9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
பாறைக்கோளம் – II புவி புறச்செயல்முறைகள்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?
ஆசியா
தக்காண பீடபூமி
குலு பள்ளத்தாக்கு
மெரினா கடற்கரை
2.
________ ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன
காற்று
பனியாறு
ஆறு
நிலத்தடி நீர்
3.
கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________
கடல் அலை அரித்தல்
ஆற்று நீர் அரித்தல்
பனியாறு அரித்தல்
காற்றின் படியவைத்தல்
4.
________ ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்
துள்ளல்
வண்டல் விசிறி
டெல்டா
மலை இடுக்கு
5.
பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது
வானிலைச் சிதைவு
அரித்தல்
கடத்துதல்
படியவைத்தல்
6.
மூப்பு நிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.
7.
பாலைவனங்களில் சமன்படுத்தலின் ஒரே காரணி காற்றாகும்.
8.
கடல் அலை அரிமேடை என்றால் என்ன?
9.
வரையறு – அ) மொரைன் ஆ) டிரம்லின் இ) எஸ்கர்
10.
குருட்டு ஆறு என்றால் என்ன?
11.
உயிரினச் சிதைவு என்றால் என்ன?
12.
வானிலைச் சிதைவு – வரையறு.
13.
நீண்ட மணல்திட்டு மற்றும் மணல் திட்டு
14.
இன்சல்பர்க் மற்றும் யார்டங்
15.
கல்விழுது மற்றும் கல்முளை
16.
இயற்பியல் சிதைவு மற்றும் இரசாயனச் சிதைவு.
17.
நிலத்தோற்றங்களின் மூன்று நிலைகளை விவரி.
18.
நிலத்தடி நீரின், அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி
19.
ஓங்கல்
20.
கல் விழுது
21.
எஸ்கர்
22.
காளான் பாறை
23.
கிளையாறு
1.
(b)
தக்காண பீடபூமி
2.
(b)
பனியாறு
3.
(a)
கடல் அலை அரித்தல்
4.
(c)
டெல்டா
5.
(a)
வானிலைச் சிதைவு
6.
காரணம்: இளநிலை மற்றும் முதிர் நிலையில் அரித்து கடத்தி வரப்பட்ட பொருட்கள் தாழ்நில சமவெளிகளில் படிய வைக்கப்படுகின்றன. இவ்வாறு படிவுகள் நிரப்பப்படுவதால் முதன்மை ஆறு மூப்பு நிலையில் அகன்று காணப்படுகிறது.
7.
காற்றின் செயல்பாடுகளான அரித்தல், கடத்துதல் மற்றும் படிய வைத்தல் பாலைவனம் பகுதிகளில் அதிகமாக காணப்படுவதால் பாலைவனங்களில் சமன்படுத்துதலின் ஒரே காரணியாக காற்று விளங்குகிறது.
8.
1. ஓங்கல்களின் மீது அலைகள் மோதுவதால் சற்று உயரத்தில் அரித்தல் ஏற்பட்டு அலை அரிமேடை தோன்றுகிறது. அலை அரிமேடை, பென்ச், திட்டு (Shelf), திடல் (Terrace), சமவெளி (Plain) எனவும் அழைக்கப்படுகின்றன.
9.
அ) மொரைன்: பனியாறுகளால் படியவைக்கப்படும் படிவுகளை மொரைன்கள் எனப்படுகின்றன.
ஆ) டிரம்லின்: கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியைப் போன்றோ அல்லது பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்றோ காட்சியளிக்கும் மொரைன்கள் டிரம்லின்கள் எனப்படுகின்றன.
இ) எஸ்கர்: பனியாறுகள் உருகுவதால் அவை கொண்டு வரும் கூழாங்கற்கள், சரளைக்கற்கள் மற்றும் மணல் ஒரு நீண்ட குறுகிய தொடர் குன்று போன்று பனியாற்றுக்கு இணையாகப் படிய வைக்கப்படுகிறது. இவ்வாறு படியவைக்கப்படும் குறுகிய தொடர் குன்றுகளே எஸ்கர்கள் எனப்படுகின்றன.
10.
ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது. இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படுகிறது.
11.
1. தாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்களின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது. மண்புழுக்களாலும், விலங்கினங்களாலும் (எலி மற்றும் முயல்) மற்றும் மனிதச் செயல்பாடுகளினாலும் பாறைகள் சிதைவுறுதலை உயிரினச் சிதைவு எனப்படும்.
12.
வளிமண்டல நிகழ்வோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும் (Disintegration), அழிதலுக்கும் (Decomposition) உட்படுகின்றன.
இச்செயல்பாடுகளையே வானிலைச் சிதைவு என அழைக்கிறோம்.
13.
| நீண்ட மணல்திட்டு | மணல் திட்டு |
| மணல் திட்டின் ஒருமுறை நிலத்தோடு இணைந்தும் மறுமுனை கடலை நோக்கி நீண்டும் காணப்படும். | கடற்கரையில் மணற் படிவுகளால் ஆன நீண்ட நிலத்தோற்றமே மணல் திட்டு எனப்படும். |
| நீண்ட மணல் திட்டுகள் பொதுவாக ஓத பொங்கு முகங்களில் காணப்படும். | இம்மணல் திட்டு பெரும்பாலும் கடற்கரைக்கு இணையாகக் காணப்படும். |
14.
| இன்சல்பர்க் | யார்டங் |
| வறண்ட பிரதேசங்களில் காணப்படும் தீப்பாறைகள் காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றமே இன்சல்பர்க் ஆகும். | வறண்ட பிரதேசங்களில் செங்குத்தாக அமைந்திருக்கும் சில பாறைகள் கடின மற்றும் மென் பாறை என மாறி மாறி அமைந்திருக்கும். காற்றினால் அரிக்கப்படாத கடினபாறைகள் ஒழுங்கற்ற முகடுகள் போன்று காட்சியளிக்கும். இவை யார்டங் எனப்படும். |
15.
| கல்விழுது | கல்முளை |
| இது நிலத்தடி நீர் படிவுகள் நிலத் தோற்றமாகும். | இது நிலத்தடி நீர் படிவ நிலத் தோற்றமாகும். |
| குகைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் நீராவியாகும் போது கால்சைட் விழுதுகள் போன்று காட்சியளிக்கும். இது கல்விழுது என்று அழைக்கப்படுகிறது. | கால்சியம் கார்பனேட் கலந்த நீர் தரையில் படிந்து மேல் நோக்கி வளர்வது கல்முளை எனப்படுகிறது. |
16.
| இயற்பியல் சிதைவு | இரசாயனச் சிதைவு |
| இயற் சக்திகளால் பாறைகள் வேதியியல் மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுவதே இயற் சிதைவு எனப்படுகிறது . | பாறைகளில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுவதால் அவை உடைந்து சிதைவுறுகின்றன. இதனை வேதியியல் சிதைவு என்கிறோம். |
| பகல் நேரத்தில் அதிக வெப்பம் காரணமாக பாறைகள் விரிவடைகின்றன. இரவு அதிக குளிரின் காரணமாக அவை சுருங்குகின்றன. இத்தொடர்ச்சியான நிகழ்வின் காரணமாக பாறைகளில் விரிசல் ஏற்பட்டு அவை உடைந்து சிதறுகின்றன. | ஆக்ஸிகிரணம் (Oxidation) கார்பனாக்கம் (Carbonation) கரைதல் (Solution) நீர்க்கொள்ளல் (Hydration) ஆகிய செயல்பாடுகளினால் வேதியியல் சிதைவு ஏற்படுகிறது. |
17.
முக்கிய நிலத்தோற்றங்களில் முதல் நிலை நிலத்தோற்றம் கண்டங்களும் கடல்களும் ஆகும்.
இரண்டாம் நிலை நிலத்தோற்றம்: கண்டங்களிலும் கடல்களிலும் காணப்படும் மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், குறுகிய நிலத்தோற்றங்கள் டெல்டா, பனியாறு, குடாக்கள், மணல் மேடுகள், கடற்கரை, பள்ளத்தாக்கு, சரக், காளான் பாறை, சுண்ணம் பாறை, குகை போன்றவை.
18.
நிலத்தடி நீரின் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள்:
(i)டெர்ரா ரோஸா (இத்தாலிய மொழியில் செம்மண்) : சுண்ணாம்பு நிலப்பிரதேசங்களி உள்ள சுண்ணாம்பு மண் கரைந்து சிதைவுற்ற பின்னர் அதிலுள்ள எஞ்சிய செம்மண் இங் படியவைக்கப்படுவதால் இந்நிலத்தோற்றம் உருவாக்கப்படுகிறது. இம்மண் சிகப்பு நிறம காணப்படுவதற்கு அதிலுள்ள இரும்பு ஆக்ஸைடு காரணமாகும்.
(ii)லேப்பீஸ் : கரடு முரடாக உள்ள கண்ணாம்புப் பாறைகளிடையே நிலத்தடி நீர் நெளிந்து ஓடு போது நீண்ட அரிப்புக் குடைவுகள் ஏற்படுகின்றன. இக்குடைவுகளே லேப்பீஸ்கள் என் அழைக்கப்படுகின்றன.
iii) உறிஞ்சு துளைகள்: சுண்ணாம்பு பாறைகள் கரைதலினால் ஏற்படும் புனல் வடிவப் பள்ளங்க உறிஞ்சு துளைகள் எனப்படுகின்றன. இதன் சராசரி ஆழம் 3 முதல் 9 மீட்டர் வரை காணப்படு
iv) குகைகள் மற்றும் அடிநிலக் குகைகள் : குகைகளும், அடிநிலக் குகைகளும் சுண்ணாம் பிரதேசங்களில் நிலத்தடியில் காணப்படும் நிலத் தோற்றங்களாகும். கரியமில அமிலம் கண்ணாட பாறைகளில் வினைபுரிவதால் ஏற்படும் வெற்றிடம் குகை எனப்படுகிறது. இவை உருவத்திலு அளவிலும் வேறுபட்டுக் காணப்படும். அடிநிலைக் குகைகளின் தரைப்பகுதி சமமற்றுக் காணப்படு (உதாரணம்) மேற்கு பீஹாரிலுள்ள குப்ததாம்.
v) குகைகளிலும், அடிநிலக்குகைகளிலும் படிய வைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஸ்பீலியோதெம்ஸ் என அழைக்கப்படுகின்றன. ட்ரேவர்டைன், டூஃபா மற்றும் சொட்டுப்படிவுக ஸ்பீலியோதெம்ஸில் அடங்கும்.
vi) குகைகள், யுவாலாக்கள், போலின்கள், போல்ஜேக்கள் போன்ற நிலத்தோற்றங்கள் உலகின் பி பகுதிகளில் காணப்படும் சுண்ணாம்பு நிலப்பிரதேச நிலத்தோற்றங்கள் ஆகும்.
19.
கடல் அலைச் செயல்
20.
சுண்ணாம்புப் பாறை
21.
பனியாற்றின் செயல்பாடு
22.
ஏயோலியன்
23.
ஆற்றின் மூப்பு நிலை
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards