9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 9th Standard Science Tamil Medium Book Back and Creative Important Questions All Chapter 2019-2020 )
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
நியானின் இணைதிறன் _________.
2
4
0
2.
ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.
ஐசோடோன்
ஐசோடோப்பு
ஐசோபார்
3.
அணுவில் எலக்ட்ரான்கள் இருக்குமிடம் _________.
ஆர்பிட்
உட்கரு
புரோட்டான்
4.
மையநோக்கு விசையின் எண் மதிப்பு ____
\(F=\frac { { mv } }{ { r }^{ 2 } } \)
\(F=\frac { { m^{ 2 }v } }{ { r } } \)
\(F=\frac { { mv^{ 2 } } }{ { r } } \)
5.
100 மிட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர் முடிக்கும் புள்ளியை அடைய 10 விநாடி ஆனது. அவருடைய சராசரி வேகம் ____ மீ / விநாடி
5
10
20
40
6.
ஒரு பொருள் ஒய்வு நிலையிலிருந்து புறப்படுகிறது. 2 விநாடிக்குப் பிறகு அதன் முடுக்கம், இடப்பெயர்ச்சியை விட _____ இருக்கும்.
பாதி அளவு
இரு மடங்கு
நான்கு மடங்கு
நான்கில் ஒரு பகுதி
7.
கூழும் கரைசல் ஒரு ___________ கலவை
ஒருபடித்தான
பலபடித்தான
சேர்மம்
8.
நீர் மற்றும் உப்பு ஒரு ________ கலவை.
ஒருபடித்தான
பலபடித்தான
சேர்மம்
9.
மாற்றுக. 90o C = _______ K
363 K
383 K
303 K
10.
நிலவின் புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு _______.
1.63 மி.வி.-2
4.63 மி.வி.-2
9.8 மி.வி.-2
11.
சுருள்வில் தராசு பொருட்களின் _____ கணக்கிட பயன்படுகிறது.
எடையை
நிறையை
அளவை
12.
வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு ________.
0.01 செ.மீ.
0.01 செ. மீ.
0.1 செ.மீ.
13.
_______பிம்பத்திற்கும் உருப்பெருக்கத்தின் மதிப்பு நேர்குரியாக இருக்கும்
மெய்பிம்பம்
மாயபிம்பம்
தலைகீழ் பிம்பம்
14.
ஆடி மையத்திற்கும் குவியத்திற்கும் இடையே உள்ள தூரம்______
குவிய தூரம்
குவியம்
வளைவு ஆரம்
15.
சமதள ஆடியில் உருவாகும் பிம்பம்_______
மெய்பிம்பம்
மாயபிம்பம்
தலைகீழ் பிம்பம்
16.
நீராவிப்போக்கு ______ ல் நடைபெறும்
பழம்
விதை
மலர்
இலைத்துளை
17.
இலையில் காணப்படும் பச்சையம் ____________ க்கு தேவைப்படும்
ஒளிச்சேர்க்கை
நீராவிப்போக்கு
சார்பசைவு
திசைசாரா தூண்டல் அசைவு
18.
வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது__________ எனப்படும்
வெப்ப சார்பசைவு
வெப்பமுறு வளைதல்
வேதி சார்பசைவு
நடுக்க முறு வளைதல்
19.
பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது _______
குவியாடி
சமதளஆடி
குழியாடி
20.
\(_{ 35 }^{ 80 }{ Br }\) உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எ்லக்ரான்களின் எண்ணிக்கை
80, 80, 35
35, 55,80
35, 35, 80
35, 45, 35
21.
நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம், அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது
ஒரு அயனி
ஒரு ஐசோடோப்
ஒரு ஐசோபார்
வேறு தனிமம்
22.
டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது______
குழியாடி
குவியாடி
சமதளஆடி
23.
கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில் ____________ அவசியம்.
பிரிபுனல்
வடிதாள்
மைய விலக்கு இயந்திரம்
சல்லடை
24.
துணி துவைக்கும் இயந்திரத்தில் ஆடையை உலர்த்தப் பயன்படும் விசை
மையநோக்கு விசை
மையவிலக்கு விசை
புவிஈர்ப்பு விசை
நிலை மின்னியல் விசை
25.
திசைவேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு கொடுப்பது
வேகம்
இடப்பெயர்ச்சி
தொலைவு
முடுக்கம்
26.
373 K ல் நீரின் இயற்பு நிலை____
திண்மம்
நீர்மம்
வாயு
பிளாஸ்மா
27.
சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தொலைவை எந்த அலகில் கணக்கிட முடியும்?
கிலோ மீட்டர்
மீட்டர்
சென்டி மீட்டர்
மில்லி மீட்டர்
28.
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
கி.மீ < மீ < செ.மீ < மி.மீ
மி.மீ > மீ > செ.மீ > கி.மீ
29.
குழி ஆடியில் P மற்றும் C க்கு இடையே உள்ள தொலைவு 10 cm எனில் குவியத் தூரத்தை காண்க.
30.
12செ.மீ குவியத் தொலைவு கொண்ட குழியாடிக்கு முன் 20 செ.மீ தொலைவில் வைக்கப்பட்டுள்ள 2 செ.மீ உயரம் உடைய பொருள் வைக்கப்படுகிறது. பிம்பத்தின் நிலை (இடம்), அளவு, தன்மையைக்தன்மையைக் காண்க.
31.
ஒரு ரயில் 90 கிமீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. தடையை உபயோகப்படுத்தி – 0.5 மீ / விநாடி2 என்ற சீரான முடுக்கம் ஏற்பட்டது. ரயில் ஓய்வு நிலைக்கு வருவதற்கு முன்பாக எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?
32.
காற்றில் ஒளியின் திசைவேகம் 3 \(\times\)108 மீ/வி, கண்ணாடியில் 2 \(\times\)108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன ?
33.
ஐந்து ரூபாய் நாணயத்தினை திருகு அளவியால் அளக்கும் பொழுது அதன் புரிகோல் அளவு 1.மி.மீ அதன் தலைக்கோல் ஒன்றிப்பு 68 எனில், அதன் தடிமனைக் காண்க.
34.
குழியாடியிலிருந்து 16 செ.மீ தொலைவில் வைக்கப்படும் 2 செ.மீ உயரம் கொண்ட பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செ.மீ உயரம் உள்ளதாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடத்தைக் காண்க.
35.
900 கிலோ கிராம் நிறையுடைய மகிழுந்து ஒன்று 10 மீ / விநாடி வேகத்தில் 25 மீட்டர் ஆரம் உடைய வ வட்டத்தைச் சுற்றி வருகிறது. மகிழுந்தின் மீது செயல்படும் முடுக்கம் மற்றும் நிகர விசையைக் கண்டுபிடிக்க.
36.
கொதிக்கும் நீர் அல்லது நீராவி ஆகியவற்றில் எது அதிகமான காயத்தை உருவாக்குகிறது? ஏன்?
37.
பயன்படுத்தும் முன் நன்றாகக் கலக்கவும். இது மருந்து சாடியின் மேல் உள்ள குறிப்பு. அந்த சாடியில் என்ன மாதிரியான கலவை உள்ளது? காரணம் தருக.
38.
இயக்கத்தின் வகைகள் யாவை?
39.
வட்ட இயக்கம் என்றால் என்ன?
40.
கொதிநிலை என்றால் என்ன?
41.
ஒரு நியூட்டன் வரையறு.
42.
"இழை ஒளியியல்" உருவாகக் காரணமானவர் யார்?
43.
விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன?
44.
விசையின் அலகு என்ன?
45.
வெற்றி்டத்தில் ஒளியின் வேகம் என்ன?
46.
எதிர் நீர் சார்பசைவிற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
47.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

48.
புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.
49.
அளவீடு என்றால் என்ன ?
50.
பின்வரும் படங்களைப் பார்த்து அட்டவணையை நிரப்பவும் தூண்டல் ஏற்படும் பகுதியை நோக்கி வளைந்தால் (+) என்ற குறியீடும், தூண்டல் ஏற்படும் பகுதியை விட்டு விலகினால் (-) என்ற குறியீடும் கொடுக்கவும்.
| தூண்டல் | ஒளி | புவிஈர்ப்பு |
|---|---|---|
| தண்டு | + | - |
| வேர் | ? | + |

51.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அணு எண் மற்றும் நிறை எண்களை கொண்டு, புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடுதல்
i. அணு எண் 3 மற்றும் நிறை எண் 7
ii. அணு எண் 92 மற்றும் நிறை எண் 238.
52.
திசைவேகம் – காலம் வரைபடத்தின் பயன் என்ன?
53.
Rf காரணி என்றால் என்ன?
54.
ஒரு படித்தானக் கரைசல் பலப்படித்தானக் கரைசலிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
55.
வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை எவ்வாறு கணக்கிடுவாய்?
56.
தங்கத் தகடு சோதனையின் மூலம் நீ என்ன முடிவிற்கு வருகிறாய்?
57.
உயிரினம் Aயினால் ஓர் இடம் விட்டு ஓரிடம் நகரமுடியாது. சுற்றுச்சூழலில் கிடைக்கும், C மற்றும் D யினைக் கொண்டு B என்ற எளிமையான உணவு உருவாக்குகிறது. இந்த உணவு G என்ற நிகழ்வினால் சூரிய ஒளியின் முன்னிலையில் F உறுப்புகளில் காணப்படும். E என்ற பச்சை நிறமுள்ளப் பொருளின் முன்னிலையில் உருவாக்கப்படுகின்றது. சில B எளிய உணவு சேமிப்பு நோக்கத்திற்காக கடினமான H-ஆக மாற்றப்படுகிறது, H அயோடின் கரைசல் உடன் சேர்த்தால் கருநீல நிறமாக மாறுகிறது.
அ) i) A உயிரினம் (ii) உணவு B மற்றும் உணவு H ஆகியன யாவை?
ஆ) C மற்றும் D ஆகியன யாவை?
இ) பெயரிடு: பச்சைநிறமுள்ள E மற்றும் உறுப்பு F
ஈ) நிகழ்வு G ன் பெயர் என்ன?
1.
(c)
0
2.
(b)
ஐசோடோப்பு
3.
(a)
ஆர்பிட்
4.
(c)
\(F=\frac { { mv^{ 2 } } }{ { r } } \)
5.
(b)
10
6.
(a)
பாதி அளவு
7.
(b)
பலபடித்தான
8.
(a)
ஒருபடித்தான
9.
(a)
363 K
10.
(a)
1.63 மி.வி.-2
11.
(a)
எடையை
12.
(a)
0.01 செ.மீ.
13.
(b)
மாயபிம்பம்
14.
(a)
குவிய தூரம்
15.
(b)
மாயபிம்பம்
16.
(d)
இலைத்துளை
17.
(a)
ஒளிச்சேர்க்கை
18.
(b)
வெப்பமுறு வளைதல்
19.
(c)
குழியாடி
20.
(d)
35, 45, 35
21.
(b)
ஒரு ஐசோடோப்
22.
(a)
குழியாடி
23.
(a)
பிரிபுனல்
24.
(b)
மையவிலக்கு விசை
25.
(d)
முடுக்கம்
26.
(c)
வாயு
27.
(a)
கிலோ மீட்டர்
28.
(a)
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
29.
R = 10 cm
R = 2f
f =\(\frac { R }{ 2 } =\frac { 10 }{ 2 } \)= 50 cm
30.
பிம்பத்தின் தொலைவு 30 செ.மீ; பிம்பத்தின் உயரம் 3 மீ; பெரிதாக்கப்பட்ட தலைகீழான மெய் பிம்பம்
u = 20 cm
f = 12 cm
u1 = 2 cm
\(\frac { 1 }{ v } +\frac { 1 }{ u } =\frac { 1 }{ f } \)
\(\frac { 1 }{ v } +\frac { 1 }{ f } -\frac { 1 }{ u } \)
= \(\frac { 1 }{ -12 } -\frac { 1 }{ -20 } \)
= \(\frac { 1 }{ -12 } +\frac { 1 }{ 20 } \)
= \(\frac { -5+3 }{ 60 } =\frac { -2 }{ 60 } =\frac { -1 }{ 30 } \)
\(\frac { 1 }{ v } =\frac { -1 }{ 30 } \)
V =-30 cm (எதிர்குறி பிம்பமானது ஆடிக்கு இடபுறம் உள்ளதை குறிக்கிறது)
உருப்பெருக்கம் :
m = \(\frac { { u }_{ 2 } }{ { u }_{ 1 } } =\frac { { u }_{ 2 } }{ 2cm } \)
m = \(\frac { -3 }{ 2 } =\frac { { u }_{ 2 }\quad }{ 2cm } \)
u2 = -3cm உயரம்
(எதிர்குறி பிம்பமானது முதன்மை அச்சிற்க்கு கீழே உள்ளதை குறிக்கிறது.எனவே,பெரிதாக்கப்பட்ட தலைகீழான மெய் பிம்பம் கிடைக்கிறது)
31.
வேகம் = 90 கிமீ/மணி
\(90\times \frac { 5 }{ 18 } =25m/s\)
முடுக்கம் = -0.5 ms-2
V2 = u2 + 2 as
s = \(\frac { { v }^{ 2 }{ -u }^{ 2 } }{ 2as } \frac { 0-(25)^{ 2 } }{ 2\times (-0.5) } \)
=\(\frac { -625 }{ -1 } =625\)
s = 625 மீட்டர்
32.
\(_{ a }{ { \mu }_{ g } }=\frac { 3\times { 10 }^{ 8 } }{ 2\times { 10 }^{ 8 } } =\frac { 3 }{ 2 } \) = 1.5
33.
புரிக்கோல் அளவு = 1மிமீ
தலைக்கோல் ஒன்றிப்பு = 68
5 ரூபாய் நாணயத்தின் தடிமன் = PSR + (HSC \(\times\) L.C)
= 1 + (68 \(\times\) 0.01)
= 1 + 0.68)
5 ரூபாய் நாணயத்தின் தடிமன் = 1.68 மி.மீ
34.
பொருளின் உயரம் h1= 2 செ.மீ
பிம்பத்தின் உயரம் h2= -3 செ.மீ
உருப்பெருககம் m = \(\frac { { h }_{ 2 } }{ { h }_{ 1 } } \)
= \(\frac { -3 }{ 2 } \)
= -1.5
அனால், m = \(\frac { -v }{ u } \)
இங்கு பொருளின் தொலைவு u = - 16 செ.மீ
மதிப்புகளைப் பிரதியிட,
-1.5 = - \(\frac { v }{ (-16) } \)
-1.5 = \(\frac { v }{ 16 } \)
எனவே ,v= 16 \(\times\) -1.5 = -24 செ.மீ
பிம்பம் ஆடிக்கு இ்டது பக்கத்தில் 24 செ.மீ தொலைவில் இருக்கும். ( எதிர்க்குறி, பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் உள்ளது என்பதைக் குறிக்கி்றது).
35.
மகிழுந்து வட்டப்பாதையில் இயங்கும் போது, அதன் மீது செயல்படும் மையநோக்கு முடுக்கத்திற்கான சமன்பாடு, \(a=\frac{v^{2}}{r}\)
\(a=\frac { { v }^{ 2 } }{ r } =\frac { \left( 10 \right) ^{ 2 } }{ 25 } =\frac { 100 }{ 25 } \)
=4 மீ /நொடி2
மகிழுந்தின் மீது செயல்படும் நிகர விசை,
F= ma = 900 \(\times\) 4 = 3600 நியூட்டன்
36.
கொதிக்கும் நீரைக் காட்டிலும் நீராவி அதிகக் காயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் நீராவியில் நீரின் கொதிநிலை வெப்பத்துடன், அது ஆவியாகும் போது உருவாகும் உள்ளுறை வெப்பமும் (latent heat) கூடுதலாகச் சேர்ந்து உள்ளது. எனவே நீராவியால் உண்டாகும் காயம் கொதிநீரின் காயத்தை விட அதிகத் தீங்கு விளைவிக்கும்.
37.
மருந்துச் சாடியில் உள்ள பல மருந்துகள் தொங்கல்கள் ஆகும். இவற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் கரைசலின் அடியில் படிந்து விடுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும் முன் மருந்துச் சாடியை நன்கு குலுக்கினால் மருந்தின் துகள்கள் சீராகக் கரைப்பானில் கலந்து விடும். எனவே மருந்துச் சாதியின் மேல், பயன்படுத்தும் முன் நன்றாக கலக்கவும்' என்ற குறிப்பு அச்சிடப்பட்டுள்ளது.
38.
இயக்கத்தின் வகைகள் - நேரான இயக்கம், வட்ட இயக்கம், அலைவு இயக்கம், சீரான இயக்கம், ஒழுங்கற்ற இயக்கம் ஆகும்.
39.
ஒரு வட்டத்தின் சுற்றளவின் மீது நடைபெறும் இயக்கம் அல்லது வட்டப்பாதையில் நடைபெறும் இயக்கம்
40.
ஒரு திரவத்தை சூடுபடுத்தும் போது அத்திரவத்தின் ஆவி அழுத்தம் உயருகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அத்திரவத்தினூடே குமிழிகள் உருவாகத் துவங்குகிறது. இவ்வெப்பநிலையே அத்திரவத்தின் கொதிநிலை எனப்படுகிறது.
41.
இது விசையின் அலகாகும். ஒரு கிலோகிராம் நிறையுடைய ஒரு பொருளை 1 மீ/ வி-2 முடுக்குவதற்கு தேவையான விசையின் அளவே ஒரு நியூட்டன் ஆகும்.
42.
இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளர் நரிந்தர் கபானி இழை ஒளியியல் உருவாகக் காரணமானவர்.
43.
விண்மீன்களில் இருந்து வரும் ஒளி வளிமண்டலத்தின் மாறிக்கொண்டேயுள்ள அடர்த்தினாலும், வெப்பநிலையினாலும் ஒளி விலகளுக்கு உட்படுகிறது.வளி மண்டலம் நிலையாக இல்லாது சுழற்சி தன்மை கொண்டதாக உள்ளது. எனவே வரும் ஒளி ஒரு புள்ளியிலிருந்து வருவதுபோல் தெரியாமல் வெவ்வேறு புள்ளிகளில் இருந்து வருவது போல் தெரிகிறது.எனவே விண்மீன்கள் மின்னுவதுபோல் தோன்றுகின்றன.
44.
விசை = ma = நிறை \(\times\) முடுக்கம்
= Kg \(\times\) ms-2
= N (நியூட்டன்)
45.
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3,00,000 கி.மீ / விநாடி (அ) 3 x 108 மீ/வி
46.
தண்டு
47.

48.
| மின்சுமை | நிறை | |
| புரோட்டான் | 1.6 \(\times\) 10-19 c | 1.67 \(\times\) 10-24 g |
| எலக்ட்ரான் | -1.6 \(\times\) 10-19 c | 9.31 \(\times\) 10-28 g |
49.
ஒரு பொருளின் பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு அளவு மற்றும் எண்மதிப்பை வழங்கு முறை அளவீடு என வரையறுக்கப்படுகிறது.
50.
| தூண்டல் | ஒளி | புவிஈர்ப்பு |
|---|---|---|
| தண்டு | + | - |
| வேர் | - | + |
51.
| வ.எண் | தனிமம் | அணு எண் | நிறை எண் | புரோட்டோன்களின் எண்ணிக்கை |
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை |
நியூட்ரான்களின் எண்ணிக்கை |
| 1. | லித்தியம் | 3 | 7 | 3 | 3 | 4 |
| 2. | யுரேனியம் | 92 | 238 | 92 | 92 | 146 |
(i) அணு எண் = 3 மற்றும் நிறை எண்: 7
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அல்லது புரோட்டான்களின் எண்ணிக்கை = 3
நிறை எண் = புரோட்டான்களின் எண்ணிக்கை + நியூட்ரான்களின் எண்ணிக்கை
நியூட்ரான்களின் எண்ணிக்கை = நிறை எண் - புரோட்டான்களின் எண்ணிக்கை
= 7 - 3 = 4
(ii) அணு எண் = 92 மற்றும் நிறை எண்: 238
அணு எண் = 92
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 92
புரோட்டான்களின் எண்ணிக்கை = 92
நியூட்ரான்களின் எண்ணிக்கை = 238 - 92 = 146
52.
1. கடந்த தொலைவை கணக்கிட பயன்படுகிறது.
2. இடப்பெயர்ச்சியை கணக்கிட பயன்படுகிறது.
3. முடுக்கத்தை கணக்கிட பயன்படுகிறது.
4. இயக்கத்தின் தன்மைய அறிய பயன்படுகிறது.
53.
Rf காரணி (பிடிமானக் காரணி) என்பது கரைபொருள் நகரும் தொலைவிற்கு, கரைப்பான் நகரும் தொலைவிற்கும் இடையேயான விகிதம் என வரையறுக்கப்படுகிறது.

54.
| வ.எண் | ஒருபடித்தான கலவைகள் | பலபடித்தான கலவைகள் |
|---|---|---|
| 1. | பகுதிப் பொருட்கள் சீராக கலந்து ஒரே நிலையில் உள்ளது | பகுதிப் பொருட்கள் சீராக கலந்திருப்பதில்லை. |
| 2. | பகுதி பொருட்களுக்கு எல்லைப் பிரிப்பு இல்லை. | பகுதிப் பொருட்களுக்குள் எல்லைகளை பார்க்க முடியும். |
| 3. | ஒரே நிலையில் உள்ளது | ஒன்றுக்கும் மேற்பட்ட நிலைகளைக் கொண்டுள்ளது |
| 4. | பகுதிப் பொருட்கள் கண்களுக்கு புலப்படுவதில்லை | பகுதிப் பொருட்கள் கண்களுக்கு புலப்படும். |
| 5. | எ.கா: உப்புக்கரைசல், உலோகக்கலவை, பெட்ரோல். | எ.கா: நீரில் சுண்ணாம்பு, நீரில் மணல். |
(i) ஒருபடித்தான கலவை விளக்கம்:
சிறிதளவு உப்பை எடுத்து நீரில் கரைத்துவிட வேண்டும். நன்றாக உப்பு கரைந்து விடும். நம்மால் உப்பின் துகள்களை பார்க்க முடிவதில்லை. மேலும் சுத்தமான கரைசல் கிடைக்கிறது. எந்தந் துகள்களும் கரைசலின் அடியில் தங்குவதில்லை.
(ii) பலபடித்தான கலவை விளக்கம்:
சிறிதளவு சுண்ணாம்புத் துகளை நீரில் கரைக்கவும். கரைந்த பின் 10 நிமிடங்களுக்கு தனியாக வைத்துவிடவும். சுண்ணாம்புத் துகள்கள் கரைசலின் அடியில் தங்கியிருப்பதைக்காணலாம். மேலும் சுண்ணாம்பிற்கும் நீருக்கும் இடையே எல்லையைப் பார்க்க முடியும்.
55.
(i) வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு

(ii) வெர்னியர் அளவியில் முதன்மைக் கோல் சென்டிமீட்டரிலும், அதன் பிரிவுகள் மில்லி மீட்டரிலும் குறிக்கப்பட்டிருக்கும். அதனால் முதன்மைக் கோலின் மிகச்சிறிய அளவு ஒரு மில்லி மீட்டர் ஆகும். வெர்னியர் அளவு கோலில் உள்ள மொத்தப் பிரிவுகள் 10 ஆகும்.
(iii) எனவே மீச்சிற்றளவு
= 0.1 மி.மீ. அல்லது .0.01 செ.மீ
56.
முடிவு:
i) அணுவின் மையப்பகுதியில் மிகச் சிறிய உட்கரு இடம் பெற்றுள்ளது.
ii) உட்கருவைச் சுற்றி பெரும் பகுதி வெற்றிடமாக உள்ளது.
iii) அணுவின் உட்கரு எனப்படும் சிறிய நேர்மின் சுமை கொண்ட பகுதியில் அணுவின் மொத்த நிறையும் பொதிந்துள்ளது.
iv) அணுவின் பெரும் பகுதியான வெற்றிடத்தில் அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன.
v) எலக்ட்ரான்கள் உட்கருவை வட்ட வடிவ பாதையில் சுற்றி வருகின்றன.
57.
அ) i) A உயிரினம் தாவரங்கள்
ii) உணவு B -குளுக்கோஸ்
உணவு H -ஸ்டார்ச்
ஆ) C - கார்பன் டை ஆக்சைடு
D - நீர்
இ) E - பச்சையம்
F - இலைகள்
ஈ) G - ஒளிச்சேர்க்கை.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards