9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/08/2019
அறிவியல் முதல் பருவம் இரு மதிப்பெண்
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
பயன்படுத்தும் முன் நன்றாகக் கலக்கவும். இது மருந்து சாடியின் மேல் உள்ள குறிப்பு. அந்த சாடியில் என்ன மாதிரியான கலவை உள்ளது? காரணம் தருக.
2.
வெள்ளிப் புரட்சி என்றால் என்ன?
3.
தவளைகள் இருவாழ்விகள் என்றழைக்கப்படுவது ஏன்?
4.
குழல் கால்கள் மற்றும் பொய்க் கால்களுக்கு இடையேயான வேறுபாடு யாது?
5.
உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம் எது? ஏன்?
6.
வகைப்பாட்டியல் வரையறு
7.
குழியாடி ஒன்றின் குவியத்தில் பொருள் வைக்கப்படும்போது பிம்பம் எங்கே உருவாகும்?
8.
குறியீட்டு மரபுகளின் அடிப்படையில், எந்த ஆடி மற்றும் எந்த லென்ஸ் எதிர்க்குறி குவியதொலைவு கொண்டது?
9.
உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருடகள் இரண்டினைக் கூறுக.
10.
நடுக்கமுறு வளைதலுக்கு வேறு பெயர் தருக?
11.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

12.
அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
கால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்
13.
முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமத்தை கூறுக.
14.
தாவரத்தின் இலைகளின் அடிப்புறத்தோலின் காணப்படும் சிறிய துளைகளின் பெயர் என்ன?
15.
இலைகளில் உடல் அசைவுகளை உருவாக்கும் தாவரங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
16.
கரைப்பொருள் மற்றும் கரைப்பான் – வரையறு
17.
1040 பாரன்ஹீட் வெப்பநிலையை செல்சியஸ் அலகிற்கு மாற்றுக
18.
டெட்டாலின் சிறு துளிகள் நீரில் கலக்கும்போது கலங்கலாக மாறுகிறது. ஏன்?
19.
பதங்கமாதல் – வரையறு
20.
திருகு அளவியின் புரிக்கோல் பற்றி உனக்கு என்ன தெரியும்?
21.
SI அலகின் விரிவாக்கம் என்ன ?
22.
அளவீடு என்றால் என்ன ?
23.
காற்றில் ஒளியின் திசைவேகம் 3 \(\times\)108 மீ/வி, கண்ணாடியில் 2 \(\times\)108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன ?
24.
கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
6CO2 +______
__________ + 6O2 \(\uparrow\)
25.
வேறுபடுத்துக : குவாசியயோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
1.
மருந்துச் சாடியில் உள்ள பல மருந்துகள் தொங்கல்கள் ஆகும். இவற்றில் உள்ள நுண்ணிய துகள்கள் கரைசலின் அடியில் படிந்து விடுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும் முன் மருந்துச் சாடியை நன்கு குலுக்கினால் மருந்தின் துகள்கள் சீராகக் கரைப்பானில் கலந்து விடும். எனவே மருந்துச் சாதியின் மேல், பயன்படுத்தும் முன் நன்றாக கலக்கவும்' என்ற குறிப்பு அச்சிடப்பட்டுள்ளது.
2.
கோழி, வாத்து போன்ற பறவைகளை வளர்த்து முட்டை, இறைச்சி ஆகியவற்றைப் பெறுவதற்கு வெள்ளிப் புரட்சி என்று பெயர்.
3.
நீர் வாழ் முறைக்கும், நில வாழ் முறைக்கும் இடைப்பட்ட நிலையில் வாழ்வதற்கான தகவமைப்பை பெற்ற முதுகெலும்பிகள். மேலும் இவை இரட்டை வாழ்க்கை முறையில் வாழ்வதால் தவளைகள் இருவாழ்விகள் என்றழைக்கப்படுகின்றன.
4.
| குழாய் கால்கள் | பொய்க் கால்கள் |
| குழாய் கால்கள் இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன. எ.கா. முட்தோலிகள் |
பொய்க்கால்கள் ஒரு தற்காலிகமாக சைட்டோபிளாசத்தால் நிகரப்பபட்ட ஒரு சவ்வு போன்ற அமைப்பு ஆகும்.இவை இடம்விட்டு இடம் நகர்வதற்கும், பயன்படுகிறது. எ.கா.அமீபா |
5.
உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம் மண்புழு ஆகும். இது தோட்ட மண்ணிலுள்ள குப்பைகளை மட்கச்செய்து நல்ல உரமாக மாற்றுகிறது. எனவே இது உழவனின் நண்பன் என அழைக்கப்படுகிறது.
6.
அடிப்படைக் கொள்கைகள், முறைகள் மற்றும் விதிகளை உள்ளடக்கிய கருத்தியல் பிரிவே வகைபாட்டியல் ஆகும். அதாவது உயிரினங்களை வகைப்படுத்தும் அறிவியலாகும்.
7.
கருத்தியல் படி பிம்பம் ஈரிலாத் தொலைவில் உருவாகும்.
8.
குழி ஆடி
9.
(i) சில வகை நச்சுக் காளான்களில் காணப்படும் நச்சுப் பொருள்கள்.
(ii) ஆப்பிள் விதைகளில் காணப்படும் புரூசிக் அமிலம்.
10.
தொடுவுரு வளைதல் அசைவு
11.

12.
ஹீலியம் - 2
போரான் - 5
ஆக்சிஜன் - 8
ஃபளுரின் - 9
நியான் - 10
சோடியம் - 11
மெக்னீசியம் - 12
சிலிக்கன் - 14
சல்ஃபர் - 16
கால்சியம் - 20
13.
பெரிலியம்
அணு எண் = 4
K - ஆர்பிட் - 2 எலக்ட்ரான்கள்
L - ஆர்பிட் - 2 எலக்ரான்கள்
14.
இலைத்துளை
15.
டெஸ்மோடியம் கைரன்ஸ்
16.
கரையும் பொருள் கரைபொருள் எனவும் கரைக்கும் ஊடகம் கரைப்பான் எனவும் அழைக்கப்படுகிறது.
17.
செல்சியசில் வெப்பநிலை = (F - 32) \(\times\)\(\frac{5}{9}\)
= (104 - 32) \(\times\) \(\frac{5}{9}\) = 72 \(\times\) \(\frac{5}{9}\) = 40oC
18.
டெட்டாலின் சிறுதுளிகள் நீரில் விரவுதல் முறையில் கலக்கிறது. எனவே கலவை கலங்கலாக இருக்கிறது.
19.
(i) சில திண்மப் பொருட்களை வெப்பப்படுத்தும் போது திரவ நிலையை அடையாமல் நேரடியாக திண்ம நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாற்றமடைகின்றன. இந்நிகழ்விற்கு பதங்கமாதல் என்று பெயர்.
(ii) எ.கா: அயோடின், கற்பூரம்.
20.
ஒரு முழுச்சுற்றுக்கு திருகின் முனை நகரும் தொலைவு புரியிடைத்தூரம் எனப்படும். இது அடுத்தடுத்த இரு திருகு மரைகளுக்கிடையேயுள்ள தொலைவுக்குச் சமம் ஆகும்.
21.
SI அலகின் விரிவாக்கம்: (International System of Units) அதாவது பன்னாட்டு அலகு முறை ஆகும்.
22.
ஒரு பொருளின் பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு அளவு மற்றும் எண்மதிப்பை வழங்கு முறை அளவீடு என வரையறுக்கப்படுகிறது.
23.
\(_{ a }{ { \mu }_{ g } }=\frac { 3\times { 10 }^{ 8 } }{ 2\times { 10 }^{ 8 } } =\frac { 3 }{ 2 } \) = 1.5
24.
6CO2 + 6H2O
C6H12O6 + 6O2 \(\uparrow\)
25.
| குவாசியயோர்க்கர் | மராஸ்மஸ் |
| புரதக் குறைபாட்டு நோய் | உணவின் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவை குறைவாக இருப்பது |
| 1-5 வயது குழந்தைகளைத் தாக்குகிறது. | பச்சிளங் குழந்தைகளைத் தாக்குகிறது. |
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards