9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 9th Standard Science Tamil Medium Important Question All Chapter 2020 )
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.
ஐசோடோன்
ஐசோடோப்பு
ஐசோபார்
2.
நியூட்ரான்களின் மின்சுமை _________.
நேர்
எதிர்
சுழி
3.
அணுவில் எலக்ட்ரான்கள் இருக்குமிடம் _________.
ஆர்பிட்
உட்கரு
புரோட்டான்
4.
V < u எனில் திசைவேகத்தின் மதிப்பு ______
அதிகரிக்கிறது
குறைகிறது
மாறிலி
5.
மையநோக்கு விசையின் எண் மதிப்பு ____
\(F=\frac { { mv } }{ { r }^{ 2 } } \)
\(F=\frac { { m^{ 2 }v } }{ { r } } \)
\(F=\frac { { mv^{ 2 } } }{ { r } } \)
6.
முடுக்கத்தின் அலகு
மீ / விநாடி
மீ / விநாடி2
மீவி
மீவி2
7.
கூழும் கரைசல் ஒரு ___________ கலவை
ஒருபடித்தான
பலபடித்தான
சேர்மம்
8.
மாற்றுக. 90o C = _______ K
363 K
383 K
303 K
9.
திண்மங்களில் துகள்கள் _________ இடைவெளியில் இருக்கும்.
மிக அதிக
மிக குறைந்த
10.
நிலவின் புவியீர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு _______.
1.63 மி.வி.-2
4.63 மி.வி.-2
9.8 மி.வி.-2
11.
திருகு அளவியின் மீச்சிற்றளவு ______.
0.01மி.மீ.
0.01மி. மீ.
0.1 மி.மீ.
12.
வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு ________.
0.01 செ.மீ.
0.01 செ. மீ.
0.1 செ.மீ.
13.
முழு அக எதிரொலிப்பு நிகழ ஒளியானது_____லிருந்து _____க்கு செல்லவேண்டும்
அடர்மிகு;அடர்குறை
அடர்குறை:அடர்குறை
அடர்மிகு;அடர்மிகு
14.
ஆடி மையத்திற்கும் குவியத்திற்கும் இடையே உள்ள தூரம்______
குவிய தூரம்
குவியம்
வளைவு ஆரம்
15.
____________ தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.
வேர்
தண்டு
கிளைகள்
இலைகள்
16.
தாவரத்தின் வேர் ____________ ஆகும்
I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு
II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு
III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு
IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு
I மற்றும் II
II மற்றும் III
III மற்றும் IV
I மற்றும் IV
17.
நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ____________ எனப்படும்
நடுக்கமுறு வளைதல்
ஒளிச்சார்பசைவு
நீர்சார்பசைவு
ஒளியுறு வளைதல்
18.
ஒளியின் திசைவேகம் ________ ல் பெருமமாக உள்ளது.
வெற்றிடத்தில்
கண்ணாடியில்
வைரத்தில்
19.
பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு
2,8,9
2,8,1
2,8,8,1
2,8,8,3
20.
தவறான ஒன்றைக் கண்டுபிடி
8O18, 17cl37
18Ar40,7N14
14Si30, 15pd31
20ca40, 19K39
21.
டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது______
குழியாடி
குவியாடி
சமதளஆடி
22.
மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து, கனமான பொருட்களிலிருந்து லேசான பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறை ______________ .
வடிகட்டல்
வண்டல்
சாய்த்து வடித்தல்
மைய விலக்கம்
23.
கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல?
சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்
வட்டப் பாதையில் சுற்றி வரும் பொம்மை ரயிலின் இயக்கம்.
வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து
கடிகாரத்தில் மணி முள்ளின் இயக்கம்
24.
ஒரு மகிழுந்து 20 மீ / விநாடி வேகத்தில் இயக்கப்படுகிறது.தடையைப் பயன்படுத்தி 5 விநாடி கால இடைவெளியில் அது ஓய்வு நிலையைப் பெறுகிறது. இதில் ஏற்பட்ட எதிர்மறை முடுக்கம் என்ன
4 மீ / விநாடி2
- 4 மீ / விநாடி2
- 0.25 மீ / விநாடி2
0.25 மீ / விநாடி2
25.
பின்வருவனவற்றுள் ______ ஒரு கலவை.
சாதாரண உப்பு
தூய வெள்ளி
கார்பன் டை ஆக்ஸைடு
சாறு
26.
அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?
நிறை
எடை
காலம்
நீளம்
27.
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
கி.மீ < மீ < செ.மீ < மி.மீ
மி.மீ > மீ > செ.மீ > கி.மீ
28.
பயன்படுத்தும் முன் நன்றாகக் கலக்கவும். இது மருந்து சாடியின் மேல் உள்ள குறிப்பு. அந்த சாடியில் என்ன மாதிரியான கலவை உள்ளது? காரணம் தருக.
29.
தடையின்றி தானே கீழே விழும் பொருளுக்கான இயக்கச் சமன்பாடுகள் யாவை?
30.
சீரான, சீரற்ற இயக்கம் வேறுபடுத்துக்க?
31.
உருகுநிலை என்றால் என்ன?
32.
ஒரு நியூட்டன் வரையறு.
33.
புவியில் ஒரு மனிதன் நிறை 50kg எனில் அவரது எடை எவ்வளவு?
34.
முதன்மை குவியம் என்றால் என்ன?
35.
குழி ஆடியில் ஈரிலாத் தொலைவில் பொருள் வைக்கப்படும் போது பிம்பம் எந்த இடத்தில் கிடைக்கும்?
முதன்மை குவியத்தில்
ஈறிலியல்
ஆடிக்கு பின்னால்
36.
நேரான பெரிதாக்கப்பட்ட பிம்பம் மற்றும் அதே அளவுள்ள தலைகீழான பிம்பம், இவற்றைத் தரக்கூடிய ஆடி (கள்) எது/எவை ?
37.
காற்றை விட அடர்மிகு, ஒளிபுகும் ஊடகங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக
38.
நுண் ஊட்டத் தனிமத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
39.
புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.
40.
K மற்றும் Cl ஆகியவற்றின் எலக்ட்ரான் பகிர்வை எழுதுக.
41.
கீழ்க்கண்ட கலவைகளின் கூறுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப் பெயரிடு.
i) ஒன்றாக கலக்கும் திரவங்கள்
ii) ஒன்றாக கலவாதத் திரவங்கள்
42.
பருப்பொருளின் எந்த நிலை மிக அதிகமான இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளது
43.
அளவீடு என்றால் என்ன ?
44.
குழி ஆடியில் P மற்றும் C க்கு இடையே உள்ள தொலைவு 10 cm எனில் குவியத் தூரத்தை காண்க.
45.
குழி ஆடியின் குவியத்தொலைவு 5 cm எனில் அதன் வளைவு ஆரத்தின் மதிப்பு?
46.
குழியாடியின் முன் 7 செ.மீ தொலைவில் பொருள் வைக்கப்படும்போது அதன் ஒன்றின் மும்மடங்கு உருப்பெருக்கப்பட்ட பிம்பம் கிடைக்கிறது எனில், பிம்பம் எவ்விடத்தில் கிடைக்கும்?(விடை : 21 செ .மீ தொலைவில்)
47.
ஒரு சோதனையில், விண்வெளிக் கப்பலிலிருந்து புறப்பட்ட சைகை (சிக்னல்), 5 விநாடிக்குப் பிறகு தரை தரைக்கட்டுப்பாட்டு நிலையம் வந்தடைந்தது. விண்வெளிக் கப்பலுக்கும் தரைக்காட்டுப்பாட்டு நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு? சைகை பயணிக்கும் வேகம் 3 \(\times\) 108 மீ / விநாடி
48.
98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க.
49.
குழியாடியிலிருந்து 16 செ.மீ தொலைவில் வைக்கப்படும் 2 செ.மீ உயரம் கொண்ட பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செ.மீ உயரம் உள்ளதாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடத்தைக் காண்க.
50.
பச்சையம் என்றால் என்ன?
51.
ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.
52.
ஆக்சிஜன் மற்றும் சல்ஃபர் அணுக்களின் அணு அமைப்பை வரைக.
53.
உண்மையான வேகம் சராசரி வேகத்திலிருந்து ஏன் மாறுபடுகிறது?
54.
சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக இருப்பது எது ? மற்றும் எது தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும்?
55.
நிலையான அலகு முறையின் தேவை என்ன?
56.
தங்கத் தகடு சோதனையின் மூலம் நீ என்ன முடிவிற்கு வருகிறாய்?
57.
எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது? (பல்வேறு முறைகளை ஒன்று சேர்த்து நீ பயன்படுத்தலாம்).
58.
A, B மற்றும் C என்று மூன்று தாவரங்கள் உள்ளன. A தாவரத்தில் உள்ள மலரின் இதழ்கள் பகல் நேரத்தில் பிரகாசமான ஒளியில் திறக்கும். ஆனால் ஒளி மங்கும்போது இருளில் மூடிக்கொள்ளும். தாவரம் B ல் உள்ள மலர்களின் இதழ்கள் இரவு நேரத்தில் திறந்த நிலையில் இருக்கும். ஆனால் பகல் நேரங்களில் பிரகாசமான ஒளியில் மூடிக்கொள்ளும். தாவரம் C யில் உள்ள இலைகளை விரல்களால் தொட்டால் அல்லது திடப் பொருள் ஏதும் அதன் மீது பட்டால் மூடிக்கொள்ளும்.
அ) தாவரம் A மற்றும் B யின் மலர்களில் நிகழும் நிகழ்வினைப் பெயரிடுக.
ஆ) தாவரம் A மற்றும் B யின் மலர்களின் பெயரினை எழுதுக.
இ) தாவரம் C யின் இலைகளில் ஏற்படும் நிகழ்வினைப் பெயரிடுக
ஈ) தாவரம் C யின் இலைகளில் நிகழும் நடத்தை போன்று வேறு ஒரு தாவரத்தின் பெயரினை எழுதுக
1.
(b)
ஐசோடோப்பு
2.
(c)
சுழி
3.
(a)
ஆர்பிட்
4.
(b)
குறைகிறது
5.
(c)
\(F=\frac { { mv^{ 2 } } }{ { r } } \)
6.
(b)
மீ / விநாடி2
7.
(b)
பலபடித்தான
8.
(a)
363 K
9.
(b)
மிக குறைந்த
10.
(a)
1.63 மி.வி.-2
11.
(a)
0.01மி.மீ.
12.
(a)
0.01 செ.மீ.
13.
(a)
அடர்மிகு;அடர்குறை
14.
(a)
குவிய தூரம்
15.
(b)
தண்டு
16.
(b)
II மற்றும் III
17.
(c)
நீர்சார்பசைவு
18.
(a)
வெற்றிடத்தில்
19.
(c)
2,8,8,1
20.
(c)
14Si30, 15pd31
21.
(a)
குழியாடி
22.
(d)
மைய விலக்கம்
23.
(c)
வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து
24.
(a)
4 மீ / விநாடி2
25.
(d)
சாறு
26.
(d)
நீளம்
27.
(a)
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
28.
மருந்துச் சாடியில் உள்ள பல மருந்துகள் தொங்கல்கள் ஆகும். இவற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் கரைசலின் அடியில் படிந்து விடுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும் முன் மருந்துச் சாடியை நன்கு குலுக்கினால் மருந்தின் துகள்கள் சீராகக் கரைப்பானில் கலந்து விடும். எனவே மருந்துச் சாதியின் மேல், பயன்படுத்தும் முன் நன்றாக கலக்கவும்' என்ற குறிப்பு அச்சிடப்பட்டுள்ளது.
29.
V = gt
S = 1/2 gt2
V2 = 2gh
30.
| வ.எண் | சீரான இயக்கம் | சீரற்ற இயக்கம் |
| 1. | சம கால இடைவெளியில் சம தொலைவுகளை கடக்கும். |
சமகால இடைவெளியில் சமமற்ற தொலைவுகளை கடக்கும். |
| 2. | தொலைவு - காலம் வரைபடம் நேர்கோடாக இருக்கும். | தொலைவு - காலம் வரைபடம் நேர்கோடாக இருக்காது. |
| 3. | முடுக்கம் சுழி மதிப்பு பெறும். | முடுக்கத்தின் மதிப்பு சுழியாக இருக்காது. |
31.
ஒரு பொருள் வெப்ப ஆற்றலை உறிஞ்சி உருக ஆரம்பிக்கிறது. ஒரு பொருள் குறிப்பிட்ட வெப்பநிலையில் உருகுவது உருகுநிலை எனப்படும்.
32.
இது விசையின் அலகாகும். ஒரு கிலோகிராம் நிறையுடைய ஒரு பொருளை 1 மீ/ வி-2 முடுக்குவதற்கு தேவையான விசையின் அளவே ஒரு நியூட்டன் ஆகும்.
33.
W = mg
= 50 \(\times\) 9.8
= 490 நியூட்டன்
34.
முதன்மை அச்சிற்கு இணையாக வரும் கதிர்கள் ஆடியில் பட்டு எதிரொலிக்கப்பட்ட பின் எந்த புள்ளியில் குவிக்கின்றனவோ அல்லது எந்த புள்ளியிலிருந்து விரிந்து செல்வது போல் உள்ளதோ அந்த புள்ளியே முதன்மை குவியம் ஆகும்.
35.
முக்கிய குவியத்தில் கிடைக்கும்.
36.
குழியாடி
37.
நீர்,கண்ணாடி
38.
துத்தநாகம்
39.
| மின்சுமை | நிறை | |
| புரோட்டான் | 1.6 \(\times\) 10-19 c | 1.67 \(\times\) 10-24 g |
| எலக்ட்ரான் | -1.6 \(\times\) 10-19 c | 9.31 \(\times\) 10-28 g |
40.
(i) எலக்ட்ரான் அமைப்பு K+ - 2, 8, 8.
(ii) எலக்ட்ரான் அமைப்பு Cl- - 2, 8, 8.
41.
| வ.எண் | கலவை | பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனம் |
| 1. | ஒன்றாகக் கலக்கும் திரவங்கள் | பின்னக் காய்ச்சி வடிக்கும் சாதனம் |
| 2. | ஒன்றாக கலவாதத் திரவங்கள் | பிரிபுனல் |
42.
பருப்பொருளின் வாயுக்கள் நிலை அதிக இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளன.
43.
ஒரு பொருளின் பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு அளவு மற்றும் எண்மதிப்பை வழங்கு முறை அளவீடு என வரையறுக்கப்படுகிறது.
44.
R = 10 cm
R = 2f
f =\(\frac { R }{ 2 } =\frac { 10 }{ 2 } \)= 50 cm
45.
R = 2f
= 2\(\times \)5 cm
R = 10 cm
46.
பிம்பத்தின் தொலைவு = 7 செ.மீ.
உருப்பெருக்கப்பட்ட பிம்பம் = பொருளின் தொலைவு \(\times\) மும்மடங்கு
= 7\(\times\)3 = 21 செ.மீ.
பிம்பம் ஆடிக்கு முன்னால் 21 செ.மீ தொலைவில் கிடைக்கும்.
47.
வேகம் = தொலை / காலம்
தொலைவு = வேகம் \(\times\) காலம்
= 3 \(\times\) 108 \(\times\) 5
தொலைவு = 15 \(\times\) 108 m
48.
பொருளின் நிறை = எடை / புவியீர்ப்பு மதிப்பு
= 98 / 9.8
= 10 கி.கி.
49.
பொருளின் உயரம் h1= 2 செ.மீ
பிம்பத்தின் உயரம் h2= -3 செ.மீ
உருப்பெருககம் m = \(\frac { { h }_{ 2 } }{ { h }_{ 1 } } \)
= \(\frac { -3 }{ 2 } \)
= -1.5
அனால், m = \(\frac { -v }{ u } \)
இங்கு பொருளின் தொலைவு u = - 16 செ.மீ
மதிப்புகளைப் பிரதியிட,
-1.5 = - \(\frac { v }{ (-16) } \)
-1.5 = \(\frac { v }{ 16 } \)
எனவே ,v= 16 \(\times\) -1.5 = -24 செ.மீ
பிம்பம் ஆடிக்கு இ்டது பக்கத்தில் 24 செ.மீ தொலைவில் இருக்கும். ( எதிர்க்குறி, பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் உள்ளது என்பதைக் குறிக்கி்றது).
50.
இலைகளில் காணப்படும் பச்சை நிறமி.
51.
எதிர் புவி சார்பசைவு
52.

16O8 - 1s2 2s2 2p4 32S16 - 1s2 2s2 2p6 3s2 3p4
53.
1. உண்மையான வேகம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு எடுக்கப்படும் வேகம் ஆகும். இது இடத்திற்கு இடம், நேரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
2. சராசரி வேகம் என்பது கடக்கப்பட்ட மொத்த தொலைவை மொத்த நேரத்தோடு வகுப்பதால் கிடைக்கும் மதிப்பாகும்.
எனவே உண்மை வேகம், சராசரி வேகத்திலிருந்து மாறுபடுகிறது.
54.
சீரான வட்ட இயக்கத்தில் வேகம் மாறாததாக இருக்கும். திசைவேகம் திசையை பொறுத்து மாறுபடும்.
55.
i) சரியான மற்றும் துல்லியமான அளவுகளான நீளம், நிறை, காலம் போன்றவற்றை அளவிடலாம்.
ii) சிறு இடம் விட்டு இடமோ, நபர்களுக்கிடையிலோ, மாறாத அளவினைப் பெறலாம்.
எ. கா: நீளத்தின் அலகு மீட்டர்
56.
முடிவு:
i) அணுவின் மையப்பகுதியில் மிகச் சிறிய உட்கரு இடம் பெற்றுள்ளது.
ii) உட்கருவைச் சுற்றி பெரும் பகுதி வெற்றிடமாக உள்ளது.
iii) அணுவின் உட்கரு எனப்படும் சிறிய நேர்மின் சுமை கொண்ட பகுதியில் அணுவின் மொத்த நிறையும் பொதிந்துள்ளது.
iv) அணுவின் பெரும் பகுதியான வெற்றிடத்தில் அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன.
v) எலக்ட்ரான்கள் உட்கருவை வட்ட வடிவ பாதையில் சுற்றி வருகின்றன.
57.
(i) பிரிபுனல் முறை:
ஒன்றாக கலவாத இரண்டு திரவங்களின் கலவை பிரிபுனல் மூலம் பிரிக்கப்படுகிறது. முதலில் உப்புக்கரைசலும் எண்ணெயும் சேர்ந்த கலவை பிரிபுனலில் ஊற்றப்படுகிறது. பின் நன்றாக கலக்கப்படுகிறது. பின்னர் 5 நிமிடங்களுக்கு இந்தக் கலவை தனியே வைக்கப்படுகிறது. பிரிபுனலில் எண்ணெய் மேலடுக்காகவும் உப்பு நீர் கீழ் அடுக்காகவும் தங்கி விடுகிறது. பிரிபுனலில் உள்ள உப்புநீரை பிரிதலின் நிறுத்துக் குழாயின் மூலம் வெளியேற்றி முகவையில் சேமிக்கப்படுகிறது.உப்புநீர் சேர்த்த பின் மற்றொரு முகவையில் எண்ணெய் சேமிக்கப்படுகிறது.
(ii) ஆவியாக்கல் மற்றும் படிகமாக்கல்:
இம்முறையானது கரைபொருளை கரைசலிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படுகிறது. உப்புக் கரைசலை வெப்பப்படுத்தும் போது நீரானது ஆவியாகி உப்பு (திடப்பொருள்) கீழே படிகமாக தங்கி விடுகிறது. இவ்வாறு எளிய உப்பு, எண்ணெய் மற்றும் நீர் ஆகியவை கலந்த கலவை பிரிபுனல் முறை, ஆவியாக்கல் மற்றும் படிகமாக்கல் முறையில் பிரித்தெடுக்கப்படுகிறது.
58.
அ) ஒளியுறு வளைதல்
ஆ) தாவரம் A- டான்டிலியான் (டாராக்சம் அஃபிசினேல்)
தாவரம் B- ஐபோமியா ஆல்பா (நிலவு மலர்)
இ) நடுக்க முறு வளைதல் (அல்லது) தொடுவுறு வளைதல்
ஈ) டையோனியா மிஃசிபுலா
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards