9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 9th Standard Science Tamil Medium Important Questions 2019-2020 )
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
கால்சியம் மற்றும் ஆர்கான் _________.
ஐசோடோப்பு
ஐசோபார்
ஐசோடோன்
2.
அணுவில் எலக்ட்ரான்கள் இருக்குமிடம் _________.
ஆர்பிட்
உட்கரு
புரோட்டான்
3.
உட்கருவை கண்டறிந்தவர் _________.
ரூதர்போர்டு
J.J. தாம்சன்
ஹென்றி பெக்கோரல்
4.
ஒரு பொருளின் சம காலத்தில் சமமற்ற தொலைவுகளை கடக்குமானால் அது _____ இயக்கம்.
சீரான இயக்கம்
சிரற்ற இயக்கம்
வட்ட இயக்கம்
5.
சரியான அறிக்கையை தேர்வு செய்க.
வினை மற்றம் எதிர்வினை விசைகள் ஒரே பொருளின் மீது செயல்படும்.
வினை மற்றம் எதிர்வினை விசைகள் வெவ்வேறு பொருட்கள் மீது செயல்படும்.
(a) மற்றும் (b) இரண்டில் ஒன்று மட்டும் சரி
6.
முடுக்கத்தின் அலகு
மீ / விநாடி
மீ / விநாடி2
மீவி
மீவி2
7.
கூழும் கரைசல் ஒரு ___________ கலவை
ஒருபடித்தான
பலபடித்தான
சேர்மம்
8.
நீர் மற்றும் உப்பு ஒரு ________ கலவை.
ஒருபடித்தான
பலபடித்தான
சேர்மம்
9.
சோடியத்தின் கொதிநிலை மதிப்பு _________.
290o C
890o C
2900o C
10.
ஒரு வானியல் அலகு என்பது
1.496 x 1011 மீ
9.46 x 1015 மீ
1.496 x 10-11 மீ
11.
மாற்றுக : 1040 F = _________ 0 C
2730 C
1040 C
400 C
12.
மாற்றுக : 300K = _________ 0 C
230 C
2730 C
270 C
13.
முழு அக எதிரொலிப்பு நிகழ ஒளியானது_____லிருந்து _____க்கு செல்லவேண்டும்
அடர்மிகு;அடர்குறை
அடர்குறை:அடர்குறை
அடர்மிகு;அடர்மிகு
14.
குவி ஆடிக்கு u மற்றும் v ன் மதிப்பு எப்போதும்_______
எதிர்குறி
நேர்குறி
சுழி
15.
ஆடி மையத்திற்கும் குவியத்திற்கும் இடையே உள்ள தூரம்______
குவிய தூரம்
குவியம்
வளைவு ஆரம்
16.
ஒரு தாவரம் இருட்டறையில் 24 மணிநேரம் வைக்கப்படுவது எந்த ஒரு ஒளிச்சேர்கை சோதனை செய்வதற்காக? _____.
இலைகளில் பச்சையத்தை நீக்க
இலைகளில் உள்ள ஸ்டார்ச்சை நீக்க
ஒளிச்சேர்க்கை நிகழ்ந்துள்ளது என்பதை உறுதி செய்ய
நீராவிபோக்கை நிரூபிக்க
17.
\(_{ 35 }^{ 80 }{ Br }\) உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எ்லக்ரான்களின் எண்ணிக்கை
80, 80, 35
35, 55,80
35, 35, 80
35, 45, 35
18.
தவறான ஒன்றைக் கண்டுபிடி
8O18, 17cl37
18Ar40,7N14
14Si30, 15pd31
20ca40, 19K39
19.
டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது______
குழியாடி
குவியாடி
சமதளஆடி
20.
இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது
சமதள ஆடி
குழியாடி
குவியாடி
21.
மையவிலக்கு விசை ஒரு
உண்மையான விசை
மையநோக்கு விசைக்கு எதிரான விசை
மெய்நிகர் விசை
வட்டப் பாதையின் மையத்தை நோக்கி இயங்கும் விசை
22.
கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல?
சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்
வட்டப் பாதையில் சுற்றி வரும் பொம்மை ரயிலின் இயக்கம்.
வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து
கடிகாரத்தில் மணி முள்ளின் இயக்கம்
23.
நீராவிப்போக்கு பின்வரும் எந்த வாக்கியத்தின் அடிப்படையில் சிறந்தது என வரையறுக்கப்படுகின்றது.
தாவரங்கள் மூலம் நீர் இழப்பு.
தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள பாகத்திலிருந்து நீர் ஆவியாதல்
தாவரத்தின் தரைக்கு கீழ் உள்ள பாகத்திலிருந்து நீர் நீராவியாக இழக்கப்படுதல்
தாவரத்தின் நீர்வளிமண்டலத்திற்கு வெளியேறுதல்
24.
ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள்_________.
ஒளி சார்பசைவு
புவி சார்பசைவு
தொடு சார்பசைவு
வேதிசார்பசைவு
25.
__________ மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளது.
தூய பொருள்
கலவை
கூழ்மம்
தொங்கல்
26.
பின்வருவனவற்றுள் ______ ஒரு கலவை.
சாதாரண உப்பு
தூய வெள்ளி
கார்பன் டை ஆக்ஸைடு
சாறு
27.
சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தொலைவை எந்த அலகில் கணக்கிட முடியும்?
கிலோ மீட்டர்
மீட்டர்
சென்டி மீட்டர்
மில்லி மீட்டர்
28.
ஒரு மெட்ரிக் டன் என்பது _______.
100 குவின்டால்
10 குவின்டால்
1/10 குவின்டால்
1/100 குவின்டால்
29.
முடுக்கம் - வரையறு.
30.
தடையின்றி தானே கீழே விழும் பொருளுக்கான இயக்கச் சமன்பாடுகள் யாவை?
31.
டிண்டால் விளைவு உண்மைக் கரைசலில் உண்டாவது இல்லை. ஏன்?
32.
புவியில் ஒரு மனிதன் நிறை 50kg எனில் அவரது எடை எவ்வளவு?
33.
"இழை ஒளியியல்" உருவாகக் காரணமானவர் யார்?
34.
விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன?
35.
விண்ணியல் ஆரம் என்றால் என்ன?
36.
குழியாடி ஒன்றின் குவியத்தில் பொருள் வைக்கப்படும்போது பிம்பம் எங்கே உருவாகும்?
37.
நேரான பெரிதாக்கப்பட்ட பிம்பம் மற்றும் அதே அளவுள்ள தலைகீழான பிம்பம், இவற்றைத் தரக்கூடிய ஆடி (கள்) எது/எவை ?
38.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

39.
அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
கால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்
40.
பின்வரும் வாக்கியத்தைக் கொண்டு, தாவரப் பாகத்தின் பெயரிடவும்.
அ) புவிஈர்ப்பு விசையின் திசையை நோக்கியும் ஆனால் ஒளி இருக்கும் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
ஆ) ஒளி இருக்கும் திசையை நோக்கியும், புவிஈர்ப்பு விசையின் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது.
41.
இலைகளில் உடல் அசைவுகளை உருவாக்கும் தாவரங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
42.
கீழ்க்கண்ட கலவைகளின் கூறுகளைப் பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனங்களைப் பெயரிடு.
i) ஒன்றாக கலக்கும் திரவங்கள்
ii) ஒன்றாக கலவாதத் திரவங்கள்
43.
பருப்பொருளின் எந்த நிலை மிக அதிகமான இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளது
44.
2மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகோலால் உன்னால் கண்டறிய முடியுமா?
45.
ஒளிவிலகல் விதிகளைக் கூறு.
46.
அ) படத்தில் கொடுக்கப்பட்டுள்ள குழியாடியின் பொருளின் பிம்பம் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என வரைந்து காட்டுக.
ஆ) பிம்பத்தின் தன்மை எவ்வாறு இருக்கும்
47.
பின்வரும் படங்களைப் பார்த்து அட்டவணையை நிரப்பவும் தூண்டல் ஏற்படும் பகுதியை நோக்கி வளைந்தால் (+) என்ற குறியீடும், தூண்டல் ஏற்படும் பகுதியை விட்டு விலகினால் (-) என்ற குறியீடும் கொடுக்கவும்.
| தூண்டல் | ஒளி | புவிஈர்ப்பு |
|---|---|---|
| தண்டு | + | - |
| வேர் | ? | + |

48.
ஐசோடோன் என்றால் என்ன? உதாரணம் கொடு.
49.
எதிர்மறை முடுக்கம் குறித்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்?
50.
22 காரட் தங்கத்திலான ஒரு பதக்கத்தினை நீ வென்றிருக்கிறாய்.அதன் தூய்மையை எவ்வாறு கண்டறிவாய்?
51.
SI அலகுகளை எழுதும்போது கவனிக்க வேண்டிய விதி முறைகள் யாவை ?
52.
போரின் அணு மாதிரியின் கூற்றுக்களைப் பற்றி விளக்குக.
53.
கீழ்வரும் அட்டவணையிலிருந்து கிடைக்கும் வரைபடத்தைச் சரிபார்க்கவும்.
| நேரம் (விநாடி) | 0 | 2 | 4 | 6 | 8 | 10 | 12 |
| திசைவேகம் (மீ/விநாடி) | 0 | 20 | 40 | 40 | 40 | 20 | 0 |
54.
தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.
55.
குழி ஆடியின் குவியத்தொலைவு 5 cm எனில் அதன் வளைவு ஆரத்தின் மதிப்பு?
56.
ஐந்து ரூபாய் நாணயத்தினை திருகு அளவியால் அளக்கும் பொழுது அதன் புரிகோல் அளவு 1.மி.மீ அதன் தலைக்கோல் ஒன்றிப்பு 68 எனில், அதன் தடிமனைக் காண்க.
57.
உயிரினம் Aயினால் ஓர் இடம் விட்டு ஓரிடம் நகரமுடியாது. சுற்றுச்சூழலில் கிடைக்கும், C மற்றும் D யினைக் கொண்டு B என்ற எளிமையான உணவு உருவாக்குகிறது. இந்த உணவு G என்ற நிகழ்வினால் சூரிய ஒளியின் முன்னிலையில் F உறுப்புகளில் காணப்படும். E என்ற பச்சை நிறமுள்ளப் பொருளின் முன்னிலையில் உருவாக்கப்படுகின்றது. சில B எளிய உணவு சேமிப்பு நோக்கத்திற்காக கடினமான H-ஆக மாற்றப்படுகிறது, H அயோடின் கரைசல் உடன் சேர்த்தால் கருநீல நிறமாக மாறுகிறது.
அ) i) A உயிரினம் (ii) உணவு B மற்றும் உணவு H ஆகியன யாவை?
ஆ) C மற்றும் D ஆகியன யாவை?
இ) பெயரிடு: பச்சைநிறமுள்ள E மற்றும் உறுப்பு F
ஈ) நிகழ்வு G ன் பெயர் என்ன?
1.
(b)
ஐசோபார்
2.
(a)
ஆர்பிட்
3.
(a)
ரூதர்போர்டு
4.
(b)
சிரற்ற இயக்கம்
5.
(a)
வினை மற்றம் எதிர்வினை விசைகள் ஒரே பொருளின் மீது செயல்படும்.
6.
(b)
மீ / விநாடி2
7.
(b)
பலபடித்தான
8.
(a)
ஒருபடித்தான
9.
(b)
890o C
10.
(a)
1.496 x 1011 மீ
11.
(c)
400 C
12.
(c)
270 C
13.
(a)
அடர்மிகு;அடர்குறை
14.
(a)
எதிர்குறி
15.
(a)
குவிய தூரம்
16.
(b)
இலைகளில் உள்ள ஸ்டார்ச்சை நீக்க
17.
(d)
35, 45, 35
18.
(c)
14Si30, 15pd31
19.
(a)
குழியாடி
20.
(c)
குவியாடி
21.
(b)
மையநோக்கு விசைக்கு எதிரான விசை
22.
(c)
வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து
23.
(b)
தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள பாகத்திலிருந்து நீர் ஆவியாதல்
24.
(c)
தொடு சார்பசைவு
25.
(a)
தூய பொருள்
26.
(d)
சாறு
27.
(a)
கிலோ மீட்டர்
28.
(b)
10 குவின்டால்
29.
(i) முடுக்கம் என்பது திசைவேக மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் ஏற்படும் திசைவேக மாறுபாடு எனலாம். இது ஒரு வெக்டார் அளவு ஆகும். இதன் SI அலகு மீ/வி2.
(ii) முடுக்கம் = திசைவேக மாற்றம் / எடுத்துக் கொண்ட காலம்
30.
V = gt
S = 1/2 gt2
V2 = 2gh
31.
உண்மைக் கரைசலில் உள்ள துகள்கள் ஒளி ஆற்றலை உறிஞ்சி சுயமாக ஒளிர்வதற்கு ஏற்புடையவையாக இருப்பதில்லை. ஏனெனில் அவை மிகச் சிறியதாக உள்ளன. எனவே உண்மைக் கரைசலில் டிண்டால் விளைவு ஏற்படுவது இல்லை.
32.
W = mg
= 50 \(\times\) 9.8
= 490 நியூட்டன்
33.
இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளர் நரிந்தர் கபானி இழை ஒளியியல் உருவாகக் காரணமானவர்.
34.
விண்மீன்களில் இருந்து வரும் ஒளி வளிமண்டலத்தின் மாறிக்கொண்டேயுள்ள அடர்த்தினாலும், வெப்பநிலையினாலும் ஒளி விலகளுக்கு உட்படுகிறது.வளி மண்டலம் நிலையாக இல்லாது சுழற்சி தன்மை கொண்டதாக உள்ளது. எனவே வரும் ஒளி ஒரு புள்ளியிலிருந்து வருவதுபோல் தெரியாமல் வெவ்வேறு புள்ளிகளில் இருந்து வருவது போல் தெரிகிறது.எனவே விண்மீன்கள் மின்னுவதுபோல் தோன்றுகின்றன.
35.
(i) விண்ணியல் ஆரம் என்பது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருட்களின் தூரத்தை அளவிட பயன்படுகிறது.
(ii) ஒரு விண்ணியல் ஆரம் = 3.26 ஒளி ஆண்டு.
36.
கருத்தியல் படி பிம்பம் ஈரிலாத் தொலைவில் உருவாகும்.
37.
குழியாடி
38.

39.
ஹீலியம் - 2
போரான் - 5
ஆக்சிஜன் - 8
ஃபளுரின் - 9
நியான் - 10
சோடியம் - 11
மெக்னீசியம் - 12
சிலிக்கன் - 14
சல்ஃபர் - 16
கால்சியம் - 20
40.
அ) புவிஈர்ப்பு விசையின் திசையை நோக்கியும் ஆனால் ஒளி இருக்கும் திசைக்கு எதிராகவும் இது வளைகிறது. - வேர்கள்
ஆ) ஒளி இருக்கும் திசையை நோக்கியும், ஆனால் புவிஈர்ப்பு விசையின் திசைக்கு எதிராகவும் இது, வளைகிறது. - தண்டு
41.
டெஸ்மோடியம் கைரன்ஸ்
42.
| வ.எண் | கலவை | பிரித்தெடுக்கப் பயன்படும் சாதனம் |
| 1. | ஒன்றாகக் கலக்கும் திரவங்கள் | பின்னக் காய்ச்சி வடிக்கும் சாதனம் |
| 2. | ஒன்றாக கலவாதத் திரவங்கள் | பிரிபுனல் |
43.
பருப்பொருளின் வாயுக்கள் நிலை அதிக இயக்க ஆற்றலைக் கொண்டுள்ளன.
44.
முடியாது. மெல்லிய கம்பியின் விட்டத்தினை கருவிப்பெட்டியிலிருக்கும் அளவுகோலால் அளவிட முடியாது.
45.
i) படுகதிர், விலகுகதிர், படு புள்ளியில் இரு ஒளி புகும் ஊடகங்களுக்கு இடையில் தளத்திற்கு வரையப்பட்ட குத்துக்கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன.
ii) படுகோணத்தில் சைன் மதிப்பிற்கும் விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவு ஒரு மாறிலி.
46.
ஆ) பிம்பத்தின் தன்மை: பொருளை விட பெரியது. தலைகீழான, மெய் பிம்பம் கிடைக்கும்.
47.
| தூண்டல் | ஒளி | புவிஈர்ப்பு |
|---|---|---|
| தண்டு | + | - |
| வேர் | - | + |
48.
ஐசோடோன் ஒரே எண்ணிக்கையிலான நியூட்ரான்களையும் மாறுபட்ட அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
எ.கா. போரான் மற்றும் கார்பன் ஒத்த எண்ணிக்கையில் நியூட்ரான்களைப் பெற்றுள்ளன. புரோட்டான்களின் எண்ணிக்கை வேறுபடுவதால் அவற்றின் அணு எண்களும் வேறுபடுகின்றன.
எ.கா: போரான் & கார்பன்
49.
அதாவது இறுதித் திசைவேகம் தொடக்கத் திசை வேகத்தை விடக் குறைவாக இருந்தால், திசை வேகமானது நேரம் செல்லச் செல்ல குறையும் மற்றும் முடுக்கம் எதிர் மதிப்பு பெறும். இது எதிர் முடுக்கம் எனப்படும்.
50.
தங்கத்தின் தூய்மையை காரட் என்ற அலகின் மூலம் கண்டறியலாம். 22 காரட் தங்கப் பதக்கம் தூய பொருள் அல்ல. 22 காரட் தங்கப்பதக்கத்தில் 22 பங்கு தங்கமும் 2 பங்கு தாமிரமும் உள்ளது. மேலும் பதக்கத்தின் மேல் 916 என்ற முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். இதன் மூலமும் நாம் கண்டறியலாம்.
51.
i) அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் அலகுகளை எழுதும் போது முதல் எழுத்து பெரிய எழுத்தாக (capital letter) இருக்கக்கூடாது.
எ. கா: newton, henry, ampere and watt
ii) அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் அலகுகளின் குறியீடுகளை எழுதும்போது பெரிய எழுத்தால் எழுத வேண்டும்.
எ.கா: newton என்பது N, henry என்பது H
iii) குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை சிறிய எழுத்தால் எழுத வேண்டும்.
எ.கா: Metre என்பது m, kilogram என்பது kg.
iv) அலகுகுளின் குறியீடுகளுக்கு இறுதியிலோ அல்லது இடையிலே நிறுத்தல் குறிகள் போன்ற எந்த குறிகளும் இடக்கூடாது.
எ.கா: 50 m என்பதை 50 m. என்றோ 50 Nm என்பதை 50 N.m என்றோ குறிப்பிடக்கூடாது.
v) அலகுகளின் குறியீடுகளை பன்மையில் எழுதக் கூடாது.
எ.கா: 10 Kg என்பதை 10 Kgs என எழுதக்கூடாது.
52.
போரின் அணு மாதிரி:
i) ஓர் அணுவில் எலக்ட்ரான்கள் நிலையான வட்டப் பாதையில் அணுக்கருவை சுற்றி வருகின்றன. இவ்வட்டப்பாதைகள் ஆர்பிட்டுகள் அல்லது ஆற்றல் மட்டங்கள் எனப்படுகின்றன.
ii) ஒரே வட்டப் பாதையில் எலக்ட்ரான்கள் சுற்றி வருகையில் ஆற்றலை இழப்பதோ அல்லது ஏற்பதோ இல்லை.
iii) வட்டப் பாதைகள் 1, 2, 3, 4 அல்லது K, L, M, N,....என பெயரிடப்படுகின்றன. இந்த எண்கள் முதன்மை குவாண்டம் எண்கள் (n) எனப்படும்.
iv) உட்கருவிற்கு அருகாமையில் இருக்கும் K கூடு (n = 1) குறைந்த ஆற்றலை உடையது L,M,N,... ஆகியன அடுத்தடுத்த உயர் ஆற்றல் மட்டங்கள் ஆகும். உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்டின் ஆற்றலும் அதிகரிக்கிறது.
v) ஒவ்வொரு ஆர்பிட்டும் நிலையான அளவு ஆற்றலைப் பெற்றுள்ளது.
vi) உட்கருவிலிருந்து தொலைவு அதிகரிக்கும் போது ஆர்பிட்டுகளின் அளவும் அதிகரிக்கும்.
vii) ஒரு ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 2n' ஆகும். இங்கு n என்பது அந்த ஆர்பிட்டின் முதன்மை குவாண்டம் எண் ஆகும்.
viii) எலக்ட்ரான் ஆற்றலை உறிஞ்சும் போது குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து உயர் ஆற்றல் மட்டத்திற்கு தாவுகிறது.
ix) உயர் ஆற்றல் மட்டத்தில் இருந்து குறைந்த ஆற்றல் மட்டத்திற்கு எலக்ட்ரான் இடம் பெயரும் போது ஆற்றலை வெளியிடுகிறது.
53.
(i) 0-4 வினாடியில் துகள் முடுக்கமடைந்து உள்ளது.எனவே வரைபடம் கோடு ஏறும் விதமாக அமையும்.
(ii) 4-8 வினாடியில் திசைவேகம் மாற்றமடையவில்லை. எனவே கிடைமட்டமாக கோடு அமையும்.
(ii) 8-12 வினாடியில் முடுக்கம் குறைகிறது. எனவே வரைபடக்கோடு இறங்கு விதத்தில் அமையும்.

54.
| வ.எண் | தனிமம் | சேர்மம் |
|---|---|---|
| 1. | ஒரே வகையான அணுக்களைக் கொண்டது | ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களால் ஆனது. |
| 2. | இது ஒரு தூய்மையான பொருள் | இது ஒரு தூய்மையான பொருள் அல்ல. |
| 3. | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியாது | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியும் |
| 4. | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை பெற்றுள்ளது | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைப் பெற்றுள்ளது |
| 5. | உதாரணம்: ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் | உதாரணம்: நீர், கரும்புச் சர்க்கரை. |
55.
R = 2f
= 2\(\times \)5 cm
R = 10 cm
56.
புரிக்கோல் அளவு = 1மிமீ
தலைக்கோல் ஒன்றிப்பு = 68
5 ரூபாய் நாணயத்தின் தடிமன் = PSR + (HSC \(\times\) L.C)
= 1 + (68 \(\times\) 0.01)
= 1 + 0.68)
5 ரூபாய் நாணயத்தின் தடிமன் = 1.68 மி.மீ
57.
அ) i) A உயிரினம் தாவரங்கள்
ii) உணவு B -குளுக்கோஸ்
உணவு H -ஸ்டார்ச்
ஆ) C - கார்பன் டை ஆக்சைடு
D - நீர்
இ) E - பச்சையம்
F - இலைகள்
ஈ) G - ஒளிச்சேர்க்கை.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards