9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 18/01/2019
3rd Term Applied Chemistry Full Material
Download Tamil Nadu 9th Standard Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Science Test1.
குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் _______ ஆக பயன்படுத்தப்படுகின்றன.
உரங்கள்
பூச்சிக்கொல்லிகள்
உணவு நிறமிகள்
உணவு பதப்படுத்திகள்
2.
ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் _________ என அழைக்கப்படுகின்றன.
ஐசோடோப்புகள்
நிற உயர்த்தி
நிற ஜனனிகள்
நிறத்தாங்கி
3.
கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?
ஆக்ஸிஜனேற்றம்
மின்கலங்கள்
ஐசோடோப்புகள்
நானோதுகள்கள்
4.
________ வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
கார்பபோஹைட்ரேட்
வைட்டமின்கள்
புரதங்கள்
கொழுப்புகள்
5.
பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?
உருளைக்கிழங்கு
பீட்ருட்
கேரட்
மஞ்சள்
6.
இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ______ ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.
கார்பன்
அயோடின்
பாஸ்பரஸ்
ஆக்ஸிஜன்
7.
ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் ________ நிகழும்.
ஆக்ஸிஜனேற்றம்
ஒடுக்கம்
நடுநிலையாக்கல்
சங்கிலி இணைப்பு
8.
1% அயோடோபார்ம் ________ ஆக பயன்படுத்தப்படுகிறது.
எதிர் நுண்ணுயிரி
மலேரியா
புரைத்தடுப்பான்
அமில நீக்கி
9.
பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி _______ லிருந்து பெறப்படுகிறது.
தாவரங்கள்
நுண்ணுயிரிகள்
விலங்குகள்
சூரிய ஒளி
10.
ஒரு நானோ மீட்டர் என்பது ______.
10-7 மீட்டர்
10-8 மீட்டர்
10-6 மீட்டர்
10-9 மீட்டர்
11.
தடயவியல் வேதியியலின் தொடர்புகள் யாவை?
12.
பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?
13.
மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
14.
வேதிச்சிகிச்சை என்றால் என்ன?
15.
பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக.
16.
பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.
17.
டேனியல் மின்கலத்தின் படம் வரை ந்து அதன் செயல்பாட்டை விளக்குக?
18.
ஓரு பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?
19.
சுதாவுக்கு தீ விபத்து ஏற்பட்டது. அவள் எந்தவித மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்?
20.
கைபேசியில் பயன்படுத்தும் மின்கலங்களை மறு ஊட்ட ம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.
1.
(b)
பூச்சிக்கொல்லிகள்
2.
(d)
நிறத்தாங்கி
3.
(c)
ஐசோடோப்புகள்
4.
(b)
வைட்டமின்கள்
5.
(a)
உருளைக்கிழங்கு
6.
(a)
கார்பன்
7.
(b)
ஒடுக்கம்
8.
(c)
புரைத்தடுப்பான்
9.
(b)
நுண்ணுயிரிகள்
10.
(d)
10-9 மீட்டர்
11.
தடயவியல் வேதியியலின் தொடர்புகள் கைரேகைப் பதிவு, உயிரியல் அளவீட்டியல் மற்றும் ஆல்கஹால் பரிசோதனை போன்றவைகளாகும்.
12.
தாவரங்கள் வளர்வதற்கு தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக இந்த இரசாயன வேதியியல் உரங்கள்
பயன்படுகின்றன. இவை தாவரங்களுக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பெரும ஊட்டச்சத்துகளை கொடுக்கின்றன.
13.
(i) மயக்கமூட்டிகள் என்பவை உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள் ஆகும். இவற்றை உணர்வை இழக்கச் செய்யும் பகுதிகளைப் பொறுத்து இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
(ii) அவை 1. பொது மயக்கமூட்டிகள்
2. குறிப்பிட்ட மயக்கமூட்டிகள்
14.
மனித உடலின் செல்களைப் பாதிக்காமல் வியாதிகளை உண்டாக்கும் கிருமிகளை மட்டும் அழித்து ஒரு சில நோய்களைக் குணப்படுத்துவதற்காக சில கரிமச்சேர்மங்களைப் பயன்படுத்துவதையே வேதிச்சிகிச்சை என்கிறோம்.
15.
| உணவுச் சேர்க்கை வகைகள் |
செயல்பாடு | உதாரணம் |
| உணவு பதப்படுத்துதல் |
நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து உணவைப் பாதுகாக்கின்றன. |
வினிகர், சோடியம், பென்சோயேட், பென்சாயிக் அமிலம், சோடியம் நைட்ரைட் |
| நிறமிகள் | உணவிற்கு இனிய நிறத்தைக் கொடுக்கின்றன. |
கரோட்டினாய்டுகள், ஆந்தோசயனின், குர்குமின் |
| செயற்கை இனிப்பூட்டிகள் |
உணவில் இனிப்புச் சுவையை கூட்டுகின்றன |
சாக்கரீன், சைக்லமேட் |
| சுவையூட்டிகள் | உணவு வகைகளின் சுவையை மேம்ப்படுத்துகின்றன. |
மோனோசோடியம் குளுட்டமேட், கால்சியம் டைகுளுட்டமேட் |
| எதிர் ஆக்சிஜனேற்றிகள் |
ஆக்சிஜினேற்றத்தைத் தடுத்து உணவின் தன்மையைக் கெடாமல் பாதுகாக்கின்றன. இதய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. |
வைட்டமின் C, வைட்டமின் E, கரோட்டின் |
16.
i) அமிலச்சாயங்கள்: இவை அமிலத் தன்மை கொண்டவை. மேலும், இவை விலங்குகளின் தோல்கள் மற்றும் செயற்கை இழைகளுக்கு சாயமேற்றுவதற்கு பயன்படுகின்றன. கம்பிளி மற்றும் பட்டு போன்ற புரத நூலிழைகளை சாயமேற்ற இவற்றைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டு: பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தால்.
ii) காரச்சாயங்கள்: இவ்வகைச் சாயங்கள் காரத் தொகுதிகளைக் கொண்டுள்ளன. இவை, தாவர மற்றும் விலங்கு நூல் இழைகளைச் சாயமேற்ற பயன்படுகின்றன.
iii) மறைமுக சாயம்: இவ்வகைச் சாயங்கள் பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் நேரடியாக அவற்றின் மீது படிவதில்லை. எனவே, அவை முதலில் நிறமூன்றிகளுடன் (mordants) செயல்படுத்தப்பட வேண்டும். நிறமூன்றி என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் இணைக்கப்படக்கூடிய பொருளாகும். இதன் விளைவாக லேக் எனப்படும் கரையாத கூட்டுப்பொருள் உருவாகின்றது. அலுமினியம், குரோமியம் மற்றும் இரும்பின் உப்புகள் போன்றவை நிறமூன்றிகளாக பயன்படுகின்றன. எ.கா: அலிசரின்.
iv) நேரடி சாயங்கள்: இவை பருத்தி, ரேயான் மற்றும் இதர செல்லுலோஸ் இழைகளுடன் அதிக கவர்ச்சியை உடையன. இவை துணிகளுடன் உறுதியாக ஒட்டிக்கொள்வதால், நேரடியாக பயன்படுத்தப்படுகின்றன. எ.கா: காங்கோ சிவப்பு.
v) தொட்டிச்சாயம்: இவை பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியவை. ஆனால், பட்டு மற்றும் கம்பிளி இழைகளுக்குப் பயன்படாது. இந்த சாயமிடுதல் தொடர்ச்சியான செயல்பாடாகும். இவற்றை செயல்படுத்த ஒரு பெரிய கலன் தேவைப்படுகிறது. இவை தொட்டி என்று அழைக்கப்படுகின்றன. எனவே, இவ்வகை சாயம் தொட்டிச்சாயம் என்றழைக்கப்படுகிறது. எ.கா: இண்டிகோ.
17.
இது ஒரு வகை கால்வானிக் மின்கலம் ஆகும். இதில் துத்தநாக உலோகம் நேர்மின் முனையாகவும் தாமிர உலோகம் எதிர்மின் முனையாகவும் செயல்படுகின்றன. நீர்த்த துத்தநாக சல்பேட் கரைசல் நேர் மின்பகுளியாகவும், நீர்த்த தாமிர சல்பேட் கரைசல் எதிர் மின்பகுளியாகவும் செயல்படுகின்றன. தெவிட்டிய பொட்டாசியம் குளோரைடு (KCI) கரைசல் உப்புப் பாலமாக செயல்படுகிறது. டேனியல் மின்கலத்தின் அமைப்பை கீழ்காணும் படம் விளக்குகிறது.

நேர்மின்முனையில் துத்தநாகம் ஆக்ஸிஜனேற்றமடைந்து அதன் எலக்ட்ரான்களை இழக்கின்றது.
Zn(s) ⟶ Zn2+ + 2e- (ஆக்ஸிஜனேற்றம்)
எதிர்மின் முனையில், மின்பகுளியில் உள்ள தாமிர அயனிகளானவை எலக்ட்ரானை எதிர்மின்வாயின் மேற்பரப்பிலிருந்து பெற்று தாமிரமாக ஒடுக்கமடைகின்றன.
Cu2+ ⟶ 2e- + Cu(s) (ஒடுக்கம்)
நிகர வினை: Zn(s) ⟶ Cu2+ ⟶ Zn2 + Cu(s)
டேனியல் மின்கலத்தின் திறன் 1.1V ஆகும்.
18.
பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. எனவே அந்த பயிர் நிலமானது அமிலத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. எனவே. காரத்தன்மை வாய்ந்த அம்மோனியம் நைட்ரேட், கால்சியம் பாஸ்பேட், யூரியா போன்ற வேதியியல் உரங்களைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் நிலமானது நடுநிலையாக இருக்கும். பயிர்கள் நன்றாக வளர்ச்சியடையும்.
19.
சுதாவிற்கு தீக்காயம் பட்டவுடன் வலி நிவாரணிகளைப் பயன்படுத்த வேண்டும். இவை உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல் எல்லா வகையான வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் சேர்மங்கள் ஆகும். எனவே இந்த வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டும்.
20.
கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்களை மறுஊட்டம் செய்ய இயலாது. ஏனெனில் அவை முதன்மை மின்கலன்கள் ஆகும். இந்த முதன்மை மின்கலன்களை மறுஊட்டம் செய்ய இயலாது. இவை மீளாக்கலம் ஆகும்.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards