9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 26/07/2019
மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும் - வரலாற்றுக்கு முந்தைய காலம்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்றும் காரணமும் தவறானவை .
2.
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.
கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
பிறைநிலப் பகுதி
ஸோலோ ஆறு
நியாண்டர் பள்ளத்தாக்கு
3.
தமிழகத்துக்கு அப்பால் சேர, சோழ, பாண்டியர்கள் குறித்து அறிந்துகொள்ள பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த ________________ கல்வெட்டுக் குறிப்புகள் உதவுகின்றன
புலிகேசி
அசோகர்
சந்திரகுப்தர்
தனநந்தர்
4.
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
கொரில்லா
சிம்பன்ஸி
உராங் உட்டான்
பெருங்குரங்கு
5.
பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் _______ எனப்படும்.
6.
கோடரிகளும் பிளக்கும் கருவிகளும் ______________ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவி வகைகளாகும்
7.
தொடக்க நிலை பல செல் உயிரினம் முதல் முதலில்______________காலத்தில் தோன்றியது.
8.
மனிதர்கள் உருவாக்கிய அல்லது மாற்றியமைத்த ஒரு பொருள் அல்லது கருவி ___________ எனப்படுகிறது.
9.
விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும் – விளக்கு
10.
நியாண்டர்தால்களின் தனித்தன்மை வாய்ந்த பண்புகளைக் கூறு.
11.
சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?
12.
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.
13.
மனித முன்னோர்களின் தொடக்க காலக் கற்கருவிகளின் தொகுப்பு
அ) அச்சூலியக் கருவிகள் கர்நாடகத்திலும் மத்தியப்பிரதேசத்திலும் எங்கு
கண்டெடுக்கப்பட்டுள்ளன?
ஆ) கல் தொழில்நுட்பம் என்றால் என்ன?
இ) இருமுகக் கருவிகள் என்றால் என்ன?
ஈ) மனித இன முன்னோடிகள் பயன்படுத்திய கல்லால் ஆன ஆயுதங்கள் சிலவற்றைக் கூறுக.
14.
ஒவ்வொரு தலைப்பின் கீழேயும் உள்ள அனைத்து வினாக்களுக்கும் விடை யளி.
ஹோமினிட் மற்றும் ஹோமினின்ஸ்
அ) ஹோமினிட் குறித்து என்போர் யாவர்?
ஆ) ஆப்பிரிக்காவில் கருவிகளை உருவாக்கிய முதல் மனித இனம் எது?
இ) நவீன கால மனிதர்கள் எந்தப் பெயரால் குறிக்கப்படுகிறார்கள்?
ஈ) இந்த இனத்தைச் சேர்ந்த ஏதேனும் ஒரு வகையைக் கூறு.
15.
கல்லிலும் எலும்பிலும் காணப்பட்ட உருவங்கள்
16.
சிறு அளவிலான கல்லால் ஆன செய்பொருள்கள்
17.
செம்மணல் மேடுகள்
18.
கோடரிக்கருவிகள்
19.
பழங்கால மானுடவியல்
1.
(d)
கூற்றும் காரணமும் தவறானவை .
2.
(b)
பிறைநிலப் பகுதி
3.
(b)
அசோகர்
4.
(b)
சிம்பன்ஸி
5.
( )
இடைக் கற்காலம்
6.
( )
கீழ் பழங்கற்கால
7.
( )
தொல்லுயிரூழி
8.
( )
செய்பொருள்
9.
விலங்குகளைப் பழக்குதல் இணங்கிவாழும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உருவாகி இருக்கலாம்.நாய்கள் தான் முதலில் பழக்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் பொ.ஆ .மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்மேற்கு ஆசியாவில் பழக்கப்படுத்தப்பட்டன. சுமேரிய நாகரிகத்தில் நிலத்தை உழுவதற்கு காளைகள் பயன்படுத்தப்படன. புதிய கற்கால மெஹர்கரில் ஆடுகள், மாடுகள் பழக்கப்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
10.
நீயாண்டர்தால் மனிதர்கள் இறந்தவர்களைப் புதைத்தார்கள். அப்போது சில சடங்குகளை மேற்கொண்டார்கள். குளிர்காலத்தைத் தாக்குப் பிடிக்க அவசியமான கதகதப்பான வீடுகள், தைக்கப்பட்ட ஆடைகள், தையலுக்குத் தேவைப்படும் ஊசிகள் ஆகியவற்றை நியாண்டர்தால் மனிதர்கள் பெற்றிருக்கவில்லை.
11.
இன்றைய நவீன வாழ்விற்கான அடித்தளம் தொல்பழங்காலத்தில் இடப்பட்டு,நமது முன்னோர்களின் அறிவாற்றலால் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டதாகும். தொல்பழங்கால மக்கள் உருவாக்கிய செய்பொருட்கள், மொழிகள் ஆகியவற்றின் வழியாக அவர்கள் மிகவும் அறிவார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது .
எண்ணங்கள், அனுபவங்கள் மற்றும் புலனாற்றல்களால் அறிவையும்,புரிதலையும் பெறும் மனதின் செயல்பாடு அறிவாற்றல் என்று சொல்லப்படுகிறது. இது மனிதர்களின் சிந்தனை வளர்ச்சியுடன் தொடர்புடையது.
12.
1. மனிதர்களின் வரலாற்றைப் புவியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது.
2. புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் காலக்கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் பொதிந்து கிடக்கின்றன.
3. புவி மற்றும் பல்வேறு உயிரினங்களின் வரலாற்றை அறிவதற்கு இச்சான்றுகள் மிக முக்கியமானவயாகும்.
4. இவ்வடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளின் புதை படிவங்கள் புதைந்துள்ளன.
5. தொல்மானுடவியல் அறிஞர்களும், தொல்லியல் அறிஞர்களும் புவியின் மண் மற்றும் பாறை அடுக்குகளை அகழ்ந்து மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளைச் சேகரிக்கின்றார்கள்.
6. மனிதர்களின் பரிணாமம். தொல்பழங்காலம் ஆகியவற்றின் பல்வேறு கால கட்டங்களை அறிய இந்தப் புதைபடிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் அறிவியல் பூர்வமாக கணிக்கப்படுகிறது.
7. இச்சான்றுகள் வழியாக மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சி நிலைகள் மற்றும் அவற்றின் காலகட்டம் ஆகியவற்றை புரிந்து கொள்ள முயல்கின்றனர்.
8.தொல்லியல் (Archaeology): தொல்பொருள்களை ஆராய்ந்து விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் ஆகும்.
9.தொல்மானுடவியல் (Palaconnthropology): மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளும் இயல் ஆகும்.
13.
அ) கர்நாடகத்தில் இசாம்பூர். மத்தியப்பிரதேசத்தில் பிம்பெத்கா.
ஆ) கற்கருவிகள் உருவாக்கத்தில் ஈடுபடுத்தப்படும் முறைமைகளும் நுட்பங்களும் கற்கருவி தொழில்நுட்பம் ஆகும்.
இ) இருபுறமும் செதுக்கப்பட்ட கருவிகள்.
ஈ) கைக்கோடரி, வெட்டுக் கத்தி.
14.
அ) நவீன மற்றும் அழிந்து போன அனைத்து பெருங்குரங்கு இனங்களும் ஹோமினிட் என்று அழைக்கப்படுகின்றன.
ஆ) ஹோமோ ஹெபிலிஸ்.
இ) ஹோமோ சேப்பியன்ஸ்.
ஈ) சின்பன்சி மற்றும் பிக்மி சிம்பன்சி
15.
வீனஸ்
16.
நுண்கற்காலம்
17.
தேரி
18.
அச்சூலியன்
19.
மனித இன முன்னோர்கள் குறித்த ஆய்வு
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards