9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/07/2019
பண்டைய நாகரிகங்கள்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறானவை
2.
பின்வருவனவற்றுள் மெசபடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?
சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்
பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்
சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்
பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்
3.
ஹரப்பா மக்கள் __________ பற்றி அறிந்திருக்கவில்லை
தங்கம் மற்றும் யானை
குதிரை மற்றும் இரும்பு
ஆடு மற்றும் வெள்ளி
எருது மற்றும் பிளாட்டினம்
4.
சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை _________ என்கிறோம்.
அழகெழுத்து
சித்திர எழுத்து
கருத்து எழுத்து
மண்ணடுக்காய்வு
5.
செள அரசின் தலைமை ஆவணக்காப்பாளர் ____________ ஆவார்.
6.
____________ என்பது மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட, கல்லால் ஆன மிகப் பெரிய உருவம் ஆகும்.
7.
சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.
8.
சிகுராட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக
9.
தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு
10.
தொடக்க கால நாகரிகம்
அ) நாகரிகம் என்றால் என்ன ?
ஆ) தொடக்க கால நாகரிகங்களின் பெயர்களை எழுதுக.
இ) பெரும்பாலான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தவை எவை?
ஈ) நாகரிகம் வடிவம் பெறத் தொடங்கியபோது என்ன நடந்தது?
11.
பெருங்குளம்
12.
கில்காமெஷ்
13.
பெரும் சட்ட வல்லுனர்
14.
பாப்பிரஸ்
1.
(d)
கூற்றும் காரணமும் தவறானவை
2.
(c)
சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்
3.
(b)
குதிரை மற்றும் இரும்பு
4.
(b)
சித்திர எழுத்து
5.
( )
லாவோட்சு
6.
( )
ஸ்பிங்க்ஸின்
7.
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் வடக்கிலிருந்து (மங்கோலியர்களிடமிருந்து) வரும் ஊடுருவல்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட மிகப்பெரும் முயற்சியாகும். கின் ஷி ஹுவாங் படையெடுப்புகளைத் தடுப்பதற்காக அதற்கு முன்னர் கட்டப்பட்டிருந்த ஏராளமான பழைய கோட்டைச் சுவர்களை இணைத்தார்.
8.
விடை சிகுராட்களின் முக்கிய பண்புகள்:
(i) சிகுராட் என்பது பண்டைய மெஸபடோமியாவில் (தற்போதைய ஈராக்) காணப்படும் பிரமிட் வடிவ நினைவிடங்கள் ஆகும்.
(ii) நகரின் மையத்தில் மேடை மீது சிகுராட் எனப்படும் கோயில்கள் கட்டப்பட்டன.
(iii) அவை செங்குத்தான பிரமிடுகள் போல் காட்சியளித்தன.
(iv) உச்சிக்கு செல்வதற்குப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.
(v) கோவிலைச் சுற்றி சடங்குகளுக்கான தாழ்வாரங்கள், புனித இடங்கள், ஆண் மற்றும் பெண் மதகுருமார்களின் கல்லறைகள், சடங்குகளுக்கான விருந்து அரங்குகள், தொழிற் கூடங்கள், களஞ்சியங்கள், கிடங்குகள், நிர்வாகக் கட்டிடங்கள் அடங்கிய வளாகங்கள் இருந்தன.
9.
தத்துவமும், இலக்கியமும்:
(i) லாவோ ட் சு கன்பூசியஸ், மென்சியஸ், மோ டி தாவோ சின் போன்ற தத்துவ ஞானிகளும், சீனக் கவிஞர்களும் நாகரிகத்திற்கு ஏராளமாகப் பங்களித்துள்ளார்கள்.
(ii) இராணுவ உத்தியாளரான சன் ட்ஸு 'போர்க் கலை' என்ற நூலை எழுதினார்.
(iii) 'தி ஸ்பிரிங் அண்ட் ஆட்டம் அனல்ஸ்' (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்) நூல் அதிகாரபூர்வ சீன அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
(iv) மஞ்சள் பேரரசரின் 'கேன்ன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்) எனும் நூல் சீனாவின் பழமையான மருத்துவ நூலாகக் கருதப்படுகிறது. அது ஹான் வம்ச காலத்தில் முறைப்படுத்தப்பட்டது
(v) லாவோட்சு கி.மு.(பொ.ஆ.மு. 604 -52) சௌ அரசின் தலைமை ஆவணக் காப்பாளர் இருந்தார். இவர்தான் தாவோயிசத்தைத் தோற்றுவித்தார். 'ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கு மூலகாரணம்' என்று இவர் வாதிட்டார்.
(vi) கன்பூசியஸ் கி.மு. பொ.ஆ.மு 551 -497) ஒரு புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி, அவர் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. அவர் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை சீர்திருத்துவதை வலியுறுத்தினார்.
(vii) மென்சியஸ் மு. முபா. ஆமு - 372 -289) மற்றொரு புகழ்பெற்ற சீன தத்துவஞானியாவார். அவர் சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்.
10.
அ) ஒரு முன்னேறிய முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறை நாகரிகம் என்று கருதப்படுகிறது.
ஆ) எகிப்திய நாகரிகம், மெசபடோமியா நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் மற்றும் சீன நாகரிகம்.
இ) வேட்டையாடுதல், உணவு சேகரித்தல், வேளாண்மை.
ஈ) நாகரிகம் வடிவம் பெறத் தொடங்கியபோது மிகப்பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்.
11.
மொகஞ்சதாரோ
12.
பூமியின் மிகப் பழமையான எழுத்துக் காவியம்
13.
ஹமுராபி
14.
ஒரு வகைப் புல்
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards