9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 9th Standard Science Tamil Medium Model Questions Full Chapter 2020 )
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.
ஐசோடோன்
ஐசோடோப்பு
ஐசோபார்
2.
நியூட்ரானைக் கண்டறிந்தவர் _________.
ஜேம்ஸ் சாட்விக்
ரூதர்போர்டு
J.J. தாம்சன்
3.
உட்கருவை கண்டறிந்தவர் _________.
ரூதர்போர்டு
J.J. தாம்சன்
ஹென்றி பெக்கோரல்
4.
சரியான அறிக்கையை தேர்வு செய்க.
வினை மற்றம் எதிர்வினை விசைகள் ஒரே பொருளின் மீது செயல்படும்.
வினை மற்றம் எதிர்வினை விசைகள் வெவ்வேறு பொருட்கள் மீது செயல்படும்.
(a) மற்றும் (b) இரண்டில் ஒன்று மட்டும் சரி
5.
சீரான வட்ட இயக்கத்தோடு தொடர்புடைய விசை ______.
f = mv2/r
f = mvr
f = mr2/v
f = v2/r
6.
திசைவேகம் - காலம் வரைப்பத்தில் உள்ள பரப்பளவு குறிப்பது
இயங்கும் பொருளின் திசைவேகம்
இயங்கும் பொருள் கடந்த இடப்பெயர்ச்சி
இயங்கும் பொருளின் வேகம்
மேற்குறிப்பிட்ட எதுவும் இல்லை
7.
பற்பசை ஒரு ____________
கூழ்களிமம்
கூழ்மம்
கரைசல்
8.
ஆக்ஸிஜனின் உருகுநிலை மதிப்பு ________.
-219o C
98o C
100o C
9.
__________ எளிதில் அழுத்தக்கூடியது.
திண்மம்
திரவம்
வாயு
10.
ஒரு வானியல் அலகு என்பது
1.496 x 1011 மீ
9.46 x 1015 மீ
1.496 x 10-11 மீ
11.
ஒரு கருவியினால் அளவிடக் கூடிய மிகச்சிறிய அளவு ________ எனப்படும்.
மீச்சிற்றளவு
முதன்மை கோல் அளவு
வெர்னியர் அளவு
12.
மைக்ரோ என்ற முன்னொட்டு எந்த காரணியை குறிக்கிறது?
10-6
10-3
10-9
13.
_______பிம்பத்திற்கும் உருப்பெருக்கத்தின் மதிப்பு நேர்குரியாக இருக்கும்
மெய்பிம்பம்
மாயபிம்பம்
தலைகீழ் பிம்பம்
14.
ஆடி மையத்திற்கும் குவியத்திற்கும் இடையே உள்ள தூரம்______
குவிய தூரம்
குவியம்
வளைவு ஆரம்
15.
குவியாடிகள் எப்போதும்______பிம்பத்தையே உருவாக்குகின்றன.
மெய்
மாய
தலைகீழ்
16.
நீராவிப்போக்கு ______ ல் நடைபெறும்
பழம்
விதை
மலர்
இலைத்துளை
17.
____________ தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.
வேர்
தண்டு
கிளைகள்
இலைகள்
18.
நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ____________ எனப்படும்
நடுக்கமுறு வளைதல்
ஒளிச்சார்பசைவு
நீர்சார்பசைவு
ஒளியுறு வளைதல்
19.
\(_{ 35 }^{ 80 }{ Br }\) உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எ்லக்ரான்களின் எண்ணிக்கை
80, 80, 35
35, 55,80
35, 35, 80
35, 45, 35
20.
நீயூக்ளியான் குறிப்பது
புரோட்டான் + எலக்ட்ரான்
நியூட்ரான் மட்டும்
எலக்ட்ரான் + நியூட்ரான்
புரோட்டான் + நியூட்ரான்
21.
பெரிதான ,மாய பிம்பங்களை உருவாக்குவது______
குழியாடி
குவியாடி
சமதளஆடி
22.
ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊ்டகத்திற்குச் செல்லும்போது எந்த படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது?
0o
45o
90o
23.
கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில் ____________ அவசியம்.
பிரிபுனல்
வடிதாள்
மைய விலக்கு இயந்திரம்
சல்லடை
24.
துணி துவைக்கும் இயந்திரத்தில் ஆடையை உலர்த்தப் பயன்படும் விசை
மையநோக்கு விசை
மையவிலக்கு விசை
புவிஈர்ப்பு விசை
நிலை மின்னியல் விசை
25.
முடுக்கத்தின் அலகு
மீ / விநாடி
மீ / விநாடி2
மீ விநாடி
மீ விநாடி2
26.
__________ மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளது.
தூய பொருள்
கலவை
கூழ்மம்
தொங்கல்
27.
ஒரு மெட்ரிக் டன் என்பது _______.
100 குவின்டால்
10 குவின்டால்
1/10 குவின்டால்
1/100 குவின்டால்
28.
சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
கி.மீ < மீ < செ.மீ < மி.மீ
மி.மீ > மீ > செ.மீ > கி.மீ
29.
வட்ட இயக்கம் என்றால் என்ன?
30.
தடையின்றி தானே கீழே விழும் பொருளுக்கான இயக்கச் சமன்பாடுகள் யாவை?
31.
ஒரு நியூட்டன் வரையறு.
32.
"இழை ஒளியியல்" உருவாகக் காரணமானவர் யார்?
33.
விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன?
34.
வெற்றி்டத்தில் ஒளியின் வேகம் என்ன?
35.
காற்றை விட அடர்மிகு, ஒளிபுகும் ஊடகங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக
36.
அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
கால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்
37.
முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமத்தை கூறுக.
38.
தாவரத்தின் இலைகளின் அடிப்புறத்தோலின் காணப்படும் சிறிய துளைகளின் பெயர் என்ன?
39.
இலைகளில் உடல் அசைவுகளை உருவாக்கும் தாவரங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
40.
கடல் நீரை உப்பு நீக்குதல் என்றால் என்ன
41.
டெட்டாலின் சிறு துளிகள் நீரில் கலக்கும்போது கலங்கலாக மாறுகிறது. ஏன்?
42.
SI அலகின் விரிவாக்கம் என்ன ?
43.
குழி ஆடியின் குவியத்தொலைவு 5 cm எனில் அதன் வளைவு ஆரத்தின் மதிப்பு?
44.
புரோட்டானின் நிறையை கணக்கிடுக
அதன் மின்சுமை = 1.60\(\times\)10-19c
மின்சுமை / நிறை = 9.55\(\times\)108c kg-1
45.
கீழ்க்காணும் வரைபடம் ஒரு பொருளின் திசைவேகம்-காலம் வரைபடம் ஆகும். எந்த நேர இடைவெளியில் அது முடுக்கப்பட்டது? பகுதி ‘a’ வில் கொடுக்கப்பட்டுள்ள கால இடைவெளியில் அதன் முடுக்கம் என்ன? அதே கால இடைவெளியில் அப்பொருள் கடந்த தூரம் எவ்வளவு?

46.
குழியாடியிலிருந்து 16 செ.மீ தொலைவில் வைக்கப்படும் 2 செ.மீ உயரம் கொண்ட பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செ.மீ உயரம் உள்ளதாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடத்தைக் காண்க.
47.
வாயுக்கள் ஏன் நிலையான கன அளவை பெற்றிருக்கவில்லை?
48.
வானியல் அலகு என்றால் என்ன?
49.
பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சொற்களை எழுதுக
அ) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள்
ஆ) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள்
50.
பெருக்கல் விகித விதியினை வரையறு
51.
ஒரு மோட்டார் சைக்கிள் 20 மீ / விநாடி வேகத்தில்,செல்லும்போது அதன் முடுக்கம் 4 மீ / விநாடி2. அதன் திசைவேகத்தை அது எப்படி விளக்குகிறது எனக் கூறவும்.
52.
சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக இருப்பது எது ? மற்றும் எது தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும்?
53.
பின்வருவனவற்றுள் எவை தூய பொருட்கள்? பனிக்கூழ், பால், இரும்பு, ஹைட்ரோகுளளோரிக் அமிலம், பாதரசம், செங்கல் மற்றும் நீர்.
54.
வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை எவ்வாறு கணக்கிடுவாய்?
55.
அ) கதிர்ப்படங்கள் மூலம் ஒரு குழியாடி பின்வரும் நிலைகளில் எவ்வாறு பிம்பத்தை உருவாக்குகி்றது என வரைந்து காட்டுக.
i) c – இல் ii) c – க்கும் F- க்கும் இடையில் iii) F- க்கும் P-க்கும் இடையில்
ஆ) மேற்கண்ட மூன்று நிலைகளிலும் பிம்பத்தின் நிலை (இடம்), தன்மை ஆகியவற்றைப் படத்தில் குறிப்பிடுக
56.
நீர் சார்பசைவு - நிரூபிக்க ஒரு சோதனையை வடிவமைத்து விளக்கவும்.
57.
கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து அளவீடு தொடர்பான குறைந்தது பத்து வார்த்தைகளைக் கண்டுபிடிக்க

58.
தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.
1.
(b)
ஐசோடோப்பு
2.
(a)
ஜேம்ஸ் சாட்விக்
3.
(a)
ரூதர்போர்டு
4.
(a)
வினை மற்றம் எதிர்வினை விசைகள் ஒரே பொருளின் மீது செயல்படும்.
5.
(a)
f = mv2/r
6.
(b)
இயங்கும் பொருள் கடந்த இடப்பெயர்ச்சி
7.
(a)
கூழ்களிமம்
8.
(a)
-219o C
9.
(c)
வாயு
10.
(a)
1.496 x 1011 மீ
11.
(a)
மீச்சிற்றளவு
12.
(b)
10-3
13.
(b)
மாயபிம்பம்
14.
(a)
குவிய தூரம்
15.
(b)
மாய
16.
(d)
இலைத்துளை
17.
(b)
தண்டு
18.
(c)
நீர்சார்பசைவு
19.
(d)
35, 45, 35
20.
(d)
புரோட்டான் + நியூட்ரான்
21.
(a)
குழியாடி
22.
(a)
0o
23.
(a)
பிரிபுனல்
24.
(b)
மையவிலக்கு விசை
25.
(b)
மீ / விநாடி2
26.
(a)
தூய பொருள்
27.
(b)
10 குவின்டால்
28.
(a)
மி.மீ < செ.மீ < மீ < கி.மீ
29.
ஒரு வட்டத்தின் சுற்றளவின் மீது நடைபெறும் இயக்கம் அல்லது வட்டப்பாதையில் நடைபெறும் இயக்கம்
30.
V = gt
S = 1/2 gt2
V2 = 2gh
31.
இது விசையின் அலகாகும். ஒரு கிலோகிராம் நிறையுடைய ஒரு பொருளை 1 மீ/ வி-2 முடுக்குவதற்கு தேவையான விசையின் அளவே ஒரு நியூட்டன் ஆகும்.
32.
இந்தியாவைச் சேர்ந்த இயற்பியலாளர் நரிந்தர் கபானி இழை ஒளியியல் உருவாகக் காரணமானவர்.
33.
விண்மீன்களில் இருந்து வரும் ஒளி வளிமண்டலத்தின் மாறிக்கொண்டேயுள்ள அடர்த்தினாலும், வெப்பநிலையினாலும் ஒளி விலகளுக்கு உட்படுகிறது.வளி மண்டலம் நிலையாக இல்லாது சுழற்சி தன்மை கொண்டதாக உள்ளது. எனவே வரும் ஒளி ஒரு புள்ளியிலிருந்து வருவதுபோல் தெரியாமல் வெவ்வேறு புள்ளிகளில் இருந்து வருவது போல் தெரிகிறது.எனவே விண்மீன்கள் மின்னுவதுபோல் தோன்றுகின்றன.
34.
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3,00,000 கி.மீ / விநாடி (அ) 3 x 108 மீ/வி
35.
நீர்,கண்ணாடி
36.
ஹீலியம் - 2
போரான் - 5
ஆக்சிஜன் - 8
ஃபளுரின் - 9
நியான் - 10
சோடியம் - 11
மெக்னீசியம் - 12
சிலிக்கன் - 14
சல்ஃபர் - 16
கால்சியம் - 20
37.
பெரிலியம்
அணு எண் = 4
K - ஆர்பிட் - 2 எலக்ட்ரான்கள்
L - ஆர்பிட் - 2 எலக்ரான்கள்
38.
இலைத்துளை
39.
டெஸ்மோடியம் கைரன்ஸ்
40.
கடல் நீரிலிருந்து உப்பு மற்றும் பிற தாதுக்களை பிரித்தெடுத்தல்.
41.
டெட்டாலின் சிறுதுளிகள் நீரில் விரவுதல் முறையில் கலக்கிறது. எனவே கலவை கலங்கலாக இருக்கிறது.
42.
SI அலகின் விரிவாக்கம்: (International System of Units) அதாவது பன்னாட்டு அலகு முறை ஆகும்.
43.
R = 2f
= 2\(\times \)5 cm
R = 10 cm
44.

= \(\frac {1.60\times 10^ {-19}}{9.58\times 10^ 7C }\frac {C }{kg ^ {-1}}\)
புரோட்டானின் நிறை = 1.6726 x 10-27 kg.
45.
0-4 விநாடிகளில் பொருள் முடுக்கம் பெற்றுள்ளது.
a பகுதியில் u = 20ms-1 t = 4s

= \(\frac { 30-0 }{ 4 } =7.5m/s\)
தொலைவு (S) = ut + 1/2 at2
(S) = (0) (2) + 1/2 (7 .5) (4)2
= 7.5 \(\times\) 16/2
S = 60 m
பொருள் கடந்த தூரம் முக்கோணத்தின் பரப்பளவு = 1/2 x 4 x 30 = 60 மீ
46.
பொருளின் உயரம் h1= 2 செ.மீ
பிம்பத்தின் உயரம் h2= -3 செ.மீ
உருப்பெருககம் m = \(\frac { { h }_{ 2 } }{ { h }_{ 1 } } \)
= \(\frac { -3 }{ 2 } \)
= -1.5
அனால், m = \(\frac { -v }{ u } \)
இங்கு பொருளின் தொலைவு u = - 16 செ.மீ
மதிப்புகளைப் பிரதியிட,
-1.5 = - \(\frac { v }{ (-16) } \)
-1.5 = \(\frac { v }{ 16 } \)
எனவே ,v= 16 \(\times\) -1.5 = -24 செ.மீ
பிம்பம் ஆடிக்கு இ்டது பக்கத்தில் 24 செ.மீ தொலைவில் இருக்கும். ( எதிர்க்குறி, பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் உள்ளது என்பதைக் குறிக்கி்றது).
47.
i) வாயுக்களில் உள்ள துகள்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமின்றி இருப்பதால் அவைகளுக்கிடையே அதிக இடைவெளி உள்ளது.
ii) ஆகவே அவைகள் ஒன்றுக்கொன்று நெருக்கப்படலாம் அல்லது எளிதில் அழுத்தப்படலாம். எனவே நிலையான கனஅளவைப் பெற்றிருக்கவில்லை.
48.
(i) வானியல் அலகு என்பது புவி மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரி தொலைவு ஆகும்.
(ii) ஒரு வானியல் அலகு 1AU = 1.496 \(\times\)1011 மீ.
49.
அ) திசை சார்ப்பசைவு
ஆ) திசை சாரா தூண்டல் அசைவுகள்
50.
A மற்றும் B என்ற இரு தனிமங்கள் ஒன்றாக சேர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட சேர்மங்களை உருவாக்கும்போது A ன் நிறையானது B ன் நிறையோடு எளிய விகிதத்தில் சேர்ந்திருக்கும்.
51.
முடுக்கம் நேர்குறி மதிப்பாக உள்ளது. எனவே அது அதிகரிக்கிறது. முடுக்கம் எப்போதும் திசைவேகத்திற்கு நேர்த்தகவவில் அமைந்திருக்கும். எனவே மோட்டார் சைக்கிளின் திசைவேகத்தின் மதிப்பும் அதிகரிக்கிறது.
52.
சீரான வட்ட இயக்கத்தில் வேகம் மாறாததாக இருக்கும். திசைவேகம் திசையை பொறுத்து மாறுபடும்.
53.
தூய பொருட்கள் பனிக்கூழ், இரும்பு, பாதரசம்.
54.
(i) வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு

(ii) வெர்னியர் அளவியில் முதன்மைக் கோல் சென்டிமீட்டரிலும், அதன் பிரிவுகள் மில்லி மீட்டரிலும் குறிக்கப்பட்டிருக்கும். அதனால் முதன்மைக் கோலின் மிகச்சிறிய அளவு ஒரு மில்லி மீட்டர் ஆகும். வெர்னியர் அளவு கோலில் உள்ள மொத்தப் பிரிவுகள் 10 ஆகும்.
(iii) எனவே மீச்சிற்றளவு
= 0.1 மி.மீ. அல்லது .0.01 செ.மீ
55.
i) C ல்:
(ii) C க்கும் F க்கும் இடையில்:
ii) F க்கும் P க்கும் இடையில்:
ஆ).
| பொருள் வைக்கப்படும் இடம் | பிம்பம் கிடைக்கும் | பிம்பத்தின் தன்மை |
| C இல் | C இல் | தலைகீழான மெய்பிம் |
| Cக்கும் F க்கும் இடையில் | Cக்கு அப்பால் | தலைகீழான மெய்பிம் |
| F க்கும் Pக்கும் இடையில் | ஆடிக்குப் பின்னால் | நேரான மாயபிம்பம் |
56.
தேவையான உபகரணங்கள்: கண்ணாடித் தொட்டி, மணல், பூந்தொட்டி, பட்டாணி அல்லது அவரை விதைகள் மற்றும் நீர்.
செய்முறை:
1. கண்ணாடித் தொட்டியில் மணல் நிரப்பிக் கொள்ள வேண்டும். துளையுடன் கூடிய பூந்தொட்டியில் நீர் நிரப்பிக் கொண்டு, கண்ணாடித் தொட்டியின் மையத்தில் வைக்க வேண்டும்.
2. ஊற வைத்த பட்டாணி அவரை விதைகளை மணலில் வைத்துள்ள பூந்தொட்டியைச் சுற்றிலும் இடவேண்டும். 6 அல்லது 7 நாட்களுக்குப்பிறகு உற்று நோக்கி பார்த்தால்.
காண்பது :
முளைவேர் செங்குத்தாகக் கீழ் நோக்கி வளர்வதற்குப் பதிலாகத் தொட்டி மற்றும் ஈரப்பதம் உள்ள பகுதியை நோக்கி வளர்வதைக் காணமுடியும்.
முடிவு:
இச்சோதனையில், முளைவேர் உருவாக்கும் முதல் நிலை வேர் நேர் நீர் சார்பசைவு உடையது என உறுதி ஆகிறது.
மேலும் நீர் சார்பசைவு புவிச்சார்பசைவைக் காட்டிலும் வலிமையானது என்பதை அறியமுடிகிறது.
57.

58.
| வ.எண் | தனிமம் | சேர்மம் |
|---|---|---|
| 1. | ஒரே வகையான அணுக்களைக் கொண்டது | ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களால் ஆனது. |
| 2. | இது ஒரு தூய்மையான பொருள் | இது ஒரு தூய்மையான பொருள் அல்ல. |
| 3. | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியாது | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியும் |
| 4. | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை பெற்றுள்ளது | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைப் பெற்றுள்ளது |
| 5. | உதாரணம்: ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் | உதாரணம்: நீர், கரும்புச் சர்க்கரை. |
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards