9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/02/2020
9ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாவிடைகள் (9th Standard Science Important Questions with Answerkey)
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
நான்கு வெவ்வேறு ஊடகத்தில் ஒலியின் வேகம் (மீ/வி) கொடுக்கப்பட்டுள்ளது, இவற்றுள், கடலுக்கடியில் வெகு தொலைவில் உள்ள இரு திமிங்கலங்கள் செய்யும் சமிஞ்சைகள் வேகமாக செ ல்வதற்கு ஏற்ற வேகம் எது?
5170
1280
340
1530
2.
_______ ல் ஒலி வேகமாக பயணிக்கும்.
திரவங்களில்
வாயுக்களில்
திடப்பொருளில்
வெற்றிடத்தில்
3.
காளான்களின் தாவர உடலம் என்ப து _____________
காளான் விதை
மைசீலியம்
இலை
இவைகள் அனைத்தும்
4.
மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை _____________
தோட்டக்கலை
ஹைட்ரோபோனிக்ஸ்
போமாலஜி
இவற்றில் எதுவுமில்லை
5.
நிலவேம்பின் இடு சொல்பெயர் _________
லூக்காஸ் ஆஸ்பெரா
ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா
குரோட்டலே ரியா ஜன்சியா
கேஷியா பஸ்துலா
6.
தேனீ வளர்ப்பில் போதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?
ஏபிஸ் டார்சோ ட்டா
ஏபிஸ் ப்ளோரா
ஏபிஸ் பெல்ல பெரா
ஏபிஸ் இண்டிகா
7.
கீழ்கண்டவற்றில் இந்திய கால்நடை எது?
i) பாஸ் இண்டிகஸ்
ii) பாஸ் டோமஸ்டிகஸ்
iii) பாஸ் புபாலிஸ்
iv) பாஸ் வல்காரிஸ்
(i) மற்றும் (ii)
i மற்றும் iii
ii மற்றும் iii
iii மற்றும் iv
8.
கீழ்க்கண்டவற்றுள் எது நீரைப் பாதுகாக்கும் உத்தியாகும்?
நீர் மறுசுழற்சி
ஆழ்துளைக் கிணறுகளை அதிகப்படுத்துதல்
மேல்நிலை நீர்த்தேக்கத் தொடிகளை பெருமளவில் பயன்படுத்துதல்.
தாவரங்களுக்கு நீர் ஊற்றும்போது குழாய்களைப் பயன்படுத்துதல்.
9.
கீழ்க்கண்டவற்றுள் எது நீர்த்தாவரங்களின் தகவமைப்புகளில் இல்லாதது?
நன்றாக வளர்ச் சி அடையாத வேர்கள்
குறுக்கப்பட்ட உடலம்
நீரை சேமிக்கும் பாரன்கைமா திசுக்கள்
மென்மையாக பிளவுற்ற நீரில் மூழ்கிய இலைகள்
10.
வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு (CO2 ) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு ______ எனப்படும்.
ஒளிச்சேர்க்கை
உட்கிரகித்தல்
சுவாசித்தல்
சிதைத்தல்
11.
இந்த கீழ்காணும் நோயானது விலங்கு கடித்தலால் பரவக்கூடியது.
நிமோனியா
காசநோய்
காலரா
ரேஃபிஸ்
12.
________ வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
கார்பபோஹைட்ரேட்
வைட்டமின்கள்
புரதங்கள்
கொழுப்புகள்
13.
மைக்காலஜி என்பது உயிரியலின் ஒரு பிரிவு. இது ________________ பற்றிய படிப்பாகும்.
பாசிகள்
வைரஸ்
பாக்டீரியா
பூஞ்சை
14.
இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ______ ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.
கார்பன்
அயோடின்
பாஸ்பரஸ்
ஆக்ஸிஜன்
15.
நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் _________ பாதுகாப்புச் சட்டம் 1988ன் கீழ் வருகின்றன.
வனத்துறை
வனவிலங்கு
சுற்றுச்சுழல்
மனித உரிமைகள்
16.
நெகிழிக் குறியீடானது மூன்று தொடர் அம்புக் குறிகளால் உருவாக்கப்பட்ட _________ டன் கூடிய எண்கள் மற்றும் எழுத்துக்களால் (நெகிழி வகையின் சுருக்கக் குறியீடு) குறிக்கப்பட்டிருக்கும்.
சின்னம்
மறு சுழற்சி
சதுரம்
முக்கோணம்
17.
கிராஃபைட்டை உராய்வுக் குறைப்பானாக எந்திரங்களில் பயன்படுத்தக் காரணம் என்ன ?
அது நல்ல மின்கடத்தி
அது வழவழப்பான படலங்களால் ஆனது மற்றும் அதிக உருகுநிலை கொண்டது.
அதன் அதிக அடர்த்தி
அது வலிமையானது மற்றும் மிருதுவானது
18.
உள்ளீட்டுக்கருவி அல்லாதது எது?
சுட்டி
விசைப்பலகை
ஒலிபெருக்கி
விரலி
19.
தசை நாண்கள் இணைப்பது
குருத்தெலும்பை தசைகளுடன்
எலும்பை தசைகளுடன்
தசைநார்களை தசைகளுடன்
எலும்பை எழும்புகளுடன்
20.
கீழ்க்கண்டவற்றில் எது நியூரானில் இல்லை
சார்க்கோலெம்மா
ஒருங்குமுனைப்புகளில்
நியூரோலம்மா
ஆக்ஸான்
21.
குளோரன்கைமா உருவாக்கம் ___________ ல் அறியப்பட்டது
குளோரோலாவின் சைட்டோபிளாத்தில்
பச்சைபூஞ்சாணம் அஸ்பர்ஜில்லஸின் மைசிலியத்தில்
மாஸ்வுடைய ஸ்போர் கேம்சூலில்
பைனஸின் மகரந்த குழாயில்
22.
ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ______ ஆகும்.
சிறுநீரக்குழாய்
சிறுநீர்ப்புறவழி
விந்துக்குழாய்
விதைப்பை
23.
கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?
நாவடிச் சுரப்பி
லாக்ரிமால்
கீழ்தாடைக் சுரப்பி
மேலண்ணச் சுரப்பி
24.
ஆக்ஸிஜனேற்றிகள் ____________ கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
எலக்ட்ரான் ஈனி
எலக்ட்ரான் ஏற்பி
25.
வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய தனிமம்
பொட்டாசியம்
கால்சியம்
புளூரின்
இரும்பு
26.
ஹைட்ரஜன் மூலக்கூறு உருவாவது __________ பிணைப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.
அயனி
சகப்
ஈதல்
ஹைட்ஜேன்
27.
டாப்ரீனீர் மும்பை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால் நியூலாந்தோடு தொடர்புடையது எது?
நவீன தனிம அட்டவணை
ஹீண்ட்ஸ் விதி
எண்ம விதி
பெளலீயின் விலக்கல் கோட்பாடு
28.
இந்தியாவில் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண் ____________
220 Hz
50 Hz
5 Hz
100 Hz
29.
பின்வருவனவற்றுள் எது பாதுகாப்புக் கருவி அல்ல?
மின்னுருகு இழை
முறி சாவி
தரை இணைப்பு
கம்பி
30.
மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் _____, எதிர் மின்னூட்டத்தில் _____.
தொடங்கி; தொடங்கும்
தொடங்கி; முடிவடையும்
முடிவடைந்து; தொடங்கும்
முடிவடைந்து; முடியும்
31.
மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?
வெப்பக்கதிர்வீச்சு
வெப்பக்கடத்தல்
வெப்பச்சலனம்
b மற்றும் c
32.
வெப்பநிலையின் SI அலகு
ஃபாரன்ஹீட்
ஜூல்
செல்சியஸ்
கெல்வின்
33.
ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.
ஐசோடோன்
ஐசோடோப்பு
ஐசோபார்
34.
அணுவில் எலக்ட்ரான்கள் இருக்குமிடம் _________.
ஆர்பிட்
உட்கரு
புரோட்டான்
35.
நியூட்ரானைக் கண்டறிந்தவர் _________.
ஜேம்ஸ் சாட்விக்
ரூதர்போர்டு
J.J. தாம்சன்
36.
மையநோக்கு விசையின் எண் மதிப்பு ____
\(F=\frac { { mv } }{ { r }^{ 2 } } \)
\(F=\frac { { m^{ 2 }v } }{ { r } } \)
\(F=\frac { { mv^{ 2 } } }{ { r } } \)
37.
சரியான அறிக்கையை தேர்வு செய்க.
வினை மற்றம் எதிர்வினை விசைகள் ஒரே பொருளின் மீது செயல்படும்.
வினை மற்றம் எதிர்வினை விசைகள் வெவ்வேறு பொருட்கள் மீது செயல்படும்.
(a) மற்றும் (b) இரண்டில் ஒன்று மட்டும் சரி
38.
100 மிட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர் முடிக்கும் புள்ளியை அடைய 10 விநாடி ஆனது. அவருடைய சராசரி வேகம் ____ மீ / விநாடி
5
10
20
40
39.
1 மீட்டர் = ________ நானோ மீட்டர்
10-9 நானோமீட்டர்
109
10-12
40.
கீழ்க்கண்டவற்றுள் எது சேர்மம் _________.
நீர்
LPG
சாறு
41.
மாற்றுக. 90o C = _______ K
363 K
383 K
303 K
42.
நிலவின் புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு _______.
1.63 மி.வி.-2
4.63 மி.வி.-2
9.8 மி.வி.-2
43.
ஒரு கருவியினால் அளவிடக் கூடிய மிகச்சிறிய அளவு ________ எனப்படும்.
மீச்சிற்றளவு
முதன்மை கோல் அளவு
வெர்னியர் அளவு
44.
மைக்ரோ என்ற முன்னொட்டு எந்த காரணியை குறிக்கிறது?
10-6
10-3
10-9
45.
குவி ஆடிக்கு u மற்றும் v ன் மதிப்பு எப்போதும்_______
எதிர்குறி
நேர்குறி
சுழி
46.
_______பிம்பத்திற்கும் உருப்பெருக்கத்தின் மதிப்பு நேர்குரியாக இருக்கும்
மெய்பிம்பம்
மாயபிம்பம்
தலைகீழ் பிம்பம்
47.
குவியாடிகள் எப்போதும்______பிம்பத்தையே உருவாக்குகின்றன.
மெய்
மாய
தலைகீழ்
48.
தரவு செயலாக்கத்தின் படிநிலைகள்
7
4
6
8
49.
சீரான வட்ட இயக்கத்தோடு தொடர்புடைய விசை ------------
f = mv2/r
f = mvr
f= mr2/v
f = v2/r
50.
தலையாக்கம் (Cephalization) எதனுடன் தொடர்புடையது ?
தலை உருவாதல்
குடல் உருவாதல்
உடற்குழி உருவாதல்
இன உறுப்பு உருவாதல் (Gonad)
51.
மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1964
1954
1950
1963
52.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை
அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்
கதிர் வீச்சுமுறை
உப்பினைச் சேர்த்தல்
கலன்களில் அடைத்தல்
53.
மனித உடலின் சில தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து
கார்போஹைட்ரேடடுகள்
புரோட்டீன்
வைட்டமின்
கொழுப்பு
54.
தாவரத்தின் வேர் ____________ ஆகும்
I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு
II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு
III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு
IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு
I மற்றும் II
II மற்றும் III
III மற்றும் IV
I மற்றும் IV
55.
நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ____________ எனப்படும்
நடுக்கமுறு வளைதல்
ஒளிச்சார்பசைவு
நீர்சார்பசைவு
ஒளியுறு வளைதல்
56.
பின்வருவனவற்றில் பூச்சி அல்லாதது எது?
வீட்டு ஈ
மூட்டைப் பூச்சி
கொசு
சிலந்தி
57.
பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது _______
குவியாடி
சமதளஆடி
குழியாடி
58.
குழியாடியின் குவியத்தொலைவு 5 செ.மீ எனில் அதன் வளைவு ஆரம்
5 செ.மீ
10 செ.மீ
2.5 செ.மீ
59.
பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு
2,8,9
2,8,1
2,8,8,1
2,8,8,3
60.
நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது
ஒரு அயனி
ஒரு ஐசோடோப்
ஒரு ஐசோபார்
வேறு தனிமம்
61.
எளிய காய்ச்சி வடித்தல் முறைக்குத் தேவையானது
ஆவியாக்கும் கிண்ணம்
பிரிபுனல்
வடிதாளுடன் சேர்ந்த வடிகட்டி
லீபிக் குளிர்விப்புக் குழாய்
62.
கீழ்வரும் வரைபடத்தில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பொருளைக் குறிப்பிடுவது எது?
63.
நீராவிப்போக்கு பின்வரும் எந்த வாக்கியத்தின் அடிப்படையில் சிறந்தது என வரையறுக்கப்படுகின்றது.
தாவரங்கள் மூலம் நீர் இழப்பு.
தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள பாகத்திலிருந்து நீர் ஆவியாதல்
தாவரத்தின் தரைக்கு கீழ் உள்ள பாகத்திலிருந்து நீர் நீராவியாக இழக்கப்படுதல்
தாவரத்தின் நீர்வளிமண்டலத்திற்கு வெளியேறுதல்
64.
கலவையை உருவாக்கும் உட்பொருட்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது
தனிமங்கள்
சேர்மங்கள்
உலோகக்கலவைகள்
இயைபுப் பொருட்கள்
65.
ஒரு மெட்ரிக் டன் என்பது _______.
100 குவின்டால்
10 குவின்டால்
1/10 குவின்டால்
1/100 குவின்டால்
66.
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
கி.மீ < மீ < செ.மீ < மி.மீ
மி.மீ > மீ > செ.மீ > கி.மீ
67.
சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?
68.
எந்த இயற்பியல் பண்பு ஹெர்ட்ஸ் (Hz) என்ற அலகினைக் கொண்டுள்ளது? அதனை வரையறு.
69.
காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன ?
70.
கீழ்காண்பவனவற்றை வரையறு
பிரியான்கள்
71.
உன்னிடம் ஒரு பையில் பஞ்சும், மற்றொரு பையில் இரும்புத்துண்டும் உள்ளன. எடை பார்க்கும் எந்திரம் ஒவ்வொன்றின் நிறையும் 100 கி.கி. என்று காண்பிக்கிறது. உண்மையில் ஒன்று மற்றொன்றைவிட கனமானதாக இருக்கும். எந்தப் பொருள் கனமானதாக இருக்கும்? ஏன்?
72.
ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை?
73.
ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?
74.
எண்ணிடப்பட்ட வெற்றிடங்களை நிரப்பு. வெப்ப வரைக்கோட்டினை அர்த்தமுள்ளதாக்கு.
75.
உன் பள்ளியின் அருகிலுள்ளத் தோட்டம் ஒன்றினை பார்வையிடு.
பின்வரும் கேள்விகளுக்கு விடையளி.
அ) நீ பார்வையிட்டதில் கணுக்காலிகளைப் பட்டியலிடிட்டு, அவற்றின் இருசொற்பெர்களை குறிப்பிடுக.
ஆ) நீ கண்டறிந்த தீமையளிக்கும் விலங்குகளைக் குறிப்பிடுக.
இ) ஏதேனும் உயிரினத்தின் முட்டையைப் பார்த்தாயா? ஆம் எனில் அதன் உயிரியின் பெயரினைக் குறிப்பிடுக.
ஈ) நீ பார்வையிட்ட இடத்தில் கண்ட பறவைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
76.
முடுக்கம் - வரையறு.
77.
வட்ட இயக்கம் என்றால் என்ன?
78.
டிண்டால் விளைவு உண்மைக் கரைசலில் உண்டாவது இல்லை. ஏன்?
79.
புவியில் ஒரு மனிதன் நிறை 50kg எனில் அவரது எடை எவ்வளவு?
80.
"இழை ஒளியியல்" உருவாகக் காரணமானவர் யார்?
81.
விண்ணியல் ஆரம் என்றால் என்ன?
82.
சமதள ஆடியில் ஒருவரின் முழு உருவம் தெரிய வேண்டுமெனில் சமதள ஆடியின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?
83.
கீழ்காணும் செரிமான செயல்முறையின் ஐந்து படிநிலைகளை சரியாக வரிசைப்படுத்துக.
செரிமானம்,தன்மயமாதல்,உட்கொள்ளுதல்,வெளியேற்றுதல்,உறிஞ்சுதல்.
84.
மனிதனில் தசையை எலும்புடன் இணைக்கும் திசுவின் பெயர் என்ன?
85.
AC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்
86.
தன் வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.
87.
கோடைகாலங்களில் மக்கள் ஏன் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்?
88.
ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீன்களை ஒத்துள்ளனவா? இல்லையெனில், விடைக்கான காரணங்களை குறிப்பிடுக.
89.
கலப்படம் செய்யப்பட்ட உணவை உண்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
90.
வெற்றி்டத்தில் ஒளியின் வேகம் என்ன?
91.
i. மாய முக்கியக் குவியம்
ii. மெய் முக்கியக் குவியம்
இவற்றை தரக்கூடிய ஆடி(கள்) எது /எவை?
92.
உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருடகள் இரண்டினைக் கூறுக.
93.
உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு பயனபடுத்தப்படுவது ஏன்?
94.
நுண் ஊட்டத் தனிமத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
95.
எந்த பூக்கும் தாவரத்தில் ஒளியுறு வளைதல், டான்டேலியன் தாவரத்திற்கு நேர் எதிராகக் காணப்படும்.
96.
அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
கால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்
97.
புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.
98.
ஒளிச்சேர்க்கையின் இறுதி தயாரிப்புப் பொருள் என்ன?
99.
2மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகோலால் உன்னால் கண்டறிய முடியுமா?
100.
இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?
101.
பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை?
102.
சுற்றுக்காலம் வரையறு
103.
சாம்பல் நீர் என்றால் என்ன?
104.
உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக் கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.
105.
தகவமைப்பு என்றால் என்ன?
106.
மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும் சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.
107.
பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?
108.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக
109.
கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?
110.
ஒரு மின்மாற்றியானது ஒரு வீட்டின் அழைப்பு மணிக்கு 240 V AC மூலத்திலிருந்து 8 V மின்னழுத்தம் கொடுக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை சுருள் 4800 சுற்றுகள் கொண்டுள்ளது. துனைச்சுருளில் எத்தனை சுற்றுகள் இருக்கும்?
111.
உள்ளீ ட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக.
112.
கீழ்காணும் சொற்கூறுகளை வேறுபடுத்துக.
அ.கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்
ஆ.உரிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்
இ.விந்து மற்றும் அண்டம்
ஈ.உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்
உ.இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்பு பல் வரிசை
ஊ.வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள்
113.
கீழ்காணும் சொற்கூறுகளை வரையறுக்க
அ.செரித்தல்
ஆ.சவ்வூடு பரவலை சீராக்கல்
இ.பால்மமாக்குதல்
ஈ.கருமுட்டை வெளிப்படுதல்
114.
செரிக்கப்பட்ட உணவை உட்கிரகிக்க எவ்வாறு சிறுகுடலானது அமைக்கப்பட்டுள்ளது?
115.
எலும்பு இணைப்பு திசு என்றால் என்ன? எப்படி அவை நமது உடல் செல்கள் செயல்பட உதவுகின்றன?
116.
நீ எவ்வாறு ஆக்குத்திசுவையும் நிலைத்த திசுவையும் வேறுபடுத்துவாய்?
117.
நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன ? உதாரணம் கொடு.
118.
பாரிஸ் சாந்தின் பயன்களைக் கூறு.
119.
மந்த வாயுக்கள் ஏன் மந்தத் தன்மையுடன் காணப்படுகின்றன?
120.
கீழ்க்கண்ட மூலக்கூறுகளில் உள்ள பிணைப்பின் வகையின் அடிப்படையில் அட்டவணையை நிரப்புக.
CaCl2, H2O, CaO, CO, KBr, HCl, CCl4, HF, CO2, Al2Cl6
| அயனிப்பிணைப்பு | சகப்பிணைப்பு | ஈதல் சகப்பிணைப்பு |
121.
பிணைப்பின் வகைகள் யாவை?
122.
மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்களைக் கூறுக.
123.
ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
124.
இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான நிலைமின்னியல் விசை எந்த காரணிகளைச் சார்ந்தது?
125.
முதுகு நாண் அமைந்துள்ள இடத்தினைப் பொறுத்து முன் முதுகு நாணிகளை (புரோகார்டேட்) வகைப்படுத்துக. உன் பதிலை நிரூபி.
126.
கோளக ஆடிச் சமன்பாட்டை எழுதுக.அதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் விளக்குக.
127.
தரவு-தகவல் வேறுபடுத்துக
128.
பெருக்கல் விகித விதியினை வரையறு
129.
உண்மையான வேகம் சராசரி வேகத்திலிருந்து ஏன் மாறுபடுகிறது?
130.
சீரான வட்ட இயக்கம் என்றால் என்ன? சீரான வட்ட இயக்கத்துக்கு இரண்டு உதாரணங்கள் தருக.
131.
வடிகட்டிய நீர்மம், வாலை வடி நீர்மம்-வேறுபடுத்துக
132.
22 காரட் தங்கத்திலான ஒரு பதக்கத்தினை நீ வென்றிருக்கிறாய்.அதன் தூய்மையை எவ்வாறு கண்டறிவாய்?
133.
நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.
134.
கீழ்க்கண்டவற்றை வே றுபடுத்துக
அ) அயல்நாட்டு இனம் மற்றும் பாரம்பரிய இனம்
ஆ) மகரந்தம் மற்றும் தேன் ரசம்
இ) கூனி இறால் மற்றும் இறால்
ஈ) துடுப்பு மீன் மற்றும் ஓடு மீன்
உ) தொழு உரம் மற்றும் வெள்ளாட்டு எரு
135.
ஒலியின் எதிரொலிப்பு விதிகளை சோதனை மூலம் விளக்குக.
136.
சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?
137.
வாழிடத்திற்கு ஏற்றாற்போல். வௌவால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன?
138.
சில மனித நோய்களானவை பாதிக்கப்பட்ட நபரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரின் இரத்தத்தோடு கலப்பதன் மூலம் பரவுகின்றன. இப்படியான நோய் பாதிக்கப்பட்டவருக்கு தொடர்ச்சியாக இரத்த வெள்ளைணுக்கள் குறைவுபடுகின்றன.
அ. இந்நோயின் பெயர் யாது? இவற்றின் நோய்க்காரணம் எது?
ஆ. இத்தாக்குதலின் போது பாதிக்கப்படும் வெள்ளையணுக்களின் வகை எது?
இ. எவ்வாறு நோயுற்றவரின் இரத்தமானது பாதிக்கப்படாத வரைத் தொடர்பு கொள்கிறது?
ஈ. இவ்வாறான நோய் பரவலைத்தடுப்பதற்கான மூன்று முறைகளை பரிந்துரை செய்க.
139.
மனிதனின் உணவுப் பாதையை விவரி
140.
நீங்கள் இப்பொழுது தாவர மற்றும் விளங்கு செல்கள் பற்றி அறிந்திருப்பீர்கள்.அவற்றிற்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக
141.
பாரிஸ் சாந்து நீரற்ற கொள்கலனில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும்.ஏன்?
142.
கீழ் உள்ள கூற்றுகள் ஒவ்வொன்றிற்கும் ஓர் எடுத்துக்காட்டு தருக.
அ.இரண்டு சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்
ஆ.ஒரு அயனிப் பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்
இ.இரண்டு சகப்பிணைப்பும், ஒரு ஈதல் சகப்பிணைப்பும் உள்ள ஒரு சேர்மம்.
ஈ.மூன்று சகப்பிணைப்பு உள்ள ஒரு சேர்மம்
143.
DC மோட்டாரின் தத்துவம் ,அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை விளக்கவும்.
144.
நீரின் நிலை மாற்றங்கள் யாவை? விளக்குக
145.
தொகுதி முதுகெலும்பற்றவைகளின் வழிமுறை படத்தின் (flow chart) சுருக்கமான வருணனையைத் (out line) தருக.
146.
நமது உடல் வளர்ச்சிக்கு வைட்டமின்கள் எவ்வாறு பயன்படுகிறது? கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் மூலங்கள், அதன் குறை பாட்டு நோய்கள் மற்றும் அதன் அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக.
147.
கணினியின் தலைமுறைகளை அட்டவணைப்படுத்து
148.
எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது? (பல்வேறு முறைகளை ஒன்று சேர்த்து நீ பயன்படுத்தலாம்).
149.
ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை எவ்வாறு கணக்கிடுவாய்?
150.
புவியின் பரப்பிலிருந்து 36000 உயரத்திலும், சுழற்சிக் காலம் 24 மணி நேரத்தையும் கொண்டுள்ள செயற்கைக் கோளின் வேகத்தைக் கணக்கிடவும். R – 6370 கிமீ எனக் கொள்க .
(குறிப்பு: மணி நேரத்தை வினாடிகளில் மாற்றியபின் கணக்கிடவும்)
151.
200 கிராம் எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரின் மேல் மிதக்கிறது. மரக்கட்டையின் பருமன் 300 செ.மீ3 எனில் நீரினால் ஏற்படும் உந்துவிசையைக் கண்டுபிடி.
152.
1C மின்னூட்டத்தில் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்?
153.
குழி ஆடியின் குவியத்தொலைவு 5 cm எனில் அதன் வளைவு ஆரத்தின் மதிப்பு?
154.
நெகிழிச்சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது -0.4C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,(அ)எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது? எது எலக்ட்ரானைப் பெற்றது?(ஆ)இந்நிகழ்வில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
155.
நீரில் ஒளியின் வேகம் 2.25 \(\times\)108மீ/வி வெற்றிடத்தில் ஒளியின் வேவேகம் 3 \(\times\)108 மீ/வி எனில், நீரின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுக
156.
புரோட்டானின் நிறையை கணக்கிடுக
அதன் மின்சுமை = 1.60\(\times\)10-19c
மின்சுமை / நிறை = 9.55\(\times\)108c kg-1
157.
கீழ்க்காணும் வரைபடம் ஒரு பொருளின் திசைவேகம்-காலம் வரைபடம் ஆகும். எந்த நேர இடைவெளியில் அது முடுக்கப்பட்டது? பகுதி ‘a’ வில் கொடுக்கப்பட்டுள்ள கால இடைவெளியில் அதன் முடுக்கம் என்ன? அதே கால இடைவெளியில் அப்பொருள் கடந்த தூரம் எவ்வளவு?

158.
கீழக்கண்ட வாக்கியங்களுக்கு தகுந்த ஒருகாரணத்தைக் கூறுக
அ) உணவுப் பாதுகாப்பு பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது ஏனெனில்____
ஆ) காலாவதி தேதி முடிவடைத்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது ஏனெனில்____
இ) கால்சியம் சத்துக் குறைப்பட்டால் எலும்புகளில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது ஏனெனில்____
159.
உயிரினம் Aயினால் ஓர் இடம் விட்டு ஓரிடம் நகரமுடியாது. சுற்றுச்சூழலில் கிடைக்கும், C மற்றும் D யினைக் கொண்டு B என்ற எளிமையான உணவு உருவாக்குகிறது. இந்த உணவு G என்ற நிகழ்வினால் சூரிய ஒளியின் முன்னிலையில் F உறுப்புகளில் காணப்படும். E என்ற பச்சை நிறமுள்ளப் பொருளின் முன்னிலையில் உருவாக்கப்படுகின்றது. சில B எளிய உணவு சேமிப்பு நோக்கத்திற்காக கடினமான H-ஆக மாற்றப்படுகிறது, H அயோடின் கரைசல் உடன் சேர்த்தால் கருநீல நிறமாக மாறுகிறது.
அ) i) A உயிரினம் (ii) உணவு B மற்றும் உணவு H ஆகியன யாவை?
ஆ) C மற்றும் D ஆகியன யாவை?
இ) பெயரிடு: பச்சைநிறமுள்ள E மற்றும் உறுப்பு F
ஈ) நிகழ்வு G ன் பெயர் என்ன?
160.
கைபேசியில் பயன்படுத்தும் மின்கலங்களை மறு ஊட்ட ம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.
161.
குறைந்தளவு காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிபொருளை எரிக்கும்போது, அங்கு இருப்பது ஆபத்தானது, ஏன்?
1.
(d)
1530
2.
(c)
திடப்பொருளில்
3.
(b)
மைசீலியம்
4.
(b)
ஹைட்ரோபோனிக்ஸ்
5.
(b)
ஆன்ரோ கிராபிஸ் பானிகுலோட்டா
6.
(d)
ஏபிஸ் இண்டிகா
7.
(b)
i மற்றும் iii
8.
(a)
நீர் மறுசுழற்சி
9.
(c)
நீரை சேமிக்கும் பாரன்கைமா திசுக்கள்
10.
(a)
ஒளிச்சேர்க்கை
11.
(d)
ரேஃபிஸ்
12.
(b)
வைட்டமின்கள்
13.
(d)
பூஞ்சை
14.
(a)
கார்பன்
15.
(c)
சுற்றுச்சுழல்
16.
(d)
முக்கோணம்
17.
(b)
அது வழவழப்பான படலங்களால் ஆனது மற்றும் அதிக உருகுநிலை கொண்டது.
18.
(c)
ஒலிபெருக்கி
19.
(b)
எலும்பை தசைகளுடன்
20.
(a)
சார்க்கோலெம்மா
21.
(c)
மாஸ்வுடைய ஸ்போர் கேம்சூலில்
22.
(b)
சிறுநீர்ப்புறவழி
23.
(b)
லாக்ரிமால்
24.
(b)
எலக்ட்ரான் ஏற்பி
25.
(c)
புளூரின்
26.
(b)
சகப்
27.
(c)
எண்ம விதி
28.
(b)
50 Hz
29.
(d)
கம்பி
30.
(b)
தொடங்கி; முடிவடையும்
31.
(b)
வெப்பக்கடத்தல்
32.
(d)
கெல்வின்
33.
(b)
ஐசோடோப்பு
34.
(a)
ஆர்பிட்
35.
(a)
ஜேம்ஸ் சாட்விக்
36.
(c)
\(F=\frac { { mv^{ 2 } } }{ { r } } \)
37.
(a)
வினை மற்றம் எதிர்வினை விசைகள் ஒரே பொருளின் மீது செயல்படும்.
38.
(b)
10
39.
(b)
109
40.
(a)
நீர்
41.
(a)
363 K
42.
(a)
1.63 மி.வி.-2
43.
(a)
மீச்சிற்றளவு
44.
(b)
10-3
45.
(a)
எதிர்குறி
46.
(b)
மாயபிம்பம்
47.
(b)
மாய
48.
(c)
6
49.
(a)
f = mv2/r
50.
(a)
தலை உருவாதல்
51.
(b)
1954
52.
(b)
கதிர் வீச்சுமுறை
53.
(c)
வைட்டமின்
54.
(b)
II மற்றும் III
55.
(c)
நீர்சார்பசைவு
56.
(d)
சிலந்தி
57.
(c)
குழியாடி
58.
(b)
10 செ.மீ
59.
(c)
2,8,8,1
60.
(b)
ஒரு ஐசோடோப்
61.
(c)
வடிதாளுடன் சேர்ந்த வடிகட்டி
62.
(b)
63.
(b)
தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள பாகத்திலிருந்து நீர் ஆவியாதல்
64.
(d)
இயைபுப் பொருட்கள்
65.
(b)
10 குவின்டால்
66.
(a)
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
67.
ஒரு பொருளானது காற்றில் ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் செல்லும்போது அலை அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இவ்வதிர்வலைகள் அதிக ஆற்றலைப் பெற்றிருக்கும். இவ்வதிர்வலைகளால் காற்றில் ஏற்படும் இதர மாறுபாட்டின் காரணமாக கூர்மையான மற்றும் உரத்த ஒலியை உண்டாக்குகிறது. இதனை சூப்பர் சோனிக் வேகம் என அழைக்கின்றோம்.
68.
(i) அதிர்வெண்ணின் SI அலகு ஹெர்ட்ஸ் (Hz):
(ii) அதிர்வடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் எண்ணிக்கையானது அதன் அதிர்வெண் எனப்படும்.
69.
ஒரு நொடிக்கு 250 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் சூரியன் (9 lakh கிமீ/ம) பால்வெளியை ஒரு முறை சுற்றிவர 225 மில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இந்தக் காலம்தான் காஸ்மிக் ஆண்டு எனப்படுகிறது.
70.
பிரியான்கள் என்பவை நோயை உண்டாக்கவல்ல தீமையாக மாறிப்போன புரதத்துகள்கள் ஆகும். மேலும் இவை புரதங்களை மட்டுமே கொண்டுள்ள வைரஸ் துகள்களாகும், நியூக்ளிக் அமிலங்கள் காணப்படவில்லை.
71.
இரும்புத்துண்டு கனமானதாக இருக்கும். ஏனெனில் இரும்புத்துண்டில் உள்ள அணுக்கள் நெருக்கமாக பிணைக்கப்பட்டு அடுக்கப்பட்டிருக்கும். எனவே அவற்றின் அடர்த்தி அதிகம். எனவே இரும்புத்துண்டு கனமானதாக இருக்கும்.
72.
குறியீடு # 3, குறியீடு # 6, குறியீடு # 7.
73.
காற்றை விட ஹீலியம் அடர்த்தி குறைவாக உள்ளதாலும் ஹீலியமானது அதிக மிதப்பு விசையை பெற்றுள்ளதாலும் ஹீலியம் பலூன் காற்றில் மிதக்கிறது.
74.

75.
அ) மண்புழு லாம்பிடோ மாரிட்டு அட்டை ஹிருடினேரியா கிரானுலோசா லிதோபையஸ் ஃ போர்டிகடஸ் பாலிடெஸ்மிடா ஹிர்பாபே ஹைடேனியானா
ஆ) அட்டை விஷத்தன்மை வாய்ந்த பாம்பு , மர அட்டை, மரப்பல்லி.
இ) பாம்பு
ஈ) மைனா, சிட்டுக்குருவி, பச்சைக்கிளி,புறா.
76.
(i) முடுக்கம் என்பது திசைவேக மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு எனலாம். இது ஒரு வெக்டார் அளவு ஆகும். இதன் SI அலகு மீ/வி2.
(ii) முடுக்கம் = திசைவேக மாற்றம் / எடுத்துக் கொண்ட காலம்
77.
ஒரு வட்டத்தின் சுற்றளவின் மீது நடைபெறும் இயக்கம் அல்லது வட்டப்பாதையில் நடைபெறும் இயக்கம்
78.
உண்மைக் கரைசலில் உள்ள துகள்கள் ஒளி ஆற்றலை உறிஞ்சி சுயமாக ஒளிர்வதற்கு ஏற்புடையவையாக இருப்பதில்லை. ஏனெனில் அவை மிகச் சிறியதாக உள்ளன. எனவே உண்மைக் கரைசலில் டிண்டால் விளைவு ஏற்படுவது இல்லை.
79.
W = mg
= 50 \(\times\) 9.8
= 490 நியூட்டன்
80.
இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளர் நரிந்தர் கபானி இழை ஒளியியல் உருவாகக் காரணமானவர்.
81.
(i) விண்ணியல் ஆரம் என்பது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தூரத்தை அளவிட பயன்படுகிறது.
(ii) ஒரு விண்ணியல் ஆரம் = 3.26 ஒளி ஆண்டு.
82.
நபரின் உயரத்திற்குப் பாதி இருக்க வேண்டும்.
83.
உட்கொள்ளுதல், செரிமானம், உறிஞ்சுதல், தன்மயமாதல், வெளியேற்றுதல்.
84.
தசை நாண்கள்
85.

86.
ஓரலகு நிறையுள்ள (1 kg) பொருளின் வெப்பநிலையை ஒரு அலகு (10C or 1 K) உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவு அதன் தன்வெப்ப ஏற்புத்திறன் எனப்படும்.
87.
வெள்ளை நிறம் சார்ந்த ஆடைகள் சிறந்த வெப்ப பிரதிபலிப்பான்கள். எனவே கோடை காலங்களில் அவை நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கப் பயன்படும். என வே கோடை காலங்களில் மக்கள் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்.
88.
(i) ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன் இரண்டும் மீன்களை ஒத்திருக்கவில்லை.
(ii) ஏனெனில் ஜெல்லி மீன், நட்சத்திர மீன் இரண்டும் முதுகெலும்பு இல்லாதவை.
(iii) மீன்கள் முதுகெலும்புடைய இனத்தைச் சார்ந்தது.
89.
உணவு கலப்படம் செய்யப்படுவதால் அதில் நச்சுப் பொருள்கள் கலக்கப்படுகின்றன.உணவில் சேர்க்கப்படும் பல வேதிப் பொருள்கள் நம் உடல் நிலையைப் பாதிக்கின்றன. பல ஆபத்தான நோய்களையும் தோற்றுவிக்கின்றன. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இரைப்பை, கல்லிரல், சிறுநீரக நோய்கள் தோன்றுகின்றன.
90.
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3,00,000 கி.மீ / விநாடி (அ) 3 x 108 மீ/வி
91.
குவி ஆடி, குழி ஆடி
92.
(i) சில வகை நச்சுக் காளான்களில் காணப்படும் நச்சுப் பொருள்கள்.
(ii) ஆப்பிள் விதைகளில் காணப்படும் புரூசிக் அமிலம்.
93.
உப்பானது உணவின் உள்ள ஈரப்பதத்தை சவ்வூடு பரவல் மூலம் நீக்கிவிடுகிறது.இதனால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. நுண்ணுயிரிகளின் நொதிகள் செயல்பாடும் குறைக்கப்படுகிறது.
94.
துத்தநாகம்
95.
ஐயோமியா ஆல்பா
96.
ஹீலியம் - 2
போரான் - 5
ஆக்சிஜன் - 8
ஃபளுரின் - 9
நியான் - 10
சோடியம் - 11
மெக்னீசியம் - 12
சிலிக்கன் - 14
சல்ஃபர் - 16
கால்சியம் - 20
97.
| மின்சுமை | நிறை | |
| புரோட்டான் | 1.6 \(\times\) 10-19 c | 1.67 \(\times\) 10-24 g |
| எலக்ட்ரான் | -1.6 \(\times\) 10-19 c | 9.31 \(\times\) 10-28 g |
98.
குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன்
99.
முடியாது. மெல்லிய கம்பியின் விட்டத்தினை கருவிப்பெட்டியிலிருக்கும் அளவுகோலால் அளவிட முடியாது.
100.
இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்றப் பொருட்கள் தாவரங்களின் பாதுகாப்பு போட்டி மற்றும் சிற்றினங்களின் உடதொடர்பு ஆகியவற்றிற்குப் பயன்படுகின்றன. எ.கா. அல்கலாய்டுகள் , பிளவோனய்டுகள் மற்றும் பல.
101.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர்வாழத் தகுதியான சூழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால் தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது.
102.
புவியை ஒருமுறை முழுமையாக சுற்றிவர ஒரு செயற்கைக் கோள் எடுத்துக் கொள்ளும் காலம் சுற்றுக் காலம் எனப்படும்.

103.
வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், குளியல் அறைகள், வாறல் இறைப்பான்கள் (shower drains), மற்றும் துணி துவைப்பதால் வெளியேறும் நீர் ஆகியவை சாம்பல் நீர் எனப்படுகின்றன.
104.
பள்ளி மற்றும் வீடுகளில் நீரைச் சேமித்தல்:
i) வாறல் குளிர்பான்களில் (Showers) குளிப்பதை விட, நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
ii) குறைவாக நீர் வரக்கூடிய குடிநீர்க்குழாய்களைப் (tap) பயன்படுத்திட வேண்டும்.
iii) மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
iv) குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரிசெய்தல்.
v) முடிந்தவரை நீரை மறுசுழற்சி செய்தல் அல்லது மீண்டும் பயன்படுத்துதல்.
vi) நீர்ப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
105.
ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதன் வாழிடத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப்போக வைப்பதையே தகவமைப்பு என்கிறோம்.
106.
மலேரியா ஒட்டுண்ணியை கடத்துவது பெண் அனாபிலஸ் கொசு, தீங்கான மலேரியா ஒட்டுண்ணி பிளாஸ்மோடியம் பால்சிபாரம் ஆகும்.
107.
தாவரங்கள் வளர்வதற்கு தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக இந்த இரசாயன வேதியியல் உரங்கள்
பயன்படுகின்றன. இவை தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பெரும ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன.
108.
கட்டற்ற மென்பொருள்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம். திறந்த மூல மென்பொருள்களில் அவற்றின் நிரல்களைத் (Codings) திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது.
சில கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
1. லினக்ஸ் (LINUX)
2. ஓபன் ஆபிஸ் (Open Office)
3. ஜியோஜீப்ரா (Geogebra), etc
4. இயக்க மென்பொருள் (Operating System)
109.
கார்பன் அலோகத் தன்மை வாய்ந்தது. எனவே இவை நீரில் கரைந்து அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை.
110.
Es / Ep = Ns/Np
Ns = Es/Ep \(\times\) Np
= 8/240 \(\times\) 4800
Ns = 4800/30 = 160 சுற்றுக்கள்
111.
| உள்ளீடகம் | வெளியீடகம் |
| இது தரவுகளை கட்டளைகளையும் உள்ளீடு செய்கிறது. |
இது மையச் செயலகத்திலிருந்து ஈரடிமானக் குறிப்புகளை (Binary signals) பெறுகிறது. இக்குறிகளை பயனருக்குக் கொண்டு செல்ல உதவுகிறது. |
| விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse), வருடி (Scanner), பட்டைக் குறியீடு படிப்பான் (Barcode reader), ஒலிவாங்கி (Microphone - Mic.,), இணையப் படைக்கருவி (Web Camera), ஒளி பேனா (Light pen) போன்றவைதான் உள்ளீட்டுக்கருவிகள். |
கணினித்திரை (Monitor), அச்சுப்பொறி (Printer), ஒலிபெருக்கி (Speaker), வரைவி (Plotter) போன்றவை வெளியீட்டகத்தின் கருவிகளாகச் செயல்படுகின்றன. |
112.
அ) கழிவுநீக்கம் மற்றும் சுரத்தல்
உடலில் ஏற்படும் நைட்ரஜன் அடங்கிய கழிவுகளை கழிவு மண்டலம் மூலம் அகற்றுவது கழிவு நீக்கம் எனப்படுகிறது. ஹார்மோன்கள், என்ஸைம்கள், எண்ணெய், வியர்வை போன்றவை உடலின் பல்வேறு சுரப்பிகளால் சுருக்கப்பட்டு குறிப்பிட்ட ஒவ்வொன்றும் வேலையைச் செய்கின்றன. இதற்கு சுரத்தல் எனப் பெயர்.
ஆ) உறிஞ்சுதல் மற்றும் தன்மயமாதல்:
செரிக்கப்பட்ட உணவு சிறுகுடலில் உள்ள குடலுறிஞ்சுகளால் ஏற்கப்படுவது உறிஞ்சுதல் எனப்படுகிறது. உறிஞ்சப்பட்ட உணவுப் பொருள்கள் இரத்தத்தின் மூலம் செல்களைச் சென்றடைவதற்கு தன்மயமாதல் எனப் பெயர்.
இ) விந்து மற்றும் அண்டம்:
விந்து என்பது விந்தகங்களில் உற்பத்தியாகும் ஆண்பால் உயிரணுவாகும். இது நகரக் கூடியது. அண்டம் என்பது கருமுட்டையாகும். இது பெண்பாலின் உயிரணு.
ஈ) உட்கொள்ளுதல் மற்றும் வெளியேற்றுதல்:
வாயின் வழியே உணவு உண்பது உட்கொள்ளல் எனப்படுகிறது. உடலில் தோன்றும் கழிவுகள் மலக்குடலைக் கடந்து குதத்தின் வழியே வெளியேற்றப்படுவது வெளியேற்றுதல் எனப்படுகிறது.
உ) இரட்டைப் பல்வரிசை மற்றும் கலப்பு வரிசை:
மனிதர்களின் ஆயுட் காலத்தில் இரண்டுவிதமான பல்வரிசைகள் தோன்றுகின்றன. குழந்தைப்பருவத்தில் உண்டாகும் 20 பற்கள் அடங்கிய பால்பற்கள் இரட்டைப் பல்வரிசையாகும். அதன் பின் நிலையாக அமையும் 32 பல் கொண்ட அமைப்பு கலப்புப் பல்வரிசை எனப்படுகிறது. இதில் நான்கு வகைப் பற்கள் உள்ளன. 1) வெட்டுப் பற்கள் 2) கோரைப் பற்கள் 3) முன் கடை வாய்ப்பற்கள் 4) பின் கடை வாய்ப்பற்கள்.
ஊ) வெட்டுப் பற்கள் மற்றும் கோரைப் பற்கள்:
வெட்டுப் பற்கள் மொத்தம் 8 உள்ளன. இவை உணவை வெட்டுவதற்கும் கடிப்பதற்கும் பயன்படுகின்றன. கோரைப் பற்கள் நான்கு உள்ளன. இவை உணவைள் கிழிக்கப் பயன்படுகின்றன.
113.
அ) செரித்தல்: பெரிய, சிக்கலான, எளிதில் கரையாத உணவு மூலக்கூறுகளை சீரண மண்டலத்தின் நொதிகள் மூலம் கரையக்கூடிய, சிறிய மூலக்கூறுகளாக மாற்றும் முறையே செரித்தல் எனப்படுகிறது.
ஆ) சவ்வூடு பரவலை சீராக்கல்: செல்களில் உள்ள நீர், உப்புக்களின் அடர்த்தியை சீராக்கி, உடலில் தொடர்ச்சியான சவ்வூடு பரவல் அழுத்தத்தை நிலை நிறுத்தம் செயலே சவ்வூடு பரவலை சீராக்கல் எனப்படுகிறது.
இ) பால்மமாக்குதல்: பெரிய கொழுப்புச் சொட்டுகளை சிறிய கொழுப்பு துகள்கள் மாற்றுவது பால்மமாக்கல் எனப்படுகிறது. பித்த உப்புக்கள் கொழுப்பைப் பால்மமாக்கி செரித்தலுக்கு உதவுகின்றன.
ஈ) கருமுட்டை வெளிப்படுதல்: ஆண்டகத்திலிருந்து கருமுட்டை விடுபட்டு வருவது கருமுட்டை வெளிப்படுதல் எனப்படுகிறது.
114.
சிறுகுடலானது முன்சிறுகுடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜீஜினம்) மற்றும் பின் சிறுகுடல் (இலியம்) போன்ற பகுதிகளைக் கொண்டுள்ளது. இலியம் பகுதியில் மிகச் சிறிய விரல் போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.அவை ஒவ்வொன்றும் மி.மீட்டர் நீளமுடைய குடல் உறிஞ்சிகள் என அழைக்கப்படும் இவற்றில்தான் உணவானது உட்கிரகிக்கப்படுகிறது.
115.
இது திடமான, விறைத்த மற்றும் உறுதியான இலக்கமற்ற எலும்பு சட்டக இணைப்புத் திசுவாகும். எலும்பு மேட்ரிக்ஸில், கால்சியம், உப்பு மற்றும் கொலாஜன் நார் நிறைந்த எலும்புகளுக்கு வலுவை சேர்க்கிறது.
116.
ஆக்குத்திசுக்கள் நன்கு பகுப்படையும் திசுவாகும். ஆதலால் இவை தாவரத்தில் நடைபெறும் முதலாம் வளர்ச்சி மற்றும் இரண்டாம் வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளன.
நிலைத்த திசுக்கள் பகுப்படையும் திறனை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இழந்த திசுக்களாகும். சில நேரத்தில் அவை பகுதி அல்லது முழு ஆக்குத்திசுவாக மாறுகின்றன.
117.
அமிலங்கள் காரங்களுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகின்றன. இந்த வினை நடுநிலையாக்கல் வினை எனப்படும்.
KOH + HCl ➝ KCl + H2O
(காரம்) (அமிலம்) (உப்பு) (நீர்)
118.
i) முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்குப் பயன்படுகிறது.
ii) சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யப் பயன்படுகிறது.
119.
மந்த வாயு அணுக்கள் ஹீலியம் தவிர இணைதிறன் கூட்டில் நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெற்றிருப்பதால் அவை எலக்ட்ரான்களை இழக்கும் அல்லது ஏற்கும் தன்மையைப் பெற்றிருப்பதில்லை, எனவே அவற்றின் இணைதிறன் பூஜ்ஜியம். மேலும் இவை மந்தத்தன்மை கொண்டிருப்பதால் அவை ஓரனு வாயுக்களாகவே காணப்படுகின்றன. எனவே மந்தத் தன்மையுடன் காணப்படுகின்றன.
120.
| அயனிப்பிணைப்பு | சகப்பிணைப்பு | ஈதல் சகப்பிணைப்பு |
| CaCl2 | H2O | Al2Cl6 |
| CaO | CCl4 | CO |
| KBr | CO2, HCl, HF |
121.
வேதிப்பிணைப்புகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை பலமான இணைப்பு மற்றும் பலவீனமான இணைப்பு பலமான இணைப்பு. மேலும் அயனிப்பிணைப்பு, சகப்பிணைப்பு, ஈதல் பிணைப்பு, உலோகப்பிணைப்பு என நான்காக பிரிக்கப்படுகிறது. பலவீனமான இணைப்பு நைட்ரஜன் பிணைப்பு மற்றும் வாண்டர் வால்ஸ் கவர்ச்சி விசை என இரண்டாக பிரிக்கப்படுகிறது.
122.
மின்சாரத்தை கையாளும்போது பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்க வேண்டும். அவற்றுள் சில
i) தரையினைப்பு
ii) முறிசாவி
iii) மின் உருகு இழை போன்றவை.
123.
ஜூலின் வெப்ப விளைவின் அடிப்படையில் வேலை செய்யும் கருவிகள் மின் சலவைப் பெட்டி, நீர் சூடேற்றி, மற்றும் ரொட்டி வறுதட்டு.
124.
இரு மின்னூட்டங்களுக்கு இடையேயான மின்விசையின் மதிப்பு பின்வருனவற்றைச் சார்ந்தது.
i) மின்னூட்ட பதிப்பு
ii) மின்னூட்டங்களுக்கு இடையிலான தொலைவு
iii) அவற்றுக்கிடையேயான ஊடகத்தின் தன்மை
125.
இவற்றின் பொதுப்பண்புகளின் ஒன்றான முதுகு நாண் காணப்படுவதால் இத்தொகுதி முதுகுநாணிகள் என்ற பெயரினைக் கொண்டுள்ளது. முதுகு நாண் பெற்ற விலங்குகள் முதுகுநாணிகள் எனப்படும்.
இத்தொகுதியுடன் நெருங்கிய தொடர்புடைய சில விலங்குகளும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அவை முன் முதுகு நாணிகள் ஆகும்.
முன் முதுகு நாணிகள் முதுகெலும்புகளின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன. இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் ஏகிரேனியா என்றழைக்கப்படுகின்றன.
முதுகு நாண் அமைப்பின் அடிப்படையில் இவை ஹெமிகார்டேட்டா, செபாலோகார்டேட்டா மற்றும் யூரோகார்டேட்டா என மூன்று துணைத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
126.
ஆடிச் சமன்பாடு \(\frac { 1 }{ f } =\frac { 1 }{ u } +\frac { 1 }{ v } \)
f = குவியத் தொலைவு
u = பொருளின் தொலைவு
v = பிம்பத்தின் தொலைவு
127.
| தரவு | தகவல் |
| கணினியின் உட்புகுத்தப்படும் தரவு எனப்படுவது எழுத்து, எண். |
சமகால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளை கடக்கும். |
| அளவிடப்படக்கூடியது. | செய்திகளையும், கருத்துக்களையும், கொண்டிருக்கும். |
| நேரடியாக உபயோகப்படுத்த முடியாது. |
நேரடியாக உபயோகப்படுத்த முடியும். |
128.
A மற்றும் B என்ற இரு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும்போது A ன் நிறையானது B ன் நிறையோடு எளிய விகிதத்தில் சேர்ந்திருக்கும்.
129.
1. உண்மையான வேகம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு எடுக்கப்படும் வேகம் ஆகும். இது இடத்திற்கு இடம், நேரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
2. சராசரி வேகம் என்பது கடக்கப்பட்ட மொத்த தொலைவை மொத்த நேரத்தோடு வகுப்பதால் கிடைக்கும் மதிப்பாகும்.
எனவே உண்மை வேகம், சராசரி வேகத்திலிருந்து மாறுபடுகிறது.
130.
1). ஒரு பொருள் வட்டப் பாதையில் மாறாத வேகத்தில் சென்றால் அந்த இயக்கம் சீரான வட்ட இயக்கம் எனப்படும்.
2). எடுத்துக்காட்டுகள்:
i) பூமி சூரியனைச் சுற்றி வருவது
ii) நிலவு பூமியைச் சுற்றி வருவது
131.
| வடிகட்டிய நீர்மம் | வாலைவடி நீர்மம் |
|---|---|
| மாசு நீக்கப்பட்டு வடிகட்டப்பட்டு நீர்மம் வடிகட்டிய நீர்மம் ஆகும் | வாலைவடித்தல் மூலம் காய்ச்சி வடிகட்டப்பட்ட நீர்மம் வாலைவடி நீர்மம் ஆகும் |
132.
தங்கத்தின் தூய்மையை காரட் என்ற அலகின் மூலம் கண்டறியலாம். 22 காரட் தங்கப் பதக்கம் தூய பொருள் அல்ல. 22 காரட் தங்கப்பதக்கத்தில் 22 பங்கு தங்கமும் 2 பங்கு தாமிரமும் உள்ளது. மேலும் பதக்கத்தின் மேல் 916 என்ற முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். இதன் மூலமும் நாம் கண்டறியலாம்.
133.
| வ.எண் | நிறை | எடை |
| 1. | இது அடிப்படை அளவு. | இது வழி அளவு. |
| 2. | இது ஸ்கேலார் அளவாகும். | இது வெக்டர் அளவாகும். |
| 3. | பொருளில் உள்ள பருப் பொருட்களின் அளவாகும். | பருப்பொருட்களின் மீது செயல்படும் புவியீர்ப்பு விசையின் அளவாகும். |
| 4. | இடத்திற்கு இடம் மாறாது. | இடத்திற்கு இடம் மாறும். |
| 5. | இதன் அலகு கிலோகிராம் | இதன் அலகு நியூட்டன். |
134.
அ ) அயல்நாட் டு இனம் மற்றும் பாரம்பரிய இனம் : அயல்நாட்டு இனங்கள் (போஸ் டாரஸ்) வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ஜெர்ஸி , ப்ரெளன் ஸ்விஸ் மற்றும் ஹோல்ஸ்டீய்ன் ப்ரெய்ஸ்யன் ஆகியவை அயல்நாட்டு இனங்களாகும் . உள்நாட்டு இனங்கள் பாரம்பரிய இனம் எனப்படுகின்றன. இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவை.இவற்றுள் சாகிவால்,சிவப்பு சிந்தி , தியோனி மற்றும் கிர் ஆகியவை அடங்கும்.
ஆ ) மகரந்தம் மற்றும் தேன் ரசம் : மகரந்தம் என்பது பூவின் ஆண்பகுதியாகும் மகரந்தத் தூளானது மலர்கள் கருவுறுதலுக்கும் கனிகளை உருவாக்கவும் பயன்படுகிறது. தேனீக்கள் மலர்களில் தேனை உறிஞ்சும்போது மகரந்த தூள் அவற்றின் உடலில் ஒட்டிக் கொள்கிறது,இது அடுத்த மலரின் சூல்முடியில் விழுந்து அயல் மகிர்ந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
தேன் ரசம் என்பது தேனீக்களை கவர்வதற்காக பூக்கள் உற்பத்தி செய்யும் வழவழப்பான ஒரு திரவம் ஆகும்.தேனீக்கள் இவற்றை தேன்குடில் சேகரிக்கப்படுகின்றன.இந்தத் தேன்ரசம் பின்னர் தேனாக மாற்றம் அடைகிறது
இ) கூனி இறால் மற்றும் இறால் : கடலில் காணப்படும் கடல் இறால்கள் கூனி இறால்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. முதிர்ச்சியடைந்த கூனி இறால்கள் ஆழ்கடலில் இனப்பெருக்கம் செய்கின்றன.இவற்றின் வளர்ச்சி நிலைகள் கழிமுகம் மற்றும் கடலோர நீர் நிலைகளில் காணப்படுகின்றன.
நண்ணீர் இறால்கள் : இவை ஆறுகள் மற்றும் ஏரிகளை வாழிடமாகக் கொண்டுள்ளன. பின்னர் இனப்பெருகத்திற்காக உவர்நிலைகளுக்கு இடம்பெயர்கின்றன.
ஈ) துடுப்பு ,மின் மற்றும் ஓடு மீன் : துடுபு மீன்களுக்கு நல்ல வளர்ச்சியடைந்த துடுப்புகள் உண்டு.இவை நீரில் நீந்திச் செல்லவும் மிதக்கவும் உதவுகின்றன.இந்தத் துடுப்பு மீன்கள் pisces எனப்படும் மீன் இனத்தைச் சேர்ந்தவை.இவற்றிற்கு நன்கு வளர்ச்சியடைந்த முதுகெலுமபுத் தொடர் உள்ளது.ஓடுமின் என்பன கணுக்காலிகள் .இனத்தைச் சேர்ந்தவை.இவற்றின் மிகச் சிறந்த சுவைக்காக இவை உணவில் பயன்படுத்தப்படுகின்றன.
உ) தொழுஉரம் மற்றும் வெள்ளாட்டு எரு:
அ) தொழுப்பண்ணை உரம் : இது கால்நடைகளின் சாணம், சிறுநீர் மற்றும் மாட்டுக் கொட்டங்களில் தரைமேல் இருக்கும் கழிவுகள் மற்றும் பண்ணைக் கழிவுகள் ஆகியவற்றின் கலவையாகும்.
ஆ) செம்மறி ஆடு மற்றும் வெள்ளாட்டுச் சாண உரங்கள் : இது தொழுப்பண்ணை உரத்தைக் காட்டிலும் அதிக சத்துகளைக் கொண்டதாகும் 3% நைட்ரஜன், 1% பாஸ்பரஸ் பென்டாக்சைடு , 2% பொட்டாசியம் ஆக்சைசு இது கொண்டுள்ளது.
135.

ஒலி எதிரொலித்தல் விதிகள்:
(i) ஒலியானது ஒரு புள்ளியில் ஏற்படுத்தும் படுகோணமும் அது எதிரொலிக்கும் கோணமும் சமமாக இருக்கும்.
(ii) ஒலி படும் திசை, எதிரொலிக்கும் திசை மற்றும் அப்புள்ளியில் வரையப்பட்ட செங்குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன.
(iii) படத்தில் காட்டியுள்ளபடி இரண்டு குழாய்களை எடுத்துக் கொள்க. காகிதத்தைப் பயனப்டுத்தியும் அவற்றை உண்டு பண்ணலாம். ஒரே மாதிரியான இரண்டு குழாய்களைச் செய்க. குழாயின் நீளம் தேவையான அளவு பெரியதாக இருக்க வேண்டும். அவற்றை ஒரு மேசையின் மீது படத்திலுள்ளவாறு அமைக்க வேண்டும். ஒரு குழாயின் ஒரு முனையில் நிறுத்துக்கடிகாரத்தை வைக்கவும். மற்றொரு குழாயின் மூலம் நிறுத்துக்கடிகாரத்தின் ஒலியினைக் கேட்ட முயற்சிக்கவும். குழாயின் நிலையை மாற்றி ஒளியானது தெளிவாகக் கேட்குமாறு செய்ய வேண்டும். இப்பொழுது படுகோனம் மற்றும் எதிரொலிப்புக் கோணம் ஆகியவற்றை அளக்கவும். அவற்றிக்கிடையேயான தொடர்பைக் கண்டறியவும். படுகோனத்தின் மதிப்பை சோதனையை மீண்டும் செய்யவும்.
136.
ஒரு செயற்கைகோளின் சுற்றியக்கத் திசைவேகம் என்பது அது புவியிலிருந்து உள்ள உயரத்தைப் பொறுத்தது. பூமிக்கு எந்த அளவிற்கு அருகில் உள்ளதோ அந்த அளவிற்கு அதன் வேகம் அதிகமான இருக்க வேண்டும். 200 கி.மீ தொலைவில் உள்ள செயற்கைக்கோள் ஒன்று கிட்டத்தட்ட 27,400 கி.மீ/மணி வேகத்திற்கும் சற்று அதிகமாக வேகத்துடன் இயங்க வேண்டும்.

அவ்வாறு இயங்கும்போது அது 24 மணி நேரத்தில் பூமியைச் சுற்றிவரும், புவியின் பரப்பிற்கு மேல் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றும். இவ்வாறாக, புவியைப் பொறுத்து ஒரே நிலையில் இருப்பதால், இவ்வகை செயற்கைக்கோள்களுக்கு புவிநிலை செயற்கைக்கோள்கள் என்று பெயர். சுற்றியக்கத் திசைவேகத்தை (v) பின்வரும் வாய்ப்பாட்டினக் கொண்டு கணக்கிடலாம்.
v = \(\frac {GM}{\sqrt {(R + h)}}\) இங்கு
G = ஈர்ப்பியல் மாறிலி = 6.67 \(\times\) 10-11 நிமீ 2.கிகி-2
M = புவியின் நிறை = 5.972 \(\times\) 1024 கிகி
R = புவியின் ஆரம் = 6371 கிமீ
h = புவிபரப்பிலிருந்து செயற்கைக்கோளின் உயரம்.
137.
வௌவாலின் தகவமைப்புகள்:
வெளவால் மட்டுமே பறக்கக்கூடிய பாலூட்டிகளாகும். இவைகள் பெரும்பலாலும் குகைகளில் வாழ்கின்றன. குகைகள் அவைகளை பகல் நேரத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பநிலையிலிருந்த்து பாதுகாப்பத்தோடு மற்ற பிற விலங்குகளிடமிருந்தும் அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கின்றன. வெளவால் மரங்களிலும் பொந்துடைய பழைய மரக்கட்டைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றன. இவைகள் பூச்சிகளை உண்டு ஆவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதாலும் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையில் உதவி செய்தாலும் மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன.
இரவுநேரப் பழக்கம்:
வெளவால்கள் இரவுநேரங்களில் அதிக செயல்திறன் மிக்கவைகளாக உள்ளன.இப்பழக்கம் அவைகளுக்கு ஒரு பயனுள்ள தகவமைப்பாகும்.ஏனெனில் பகல் நேரங்களில் வெளவாலின் மெல்லிய கருத இறக்கைச் சவ்வானது அதிக வெப்பநிலை உறிஞ்சுவதால் அவை பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது.இதனால் அவைகளின் உடலில் அதிகளவு நீர் இழப்பு ஏற்படலாம்.
பறத்தலின் தகவமைப்பு:
வெளவால்களின் இறக்கைகள் பூச்சிகள் மற்றும் பறவைகளின் இறக்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.இவற்றின் முன்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன. சதையில் இருபக்கமும் இணைக்கப்பட்டுக் காணப்படும், இந்த எமிப்பு விரலிடைச் சவ்வு எனப்படும்.பறக்கும் போது இயக்கத்தினை கட்டுப்படுத்த இதன் வால் உதவுகின்றது.சிறகடித்துப் பறக்க உதவும் வகைக்கு அவற்றின் சிறகுகளின் உள்ள சதைகள் நன்றாக வளர்ந்தும் அதிக சக்தி வாய்ந்ததகாவும் இருக்கின்றன.ஓய்வு நேரத்தில் தலைகீழாக தொங்கும்போது இறுகப்பிடித்துக் கொள்ளும் தன்மையை அவற்றின் பின்னங்கால்களின் தசை நார்கள் அவற்றிற்கு அளிக்கின்றன.
குளிர்கால உறக்கம்: குளிர்காலங்களில் வளர்சிதை மாற்றம் குறைபடுவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து , செயலற்ற நிலையில் இருக்கும் நிகழ்வு குளிர்கால உறக்கம் எனப்படும் , மற்ற குளிர் இரத்த பாலூட்திகழ போல் அல்லாமல் ஓய்வுநேரத்தில் அவைகளின் உள்வெப்பநிலையைக் குறைத்துக் கொள்கின்றன. இந்நிலையில் தங்களது செயல்திறன்களைக் குறைத்து சக்தியைப் பாதுகாத்துக் கொள்கின்றன.
எதிரொலித்து இடம் கண்டறிதல்:
வௌவால்கள் பார்வையற்ற விலங்குகள் அல்ல. ஆனாலும், இரவுநேரங்களில் பறந்து, தங்களைச் சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு, பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அமைப்பைப் பயன்படுத்துகின்றன (மீயொலி அலைகள் ultrasonic sound), இவ்வமைப்புக்கு எதிரொலித்து இடம் கண்டறிதல் என்று பெயர். இந்த அலைகள் அவற்றின் இரையின் மீது (prey) பட்டு எதிரொலித்து மீண்டும் அவற்றின் காதினை வந்தடைகின்றன. இந்த எதிரொலியானது இரையின் இடத்தினைக் கண்டறிய பயன்படுகிறது.
138.
அ. நோயின் பெயர் எய்ட்ஸ் (AIDS)
நோய்க்கான காரணம் ரெட்ரோ வைரஸ் ஆகும்.
ஆ. பாதிக்கப்படும் வெள்ளையணுக்களின் வகை
டி. லிம்போசைட்டுகள் ஆகும்.
இ. இந்தவைரஸானதுபாலியல் உறவு(பாதிக்கப்பட்ட நபரிடமிருந்துநல்ல ஆரோக்கியமானவருக்கு, இரத்தத்தினை வழங்குதல் (சோதிக்கப்படாத ரத்தத்தை பிறருக்கு வழங்குதல்), அறுவை சிகிச்சைக் கருவிகள் நோய்க் கிருமிகளுள்ள ஊசிகள், சிரிஞ்சுகள்), தாயிடமிருந்து சேய்க்கு (பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து வளரும் கருவுக்கு) பரவுதல் போன்ற வழிகளில் பரவுகின்றது.
பரவுதலை தடுத்தல் முறை
1. பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான பாலியல் உறவு.
2. சோதிக்கப்பட்ட இரத்தத்தினை பிறருக்கு வழங்குதல்
3. கத்திகளையும், முகச்சவரம் செய்வதற்குரிய ரேசர்களையும் பிறரோடு பகிர்ந்து கொள்ளுதலை தவிர்த்தல்
139.

உணவுப் பாதையின் அமைப்பு :
உணவுப் பாதை ஒரு தசையாலான, சுருண்ட மற்றும் குழாய் வடிவ அமைப்பாகும். இவ்வுணவுப் பாதை, வாய், வாய்க்குழி, தொண்டை, உணவுக் குழல், இரைப்பை, சிறுகுடல் (முன் சிறுகுடல், நடுச்சிறுகுடல் மற்றும் பின் சிறுகுடல் உள்ளடங்கியது). பெருங்குடல் (குடல்வால், கோலன் மற்றும் மலக்குடல் உள்ளடங்கியது) மற்றும் மலவாய் போன்ற உறுப்புகளைக் கொண்டுள்ளது.
அ) வாய்
உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும். இது வாய்க்குழிக்குள் திறக்கிறது. இது இரு மென்மையான அசையும் மேல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. வாய்க்குழியானது பெரிய இடைவெளியோடு மேல் பகுதியில் அண்ணம் (காற்றுக் குழாயையும் உணவுக் குழாயையும் பிரிப்பது) என்ற பகுதியாலும் கீழ்ப்பகுதி தொண்டையாலும் பக்கப்பகுதியானது தாடைகளாலும் பிணைக்கப்பட்டுள்ளது. தாடைகள் பற்களைத் தாங்குகின்றன.
ஆ) பற்கள்
கடினமான கட்டமைப்பைக் கொண்ட பற்கள் உணவைப் பிடித்துக்கொள்வதற்கும், வெட்டுவதற்கும், அரைப்பதற்கும் மற்றும் நசுக்குவதற்கும் உதவுகின்றன. மனிதர்களின் வாழ்நாளில் பற்கள் இரண்டு தொகுப்பாக (இரட்டைப் பல்வரிசை) உருவாகின்றன. முதலில் இருபது தற்காலிக இணைப்பற்கள் அல்லது பால் பற்கள் தோன்றுகின்றன. பின்னர் இப்பற்களுக்குப் பதிலாக இரண்டாம் தொகுப்பில், முப்பத்திரெண்டு நிரந்தர
பற்கள் (கலப்பு பல் வரிசை) மாற்றியமைக்கப்படுகின்றன. இவைகள் ஒரு தாடைக்கு பதினாறு வீதம் இருக்கும். ஒவ்வொரு பல்லும் ஒரு வேரினைக் கொண்டு ஈறுகளில் (திகோடான்ட்) பொருத்தப்பட்டுள்ளது.
| பற்களின் வகைகள் | பற்களின் எண்ணிக்கை | பணிகள் |
| வெட்டுப் பற்கள் | 8 | வெட்டவும் கடிக்கவும் |
| கோரைப் பற்கள் | 4 | கிழிக்கவும் துளையிடவும் |
| முன் கடைவாய்ப் பற்கள் | 8 | நசுக்கவும் அரைக்கவும் |
| பின் கடைவாய்ப் பற்கள் | 12 | நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும். |
இ) உமிழ்நீர்ச் சுரப்பிகள்:
வாய்க் குழிக்குள் மூன்று இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. அவையாவன மேலண்ணச் சுரப்பி. நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி
i. மேலண்ணச் சுரப்பி
இச்சுரப்பிதான் மிகப்பெரிய சுரப்பியாகும். இவை இரு கன்னங்களிலும், காதுக்குக் கீழே அமைந்துள்ளன
ii. நாவடிச் சுரப்பி
இது மிகச்சிறிய சுரப்பியாகும் நாவின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது.
iii, கீழ் மற்றும் மேல் தாடைச் சுரப்பிகள்
இவைகள் கீழ்தாடைகளின் கோணங்களில் காணப்படுகின்றன.
நாக்கு:
நாக்கு ஒரு தசையாலான,. உணர்ச்சி உறுப்பு ஆகும். இது உமிழ்நீருடன்
உணவானது கலக்க உதவுகிறது. உணவின் சுவையை உணர்வதற்கு நாவில் உள்ள
சுவை மொட்டுகள் உதவுகின்றன.
தொண்டை:
தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும். இது வாய்ப் பகுதியை உணவுக் குழலுக்கு கடந்து செல்லும் ஒரு பாதையாக பயன்படுகிறது.
உணவுக் குழல்:
இது 22 செமீ நீளமுடைய தசைப்படலக் குழலாகும். இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் குடல் தசைச் சுவரின் சீரான சுருங்குதல் மற்றும் தளர்தல் (அலை போன்ற இயக்கம்) போன்ற நிகழ்வால் கடத்துகிறது.
ஈ) இரைப்பை
இரைப்பையானது உணவுக் குழலுக்கும் - சிறுகுடலுக்குமிடையே 'J' போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும். இரைப்பையின் உள்ளடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது. இந்த இரைப்பை நீர், நிறமற்றதாகவும், அதிக அமிலத் தன்மையுடைய ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும், நொதிகளான ரென்னின் (பச்சிளம் குழந்தைகளில்) மற்றும் பெப்சின் ஆகியவற்றை கொண்டதாகவும் உள்ளது.
உ) சிறுகுடல்:
உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான பகுதி சிறுகுடல் ஆகும். இது 5 - 7 மீட்டர் நீளமுள்ள சுருண்ட குழலாகும். இக்குடல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை முன்சிறுகுடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜூஜினம்) மற்றும் பின்சிறுகுடல் (இலியம்) ஆகும்.
i. முன்சிறுகுடல் (டியோடினம்):
சிறுகுடலின் மேல்பகுதியாயிருக்கும் இது 'C' வடிவத்தில் காணப்படுகிறது. பித்த நாளமும் (கல்லீரலிலிருந்து) கணைய நாளமும் (கணையத்திலிருந்து) இணைந்து டியோடினத்தில் திறக்கின்றன.
ii. நடுசிறுகுடல் (ஜூஜினம்):
சிறுகுடலின் நடுப்பகுதி ஜூஜினம் ஆகும். இது சிறுகுடலின் சிறிய பகுதியாகும். சிறுகுடல் சுரக்கும் சுரப்புப் பொருள்கள் சிறுகுடல் நீர் ஆகும். சிறுகுடல்நீரில் சுக்ரோஸ்,மால்டேஸ்,லாக்டேஸ் மற்றும் லிப்பேஸ் போன்ற நொதிகள் காணப்படுகின்றன.
iii. பின்சிறுகுடல் (இலியம்):
சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இப்பகுதி பெருங்குடலில் திறக்கிறது. இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும். இவையாகும் இவைகளில் மிகச்சிறிய விரல் போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.
ஊ) கல்லீரல்
உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி கல்லீரல் ஆகும். இது வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வலது கதுப்பானது. இடது கதுப்பைவிட பெரிதானதாகும். கல்லீரல் செல்கள் பித்தநீரைச் சுரக்கிறது. அது தற்காலிகமாக பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது.
எ) கணையம்
இது பிளவுபட்ட இலை போன்ற அமைப்புடைய சுரப்பியாகும். இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் (முன் சிறுகுடல்) இடையே அமைந்துள்ளது. கணையமானது நாளமுள்ள சுரப்பியாகவும் நாளமில்லா சுரப்பியாவும் செயலாற்றுகிறது.நாளமுள்ள சுரப்பியின் பகுதியாகயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி கணைய நீரைச் சுரக்கிறது அவற்றில் மூன்று நொதிகள் காணப்படுகின்றன. அவையாவன லிப்பேஸ், டிரிப்சின் மற்றும் அமைலேஸ். இவைகள், முறையே கொழுப்பு. புரதம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றில்செயலாற்றுகின்றன. இதன் மேற்புறத்தில் லாங்கர்கான் திட்டுகள் காணப்படுகின்றன. இந்த லாங்கர்கான் திட்டுகள் நாளமில்லா செல்களைக் கொண்டுள்ளது மற்றும் ஹார்மோன்களையும் சுரக்கின்றன. இதிலுள்ள ஆல்பா செல்கள் குளுக்கோகான் என்ற ஹார்மோனையும், பீட்டா செல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
140.
| தாவர செல்கள் | விலங்கு செல்கள் |
| 1. தாவர செல்கள் தற்சார்பு கொண்டவை. தங்களுக்குத் தேவையான உணவை தாங்களே தயாரிக்கக் கூடியவை |
விலங்கு செல்களால் உணவை தயாரிக்க முடியாது. இவை பிற உயிரினங்களை சார்ந்துள்ளன. |
| 2) தாவர திசுக்களில் ஆக்குத் திசுக்களும் நிலைத்த திசுக்களும் உண்டு. |
விலங்குத் திசுக்கள் எப்பிதீலியத் திசு, இணைப்புத் திசு, தசைத்திசு, நரம்பு திசு என நான்கு வகைப்படும். |
| 3) தாவர செல்களில் இறந்த செல்கள் அதிகம் உண்டு. |
விலங்கு செல்களில் உயிருள்ள செல்கள் அதிகம் உண்டு |
| 4) தாவரத் திசுக்கள் எளியவை | விலங்குத் திசுக்கள் சிக்கலான அமைப்பு கொண்டவை. |
| 5) தாவர செல்களின் வளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். |
விலங்கு செல்கள் முதிர்ச்சி அடைந்தாலும் வளர்ச்சி நின்றுவிடும். |
141.
பாரிஸ் சாந்து நீரை உறிஞ்சும் தன்மை கொண்ட (hygroscopic) ஆகும். இது வளிமண்டலத்தில் உள்ள நீரை உறிஞ்சி எளிதில் நீர்த்துப் போய்விடும். எனவே இதனை நீரற்ற கொள்கலன்களில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
142.
அ) ஆக்ஸிஜன் மூலக்கூறு உருவாதல் (O2)
ஆ) சோடியம் குளோரைடு உருவாதல் (NaC/)
இ) அம்மோனியம் உருவாதல் (NH4)
ஈ) நைட்ரஜன் மூலக்கூறு உருவாதல் (N2).
143.

(i) இப்படத்தில் ஒரு எளிய கம்பி5சுருள் ஒரு காந்தத்தின் இரு துருவங்களுக்கு நடுவே வைக்கப்பட்டுள்ளது. தற்போது கம்பி சுருள் AB எனும் பிரிவில் மின்னோட்டத்தின் திசை B ஐ நோக்கி செல்கிறது. ஆனால் கடத்திப் பிரிவு CD யில் மின்னோட்டதிசை எதிராக இருக்கும். கடத்திப் பிரிவு AB யிலும் CD யிலும் மின்னோட்டம் எதிரெதிர் திசைகளில் செல்வதால், பிளெமிங்கின் இடது கை விதியின் படி அவற்றின் இயக்கத்திசைகளும் எதிரெதிராக இருக்கும். கம்பிச் சுருள் இரு முனைகளிலும் விசையானது எதிரெதிர் திசைகளில் இருப்பதால் அவை சுழல்கின்றன.
(ii) மின்னோட்டமானது ABCD வழியாக இருந்தால், கம்பிச் சுருள் முதலில் கடிகாரத் திசையிலும் பின் எதிர் திசையிலும் சுழலும், கம்பிச் சுருள் ஒரே திசையில் அதாவது கடிகாரத்திசையில் இயங்க வேண்டுமானால் மின்னோட்டமானது, சுழற்சியின் முதல் பாதியில் ABCD யிலும், இரண்டாவது பத்தியில் DCBA வழியாகவும் பாய வேண்டும். மின்னோட்டத்தின் திசையை மாற்ற, பிளவு வளைய திசைமாற்றி எனும் ஒரு சிறிய கருவி பயன்படுத்தப்படுகிறது.
(iii) பிளவு வளையத்தில் உள்ள இடைவெளியானது முனையம் X மற்றும் Y உடன் இணைந்திருக்கும்போது சுருளில் மின்னோட்டம் இருப்பதில்லை. ஆனால், சுருள் நகர்வதால், அது தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து இரு பிளவு வளையங்களில் எதாவது ஒரு கார்பன் தூரிகைகள் X மற்றும் Y யுடன் தொடர்பு கொள்ளும். இந்த மின்னோட்டத் திருப்புதல் ஒவ்வொரு அரைச் சுழற்சியிலும் நிகழ்ந்து கம்பிச்சுருளில் தொடர்ச்சியான சுழற்சியை ஏற்படுத்துகிறது.
144.
(i) நிலை மாற்றம்
பொருளானது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வையே நாம் நிலை மாற்றம் என்கிறோம்.
எடுத்துக்காட்டாக சாதாரண வெப்பநிலையில் நீர் மூலக்கூறுகள் திறவாநிலையில் இருக்கும். 1000C வெப்பநிலைக்கு நீரை வெப்பப்படுத்தும் போது அது நீராவியாக மாறுகிறது. நீராவி வாயு நிலையில் இருக்கிறது. வெப்பநிலையைக் குறைக்கும் போது மீண்டும் நீராக மாறுகிறது. வெப்பநிலையை 00C க்கு குறைக்கும் போது பனிக்கட்டியாக மாறுகிறது. பனிக்கட்டி திட நிலையில் இருக்கிறது. பனிக்கட்டியை வெப்பப்படுத்தும்போது மீண்டும் நீராக மாறுகிறது. இவ்வாறு வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் போது நீர் தனது நிலையை மாற்றிக்கொள்ளுகிறது.
(ii) உருகுதல் உறைதல்
ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு உருகுதல் ஆகும்.
(iii) ஆவியாதல் குளிர்தல்
ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு ஆவியாதல் ஆகும்.

145.

146.
வைட்டமின்கள் சிறிய அளவில் தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். இது குறிப்பிட்ட வேலைகளைச் செய்து உடலை ஆரோக்கியமாக நிலை நிறுத்துவதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஒரு அங்கக கூட்டுப் பொருளாகும். எப்பொழுது ஒரு உயிரினத்தால் வைட்டமின் வேதிக் கூட்டுப்பொருளை போதுமான அளவு உருவாக்க முடியாதோ அப்பொழுது அந்தப்பொருள் உணவின் மூலம் மட்டுமே பெறப்பட முடியும்.
வைட்டமின்கள் - அதன் மூலங்கள், குறைபாடு நோய்கள், அறிகுறிகள்: கொழுப்பில் கரையும் வைட்டமின்
| வைட்டமின் | அதன் மூலங்கள் | குறைபாடு நோய்கள் | அறிகுறிகள் |
| வைட்டமின் A (ரெட்டினால்) |
கேரட், பப்பாளி, இலை வகை காய்கறிகள் |
சீரொப்தால்மியா (தோல் நோய்கள்), |
உலர்ந்த கார்னியா, |
| வைட்டமின் D (கால்சிஃபெரால்) |
முட்டை, கல்லீரல், பால் பொருட்கள், மீன், சூரிய வெளிச்சத்தில் தோலிலிருந்து உருவாக்குதல் |
ரிக்கெட்ஸ் ( குழந்தைகளிடம் காணப்படுகிறது) |
கவட்டைக்கால்கள் குறைபாடு உடைய மார்பெலும்புகள், புறா போன்ற மார்பு வளர்ச்சி. |
| வைட்டமின் E (டோகோஃபெரால் |
முழு கோதுமை, மாமிசம் தாவர எண்ணெய், பால் |
எலிகளின் மலட்டுத்தன்மை இனப்பெருக்க கோளாறுகள் |
மலட்டுத் தன்மை |
| வைட்டமின் K (வேதிப்பொருள் குயினோனிலிருந்து பெறப்படுகிறது) |
இலை வகை, காய்கறிகள், சோயாபீன்ஸ்கள், பால் |
இரத்தப்போக்கு | தாமதமாக இரத்தம் உரைத்தலின் காரணமாக அதிக இரத்தம் வெளிவருதல் |
147.
| காலம் | தலைமுறை | மின்னணு உறுப்புகள் |
| 1940 - 1956 | முதல் தலைமுறை | வெற்றிடக்குழாய்கள் |
| 1956 - 1963 | இரண்டாம் தலைமுறை | மின்மயப்பெருக்கி (டிரான்சிஸ்டர்) |
| 1964 - 1971 | மூன்றாம் தலைமுறை | ஒருங்கிணைந்த சுற்று |
| 1972 - 2010 | நான்காம் தலைமுறை | நுண்செயலி |
| 2010க்குப் பின் | ஐந்தாம் தலைமுறை | செயற்கை நுண்ணறிவு |
148.
(i) பிரிபுனல் முறை:
ஒன்றாக கலவாத இரண்டு திரவங்களின் கலவை பிரிபுனல் மூலம் பிரிக்கப்படுகிறது. முதலில் உப்புக்கரைசலும் எண்ணெயும் சேர்ந்த கலவை பிரிபுனலில் ஊற்றப்படுகிறது. பின் நன்றாக கலக்கப்படுகிறது. பின்னர் 5 நிமிடங்களுக்கு இந்தக் கலவை தனியே வைக்கப்படுகிறது. பிரிபுனலில் எண்ணெய் மேலடுக்காகவும் உப்பு நீர் கீழ் அடுக்காகவும் தங்கி விடுகிறது. பிரிபுனலில் உள்ள உப்புநீரை பிரிதலின் நிறுத்துக் குழாயின் மூலம் வெளியேற்றி முகவையில் சேமிக்கப்படுகிறது.உப்புநீர் சேர்த்த பின் மற்றொரு முகவையில் எண்ணெய் சேமிக்கப்படுகிறது.
(ii) ஆவியாக்கல் மற்றும் படிகமாக்கல்:
இம்முறையானது கரைபொருளை கரைசலிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படுகிறது. உப்புக் கரைசலை வெப்பப்படுத்தும் போது நீரானது ஆவியாகி உப்பு (திடப்பொருள்) கீழே படிகமாக தங்கி விடுகிறது. இவ்வாறு எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை பிரிபுனல் முறை, ஆவியாக்கல் மற்றும் படிகமாக்கல் முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது.
149.
(i) முதலில் திருகு அளவியின் புவியிடைத் தூரம், மீச்சிற்றளவு மற்றும் சுழிப்பிழை ஆகியவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.
(ii) திருகு அளவியின் இரு சமதள பரப்புகளுக்கு இடையே மெல்லிய நாணயத்தை வைக்க வேண்டும்
(iii) பற்சட்ட அமைப்பின் உதவியால் திருகினைத் திருகி நாணயத்தினை நன்றாக பற்றிக்கொள்ளுமாறு செய்ய வேண்டும்.
(iv) புரிக்கோல் காட்டும் அளவினையும் (PSR) தலைக்கோல் ஒன்றிப்பின் அளவினையும்(HSC) குறித்துக் கொள்ள வேண்டும். நாணயத்தின் தடிமன் = PSR + (HSC 土 ZC) \(\times\) LC
(v) நாணயத்தின் வெவ்வேறு பகுதியினைத் திருகு அளவியின் சமதள பரப்புகளுக்கு இடையே வைத்து சோதனையைத் திரும்பப் செய்யவும்.
(vi) அளவீடுகளை அட்டவணைப்படுத்தவும்.
(vii) கடைசி கட்டத்தில் உள்ள பல்வேறு அளவுகளின் சராசரி நாணயத்தின் தடிமனைக் கொடுக்கும்.
| வ.எண். | புரிகோல் அளவு (PSR) | தலைகோல் ஒன்றிப்பு (HSC) | (HSC \(\times\) LC) | (HSC \(\times\) LC) 土 ZC | PSR + (HSC \(\times\) LC)土 ZC |
| 1. | 1 | 33 | 0.33 | 0.33 | 1.33 |
| 2. | 1 | 32 | 0.32 | 0.32 | 1.32 |
| 3. | 1 | 34 | 0.34 | 0.34 | 1.34 |
| சராசரி | 1.33 |
நாணயத்தின் தடிமன் = 1.33 மி.மீ.
150.
செயற்கைக் கோள் நிலை கொண்டுள்ள
உயரம் (h) = 36000 கி.மீ
= 36,000 \(\times\) 103 மீ
=36000000 மீ
செயற்கைக் கோளின் சுழற்சிக்காலம் (T) = 24 மணிநேரம்
= 24 \(\times\) 60 \(\times\) 60 வினாடி
= 86400 வினாடி
புவியின் விட்டம் (R) = 6370 கி.மீ
= 6370 \(\times\) 103 மீ
= 6370000 மீ
செயற்கைக் கோளின் வேகம் (V) = ?
v = \(\frac {2\pi (R +h)}{T}\)
= 2 \(\times\) \(\frac {22}{7}\) \(\times\) \(\frac{6370000+36000000} {86400}\)
= 2 \(\times\) \(\frac {22}{7}\) \(\times\) \(\frac{(637+3600)} {86400}\times10\)4
=\(\frac{44} {7}\times\frac {4237} {86400}\times10\)4
செயற்கைக் கோளின் வேகம் (v) = 3082 மீ /வி
151.
நீரின் அடர்த்தி (\(\rho\)) = 1000 கி.கி / மீ3
மரக்கட்டையின் பருமன் (v) = 300 செ.மீ3 = 300 \(\times\) 10-6 மீ3
மரக்கட்டையின் நிறை = 200 கி
= 200 x 0.0098 = 1. 96 N [ 1 கிராம் = 0. 0098 நியூட்டன்]
புவியீர்ப்பு முடுக்கம் (g) = 10 மீ / வி2
உந்து விசை = \(\rho\)gv
அடர்த்தி \(\rho\) = 
= 200/300 = 0.2/3 = 0.0667
\(\rho\) = 0.0667
U = \(\rho\)gv
= 0.0667 \(\times\) 3 \(\times\) 9.8
U = 1.96 N
நீரினால் ஏற்படும் உந்து விசை = 1.96 N
152.
ஒரு எலக்ட்ரானின் மின்னூட்டம்,
e = 1.6 \(\times\) 10–19 C
q = ne (அல்லது) n = q /e
\(\therefore\) 1 C-ல் உள்ள எலக்ட்ரான்கள் எண்ணிக்கை,
= \(\frac {1}{1.6 \times {10}^{-19}}\) = 6.25 \(\times\) 1018 எலக்ட்ரான்கள்.
153.
R = 2f
= 2\(\times \)5 cm
R = 10 cm
154.
(அ) தலைமுடி எலக்ட்ரான்களை இழக்கிறது.
நெகிழிச்சீப்பு எலக்ட்ரான்களை பெற்றது.
(ஆ) 1 C யில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 6.25 \(\times\) 1018 எலக்ட்ரான்கள்
0.4 C யில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 6.25 \(\times\) 1018 \(\times\) 0.4 எலக்ட்ரான்கள்
= 2.5 \(\times\) 1018 எலக்ட்ரான்கள்
இடம்பெயர்ந்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 2.5 \(\times\) 1018
155.
நீரில் ஒளியின் வேகம் = 2.25 \(\times\) 108 மீ/வி
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் = 3 \(\times\) 108 மீ/வி
நீரின் ஒளிவிலகல் எண் (μ) = ?
μ =
நீரின் ஒளி விலகல் எண் = 1.33
156.

= \(\frac {1.60\times 10^ {-19}}{9.58\times 10^ 7C }\frac {C }{kg ^ {-1}}\)
புரோட்டானின் நிறை = 1.6726 x 10-27 kg.
157.
0-4 விநாடிகளில் பொருள் முடுக்கம் பெற்றுள்ளது.
a பகுதியில் u = 20ms-1 t = 4s

= \(\frac { 30-0 }{ 4 } =7.5m/s\)
தொலைவு (S) = ut + 1/2 at2
(S) = (0) (2) + 1/2 (7 .5) (4)2
= 7.5 \(\times\) 16/2
S = 60 m
பொருள் கடந்த தூரம் முக்கோணத்தின் பரப்பளவு = 1/2 x 4 x 30 = 60 மீ
158.
அ) உப்பு ஈரப்பதத்தை அகற்ற உணவைப் பாதுகாக்கிறது.
ஆ) காலாவதி தேதி முடிவடைந்தபின் உணவுப் பொருள் கெட்டுப் போய்விடும்
இ) எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் அவசியம் ஆகும்.
159.
அ) i) A உயிரினம் தாவரங்கள்
ii) உணவு B -குளுக்கோஸ்
உணவு H -ஸ்டார்ச்
ஆ) C - கார்பன் டை ஆக்சைடு
D - நீர்
இ) E - பச்சையம்
F - இலைகள்
ஈ) G - ஒளிச்சேர்க்கை.
160.
கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்களை மறுஊட்டம் செய்ய இயலாது. ஏனெனில் அவை முதன்மை மின்கலன்கள் ஆகும். இந்த முதன்மை மின்கலன்களை மறுஊட்டம் செய்ய இயலாது. இவை மீளாக்கலம் ஆகும்.
161.
உலகில் உள்ள அனைத்து பொருள்களும் எரிவதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. குறைந்த காற்றோட்டமுள்ள அறையில் கார்பன் எரிக்கப்படும்போது கார்பன் எரிபொருளானது முழுவதுமாக எரியாததால் அந்த அறையில் கார்பன் மோனாக்ஸைடு உருவாகின்றது. இந்த கார்பன் மோனாக்ஸைடு நச்சுத்தன்மை வாய்ந்தது. இது நம் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அங்கு இருப்பது ஆபத்தானது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards