9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
பாறைக்கோளம் – I புவி அகச்செயல்முறைகள்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பசிபிக் நெநெருப்பு வளையம் பற்றி எழுதுக.
2.
எரிமலை என்றால் என்ன? அவற்றின் கூறுகள்யாவை?.
3.
ஆழிப்பேரலைகள் என்றால் என்ன?
4.
‘மடிப்பு’ மற்றும் ‘பிளவு’- சிறுகுறிப்பு வரைக.
5.
புவித்தட்டுகள் – வரையறு.
6.
மண்கோளம் என்றால் என்ன?
7.
புவியின் நான்கு கோளங்களைப் பற்றி சுருக்கமாக எழுதுக.
8.
தீப்பாறைகளை முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாய்ப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
9.
புவி மேலோடு, கவசத்தின் மீது மிதக்கின்றது.
10.
கவச எரிமலை மற்றும் கும்மட்ட எரிமலை
11.
விலகும் எல்லை மற்மற்றும் இணையும் எல்லை
12.
கருவம் மற்றும் மேலோடு
13.
எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?
14.
புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக.
15.
உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு
16.
கூட்டு எரிமலை
17.
புவிஅதிர்ச்சி
18.
இணையும் எல்லை
19.
கவசம்
20.
உட்புறச்செயல்கள்
1.
பசிபிக் நெநெருப்பு வளையம்: பசிபிக் பெருங்கடல் பகுதியில் பசுபிக் தட்டுடன் மற்ற கண்டத்தட்டுகள் இணையும் எல்லைகளில் எரிமலை வெடிப்பு அதிகமாக நிகழ்வதால் இப்பகுதி பசுபிக் நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது. உலகின் அதிகமான புவி அதிர்வுகளும் எரிமலை வெடிப்புகளும் நிகழும் தீவிர மண்டலமாக இப்பகுதி உள்ளது.
2.
எரிமலை: புவியின் உற்பகுதியில் திட, திரவ, வாயு நிலையில் உள்ள பாறைக்குழம்பு துவாரம் வழியாக புவியின் மேற்பரப்பில் உமிழ்தலே எரிமலை வெடிப்பு எனப்படுகிறது. புவித்தட்டுகள் நகர்வதாலும் எரிமலைகள் உருவாகின்றன.
முக்கிய கூறுகள்:-
பாறைக் குழம்புத் தேக்கம்: இது புவிக்கடையில் பெரிய அளவில் காணப்படும் கற்குழம்பு ஆகும்.
துவாரங்கள்: எரிமலை வெடிப்பின்போது வாயுக்கள்,புகை, நெருப்பு மற்றும் பாறைக் குழம்பு வெளியேறுவதற்கான வழிகள் துவாரங்கள் எனப்படுகின்றன.
எரிமலைக் கூம்புகள்: துவாரங்கள் வழியாக வெளியேற்றப்பட்ட பாறைக்குழம்பு ஒரு கூம்பு வடிவ நிலத்தோற்றத்தை உருவாக்குகிறது.
எரிமலைவாய்: எரிமலை உச்சியில் காணப்படும் கிண்ணம் போன்ற வடிவமுடைய பள்ளமே எரிமலைவாய் ஆகும்.
3.
ஆழிப்பேரலைகள் : சுனாமி என்பது துறைமுக அலைகளைக் குறிக்கும் ஜாப்பானியச் சொல்லாகும். கடலடியில் தோன்றும் புவிஅதிர்ச்சி, எரிமலைச் செயல்பாடு மற்றும் கடலோரப் பகுதிகளில் நடைபெறும் மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஆகியவற்றால் கடலில் பெரிய அலைகள் உருவாகின்றன. இவ்வலைகள் சராசரியாக மணிக்கும் 500 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். இவ்வலைகளின் நீளம் 600 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கும். இந்த அலைகள் கடற்கரையை அடையும்போது 15 மீ உயரம் வரை உயர்ந்து காணப்படும். இவை கடற்கரையோரப் பகுதியில் அதிகமான சேதத்தை ஏற்படுத்தும்.
4.
மடிப்பு மற்றும் பிளவு : கிடைமட்ட அழுத்த விசையின் காரணமாக புவித்தட்டுகள் மேலும் கீழும் நகர்வதால் மடிப்புகள் உருவாகின்றன. பாறைகளில் ஏற்பட்ட மடிப்பின் காரணமாக உருவாகும் மலைகள் மடிப்பு மலைகள் எனப்படுகின்றன.
புவித்தட்டுகளின் அசைவினால் பாறைகளின் மீது அழுத்தம் மற்றும் இறுக்கும் ஏற்பட்டு அவை விரிவடைகின்றன. அதனால் பாறைகளில் விரிசல்கள் தோன்றுகின்றன. இவிரிசல்கள் பிளவுகள் எனப்படும்.
5.
பாறைக்கோளம் பல புவித்தட்டுகளாய் பிரிக்கப்பட்டுள்ளது. புவித்தட்டுகள் , முதன்மை புவித்தட்டுகள் என்றும் சிறிய புவித்தட்டுகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.
6.
பாறைக்கோளத்தின் ஒரு பகுதி மண்கோளம் ஆகும். இது மண் மற்றும் தூசுகளால் ஆனது. பாறைக்கோளம், நிர்க்கோளம் மற்றும் வாயுக் கோளம் மற்றும் உயிர்க்கோளம் சந்திக்குமிடத்தில் மண்கோளம் காணப்படுகிறது.
7.
புவியின் நான்கு கோளங்ள் என்பன பாறைக்கோளம், நீர்க்கோளம், வளிக்கோளம் மற்றும் உயிர்க்கோளம் ஆகும். புவியானது பாறையினால் ஆன பந்து போன்ற அமைப்புடையது. இதனைப் பாறைக்கோளம் எனவும், நீரினால் சூழப்பட்ட பகுதியை நீர்க்கோளம் எனவும், காற்றால் சூழப்பட்ட பகுதி வழிக்கோளம் எனவும் அழைக்கிறோம். இம்மூன்று கோளங்களும் சந்திக்கும் இடத்தில் உயிரினங்ள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதால் இப்பகுதி உயிர்க்கோளம் எனப்படுகிறது.
8.
தீப்பாறைகளை முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாய்ப்பாறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. ஏனென்றால் மற்ற பாறைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இப்பாறைகளில் இருந்தே உருவாகின்றன.
9.
நாம் வாழும் புவியின் மேலடுக்கு புவிமேலோடு ஆகும். புவிமேலோடு திடமாகவும், இறுக்கமாகவும் உள்ளது. புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம். கவசத்தின் மேற்பகுதியில் திடமாகவும், கீழ்ப்பகுதியில் உருகிய நிலையிலும் காணப்படுகின்றன. எனவே புவிமேலோடு கவசத்தின் மீது மிதக்கின்றது.
10.
| கவச எரிமலை | கும்மட்ட எரிமலை |
| அதிக பிசுபிசுப்புடன் கூடிய பாறைக்குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தோடி கேடயம் போன்ற வடிவத்தில் மென்சரிவுடன் காணப்படும். | சிலிகா அதிகமுள்ள எரிமலை குழம்பு அதிகப் பிசுபிசுப்புடன் வெளியேறும். நீண்ட தூரத்திற்கு பரவ முடியாமல் எரிமலை வாய்க்கு அருகிலேயே வட்ட வடிவத்தில் படிந்து சிறு குன்று போலக் காணப்படும். |
| எ.கா. - மௌனலோவா எரிமலை - ஹவாய்த் தீவு | எ.கா. - பாரிக் கியூட்டன் எரிமலை - மெக்சிகோ |
11.
| விலகும் எல்லை | இணையும் எல்லை |
| புவித்தட்டுகள் ஒன்றை விட்டு ஒன்று விளங்கும் போது மேக்மா எனப்படும் பாறைக்குழம்பு புவிக் கவசத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. | புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது சில நேரங்களில் கீழ்நோக்கு சொருகுதல் நிகழ்வு நடைபெறும். இப்பகுதியை புவித்தட்டுகள் அமிழ்தல் மண்டலம் என்கிறோம். |
12.
| கருவம் (core) | மேலோடு (crust) |
| புவியின் கவசத்திற்குக் கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படும். | நாம் வாழும் புவியின் மேல் அடுக்கு புவி மேலோடு எனப்படும். |
| இவ்வடுக்கு நைஃப் (NIFE) என்று அழைக்கப்படும். | இவ்வடுக்கு சியால் (SIAL) என்று அழைக்கப்படும். |
| இதில் நிக்கலும் (NI) இரும்பும் (FE) அதிகம் காணப்படும். | இதில் சிலிகா (SI) மற்றும் அலுமினியம் (AI) அதிகம் காணப்படும். |
13.
எரிமலையின் விளைவுகள்.
அ) நன்மைகள்:
(i) எரிமலைகளிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மண்ணை வளமிக்கதாக்குகிறது.
(ii) அதனால் வேளாண் தொழில் மேம்படுகிறது.
(iii) எரிமலைகள் உள்ள பகுதிகள் புவி வெப்ப சக்தியை (Geothreniral energy) பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.
(iv) உறங்கும் எரிமலையும், செயல்படும் எரிமலையும் உலகில் சிறந்த சுற்றுலாத் தளங்கள் ஆகும்.
(v) எரிமலைகளிலிருந்து வெளிவரும் பொருட்கள் கட்டிடத் தொழிலுக்குப் பயன்படுகிறது.
ஆ) தீமைகள்:
(i) எரிமலை வெடிப்பினால் புவி அதிர்ச்சி, திடீர் வெள்ளம், சேறு வழிதல் மற்றும் பாறை சரிதல் போன்றவை நிகழ்கின்றன.
(ii) வெகுதூரம் பயணிக்கும் பாறைக்குழம்பானது தன் பாதையில் உள்ள அனைத்தையும் எரித்தும், புதைத்தும் சேதப்படுத்துகிறது.
(iii) அதிக அளவில் வெளிப்படும் தூசு மற்றும் சாம்பல் நமக்கு எரிச்சலையும் மூச்சு விடுவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது.
(iv) எரிமலை வெடிப்பு அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்திற்கும் இடையூறை உண்டாக்குகின்றன.
14.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் நிலத்தோற்றங்களை உருவாக்குவதிலும், மறு உருவாக்கம் செய்வதிலும் இரண்டு முதன்மைச் செயல்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அவை, அகச் செயல்முறைகள் மற்றும் புறச்செயல்முறைகள் ஆகும்.
அ) அகச்செயல்முறைகள்:
(i) புவியின் உட்பகுதியிலிருந்து புவியின் மேற்பரப்பை நோக்கிச் செயல்படும் விசைகளே 'அகச்செயல் முறைகள்' எனப்படுகின்றன.
(ii) இவ்விசைகள் புவியின் நிலப்பரப்பில் பல்வேறு நிலத்தோற்றங்களை உருவாக்குகின்றன.
(iii) புவியின் வெகு ஆழத்தில் உருவாகும் வெப்பத்தினால் புவிமேலோட்டின் கீழ் காணப்படும் பொருள்கள் வெளித்தள்ளப்படுகின்றன. இச்செயல்பாட்டில் புவியின் உள்ளே உள்ள கதிர்வீச்சு முக்கியப் பங்காற்றுகின்றது.
ஆ) புவிப்புறச் செயல்முறைகள்
(i) இச்செயல் முறைகள் புவியில் உள்ள பொருள்களின் மீது அழுத்தத்தையும், மறு உருவாக்கத்தையும் ஏற்படுத்தி புவிமேற்பரப்பில் உள்ள பொருள்களின் மீது மாற்றத்தை உண்டாக்குகின்றன. இவை 'புவிப்புறச் செயல்முறைகள்' எனப்படுகின்றன.
(ii) புவியின் மேற்பரப்பில் செயல்படும் இயற்கைக் காரணிகளான ஆறுகள், பனியாறுகள், காற்று, அலைகள் போன்ற விசைகள் 'புவிப்புறச் செயல்முறை' காரணிகள் எனப்படுகின்றன. இக்காரணிகள் நிலத்தின் மேற்பரப்பினை அரித்து தாழ்நிலச் சமவெளிகளில் படிய வைத்து அவற்றை உயர்த்துகின்றன.
15.
16.
பசிபிக் பெருங்கடல்
17.
நில அதிர்வு அளவைப்படம்
18.
புவித்தட்டு அமிழ்தல்
19.
சிமா
20.
எரிமலை வெடிப்பு
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards