9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/12/2018
Term 2 SA Model Question
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
கூற்று : தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும் வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.
காரணம் : அணு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம்
அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது.
2.
கூற்று:எபிதீலியம் மற்றும் இணைப்புத் திசுக்களுக்கு இடையே பொருட்கள் பரிமாற்றம் பரவுதல் மூலம் நடைபெறுகிறது.
காரணம்:எபிதீலிய செல்களில் இரத்த நாளங்கள் இல்லை.
a. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
b. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை
c. கூற்று சரி ஆனால் காரணம் தவறு
d. கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
3.
கருத்து: வெப்பநிலை 100oC எட்டியவுடன் வெப்பநிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது.
காரணம்: நீரின் கொதிநிலை 10oC .
அ. கருத்தும் காரணமும் சரி. கருத்துக்கான காரணம் சரியானது.
ஆ. கருத்தும் காரணமும் சரி. ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
இ. கருத்து சரி. காரணம் தவறு.
ஈ. கருத்து தவறு. காரணம் சரி.
4.
மனிதனின் உணவுப் பாதையை விவரி
5.
நீங்கள் இப்பொழுது தாவர மற்றும் விளங்கு செல்கள் பற்றி அறிந்திருப்பீர்கள்.அவற்றிற்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக
6.
A,B,C,D மற்றும் E யில் உள்ள கரைசல்களை பொது நிறங்காட்டியைக் கொண்டு சோதனை செய்ததில் அதன் PH மதிப்பு முறையே 4,1,11,7 மற்றும் 9 ஆகும்.மேற்கண்ட கரைசல்களில் எந்த கரைசல்,
i.நடுநிலைத் தன்மை உடையது
ii.வலிமை மிகு காரத்தன்மை உடையது
iii.வலிமை மிகு அமிலத் தன்மை உடையது
iv.வலிமை குறைந்த அமிலத் தன்மை உடையது
v.வலிமை குறைந்த காரத் தன்மை உடையது.
7.
பின்வரும் சேர்மங்களில் உள்ள குறிப்பிட்ட தனிமத்தின் ஆக்ஸிஜனேற்ற எண்ணைக் கணக்கிடுக.
அ.CO2 ல் உள்ள C
ஆ.MnSO4 ல் உள்ள Mn
இ. HNO3 ல் உள்ள N
8.
ஒரு AC மின்னியற்றியின் நேர்த்தியான வரைபடம் வரைக.
9.
10 \(\Omega \) மின் தடை கொண்ட கம்பி ஒன்று வட்ட வடிவில் வளைக்கப்படுகிறது. அதன் விட்டத்தின் முனைகளில் அமைந்துள்ள A மற்றும் B ஆகிய இரு புள்ளிகளுக்கு இடையில் காணப்படும் பயனுறு மின்தடையைக் காண்க.
10.
நீரின் நிலை மாற்றங்கள் யாவை? விளக்குக
11.
கீழ்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்க:
| தனிமம் | எலக்ட்ரான்களின் எண்ணிக்கை | துணைக் கூடுகளின் அணு அமைப்பு |
| 7N | 7 | 1s22s22p3 |
| 9F | 9 | 1s2s2p |
| 11Na | ||
| 17Cl | ||
| 18Ar |
12.
கட்டத்தில் விடுபட்ட இடங்களை நிரப்புக:
| செயல்முறை | கட்டம் I | கட்டம் II |
| பதங்கமாதல் | ஆவி | |
| திண்மமாதல் | திடப்பொருள் | |
| திடப்பொருள் | திரவப்பொருள் | |
| உறைதல் | திரவப்பொருள் | |
| குளிர்தல் | திரவப்பொருள் |
13.
ஒரு மின்மாற்றியின் முதன்மை சுருளில் 800 சுற்றுகள் உள்ளன, துனைச் சுருள் 8 சுருள்களை கொண்டுள்ளது. இது ஒரு 220V AC மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வெளியீடு மின்னழுத்தம் என்னவாக இருக்கும்?
14.
காந்தப் புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட நீளமுடைய மின்னோட்டம் பாயும் கடத்தியானது ஒரு வலுவான விசை Fக்கு உட்படுகிறது. மின்னோட்டமானது நான்கு மடங்காகவும், நீளம் பாதியாகவும் மற்றும் காந்தபுலம் மூன்று மடங்காகவும் அதிகரித்தால் விசை எவ்வாறு அமையும்?
15.
கம்பியொன்றின் குறுக்குவெட்டுப் பரப்பை 25 கூலூம் அளவிலான மின்னூட்டம் 50 வினாடி காலத்தில் கடந்து சென்றால் அதனால் விளையும் மின்னோட்டத்தின் அளவு என்ன?
16.
2கிகி நீரின் வெப்பநிலையை 10°C லிருந்து 50°C க்கு அதிகரிக்கத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் எவ்வளவு? (நீரின் தன் வெப்ப ஏற்புத்தி்றன் 4200 JKg-1 K-1)
17.
நெகிழிச்சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது -0.4C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,(அ)எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது? எது எலக்ட்ரானைப் பெற்றது?(ஆ)இந்நிகழ்வில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?
18.
25 கிராம் நீரை 0oC இருந்து 100oC க்கு வெப்பப்படுத்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலை ஜூல் கணக்கிடுக.அதனை கலோரியாக மாற்றுக.(நீரின் தன்வெப்ப ஏற்புத் திறன் = 4.18 j/goC)
19.
மூலையில் உள்ள திசுவின் பெயர் எழுது.
20.
AC மின்னியற்றியின் படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்
21.
காந்தப் பாய அடர்த்தி - வரையறு.
22.
பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி,எவையேனும் மூன்றனை விளக்குக.
23.
ஏன் மியாசிஸ் குன்றல் பகுப்பு என்றும் மற்றும் மைட்டாஸிஸ் சமபிளத்தல் என்றும் அழைக்கப்படுகின்றன?
24.
பாரிஸ் சாந்தின் பயன்களைக் கூறு.
25.
எண்ம விதியை எடுத்துக்காட்டுடன் கூறுக
26.
நவீன தனிம அட்டவணையில் ஏதேனும் ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக
27.
மென்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?
28.
நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?
29.
விடையைக் கண்டுபிடி
1.எலக்ட்ரான் பரிமாற்றத்தால் உருவாகும் பிணைப்பு (8எழுத்துகள்).
2.எலக்ட்ரான் ஏற்பு (5எழுத்துகள்).
3.பிணைப்பில் ஈடுபடாத இரண்டு எலக்ட்ரான்கள் (4எழுத்துகள்).
4.எலக்ட்ரான் நீக்கம் (8எழுத்துகள்)
5. எலக்ட்ரான்கள் பங்கீடு செய்யப்படுவதால் உருவாகும் பிணைப்பு (7எழுத்துகள்)
6.எட்டு எலக்ட்ரான்களைப் பற்றிக் கூறும் விதி(5எழுத்துக்கள்).
| அ | ய | னி | ப் | பி | ப் | பு | ஆ |
| ஃ | ஒ | ந் | எ | ர் | ய் | உ | க் |
| அ | டு | ச | கா | ஹ | ல | ப் | சி |
| ழ் | க் | ஷ் | ச | வி | னா | மீ | ஜ |
| ஜ | க | ள் | ஓ | ஈ | ஏ | ஆ | னே |
| ஹா | ம் | ரெ | த | னி | ணை | ஓ | ற் |
| ஆ | க் | சி | ஜ | னே | ற | ம் | ற |
| ப | இ | டா | ளை | ஞா | ஸ் | ஆ | ஒ |
| ச | க | ப் | பி | ணை | பு | டு | |
| கா | டி | ந | ப் | ந் | ண | தி | க் |
| னீ | மா | எ | ண் | ம | தி | பா | க |
| வி | க்ஷி | ழ் | ய் | இ | லா | பீ | ம் |
30.
கீழ்காண்பனவற்றின் பகுதிகளைக் கண்டறிக
1.இது உணவினை தொண்டையிலிருந்து இரைப்பைக்கு குடல் தசை அசைவு மூலம் கடத்துகிறது
2.சிறுகுடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்தும் விரல் போன்ற நிட்சியுடையது-
3.பெளமானின் கிண்ணத்தினுள் உள்ள நுண்குழாய்களின் கொத்து
4சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் மெல்லிய தசையாலான குழாய்
5.விந்தகத்தைச் சுற்றியுள்ள சிறிய பை போன்ற தசையாலான அமைப்பு.
31.
கீழ்கொடுக்கப்பட்டுள்ள படத்தின் பாகங்களை சரியான விருப்பத் தேர்விலிருந்து எடுத்து பொருத்துக

| 1 | 2 | 3 | 4 | 5 |
| அ. கருப்பை நாளம் | கருக்குழல் | கர்ப்பப்பை | செர்விக்ஸ் | யோனி |
| ஆ.கருங்குழல் | செர்விக்ஸ் | யோனி | அண்டகம் | விந்துக்குழல் |
| இ.அண்டகம் | கருக்குழல் | கர்ப்பப்பை | யோனி | செர்விக்ஸ் |
| ஈகருப்பை நாளம் | அண்டகம் | செர்விக்ஸ் | கர்ப்பப்பை | யோனி |
32.
நரம்பு செல்கள் பெற்றிறாதாது
ஆக்சான்
நரம்பு நுனி
தசை நாண்கள்
டென்ட்ரைட்
33.
pH மதிப்பினை காண தூய நீர் உன்னிடம் கொடுக்கப்படுகிறது. அது காட்டும் நிறம் ________
வெள்ளை
கறுப்பு
பச்சை
34.
ஆக்ஸிஜனேற்றிகள் ____________ கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
எலக்ட்ரான் ஈனி
எலக்ட்ரான் ஏற்பி
35.
சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால்
மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன
மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றன
அ அல்லது ஆ
இரண்டும் அல்ல
36.
மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?
வெப்பக்கதிர்வீச்சு
வெப்பக்கடத்தல்
வெப்பச்சலனம்
b மற்றும் c
37.
மனிதனில் 46 குரோமோசோம்கள் உள்ளன. அவர்களின் விந்து மற்றும் முட்டைகள் ஒவ்வொன்றும் _________ குரோமோசோம்கள் பெற்றிருக்கும்.
38.
உயர் மாறுதிசை மின்னோட்டத்தை குறைந்த மாறுதிசை மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் _________ ஆகும்.
39.
ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் _______ க்கு ஒப்பானது.
40.
பாரன்கைமா ஒரு எளிய திசு
41.
ஒரு மின்னியற்றி இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது.
1.
ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது.
2.
a. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
3.
இ. கருத்து சரி. காரணம் தவறு.
4.

உணவுப் பாதையின் அமைப்பு :
உணவுப் பாதை ஒரு தசையாலான, சுருண்ட மற்றும் குழாய் வடிவ அமைப்பாகும். இவ்வுணவுப் பாதை, வாய், வாய்க்குழி, தொண்டை, உணவுக் குழல், இரைப்பை, சிறுகுடல் (முன் சிறுகுடல், நடுச்சிறுகுடல் மற்றும் பின் சிறுகுடல் உள்ளடங்கியது). பெருங்குடல் (குடல்வால், கோலன் மற்றும் மலக்குடல் உள்ளடங்கியது) மற்றும் மலவாய் போன்ற உறுப்புகளைக் கொண்டுள்ளது.
அ) வாய்
உணவுப் பாதையின் ஆரம்பத் துவாரமாகும். இது வாய்க்குழிக்குள் திறக்கிறது. இது இரு மென்மையான அசையும் மேல் மற்றும் கீழ் உதடுகளால் பிணைக்கப்பட்டுள்ளது. வாய்க்குழியானது பெரிய இடைவெளியோடு மேல் பகுதியில் அண்ணம் (காற்றுக் குழாயையும் உணவுக் குழாயையும் பிரிப்பது) என்ற பகுதியாலும் கீழ்ப்பகுதி தொண்டையாலும் பக்கப்பகுதியானது தாடைகளாலும் பிணைக்கப்பட்டுள்ளது. தாடைகள் பற்களைத் தாங்குகின்றன.
ஆ) பற்கள்
கடினமான கட்டமைப்பைக் கொண்ட பற்கள் உணவைப் பிடித்துக்கொள்வதற்கும், வெட்டுவதற்கும், அரைப்பதற்கும் மற்றும் நசுக்குவதற்கும் உதவுகின்றன. மனிதர்களின் வாழ்நாளில் பற்கள் இரண்டு தொகுப்பாக (இரட்டைப் பல்வரிசை) உருவாகின்றன. முதலில் இருபது தற்காலிக இணைப்பற்கள் அல்லது பால் பற்கள் தோன்றுகின்றன. பின்னர் இப்பற்களுக்குப் பதிலாக இரண்டாம் தொகுப்பில், முப்பத்திரெண்டு நிரந்தர
பற்கள் (கலப்பு பல் வரிசை) மாற்றியமைக்கப்படுகின்றன. இவைகள் ஒரு தாடைக்கு பதினாறு வீதம் இருக்கும். ஒவ்வொரு பல்லும் ஒரு வேரினைக் கொண்டு ஈறுகளில் (திகோடான்ட்) பொருத்தப்பட்டுள்ளது.
| பற்களின் வகைகள் | பற்களின் எண்ணிக்கை | பணிகள் |
| வெட்டுப் பற்கள் | 8 | வெட்டவும் கடிக்கவும் |
| கோரைப் பற்கள் | 4 | கிழிக்கவும் துளையிடவும் |
| முன் கடைவாய்ப் பற்கள் | 8 | நசுக்கவும் அரைக்கவும் |
| பின் கடைவாய்ப் பற்கள் | 12 | நசுக்கவும் அரைக்கவும் மெல்லவும். |
இ) உமிழ்நீர்ச் சுரப்பிகள்:
வாய்க் குழிக்குள் மூன்று இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. அவையாவன மேலண்ணச் சுரப்பி. நாவடிச் சுரப்பி மற்றும் தாடைச் சுரப்பி
i. மேலண்ணச் சுரப்பி
இச்சுரப்பிதான் மிகப்பெரிய சுரப்பியாகும். இவை இரு கன்னங்களிலும், காதுக்குக் கீழே அமைந்துள்ளன
ii. நாவடிச் சுரப்பி
இது மிகச்சிறிய சுரப்பியாகும் நாவின் அடிப்புறத்தில் அமைந்துள்ளது.
iii, கீழ் மற்றும் மேல் தாடைச் சுரப்பிகள்
இவைகள் கீழ்தாடைகளின் கோணங்களில் காணப்படுகின்றன.
நாக்கு:
நாக்கு ஒரு தசையாலான,. உணர்ச்சி உறுப்பு ஆகும். இது உமிழ்நீருடன்
உணவானது கலக்க உதவுகிறது. உணவின் சுவையை உணர்வதற்கு நாவில் உள்ள
சுவை மொட்டுகள் உதவுகின்றன.
தொண்டை:
தொண்டை என்பது, மூக்கு மற்றும் வாய்க்கு பின்னால் காணப்படும் மென்படலத்தால் சூழப்பட்ட குழி போன்ற அமைப்பு ஆகும். இது வாய்ப் பகுதியை உணவுக் குழலுக்கு கடந்து செல்லும் ஒரு பாதையாக பயன்படுகிறது.
உணவுக் குழல்:
இது 22 செமீ நீளமுடைய தசைப்படலக் குழலாகும். இது தொண்டையிலிருந்து உணவினை இரைப்பைக்கு பெரிஸ்டால்சிஸ் என்னும் குடல் தசைச் சுவரின் சீரான சுருங்குதல் மற்றும் தளர்தல் (அலை போன்ற இயக்கம்) போன்ற நிகழ்வால் கடத்துகிறது.
ஈ) இரைப்பை
இரைப்பையானது உணவுக் குழலுக்கும் - சிறுகுடலுக்குமிடையே 'J' போன்ற வடிவத்தில் காணப்படும் தசையாலான அகன்ற உறுப்பாகும். இரைப்பையின் உள்ளடுக்கு சுவரில் காணப்படும் சுரப்பிகளிலிருந்து இரைப்பை நீர் சுரக்கிறது. இந்த இரைப்பை நீர், நிறமற்றதாகவும், அதிக அமிலத் தன்மையுடைய ஹைட்ரோகுளோரிக் அமிலத்தையும், நொதிகளான ரென்னின் (பச்சிளம் குழந்தைகளில்) மற்றும் பெப்சின் ஆகியவற்றை கொண்டதாகவும் உள்ளது.
உ) சிறுகுடல்:
உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான பகுதி சிறுகுடல் ஆகும். இது 5 - 7 மீட்டர் நீளமுள்ள சுருண்ட குழலாகும். இக்குடல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை முன்சிறுகுடல் (டியோடினம்), நடுச்சிறுகுடல் (ஜூஜினம்) மற்றும் பின்சிறுகுடல் (இலியம்) ஆகும்.
i. முன்சிறுகுடல் (டியோடினம்):
சிறுகுடலின் மேல்பகுதியாயிருக்கும் இது 'C' வடிவத்தில் காணப்படுகிறது. பித்த நாளமும் (கல்லீரலிலிருந்து) கணைய நாளமும் (கணையத்திலிருந்து) இணைந்து டியோடினத்தில் திறக்கின்றன.
ii. நடுசிறுகுடல் (ஜூஜினம்):
சிறுகுடலின் நடுப்பகுதி ஜூஜினம் ஆகும். இது சிறுகுடலின் சிறிய பகுதியாகும். சிறுகுடல் சுரக்கும் சுரப்புப் பொருள்கள் சிறுகுடல் நீர் ஆகும். சிறுகுடல்நீரில் சுக்ரோஸ்,மால்டேஸ்,லாக்டேஸ் மற்றும் லிப்பேஸ் போன்ற நொதிகள் காணப்படுகின்றன.
iii. பின்சிறுகுடல் (இலியம்):
சிறுகுடலின் அடிப்பகுதியாக இருக்கும் இப்பகுதி பெருங்குடலில் திறக்கிறது. இலியம் சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும். இவையாகும் இவைகளில் மிகச்சிறிய விரல் போன்ற நீட்சிகள் காணப்படுகின்றன.
ஊ) கல்லீரல்
உடலில் காணப்படும் மிகப் பெரிய செரிமானச் சுரப்பி கல்லீரல் ஆகும். இது வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வலது கதுப்பானது. இடது கதுப்பைவிட பெரிதானதாகும். கல்லீரல் செல்கள் பித்தநீரைச் சுரக்கிறது. அது தற்காலிகமாக பித்தப்பையில் சேகரிக்கப்படுகிறது.
எ) கணையம்
இது பிளவுபட்ட இலை போன்ற அமைப்புடைய சுரப்பியாகும். இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் (முன் சிறுகுடல்) இடையே அமைந்துள்ளது. கணையமானது நாளமுள்ள சுரப்பியாகவும் நாளமில்லா சுரப்பியாவும் செயலாற்றுகிறது.நாளமுள்ள சுரப்பியின் பகுதியாகயிருக்கின்ற கணையத்தின் சுரப்புப்பகுதி கணைய நீரைச் சுரக்கிறது அவற்றில் மூன்று நொதிகள் காணப்படுகின்றன. அவையாவன லிப்பேஸ், டிரிப்சின் மற்றும் அமைலேஸ். இவைகள், முறையே கொழுப்பு. புரதம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றில்செயலாற்றுகின்றன. இதன் மேற்புறத்தில் லாங்கர்கான் திட்டுகள் காணப்படுகின்றன. இந்த லாங்கர்கான் திட்டுகள் நாளமில்லா செல்களைக் கொண்டுள்ளது மற்றும் ஹார்மோன்களையும் சுரக்கின்றன. இதிலுள்ள ஆல்பா செல்கள் குளுக்கோகான் என்ற ஹார்மோனையும், பீட்டா செல்கள் இன்சுலின் ஹார்மோனையும் சுரக்கின்றன.
5.
| தாவர செல்கள் | விலங்கு செல்கள் |
| 1. தாவர செல்கள் தற்சார்பு கொண்டவை. தங்களுக்குத் தேவையான உணவை தாங்களே தயாரிக்கக் கூடியவை |
விலங்கு செல்களால் உணவை தயாரிக்க முடியாது. இவை பிற உயிரினங்களை சார்ந்துள்ளன. |
| 2) தாவர திசுக்களில் ஆக்குத் திசுக்களும் நிலைத்த திசுக்களும் உண்டு. |
விலங்குத் திசுக்கள் எப்பிதீலியத் திசு, இணைப்புத் திசு, தசைத்திசு, நரம்பு திசு என நான்கு வகைப்படும். |
| 3) தாவர செல்களில் இறந்த செல்கள் அதிகம் உண்டு. |
விலங்கு செல்களில் உயிருள்ள செல்கள் அதிகம் உண்டு |
| 4) தாவரத் திசுக்கள் எளியவை | விலங்குத் திசுக்கள் சிக்கலான அமைப்பு கொண்டவை. |
| 5) தாவர செல்களின் வளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். |
விலங்கு செல்கள் முதிர்ச்சி அடைந்தாலும் வளர்ச்சி நின்றுவிடும். |
6.
i.நடுநிலைத் தன்மை உடையது - D (pH = 7)
ii.வலிமை மிகு காரத்தன்மை உடையது - C (pH = 11)
iii.வலிமை மிகு அமிலத் தன்மை உடையது - B (pH = 1)
iv.வலிமை குறைந்த அமிலத் தன்மை உடையது - A (pH = 4)
v.வலிமை குறைந்த காரத் தன்மை உடையது. - E (pH = 9)
7.
O வின் ஆக்சிஜனேற்ற எண் = -2
C யின் ஆக்சிஜனேற்ற எண் = x என்க.
எனவே CO2 ல்
(x) + 2 \(\times\) (-2) = 0|
x+ (-4) = 0
x = +4
எனவே கார்பனின் ஆக்சிஜனேற்ற எண் = +4.
ஆ) Mnso4 ல் உள்ள Mn
S ன் ஆக்ஸிஜனேற்ற எண் = +6
O ன் ஆக்ஸிஜனேற்ற எண் = -2
Mn ன் ஆக்ஸிஜனேற்ற எண் - x என்க.
(x) + (1 \(\times\) + 6) + (4 \(\times\)-2) = 0
x + 6 + (-8) = 0
x - 2 = 0
எனவே MnSO, ல் Mn ன் ஆக்ஸிஜனேற்ற எண் = +2.
இ) HNO3 ல் உள்ள N,
H ன் ஆக்ஸிஜனேற்ற எண் = +1
N ன் ஆக்ஸிஜனேற்ற எண் = x என்க.
O ன் ஆக்ஸிஜனேற்ற எண் = -2
(+1) + x + 3 \(\times\) (-2) = 0
+1 + x- 6 = 0
x - 5 = 0
x = + 5
எனவே HNO3 ல் N ன் ஆக்ஸிஜனேற்ற எண் = +5.
8.
9.

R1 = 5 Ω, R2 = 5Ω
\(\frac {1}{{R}_{p}} = \frac {1}{{R}_{1}} + \frac {1}{{R}_{2}} = \frac {1}{5} + \frac {1}{5} = \frac {2}{5}\)
Rp = \(\frac {5}{2}\) = 2.5 Ω
10.
(i) நிலை மாற்றம்
பொருளானது ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறும் நிகழ்வையே நாம் நிலை மாற்றம் என்கிறோம்.
எடுத்துக்காட்டாக சாதாரண வெப்பநிலையில் நீர் மூலக்கூறுகள் திறவாநிலையில் இருக்கும். 1000C வெப்பநிலைக்கு நீரை வெப்பப்படுத்தும் போது அது நீராவியாக மாறுகிறது. நீராவி வாயு நிலையில் இருக்கிறது. வெப்பநிலையைக் குறைக்கும் போது மீண்டும் நீராக மாறுகிறது. வெப்பநிலையை 00C க்கு குறைக்கும் போது பனிக்கட்டியாக மாறுகிறது. பனிக்கட்டி திட நிலையில் இருக்கிறது. பனிக்கட்டியை வெப்பப்படுத்தும்போது மீண்டும் நீராக மாறுகிறது. இவ்வாறு வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும் போது நீர் தனது நிலையை மாற்றிக்கொள்ளுகிறது.
(ii) உருகுதல் உறைதல்
ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு உருகுதல் ஆகும்.
(iii) ஆவியாதல் குளிர்தல்
ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு ஆவியாதல் ஆகும்.

11.
| தனிமம் | எலக்ட்ரான்களின் எண்ணிக்கை | துணைக் கூடுகளின் அணு அமைப்பு |
| 7N | 7 | 1s2 2s2 2p3 |
| 9F | 9 | 1s2 2s2 2p5 |
| 11Na | 11 | 1s2 2s2 2p6 3s1 |
| 17Cl | 17 | 1s2 2s2 2p6 3s1 3p5 |
| 18Ar | 18 | 1s2 2s2 2p6 3s2 3p6 |
12.
| செயல்முறை | கட்டம் I | கட்டம் II |
| பதங்கமாதல் | திடப்பொருள் | ஆவி |
| திண்மமாதல் | திரவம் | திடப்பொருள் |
| உருகுதல் | திடப்பொருள் | திரவப்பொருள் |
| உறைதல் | திரவப்பொருள் | திடப்பொருள் |
| குளிர்தல் | வாயு | திரவப்பொருள் |
13.
ஒரு மின்மாற்றியில்
Es / Ep = Ns/Np
Es = Ns/Np \(\times\) Ep
= 8/800 \(\times\) 220
= 220/100
Es = 2.2 வோல்ட்
14.
F = I L B
F1 = (4I) \(\times\) (L/2) \(\times\) (3B)
F1 = 6F
எனவே, விசை ஆறு மடங்கு அதிகரிக்கிறது.
15.
I = q/t = (25 C) / (50 s) = 0.5 C/s = 0.5 A
16.
கொடுக்கப்பட்டுள்ள தரவுகள்
m = 2 Kg, ΔT = (50 - 10) = 400C
கெல்வினில் மாற்றும் பொழுது
(323.15 - 283.15) = 40K
C = 4200 JKg-1 K-1
\(\therefore\) தேவையான வெப்பம், Q = m \(\times\) C \(\times\) ΔT
= 2 \(\times\) 4200 \(\times\) 40 = 3,36,000 J
17.
(அ) தலைமுடி எலக்ட்ரான்களை இழக்கிறது.
நெகிழிச்சீப்பு எலக்ட்ரான்களை பெற்றது.
(ஆ) 1 C யில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 6.25 \(\times\) 1018 எலக்ட்ரான்கள்
0.4 C யில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 6.25 \(\times\) 1018 \(\times\) 0.4 எலக்ட்ரான்கள்
= 2.5 \(\times\) 1018 எலக்ட்ரான்கள்
இடம்பெயர்ந்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 2.5 \(\times\) 1018
18.
நீரின் நிறை (m) = 25 கிராம்
வெப்பநிலை உயர்வு (AT) = (100°C− 0°) = 100°C
நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் (C) = 4.18 J/g°C.
தேவைப்படும் வெப்ப ஆற்றல் (Q) = ?
\(
(Q) =m \times C \times \Delta T \\
=25 \times 4.18 \times 100 \\
=10450 \mathrm{~J}
\)
19.
நரம்புச் செல்கள், நியூரான்கள்
20.

21.
காந்த விசைக் கோடுகளுக்குச் செங்குத்தாக அமைந்த ஓரலகு பரப்பைக் கடந்து செல்லும் காந்த விசைக் கோடுகளின் எண்ணிக்கை காந்தப்பாய அடர்த்தி என்று அழைக்கப்படும். இந்த அலகு wb / m2 ஆகும்.
22.
i) வி.ஜி.ஏ (VGA - Video Graphics Array)
ii) எச்டிஎம்ஐ (HDMI - High Definition Multimedia Interface)
iii) யுஎஸ்பி (USB - Universal Serial Bus)
iv) தரவுக்கம்பி (Data cable)
v) ஒலி வடம் (Audio cable)
vi) மின் இணைப்புக் கம்பி (Power cord)
vii) ஒலி வாங்கி இணைப்புக்கம்பி (Mic cable)
viii) ஈதர் நெட் இணைப்புக்கம்பி (Ethernet cable)
1. வி.ஜி.ஏ (VGA) இணைப்புக்கம்பி:
கணினியின் மையச் செயலகத்தைத் திரையுடன் இணைக்க வி.ஜி.ஏ பயன்படுகிறது
2. யுஎஸ்பி (USB) இணைப்புவடம்:
அச்சுப்பொறி (Printer), வருடி (scanner), விரலி (pen drive), சுட்டி (mouse), விசைப்பலகை (keyboard), இணையப்படக்கருவி (web camera), திறன்பேசி (smart phone), போன்றவற்றைக் கணினியுடன் இணைக்கப் பயன்படுகிறது.
3. எச்டிஎம்ஐ (HDMI) இணைப்புவடம்:
உயர் வரையறை வீடியோ, டிஜிட்டல் ஆடியோ ஆகியவற்றை ஒரே ஒரு கேபிள் வழியாக எல்.இ.டி. கடத்துகிறது. தொலைக்காட்சிகள், ஒளிவீழ்த்தி (projector), கணினித் திரை ஆகியவற்றைக் கணினியுடன் இணைக்க HDMI பயன்படுகிறது.
4. தரவுக்கம்பி (Data cable)
கணினியின் மையச் செயலகத்துடன் கைபேசி, கையடக்கக் கணினி (Tablet) ஆகியவற்றை இணைக்க, தரவுக் கம்பி பயன்படுகிறது.
5. ஒலி வடம் (Audio Jack):
ஒலி வடம் கணினியை ஒலிபெருக்கியுடன் இணைக்கப் பயன்படுகிறது.
6. மின் இணைப்புவடம் (Power Cord)
மையச்செயலகம், கணினித்திரை, ஒலிபெருக்கி, வருடி ஆகியவற்றுக்கு மின் இணைப்பை வழங்குகிறது.
7. ஒலி வாங்கி (Mic) இணைப்புவடம்:
ஒலிவாங்கியை மையச்செயலகத்துடன் இணைப்பதற்கு ஒலிவாங்கி இணைப்புவடம் உதவுகிறது.
8. ஈதர்நெட் (Ethernet) இணைப்புவடம்:
கணினியுடன் இணையவழித் தொடர்பை ஏற்படுத்த ஈதர்நெட் இணைப்புவடம் பயன்படுகிறது.
23.
மியாசிஸ் குன்றல் பகுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதில் குரோமோசோம் எண்ணிக்கை இருமைய (2n) நிலையில் இருந்து ஒருமைய (n) நிலையாக குறைக்கப்படுகிறது. மியாசிஸ் பகுப்பில் ஒரு தாய் செல்லில் இருந்து நான்கு சேய் செல்கள் உருவாக்கப்படுகின்றன.
24.
i) முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்குப் பயன்படுகிறது.
ii) சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யப் பயன்படுகிறது.
25.
ஒரு அணுவானது மற்றொரு அணுவிடம் அதன் இணைதிறன் கூடு எலக்ட்ரான்களை இழந்தோ அல்லது பங்கீடு செய்தோ இணைதிறன் கூட்டில் எட்டு எலக்ட்ரான்களைப் பெற்றிருக்கும். இவ்விளைவு எட்டு எலக்ட்ரான் விதி அல்லது எண்ம விதி எனப்படுகிறது.
உதாரணமாக சோடியத்தின் அணு எண் 11 சோடியம் கூட்டிலிருந்து ஒரு எலக்ட்ரானை எளிதில் இழந்து நியான் அணுவின் எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது.
26.
தனிம வரிசை அட்டவணையில் பண்புகள்
(i) எல்லா தனிமங்களும் அவற்றின் அதிகரிக்கும் அணு எண்ணிற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்டுள்ளன.
(ii) நவீன தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு தொடர்கள் என அழைக்கப்படுகிறது. 7 தொடர்கள் உள்ளன.
(iii) தனிமங்கள் அவற்றின் அணுக்களில் உள்ள கூடுகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப தொடர்களில் அமைக்கப்பட்டுள்ளன.
(iv) தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து மற்றும் கீழாக உள்ள பத்தி தொகுதிகள் ஆகும். மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன.
(v) ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள தனிமங்களின் பண்பிற்கு ஏற்ப இவைகள் பல குடும்பங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
(vi) மூன்றாம் தொகுதியில் வரும் லாந்தனைடுகள் , ஆக்டினைடுகளும் உள் இடைநிலைத் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அட்டவணையில் கீழ்தொகுதியில் தனியாக வைக்கப்பட்டுள்ளன.
27.
1) பண்புகளில் அதிக வேறுபாடுள்ள தனிமங்களும் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன. எ.கா.கடின உலோகங்களாகிய செம்பு, மற்றும் வெள்ளி மென் உலோகங்களாகிய சோடியம் மற்றும் பொட்டாசியத்தோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டன.
2) ஹைட்ரஜனுக்கு என்று ஒரு தனி இடம் கொடுக்க முடிய வில்லை. அலோகமாகிய ஹைட்ரஜன், லித்தியம்,சோடியம் பொட்டாசியம் போன்ற மென் உலோகங்களோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது .
3) கூடிக்கொண்டே செல்லும் அணு நிறை எனும் விதியை சில வேளைகளில் கடைபிடிக்க முடிவதில்லை.
எ. கா : Co & Ni, Te & I
4) ஐசோடோப்புகளுக்கு தனிப்பட்ட இடம் ஒதுக்கப்படவில்லை.
28.
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் தனிம வரிசை செயல்பாடுகளாகும். இது நவீன ஆவர்த்தன விதி ஆகும்.
29.
1. அயனிப்பிணைப்பு
2. ஒடுக்கம்
3. தனித்த
4. ஆக்சிஜனேற்றம்
5. சகப்பிணைப்பு
6. எண்ம விதி.
30.
1. உணவுக்குழல்
2. குடல் உறிஞ்சிகள்
3. கிளாமரூலஸ்
4. சிறுநீர்க் குழாய்
5. விரைப்பை
31.
ஈ) கருப்பை நாளம், அண்டகம், செர்விக்ஸ், கர்ப்பப்பை, யோனி
32.
(c)
தசை நாண்கள்
33.
(c)
பச்சை
34.
(b)
எலக்ட்ரான் ஏற்பி
35.
(b)
மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றன
36.
(b)
வெப்பக்கடத்தல்
37.
( )
23 குரோமோசோம்கள்
38.
( )
இறக்கு மின்மாற்றி
39.
( )
இறைப்பான்
40.
(a)
41.
(a)
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards