்கு, உண்மையான உடற்குழி மற்றும் உறுப்பு மண்டலங்களுடைய முதல் உயரிகளாகும். உடலானது, புறத்தில் மெட்டாமியர்ஸ் என்ற கண்டங்கள் பெற்று, வளையங்கள் போன்று ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படுகின்றன. இதற்கு அன்னுலி என்று பெயர். உடல் கியூட்டிகிள் என்னும் ஈரப்பசை மிக்க உறையால் சூழப்பட்டுள்ளது. சீட்டாக்கள் மற்றும் பாரபோடியாக்கள் இடப்பெயர்ச்சி உறுப்புகளாகும். இவை இருபால் அல்லது ஒருபால் உயிரிகளாகும். எ.கா. நீரிஸ், மண்புழு, அட்டை.
25.
(i) கணுக்காலிகள் விலங்குலகின் மிகப் பெரிய தொகுதியாகும். இவை இருபக்க சமச்சீர், மூவடுக்கள் மற்றும் உண்மையான உடற்குழியுடைய விலங்குகள். இவற்றின் உடல் தலை, மார்பு, வயிறு எனப் பிரிக்கப்பட்டடுள்ளது.
(ii) ஒவ்வொரு கண்டமும் ஒரு ஜோடி இணைப்புக் கால்களைப் பெற்றுள்ளது.
(iii)உடலின் மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது. வளர்ச்சியின் போது குறிப்பிட்ட இடைவெளியில் இவை உதிர்கின்றன. இந்நிலைக்கு
தோலுரித்தல் என்று பெயர். இந்த நிகழ்வின் மூலம் இவற்றின் மேற்புற உறை உதிர்க்கப்பட்டு மீண்டும் உருவாக்கப்படுகின்றது.
(iv) உடற்குழியானது ஹீமோலிம்ப் என்ற திரவத்தினால் (இரத்தம்) நிரப்பப்பட்டுள்ளது. நன்கு வரையறுக்கப்பட்ட இரத்தக் குழல்கள் இல்லாததால் இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவருகிறது. இந்த வகை இரத்த ஓட்டம் திறந்த வகை இரத்த ஓட்டம் எனப்படும்.
(v) பல நிலவாழ் கணுக்காலிகள் டிரக்கியா எனும் நுண் மூச்சுக் குழல் மூலமாக சுவாசம் மேற்கொள்கின்றன.
(vi) ஆண் பெண் இரண்டும் தனித்தனி உயிரிகளாக உள்ளன. எ.கா. இறால், நண்டு, கரப்பான்பூச்சி, மரவட்டை.
26.
முன்முதுகு நாணிகள்-(Procliordata)
இவை முதுகெலும்பிகளின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. முதுகு நாண் அமைப்பின் அடிப்படையில் இவை இரண்டு துணை தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை வால்முதுகுநாணிகள் (யுரோகார்டேட்டா) மற்றும் தலைமுதுகு நாணிகள் (செபாலோகார்டேட்டா) என்பவையாகும்.
i) துணைத்தொகுதி: வால் முதுகு நாணிகள் - (Urochordata)
தனித்து வாழும் லார்வாவின் வால் பகுதியில் முதுகுநாண்கள் காணப்படுகின்றன. முதிர் உயிரிகள் இயல்பான அமைப்பை இழந்து தரையில் ஒட்டி வாழ்பவை. உடலைச் சுற்றிலும் டியூனிக் எனும் உறை உண்டு, எ.கா. அசிடியன் அசிடியன்
ii) துணைத்தொகுதி: தலை முதுகு நாணிகள் - (Cephalochordata)
இவை மீன் வடிவ கடல் வாழ் முதுகு நாணிகள். இவற்றின் முதுகுப்புறத்தில் இணையற்ற துடுப்பு உள்ளது. இதில் தலை முதல் வால் வரை நீண்ட நிலையான முதுகுநாண் முக்கியப் பண்பாகக் கருதப்படுகிறது. ஆம்பியாக்லில் எ.கா. ஆம்பியாக்ஸிஸ்
27.
(அ) கூற்று சரி, கரணம் தவறு.
28.
( இ) கூற்றும் காரணமும் சரியானது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards