9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 30/09/2019
வெப்பம்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
கருத்து: அலுமினியம் தாமிரத்தை விட அதிகமாக வெப்பத்தைக் கடத்தும்.
காரணம்: அலுமினியத்தின் தன்வெப்ப ஏற்புத்திறன் தாமிரத்தை விட அதிகம்.
அ. கருத்தும் காரணமும் சரி. கருத்துக்கான காரணம் சரியானது.
ஆ. கருத்தும் காரணமும் சரி. ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
இ. கருத்து சரி. காரணம் தவறு.
ஈ. கருத்து தவறு. காரணம் சரி.
2.
கருத்து: வெப்பநிலை 100oC எட்டியவுடன் வெப்பநிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது.
காரணம்: நீரின் கொதிநிலை 10oC .
அ. கருத்தும் காரணமும் சரி. கருத்துக்கான காரணம் சரியானது.
ஆ. கருத்தும் காரணமும் சரி. ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
இ. கருத்து சரி. காரணம் தவறு.
ஈ. கருத்து தவறு. காரணம் சரி.
3.
கருத்து : தாமிரப் பகுதியை அடிப்பகுதியாகக் கொண்ட பாத்திரங்கள் மூலம் விரைவாக சமைக்கலாம்.
காரணம்:தாமிரம் ஒரு எளிதிற் கடத்தி.
அ. கருத்தும் காரணமும் சரி. கருத்துக்கான காரணம் சரியானது.
ஆ. கருத்தும் காரணமும் சரி. ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
இ. கருத்து சரி. காரணம் தவறு.
ஈ. கருத்து தவறு. காரணம் சரி.
4.
உருகுதலின் உள்ளுறை வெப்பம் - வரையறு.
5.
வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.
6.
வெப்பச்சலனம்-வெப்பக்கதிர்வீச்சு இரண்டையும் வேறுபடுத்துக.
7.
வெப்பக் கடத்தல் - வரையது.
8.
நீரின் நிலை மாற்றங்கள் யாவை? விளக்குக
9.
அன்றாட வாழ்வில் வெப்பச்சலனம் பற்றி விளக்குக.
10.
100°C வெப்பநிலையில் இருக்கும் நீரைப் பயன்படுததி 2 கிகி நிறையுள்ள பனிக்கட்டியுடன் சேர்த்த கலவையை 0°C வரை குளிர்விக்க எவ்வளவு வெந்நீர் தேவைப்படும்?
நீரின் தன் வெப்ப ஏற்புத் தி்றன் = 4.2 JKg-1 K-1 மற்றும் பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பம் = 336 Jg-1.
11.
2கிகி நீரின் வெப்பநிலையை 10°C லிருந்து 50°C க்கு அதிகரிக்கத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் எவ்வளவு? (நீரின் தன் வெப்ப ஏற்புத்தி்றன் 4200 JKg-1 K-1)
12.
25 கிராம் நீரை 0oC இருந்து 100oC க்கு வெப்பப்படுத்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலை ஜூல் கணக்கிடுக.அதனை கலோரியாக மாற்றுக.(நீரின் தன்வெப்ப ஏற்புத் திறன் = 4.18 j/goC)
13.
0.5 கிகி எடையுள்ள ஒரு அலுமினியத் துண்டு 100oCக்கு வெப்பப்படுத்தப்படுகிறது.தொடர்ந்து 0.4 கிகி நிறையிலும் 10oC வெப்பநிலையிலும் இருக்கும் நீரினுள் வைக்கப்படுகிறது. கலவையின் வெப்பநிலையிலும் இருக்கும் நீரினுள் வைக்கப்படுகிறது. கலவையின் வெப்பநிலை 30oCஆக இருந்தால் அலுமினியத்தின் தன் வெப்ப ஏற்புத் திறன் எவ்வளவு?(நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன் = 4200J/KgoC)
14.
0oC ல் இருக்கும் 2கிகி பனிக்கட்டியை 20oC நீராக மாற்ற தேவைப்படும் வெப்ப ஆற்றலைக் கணக்கிடு.(நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் = 334000 J/Kg,நீரின் தன் வெப்ப ஏற்பத் திறன் = 4200J/Kg/K).
15.
மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?
வெப்பக்கதிர்வீச்சு
வெப்பக்கடத்தல்
வெப்பச்சலனம்
b மற்றும் c
16.
உயரமும் ஆரமும் சமமாக உள்ள இரண்டு உருளைகள் தாமிரம் மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளன. எது அதிக வெப்பத்தைக் கடத்தும்.
தாமிரக் கம்பி
அலுமினியக் கம்பி
இரண்டும்
இரண்டும் இல்லை
17.
ஒரே நீளமுள்ள இரண்டு உருளை வடிவிலுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2:1. இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளினால் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை அதிகம் கடத்தும்?
இரண்டும்
கம்பி-2
கம்பி-1
எதுவும் இல்லை
18.
வெப்பநிலையின் SI அலகு
ஃபாரன்ஹீட்
ஜூல்
செல்சியஸ்
கெல்வின்
19.
கலோரி என்பது எதனுடைய அலகு?
வெப்பம்
வேலை
வெப்பநிலை
உணவு
20.
வெப்பநிலை மாறாமல் பொருளொன்று ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதை _________ என்கிறோம்.
21.
திரவங்களும், வாயுக்களும் _________ முறையில் வெப்பத்தைக் கடத்தும்.
22.
பகல் நேரங்களில், காற்று ________ லிருந்து _________ க்கு பாயும்.
23.
வேகமாக வெப்பத்தைக் கடத்தும் முறை ______.
1.
ஈ. கருத்து தவறு. காரணம் சரி.
2.
இ. கருத்து சரி. காரணம் தவறு.
3.
அ. கருத்தும் காரணமும் சரி. கருத்துக்கான காரணம் சரியானது.
4.
உருக்குதல் நிகழ்வின் போது வெப்பமானது உட்கவரப்பட்டு அதே வெப்பமானது உறைத்தல் நிகழ்வின் போது (வெப்பநிலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல்) வெளிவிடப்படும். இந்த வெப்பத்தை உருக்குதலின் உள்ளுறை வெப்பம் என்கிறோம்.
5.
ஒரு பொருளின் வெப்பநிலையை (10C) உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப ஏற்புத் திறன் ஆகும்.
6.
| வ.எண் | வெப்பச்சலனம் | வெப்பக்கதிர்வீச்சு |
| 1. | மூலக்கூறுகள் தேவைப்படுகிறது | மூலக்கூறுகள் தேவைப்படுவதில்லை |
| 2. | மின்காந்த அலைகளால் வெப்பம் பரவுவதில்லை. | மின்காந்த அலைகளாக வெப்பம் பரவுகிறது. |
| 3. | அதிக வெப்பமுள்ள பகுதியிலிருந்து வெற்றிடத்தில் கூட வெப்பம் பரவுகிறது. | வெற்றிடத்தில் கூட வெப்பம் பரவும். |
7.
அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளுக்கு மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்வு வெப்பக் கடத்தல் எனப்படும்.
8.
(i) நிலை மாற்றம்
பொருளானது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வையே நாம் நிலை மாற்றம் என்கிறோம்.
எடுத்துக்காட்டாக சாதாரண வெப்பநிலையில் நீர் மூலக்கூறுகள் திறவாநிலையில் இருக்கும். 1000C வெப்பநிலைக்கு நீரை வெப்பப்படுத்தும் போது அது நீராவியாக மாறுகிறது. நீராவி வாயு நிலையில் இருக்கிறது. வெப்பநிலையைக் குறைக்கும் போது மீண்டும் நீராக மாறுகிறது. வெப்பநிலையை 00C க்கு குறைக்கும் போது பனிக்கட்டியாக மாறுகிறது. பனிக்கட்டி திட நிலையில் இருக்கிறது. பனிக்கட்டியை வெப்பப்படுத்தும்போது மீண்டும் நீராக மாறுகிறது. இவ்வாறு வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் போது நீர் தனது நிலையை மாற்றிக்கொள்ளுகிறது.
(ii) உருகுதல் உறைதல்
ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு உருகுதல் ஆகும்.
(iii) ஆவியாதல் குளிர்தல்
ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு ஆவியாதல் ஆகும்.

9.
(1) சூடான காற்று பலூன்கள்
இத்தகைய பலூன்களின் அடிப்பகுதியில் இருக்கும் காற்று மூலக்கூறுகள் வெப்பமடைந்து மேல் நோக்கி நகரத் தொடங்கும். இதனால் சூடான காற்று பலூனின் உள்ளே நிரம்புகிறது. அடர்த்தி குறைந்த சூடான காற்றினால் பலூன் மேல்நோக்கிச் செல்கிறது. சூடான காற்று மேல்நோக்கிச் செல்வதால் பலூனின் மேற்பகுதியில் இருக்கும் குளிர் காற்று கீழ்நோக்கி நகர்கிறது. இந்தச் செயல் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.
(2) நிலக்காற்றும் கடல்காற்றும்
(i) பகல் நேரங்களில் நிலப்பரப்பு. கடல் நீரைவிட அதிகமாகச் சூடாகிறது. இதனால் நிலப்பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்புகிறது. கடல் பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று நிலத்தை நோக்கி வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் காற்று கடல் பகுதியிலிருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது. இதனை கடல் காற்று என்கிறோம்.
(ii) இரவு நேரங்களில் நிலப்பரப்பு கடல் நீரைவிட விரைவில் குளிர்வடைகிறது. கடல் பரப்பில் உள்ள சூடான காற்று மேலே எழும்ப, நிலப்பரப்பிலிருந்து குளிர்ந்த காற்று கடல் பகுதி நோக்கி வீசுகிறது. இதனால் இரவு நேரங்களில் காற்று நிலத்திலிருந்து கடல் நோக்கி வீசுகிறது. இதனை நிலக்காற்று என்கிறோம்.
(3) காற்றோட்டம்
காற்றானது, அழுத்தம் அதிகமான பகுதியிலிருந்து அழுத்தம் குறைவான பகுதிக்குச் செல்லும். சூடான காற்று மேலெழும்பிச் செல்வதால் அங்கு குறைந்த அழுத்தம் உருவாகிறது. ஆகவே குளிர்ந்த காற்று அதிக அழுத்தப்பகுதியில் இருந்து குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி நகர்கிறது. இதுவே காற்றோட்டத்தை உருவாக்குகிறது.
(4) புகைபோக்கிகள்
சமையல் அறைகளிலும் தொழிற்சாலைகளிலும் உயரமான புகைபோக்கிகளை வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சூடான காற்று அடர்த்தி குறைவாக இருப்பதால் எளிதாக வளிமண்டலத்திற்குச் சென்று விடுகிறது.
10.
கொடுக்கப்பட்டுள்ள தரவுகள்:
பனிக்கட்டியின் நிறை = 2Kg = 2000 g.
m என்பது வெந்நீரின் நிறை என்க.
இழப்பு வெப்பம் = பெற்றுக்கொண்ட வெப்பம்
m \(\times\) C \(\times\) Δt = m \(\times\) L
m \(\times\) 4.2 \(\times\) (100 - 0) = 2000 \(\times\) 336
m = \(\frac {2000\ \times\ 336}{4.2\ \times\ 100}\)
= 1600 கி அல்லது 1.6 கிகி.
11.
கொடுக்கப்பட்டுள்ள தரவுகள்
m = 2 Kg, ΔT = (50 - 10) = 400C
கெல்வினில் மாற்றும் பொழுது
(323.15 - 283.15) = 40K
C = 4200 JKg-1 K-1
\(\therefore\) தேவையான வெப்பம், Q = m \(\times\) C \(\times\) ΔT
= 2 \(\times\) 4200 \(\times\) 40 = 3,36,000 J
12.
நீரின் நிறை (m) = 25 கிராம்
வெப்பநிலை உயர்வு (AT) = (100°C− 0°) = 100°C
நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் (C) = 4.18 J/g°C.
தேவைப்படும் வெப்ப ஆற்றல் (Q) = ?
\(
(Q) =m \times C \times \Delta T \\
=25 \times 4.18 \times 100 \\
=10450 \mathrm{~J}
\)
13.
அலுமினியத்தை நிறை M = 0.5 kg
அலுமினியத்தை தன் வெப்ப ஏற்புத் திறன் CA = ?
வெப்பநிலை வேறுபாடு ΔT = (100 - 30) = 70oC
நீரின் நிறை MW = 0.4 kg
நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் CW = 4200 J/ kg
(Δ TW) = (30 - 10) = 200C
அலுமினியத்தின் வெப்ப இழப்பு = நீரின் வெப்ப ஏற்பு
MA \(\times\) CA \(\times\) (ΔT)A = MW \(\times\) CW \(\times\) (ΔT)W
0.5 \(\times\) CA \(\times\) 70 = 0.40 \(\times\) 4200 \(\times\) 20
CA = \(\frac {0.4\ \times\ 4200\ \times\ 20}{70\ \times\ 0.5} = \frac {6720}{7}\)
= 960 J/KgoC
அலுமினியத்தின் தன் வெப்ப ஏற்புத்திறன் = 960 J/KgoC
14.
பனிக்கட்டியின் நிறை (m) = 2 கிராம்
நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் (C) = 4200 Jkg-¹ K-¹
வெப்ப நிலை மாற்றம் (\(\Delta\)t) = (20°C − 0°C) = 20°C
நீரின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் (L) = 3,34,000 J/ kg
தேவைப்படும் வெப்ப ஆற்றல் =m C \(\Delta\)t + mL
\(=(2 \times 4200 \times 20)+(2 \times 3,34,000) \\
=168000+66800 \\
=836000 \mathrm{~J}\)
15.
(b)
வெப்பக்கடத்தல்
16.
(a)
தாமிரக் கம்பி
17.
(c)
கம்பி-1
18.
(d)
கெல்வின்
19.
(a)
வெப்பம்
20.
( )
உள்ளுறை வெப்பம்
21.
( )
வெப்பச்சலனம்
22.
( )
கடல் பகுதியில், நிலப்பகுதி
23.
( )
வெப்பக்கதிர்வீச்சு
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards