9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/08/2019
அறிவியல் முதல் பருவம் ஐந்து மதிப்பெண்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு ரயில் 90 கிமீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. தடையை உபயோகப்படுத்தி – 0.5 மீ / விநாடி2 என்ற சீரான முடுக்கம் ஏற்பட்டது. ரயில் ஓய்வு நிலைக்கு வருவதற்கு முன்பாக எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?
2.
98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க.
3.
இனியன் ஒரு ஒளி ஆண்டு என்பதனை 9.46 \(\times\) 1015 மீ எனவும் எழிலன் 9.46 \(\times\) 1012 கி.மீ எனவும் வாதிடுகின்றனர். யார் கூற்று சரி ? உன் விடையை நியாயப்படுத்து.
4.
10 செ.மீ குவியத் தொலைவு கொண்ட குழியாடி ஒன்றிலிருந்து 15 செ.மீ தொலைவில் வைக்கப்பட்டுள்ள 1 செ,மீ உயரம் கொண்ட ஒரு பொருளின் பிம்பத்தின் அளவு ,தன்மை மற்றும் இடம் ஆகியவற்றை கண்டுபிடிக்கவும்.
5.
தொகுதி முதுகெலும்பற்றவைகளின் வழிமுறை படத்தின் (flow chart) சுருக்கமான வருணனையைத் (out line) தருக.
6.
இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.
7.
தரவு செயலாக்கத்தின் பல்வேறு படிநிலைகள் யாவை?
8.
தங்கத் தகடு சோதனையின் மூலம் நீ என்ன முடிவிற்கு வருகிறாய்?
9.
நீர் சார்பசைவு - நிரூபிக்க ஒரு சோதனையை வடிவமைத்து விளக்கவும்.
10.
வரைபட முறையைப் ப பயன்படுத்தி இயக்கச் சமன்பாடுகளை வருவி.
11.
டிண்டால் விளைவு மற்றும் பிரௌனியன் இயக்கம் ஆகியவற்றை தகுந்த வரைபடத்துடன் விளக்குக.
12.
தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.
1.
வேகம் = 90 கிமீ/மணி
\(90\times \frac { 5 }{ 18 } =25m/s\)
முடுக்கம் = -0.5 ms-2
V2 = u2 + 2 as
s = \(\frac { { v }^{ 2 }{ -u }^{ 2 } }{ 2as } \frac { 0-(25)^{ 2 } }{ 2\times (-0.5) } \)
=\(\frac { -625 }{ -1 } =625\)
s = 625 மீட்டர்
2.
பொருளின் நிறை = எடை / புவியீர்ப்பு மதிப்பு
= 98 / 9.8
= 10 கி.கி.
3.
(i) இனியனின் கூற்று சரியானது.
(ii) ஏனெனில் ஒளியானது ஒரு வினாடிக்கு 3 \(\times\) 108 மீ அல்லது 3,00,000 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. ஒரு ஆண்டில் 365 நாட்கள் உள்ளன. அதாவது ஒரு ஆண்டில் 365 \(\times\) 24 \(\times\) 60 \(\times\) 60 = 3.153 \(\times\) 107 வினாடிகள்.
(iii) எனவே ஒரு ஒளி ஆண்டு = 3.153 x 107 \(\times\) 3 \(\times\) 108 = 9.46 \(\times\)1015 மீ
4.
பொருளின் தொலைவு u = - 15 செ.மீ
பிம்பத்தின் தொலைவு v = ?
குவியத் தொலைவு f = -10 செ.மீ
ஆடிச் சமன்பாட்டை பயன்படுத்த
\(\frac { 1 }{ v } +\frac { 1 }{ u } =\frac { 1 }{ f } \)
\(\frac { 1 }{ v } +\frac { 1 }{ -15 } =\frac { 1 }{ -10 } \)
\(\frac { 1 }{ v } -\frac { 1 }{ 15 } =\frac { -1 }{ 10 } \)
\(\frac { 1 }{ v } =\frac { -1 }{ 10 } +\frac { 1 }{ 15 } \)
= \(\frac { -3+2 }{ 30 } \)
\(\frac { 1 }{ v } =\frac { -1 }{ 30 } \)
பிம்பத்தின் தோலைவு v= –30 செ.மீ
(இங்கு எதிர்க்குறி வந்துள்ளது; எனவே பிம்பம் ஆடிக்கு இடது பக்கத்தில் உள்ளது).
ஆடிக்கு 30 செ.மீ முன்னே பிம்பம் உருவாகிறது. ஆடிக்கு முன் பிம்பம் ஏற்படுவதால், அது தலைகீழான மெய் பிம்பம் ஆகும்.
பிம்பத்தின் அளவுகளுக்கான உருப்பெருக்கத்தைக் கணக்கிட வேண்டும்.
\(m=\frac { -v }{ u } \)
\(m=\frac { -(-30) }{ (-15) } \)
m = -2
\(m=\frac { { h }_{ 2 } }{ { h }_{ 1 } } \)
இங்குபொருளின் உயரம் h1= 1 செ.மீ
-2 = \(\frac { { h }_{ 2 } }{ 1 } \)
h2 = -2 \(\times\) 1
= -2 செ.மீ
எனமை, பிம்பத்தின் உயரம் =2 செ.மீ
(இங்கு எதிர்க்குறி வந்துள்ளது ;எனவே பிம்பம் முதன்மை அச்சுக்குக் கீழே ஏற்படுகிறது).
5.

6.
மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உணவானது தூய்மையானதாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் மற்றும் எந்த வித கலப்படமின்றியும் இருக்க வேண்டும்.
நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் போதுமான அளவு தூய்மையான மற்றும் பாதுக்காப்பான உணவை கிடைக்கச் செய்வது நமது ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமையாகும். இந்திய அரசாங்கம் 1954 - ஆம் ஆண்டு ' உணவு கலப்படம் தடுப்புச் சட்டம்' மற்றும் 1955 - ஆம் ஆண்டு ' உணவுக் கலப்பட தடுப்பு விதிகள்' போன்ற உணவுப் பாதுகாப்புச் சட்டங்கள் நுகர்வோருக்குத் தூய்மையான மற்றும் முழு உணவு கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தவும் மற்றும் நுகர்வோரை வியாபாரிகள் ஏமாற்றுவதிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்டது.
விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்கள் குறைந்தபட்ச தரம் மற்றும் மேம்பட்ட சுகாதாரத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று இந்த உணவுப்பாதுகாப்பு சட்டம் தெளிவாக வலியுறுத்தப்படுகிறது. எந்த ஒரு உணவு இந்த குறைந்த பட்ச தர நிர்ணயத்தை உறுதிப்படுத்தவில்லையோ அந்த உணவு கலப்படம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சட்டம் கலப்படம் செய்த பொருள்களை உருவாக்கும் மற்றும் விற்பனையில் ஈடுபடும் விநியோயோகஸ்தர்களை தண்டனைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்துகிறது. நேர்மையற்ற செயல்களில் ஈடுபடும் இத்தகைய விநியோகஸ்தர்களை தடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தரக்கட்டுப்பாடு செய்யும் நிறுவனங்கள் முறையே ISI, AGMARK (அக்மார்க்), FPO, FCI மற்றும் இதர சுகாதாரத் துறைகள் போன்றவை நுகர்வோர் பயன்படுத்தும் பொருள்களுக்கு குறைந்தபட்ச தர நிர்ணயங்களை விதித்துள்ளது.
7.
தரவு செயலாக்கம் அல்லது தரவு செயல்பாடு என்பது ஆறு நிலைகளில் செயல்படுகிறது. அவையாவன
தரவு சேகரிப்பு
தரவு சேமித்தல்
தரவு வரிசைப்படுத்தல்
தரவு செயலாக்கம்
தரவு பகுப்பாய்வு
தரவு விளக்கமும் முடிவுகளும்
8.
முடிவு:
i) அணுவின் மையப்பகுதியில் மிகச் சிறிய உட்கரு இடம் பெற்றுள்ளது.
ii) உட்கருவைச் சுற்றி பெரும் பகுதி வெற்றிடமாக உள்ளது.
iii) அணுவின் உட்கரு எனப்படும் சிறிய நேர்மின் சுமை கொண்ட பகுதியில் அணுவின் மொத்த நிறையும் பொதிந்துள்ளது.
iv) அணுவின் பெரும் பகுதியான வெற்றிடத்தில் அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன.
v) எலக்ட்ரான்கள் உட்கருவை வட்ட வடிவ பாதையில் சுற்றி வருகின்றன.
9.
தேவையான உபகரணங்கள்: கண்ணாடித் தொட்டி, மணல், பூந்தொட்டி, பட்டாணி அல்லது அவரை விதைகள் மற்றும் நீர்.
செய்முறை:
1. கண்ணாடித் தொட்டியில் மணல் நிரப்பிக் கொள்ள வேண்டும். துளையுடன் கூடிய பூந்தொட்டியில் நீர் நிரப்பிக் கொண்டு, கண்ணாடித் தொட்டியின் மையத்தில் வைக்க வேண்டும்.
2. ஊற வைத்த பட்டாணி அவரை விதைகளை மணலில் வைத்துள்ள பூந்தொட்டியைச் சுற்றிலும் இடவேண்டும். 6 அல்லது 7 நாட்களுக்குப்பிறகு உற்று நோக்கி பார்த்தால்.
காண்பது :
முளைவேர் செங்குத்தாகக் கீழ் நோக்கி வளர்வதற்குப் பதிலாகத் தொட்டி மற்றும் ஈரப்பதம் உள்ள பகுதியை நோக்கி வளர்வதைக் காணமுடியும்.
முடிவு:
இச்சோதனையில், முளைவேர் உருவாக்கும் முதல் நிலை வேர் நேர் நீர் சார்பசைவு உடையது என உறுதி ஆகிறது.
மேலும் நீர் சார்பசைவு புவிச்சார்பசைவைக் காட்டிலும் வலிமையானது என்பதை அறியமுடிகிறது.
10.
திசைவேகம் - காலம் வரைபடத்திலிருந்து இயக்கச் சமன்பாடுகளை தருவித்தல்.

மேற்கண்ட வரைபடம் சீராக முடுக்கப்பட்ட பொருள் ஒன்று காலத்தைப் பொறுத்து அடையும் திசைவே மாற்றத்தைக் காண்பிக்கிறது. வரைபடத்தில் D என்ற தொடக்கப் புள்ளியிலிருந்து 'u' என்ற திசைவேகத்துடன் இயங்கும் பொருளொன்றின் திசைவேகம் தொடர்ச்சியாக அதிகரித்து 't' காலத்திற்குப் பின் 'B' என்ற புள்ளியை அப்பொருள் அடைகிறது.
பொருளின் தொடக்கத் திசைவேகம் (u) = OD = EA
பொருளின் இறுதித் திசைவேகம் (v) = OC = EB
காலம் (t) = OE = DA
வரைபடத்திலிருந்து = AB = DC ஆகும்.
(i) முதல் இயக்கச் சமன்பாடு :
வரையறைப்படி முடுக்கம் (a) = திசைவேக மாறுபாடு / காலம்
= (OC - OD) / OE = DC / OE
a = DC/ t
DC = at = AB
வரைபடத்திலிருந்து EB = EA + AB
v = u + at
இது முதல் இயக்க சமன்பாடு ஆகும்.
(ii) இரண்டாம் இயக்கச் சமன்பாடு:
வரைபடத்திலிருந்து 't' காலத்தில் பொருள் ஒன்று கடந்த தொலைவான நாற்கரத்தின் பரப்பளவு DOEB மூலம் கொடுக்கப்படுகிறது.
S = நாற்கரத்தின் பரப்பளவு (DOEB)
= செவ்வகத்தின் பரப்பளவு (DOEA) + முக்கோணத்தின் பரப்பளவு (DAB)
\(=(A E \times O E)+1 / 2 \times(A B \times D A)
\)
\(\mathrm{S} =\left(\mathrm{ut}+1 / 2 \mathrm{at}^{2}\right)
\)
இது இரண்டாம் இயக்கச் சமன்பாடு ஆகும்.
(iii) மூன்றாம் இயக்கச் சமன்பாடு :
't' காலத்தில் பொருள் கடந்த தொலைவை வரைபடத்தில் நாற்கரம் DOEB யின் பரப்பளவானது குறிக்கிறது. இங்கு DOEB என்பது சரிவகத்தையும் குறிக்கிறது.
S = சரிவகம் DOEBன் பரப்பளவு
\(=1 / 2 \times(O D+B E) \times O E\)
\(S=1 / 2 \times(u \times v) \times t\)
ஆனால் முடுக்கம்
\(a=(v-u) / t\)
அல்லது \(t=(v-u) / a\)
எனவே, \(\mathrm{s}=1 / 2 \times(\mathrm{v}+\mathrm{u}) \times(\mathrm{v}-\mathrm{u}) / \mathrm{a}\)
\(2 \mathrm{as} =\mathrm{v}^{2}-\mathrm{u}^{2} \\
\mathrm{v}^{2} =\mathrm{u}^{2}+2 \mathrm{as}\)
மூன்றாம் இயக்கச் சமன்பாடு ஆகும்.
11.
(1). டிண்டால் விளைவு:
(i) டிண்டால் என்பவர் ஒரு வலுவான ஒளிக்கற்றைகளை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும் போது ஒளிக்கற்றையின் பாதையை பார்க்க முடியும் என்று கண்டறிந்தார். மேலும் கூழ்மத்துகள்களால் ஒளி சிதறடிக்கப்படுகிறது. இதுவே டிண்டால் விளைவு ஆகும்.
(ii) எ.கா: ஒளிக்கற்றையானது தூய நீர் வழியாக செல்லும்போது கண்களுக்கு புலப்படுவதில்லை. ஆனால் கூழ்மக் கரைசலின் வழியே செல்லும்போது ஒளிக்கற்றை கண்களுக்குபுலப்படுகிறது
.
(2). பிரௌனியன் நகர்வு:
(i) கூழ்மக் கரைசல்களை செறிவு மிக்க நுண்ணோக்கியில் பார்க்கும் போது கூழ்மத்துக்கள்கள் இங்கும் அங்குமாக ஒழுங்கற்ற நிலையில் சீராகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். இந்த நகர்வு பிரௌனியன் நகர்வு எனப்படும்.
(ii) எ.கா: பிரௌனியன் இயக்கத்திற்கு காரணம் பரவல் ஊடகத்திலுள்ள மூலக்கூறுகளுடன், பரவிய நிலைமை மூலக்கூறுகள் சமமற்ற முறையில் தாக்குவதே ஆகும்.

12.
| வ.எண் | தனிமம் | சேர்மம் |
|---|---|---|
| 1. | ஒரே வகையான அணுக்களைக் கொண்டது | ஒன்றுக்கு மேற்பட்ட அணுக்களால் ஆனது. |
| 2. | இது ஒரு தூய்மையான பொருள் | இது ஒரு தூய்மையான பொருள் அல்ல. |
| 3. | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியாது | வேதியியல் முறையில் எளிய பொருட்களாக பிரிக்க முடியும் |
| 4. | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை பெற்றுள்ளது | வரையறுக்கப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைப் பெற்றுள்ளது |
| 5. | உதாரணம்: ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் | உதாரணம்: நீர், கரும்புச் சர்க்கரை. |
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards