9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
GEO - உயிர்க்கோளம்
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பல்வேறு வகையான நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகளைக் குறிப்பிடுக.
2.
"உயிரினப் பன்மை இழப்பு" என்பதன் பொருள் கூறுக.
3.
உயிரினப் பன்மை என்றால் என்ன?
4.
சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?
5.
உயிர்கோளம் என்றால் என்ன?
6.
சவானா - தூந்திரா
7.
உற்பத்தியாளர் - சிதைப்பவர்
8.
உயிர்கோளம் ஒரு நிலையான சூழல் மண்டலத்தைக் கொண்டுள்ளது
9.
உற்பத்தியாளர்கள், தர்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
10.
புவியில் உள்ள நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியை விவரி.
11.
சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு கூறுகளை விவரி.
12.
___________ நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி நன்னீர் மற்றும் கடல் நீர் கலக்கும் இடத்தில் காணப்படும்.
13.
பாலைவனப் பல்லுயிர்த்தொகுதிகளில் வளரும் தாவரங்கள் ______எனப்படும்.
14.
மிகப்பரந்த புவிச்சூழ்நிலை மண்டலத்தை ________ என்கிறோம்.
15.
பிறச்சார்பு ஊட்ட உயிர்கள் (Hetrotrophs) என அழைக்கப்படுவை______
16.
விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் ஒன்றோடொன்று இடைவினைப் புரிந்து கொண்டு வாழுமிடம் _______ எனப்படும்.
17.
1. உலக வனவிலங்குகள் தினம் _____________
2. பன்னாட்டு காடுகள் தினம் ________________
3. உலக நீர் தினம் ________________
4. புவி தினம்______________________
5. உலக சுற்றுசூழல் தினம் - ஜூன் -5
6. உலக பேராழியியல் தினம் ________________
18.
மழைக்காடுகள் பல்லுயிர்க் தொகுதி அதிகளவு விவசாயத்திற்குப் பயன்படுத்த இயலாததற்குக் காரணம்
மிக அதிகப்படியான ஈரப்பதம்
மிக அதிகமான வெப்பநிலை
மிக மெல்லிய மண்ணடுக்கு
வளமற்ற மண்
19.
பாலைவனத்தாவரங்கள் வளரும் சூழல்
உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
குறைந்த அளவு ஈரப்பசை
குளிர் வெப்பநிலை
ஈரப்பதம்
20.
வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொண்டு, ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்
உற்பத்தியாளர்கள்
சிதைப்போர்கள்
நுகர்வோர்கள்
இவர்கள் யாரும் இல்லை
21.
உயிர்க் கோளத்தின் மிகச் சிறிய அலகு
சூழ்நிலை மண்டலம்
பல்லுயிர்த் தொகுதி
சுற்றுச்சூழல்
இவற்றில் ஏதுவும் இல்லை
22.
புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி
தூந்திரா
டைகா
பாலைவனம்
பெருங்கடல்கள்
23.
கூற்று: குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படக்கூடியதும் எளிதில் பாதிக்கப்படும் சூழலில் வாழும் பல வகையான தாவரங்களும் விலங்குகளும் கொண்ட பகுதியே வளமையம் ஆகும்.
காரணம்: இப்பகுதி சிறப்பான கவனம் கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும், ஆராய்ச்சியாளர்கள் இதனை அடை யாளங் காண்பர்.
வழிமுறைகள் :
(அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக் குகிறது
(ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை
(இ) கூற்று சரி, காரணம் தவறு
(ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு
1.
(i) வெப்ப மண்டலக்காடுகள் பல்லுயிர்த் தொகுதி.
(ii)வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி.
(iii)பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி.
(iv)மிதவெப்பமண்டல புல்வெளி பல்லுயிர்த் தொகுதி.
(v) தூந்திரப் பல்லுயிர்த்தொகுதி.
2.
மனித மற்றும் இயற்கைக் காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்பு உயிரினப்பன்மையின் இழப்பு என்கிறோம்.
3.
உயிரினப்பன்மை என்பது ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பதாகும். இது காலநிலை. நிலத்தோற்றம் மற்றும் மனிதச் செயல்பாடுகளின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன.
4.
சூழ்நிலை மண்டலம் என்பது பல்வேறு உயிரினங்களின் தொகுதி ஆகும். இச்சூழ்நிலை மண்டல அமைப்பில் வாழ்கின்ற உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதோடு, பிற உயிரற்ற சுற்றுச்சூழல் காரணிகளான நிலம், மண், காற்று, நீர் போன்றவற்றோடு தொடர்பு கொள்கின்றன. இங்கு உயிரினங்கள் நிலையாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் காணப்படுகிறது.
5.
உயிர்க்கோளம் (Biosphere) புவியின் நான்காவது கோளமாகும். புவியின் மேற்பரப்பில் அமைந்துள்ள இக்கோளம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும். இக்கோளம் பாறைக்கோளம், நீர்க்கோளம் மற்றும் வளிக்கோளத்தை உள்ளடக்கியதாகும். இது தாவர இனங்கள், விலங்கினங்கள் போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.
6.
| சவானா | தூந்திரா |
| சவானா பல்லுயிர்த் தொகுதி கிழக்கு ஆப்பிரிக்காவில் சஹாராவின் தென்பகுதி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் காணப்படுகின்றன. |
தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி ஆசியா, கனடா, ஐரோப்பா இவற்றின் வடபகுதி மற்றும் கிரீன்லாந்து ஆர்டிக். அண்டார்டிகா ஆகிய தொகுதியின் கீழ் வருகின்றன. |
| இங்கு பொதுவாக வெப்பமாகவும் வறண்டும் காணப்படுவதோடு மிதமான மழைப்பொழிவையும் பெறுகிறது. எனவே இங்கு வளரும் புற்கள் உயரமாகவும் கூர்மையாகவும் காணப்படுகின்றன. |
இங்கு குளிர்காலம் நீண்ட கடுங் குளிரையும். கோடை காலம் மிதமானகுளிரையும் கொண்டிருக்கும் இங்கு காணப்படும் மிகக் குறைந்த வெப்பநிலையின் காரணமாக குறுகியகால பருவத்தாவரங்கள் மட்டுமே இங்கு காணப்படும். |
| இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் கால்நடை மேய்த்தல் ஆகும். |
இங்கு வாழும் மக்களின் முக்கியத் தொழில் வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தல் ஆகியனவாகும். |
7.
| உற்பத்தியாளர் | சிதைப்பவர் |
| சூழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவைத்தாமே உற்பத்தி செய்து கொள்ளக் கூடிய உயிரினங்கள் உற்பத்தியாளர்கள் எனப்படும். | இவ்வுரினங்களில் தங்களுக்குத் தேவையான உணவைத் தாமே தயாரிக்க இயலாதவை ஆகும். |
| இவை தற்சார்பு ஊட்ட உயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன. | இவை சா று ண் ணி க ள் என்று அழைக்கப்படுகின்றன. |
| இவை நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றன. | இவை இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு |
| தாவரங்கதாவரங்கள், பாசி, பாக்டீரியா போன்றவை எடுத்துக்காட்டாகும். | பூஞ்சைகள்,காளான்கள் போன்றவை உதாரணங்களாகும். |
8.
உயிர்க்கோளம் பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலம் மற்றும் பல்லுயிர்த் தொகுதி அமைப்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோளம் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும். இது தாவர இனங்களும், விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்றச் சூழ்நிலைக் கொண்டுள்ளது.
9.
சூழ்நிலை மண்டலத்தில் நமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் உற்பத்தியாளர்கள் எனப்படும். இவை நிலத்திலும், நீரிலும் காணப்படுகின்றன (எ.கா) தாவரங்கள், பாசி, பாக்டீரியா
10.
நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி:
1. நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதியில் காணப்படும் உயிரினங்கள் ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டு அவை வாழுகின்ற சூழலுக்கும் சக்தி மூலங்களுக்கும் மற்றும் இடத்திற்கும் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன.
2. நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியினை நன்னீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி மற்றும் கடல்நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி என இரண்டு வகைகளாக வகைப்படுத்துகிறோம்.
நன்னீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி:
1. நன்னீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியானது ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
2. மனிதர்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர், நீர்ப்பாசனம். சுகாதாரம் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீரைப் பெறுவதற்கு நன்னீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியைச் சார்ந்தே உள்ளனர்.
கடல்நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி:
1. புவியில் காணப்படும் மிகப்பெரிய நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி கடல்நீர் பல்லுயிர்த்தொகுதியாகும்.
2. கடல் நீரில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விட ஆதாரமாக இத்தொகுதி உள்ளது.
3. பவளப்பாறைகள் போன்ற இரண்டாம் வகை கடல்வாழ் உயிரினங்கள் இதில் உள்ளன.
4. கடற்கரைப் பகுதிகள் மற்றும் கழிமுகங்களில் நன்னீர் மற்றும் கடல்நீர் கலந்த சூழலில் வளரும் நீர்வாழ் பல்லுயிர்களும் உள்ளன.
5. நீர்நிலையானது கடல்வாழ் உயிரினங்களின் வேகமான இடமாற்றத்திற்கு உதவியாக உள்ளது.
6. நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதியானது தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு மட்டுமல்லாமல் மனித இனத்திற்கும் மிக முக்கியமானதாக உள்ளது.
7. மனித இனம் இத்தொகுதியை நீர். உணவு. பொழுதுபோக்கு அம்சங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
11.
சூழ்நிலை மண்டலத்தின் மூன்று கூறுகள்:
1. உயிரற்ற கூறுகள்
2. உயிருள்ள கூறுகள்
3. ஆற்றல் கூறுகள்
உயிரற்ற கூறுகள்:
1. உயிரற்ற கூறுகள் சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற கரிம, இயற்பியல், இரசாயனக் காரணிகளை உள்ளடக்கியதாகும்.
2. உதாரணமாக நிலம், காற்று. நீர். சுண்ணாம்பு. இரும்பு போன்றவை.
உயிருள்ள கூறுகள்:
1. உயிருள்ள கூறுகள் என்பது தாவரங்கள், விலங்கினாங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியதாகும்.
2. இவை உற்பத்தியாளர். நுகர்வோர் மற்றும் சிதைப்போர் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
3. மேலும் நுகர்வோர். தாவர உண்ணிகள், ஊன் உண்ணிகள் மற்றும் தாவர உண்ணியையும். ஊன் உண்ணியையும் உணவாகக் கொள்ளக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆற்றல் கூறுகள்:
1. உயிர்க்கோளத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும், ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் ஆற்றலைப் பயன்படுத்துகின்றன.
2. உயிர்க்கோளம் முழுமைக்கும் சூரியனே ஆற்றலை வழங்கக் கூடியதாக உள்ளது.
3. சூழ்நிலை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூறுகளின் வழியாக, சூரிய ஆற்றல் பிற ஆற்றல் வடிவங்களாக மாற்றப்படுகிறது.
12.
( )
கடல்
13.
( )
பாலைவனத்தாவரம்
14.
( )
பல்லுயிர்த் தொகுதிகள்
15.
( )
நுகர்வோர்கள்
16.
( )
சூழ்நிலை மண்டலம்
17.
1. அக்டோபர் - 4
2. மார்ச் - 21
3. மார்ச் - 22
4. ஏப்ரல் - 22
5. ஜூன் - 5
6. டிசம்பர் - 26
18.
(d)
வளமற்ற மண்
19.
(a)
உவர்ப்பியமுள்ள மணற்பகுதி
20.
(b)
சிதைப்போர்கள்
21.
(a)
சூழ்நிலை மண்டலம்
22.
(a)
தூந்திரா
23.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards