9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் ஆயத்தொலை வடிவியல்,முக்கோணவியல் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Coordinate Geometry,Trigonometry Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு கணிதம் அளவியல்,புள்ளியியல்&நிகழ்தகவு முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Maths Mensuration,Statistics&Probability Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - செவ்வியல் உலகம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Classical World Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும்முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Early Tamil Society and Culture Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - தொழிற்புரட்சி முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Industrial Revolution Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - நவீன யுகத்தின் தொடக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Beginning of the Modern AgeImportant 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.

Published on: 31/07/2019
வளிமண்டலம்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
_______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது
இடைப்பட்ட திரள் மேகங்கள்
இடைப்பட்ட படை மேகங்கள்
கார்படை மேகங்கள்
கீற்றுப்படை மேகங்கள்
2.
_______ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்
துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்
துருவ உயர் அழுத்த மண்டலம்
3.
வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது
மாறுகின்ற செயல்பாட்டினை _______________ என்று அழைக்கிறோம்.
பொழிவு
ஆவியாதல்
நீராவிப்போக்கு
சுருங்குதல்
4.
_______________ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.
வெளியடுக்கு
அயன அடுக்கு
இடையடுக்கு
மீள் அடுக்கு
5.
________ உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.
ஹீலியம்
கார்பன் – டை ஆக்சைடு
ஆக்சிஜன்
மீத்தேன்
6.
சூறாவளிகளை வகைப்படுத்து.
7.
மழைப் பொழிவு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
8.
மேகங்கள் எவ்வாறு உருவாகின்றன?
9.
சிறு குறிப்பு வரைக.
அ) வியாபாரக்காற்றுகள்
ஆ) கர்ஜிக்கும் நாற்பதுகள்
10.
கோள் காற்றுகளின் அமைப்பை விளக்குக?
11.
வளிமண்டலத்தை வெப்பமாக்குகின்ற செயல்முறைகளை – விளக்குக
12.
வெயிற்காய்வு என்றால் என்ன?
13.
காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை
14.
வளிமண்டல அடுக்குகள் யாவை?
15.
வளிமண்டலம் - வரையறு?
16.
வெப்பச்சூறாவளி மற்றும் மித வெப்பச் சூறாவளி
17.
நிலக்காற்று மற்றும் கடற்காற்று
18.
வானிலை மற்றும் காலநிலை
19.
துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகின்றன.
20.
வெப்பச்சலன மழை 4 மணி மழை என்று அழைக்கப்படுகிறது.
21.
மேகமூட்டத்துடன் இருக்கும் நாள்களை விட மேகமில்லாத நாள்கள் வெப்பமாக இருக்கிறது
22.
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம் ஒரு அமைதிப் பகுதி.
23.
சூறாவளிகள் எவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி
24.
வளிமண்டலத்தின் அமைப்பைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுக
25.
வில்லி வில்லி
26.
காற்று மோதாப்பக்கம்
27.
காற்று திசைமானி
28.
காற்று வேகமானி
29.
வானிலையியல்
1.
(a)
இடைப்பட்ட திரள் மேகங்கள்
2.
(a)
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
3.
(d)
சுருங்குதல்
4.
(c)
இடையடுக்கு
5.
(c)
ஆக்சிஜன்
6.
1. சைக்ளோன் எனும் சொல் ஒரு கிரேக்க சொல்லாகும். இதற்கு சுருண்ட பாம்பு என்று பொருளாகும்.
2. அதிக அழுத்தமுள்ள பகுதியிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள பகுதிகளுக்கு சுழல் வடிவத்தில் குவியும் காற்று சூறாவளி என்று அழைக்கப்படுகிறது.
வகைகள்:
i) வெப்பச் சுறாவளிகள்
ii) மிதவெப்பச் சூறாவளிகள்
ili) கூடுதல் வெப்பச் சூறாவளிகள்
7.
சுருங்கிய நீராவி நீரின் பல்வேறு வடிவங்களில் புவியை வந்தடைகின்ற நிகழ்வே பொழிவு எனப்படுகிறது. சாரல், மழை, பனிப்பொழிவு, பனிப்படிவு, ஆலங்கட்டி மழை போன்றவை பொழிவின் வகைகளாகும்.
8.
(i) நீராவியிலிருந்து பெறப்பட்ட உப்புத்துகள்கள், புகை போன்றவற்றின்மீது குளிர்ந்த ஈரப்பதமான காற்று படிவதன் மூலம் மேகங்கள் உருவாகின்றன.
(ii) சில நேரங்களில் வெப்பக்காற்றும் ஈரப்பதம் நிறைந்தக் காற்றும் ஒன்றிணையும் போதும் மேகங்கள் உருவாக்கப்படுகின்றன.
(iii) வளிமண்டலத்தில் கண்களுக்கு புலப்படும்படியாக மிதந்து கொண்டிருக்கும் குளிர்ந்த நீர்த்திவலைகளே மேகங்களாகும்.
9.
வியாபாரக் காற்றுகள்:
(i) வட மற்றும் தென் அரைக் கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று 'வியாபாரக் காற்று' எனப்படும்.
(ii) இக்காற்றுகள் தொடர்ச்சியாகவும். அதிக வலிமையுடனும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன.வியாபாரிகள் கடல் வழி பயணத்திற்கு இக்காற்றுகள் உதவியாக இருந்ததால் இக்காற்று 'வியாபாரக்காற்று' என அழைக்கப்படுகின்றது.
(iii) இக்காற்று பெருங்கடல்களில் பயணிக்கும்போது அதிக ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள கண்டங்களின் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் அதிக மழைப்பொழிவைப் பெறுகின்றன. மேலும் இக்காற்று மேற்கு நோக்கி நகரும் போது வறண்டு விடுவதால் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவைத் தருவதில்லை.
கர்ஜிக்கும் நாற்பது:
(i) மேலைக் காற்றுகள் நிலையான காற்றுகள் ஆகும். இவை வட, தென்அரைக்கோளங்களின் வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன.
(ii) இவை வட அரைக்கோளத்தில் தென்மேற்கிலிருந்து, வடகிழக்காகவும், தென் அரைக்கோளத்தில் வடமேற்கிலிருந்து, தென்கிழக்காகவும் வீசுகின்றன.
(iii) மேலைக் காற்றுகள் மிகவும் வேகமாக வீசக்கூடியவை, எனவே, இக்காற்றுகள் 40" "கர்ஜிக்கும் நாற்பதுகள்" எனவும் 50” அட்சங்களில் "சீறும் ஐம்பதுகள்" எனவும் 60" அட்சங்களில் கதறும் அறுபதுகள்" எனவும் அழைக்கப்படுகிறது
10.
(i) வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள் காற்று எனப்படும்.
(ii) இவை நிலவும்காற்று (Prevailing Winds) எனவும் அழைக்கப்படுகிறது.வியாபாரக்காற்றுகள்,(Trade Winds) 'மேலைக்காற்றுகள்'மற்றும் 'துருவகீழைக்காற்றுகள்' (Polar Easterfics) கோள் காற்றுகள் ஆகும்.
11.
புவி வெப்பமடைய செய்தலில் பல்வேறு செயல்பாடுகள் உள்ளன. அவை கதிர்வீச்சு (Radiation), வெப்பக் கடத்தல் (Conduction), வெப்பச் சலனம்(Convection) மற்றும் வெப்பக்கிடை அசைவு (Advection) ஆகும்.
12.
சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்பம் குறுகிய அலைகளாக புவியை வந்தடைகிறது. இதனை வெயிற்காய்வு அல்லது கதிர்வீச்சு என்கிறோம்.
13.
(i) நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்
(ii) கடல் மட்டத்திலிருந்து உயரம்
(iii) கடலிலிருந்து தூரம்
(iv) வீசும் காற்றின் தன்மை
(v) மலைகளின் இடையூறு
(vi) மேக மூட்டம்
(vii) கடல் நீரோட்டங்கள்
(viii) இயற்கைத் தாவரங்கள்
14.
i) கீழடுக்கு
ii) மீள் அடுக்கு
iii) இடையடுக்கு
iv) வெப்ப அடுக்கு
v) வெளியடுக்கு
15.
(i) புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்றுப் படலம் வளிமண்டலம் என அழைக்கப்படுகிறது.
(ii) புவியை வளிமண்டலம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதன் ஈர்ப்பு விசையே காரணமாகும்.
(iii) வாயுக்கள். நீராவி மற்றும் தூசுகள் வளிமண்டலத்தில் வேறுபட்ட விகிதத்தில் கலந்து காணப்படுகின்றன.
16.
| வ.எண் | வெப்பச்சூறாவளி | மித வெப்பச் சூறாவளி |
|---|---|---|
| 1 | வெப்பச் சூறாவளிகள் வெப்ப மண்டலங்களுக்கு இடையேயான காற்றை / ஒருமுகப்படுத்தும் பகுதிகளில் (Inter Tropical | Convergence Zones(ITCZ) உருவாகின்றன. | 35° முதல் 65° வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிர்காற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உருவாகின்றன. |
| 2 | இவை நிலமும் நீரும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால் உருவாகின்றன | மித வெப்பச் சூறாவளிகள் வெப்பச் சூறாவளிகள் போல நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காது. |
| 3 | இவை இந்தியப் பெருங்கடல் பகுதியில் | சூறாவளிகள் (Cyclone) என்றும், மேற்கு பசிபிக்பெருங்கடலில் டைபூன்கள் (Typhoons) என்றும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் / ஹரிக்கேன்கள் (Hurricanes) என்றும் | பிலிப்பைன்ஸ் பகுதிகளில் பேக்யுஸ் (Baguios) என்றும், ஆஸ்திரேலியாவில் வில்லிவில்லி | (Wily Wily) என்றும் அழைக்கப்படுகிறது | இச்சூறாவளிகள் பொதுவாக வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி, வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் இச்சூறாவளிகள் ரஷ்யா மற்றும் இந்தியப்பகுதி வரை பரவி வீசுகின்றன. இந்தியாவை அடையும் இக்காற்று 'மேற்கத்திய இடையூறு காற்று (Western Disturbance) என்று அழைக்கப்படுகிறது. |
17.
| வ.எண் | நிலக்காற்று | கடல் காற்று |
|---|---|---|
| 1 | இரவு வேளைகளில் கடலை விட நிலம் | விரைவாக குளிர்ந்து விடுகிறது. இக்குளிர்ந்த / காற்று கீழ்நோக்கி இறங்கி அதிக | அழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால் நிலத்திலிருந்து காற்று கடல் பகுதியை நோக்கி வீசுகிறது. இதுவே 'நிலக்காற்று' | (Land breeze) என அழைக்கப்படுகிறது | பகல் வேளைகளில், கடலை விட நிலப்பகுதி விரைவாக வெப்பமடைந்து காற்று மேல்நோக்கிச் செல்கிறது. இதன் காரணமாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்தம் உருவாகிறது. இதனால் கடலிலிருந்து காற்று மதிய வேளைகளில் நிலத்தை நோக்கி வீசுகின்றது. இது 'கடற்காற்று'(Sea breeze) என்று அழைக்கப்படுகிறது. இக்கடற்காற்றுகள் கோடைக் காலங்களில் நிலப்பகுதிகளில் வெப்பம் குறைவதற்கு காரணமாக உள்ளது. |
18.
| வ.எண் | வானிலை | காலநிலை |
|---|---|---|
| 1 | ஒரு நாளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வளிமண்டல மாற்றத்தைப் பற்றி அறிவது 'வானிலை' ஆகும். | நீண்ட காலத்திற்கு மிகப் பரந்த நிலப்பரப்பில் ஏற்படும் வானிலையின் சராசரியே காலநிலையாகும். |
| 2 | ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு நாளுக்கும் அடிக்கடி மாறக்கூடியதாக உள்ளது. | ஏறக்குறைய மாறுதலுக்கு உட்படாமல் இருக்கிறது. |
| 3 | ஒரே நாளில் ஓர் இடத்தில் காலை நேரத்தில் வெப்பமாகவும் நண்பகலில் மழைப் பொழிவும் என வேறுபட்ட வானிலைநிகழ்வுகள் ஏற்படும். |
ஓரிடத்தில் ஒரே வகையான காலநிலை காணப்படும். |
| 4 | வானிலை ஆராய்ச்சி மையங்களில் ஒவ்வொரு நாளும் வானிலை விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. | வானிலைத் தகவல்களின் சராசரியே காலநிலை ஆகும். |
| 5 | வானிலையைப் பற்றிய படிப்பு வானிலையியல் ஆகும். | காலநிலை பற்றிய படிப்பு காலநிலையியல் ஆகும். |
19.
துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ச்சியாகவும், வறண்டும் காணப்படுகின்றன. இக்காற்றுகள் பூமத்திய ரேகைக்கு வடக்கில் இருந்தும், தெற்கில் இருந்தும் வீசினாலும் புவிசுழற்சியின் காரணமாக இவை முறையே வடகிழக்கிலிருந்தும் தென் கிழக்கில் இருந்தும் திசைமாறி வீசுகின்றன. இக்காற்று வலுவிழந்த காற்றாக உள்ளதால் வறண்டு காணப்படுகிறது.
20.
பகல் பொழுதில் சூரியக் கதிர்வீச்சினால் புவி வேகமாக வெப்பமடைகிறது. புவி மேற்பரப்பிலுள்ள காற்று வெப்பத்தால் விரிவடைந்து லேசாகி மேலெழும்புகிறது. மேலே சென்ற காற்று குளிர்ந்து சுருங்கி மேகங்களாக மாறி மாலைப் பொழுதில் மழையைக் கொடுக்கிறது. மாலை வேலைகளில் அடிக்கடி கோடை காலங்களில் நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் பெய்வதால் வெப்ப சலன மழை 4 மணி மழை என்றழைக்கப்படுகிறது.
21.
மேகங்கள் வளிமண்டலத்தில் சூரியக் கதிர் வீச்சினை அதிக அளவு பிரதிபலிக்கின்றன. இது புவியின் மீது விழும் வெப்பத்தினைத் தடுக்கிறது. எனவே மேகம் இல்லாத பாலைவனப் பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாகவும் மேகங்கள் காணப்படும் பகுதிகளில் வெப்பத்தின் அளவு குறைவாகவும் காணப்படும்.
22.
நிலநடுக்கோட்டிலிருந்து 50 வட, தென் அட்சங்களுக்கு இடையே உள்ள நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் சூரியனின் செங்குத்தான கதிர்கள் அப்பகுதியை வெப்பமடையச் செய்கின்றன. காற்று வெப்பத்தால் விரிவடைந்து மேல்நோக்கிச் செல்வதால் தாழ்வழுத்தம் உருவாகின்றது. இதனால் இம்மண்டலம் அமைதி மண்டலம் எனப்படுகிறது.
23.
(அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து காற்று குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்குழல் வடிவத்தில் குவியும் காற்று ஆறாவளி (Cyclone) என்று அழைக்கப்படுகிறது.
(1) புவியின் கழற்சியினால் சூராவாணி வட அரைகோளத்தில் கடிகாரச்சுற்றுக்கு எதிர்த்திசையிலும், தென் அரைகோளத்தில் கடிகாரத்திசையிலும் வீசுகிறது. குறாவளிகள் மூன்று வகைப்படும். அவைகள். வெப்பச்சூறாவளிகள் மிதவெப்பச்சூறாவர்கள் கூடுதல்வெப்பர்சூறாவளிகள்
அ) வெப்பச்சூறாவளிகள்!
(1) வெப்பச் சூறாவளிகள் வெப்ப மண்டலங்களுக்கு இடையேயான காற்றை ஒருமுகப்படுத்தும்
Laari (Inter Tropical Cimvangenee Zones(ITCZ) Rzadkien.
(I) இவை நிலமும் நீரும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால் உருவாகின்றன.
(1) இலை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ராவளிகள் (Cyclone) என்றும், மேற்கு பரிபிர்பெருங்கடலில் ஸ்டபூன்கள் |Typom) என்றும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லெண்டிக் பெருங்கடல் பகுதிகளில் ஹரிக்கேன்கள் Hurricaner) என்றும், பிலிப்பைன்ஸ் பகுதிகளில் பேசியுஸ் (Ragnion) என்றும், ஆஸ்திரேலியாவில் வில்லிவில்லி (Wity Wily) என்றும் அழைக்கப்படுகிறது.
(v) வெப்ப ாவளிகள் கடலோரப் பகுதிகளில் அதிகமான உயிர்ச்சேதங்களையும். பொருளாதாரச் சேதங்களையும் ஏற்படுத்திய பின்னர் நிலப்பகுதியைச் சென்றடையும்
ஆ) மிதவெப்பக்சூராவளிகள்
(1) 35 முதல் 65" வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிகொற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உருவாகின்றன.
மித வெப்பச் சூறாவளிகள் வெப்பச் சூறாவளிகள் போல நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காது
(iii) இச்ாவளிகள் பொதுவாக வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் இச்சூறாவளிகள் ரஷ்யா மற்றும் இந்தியப் பகுதி வரை புரவி வீசுகின்றன. இந்தியாவை அடையும் இக்காற்று மேற்கத்திய இடையூறு காற்று (Wism Disturbance என்று அழைக்கப்படுகிறது.
இ) கூடுதல்வெப்பக்சூராவளிகள்:
அடுநல் வெப்பர் சூறாவளிகள் என்பது 30 முதல் 60 வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப் பகுதிகளில் வீசுகின்றன. இது 'மைய அட்ச சூறாவளிகr (Late Cyc என்றும் அழைக்கப்படுகின்றன
(II) இச்சூறாவளிகள் தன் ஆற்றலை உயர் அட்சங்களின் வெப்ப மாற்றங்களிலிருந்து பெறுகின்றன. இது லேசான சாரல்மழை (Mil முதல் பெருங்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழைப்பொழிலையும் (Harry hall) இடியுடன் கூடிய மழைப்பொழிலையும் பனிப்பொழிலையும் ) மற்றும் சுழல் காற்றுகளையும்(Tomatoes) அளிக்கின்றன
24.
வளிமண்டல அடுக்குகள்:
i) வளிமண்டலம் புவியின் அருகாமைப் பகுதியில் அடர்த்தியாகவும் உயரே செல்லச் செல்ல அடர்த்தி குறைந்து இறுதியில் அண்ட வெளியோடு கலந்து விடுகிறது.
(ii) இவ்வளிமண்டலம் ஐந்து அடுக்குகளாகக் காணப்படுகின்றது. அவை வளிமண்டல கீழடுக்கு, மீள் அடுக்கு, இடையடுக்கு, வெப்ப அடுக்கு மற்றும் வெளியடுக்கு போன்றவை ஆகும்.
அ) வளிமண்டல கீழடுக்கு:
(i) இது வளிமண்டலத்தின் கீழடுக்காகும்.
(ii) இவ்வடுக்கு துருவப்பகுதியில் 8 கி.மீ. உயர அளவிலும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் 18 கி.மீ உயர வரையிலும் காணப்படுகிறது.
(iii) இவ்வடுக்கில் உயரே செல்லச் செல்ல வெப்பநிலை குறையும்.
(iv) இவ்வடுக்கில்தான் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
ஆ) மீள்அடுக்கு:
(i) கீழடுக்கிற்கு மேல், மீள் அடுக்கு அமைந்துள்ளது.
(ii) இது வளிமண்டலத்தில் 50 கி.மீ. வரை பரவியுள்ளள்ளது.
(iii) இங்கு ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால், இது 'ஓசோனோஸ்பியர்' என்று அழைக்கப்படுகிறது.
(iv) இங்கு உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரிக்கின்றது. இந்த அடுக்கு ஜெட்விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ளது.
இ) இடையடுக்கு:
(i) இடையடுக்கு (மீசோஸ்பியர்) என்பது வளிமண்டலத்தில் 50 கி.மீ முதல் 80 கி.மீ உயரம்வரை காணப்படுகிறது. இங்கு உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை கூடுகின்றது
ii) புவியிலிருந்து பெறப்படும் வானொலி அலைகள் இவ்வடுக்கிலிருந்து தான் புவிக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.
(iii) புவியை நோக்கி வரும் விண்கற்கள் இவ்வடுக்கில் நுழைந்ததும் எரிவிக்கப்படுகின்றன.
ஈ) வெப்ப அடுக்கு:
(i) இடையடுக்கிற்கு மேல் காணப்படும் அடுக்கு, வெப்ப அடுக்கு ஆகும். இது சுமார் 600 கி.மீ உயரம் வரை பரவிக் காணப்படுகிறது.
(ii) வெப்ப அடுக்கின் கீழ்பகுதியில் வாயுக்களின் அளவு சீராக காணப்படுவதால் இது 'ஹோமோஸ்பியர் (Homosphere) என அழைக்கப்படுகின்றது.
(iii) ஆனால் வெப்ப அடுக்கின் மேல்பகுதியில் உள்ள வாயுக்களின் அளவு சீரற்று காணப்படுவதால் அப்பகுதி 'ஹெட்ரோஸ்பியர்'(heterosphere) என அழைக்கப்படுகின்றது.
(iv) இவ்வடுக்கில் உயரம் அதிகரித்துச் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
உ) வெளியடுக்கு:
(i) வளிமண்டல அடுக்குகளின் மேல் அடுக்கு வெளிஅடுக்கு என்று அழைக்கப்படுகிறது.
(ii) இங்கு வாயுக்கள் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இவ்வடுக்கின் மேல்பகுதி படிப்படியாக அண்ட வெளியோடு கலந்து விடுகிறது.
(iii) அரோரா ஆஸ்ட்ரியாலிஸ் (Aurora Australis) மற்றும் அரோரா பொரியாலிஸ் (Aurora Borealis) என்ற விநோத ஒளிநிகழ்வுகள் இவ்வடுக்கில் நிகழ்கின்றன.
25.
ஆஸ்திரேலியா
26.
மழை மறைவுப் பகுதி
27.
காற்றின் திசை
28.
காற்றின் வேகம்
29.
வானிலை பற்றிய படிப்பு
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - பண்டைய நாகரிகங்கள் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Ancient . Civilisations Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - புரட்சிகளின் காலம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - The Age of Revolutions Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - இடைக்கால இந்தியாவில் அரசும் சமூகமும் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - State and Society in Medieval India Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
NEW9th Standard
TN 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு - ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் முக்கியமான 2,3,&5 மதிப்பெண் வினாக்கள் விடைகளுடன் TN 9th Social Science HIS - Colonialism in Asia and Africa Important 1 Mark Questions with Answers 2,3,&5 Marks Questions with Answers.
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards