9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கற்கண்டு (இலக்கணம்) - தொடர் இலக்கணம், ஆகுபெயர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -விரிவானம் (துணைப்பாடம்) - தாய்மைக்கு வறட்சி இல்லை! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் -கவிதை பேழை (செய்யுள்) - மார்கழி பெருவிழா Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர்-இலக்கணம் - பகுபத உறுப்பிலக்கணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர் - இலக்கணம்-எழுத்து -அளபெடை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil அமுதென்று பேர்-துணைப்பாடம் - ஆறாம்திணை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் II - 2020 ( 9th Standard Social Science Tamil Medium Important Question All Chapter II 2020 )
Download Tamil Nadu 9th Standard Social Science question papers, model tests, one-mark questions, important questions, and public exam papers in PDF format. Free study materials and answer keys for TN State Board students.
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது
சமூகச் சமத்துவம்
பொருளாதார சமத்துவம்
அரசியல் சமத்துவம்
சட்ட சமத்துவம்
2.
மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்
நாடாளுமன்றம்
மக்கள்
அமைச்சர் அவை
குடியரசு தலைவர்
3.
எந்த மொழியிலிருந்து “டெமாகிரஸி” என்ற வார்த்தைப் பெறப்பட்டது?
கிரேக்கம்
லத்தீன்
பாரசீகம்
அரபு
4.
ஆபிரகாம் லிங்கன் _________ நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இங்கிலாந்து
சோவியத் ரஷ்யா
இந்தியா
5.
முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை
சிறுகுழு ஆட்சி
மதகுருமார்களின் ஆட்சி
மக்களாட்சி
தனிநபராட்சி
6.
மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.
தனநந்தர்
சந்திரகுப்தர்
பிம்பிசாரர்
சிசுநாகர்
7.
ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய __________ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.
புத்தர்
லாவோட்சே
கன்ஃபூசியஸ்
ஜொராஸ்டர்
8.
_______________ புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.
அழுத்தம்
காற்று
சூறாவளி
பனி
9.
பருவக்காற்று என்பது ______
நிலவும் காற்று
காலமுறைக் காற்றுகள்
தலக்காற்று
மேற்கண்ட எதுவுமில்லை
10.
_______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது
இடைப்பட்ட திரள் மேகங்கள்
இடைப்பட்ட படை மேகங்கள்
கார்படை மேகங்கள்
கீற்றுப்படை மேகங்கள்
11.
_______ 5° வடக்கு முதல் 5° தெற்கு அட்சம் வரை பரவியுள்ளது.
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
துணை வெப்ப உயர் அழுத்த மண்டலம்
துணை துருவ தாழ்வழுத்த மண்டலம்
துருவ உயர் அழுத்த மண்டலம்
12.
வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு _______________ ஆகும்.
கீழடுக்கு
மீள் அடுக்கு
வெளியடுக்கு
இடையடுக்கு
13.
கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?
ஆசியா
தக்காண பீடபூமி
குலு பள்ளத்தாக்கு
மெரினா கடற்கரை
14.
காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம்______ஆகும்
காற்றடி வண்டல்
பர்கான்
ஹமாடா
மணல் சிற்றலைகள்
15.
________ ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்
துள்ளல்
வண்டல் விசிறி
டெல்டா
மலை இடுக்கு
16.
இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை _______ என்று அழைக்கின்றோம்.
பதிவுகளால் நிரப்படுத்தல்
அரிப்பினால் சமப்படுத்துதல்
நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
ஏதுமில்லை
17.
சிந்துவெளி மக்கள் ‘இழந்த மெழுகு செயல்முறை’ முறையை அறிந்திருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் வெண்கலச்சிலை _________ ஆகும்
ஜாடி
மதகுரு அல்லது அரசன்
பறவை
நடனமாடும் பெண்
18.
சுமேரியரின் எழுத்துமுறை ______ ஆகும்
பிக்டோகிராபி
ஹைரோகிளிபிக்
சோனோகிராம்
க்யூனிபார்ம்
19.
புவி அதிர்வு உருவாகும் புள்ளி _____________ என்று அழைக்கப்படுகிறது.
மேல்மையம்
கீழ்மையம்
புவி அதிர்வு அலைகள்
புவி அதிர்வின் தீவிரம்
20.
எரிமலை மேல் பகுதியில் கிண்ணம் போன்ற பள்ளமான அமைப்பினை _____________ என்று அழைக்கின்றோம்
எரிமலை வாய்
துவாரம்
பாறைக்குழம்புத் தேக்கம்
எரிமலைக் கூம்பு
21.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்தியா ___________ கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
கோண்டுவானா
லொரேசியா
பாந்தலாசா
பாஞ்சியா
22.
புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை __________ என்று அழைக்கின்றோம்.
கருவம்
வெளிக்கரு
கவசம்
மேலோடு
23.
எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.
கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு
பிறைநிலப் பகுதி
ஸோலோ ஆறு
நியாண்டர் பள்ளத்தாக்கு
24.
தமிழகத்துக்கு அப்பால் சேர, சோழ, பாண்டியர்கள் குறித்து அறிந்துகொள்ள பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த ________________ கல்வெட்டுக் குறிப்புகள் உதவுகின்றன
புலிகேசி
அசோகர்
சந்திரகுப்தர்
தனநந்தர்
25.
பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ________ ஆவர்.
ஹோமோ ஹேபிலிஸ்
ஹோமோ எரக்டஸ்
ஹோமோ சேபியன்ஸ்
நியாண்டர்தால் மனிதன்
26.
மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது
கொரில்லா
சிம்பன்ஸி
உராங் உட்டான்
பெருங்குரங்கு
27.
சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?
28.
மண் உருவாக வானிலைச் சிதைவு ஒரு முக்கியத் தேவையா?
29.
சமவெப்பக் கோடுகள் என்றால் என்ன?
30.
வெயிற்காய்வு என்றால் என்ன?
31.
வளிமண்டல அடுக்குகள் யாவை?
32.
கலிங்கா கல்வெட்டுக் குறிப்பு கூறுவது என்ன?
33.
அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.
34.
தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.
35.
குறுட்டு ஆறு என்றால் என்ன?
36.
வானிலைச் சிதைவு – வரையறு.
37.
சிகுராட்களின் முக்கியமான பண்புகளைக் கூறுக
38.
எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக
39.
கருவி செய்வதில் கீழ்ப் பழைய கற்கால மக்களிடமிருந்த தொழில்நுட்பத்தைத் திறனாய்வு செய்க.
40.
பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு.
41.
சூறாவளிகள் எவ்வாறு உருவாகின்றன? அதன் வகைகளை விவரி
42.
மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை? விவரி
43.
தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு
44.
கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு
45.
காற்று படியவைத்தல் செயலினை விவரி.
46.
எரிமலைகள் வெடிக்கும் காலக்கட்டத்தைப் பொறுத்து அதன் வகைகளை விவரி
47.
மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக.
48.
உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு
49.
நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக
50.
ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக
51.
இரும்பை உருக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு உற்பத்தி மற்றும் போர் முறையை மாற்றியமைத்தது – இதை நிறுவுக.
1.
(a)
சமூகச் சமத்துவம்
2.
(a)
நாடாளுமன்றம்
3.
(a)
கிரேக்கம்
4.
(a)
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
5.
(d)
தனிநபராட்சி
6.
(c)
பிம்பிசாரர்
7.
(a)
புத்தர்
8.
(c)
சூறாவளி
9.
(b)
காலமுறைக் காற்றுகள்
10.
(a)
இடைப்பட்ட திரள் மேகங்கள்
11.
(a)
நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலம்
12.
(a)
கீழடுக்கு
13.
(b)
தக்காண பீடபூமி
14.
(a)
காற்றடி வண்டல்
15.
(c)
டெல்டா
16.
(c)
நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
17.
(c)
பறவை
18.
(d)
க்யூனிபார்ம்
19.
(b)
கீழ்மையம்
20.
(a)
எரிமலை வாய்
21.
(a)
கோண்டுவானா
22.
(b)
வெளிக்கரு
23.
(b)
பிறைநிலப் பகுதி
24.
(b)
அசோகர்
25.
(c)
ஹோமோ சேபியன்ஸ்
26.
(b)
சிம்பன்ஸி
27.
1. சர்வாதிகரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை நமக்கு இருக்காது. ஏனென்றால் சர்வாதிகாரி என்பவர் சகல அதிகாரங்கள் கொண்டுள்ளவராக இருப்பார்.
2. அத்தகைய நாட்டில் பொதுமக்களின் கருத்துக்கு எந்தவித முக்கியத்துவம் இருக்காது. அவர்களின் கருத்து மதிக்கப்படாது.
28.
உடைந்த பாறைகள் வானிலைச் சிதைவுக்கு உட்பட்டு மண்ணாக மாறுகிறது. சிதைவடைந்த நுண்ணிய பாறைத் துகள்கள் மற்றும் சிதைந்த உயிரினங்களின் (Humans) கலவையே மண்ணாகும்.
29.
1. சமவெப்பநிலை உள்ள இடங்களை இணைக்க வரைபடத்தில் வரையப்படும் கற்பனைக்கோடு சமவெப்பக் கோடு ஆகும்.
2. வெப்பநிலை பருவத்திற்கு பருவம். இடத்திற்கு இடம், கண்டத்திற்கு கண்டம் வேறுபடும்.
3. புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 13o செல்சியஸ் ஆகும்.
30.
சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்பம் குறுகிய அலைகளாக புவியை வந்தடைகிறது. இதனை வெயிற்காய்வு அல்லது கதிர்வீச்சு என்கிறோம்.
31.
i) கீழடுக்கு
ii) மீள் அடுக்கு
iii) இடையடுக்கு
iv) வெப்ப அடுக்கு
v) வெளியடுக்கு
32.
அசோகர் தனது கலிங்கக் கல்வெட்டு ஒன்றில் அவர் போர் மற்றும் வெற்றிக்காக நடந்த படுகொலைகளைப் பார்த்துத் தாம் அடைந்த மன வேதனையை பதிவு செய்துள்ளார். மற்றொரு கல்வெட்டில், தாம் இனிமேல் கலிங்கப் போரில் நடந்த படுகொலைகளில் நூற்றில் ஒரு பங்கைக் கூட, ஏன் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட பொறுத்துக்கொள்ள போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
33.
(i) கிழக்கிலும் மேற்கிலும் பல வெளிநாடுகளுடன் தமிழர்கள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர்.
ii) ரோமானியக் கப்பல்கள் பருவக்காற்று வீசும் சமயத்தில் மேலைக்கடலான அரபிக்கடலை கடந்து தமிழகக் கடற்கரைகளுக்கு வந்தன.
(iii) மிளகு போன்ற நறுமணப் பொருட்களும், யானைத் தந்தம், நவமணிகள் உள்ளிட்ட அரிய பொருட்களும் தமிழ் நாட்டிலிருந்து ஏற்றுமதி ஆயின.
(iv) தங்கம், வெள்ளி, செம்பு,உள்ளிட்ட உலோகங்கள் இறக்குமதி ஆயின.
34.
(i) தொல்லியல் அகழாய்வுப் பணி என்பது பண்டைக்கால சமூகத்தின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ளும் நோக்கில் முறைப்படி ஓர் இடத்தை அகழ்ந்து, சான்றுகளாகக் கிடைத்த பொருள்களை முறையாக திரட்டி ஆராய்வதாகும்.
(ii) வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வழியாகச் சங்க கால மக்களின் வாழ்க்கை முறை குறித்து சான்றுகள் கிடைத்துள்ளன.(எ.கா.) தமிழ்நாட்டின் அரிக்கமேடு, அழகன்குளம், கீழடி, கொடுமணல், உறையூர், கரூர், காஞ்சிபுரம், காவிப்பூம்பட்டினம் முதலியன.
35.
ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது. இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படுகிறது.
36.
வளிமண்டல நிகழ்வோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும்(Disintegration), அழிதலுக்கும்(Decomposition) உட்படுகின்றன.
இச்செயல்பாடுகளையே வானிலைச் சிதைவு என அழைக்கிறோம்.
37.
விடை சிகுராட்களின் முக்கிய பண்புகள்:
(i) சிகுராட் என்பது பண்டைய மெஸபடோமியாவில் (தற்போதைய ஈராக்) காணப்படும் பிரமிட் வடிவ நினைவிடங்கள் ஆகும்.
(ii) நகரின் மையத்தில் மேடை மீது சிகுராட் எனப்படும் கோயில்கள் கட்டப்பட்டன.
(iii) அவை செங்குத்தான பிரமிடுகள் போல் காட்சியளித்தன.
(iv) உச்சிக்கு செல்வதற்குப் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன.
(v) கோவிலைச் சுற்றி சடங்குகளுக்கான தாழ்வாரங்கள், புனித இடங்கள், ஆண் மற்றும் பெண் மதகுருமார்களின் கல்லறைகள், சடங்குகளுக்கான விருந்து அரங்குகள், தொழிற் கூடங்கள், களஞ்சியங்கள், கிடங்குகள், நிர்வாகக் கட்டிடங்கள் அடங்கிய வளாகங்கள் இருந்தன.
38.
i.எகிப்தியர், கட்டடக் கலையிலும் பல்வேறு கலை வண்ணங்களிலும் சிறப்பு உடையவர்கள்.
ii. எகிப்தில் காணப்படும் எண்ணற்ற சிற்பங்கள், ஓவியங்கள், படைப்புகள், எகிப்தியர்களின் கலை ஆற்றலுக்கு சான்றாகும்.
பிரமிடு:
i.பாரோக்களின் சமாதிகளாகக் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச் சின்னங்கள் பிரமிடுகள் ஆகும்.
ii.கெய்ரோவிற்கு அருகில் உள்ள பிரமிடுகள், கிஸா பிரமிடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
ஸ்பிங்க்ஸ்:
i.உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்று ஸ்பிங்க்ஸ்
ii.இவற்றின் பிரம்மாண்டமான சிலை சிங்க உடலும் மனித முகமும் கொண்ட சுண்ணாம்புக்கல் படிமம்.
39.
1.பழைய கற்கால மக்கள் பெரிய கற்களைச் செதில்களாகச் சீவி கைக்கோடாரி உள்ளிட்ட பல வகைக் கருவிகளை வடிவமைத்தார்கள்.
2. இவர்கள் தங்கள் தேவைகளுக்காக கைக்கோடாரி, வெட்டுக் கத்தி உள்ளிட்ட பல்வேறு கருவிகளை செய்தார்கள்.
3. இந்தக் கருவிகள் (biface) இருமுகக் கருவிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை சமபக்க உருவ அமைப்பைப் (Symmetry) பெற்றுள்ளன.
4.கைக்கோடாரிகள் அச்சூலியன் கருவிகள் என்றும் அழைக்கப்படுகின்றன
40.
பெருங்கற்கால ஈமச் சின்னங்கள்:
1.டோல்மென் எனப்படும் கற்திட்டை,
2. சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்.
3. மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல்,
4. தாழி.
5. பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள்,
6. சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
41.
(அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து காற்று குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்குழல் வடிவத்தில் குவியும் காற்று ஆறாவளி (Cyclone) என்று அழைக்கப்படுகிறது.
(1) புவியின் கழற்சியினால் சூராவாணி வட அரைகோளத்தில் கடிகாரச்சுற்றுக்கு எதிர்த்திசையிலும், தென் அரைகோளத்தில் கடிகாரத்திசையிலும் வீசுகிறது. குறாவளிகள் மூன்று வகைப்படும். அவைகள். வெப்பச்சூறாவளிகள் மிதவெப்பச்சூறாவர்கள் கூடுதல்வெப்பர்சூறாவளிகள்
அ) வெப்பச்சூறாவளிகள்!
(1) வெப்பச் சூறாவளிகள் வெப்ப மண்டலங்களுக்கு இடையேயான காற்றை ஒருமுகப்படுத்தும்
Laari (Inter Tropical Cimvangenee Zones(ITCZ) Rzadkien.
(I) இவை நிலமும் நீரும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதால் உருவாகின்றன.
(1) இலை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ராவளிகள் (Cyclone) என்றும், மேற்கு பரிபிர்பெருங்கடலில் ஸ்டபூன்கள் |Typom) என்றும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லெண்டிக் பெருங்கடல் பகுதிகளில் ஹரிக்கேன்கள் Hurricaner) என்றும், பிலிப்பைன்ஸ் பகுதிகளில் பேசியுஸ் (Ragnion) என்றும், ஆஸ்திரேலியாவில் வில்லிவில்லி (Wity Wily) என்றும் அழைக்கப்படுகிறது.
(v) வெப்ப ாவளிகள் கடலோரப் பகுதிகளில் அதிகமான உயிர்ச்சேதங்களையும். பொருளாதாரச் சேதங்களையும் ஏற்படுத்திய பின்னர் நிலப்பகுதியைச் சென்றடையும்
ஆ) மிதவெப்பக்சூராவளிகள்
(1) 35 முதல் 65" வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிகொற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உருவாகின்றன.
மித வெப்பச் சூறாவளிகள் வெப்பச் சூறாவளிகள் போல நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காது
(iii) இச்ாவளிகள் பொதுவாக வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் இச்சூறாவளிகள் ரஷ்யா மற்றும் இந்தியப் பகுதி வரை புரவி வீசுகின்றன. இந்தியாவை அடையும் இக்காற்று மேற்கத்திய இடையூறு காற்று (Wism Disturbance என்று அழைக்கப்படுகிறது.
இ) கூடுதல்வெப்பக்சூராவளிகள்:
அடுநல் வெப்பர் சூறாவளிகள் என்பது 30 முதல் 60 வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப் பகுதிகளில் வீசுகின்றன. இது 'மைய அட்ச சூறாவளிகr (Late Cyc என்றும் அழைக்கப்படுகின்றன
(II) இச்சூறாவளிகள் தன் ஆற்றலை உயர் அட்சங்களின் வெப்ப மாற்றங்களிலிருந்து பெறுகின்றன. இது லேசான சாரல்மழை (Mil முதல் பெருங்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழைப்பொழிலையும் (Harry hall) இடியுடன் கூடிய மழைப்பொழிலையும் பனிப்பொழிலையும் ) மற்றும் சுழல் காற்றுகளையும்(Tomatoes) அளிக்கின்றன
42.
தற்கால உலகில் மக்களாட்சி அரசாங்கம் தழைத்தோங்கி, அரசாங்கத்தின் மேலாதிக்கம் செலுத்தும் வடிவமாக இருக்கிறது.
மக்களாட்சியானது இதுவரை கடுமையான சவாலையோ அல்லது போட்டியையோ எதிர்கொள்ளவில்லை.
கடந்த 100 ஆண்டுகளில் உலகெங்கிலும் மக்களாட்சி விரிவடைந்து வளர்ந்து வருகிறது.
இந்தியாவில் மக்களாட்சி எதிர்கொள்ளும் சவால்கள்:
1. கல்வியறிவின்மை
2. வறுமை
3. பாலினப் பாகுபாடு
4. பிராந்தியவாதம்
5. சாதி, வகுப்பு. சமயவாதம்
6. ஊழல்
7. அரசியல் குற்றமயமாதல்
8. அரசியல் வன்முறை
43.
தத்துவமும், இலக்கியமும்:
(i) லாவோ ட் சு கன்பூசியஸ், மென்சியஸ், மோ டி தாவோ சின் போன்ற தத்துவ ஞானிகளும்,சீனக் கவிஞர்களும் நாகரிகத்திற்கு ஏராளமாகப் பங்களித்துள்ளார்கள்.
(ii) இராணுவ உத்தியாளரான சன் ட்டி 'போர்க் கலை' என்ற நூலை எழுதினார்.
(iii) 'தி ஸ்பிரிங் அண்ட் ஆட்டோம் அனல்ஸ்' (வசந்தகால, இலையுதிர்கால ஆண்டு குறிப்புகள்) நூல் அதிகாரபூர்வ சீன அரசு நூலாக அங்கீகரிக்கப்பட்டது.
(iv) மஞ்சள் பேரரசரின் 'கேன்ன்ஸ் ஆஃப் மெடிசின் (மருத்துவக் குறிப்புத் தொகுப்புகள்) எ நூல் சீனாவின் பழமையான மருத்துவ நூலாகக் கருதப்படுகிறது. அது ஹான் வம்ச காலத் முறைப்படுத்தப்பட்டது.
(v) லாவோட்சு கி.மு.(பொ.ஆ.மு. 604 -52) சௌ அரசின் தலைமை ஆவணக் காப்பாள இருந்தார். இவர்தான் தாவோயிசத்தைத் தோற்றுவித்தார். 'ஆசைதான் அத்தனை துன்பங்களுக்கு மூலகாரணம்' என்று இவர் வாதிட்டார்.
(vi) கன்பூசியஸ் கி.மு. பொ.ஆ.மு 551 -497) ஒரு புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி, அவர் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. அவர் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை சீர்திருத்துவதை வலியுறுத்தினார்.
(vii) மென்சியஸ் மு. முபா. ஆமு - 372 -289) மற்றொரு புகழ்பெற்ற சீன தத்துவஞானியாவார். அவர் சீனா முழுவதும் பயணம் செய்து ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறினார்.
44.
கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்
1. மனிதத்தன்மை
2. நேர்மை
3. நன்னடத்தை
4. மெய்யறிவு
5. நம்பகத்தன்மை
(i) மெய்யறிவு குடும்பத்திலிருந்து தான் வளரும் என்றார் கன்பூசியஸ்.
(ii) ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடு மிக்க தனிநபர் தான் சமூகத்தின் அடித்தளம் என்கிறார். அவரைப் பொறுத்தவரை மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியாகவோ, அறிஞராகவோ மட்டும் இல்லாமல், முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
(iii) கன்பூசியசின் மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவராவார்.
(iv) குழந்தைகள் பெற்றோருக்கும், மனைவி கணவனுக்கும் கீழ்படிய வேண்டும் என்று கன்பூசியஸ் வலியுறுத்தினாலும், "உத்தரவு தவறு என்றால் ஒரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், دو ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்' என்று தெளிவாக கூறினார்.
(v) 'ஒரு அரசுக்கு மூன்று விசயங்கள் அவசியமானவை, நாட்டில் போதுமான உணவு, இராணுவத் தளவாடங்கள் மற்றும் மக்களுக்குத் தம் ஆட்சியாளர் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்” என்றார்.
45.
மணல் குன்று, பர்கான் மற்றும் காற்றடி வண்டல் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஆகும்.
மணல் மேடு (Sand dune):
பாலைவனங்களில் வீசும் மணல்புயல் மிக மிக அதிக அளவில் மணலைக் கடத்துகின்றன. காற்றின் வேகம் குறையும்போது கடத்தப்பட்ட படிவுகள் மிக அதிக அளவில் குன்று போல் படிய வைக்கப்படுகின்றது. இவ்வாறு குன்று அல்லது மேடாகக் காணப்படும் நிலத் தோற்றம் மணல்மேடு எனப்படுகிறது. மணல் மேடுகள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(i)பர்கான் (Barchan):
பிறை வடிவத்தில் தனித்துக் காணப்படும் மணல் மேடுகள் பர்கான்கள் என அழைக்கப்படுகின்றன. அவை காற்று வீசும் பக்கத்தில் மென் சரிவையும், காற்று வீசும் திசைக்கு எதிர் பக்கத்தில் வன் சரிவையும் கொண்டிருக்கும்.
(ii) குறுக்கு மணல்மேடு (Transverse dune):
குறுக்கு மணல்மேடுகள் சமச்சீரற்ற வடிவத்தில் காணப்படும். காற்று வேகமாகவும், மிதமாகவும் மாறி, மாறி ஒரே திசையில் வீசும் போது குறுக்கு மணல் மேடுகள் உருவாகின்றன.
(iii) நீண்ட மணல் மேடுகள் (Longiitudinal dune):
நீண்ட மணல் மேடுகள் குறுகிய மணற் தொடர்களாக நீண்டு காணப்படும். இம்மணற் தொடர்கள் காற்று வீசும் திசைக்கு இணையாகக் காணப்படும் இவை சகாராவில் செய்ப்ஸ் ( Seifs ) என்று அழைக்கப்படுகிறது.
(iv) காற்றடி வண்டல் (Loess):
பரந்த பிரதேசத்தில் படிய வைக்கப்படும் மென்மையான மற்றும் நுண்ணியப் படிவுகளே காற்றடி வண்டல் எனப்படும். காற்றடி வண்டல் காணப்படும் இடங்கள் - வடக்கு மற்றும் மேற்கு சீனா, அர்ஜென்டைனாவின் பாம்பாஸ், உக்ரைன் மற்றும் வட அமெரிக்காவில் மிசிசிபி பள்ளத்தாக்கு.
46.
எரிமலை செயல்படும் / வெடிக்கும் காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை,
அ) செயல்படும் எரிமலை (Active Volcano )
ஆ உறங்கும் எரிமலை ( Dormart Volcano )
இ தணிந்த / செயலிழந்த எரிமலை ( Extinot Volcano )
அ) செயல்படும் எரிமலை:
நிரந்தரமாக தொடர்ந்து எரிமலைக் குழம்புகளையும், துகள்களையும், வாயுக்களையும் வெளியேற்றிக் கொண்டே இருக்கும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் எனப்படுகின்றன (எ.கா) செயின்ட் ஹெலன்ஸ் எரிமலை - அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
ஆ) உறங்கும் எரிமலை:
(i)நீண்ட காலமாக எரிமலைச் செய்கைகள் ஏதும் இல்லாமல் காணப்படும் எரிமலைகள் உறங்கும் எரிமலைகள் எனப்படும்.
(ii) இவை திடீரென்று வெடிக்கும் தன்மையுடையது.
(iii) இவ்வாறான எரிமலைகள் வெடிக்கும் பொழுது அதிகமான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. (எ.கா.) ஃபியூஜி எரிமலை - ஜப்பான்.
இ) தணிந்த / செயலிழந்த எரிமலை:
எந்தவித எரிமலைச் செயல்பாடுகளுமின்றி காணப்படும் எரிமலைகள் தணிந்த / செயலிழந்த எரிமலைகள் ஆகும். (எ.கா.) கிளிமஞ்சாரோ எரிமலை - தான்சானியா.
47.
1. மனிதர்களின் வரலாற்றைப் புவியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது.
2. புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் காலக்கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் பொதிந்து கிடக்கின்றன.
3. புவி மற்றும் பல்வேறு உயிரினங்களின் வரலாற்றை அறிவதற்கு இச்சான்றுகள் மிக முக்கியமானவயாகும்.
4. இவ்வடுக்குகளில் மனித மூதாதையர்களின் எலும்புகளின் புதை படிவங்கள் புதைந்துள்ளன.
5. தொல்மானுடவியல் அறிஞர்களும், தொல்லியல் அறிஞர்களும் புவியின் மண் மற்றும் பாறை அடுக்குகளை அகழ்ந்து மனித மூதாதையர்கள் குறித்த சான்றுகளைச் சேகரிக்கின்றார்கள்.
6. மனிதர்களின் பரிணாமம். தொல்பழங்காலம் ஆகியவற்றின் பல்வேறு கால கட்டங்களை அறிய இந்தப் புதைபடிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் அறிவியல் பூர்வமாக கணிக்கப்படுகிறது.
7. இச்சான்றுகள் வழியாக மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சி நிலைகள் மற்றும் அவற்றின் காலகட்டம் ஆகியவற்றை புரிந்து கொள்ள முயல்கின்றனர்.
8.தொல்லியல் (Archaeology): தொல்பொருள்களை ஆராய்ந்து விளக்கமளிப்பதன் வழியாக மனிதர்களின் கடந்த காலம் குறித்து ஆராயும் இயல் ஆகும்.
9.தொல்மானுடவியல் (Palaconnthropology): மனிதர்களின் மூதாதையர்களின் உடலமைப்பு மற்றும் அவர்களது பரிணாம வளர்ச்சி குறித்து ஆய்ந்து அறிந்து கொள்ளும் இயல் ஆகும்.
48.
49.
| நேரடி மக்களாட்சி | மறைமுக மக்களாட்சி |
|---|---|
| பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவு எடுக்கக் கூடிய அரசு முறையே நேரடி மக்களாட்சி என்கிறோம். | பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசாங்கத்தின் வகையே மறைமுக மக்களாட்சி என்றழைக்கப்படுகிறது. |
| (எ.கா.) பண்டைய கிரேக்க நகர அரசுகள், சுவிட்சர்லாந்து | (எ.கா.) இந்தியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து |
50.
மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி 'மக்களாட்சி' என்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறை கூறினார்.
51.
1. இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் முறை கண்டுபிடிக்கப்படுவற்கு முன் செம்பும் அதன் கலப்பு உலோகமான வெண்கலமும் தான் பயன்பட்டு வந்தன. இவை விலை உயர்ந்தவை.
2. இவற்றின் கூர்முனை விரைவில் மழுங்கிப் போகும் என்பதால் வெண்கலத்தாலான ஆயுதங்களையோ, கலப்பை போன்ற கருவிகளையோ திறம்பட பயன்படுத்த முடியாது.
3. வெண்கலம், செம்புத் தாதுவைவிட இரும்புத் தாதுவளம் இயற்கையில் அபிரிமிதமாகக் கிடைக்கிறது.
4. மேலும் இரும்புக் கோடரி காடுகளைத் திருத்தவும், இரும்புக் கலப்பை இறுகிய நிலத்தைப் பிளக்கவும் விவசாயிகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன.
5. பொ. ஆ. மு. 7 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இரும்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் அஸிரியப் பேரரசு வல்லமை பெற்றது.
9th Standard Syllabus & Materials
9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - மணிமேகலை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உள்ளத்தின் சீர் - ஏறு தழுவுதல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW9th Standard
TN 9th Tamil உயிருக்கு வேர் - தண்ணீர் Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 9th Standard Subjects
Tamilnadu Stateboard Standards