9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 02/08/2019
தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர்/ அங்கீகரிப்பது.
குடியரசுத் தலைவர்
தேர்தல் ஆணையம்
நாடாளுமன்றம்
தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர்
2.
இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு
பிரிவு 280
பிரிவு 315
பிரிவு 314
பிரிவு 325
3.
கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இங்கிலாந்து
கனடா
ரஷ்யா
4.
நர்மதா பச்சாவோ அந்தோலன் என்பது ஒரு ___________
5.
இந்தியாவில் ___________ கட்சி முறை பின்பற்றப்படுகிறது
6.
தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள் ___________
7.
இந்திய தேர்தல் ஆணையம் ___________ உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது
8.
பல கட்சி ஆட்சி முறையினை விவாதி.
9.
தேர்தல் பிரநிதித்துவ மக்களாட்சியில் முக்கியத்துவமாகக் கருதடப்படுகிறது. ஏன்?
10.
இரு கட்சி ஆட்சிமுறை மற்றும் பல கட்சி ஆட்சிமுறையினை வேறுபடுத்துக.
11.
இந்தியாவிலுள்ள தேர்தல் முறைப் பற்றி விவரி
12.
மக்களாட்சியின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி.
13.
நேரடித் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகளை விவாதி
1.
(b)
தேர்தல் ஆணையம்
2.
(d)
பிரிவு 325
3.
(b)
இங்கிலாந்து
4.
( )
அழுத்தக்குழு
5.
( )
பல
6.
( )
ஜனவரி 25
7.
( )
3
8.
நிறைகள்:
1. அதிக மக்கள் உள்ள நாட்டில் ஒவ்வொரு பகுதியினருக்கும் தங்களுக்குரிய கட்சியை அமைத்துக் கொள்ள முடியும்.
2. எல்லா தரப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
3. மக்கள் தங்களுக்கு விருப்பமான கட்சியை தேர்ந்தெடுக்க முடியும்.
குறைகள்:
1. பல கட்சிகள் இருக்கும்பொழுது ஓட்டுகள் சிதறும்.
2. எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டால் பல கட்சி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.
3. அவ்வாறு அமையும் ஆட்சியானது குறை ஆயுள் ஆட்சியாக அமைய வாய்ப்புள்ளது.
4. மக்களிடையே பிரிவினை வாதம் வளர வாய்ப்புள்ளது.
9.
1. ஜனநாயக நாடு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கொண்டு மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியாகும்.
2. மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பர்.
3. அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேர்தலின் மூலம் மக்களுக்கான தலைவரை தேர்ந்தெடுப்பர்.
4. எனவே தேர்தல்கள் பிரதிநிதித்துவ மக்களாட்சியில் முக்கியமாக கருதப்படுகிறது.
10.
| இரு கட்சி ஆட்சிமுறை | பல கட்சி ஆட்சிமுறை |
|---|---|
| இரு முக்கிய கட்சிகள் மட்டுமே பங்கு பெறுவது இருகட்சி ஆட்சி முறையாகும். |
இரண்டிற்கும் மேற்பட்ட கட்சிகள் பங்குபெறுவது பல கட்சி ஆட்சி முறையாகும். |
| இருகட்சி ஆட்சி முறை நடைபெறும் நாடுகள்: அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து | பல கட்சி ஆட்சி முறை நடைபெறும் நாடுகள்: இந்தியா. இலங்கை, பிரான்ஸ், இத்தாலி |
11.
1. இந்தியா உலகின் மிகப்பெரிய சமத்துவ. மதச்சார்பற்ற மக்களாட்சி, குடியரசு நாடாகும்.
2. இந்திய தேர்தல் முறை. இங்கிலாந்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி அமைக்கப்பட்டதாகும்.
3. இந்திய அரசியலமைப்பின் விதிமுறைக்கேற்ப நம் நாட்டின் தேர்தல் முறை அமைக்கப்பட்டிருக்கிறது.
4. நம் நாட்டின் சுதந்திரமான. நியாயமான தேர்தலை உறுதி செய்திட தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
5. தேர்தல் ஆணையமானது ஒரு தலைமைத் தேர்தல் ஆணையரையும் இரண்டு தேர்தல் ஆணையர்களையும் கொண்டுள்ளது.
12.
மக்களாட்சியின் நிறைகள்:
1. மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் மக்களுக்கான ஆட்சியாகும்.
2. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது.
3. அனைத்து குடிமகன்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
4. அனைத்து மக்களுக்கான சம உரிமை வழங்கப்படுகிறது.
5. நாட்டின் முன்னேற்றத்தில் அனைத்து மக்களுக்கும் பலன் கிடைக்கிறது.
மக்களாட்சியின் குறைகள்:
1. தகுதியில்லாத தலைவர்கள் தமக்கு கிடைத்த பிரபலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளது.
2. திறமையில்லாத நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆட்சியும் குறையுள்ளதாக இருக்கும்.
3. லஞ்சம் மற்றும் ஊழல் ஒரு மிகப்பெரிய பிரச்சனை.
4. யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால் கூட்டாட்சியோ, குறை ஆயுள் ஆட்சியோ அமைய வாய்ப்புள்ளது.
5. எண்ணற்ற படித்தவர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்துவதில்லை.
13.
நேரடித் தேர்தல்:
வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளைத் தாங்களே நேரடியாக தேர்தலில் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் முறை நேரடித் தேர்தல் எனப்படுகிறது.
நிறைகள்:
1. வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதால். நேரடித் தேர்தல் முறையானது
2. வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது.
3. அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வும், தகுதியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் மக்களுக்குக் கற்பிக்கிறது.
4. மக்கள் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கவும். தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் ஊக்கமளித்துத் தூண்டுகிறது.
குறைகள்:
1. நேரடித் தேர்தல் முறை அதிக செலவு கொண்டதாக உள்ளது.
2. எழுத்தறிவற்ற வாக்காளர்கள். பொய்யான பரப்புரைகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்
3. சில நேரங்களில் சாதி, மதம் மற்றும் இன்ன பிற பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும்
4. பிரச்சாரங்கள் மற்றும் பொய்யான பரப்புரைகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.
5. நேரடித் தேர்தல் நடத்துவது மிகப் பெரும் பணியாக இருப்பதால். ஒவ்வொரு வாக்கு மையங்களிலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறையை உறுதி செய்வது என்பது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது.
6. சில அரசியல் கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்கள் மீது பணம், பொருள் அல்லது பணிகள் மூலமாக தங்களது செல்வாக்கைச் செலுத்துவது என்பது மற்றொரு சவாலாகும்.
7. தேர்தல் பரப்புரைகளின் போது சில நேரங்களில் வன்முறைகள், பதற்றங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards