9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 (9th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important questions All Chapter 2019-2020)
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்
லோக்சபைக்கு 12 உறுப்பினர்கள்
ராஜ்ய சபைக்கு 2 உறுப்பினர்கள்
ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
ராஜ்ய சபைக்கு 14 உறுப்பினர்கள்
2.
பிரதமரை நியமிப்பவர் / நியமிப்பது
மக்களவை
மாநிலங்களவை
சபாநாயகர்
குடியரசுத் தலைவர்
3.
குடவோலை முறையை பின்பற்றியவர்கள்
சேரர்கள்
பாண்டியர்கள்
சோழர்கள்
களப்பிரர்கள்
4.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்
இந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
பிரான்ஸ்
வாட்டிகன்
5.
வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ___________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது
மஹாஜனபதங்கள்
கனசங்கங்கள்
திராவிடம்
தட்சிணபதா
6.
மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.
தனநந்தர்
சந்திரகுப்தர்
பிம்பிசாரர்
சிசுநாகர்
7.
காற்றின் செங்குத்து அசைவினை __________ என்று அழைக்கின்றோம்
காற்று
புயல்
காற்றோட்டம்
நகர்வு
8.
_______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது
இடைப்பட்ட திரள் மேகங்கள்
இடைப்பட்ட படை மேகங்கள்
கார்படை மேகங்கள்
கீற்றுப்படை மேகங்கள்
9.
அனைத்து வகை மேகங்களும் _______________ ல் காணப்படுகிறது
கீழடுக்கு
அயன அடுக்கு
இடையடுக்கு
மேலடுக்கு
10.
நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருந்து துருவம் நோக்கிச் செல்ல செல்ல வெப்பம்_________.
கூடுகிறது
மாற்றம் ஏதுமில்லை
குறைகிறது
நிலையாக இருக்கிறது
11.
புவியின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பத்தின் சராசரி அளவு _________
12°C
13°C
14°C
15°C
12.
கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?
ஆசியா
தக்காண பீடபூமி
குலு பள்ளத்தாக்கு
மெரினா கடற்கரை
13.
காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம்______ஆகும்
காற்றடி வண்டல்
பர்கான்
ஹமாடா
மணல் சிற்றலைகள்
14.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப்படவில்லை
சர்க்
மொரைன்
டிரம்லின்
எஸ்கர்
15.
சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம்
பனியாறு
காற்று
கடல்அலைகள்
நிலத்தடி நீர்
16.
இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை _______ என்று அழைக்கின்றோம்.
பதிவுகளால் நிரப்படுத்தல்
அரிப்பினால் சமப்படுத்துதல்
நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
ஏதுமில்லை
17.
பின்வருவனவற்றுள் மெசபடடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?
சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்
பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்
சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்
பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்
18.
எகிப்தியர்கள் இறந்த உடல்களைப் பதப்படுத்தி பாதுகாத்த முறை ________________
சர்கோபகஸ்
ஹைக்சோஸ்
மம்மியாக்கம்
பல கடவுளர்களை வணங்குதல்
19.
சொற்களைப் படங்கள் மூலம் உணர்த்தும் குறியீட்டு முறையை _________ என்கிறோம்.
அழகெழுத்து
சித்திர எழுத்து
கருத்து எழுத்து
மண்ணடுக்காய்வு
20.
எரிமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்
எரிமலை வாய்
துவாரம்
பாறைக்குழம்புத் தேக்கம்
எரிமலைக் கூம்பு
21.
புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _____________ எனப்படும்
மடிப்பு
பிளவு
மலை
புவிஅதிர்வு
22.
கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது
கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
கூற்று சரி; காரணம் தவறு.
கூற்றும் காரணமும் தவறானவை .
23.
சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _____ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.
நுண்கற்காலம்
பழங்கற்காலம்
இடைக் கற்காலம்
புதிய கற்காலம்
24.
பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ________ ஆவர்.
ஹோமோ ஹேபிலிஸ்
ஹோமோ எரக்டஸ்
ஹோமோ சேபியன்ஸ்
நியாண்டர்தால் மனிதன்
25.
சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?
26.
மண் உருவாக வானிலைச் சிதைவு ஒரு முக்கியத் தேவையா?
27.
பாலைவனங்களில் சமன்படுத்தலின் ஒரே காரணி காற்றாகும்.
28.
வெப்பத்தை அளக்கும் அளவைகள் யாவை?
29.
காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் யாவை
30.
வளிமண்டலம் - வரையறு?
31.
மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக்கூறு.
32.
சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது. இதற்கான காரணங்களைக் கூறு.
33.
தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.
34.
காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களை பட்டியலிடு.
35.
குறுட்டு ஆறு என்றால் என்ன?
36.
ஹமுராபியின் சட்டம் முக்கியமான சட்ட ஆவணமாகும் – விவரி.
37.
சிகுராட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக
38.
விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும் – விளக்கு
39.
பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.
40.
பொழிவின் வகைகளை விவரி.
41.
மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை? விவரி
42.
தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு
43.
சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் எழுதுக
44.
பனியாறு என்றால் என்ன?
45.
எரிமலைகளால் உண்டாகும் விளைவுகள் யாவை?
46.
விவசாயம், பானை செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.
47.
உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு
48.
நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக
49.
மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக
50.
இரும்பை உருக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு உற்பத்தி மற்றும் போர் முறையை மாற்றியமைத்தது – இதை நிறுவுக.
1.
(c)
ராஜ்ய சபைக்கு 12 உறுப்பினர்கள்
2.
(d)
குடியரசுத் தலைவர்
3.
(c)
சோழர்கள்
4.
(d)
வாட்டிகன்
5.
(a)
மஹாஜனபதங்கள்
6.
(c)
பிம்பிசாரர்
7.
(c)
காற்றோட்டம்
8.
(a)
இடைப்பட்ட திரள் மேகங்கள்
9.
(a)
கீழடுக்கு
10.
(c)
குறைகிறது
11.
(b)
13°C
12.
(b)
தக்காண பீடபூமி
13.
(a)
காற்றடி வண்டல்
14.
(a)
சர்க்
15.
(d)
நிலத்தடி நீர்
16.
(c)
நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
17.
(c)
சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்
18.
(c)
மம்மியாக்கம்
19.
(b)
சித்திர எழுத்து
20.
(a)
எரிமலை வாய்
21.
(b)
பிளவு
22.
(d)
கூற்றும் காரணமும் தவறானவை .
23.
(b)
பழங்கற்காலம்
24.
(c)
ஹோமோ சேபியன்ஸ்
25.
1. சர்வாதிகரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை நமக்கு இருக்காது. ஏனென்றால் சர்வாதிகாரி என்பவர் சகல அதிகாரங்கள் கொண்டுள்ளவராக இருப்பார்.
2. அத்தகைய நாட்டில் பொதுமக்களின் கருத்துக்கு எந்தவித முக்கியத்துவம் இருக்காது. அவர்களின் கருத்து மதிக்கப்படாது.
26.
உடைந்த பாறைகள் வானிலைச் சிதைவுக்கு உட்பட்டு மண்ணாக மாறுகிறது. சிதைவடைந்த நுண்ணிய பாறைத் துகள்கள் மற்றும் சிதைந்த உயிரினங்களின் (Humans) கலவையே மண்ணாகும்.
27.
காற்றின் செயல்பாடுகளான அரித்தல், கடத்துதல் மற்றும் படிய வைத்தல் பாலைவனம் பகுதிகளில் அதிகமாக காணப்படுவதால் பாலைவனங்களில் சமன்படுத்துதலின் ஒரே காரணியாக காற்று விளங்குகிறது.
28.
வெப்பநிலை என்பது ஒரு பொருளின் வெப்பத்தின் அளவு ஆகும். இது ஃபாரன்ஹீட் மற்றும் செல்சியஸ் போன்ற அலகினால் அளக்கப்படுகிறது.
29.
(i) நிலநடுக்கோட்டிலிருந்து தூரம்
(ii) கடல் மட்டத்திலிருந்து உயரம்
(iii) கடலிலிருந்து தூரம்
(iv) வீசும் காற்றின் தன்மை
(v) மலைகளின் இடையூறு
(vi) மேக மூட்டம்
(vii) கடல் நீரோட்டங்கள்
(viii) இயற்கைத் தாவரங்கள்
30.
(i) புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்றுப் படலம் வளிமண்டலம் என அழைக்கப்படுகிறது.
(ii) புவியை வளிமண்டலம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதன் ஈர்ப்பு விசையே காரணமாகும்.
(iii) வாயுக்கள். நீராவி மற்றும் தூசுகள் வளிமண்டலத்தில் வேறுபட்ட விகிதத்தில் கலந்து காணப்படுகின்றன.
31.
மும்மணிகள் (திரி - ரத்னார் என்று அழைக்கப்படும். சமண மதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகள்
1.நன்னம்பிக்கை
2. நல்லறிவு
3. நன்னடத்தை
நன்னம்பிக்கை : மகாவீரரின் போதனைகளில், ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்
நல்லறிவு : கடவுள் இல்லை, உலகம் படைத்தவன் இன்றியே இயங்கி வருகிறது. அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்பது.
நன்னடத்தை : இது மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பதைக் குறிப்பது.
அவையாவன.
1. எந்த உயிரினத்தையும் துன்புறுத்தலாகாது.
2. நேர்மையுடன் இருப்பது
3.கருணை
4. உண்மையுடன் இருப்பது
5. பிறருடைய உடைமைகளுக்கு ஆசைப்படாமல் வாழ்வது.
32.
(i) சங்ககால மக்களின் உயிர் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதில் வேளாண்மையே முதலிடத்தில் இருந்தது.
(ii) நன்செய் நிலத்திலும் புன்செய் நிலத்திலும் பயிர்த்தொழில் நடைபெற்றது.
(iii) ஆற்று வடிநீர்ப் பகுதிகளிலும் குளம். ஏரி போன்ற நீர் நிலைகளால் பாசன வசதி பெற்ற பகுதிகளிலும் நெல் பயிரிடப்பட்டது.
(iv) நெல், கரும்பு, சிறுதானியங்கள் பயிரிடப்பட்டன.
33.
(i) தொல்லியல் அகழாய்வுப் பணி என்பது பண்டைக்கால சமூகத்தின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ளும் நோக்கில் முறைப்படி ஓர் இடத்தை அகழ்ந்து, சான்றுகளாகக் கிடைத்த பொருள்களை முறையாக திரட்டி ஆராய்வதாகும்.
(ii) வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வழியாகச் சங்க கால மக்களின் வாழ்க்கை முறை குறித்து சான்றுகள் கிடைத்துள்ளன.(எ.கா.) தமிழ்நாட்டின் அரிக்கமேடு, அழகன்குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிப்பூம்பட்டினம் முதலியன.
34.
காற்று அரித்தலால் உருவாக்கப்படும் நிலத் தோற்றங்கள் காளான் பாறை (Mushroom Rock), இன்சல்பர்க் (Inselberg), மற்றும் யார்டங் (Yardarg) போன்றவையாகும்.
35.
ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது. இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படுகிறது.
36.
i.பல்வேறு குற்றங்களுக்கான சட்டங்களைக் கூறும் ஒரு முக்கியமான சட்ட ஆவணம் ஹமுராபியின் சட்டத் தொகுப்பாகும்.
ii.குடும்ப உரிமைகள், வணிகம். அடிமை முறை,வரிகள், கூலி போன்ற பல்வேறு வழக்குகள் குறித்து இதில் 282 பிரிவுகள் உள்ளன.
iii. இது பழைய சட்டங்களின் தொகுப்பாகும்.
iv.இது பழிக்கு பழி வாங்கும் கொள்கையின் அடிப்படையாகக் கொண்டது.
v."கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்" என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது.
37.
விடை சிகுராட்களின் முக்கிய பண்புகள்:
(i) சிகுராட் என்பது பண்டைய மெஸபடோமியாவில் (தற்போதைய ஈராக்) காணப்படும் பிரமிட் வடிவ நினைவிடங்கள் ஆகும்.
(ii) நகரின் மையத்தில் மேடை மீது சிகுராட் எனப்படும் கோயில்கள் கட்டப்பட்டன.
(iii) அவை செங்குத்தான பிரமிடுகள் போல் காட்சியளித்தன.
(iv) உச்சிக்கு செல்வதற்குப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.
(v) கோவிலைச் சுற்றி சடங்குகளுக்கான தாழ்வாரங்கள், புனித இடங்கள், ஆண் மற்றும் பெண் மதகுருமார்களின் கல்லறைகள், சடங்குகளுக்கான விருந்து அரங்குகள், தொழிற் கூடங்கள், களஞ்சியங்கள், கிடங்குகள், நிர்வாகக் கட்டிடங்கள் அடங்கிய வளாகங்கள் இருந்தன.
38.
விலங்குகளைப் பழக்குதல் இணங்கிவாழும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உருவாகி இருக்கலாம்.நாய்கள் தான் முதலில் பழக்கப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் பொ.ஆ .மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்மேற்கு ஆசியாவில் பழக்கப்படுத்தப்பட்டன. சுமேரிய நாகரிகத்தில் நிலத்தை உழுவதற்கு காளைகள் பயன்படுத்தப்படன. புதிய கற்கால மெஹர்கரில் ஆடுகள், மாடுகள் பழக்கப்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
39.
பெருங்கற்கால ஈமச் சின்னங்கள்:
1.டோல்மென் எனப்படும் கற்திட்டை,
2. சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்.
3. மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல்,
4. தாழி.
5. பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள்,
6. சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
40.
சாரல், மழை, பனிப்பொழிவு, பனிப்படிவு, ஆலங்கட்டி மழை போன்றவை பொழிவின் பல்வேறு விதங்கள் ஆகும்.
அ) சாரல்:
(i) 0.5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டமுள்ள நீர்த்துளிகள் சீராக புவியை வந்தடையும்பொழுது அதனை சாரல் என்றழைக்கிறோம். (ii) சில நேரங்களில் சாரல்கள் பனி மூட்டத்துடன் இணைந்து எதிரில் உள்ள பொருட்களை காணமுடியாத நிலையை உண்டாக்குகிறது.
ஆ) மழை:
(i) உறைநிலைக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படும் போது மழைப் பொழிகிறது. புவியின் மிக அதிகமான இடங்களில் மழைப்பொழிவு கிடைக்கிறது.
(ii) காற்றில் மிக அதிகமான ஈரப்பதம் இருந்தால் மட்டுமே மழைப்பொழிவு ஏற்படும்.
(iii) மழைத்துளியின் விட்டம் 5 மில்லி மீட்டருக்கு மேல் காணப்படும்.
இ) ஆலங்கட்டி மழை:
முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபுகும் தன்மையுடன் கூடிய மிகச்சிறிய பனி உருண்டையுடன் (Pellets) கூடிய மழைப்பொழிவே ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது.
ஈ) பனி:
(i) உறையும் நிலைக்கு கீழாக நீர் சுருங்குதல் ஏற்படும்போது பனிப்பொழிவு ஏற்படுகிறது.
(ii) பகுதியாகவோ. முழுமையாகவோ ஒளி புகா தன்மையுடன் காணப்படும் பனித்துகள் படிகங்களை
பனி என்று அழைக்கின்றோம்.
(iii) இந்த பனிப்படிகங்கள் ஒன்றோடொன்று மோதிப் பனிச்சீவல்களாக (Snowflakes) உருப்பெருகின்றன.
உ) கல்மாரி மழை:
(i) இடியுடன் கூடிய புயல் மற்றும் மழையுடன் கூடிய புயலின்போது 2 செ மீட்டருக்கு மேல் விட்டம் உள்ள பனிக்கட்டிகளே கல்மாரி மழை (Hail) என்று அழைக்கப்படுகிறது. இது திடநிலையில் காணப்படும் மழைப்பொழிவாகும்.
( ii) இப்பொழிவின் போது சிறிய கட்டிகள் போன்ற பனித்துண்டுகள் விழுகின்றன. இது கல்மாரிக்கட்டிகள் (hailstones) என்றும் அழைக்கப்படுகிறது.
(iii) இது வேளாண் பயிர்களையும் மனித உயிர்களையும் பாதிக்கும் தன்மை கொண்டது
41.
தற்கால உலகில் மக்களாட்சி அரசாங்கம் தழைத்தோங்கி, அரசாங்கத்தின் மேலாதிக்கம் செலுத்தும் வடிவமாக இருக்கிறது.
மக்களாட்சியானது இதுவரை கடுமையான சவாலையோ அல்லது போட்டியையோ எதிர்கொள்ளவில்லை.
கடந்த 100 ஆண்டுகளில் உலகெங்கிலும் மக்களாட்சி விரிவடைந்து வளர்ந்து வருகிறது.
இந்தியாவில் மக்களாட்சி எதிர்கொள்ளும் சவால்கள்:
1. கல்வியறிவின்மை
2. வறுமை
3. பாலினப் பாகுபாடு
4. பிராந்தியவாதம்
5. சாதி, வகுப்பு. சமயவாதம்
6. ஊழல்
7. அரசியல் குற்றமயமாதல்
8. அரசியல் வன்முறை
42.
தத்துவமும், இலக்கியமும்:
(i) லாவோ ட் சு கன்பூசியஸ், மென்சியஸ், மோ டி தாவோ சின் போன்ற தத்துவ ஞானிகளும்,சீனக் கவிஞர்களும் நாகரிகத்திற்கு ஏராளமாகப் பங்களித்துள்ளார்கள்.
(ii) இராணுவ உத்தியாளரான சன் ட்டி 'போர்க் கலை' என்ற நூலை எழுதினார்.
(iii) 'தி ஸ்பிரிங் அண்ட் ஆட்டோம் அனல்ஸ்' (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்) நூல் அதிகாரபூர்வ சீன அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
(iv) மஞ்சள் பேரரசரின் 'கேன்ன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்) எ நூல் சீனாவின் பழமையான மருத்துவ நூலாகக் கருதப்படுகிறது. அது ஹான் வம்ச காலத் முறைப்படுத்தப்பட்டது.
(v) லாவோட்சு கி.மு.(பொ.ஆ.மு. 604 -52) சௌ அரசின் தலைமை ஆவணக் காப்பாள இருந்தார். இவர்தான் தாவோயிசத்தைத் தோற்றுவித்தார். 'ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கு மூலகாரணம்' என்று இவர் வாதிட்டார்.
(vi) கன்பூசியஸ் கி.மு. பொ.ஆ.மு 551 -497) ஒரு புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி, அவர் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. அவர் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை சீர்திருத்துவதை வலியுறுத்தினார்.
(vii) மென்சியஸ் மு. முபா. ஆமு - 372 -289) மற்றொரு புகழ்பெற்ற சீன தத்துவஞானியாவார். அவர் சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்.
43.
சமண சமயம்:
(1) சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரர் வர்த்தமானார் ஆவார்.
(ii) இவர் மூன்று ரத்தினம் எனப்படும் நல்லறிவு, நன்னம்பிக்கை மற்றும் நன்னடத்தையை போதித்தார்.
(iii) அகிம்சை மற்றும் எந்த உயிரினங்களையும் துன்புறுத்தாமை ஆகியவற்றில் அதிக நம்பிக்கை வைத்திருந்தார்.
(iv) உயிர்பலி கூடாது என்றார்.
(v) மகாவீரர் சாதிமுறையை ஏற்கவில்லை அனைத்து மதமும் சமம் என்றார்.
(vi) சமண சமயத்தின் இரு பிரிவுகள்
(i) திகம்பரர்கள் (திசையையே ஆடையாக உடுத்தியவர்கள்)
(ii) சுவேதாம்பரர்கள் (வெண்ணிற உடை உடுத்தியவர்கள்)
(vii) சமணர்கள் தங்கள் கொள்கைகளை வட்டார மொழிகளிலே போதித்தனர்.
(viii) சந்திரகுப்தர், மகேந்திரவர்ம பல்லவன் சமண சமயத்தை தழுவியவர்கள்.
புத்த சமயம்:
(i) புத்த சமயத்தைத் தோற்றுவித்தவர் புத்தர்.
(ii) இவரின் எண் வழிப்பாதை நன்னம்பிக்கை, நல்ல ஆர்வம், நற்பேச்சு, நற்செயல், நல்வாழ்க்கை முறை, நன் முயற்சி, நற்சிந்தனை மற்றும் நல்ல தியானம் ஆகும்.
(iii) அன்பை அகிம்சை வழியில் எல்லா உயிரினங்களும் வெளிப்படுத்த முடியும் என்று வலியுறுத்தினார்.
(iv) உயிர்பலி கூடாது என்றார்.
(v) சாதிமுறையை ஏற்கவில்லை.
(vi) புத்த சமயம் மஹாயானம் மற்றும் ஹீனயானம் என்று இரு பிரிவுகளாக பிரிந்தது.
(vii) புத்தர், மக்கள் பேசும் பிராகிருத மொழியில் தனது போதனைகளை போதித்தார்.
(viii) அசோகர், கனிஷ்கர் புத்த சமயத்தை தழுவியவர்கள்.
44.
பனியாறு:
(i) பனிக்குவியல் மண்டலத்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதே பனியாறு எனப்படுகிறது.
(ii)பனிக்குவிந்து காணப்படும் இடம் பனிவயல் என அழைக்கப்படுகிறது.
(iii) உயரமான பகுதிகளிலும், உயர் அட்சங்களிலும் நிரந்தரமாக பனி மூடியிருக்கும் பகுதியின் எல்லைக்கோடே உறை பனிக்கோடு எனப்படுகிறது.
(iv) உயர் அட்சங்களுக்குச் செல்லச் செல்ல உறைபனிக் கோட்டின் எல்லைக்கோடு கடல் மட்டத்திற்கு அருகில் காணப்படும்.
(v) பனிக்கட்டிகள் பனித்துகள்களாக உருமாறுவதை இறுகிய பனிமணிகள் என்று அழைக்கின்றோம்.
(vi) இது மேலும் இறுகி திடமான பனிக்கட்டிகளாய் உருவாகின்றன.
45.
எரிமலையின் விளைவுகள்.
அ) நன்மைகள்:
(i) எரிமலைகளிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மண்ணை வளமிக்கதாக்குகிறது.
(ii) அதனால் வேளாண் தொழில் மேம்படுகிறது.
(iii) எரிமலைகள் உள்ள பகுதிகள் புவி வெப்ப சக்தியை (Geothreniral energy) பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது.
(iv) உறங்கும் எரிமலையும், செயல்படும் எரிமலையும் உலகில் சிறந்த சுற்றுலாத் தளங்கள் ஆகும்.
(v) எரிமலைகளிலிருந்து வெளிவரும் பொருட்கள் கட்டிடத் தொழிலுக்குப் பயன்படுகிறது.
ஆ) தீமைகள்:
(i) எரிமலை வெடிப்பினால் புவி அதிர்ச்சி, திடீர் வெள்ளம், சேறு வழிதல் மற்றும் பாறை சரிதல் போன்றவை நிகழ்கின்றன.
(ii) வெகுதூரம் பயணிக்கும் பாறைக்குழம்பானது தன் பாதையில் உள்ள அனைத்தையும் எரித்தும், புதைத்தும் சேதப்படுத்துகிறது.
(iii) அதிக அளவில் வெளிப்படும் தூசு மற்றும் சாம்பல் நமக்கு எரிச்சலையும் மூச்சு விடுவதில் சிரமத்தையும் உண்டாக்குகிறது.
(iv) எரிமலை வெடிப்பு அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் வானிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் போக்குவரத்திற்கும் இடையூறை உண்டாக்குகின்றன.
46.
அ) விவசாயம் (அல்லது) வேளாண்மை:
1. இரும்புக் கால மக்கள் வேளாண்மையும் மேற்கொண்டார்கள்.
2.ஆடு மாடுகளையும் வளர்த்தார்கள்.
3.தினையும் நெல்லும் பயிரிடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் தான் பாசன நிருவாகம் மேம்பட்டது.
4.ஏனெனில் பல பெருங்கற்கால இடங்கள், நதிகள், குளங்களுக்கு அருகே இருந்தன ஆற்றுப்படுகைகளில் பாசன தொழில்நுட்பம் வளர்ந்தது.
ஆ) மட்பாண்டங்கள்:
1.தொல்லியல் ஆய்வு நடந்த இடங்களில் கிடைக்கும் முக்கியமான சான்று மட்பாண்டங்களாகும்.
2.இரும்புக்கால, சங்ககால மக்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களை மட்பாண்டங்களுக்குப்
பயன்படுத்தினார்கள்.
3.மட்பாண்டங்கள் சமையல், பொருள்களைச் சேமிப்பதற்கு, சாப்பிடுவதற்கு எனப் பயன்படுத்தப்பட்டன.
4.கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் உள்ளே கறுப்பாகவும் வெளியே சிவப்பாகவும் காணப்படும். வெளிப்புறம் பளபளப்பாக இருக்கும்.
இ) உலோகக் கருவிகள்:
1.பெருங்கற்காலக் கல்லறைகளில் ஈமப் பொருட்களாக ஏராளமான இரும்புப் பொருட்கள்
வைக்கப்பட்டுள்ளன.
2.வாள், குறுவாள் போன்ற கருவிகள், கோடரிகள், உளிகள், விளக்குகள், முக்காலிகள் ஆகியவை கிடைத்துள்ளன.
3.இப்பொருட்களில் சிலவற்றிற்கு எலும்பு அல்லது மரம் அல்லது கொம்பாலான கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கிறது.
4.இரும்புக் கருவிகள் வேளாண்மைக்கும், வேட்டையாடுதலுக்கும், உணவு சேகரிப்பதற்கும், போர்களுக்கும் பயன்படுத்தப்பட்டன.
5. வெண்கலக் கிண்ணங்கள், விலங்கு, பறவை உருவங்களால் அணிவேலைப்பாடு செய்யப்பட்ட கலங்கள், வெண்கலத்திலான முகம் பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
47.
48.
| நேரடி மக்களாட்சி | மறைமுக மக்களாட்சி |
|---|---|
| பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவு எடுக்கக் கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி என்கிறோம். | பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் வகையே மறைமுக மக்களாட்சி என்றழைக்கப்படுகிறது. |
| (எ.கா.) பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து | (எ.கா.) இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து |
49.
50.
1. இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்படுவற்கு முன் செம்பும் அதன் கலப்பு உலோகமான வெண்கலமும் தான் பயன்பட்டு வந்தன. இவை விலை உயர்ந்தவை.
2. இவற்றின் கூர்முனை விரைவில் மழுங்கிப் போகும் என்பதால் வெண்கலத்தாலான ஆயுதங்களையோ, கலப்பை போன்ற கருவிகளையோ திறம்பட பயன்படுத்த முடியாது.
3. வெண்கலம், செம்புத் தாதுவைவிட இரும்புத் தாதுவளம் இயற்கையில் அபிரிமிதமாகக் கிடைக்கிறது.
4. மேலும் இரும்புக் கோடரி காடுகளைத் திருத்தவும், இரும்புக் கலப்பை இறுகிய நிலத்தைப் பிளக்கவும் விவசாயிகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன.
5. பொ. ஆ. மு. 7 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இரும்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் அஸிரியப் பேரரசு வல்லமை பெற்றது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards