9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/01/2019
Class 9- Environmental Science - Short Answers
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஐ.யூ.சி.என் என்றால் என்ன? அதன் தொலைநோக்குப் பார்வைகள் யாவை?
2.
மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் யாவை?
3.
சாம்பல் நீர் என்றால் என்ன?
4.
உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக் கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.
5.
நீர் சேமித்தலின் முக்கியத்துவம் என்ன?
6.
கீழ்க்கண்ட தாவரத்தினைக் கண்ட றி தங்கள் வாழிடங்களில் எவ்வா று அவை தாமாகவே தகவமை த்துக் கொள்கின்றன?

7.
நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?
8.
தகவமைப்பு என்றால் என்ன?
9.
நைட்ரஜன் சுழற்சியை மனிதனின் செயல்கள் எவ்வாறு பாதிக்கின்றன?
10.
உன்னைப் பொறுத்த வரையில் எச்செயல் நீர்ச் சுழற்சியில் மனிதச் செயல்பாடுகளால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றது?
11.
உயர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள் யாவை?
12.
பண்ணைக்குட்டை என்ற அணுகுமுறையானது ஒரு நீர்ப்பா துகாப்பு முறையாகும். எல்லா விவசாயிகளாலும் ஏன் இந்த முறையை அவர்களின் வயல்களில் கட்டமைத்து பயன்படுத்த முடியவில்லை?
13.
எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது, வௌவால்களின் தகவமைப்பாக உள்ளது. இந்த வாக்கியம் நியாயமானதா?
14.
நீண்ட படகு போன்ற உடலமைப்பு மற்றும் நீட்சிகள் காணப்படுவது மண்புழுவின் தகவமைப்பாகக் கருதப்படுகின்றது. ஏன்?
15.
வேர்கள் அதிக ஆழமாக வளர்ந்து நீர் உள்ள பூமியின் அடுக்குகள் வரை செல்கின்றன. இவ்வகையான தகவமைப்புகளை எவ்வகைத் தாவரங்கள் மேற்கொள்கின்றன? ஏன்?
1.
ஐ.யூ.சி.என் என்ற பன்னாட்டு அமைப்பானது இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை வளம் குன்றாமல் பயன்படுத்துதல் போன்றவற்றில் பெரும் பங்காற்றி வருகிறது. ஐ.யூ.சி.என், இவ்வுலகின் இயற்கை நிலையை அறிவதற்கும், தேவையான நடவடிக்கைகளை எடுத்து இயற்கையின் பாதுகாவலனாக விளங்குவதற்கும் உலகளாவிய தலைமை (அதிகார) அமைப்பாக உள்ளது.
ஐ.யூ.சி.என் நோக்கம்:
“இயற்கையை மதிக்கக்கூடிய மற்றும் பாதுகாக்கக்கூடிய நேர்மையான உலகம்" என்பதே இதன் நோக்கமாகும்.
ஐ.யூ.சி.என் இலக்கு:
இயற்கையிலுள்ள வேற்றுமை மற்றும் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், எந்தவொரு இயற்கை வளத்தினை பயன்படுத்தினாலும் அது நியாயமானதாகவும், சூழ்நிலையைப் பாதிக்காத வண்ணம் உள்ளதா என்பதை வலியுறுத்துவதற்கும் ஒவ்வொரு சமுதாயத்தினையும் ஊக்கப்படுத்தி அவற்றிற்கு உதவி செய்வதே இதன் இலக்காகும்.
2.
மறுசுழற்சி நீரானது கீழ்க்கண்டவற்றில் பயன்படுகிறது.
i) விவசாயம்
ii) இயற்கை அழகுமிக்க நிலங்களை உருவாக்குதல்.
iii) பொதுப்பூங்காக்கள்
iv) குளிப்பந்தாட்ட விளையாட்டுத்திடல்
v) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ஆற்றல் நிலையங்களில் உள்ள குளிர்விப்பான்கள்.
vi) கழிவறைகளைச் சுத்தம் செய்தல்
vii) தூசிகளைக் கட்டுப்படுத்தல்.
viii) கட்டுமானச் செயல்கள்.
3.
வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், குளியல் அறைகள், வாறல் இறைப்பான்கள் (shower drains), மற்றும் துணி துவைப்பதால் வெளியேறும் நீர் ஆகியவை சாம்பல் நீர் எனப்படுகின்றன.
4.
பள்ளி மற்றும் வீடுகளில் நீரைச் சேமித்தல்:
i) வாறல் குளிர்பான்களில் (Showers) குளிப்பதை விட, நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
ii) குறைவாக நீர் வரக்கூடிய குடிநீர்க்குழாய்களைப் (tap) பயன்படுத்திட வேண்டும்.
iii) மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
iv) குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரிசெய்தல்.
v) முடிந்தவரை நீரை மறுசுழற்சி செய்தல் அல்லது மீண்டும் பயன்படுத்துதல்.
vi) நீர்ப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
5.
நீர் சேமித்தலின் முக்கியத்துவம்:
i) நீர் வளங்களை திறமையாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது.
ii) போதுமான அளவு பயன்படுத்தக்கூடிய நீரானது நமக்குக் கிடைப்பதை உறுதிப்படுகிறது.
iii) நீர் மாசுபடுதலைக் குறைக்க உதவுகின்றது.
iv) ஆற்றில் சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு இது உதவி புரிகின்றது.
6.
இத்தாவரத்தின் பெயர் ஹைட்ரில்லா எனப்படும் வேலம்பாசி ஆகும். இதன் வேர்கள் சரியான வளர்ச்சி அடையவில்லை. நீரில் அமிழ்ந்திருக்கும் இச்செடியின் இலைகள் குறுகலாகவும் பல பிரிவுகளைக் கிளைத்தும் காணப்படுகின்றன.

7.
1) தேவைக்கு அதிகமான நீர் இருத்தல்.
2) நீரோட்டம் தாவரத்தினை சேதப்படுத்துதல்.
3) நீரின் அளவு தொடர்ந்து மாறிக்கொண்டிருத்தல்
4) நீரில் மிதக்கும் தன்மையைப் பராமரித்தல்.
8.
ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதன் வாழிடத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப்போக வைப்பதையே தகவமைப்பு என்கிறோம்.
9.
புதைபடிவ எரிப்பொருள்களை எரிப்பதன் மூலமும், நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் பல செயல்களாலும் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அதிகரிக்கின்றது. விவசாய நிலங்களில் பயன்படுத்தபடும் நைட்ரஜனானது ஆறுகளுக்குச் சென்று அங்கிருந்து கடல் சூழ்நிலையை சென்றடைகிறது. இவ்வாறு கடத்தப்படுவதன் மூலம் உணவு வலையின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. வாழிடங்கள் அழிகின்றன; உயிரினங்களின் பல்வகைத் தன்மையும் மாற்றியமைக்கப்படுகின்றன.
10.
நீர் ஊடுருவல், உள்வழிந்தோடல்
11.
உயர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள்
1) உயிருள்ள காரணிகள்
2) உயிரற்ற காரணிகள்
12.
i) தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் மற்றும் குட்டைகளுக்குப் பாய்ந்தோடும் நீரின் அளவை பண்ணைக் குட்டைகள் குறைகின்றன.
ii) விவசாயிகளின் நிலங்களை அதிகளவு ஆக்கிரமித்துக் கொள்கின்றன. எனவே எல்லா விவசாயிகளாலும் இந்த முறையை தங்கள் வயல்களில் கட்டமைத்துப் பயன்படுத்த முடியவில்லை.
13.
ஆம்! வௌவால்கள் பார்வையற்ற விலங்குகள் அல்ல. ஆனாலும், இரவுநேரங்களில் பறந்து, தங்களைச் சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு, பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அமைப்பைப் பயன்படுத்துகின்றன (மீயொலி அலைகள் ultrasonic sound). இவ்வமைப்புக்கு எதிரொலித்து இடம் கண்டறிதல் என்று பெயர். இந்த அலைகள் அவற்றின் இறையின் மீது (prey) பட்டு எதிரொலித்து மீண்டும் அவற்றின் காதினை வந்தடைகின்றன. இந்த எதிரொலியானது இறையின் இடத்தினைக் கண்டறிய பயன்படுகிறது.
14.
மண்புழுக்கள் கண்டமாகப் பிரிக்கப்பட்ட, நீளமான, உருளை போன்ற உடலமைப்புடன் காணப்படுகின்றன. இவ்வமைப்பு இவை மண்ணின் அடியிலுள்ள குறுகிய வளைகளுக்குள் (குழிகளுக்குள்) எளிதாக ஊடுருவிச் செல்ல உதவுகின்றன. வளையக்கூடிய வட்ட மற்றும் நீளவாட்டுத் தசைகளைக் கொண்ட இவற்றின் உடலானது, மண்ணிலுள்ள வளைவுகளில் உட்புகுந்து செல்வதற்கு உதவுகின்றது. உடலிலுள்ள ஒவ்வொரு கண்டங்களின் கீழ்ப்பகுதியிலும் எண்ணற்ற தூரிகை போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. அவை மயிர்க்கால்கள் எனப்படுகின்றன. இந்த மயிர்க்கால்கள் இடப்பெயர்ச்சிக்கும் மண்ணை இறுகப்பிடித்து வளையின் உள்ளே செல்வதற்கும் உதவுகின்றன.
15.
எருக்கலை போன்ற வறண்ட நிலத்தாவரங்கள் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன. இவை பூமிக்குள் ஆழமாகச் சென்று நீர் அடுக்குகளில் உள்ள நீரை உறிஞ்சி கொள்கின்றன. வறண்ட நிலத்தாவரங்கள் அனைத்திலும் தண்ணீரைப் பெறுவதற்காக இத்தகைய தகவமைப்பு காணப்படுகின்றது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards